Q476:1
கேள்வி (1911)-1- சமீபத்தில் வெளிவந்த வாட்ச் டவரின் பத்திரிகையில், ஆறு-கூட்டங்களைக் கொண்டதான வேதாகம புதிய வகுப்புகளை உருவாக்கிடும் வேலையானது எந்த ஒரு பட்டணத்திலும் நடத்தப்படலாம் என்று எழுதப்பட்டிருந்தது. இரண்டாம் கூட்டத்தில் இரண்டு அல்லது மூன்று பேரே ஆர்வமுடையவர்களாக வருகிறார்களெனில், ஆறு கூட்டங்களையும் ஒரே இடத்தில் நடத்தப்பெறுவது நலமானதாக இருக்குமா?
பதில் – இல்லை என்றே நான் பதிலளிக்கின்றேன்; ஒருவேளை ஜனங்கள் யாரும் வரவில்லையெனில், நான் கூட்டங்களைத் தொடர்வதில்லை. நீங்கள் மாத்திரம்தான் கூட்டத்தில் கலந்துகொள்பவராகக் காணப்படுகின்றீர்களானால், கூட்டத்தினை நடத்தாதீர்கள். எத்தனை பேர்கள் கலந்துகொண்டால் கூட்டத்தை நடத்தலாம் என்பதை நீங்கள் முடிவுசெய்ய வேண்டும்.