Q255:1
கேள்வி (1915 – Z.5793)-1- மூப்பர்களையும், உதவிக்காரர்களையும் தேர்ந்தெடுப்பதற்குரிய விதிமுறைகள் யாவன?
பதில் – சபையாருக்கான ஊழியக்காரர்களாகிய – மூப்பர்களையும், உதவிக்காரர்களையும் தேர்ந்தெடுத்தல் குறித்து ஆறாம் தொகுதியில் கொடுக்கப்பட்டுள்ளதான யோசனைகளை நடை முறைப்படுத்துவதில் சகோதரர்களில் சிலர் சிரமப்படுவதை நமக்கு வந்திட்டதான அநேகம் கேள்விகளானது சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது.
தேர்ந்தெடுத்தல் காரியத்தில் மாற்ற முடியாத நிலையான விதிகளை/ நியமங்களைக் கொடுத்திட வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. வேதாகமம் அப்படியாக எதையும் கொடுக்கவில்லை மற்றும் அப்படியாக நியமங்களை ஏற்படுத்திடுவதற்கு எவருக்கும் உரிமையும் இல்லை. கூடுமானமட்டும் தேர்ந்தெடுத்தலானது ஏகமனதுடன் காணப்பட வேண்டும் என்பதும், ஒரு சகோதரனுக்குச் சபையாரில் 75 அல்லது இதற்கும் அதிகமான சதவீதமானவர்கள் ஆதரவு கொடுக்காத பட்சத்தில், அந்த ஊழியத்தினை – பணியினை அவர் ஏற்றுக்கொள்வது ஞானமற்றதாய் இருக்கும் என்பதும்தான் எங்களுடைய கருத்தாய் இருந்தது. இதினிமித்தம் 25 அல்லது 30 சதவீதமானவர்களாய்க் காணப்படும் சிறுபான்மையானவர்கள், சபையாருக்குத் தடங்கல் செய்யவும் மற்றும் தேர்ந்தெடுத்தலைத் தடைப்பண்ணவும் தைரியமூட்டப்பட வேண்டும் என்ற அர்த்தத்தில் நாங்கள் சொல்கின்றோம் என்றாகாது.
சரியாகச் சொல்ல வேண்டுமெனில் அன்பானது, மற்றவர்களின் உணர்வுகளையும் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தும் தருணங்களைத் தவிர மற்றபடி சபையில் – ஒரு வாக்கில் (vote) பெரும்பான்மையானவர்களாய்க் காணப்படுபவர்களே எந்தக் காரியத்தையும் தீர்மானிக்கின்றவர்களாய் இருப்பார்கள். உதாரணத்திற்கு நூறு பேரைக் கொண்ட ஒரு சபையில் 51- பேர்கள், சபையின் ஊழியக்காரர்களாய் யார் இருக்க வேண்டும் என்பது தொடர்பான காரியத்தில், தீர்மானிப்பதற்கு உரிமை பெற்றவர்களாய் இருக்கின்றனர் மற்றும் மீதமான 49 பேரும் தாங்கள் சிறுபான்மையானவர்களாய் மாத்திரம் இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்து மிகவும் அமைதலுடன், ஆட்சேபணையின்றி ஒத்துக்கொண்டு, பெரும்பான்மையானவர்களின் விருப்பத்திற்கு ஆதரவு வழங்கிட உண்மையாய் நாடிட வேண்டும்.
அன்பின் ஆவியும், சபையார் யாவருடைய சிறந்த நலனுக்கடுத்தக் காரியங்களும் மாத்திரந்தான் 51 சதவீதத்திற்கு அதிகமானதை யோசனையாகத் தெரிவிக்கின்றதாய் இருக்கும். அன்பானது ஏகமனதான வாக்கினைச் செலுத்திட நாடிட வேண்டும். ஆனால் இது எப்படி அடையப் பெறலாம்? நாங்கள் ஒரு யோசனையை முன்வைக்கின்றோம்:
ஒருவேளை ஒரு சபையில் நூறு பேர்கள் இருக்கின்றார்கள் என்றும், ஊழியத்திற்கு ஆறு மூப்பர்கள் தேவைப்படுவதாகக் கருதுகின்றார்கள் என்றும் வைத்துக்கொள்ளலாம். A, B, C, D, E, F – ஆகியோர் ஏறக்குறைய திறமையுடைய சகோதரர்களாய் அங்குக் காணப்பட்டு, முன்மொழியப்பட்டிருக்கின்றார்கள். A – அவர்களுக்கு 100-வாக்குகளும்; B – அவர்களுக்கு 90-வாக்குகளும்; C – அவர்களுக்கு 80-வாக்குகளும்; D – அவர்களுக்கு 70-வாக்குகளும்; E – அவர்களுக்கு 60-வாக்குகளும்; F – அவர்களுக்கு 50-வாக்குகளும் கிடைத்துள்ளது. சிறந்தவர்கள் என்ற அடிப்படையிலான வாக்குகளின்படி தேர்ந்தெடுக்க வேண்டுமானால், 90 சதவீதம் எனும் அடிப்படையில், இருவர் மாத்திரமே தேர்ந்தெடுக்கப்படக்கூடும்; ஆனால் ஒருவேளை அந்த ஆறுபேரும் சபையார் பெற்றிருப்பதான நல்ல பாத்திரங்களெனச் சராசரியாகச் சபையாரின் மதிப்பீட்டில் காணப்படும் பட்சத்தில் மற்றும் அவர்களது நல்லொழுக்கக் குணலட்சணத்தில் குறைவற்றவர்களாக அறியப்பட்டிருக்கும் பட்சத்தில், அவர்கள் ஆறு-பேருமே ஏகமனதுடன் தேர்ந்தெடுக்கப்படலாம் என்பது நம்முடைய யோசனையாய் இருக்கின்றது.
பரிசுத்த பவுலடிகளால் கொடுக்கப்பட்டுள்ளதான தகுதிநிலையானது, அப்படியே கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று எண்ணுவது தவறாய் இருக்கும்; ஏனெனில் எவருமே இந்தத் தகுதி அனைத்திலும் முழுமையான நிலையில் காணப்படுவதில்லை. அப்போஸ்தலன் சிறந்த ஒரு மூப்பர் எப்படி இருப்பார் என்று தெரிவித்துள்ளார். கர்த்தருடைய சித்தத்தைக் குறித்துச் சிந்திக்கையில் வாக்களிப்பவர்கள் ஒவ்வொருவரும் இந்த மாதிரியினை / கொள்கையினைத் தனது மனதிற்கு முன்பாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்; ஆனால் கடுமையான களங்கங்கள்/குறைபாடுகள் காணப்படும் பட்சத்தில் தவிர, மற்றப்படி சபையார் மூப்பர் அற்றவர்களாகக் காணப்படக்கூடாது.
நமது கர்த்தர் இதுபோலவே – அடைய வேண்டிய ஒரு பூரணமான நிலையினை, “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள் என்று கூறினபோது, நமக்கு முன்வைத்தவரானார் (மத்தேயு 5:48). தேவன் பூரண சற்குணராயிருப்பது போன்று, யார் பூரண சற்குணராயிருக்கின்றனர்? “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை (ரோமர் 3:10). நாம் நம்மைக் குறைவான அளவுகோலுடன் ஒப்பிட்டு மதிப்பிடாமல், மாறாக பூரண அளவுகோலுடன் ஒப்பிட்டு மதிப்பிட வேண்டும் எனும் அர்த்தத்திலே ஆண்டவர் கூறியுள்ளார்; மேலும் இதன் மூலம் நாம் நம்முடைய சொந்த ஜீவியங்கள் மற்றும் குணலட்சணங்கள் தொடர்புடைய விஷயத்திலும், மூப்பர்களாகவும், மந்தைக்கு மாதிரிகளாகவும் இருக்கும்படிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் விஷயத்திலும் நாம் உயர்வான கொள்கைகளைக் கொண்டிருக்க நமக்கே உதவி புரிகின்றவர்களாய் இருப்போம்.
முழுமையான அர்ப்பணம்பண்ணி, அதைத் தண்ணீர் முழுக்கு எனும் வழக்கமான அடையாளத்தின் மூலம் தெரிவித்துள்ளவர்கள் யாவரும் தவிர மற்றபடி எவரும் வாக்களிக்கக்கூடாது என்பதும் எப்போதும் நினைவில் கொள்ளப்பட வேண்டும். இப்படியாகத் தங்களது அர்ப்பணத்தினை அடையாளத்தின் மூலமாகத் தெரிவித்திடாதவர்கள், சகோதரர்கள் அல்ல என்று புறக்கணிக்கப்படக்கூடாது, மாறாக சபையாருக்கு ஊழியம் புரிவதற்கு யார் தகுதியானவர்களாய் இருப்பார்கள் என்பதில் தங்களது எண்ணத்தினை வெளிப்படுத்துவதற்கு ஆற்றலற்றவர்களாய் இருப்பதினால் மிகவும் வளர்ச்சியற்றவர்களாய் இருப்பவர்களெனக் கருதப்பட வேண்டும் மற்றும் இவர்கள் ஊழியக்காரர்களாகுவதற்கும் தகுதியற்றவர்களாய் இருப்பார்கள்.