Q480:2
கேள்வி (1916)-2- அதிக எண்ணிக்கையில் காணப்படும் ஒரு சபையில், மற்றவர்களுக்கு வேலையில் ஒரு குறிப்பிட்ட பாகத்தினை – அதாவது கூட்டங்களுக்காக ஏற்பாடுபண்ணுதல், கூட்டங்களுக்கான நேரம் மற்றும் இடத்தை நிர்ணயித்தல் மற்றும் பல்வேறு கூட்டங்களுக்கான கூட்டத்தலைவர்களை / வழி நடத்துபவர்களை நியமித்தல் போன்ற வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைப்பது தகுதியானதாய் இருக்க – இம்மாதிரியான வேலைகளானது, சபையின் மேற்பார்வையாளர்களென மூப்பர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்களால் மாத்திரமே செய்யப்பட வேண்டுமா அல்லது மூப்பர்களோடுகூட உதவிக்காரர்களும் இக்கடமைகளை நிறைவேற்றிட வேண்டுமா?
பதில் – இம்மாதிரியான காரியங்களில் கர்த்தருடைய வார்த்தையானது நமக்கு அதிகளவிலான சுதந்தரத்தைக் கொடுத்துள்ளதாய் இருக்கின்றது. மூப்பர்களுடைய வேலை என்னவாகக் காணப்பட வேண்டும் என்றும், உதவிக்காரர்களின் வேலை என்னவாகக் காணப்பட வேண்டும் என்றும் கர்த்தருடைய வார்த்தைகளானது குறிப்பாய்த் தெரிவிக்கிறதில்லை. அது சௌகரியத்திற்கே பெரிதும் விடப்பட்டுள்ளது என்று நாம் எண்ணுகின்றோம். சபையினுடைய ஆவிக்குரிய வேலைகளை – கூட்டங்களை மற்றும் இவ்வகையான அனைத்தையும் மூப்பர்கள் பொறுப்பேற்றுள்ளவர்களாகக் காணப்பட வேண்டும். இவர்கள் பொதுவில் பேசுவதற்குத் தகுதியான சகோதரர்களாகக் காணப்பட வேண்டும்; அப்போஸ்தலன் கூறுவதுபோன்று இவர்கள் “போதகசமர்த்தனாய்க் காணப்படவேண்டும். சிலர் பொதுவிடங்களில் பேசிடுவதற்குரிய போதக சமர்த்தர்களாய்க் காணப்படுவார்கள் மற்றும் அவர்கள் அம்மாதிரியான வேலைக்கு என்று நியமிக்கப்பட வேண்டும்; சிலர் ஒரு சிலருக்குப் போதிப்பதற்குப் போதகசமர்த்தனாய்க் காணப்படுகின்றனர் மற்றும் இவர்கள் பெரோயா ஆராய்ச்சி வகுப்புகளுக்கும் மற்றும் இல்லத்தில் நடைபெறும் கூட்டங்களுக்கும் என்று நியமிக்கப்பட வேண்டும். போதகசமர்த்தன் எனும் வார்த்தைக்குப் பரந்துவிரிந்த அர்த்தம் கொடுக்கப்படவேண்டும். அது மேடையில் நினறு; சொற்பொழிவாற்றுதலை மாத்திரம் குறிக்கிறதில்லை மாறாக எந்தவொரு விதத்தில் போதிப்பதற்குத் திறமையுடையவராய் இருப்பதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. தாங்கள் மூப்பர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அது தாங்கள் பொதுவிடங்களில் பேசிட வேண்டும் என்று குறிப்பதாகச் சிலர் எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் அது அப்படியல்ல. போதகசமர்த்தனாய் இருப்பது என்பது பொதுவிலும் மற்றும் தனிமையிலும் போதிப்பதாகிய இரண்டையும் உள்ளடக்கிக் காணப்பட வேண்டும்; சிலருக்கோ பொதுவிடங்களில் (public work) போதிக்கும் பணியும் மற்றும் மற்றவர்களுக்கோ ஒரு சிலருக்குப் போதிக்கும் பணியும் (private work) கொடுக்கப்பட வேண்டும்; எனினும் அனைவரும் போதகசமர்த்தனாய்க் காணப்பட வேண்டும்.
மூப்பர்கள் அனைத்துக் கூட்டங்களையும் நடத்திட வேண்டும்; ஏனெனில் அனைத்துக் கூட்டங்களும் ஆவிக்குரியவைகளாகக் காணப்படுகின்றன. ஒரு நபர் மூப்பராய்க் காணப்படுவதற்குத் தகுதியற்றவராய் இருப்பாரெனில், அப்படியானால் அவர் கூட்டங்களுக்கான கூட்டத்தலைவராகக் காணப்படுவதற்கும் தகுதியற்றவர் ஆவார். உதவிக்காரர்கள் என்ன செய்ய வேண்டும்? உதவிக்காரன் எனும் வார்த்தையின் அர்த்தம், ஊழியக்காரனாகும் மற்றும் இது எவ்வகையான வேலையையும் புரிய முடிகிற ஒருவரைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. உதாரணத்திற்கு வாயிற்காவலருக்குக் காணப்படும் வேலை போன்ற வேலை அவருக்குக் கொடுக்கப்படலாம் அல்லது புத்தகங்களின் நிர்வகிப்பானது அவரிடத்தில் ஒப்படைக்கப்படலாம் அல்லது தன்னார்வ ஊழியங்களுக்கடுத்த பொறுப்பானது அவரிடத்தில் ஒப்படைக்கப்படலாம். அநேகம் வேலைகள் உதவிக்காரர்களிடத்தில் ஒப்படைக்கப்படலாம் மற்றும் மற்றவர்களைக்காட்டிலும் இவர்கள் இம்மாதிரியான வேலைகளை நன்கு செய்திடலாம். ஆகையால் அவர்களால் நன்கு செய்ய முடிகிற குறிப்பிட்ட வேலைகளை அவர்களுக்குக் கொடுங்கள். தொழிலதிபர்களாய்க் காணப்படும் சகோதரர்கள், போதகசமர்த்தனாய் இல்லையென்றாலும், உதவிக்காரர்களெனச் சிலசமயம் பயன்படுத்தப்படலாம். இம்மாதிரியான ஒருவர், மூப்பரால் செய்ய முடிகிற அளவிற்குத் தன்னார்வ ஊழியங்களைச் செய்ய முடியாதவராய் இருப்பினும், அவரிடம் இவ்வேலைக்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு, அவ்வேலைக்குத் தலைவரென நியமிக்கப்படலாம். இந்த வேலையானது மூப்பர்களுக்குக் கொடுக்கப்படக்கூடாது; ஏனெனில் மூப்பர்கள் ஈடுபட்டுக் காணப்படுவதற்கு ஆவிக்குரிய வகையான வேலை போதுமானளவில் காணப்படுகின்றன.
இப்பொழுது உதவிக்காரர்கள் மற்றும் மூப்பர்கள் ஒன்றுகூடுவது குறித்தக் காரியத்திற்கு வரலாம். மூப்பர்கள் தங்களது கூட்டங்கள் அனைத்திலும் உதவிக்காரர்களை வரவேற்பது என்பது மிகவும் நல்லதொரு ஏற்பாடு என்று நான் கருதுவேன்; ஏனெனில் நல்ல உதவிக்காரர் என்பவர், தனக்கு ஒப்படைக்கப்பட்ட பல்வேறு கடமைகளில் உண்மையாய்க் காணப்படுவதன் வாயிலாக, அங்கீகரிக்கப்படத்தக்கவராகவும், “தனக்கென்று நல்ல நிலையை அடைபவராகவும் – அதாவது சுதந்தரத்தின் நல்ல நிலையை அடைபவராகவும் காணப்படுகின்றார் (1 தீமோத்தேயு 3:13). மேலும் அவர் மூப்பர் ஆக்கப்படுவதற்குரிய வாய்ப்பினை எதிர்நோக்கினவராகவும், மூப்பருடைய வேலைக்குரிய வளர்ச்சியினையும், மேம்பாட்டையும் வெளிப்படுத்துகிறவராகவும் காணப்படவேண்டும். உதவிக்காரர்கள் செய்வதற்கென்று ஒரு வேலை உள்ளது. அவர்கள் மூப்பர்களுக்கு மாத்திரம் வேலை புரிகிறவர்களாய்க் காணப்படாமல், அவர்கள் சபையாருக்கும்கூட வேலை புரிகிறவர்களாய்க் காணப்பட வேண்டும். எப்படி மாநாடு சம்பந்தப்பட்ட விஷயத்தில் அநேகம் வேலைகள் காணப்படுகின்றதோ, அதுபோலவே சபையாருக்கான வேலையில் அநேகம் வேலை பிரிவுகள் காணப்படுகின்றன. மாநாடுகளுக்கென்று ஆயத்தப்பணிகள் அநேகம் காணப்படுகின்றன; அதாவது அறைகளை ஏற்பாடு செய்தல், இதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ளுதல், மாநாட்டில் கலந்துகொள்பவர்களின் தேவைகளைச் சந்தித்தல் முதலானவைகளாகும்.
மாநாடு தொடர்புடைய விஷயத்தில் ஒரு குழு / committee நியமிக்கப்பட்டு வருகின்றது என்பதில் ஐயமில்லை மற்றும் இந்தக் குழுவில் மூப்பர்களும் மற்றும் அலுவல் காரியங்களைப் பார்த்துக்கொள்பவர்களும், இருவருமே காணப்படுவது நலம். இவ்வேலையினை மூப்பர்களே செய்துகொள்ளலாம் அல்லது உதவிக்காரர்கள் செய்துகொள்ளலாம். வேலையினைப் புரிவதற்குரிய திறமையுள்ளவர்களின் மீது இவ்வேலையானது சார்ந்துள்ளது. சில சகோதரருக்கு அதிக அளவிலான திறமைகள் காணப்படுகின்றன மற்றும் சிலர் மிகக்குறைவான திறமைகளைப் பெற்றவர்களாய் இருக்கின்றனர். உதாரணத்திற்குச் செய்திதாள் வேலை காணப்படுகின்றது; ஒருவேளை ஓர் உதவிக்காரன் தகுதியுடையவராகக் காணப்படுவாரானால், அவர் இந்த வேலையினைச் செய்திடலாம்.
ஆவிக்குரிய காரியங்களுக்கான பொறுப்பு, மூப்பர்களின் கரங்களிலேயே காணப்படுகின்றது. எருசலேமுக்குப் போகையில் அப்போஸ்தலனாகிய பவுல் மிலேத்துப் பட்டணத்தில் தங்கி, எபேசு பட்டணத்திலுள்ள சபையின் மூப்பர்கள் வரும்படியாக அழைத்தனுப்பினார். அவர் அவர்களிடம்: “உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள் (அப்போஸ்தலர் 20:28) என்று கூறினார். இவர்களுடைய வேலை தேவனுடைய மந்தையை மேய்ப்பதாகும். உதவிக்காரர்கள் மற்றவகையான வேலைகளைச் செய்திடலாம். மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களுடைய கூட்டங்கள் அனைத்திலும் மூப்பர்கள் ஆவிக்குரிய காரியங்கள் அனைத்தினுடைய பொறுப்பினை எடுத்துக்கொள்ள வேண்டும்; உதவிக்காரர்களோ temporal / ஆவிக்குரியதல்லாத காரியங்களுக்கடுத்த பொறுப்பினை எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் ஆவிக்குரியதல்லாத காரியங்களுக்கடுத்தவைகளில் ஒருவருக்கொருவர் அறிவுரை வழங்கிட வேண்டும். இத்தகைய ஒருங்கிணைந்த கூட்டத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் ஆலோசனை வழங்கிட வேண்டும். ஒருவர் அலுவல் காரியங்களுக் கடுத்தவைகளில் ஆலோசனையைக் கொடுத்துக்கொள்ளலாம் மற்றும் இன்னொருவர் ஆவிக்குரிய காரியங்களுக்கடுத்தவைகளில் ஆலோசனையைக் கொடுத்துக்கொள்ளலாம். இறுதி வாக்கும், பொறுப்பும் மூப்பர்களிடத்திலே காணப்பட்டாலும்கூட, வாக்கெடுப்பதற்குரிய நேரத்தில் உதவிக்காரர்களுடைய எந்த யோசனைகளையும் மூப்பர்கள் பெற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியாய்க் காணப்பட வேண்டும். தகுதியுள்ள உதவிக்காரர்களின் கரங்களில், சபையாருடைய ஆவிக்குரியதல்லாத காரியங்களானது காணப்பட்டாலும், அவர்களுக்கு இவற்றிற்கடுத்த ஆலோசனை வழங்கிடுவதற்கு மூப்பர்கள் திறமிக்கவர்களாய்க் காணப்பட வேண்டும். வாக்கானது பரஸ்பரமானதாகக் காணப்பட வேண்டும்; முடிவு மூப்பர்களின் பொறுப்பில் இருக்கும்.
நீங்கள் மற்ற அனைத்துக் கூட்டங்களினின்றும், உங்களது அலுவல் கூட்டங்களைப் பிரித்துக் கொண்டுள்ளீர்கள் என்று நான் புரிந்துகொள்கின்றேன். அது நல்லதே. பொதுவாகவே அலுவல் கூட்டங்களானது மற்றக் கூட்டங்களிலிருந்து பிரித்துக்கொள்ளப்பட வேண்டும். சபையினுடைய நலனுக்கடுத்த காரியங்கள் முழுவதையும் மூப்பர்களின் கரங்களிலேயே விட்டுவிடாதீர்கள்; ஏனெனில் அவர்கள் கூட்டங்களைத் தாங்களாகவே நடத்திவிடக்கூடும். குறிப்பிட்ட காரியங்களைச் சபையாரின் கரங்களில் வைத்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் அநேகக் காரியங்கள் மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களிடத்தில் விடப்படுவது நலமாயினும், சபையினுடைய காரியங்கள் அனைத்திற்குமான பொறுப்பானது, இறுதியில் சபையாருடைய கரங்களிலேயே காணப்படுகின்றது.