Q8:1
கேள்வி (1910)-1- சிறு மாநாடுகள் மற்றும் பயண ஊழியர்களின் கூட்டங்கள் (Pilgrim Meetings) குறித்து விளம்பரம் அளிக்கும் விஷயத்தில், மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களின் கடமைகளுக்கிடையிலான தொடர்பு என்ன?
பதில் – விளம்பரக்காரியங்களில் யார் மேற்பார்வையிட வேண்டும் – எங்கிருந்து அறிவுரைகள் எதிர்ப்பார்க்கப்பட வேண்டும்? என்னுடைய கருத்தென்னவெனில்: விளம்பரக்காரியங்களுக்கான அறிவுரைகளானது தலைமை அலுவலகத்திலிருந்து வருவதே தகுதியானதாயிருக்கும்; காரணம் அங்கே நாங்கள் அதிகளவிலான அனுபவங்கள் பெற்றவர்களாய் இருக்கின்றோம்; காரணம் மற்ற ஜனங்களைப்பார்க்கிலும் நாங்கள் ஞானவான்கள் என்பதினால் இல்லாமல், அங்கே இப்பணியானது ஒப்படைக்கப்பெற்றவர்கள் அசாதாரணமான திறமிக்க மற்றும் அதிகளவிலான அனுபவமிக்க நபர்களாகக் கருதப்படுவதினாலேயே ஆகும்; காரணம் நாங்கள் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் அநேகம் விளம்பரத் திட்டங்களைத் திட்டமிட்டு, அதற்கு ஏற்பாடுகள் செய்வதினால், மற்றவர்களுக்கு இல்லாதளவுக்குக் காரியங்களைப் பகுத்தறிந்திடுவதற்கான வாய்ப்பு எங்களுடையதாய் இருப்பதினாலும் ஆகும். ஆகையால் இது விஷயமாக விசேஷித்த அறிவுரைகளானது புரூக்கிளினிலிருந்து (Brooklyn) எதிர்ப்பார்க்கப்படுவது நலமாயிருக்குமென்பது என்னுடைய கருத்தாய் இருக்கின்றது. பொறுப்பேற்பது யார் என்பது தொடர்புடைய விஷயத்தில்: மூப்பர் விசேஷமாய் ஆவிக்குரிய காரியங்களுக்காகவும், சபையினுடைய ஆவிக்குரிய நலனுக்கடுத்த காரியங்களைக் கவனித்திடுவதற்காகவும் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்; விளம்பரக்காரியம்கூடச் சபையாரின் ஆவிக்குரிய நலனுக்கடுத்த காரியங்களில் ஒரு பாகமாகத்தான் காணப்படுகின்றது; இக்காரியமானது சபையாருடைய ஆவிக்குரிய நலனுக்கடுத்தக் காரியத்துடன் மிகவும் தொடர்புடையதாய் இருப்பதினால், எவ்வகையான உங்களது சிறந்த ஆற்றல்களையும் பிரயோகிப்பதற்குப் பாத்திரமானதாகும். இக்காரியமானது மிகவும் ஆற்றல்மிக்க கரங்களிடத்தில் மாத்திரமே கொடுக்கப்படக்கூடாது; உண்மையில் அனைவரும் ஒன்றாய்ச் சேர்ந்து இணைந்திடுவதே சரியான ஆவியாய் இருக்கும் மற்றும் இதில் திறமிக்கவர், ஒருவேளை மூப்பர்கள் மத்தியில் இல்லாமல் உதவிக்காரர்கள் மத்தியில் காணப்படுவாரானால், இப்பணித்தொடர்புடைய விஷயத்தில் அவர் மிகவும் முக்கியமாய்ப் பங்குவகிக்கத்தக்கதாக அனுமதிப்பதில் அனைவருமே மகிழ்ச்சிகொள்ள வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில், சத்தியத்திற்கடுத்த ஒவ்வொரு ஊழியங்களிலும் நாம் அனைத்துத் தனிமனித சிறப்புகளையும் மூழ்கப்பண்ணிட வேண்டும் மற்றும் நம்முடைய கணிப்பானது நம்மை வழிநடத்துகிறதற்கேற்ப, வழிகாட்டுவதற்கேற்ப சுருக்கமான மற்றும் மிகவும் திருப்திகரமான விதத்தில் சிறந்த வழிமுறைகளைக் கொண்டிருப்பதற்கு முயற்சிப்போமாக மற்றும் அதிகமான ஞானத்திற்காக எதிர்நோக்கியிருப்போமாக.