Q238:3
கேள்வி (1910)-3- வாக்காளருக்கான தகுதி தொடர்பான விஷயத்தில், அர்ப்பணம் பண்ணியுள்ளவர்களே வாக்களிக்க (vote) வேண்டுமென்று நீங்கள் கூறினீர்கள். சபையைச் சந்திக்க வருபவர்கள் குறித்து என்ன சொல்லுகின்றீர்கள்? அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வந்து கொண்டிருப்பதோ அல்லது அவர்கள் அங்கேயே தொடர்ந்து வரும்படியான தங்களுடைய நோக்கத்தைத் தெரியப்படுத்துவதோ – அவர்கள் வாக்கு (vote) அளிப்பதற்கு அவர்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்குமா?
பதில் – வாக்குகள் (vote) செலுத்தும்படிக்குக் கேட்டுக்கொள்ளப் படும்போது, “இன்று இங்குக் கூடியிருக்கும் தேவனுடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்கள் அனைவரும் – இச்சபையில் கூடி வருவதற்கான விருப்பம் கொண்டுள்ளவர்கள், வாக்குகள் (vote) செலுத்தும்படிக்கு ஆவலுடன் அழைக்கப்படுகின்றார்கள் மற்றும் இச்சபையில் தொடர்ந்து கூடுவதற்கு வர வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள், வாக்குகள் (vote) செலுத்த வேண்டாம் மற்றும் முழுமையாக அர்ப்பணம் பண்ணாத எவரும் வாக்குகள் (vote) செலுத்த வேண்டாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஏனெனில் இதுவே இக்காரியம் தொடர்பான கர்த்தருடைய சித்தமாக இருக்கின்றது என்று கூறுவது சரியாயிருக்கும் என்பது நமது எண்ணமாக இருக்கின்றது. வாக்கு என்பது ஓர் / ஒவ்வொரு இடத்தில் காணப்படும் சபையாரால் வெளிப்படுத்தப்படும் தேவசித்தமாக இருக்கின்றது. மேலும் அந்தந்த இடங்களில் அர்ப்பணம் பண்ணினவர்கள் எத்தனை பேர் இருக்கின்றார்களோ, அவர்களே சபையாராய் இருக்கின்றனர். என்னுடைய கணிப்பின்படி, அப்பட்டணத்தில் வாழும்படிக்குப் புதிதாய் வந்துள்ள ஒரு சகோதரன் அல்லது சகோதரியின் விஷயம் எவ்விதமான வித்தியாசத்தையும் காட்டுவதில்லை. ஏனெனில் நாம் ஜேம்ஸ் டவுனில் அல்லது புரூக்கிளின் அல்லது பிட்ஸ்பர்க் அல்லது நியூ ஓர்லியன் அல்லது வேறு ஏதாகிலும் இடத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் சரி, நாம் அனைவரும் கிறிஸ்துவில் ஒன்றாய் இருக்கின்றோம்.