Q243:1
கேள்வி (1911)-1- மூப்பராகத் தேர்ந்தெடுக்கப்படாமலும் மற்றும் ஆவிக்குரிய தகுதிகளையுடையவராய் இருந்தும், சில பூமிக்குரிய சந்தர்ப்பச் சூழ்நிலைகளினிமித்தம் தேர்ந்தெடுக்கப்படுவது தடங்கல்பட்டுள்ள நிலையிலும் சகோதரன் ஒருவர் இருக்க, திறமைமிக்க இச்சகோதரன் விசேஷித்த தருணங்களில் ஒழுங்குச் செய்யப்பட்டிருக்கும் ஒரு கூடுகை நிகழ்ச்சியில் தூது கொடுக்க வாய்ப்பளிக்கப்படுவது குறித்த உங்களது கருத்தென்ன?
பதில் – ஒருவேளை சபையாரும் அவரைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், அவரைத் தேர்ந்தெடுக்கும் காரியத்தை மிகச் சுலபமாக நடத்தலாம் என்று நான் எண்ணுகின்றேன். இதனை பற்றின யோசனையை முன்வைத்து, வாக்கு (vote) எடுங்கள்; இப்படிச் செய்வது, காரியத்தை உடனடியாக முடிவிற்குக் கொண்டுவரும். அவர் எப்போது வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்படலாம். குறிப்பிட்ட நாட்களில்தான் மூப்பரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று எதுவுமில்லை. அவரைச் சபையார் தகுதியான நபர் என்று ஒருவேளை கருதினால், மேலும் அவசியம் இருக்கும் பட்சத்தில் அவர் வருடத்தின் நடுவில் அல்லது அடுத்த மாதம் அல்லது வேறு எந்த நேரத்திலும் தேர்ந்தெடுக்கப்படலாம். இதுபோன்றதான சூழ்நிலைகளில், காரியத்தைச் சபையாரின் கவனத்திற்குக் கொண்டுவந்து, அதைக்குறித்து, ஒருமாத காலமாக அல்லது இன்னும் அதிகக்காலமாகச் சிந்தித்து, பின்னர் ஒரு குறிப்பிட்ட ஞாயிற்றுக்கிழமை அன்று, இதற்காகச் சபையாரை வாக்குச் செலுத்தும்படி கேட்டுக்கொள்வது நலமாயிருக்கும் என்று நான் எண்ணுகின்றேன். இது சபையாருக்கு முழு வாய்ப்பை அளிக்கின்றது மற்றும் ஒருவேளை அவர்கள் வாக்குச் (vote) செலுத்தினார்களெனில், அவ்வாக்கின்படி தீர்மானம் எடுக்கப்படும்.