Q454:1
கேள்வி – (1910)-1- திரள்கூட்டத்தினரால் அடையப்பெறும் இலக்கிற்கும், சிறுமந்தையினரால் அடையப்பெறும் இலக்கிற்கும் இடையில் வித்தியாசம் உள்ளனவா?
பதில் – நீதி மற்றும் நியாயம் முன்வைத்திடும் காரியங்கள் அனைத்திற்கும் கீழ்ப்படிவதற்கு என்று மாத்திரம் சிறுமந்தையினர் அர்ப்பணிக்கப்பட்டவர்களாய் இராமல், இன்னுமாக தேவனுடைய சித்தத்தைத் தாங்கள் செய்ய வேண்டும் என்று நீதியானது கட்டளையிட்டாலும் அல்லது இல்லாவிட்டாலும், எப்படியேனும் அவர் சித்தத்தைத் தாங்கள் செய்வதாகவும் இவர்கள் தேவனிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். நீதியானது கட்டளையிடுகின்ற அல்லது கட்டளையிட முடிகின்ற காரியத்திற்கும் அதிகமானதையே நீங்கள் பலிசெலுத்திட வேண்டும். இப்படியாகவே நமது கர்த்தர் இயேசு விஷயத்திலும் காணப்பட்டது. இயேசு நியாயப்பிரமாணத்தினைக் கைக்கொள்ள வேண்டும் என்று நீதியானது கட்டளையிடலாம், ஆனாலும் அவர் தம் ஜீவனைப் பலிசெலுத்திட வேண்டும் என்று நீதியினால் கட்டளையிட முடியாது. ஒவ்வொரு மனுஷரும் நியாயப்பிரமாணத்தினைக் கைக்கொள்ள வேண்டும் என்று தேவன் எதிர்ப்பார்க்கின்றார்; ஆனாலும் நாம் நம்முடைய சரீரங்களை ஜீவபலியாகச் செலுத்திட வேண்டும் என்று அவர் கட்டளையிடுகிறதில்லை; அது ஓர் அழைப்பாகும். தம்முடைய பிரமாணத்தினைக் கைக்கொள்ளுவதற்கு அவர் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறதில்லை; நீங்கள் பிரமாணத்தினைக் கைக்கொள்ளவில்லையெனில், இன்னென்ன விளைவு உண்டாகும் என்றே அவர் கூறியுள்ளார்; இது என் நியமம் என்கிறார். நம் தேவனாகிய கர்த்தரை நம் முழு இருதயத்தோடும், மனதோடும், ஆன்மாவோடும், பலத்தோடும் அன்புகூர வேண்டும் என்றும், நம்மை நாம் அன்புகூருவதுபோன்று, நம் அயலானை அன்புகூர வேண்டும் என்றும் உள்ள இந்த நியமத்தினைத் தேவன் எனக்கும், உங்களுக்கும் முன்பாக வைத்துள்ளார். “நம்மால் நியாயப்பிரமாணத்தினைக் கைக்கொள்ள முடியாதே” என்று நீங்கள் சொல்லலாம். நம்முடைய மாம்சத்தைப் பொறுத்தமட்டில் கைக்கொள்ள முடியாததுதான்; ஆனால் நம் மனங்களிலும், இருதயங்களிலும் அதைக் கைக்கொண்டிடலாம். நாம் இப்படியாகச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதில் குறைவுபடுதல் என்பது, தேவனுடைய பிரமாணத்தினைக் கைக்கொள்வதில் குறைவுபடுதலாகும் மற்றும் எவ்வகையான நித்திய ஜீவனுக்கும் நாம் அபாத்திரர்களாகக் காணப்பட்டுவிடுவோம். இப்படியாகவே திரள்கூட்டத்தாரின் விஷயத்தில் காணப்பட வேண்டும். இவர்கள் தேவனுடைய பிரமாணமாகிய இந்த நியமத்தைக் கைக்கொள்வதில் குறைவுபட்டவர்களாய் இருக்கக்கூடாது. இதைக்காட்டிலும் அதிகமானவைகளைச் செய்திடுவதற்கு இவர்கள் ஒப்புக்கொண்டிருந்தனர் மற்றும் இவர்களும் அன்பு எனும் தரநிலையை, நியமத்தை எட்டியாக வேண்டும். இந்த நியமமே, அடுத்த யுகத்தில் உலகத்திற்கான நியமமாகும் மற்றும் அப்போது இந்த நியமத்தை/தரநிலையை அடைய அவர்கள் கடமைப்பட்டிருப்பார்கள். அவர்கள் ஆயிர வருட காலங்களில் அந்தத் தரநிலையை அடையவில்லையெனில், ஆயிர வருடங்களின் முடிவில் அவர்கள் நித்திய ஜீவனை அடையமாட்டார்கள். அருமை நண்பர்களே அப்போது உலகமானது நல்ல ஜனங்களைப் பெற்றிருக்கும். அவர்கள் நல்ல ஜனங்களாய் இருப்பார்கள் என்று நான் எண்ணுகின்றேன். இயேசு தம் வேலையை முடிக்கும்போது, அனைத்தும் நலமாய் இருக்கும் மற்றும் தேவனுடைய வல்லமையின் அருமையான வெளிப்பாடாய் மனுக்குலம் காணப்படும் மற்றும் மனுக்குலத்தார் தேவபக்தியுள்ளவர்களாய்க் காணப்படுவார்கள்.