Q125:1
கேள்வி (1916)-1- ஓர் இடத்திலுள்ள வேதமாணவர்கள், அவ்விடத்திலுள்ள சபையின் அங்கத்தினர்களாக இருந்து, ஒரு குழுவாக யாரையும் சார்ந்திராமல் செயல்படலாமா?
பதில் – ஐயத்திற்கிடமின்றி ஓரளவிற்குக் கிறிஸ்தவ சுயாதீனம்; காணப்படவே செய்கின்றது. இதனை ஜனங்கள் செயல்படுத்துகையில் கர்த்தர் பிரியமே கொள்வார் என்று நாம் நம்புகின்றோம். உதாரணத்திற்கு ஒரு சகோதரன், இன்னொரு சகோதரனுடைய இல்லத்திற்குச் செல்கின்றார் என்று வைத்துக் கொள்வோம் மற்றும் மாலை வேளையினைச் செலவழிக்க இரண்டு அல்லது மூன்று அயலகத்தார் வருகின்றார்கள். ஒருவர்: “வாருங்கள் நாம் சதுரங்க விளையாட்டு (chess) விளையாடலாம் என்று கூற, மற்றவரோ: “வேண்டாம், நாம் வேத ஆராய்ச்சி பண்ணிடலாம் என்று கூறுகின்றார் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் “இல்லை, நாம் வேத ஆராய்ச்சி செய்திட முடியாது; காரணம் இதற்கு நம்முடைய சபையாரால் அதிகாரம் வழங்கப்படவில்லை ஆகையால் நாம் சதுரங்க விளையாட்டினை விளையாடலாம் என்று கூறிடுவது கர்த்தருடைய சித்தமாய் இருக்குமென நாம் எண்ணுகிறதில்லை. இந்த இல்லத்தில் சபையாரால் கூட்டம் ஒழுங்குபடுத்தப்படவில்லை என்றாலும், வேத ஆராய்ச்சிச் செய்திடுவதற்கோ அல்லது வேதாகமம் சம்பந்தமாய் உரையாடுவதற்கோ எந்த ஆட்சேபணையும் இல்லை என்று நாம் நியாயமாய்ப் பகுத்தறிந்திடலாம். இல்லத்தின் உரிமையாளரான சகோதரன்: “அடுத்த வாரத்தில் இன்னொரு கூட்டத்திற்கு வரும்படிக்கு நான் இன்னும் சில அயலகத்தாரைக் கேட்டுக்கொள்வேன். இக்காரியங்களைக் குறித்தெல்லாம் நான் அவர்களிடம் கூறுவதற்கு முயற்சித்திருக்கின்றேன் மற்றும் நீங்கள் பேசுவதை அவர்களைக் கேட்கப்பண்ணுவதில் நான் சந்தோஷம் அடைவேன் என்று கூறிடலாம். இப்படியான நடக்கையில் எந்தத் தவற்றையும் என்னால் காண முடியவில்லை. ஒருவேளை கலந்துகொள்பவர்கள், நிரந்தரமான கூட்டத்தினை விரும்புவார்களானால், அது வழிநடத்துபவர்களை அனுப்பிவைக்கும் I. B. S. A.-இன் உள்ளூர் சபையாரிடத்தில் ஒப்படைக்கப்படவேண்டும்.
ஆனால் சபையாரில் சிலர்: “நாம் வேறொரு நிரந்தர கூட்டத்தினைத் துவங்கலாம் என்று கூறுவார்களானால், இது முற்றிலும் வேறு விவகாரமாய்க் காணப்படும். அவர்களுக்கு ஒரு புதிய சபையை உருவாக்கிடுவதற்கு உரிமை உண்டு; ஆயினும் அப்படிச்செய்யும்போது, அவர்கள் ஏற்கெனவே இங்குக் காணப்பட்ட சபையாரிடமிருந்து (original ecclesia) பிரிந்து செல்பவர்களாய் இருப்பார்கள். இவர்கள் மறுபடியும் இங்கு வந்து, “இங்கும், நாங்கள் வாக்குகள் செலுத்துவோம் என்று கூறிட முடியாது. நாம் செய்கிற செயல்களுக்கு நிலையான தன்மை இருத்தல் வேண்டும். ஒரு சபையில் அங்கத்தினர்களாகிவிடும் அனைவரும், ஒத்துழைப்பின் பலனை அடையத்தக்கதாகக் கிட்டத்தட்ட தங்களது, தனிப்பட்ட சுயாதீனங்களை ஒப்புக்கொடுப்பவர்களாக இருக்கின்றனர். ஆனால் இது நாம் வேத ஆராய்ச்சிச் செய்யக்கூடாது, இதற்குப் பதிலாக மாலை வேளையினை விளையாட்டு விளையாடி களித்திட வேண்டும் எனும் அடிமை நிலையினைக் குறிப்பதாகாது.