Q449:1
கேள்வி – (1909)-1- பரம அழைப்பிற்கு அழைக்கப்பட்டவர்கள் அனைவரும், அன்பின் பூரண இலக்கினை அடைய வாய்ப்புள்ளதா மற்றும் அது எப்படி?
பதில் – ஒவ்வொரு மனுஷஜீவியினாலும் அந்த இலக்கினை அடைய முடியும் மற்றும் சிறுமந்தையிலோ அல்லது திரள்கூட்டத்திலோ அல்லது திரும்பக்கொடுத்தலின் ஆசீர்வாதம் பெறும் வகுப்பாரிலோ உள்ள அங்கத்தினனென நித்திய ஜீவனை அடையும் ஒவ்வொருவனும், எந்த ஒரு ஜீவதளத்திலும் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் யார் ஒருவரும் பூரண அன்பின் இலக்கிற்கு அல்லது இந்நிலைக்கு வந்தாக வேண்டும்; ஏனெனில் இப்படி இல்லாத யாருக்கும் தேவன் நித்திய ஜீவனைக் கொடுக்கிறதில்லை. அன்பின் பிரமாணம் என்பது தேவனால் அங்கீகரிக்கப்படும் மிக அடிப்படையான காரியமாகும். ஆவியின்படி நீங்கள் பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களாக இருக்கின்றீர்கள் மற்றும் யூதன் மாம்சத்தில் செய்ய வேண்டியவைகள் அனைத்தையும் நீங்கள் ஆவியில் செய்து ஜீவிக்கும்படிக்குக் கடமைப்பட்டிருக்கின்றீர்கள். “உன் தேவனாகிய கர்த்தரை உன் முழு இருதயத்தோடும், உள்ளத்தோடும், ஆத்துமாவோடும் மற்றும் பலத்தோடும் அன்புகூருவாயாக” என்று எழுதப்பட்டிருப்பது உங்களுக்கு ஞாபகமிருக்கும். “இதைவிடக் குறைவாய்ச் செய்தால் போதாதா?” என்று நீங்கள் கேட்கலாம். இல்லை என்பதே பதில். “ஓ! ஆனால் எனக்கு மாம்சத்தின் பெலவீனங்கள் காணப்படுகின்றன மற்றும் நான் செய்ய வேண்டுமென்றிருப்பவைகளை என்னால் செய்ய இயலவில்லை” என்று நீங்கள் சொல்லலாம். நம்மைக் கர்த்தர் இப்பொழுது நம்முடைய மாம்சத்தின்படி நியாயந்தீர்க்காமல், நம்முடைய இருதயத்தினுடைய உணர்வுகளின் அடிப்படையில் நியாயந்தீர்த்துக் கொண்டிருக்கின்றார் என்று அப்போஸ்தலன் கூறியுள்ளார். ஒருவேளை உங்கள் முழு ஆன்மாவோடும், மனதோடும், பலத்தோடுமுள்ள கர்த்தருக்கான அன்பினால் உங்கள் இருதயம் நிறைந்து காணப்படுமானால் … அப்போது நீங்கள் பூரண இலக்கினுடைய அந்த அம்சத்தை எட்டியிருக்கின்றீர்கள். நீங்கள் விரும்பினாலும், இதைக்காட்டிலும் அதிகமாய்ச் செய்ய முடியாது மற்றும் குறைவாயும் நீங்கள் செய்யக்கூடாது. உங்கள் இருதயம் இப்படியாக இல்லையெனில், நீங்கள் சிறுமந்தையின் அல்லது திரள்கூட்டத்தின் அங்கத்தினராய் இருப்பதில்லை; மாறாக இத்தகையவர்கள் இரண்டாம் மரணத்திற்குள் செல்கின்றவர்களாய் இருப்பார்கள். அனைவருமே இந்தத் தரநிலையினைத் தங்கள் இருதயங்களில் எட்டிட வேண்டும்; இல்லையேல் அவர்கள் இரண்டாம் மரணத்தில் மரித்துப் போகின்றவர்களாய் இருப்பார்கள்.
“உன்னை நீ அன்புகூருவதுபோன்று, உன் அயலானையும் அன்புகூருவாயாக” எனும் இரண்டாம் கற்பனையைக் குறித்து என்ன சொல்வது? இது மனுக்குலம் தொடர்புடையதாகும். எவ்வாறு? வியாபாரத்தில் அயலானிடமிருந்து இலாபம் ஈட்டிக்கொள்ள வேண்டுமா அல்லது அவனைச் சாதகமாய்ப் பயன்படுத்தி, இலாபம் ஈட்டிக்கொள்ள வேண்டுமா? இல்லை. அயலான் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புவீர்களோ, அப்படியாகவே நீங்களும் அவனை நடத்த வேண்டும். ஆனால் அதற்கென்று நீங்கள் அயலானை நீயாயந்தீர்க்க வேண்டும் என்றாகாது. ஒருவேளை உங்கள் அயலான் தன்னுடைய வயல், உங்கள் வயலைக் காட்டிலும் சிறந்தது என்று எண்ணுவானானால் மற்றும் நீங்களும் வியாபாரம் ஒன்றைச் செய்வீர்களானால், நீங்கள் இருவருமே உங்கள் கண்களைத் திறந்து வைத்து, காரியத்திற்குள் செயல்படுங்கள்; ஆனாலும் உங்கள் அயலானின் சூழ்நிலையை உங்களுக்குச் சாதகமாய்ப் பயன்படுத்திவிடுதல் என்பது அன்பான செய்கையாய் இராது. சபை இதைக்காட்டிலும் அதிகமாய்ச் செய்ய வேண்டும். எப்படி? அது பின்வருமாறு என் அன்பு சகோதரனே:- நியாயப்பிரமாணமானது உங்களிடத்தில் ஒருபோதும் பலியினை எதிர்ப்பார்க்கிறதில்லை; உங்களை நீங்கள் அன்புகூருவதுபோன்று உங்கள் அயலானை நீங்கள் அன்புகூர மாத்திரமே எதிர்ப்பார்க்கின்றதாய் இருக்கின்றது; ஆனால் இதைக்காட்டிலும் அதிகமானதையே பிதாவானவர், கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினர்களாய் இருப்பவர்களிடத்தில் எதிர்ப்பார்க்கின்றார்; அதாவது உங்கள் பூமிக்குரிய உரிமைகளை நீங்கள் பலிசெலுத்தவும், அவற்றைக் கையளித்துவிடவும் அவர் எதிர்ப்பார்க்கின்றார். இயேசு இப்படியே செய்தார் மற்றும் அவர் செய்த காரியமானது, நியாயப்பிரமாணம் எதிர்ப்பார்த்ததைக் காட்டிலும் அதிகமான செய்கையாய் இருந்தது. அவர் தம்முடைய பூமிக்குரிய உரிமைகளையும், அவரின் நலனுக்கடுத்தவைகளையும் பலியில் கொடுத்துவிட்டார். “நாங்கள் எங்கள் பூமிக்குரிய நலன்களைப் பலிசெலுத்துகின்றோம்; அவை விலையேறப்பெற்றவைகளென நாங்கள் கருதுகிறதில்லை” என்று நீங்கள் சொல்லலாம். அது சரிதான்; அவைகளை நீங்கள் பலிசெலுத்தியாக வேண்டும்.