Q519:1
கேள்வி (1916 – Z.5939)-1- இத்தகைய திவ்விய வார்த்தைக்கான ஊழியர்கள் இப்போது இருக்கின்றார்களா?
பதில் – ஆம், நிச்சயமாக! சொசைட்டியினால் அனுப்பப்படும் ஒவ்வொரு பயண ஊழியக்காரனும், விசுவாச பிரமாணங்களினுடைய அல்லது “அமைப்புகளுடைய / isms” ஊழியக்காரர்களாய் இல்லாமல், திவ்விய வார்த்தைக்கான ஊழியக்காரனாகவே அனுப்பப்படுகின்றான்; உண்மையில் தேவனுடைய வார்த்தைக்கான ஊழியக்காரனாகவே அனுப்பப்படுகின்றான். எந்த ஓர் இடத்திலுமுள்ள கர்த்தருடைய ஜனங்கள் அடங்கின சபையார், அர்ப்பணிக்கப்பட்ட மற்றும் ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்டுள்ள ஒரு தேவனுடைய பிள்ளையை, மூப்பராகத் தேர்ந்தெடுக்கும் போதெல்லாம், சபையார் தங்களுடைய தெரிந்துகொள்ளுதலின் வாயிலாக அல்லது தேர்ந்தெடுத்தலின் வாயிலாக, அந்த மூப்பர் திவ்விய வார்த்தைக்கான ஊழியராய் இருக்கின்றார் – அதாவது தேவனுடைய வார்த்தைகளிலுள்ள சத்தியங்களைப் பிரசங்கிப்பவராய், பரப்புபவராய், பகிர்ந்தளிப்பவராய் இருக்கின்றார் என்று சுட்டிக்காட்டுகின்றவர்களாய் இருக்கின்றனர்.