Q477:2
கேள்வி (1912)-2- மிகவும் திறமிக்கவர்களாய்க் காணப்படுகையில், உதவிக்காரர்களை மூப்பர்களுக்குப் பதிலாகக் கூட்டங்களை நடத்தும்படிக்குக் கேட்டுக்கொள்வது சரியான காரியமாக இருக்குமா?
பதில் – எதிர்மாறாகவே எங்களது கருத்துக் காணப்படுகின்றது. அதென்னவெனில் மூப்பர்கள் என்பவர்கள் வழிநடத்துனர்களாய் இருக்கும்படிக்கு விசேஷமாய்த் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாக இருக்கின்றனர் என்பதும், உதவிக்காரர்கள் என்பவர்கள் தேவைகளைப் பூர்த்திச் செய்யத்தக்கதாக மாத்திரமே கூட்டங்களை நடத்திடுவதற்கு நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதும் எங்களது கருத்தாய் இருக்கின்றது. இது வேதவாக்கியங்களின் மாதிரியைப் பின்பற்றுவதாகும். உதவிக்காரருக்குரிய ஊழியத்தில், ஊழியம் புரியும் ஓர் உதவிக்காரன் தனக்கென நல்ல நிலையை அடைவான் என்று அப்போஸ்தலன் கூறுகின்றார். அதாவது ஒருவேளை சபையில் temporal / ஆவிக்குரியதல்லாத காரியங்களில் அவர் உண்மையுள்ளவராய் இருந்தாரானால், சபைக்கடுத்த நலன்களைப் பார்த்துக்கொள்வதில் உண்மையாகவும், நேர்மையாகவும் காணப்படுவாரானால், அவர் இப்படியாகத் தன்னைப் பொருத்தமான நபர் என்று வெளிப்படுத்திச் சபையாருடைய நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ளும் நல்ல நிலையை அடைவார் மற்றும் சபையாரும் பிற்பாடு அவரை மூப்பராக நியமிப்பதற்கான கண்ணோட்டத்தில் அவரைக் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கிடையில் மூப்பர் கலந்துகொள்ளமுடியாத தருணங்களும் உண்டாகும் மற்றும் இது உதவிக்காரர்களைப் பரீட்சித்துப்பார்ப்பதற்கான நல்வாய்ப்பாய் அமைகின்றது. இது அனைத்துச் சபைகளிலும் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டுமென்று நான் கருதுகின்றேன். மூப்பர்கள் என்பவர்கள் சபையில் மூத்த சகோதரர்களாக இருக்கின்றனர்; வயதில் கண்டிப்பாய் அல்ல, மாறாக விசேஷமாய் ஆவிக்குரியவற்றிலே ஆகும். அவர்கள் எவ்வளவுதான் வயதானவர்களாக அல்லது இளையவர்களாக இருந்தாலும் சரி, குணலட்சணத்தில் ஆவிக்குரிய முதிர்ச்சி என்பதே அவர்களது தகுதியாய் இருக்கின்றது. மூப்பர்களுடைய வேலையின் ஒருபாகம் என்னவெனில் சபையாருடைய நலனுக்கடுத்தவைகளை அவர்கள் பார்த்துக்கொள்கையில், அவர்கள் உதவிக்காரர்களாக ஊழியம் புரிவதற்குத் தகுதியுடையவர்களாய்க் காணப்படும் இளையச் சகோதரர்களைக் கண்டுபிடிக்கவும், அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கவும் (coach) நாட வேண்டும் மற்றும் அவர்களுக்குத் திறமையிருக்குமானால், அவர்கள் மூப்பராகிடுவதற்கு ஆயத்தமாகத்தக்கதாக முன்னே கொண்டுவர வேண்டும். சில தருணங்களில் யாரோ ஒருவர் சில திறமைகளைப் பெற்றவர்களாய்க் காணப்பட்டு, தங்கள் ஊழியத்தைப் பங்கு போட்டுக்கொள்வார்கள் என்ற பொறாமையான எண்ணங்கள் மூப்பர்களின் சார்பில் காணப்படுவதை நான் பார்த்திருக்கின்றேன். இத்தகைய ஆவியானது ஆண்டவருக்குப் பிரியமற்றதாகவும், அந்த மூப்பருக்கு அனுகூலமற்றதாகவும் காணப்படும்; காரணம் தனக்குத் தீங்கு விளைவிக்காத நிலையில் அவனால் தன்னல நாட்டமுள்ள ஆவியினைப் பெற்றிருக்க முடியாது. தன்னலத்தை நாடுபவனாக இராமல் சபையாருடைய நலனுக்கடுத்தவைகளை நாடுவதே அவனது பொறுப்பாய் இருக்கின்றது. ஊழியம் புரிவதற்குத் திறமையுடைய எச்சகோதரனும் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். வேலையானது செய்யப்படாமல் கைவிடப்படுமோ என்று பயப்படாதீர்கள். கர்த்தருக்கு ஊழியம் செய்யத்தக்கதாக எந்த ஒரு திறமையைப் பெற்றிருக்கும் ஒவ்வொருவனும் கர்த்தருக்கு உண்மையாய் ஊழியம் புரிவானாக; கர்த்தர் மற்றவர்களுக்கானவைகளைப் பார்த்துக்கொள்வார். நம்மைப்பார்க்கிலும் மிகவும் திறமிக்க விதத்தில் ஊழியம் செய்ய முடிகிறவர்கள் யாரையேனும் நாம் காண்போமானால், தேவனுக்காகச் சிறப்பான விதத்தில் அவர்களால் ஊழியம் புரியப்படுவது குறித்து நாம் சந்தோஷங்கொள்ள வேண்டும். போதுமான வேலை இல்லாமல் போய்விடும் என்ற எந்த அபாயமும் இல்லை. புதிய வகுப்புகளை உருவாக்கும் ஊழியங்களும் மற்றும் நூற்றுக்கணக்கான வேறுவிதங்களிலுள்ள மற்ற ஊழியங்களும், வேலையாட்களை அழைத்துக் கொண்டிருக்கின்றது. நாம் தாழ்மையான ஆவியைப் பெற்றிருப்பதற்கு ஏற்ப தேவன் நம்மைப் பயன்படுத்துவார்.