Q226:3
கேள்வி (1910)-3- ரோமர்16:17-ஆம் வசனத்தில் பிரிவினைகளை உண்டாக்குகிறவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று நமக்குக் கூறப்பட்டுள்ளது. இத்தகையவர்களுக்கும் மற்றும் வெறுமனே குழம்பிக்காணப்படுகிறவர்களுக்கும் அல்லது சத்தியத்தினுடைய ஏதோ சில மேலான கருத்தினை உடனடியாகப் பார்க்க முடியாதவர்களாகக் காணப்படுகிறவர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை அறிந்திட எக்காரியங்கள் நமக்கு உதவிடும்? தங்களுடைய கருத்துவேறுபாட்டைக் குறித்துத் தெரிவிக்கும் விஷயத்தில் வழக்கத்திற்கு மாறாக ஆவல் உள்ளவர்களாக ஒருவேளை இந்த இரண்டாம் வகுப்பார் காணப்படுவார்களானால், அவர்களை நாம் எப்படிக் கையாள வேண்டும்?
பதில் – அது ஒரு பகுத்துணரும் காரியம் என்றும், கர்த்தருடைய வழிநடத்துதலை வேண்டிக்கொண்டு நீங்கள் உங்கள் சொந்த பகுத்துணர்தலைப் பயன்படுத்திட வேண்டும் என்றும், சகோதரர்கள் யாவரோடும் ஞானமாய் நடந்துக்கொள்ளுங்கள் மற்றும் எப்போதும் இரக்கத்துடனும், அன்புடனும் நடந்துகொள்ளுங்கள் என்றும் நான் சொல்லுவேன்.
பிரிவினைகளை உண்டுபண்ணுகிறவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருக்கும்படி அப்போஸ்தலன் கூறினதற்கான அர்த்தமானது… யாரேனும் நம்மிலிருந்து வேறுபட்டுப் பேசுகிறார்கள் என்றால், நாம் அவரோடு பிரச்சனைப் பண்ணி, அவரை வெளியேற்றக்கூடாது என்று நான் புரிந்துகொள்கின்றேன். அவர்கள் தங்கள் கருத்தை முன்வைப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொண்டு அதை முன்வைத்த பிற்பாடும், போராடிக்கொண்டிருக்கும் மனப்பான்மையில் காணப்பட்டு, தொடர்ந்து மோதிக்கொண்டும், பிரிவினையை உண்டாக்கத் தக்கதாகச் செயல்பட்டுக்கொண்டும் காணப்படுவார்களானால், அவர்களை விட்டு விலகிட வேண்டும் என்ற அர்த்தத்தில் அப்போஸ்தலன் கூறியுள்ளார். அவர் விட்டு விலக வேண்டுமென்று சொல்கையில், அவர்களைக் காட்டு விலங்குகளைப் போன்றோ, எதிர்ப்பவர்களைப்போன்றோ கருதி விட்டுவிலக வேண்டும் என்று நான் புரிந்துகொள்ளவில்லை மாறாக இசைவான நிலையில் காணப்படுபவர்களோடு நாம் முழுமையாயும், சுதந்தரமாயும் நம் உணர்வுகளை வெளிப்படுத்த விரும்புவது போன்று நாம் யாரிடத்தில் வெளிப்படுத்திட விரும்பிடாமல் இருப்போமோ, அத்தகைய நபர்களென அவர்களைக் கருதவேண்டியதைக் குறிப்பதாகப் புரிந்துகொள்கின்றேன். உதாரணத்திற்கு, ஏதோ ஒரு வேதவாக்கியப் பகுதியின்மீது, ஏதோ சில வேறுபட்ட கருத்தினை ஒரு சகோதரன் கொண்டிருப்பதற்காக, நாம் அவரை விட்டு விலகிடுவதற்கும், அவரைச் சகோதரன் என்று மறுத்திடுவதற்கும் நாம் அனுமதிக்கப்படவில்லை. கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினனாகக் கருதப்பட்டிருக்கும் ஒருவரை ஐக்கியத்தினின்று ஒதுக்கிவைத்திடுவதற்கு ஒரு செயல்முறை, ஒரே ஒரு வழிமுறை காணப்படுகின்றது; முதலாவது சம்பந்தப்பட்டவரிடத்திற்குத் தனிமையில் செல்ல வேண்டும். ஒருவேளை காரியத்தினைக்குறித்த சரியான புரிந்துகொள்ளுதலுக்குள்ளாக வரமுடியவில்லையெனில், உங்களோடுகூட வேறு இரண்டு அல்லது மூன்று பேரை அழைத்துச் செல்லுங்கள். ஒருவேளை இன்னமும் ஒருமனப்பாட்டிற்குள் வரமுடியவில்லையெனில், விஷயமானது முறையான பிரதிநிதிகள் வாயிலாகச் சபையினிடத்திற்குத்; தெரிவிக்கப்படலாம். இரண்டு அல்லது மூன்று பேரை அழைத்துச் செல்லும் விஷயத்தில், நீங்கள் சபையினுடைய இரண்டு அல்லது மூன்று மூப்பர்களை அழைத்துச் செல்லலாம்; ஏனெனில் அழைத்துச் செல்லப்படுவதற்கு அவர்கள் மிகப் பொருத்தமான நபர்களாய் இருப்பார்கள். ஒருவேளை அச்சகோதரன் இவர்களுக்குச் செவிக்கொடுக்க மறுப்பாரானால், பின்னர் அது சபையாருடைய கவனத்திற்குக் கொண்டு வரப்படலாம்; மற்றும் இந்த ஒரு வழியினால் மாத்திரமே மற்றும் ஒன்றுகூடிவரும் தேவனுடைய ஜனங்கள் அடங்கின முழுச்சபையாரின் வாக்குரிமையினால், அதாவது இவ்விஷயத்தில் அவர்களது வாக்கின் (vote/voice) மூலமாக மாத்திரமே, ஒருவர் சகோதரனென ஐக்கியத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட முடியும். சகோதரர்களென நீங்கள் அடையாளம் கண்டுகொள்பவர்களின் மத்தியில், மற்றவர்களைக்காட்டிலும் சிலரிடத்தில் நீங்கள் மிகவும் நெருக்கமான ஐக்கியம் கொண்டிருப்பீர்கள் மற்றும் இவர்களுக்கு நீங்கள் விசேஷித்த கவனம் செலுத்துவீர்கள்; இதற்குக் காரணம் அவர்களது கல்வியோ அல்லது சமுதாய அந்தஸ்தோ அல்லது ஐசுவரியமோ இல்லாமல், மாறாக கர்த்தரிடத்திலான அவர்களது உறவேயாகும்; மற்றும் பிரிவினையை உண்டுபண்ணுகிற ஒருவரிடத்தில், உங்களது ஐக்கியத்தினை அதிகமாய்க் கொடாதிருங்கள்; மேலும் ஒருவேளை அவர் முழுமையான ஐக்கியத்தில் காணப்பட்டும், பிரிவினைகளை உண்டு பண்ணாமலும் இருந்திருந்தால், நீங்கள் அவரிடத்தில் எப்படி நடந்திருந்திருப்பீர்களோ அப்படி நடந்துகொள்வதற்குப் பதிலாக, இப்பொழுது கொஞ்சம் அதிகமாகவே முகம் கொடுத்துப் பேசாதீர்கள். அவர் “முரண் கோட்பாடுடையவர் (heretics) என்று அவருக்குக் கெட்டப் பெயர் உண்டாக்கிட வேண்டுமென அப்போஸ்தலன் கூறிடவில்லை. அந்நபர் ஆபத்தான நிலையில் இருப்பதை நீங்கள் காணும்பட்சத்தில், அவரை எந்த ஓர் ஊழியத்திற்கும் அல்லது அவருக்கு விசேஷமாய் ஆதரவாகக் காணப்பட வாய்ப்புள்ள எதற்கும் நியமிப்பதைத் தவிர்த்திடுங்கள். அவரைத் தள்ளிவிடாதிருங்கள்; அவருக்கு உதவிசெய்ய ஆயத்தமாய் இருங்கள் மற்றும் அவருக்குப் பாதகம் செய்யாதிருங்கள்; இதுவே அப்போஸ்தலனின் கருத்தென்று நான் எண்ணுகின்றேன்.