Q152:3
கேள்வி (1911)-3- ஒருவேளை இப்பொழுது அர்ப்பணம்பண்ணி, ஆனால் பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்படத் தவறுவார்களானால், இவர்களைக் கர்த்தர் எவ்விடத்தில் வைப்பார்?
பதில் – ஒருவேளை இவர்கள், முற்காலத்தில் காணப்பட்டவர்கள் உண்மையுள்ளவர்களாக. இருந்தது போன்று உண்மையுள்ளவர்களாக இருந்து, நீதிக்கும், சத்தியத்திற்கும் உள்ள ஊழியத்தில் தங்கள் ஜீவன்களையே ஒப்புக்கொடுத்துவிடுவார்களானால், தேவன் ஏதோ ஒரு விதத்தில் இவர்களுக்கு முற்பிதாக்களோடு ஒரு பங்கைக் கொடுப்பார் என்று நாங்கள் யூகிக்கின்றோம். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், இவர்கள் உபத்திரவ காலத்திற்குள் ஓரளவு கடந்துசென்று, அதில் கர்த்தருக்குக் கொண்டிருக்கும் உண்மையின் நிமித்தம், தங்கள் ஜீவன்களை இழப்பார்களானால், முற்பிதாக்களுக்குச் செய்வதையே தேவன் இவர்களுக்கும் செய்வார் இவர்கள் முற்பிதாக்கள் – வகுப்பாரில் உள்ளவர்களாகக் கருதப்படுவார்கள்.