எக்ளீஷியா

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R 664 (page 7)

எக்ளீஷியா

THE ECCLESIA

இந்தக் கிரேக்க வார்த்தியானது, சபை என்று மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டில் இதன் அர்த்தம் ஒரு கூட்டத்தார், சபை அல்லது சேர்ந்து ஒன்றாய்க் காணப்படும் ஜனங்கள், குழு ஆகும்.

இன்று சபை என்று உரிமை பாராட்டிக்காணப்படும் அநேகம் அமைப்புகள் காணப்படுகின்றன மற்றும் இவைகள் வெவ்வேறு ஐக்கியத்தின் கட்டினைப் பெற்றிருக்கின்றன; ஆனால் தேவனுடைய வசனத்தினுடைய ஆதாரத்துடன், எந்த எக்ளீஷியாவை, சரீரத்தை அல்லது சபையை இயேசு ஸ்தாபித்தார் என்றும் மற்றும் அதன் ஐக்கியத்தின் கட்டுகள் என்னவாயிருக்கின்றது என்றும் நாம் அறிய விரும்புகின்றோம்; இரண்டாவதாக ஒவ்வொரு கிறிஸ்தவனும் அச்சபைக்குரியவனாகிட வேண்டும் என்பதை நாம் வெளிப்படுத்த விரும்புகின்றோம்; மூன்றாவதாக தவறான எக்ளீஷியா அல்லது சபையில் இணைந்துகொள்வதினால் ஏற்படும் பாதகமான விளைவுகள்; மற்றும் நான்காவதாக, சரியான சபையில் இணைந்துகொண்ட பிற்பாடு, நமது அங்கத்துவத்தினை இழப்பதினால் உண்டாகும் விளைவுகளை நாம் வெளிப்படுத்த விரும்புகின்றோம்.

முதலாவதாக, இயேசு தம்முடைய ஊழியத்தின்போது சேர்த்துக்கொள்ள துவக்கினதும் மற்றும் அவர்களுக்கான ஈடுபலி கொடுக்கப்பட்ட பிற்பாடு, பெந்தெகொஸ்தேயின் போது, பிதாவினால் அங்கீகரிக்கப்பட்டதுமான சபையானது, பூமிக்குரிய நேரத்தையும், தாலந்துகளையும், ஜீவியத்தையும் தேவனுக்கு ஒரு பலியாக அர்ப்பணித்துக்கொண்ட சீஷர்கள் அடங்கின ஒரு சிறு கூட்டத்தாராக இருந்தனர். இவர்கள் ஒழுங்குப்படுத்தப்பட்டு, ஒரு சமுகத்தின் அங்கத்தினர்களென ஒன்றிணைந்து கட்டப்பட்டிருந்தனர் மற்றும் இவர்கள் பிரமாணங்களையும், நடைமுறைகளையும் / நிர்வகிப்புகளையும் பெற்றிருந்தனர் மற்றும் ஒரு தலையை அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆளும் அதிகாரத்தினைப் பெற்றிருந்தனர். கட்டுகளானது, அன்பு மற்றும் பொதுநலனின் கட்டுகளாகக் காணப்பட்டது. அனைவரும் அதிபதியாகிய இயேசுவின் கீழ்ச் சேர்க்கப்பட்டிருந்தபடியால், ஒருவருடைய நம்பிக்கைகள் மற்றும் அச்சங்கள், சந்தோஷங்கள் மற்றும் துக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள் போன்றே, மற்றவர்களுடையதும் காணப்படுகின்றது; மற்றும் இதனால் இவர்கள் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட எந்த ஒரு விசுவாச பிரமாணத்தினுடைய அடிப்படையிலான ஒன்றிணைதலினால் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதைக்காட்டிலும், மிகப் பூரணமான இருதயத்தினுடைய ஒன்றிணைதலைப் பெற்றிருந்தனர். இப்படியாக இவர்களது அமைப்பானது, ஆவியினாலானதாய் இருந்தது; ஒவ்வொருவரையும் கட்டுப்படுத்தி ஆளும் அவர்களுக்கான பிரமாணமாய், அன்பானது காணப்பட்டது மற்றும் அனைவருமே, அவர்களது கர்த்தருடைய ஜீவியத்திலும், கிரியைகளிலும் மற்றும் வார்த்தைகளிலும் வெளிப்பட்டதான ” ஆவியின் பிரமாணத்தின் கீழ்க்” கீழ்ப்படியப் பண்ணப்பட்டிருந்தனர். “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” என்று சொன்னவருடைய சித்தமே அவர்களை நிர்வகித்ததாய் இருந்தது.

இப்படியாக ஆதிசபை இயேசுவினுடைய தலைமைத்துவத்தின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு, பூரண ஒருமையிலும் மற்றும் இணக்கத்திலும் காணப்பட்டதை நாம் பார்க்கின்றோம். இந்தச் சபை அமைப்பை, இதைப்போன்று பின்பற்றிவருவதாக இப்பொழுது பாசாங்குப்பண்ணிக் கொண்டிருக்கும், அதாவது பல்வேறு சபைபிரிவு அமைப்புடன் ஒப்பிட்டு வித்தியாசம் அறியுங்கள்; இந்த அமைப்புகள் ஒவ்வொன்றும் அதன் அங்கத்தினர்களை ஏதோ ஒரு விசுவாசப்பிரமாணம் அல்லது அதன் (இன்பகரமாய் உள்ள அநேகவற்றை உள்ளடக்கியுள்ள) சொந்த கொள்கைகளின் தொகுப்பேட்டின் அடிப்படையில் மன ஒற்றுமைக்குள் பிணைத்துவிடுகின்றது மற்றும் இவை ஒவ்வொன்றும் அதன் சொந்த பிரமாணங்களைப் பெற்றிருக்கின்றன.

இந்தப் பிரமாணங்களானது, இவர்களது தலையானவர்களிடமிருந்து மற்றும் அதிகாரிகள் அல்லது நியாயப்பிரமாணிக்கன்களிடமிருந்து தோன்றினவைகளாகும்; ஆகையால் இந்தத் தற்காலத்திலுள்ள சபைகளானது, தங்களது விசுவாசப்பிரமாணங்களை ஆதிகாலத்தில் நிறுவினவர்களை – தங்களுக்கான ஆளும் அதிகாரிகளாக அல்லது தலைகளாகப் பெற்றிருக்கின்றனர் மற்றும் அடையாளம் கண்டுகொள்கின்றனர் என்பது தெளிவாய்த் தெரிகின்றது; பல்வேறு விசுவாசப்பிரமாணங்களை நிறுவினவர்கள் ஒருவரிலிருந்து ஒருவர் வேறுபட்டிருப்பினும், இவர்களது குருமார்கள் / ஊழியக்காரர்கள் கலந்தாய்வு கூட்டங்களிலும், மேலவைகளிலும், குருமார் பேரவைகளிலும், மூப்பர் சங்கங்களிலும் தேவவசனத்தை அவமாக்கிடும் ” முன்னோர்களின் பாரம்பரியங்களை” பலவகையாக விளக்கி அமுல்படுத்துகின்றனர். இவைகள் சபையினுடைய மெய்யான தலையாகிய – இயேசுவின் இடத்தையும், மெய்யாய்ப் போதித்து, சகல சத்தியத்திற்குள்ளாய் வழிநடத்தும் பரிசுத்த ஆவியின் இடத்தையும் எடுத்துக்கொள்கின்றது. இதைக் குறித்துத் தீர்க்கத்தரிசியாகிய ஏசாயா கூறுவதைக் கேளுங்கள். “மூப்பனும் கனம்பொருந்தினவனுமே தலை, பொய்ப்போதகம்பண்ணுகிற தீர்க்கத்தரிசியே வால்” (ஏசாயா 9:15). முழுப்பெயர்ச்சபை அமைப்புமே, வெளிப்படுத்தின விசேஷத்தில் “பாபிலோன்” – குழப்பம் – போப்மார்க்கம் தாய் மற்றும் புரோட்டஸ்டண்ட் மகள்கள் என்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

இதை இவர்கள் ஒத்துக்கொள்வார்களா? இல்லை ஏனெனில் இன்றுள்ள வெதுவெதுப்பான பெயர்ச்சபையானவள், தான் நிர்ப்பாக்கியமுள்ளவளாகவும், பரிதபிக்கப்படத்தக்கவளாகவும், தரித்திரமானவளாகவும், குருடானவளாகவும், நிர்வாணியானவளாகவும் இருக்கிறதை அறியாமல், தன்னை ஐசுவரியமானவள் என்றும், திரவியசம்பன்னவள் என்றும், தனக்கு ஒரு குறைவுமில்லை என்றும் நம்புகின்றாள் (வெளிப்படுத்தல் 3:17).

இது “கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள்?” ஆனால் இது நம்முடைய உபதேசமல்ல இது “கவனித்திருப்பதற்கு நலமாயிருக்கின்றதான அதிக உறுதியான தீர்க்கத்தரிசனத்தின்” எச்சரிப்புச் சத்தமாய் இருக்கின்றது. அன்பான தொனியில், நமது ஆண்டவர் மறுபடியுமாக, “நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்” என்று கூறுகின்றார்.

கிறிஸ்துவின் உண்மை சபையானது, இரண்டு விதங்களில் கருதப்படலாம்: அதாவது ஆதிசபையார் போன்று நமது பிதாவினுடைய சித்தத்தைச் செய்வதற்கென முழுமையாய் அர்ப்பணம் பண்ணியுள்ளவர்களும், அவருடைய சித்தத்திற்கும் மற்றும் அவரது நிர்வகிப்பிற்கும் மாத்திரம் இணங்குபவர்களும், வேறு யாரையும் அங்கீகரியாமலும், யாருக்கும் கீழ்ப்படியாமலும் காணப்படுகின்றதான யாவரும் – சுவிசேஷயுகத்தினுடைய துவக்கம் முதல் அதன் முடிவு வரையுள்ள இந்தப் பரிசுத்தவான்கள், இந்த வகுப்பாரிலுள்ள யாவரும் முத்திரிக்கப்படும்போது, பரலோகத்தில் பெயர் எழுதப்பட்டவர்களாகிய “முதற்பேறானவர்களின் சபையாக” காணப்படுவார்கள். இவர்கள் அனைவரும் குறிக்கோளிலும், நம்பிக்கையிலும் மற்றும் பாடுகளிலும் ஒன்றாயிருப்பார்கள் மற்றும் ஏற்றகாலத்தில் மாபெரும் சுதந்தரத்தில் இயேசு கிறிஸ்துவோடுகூட உடன்சுதந்தரர்களாக – தேவனை அன்பு கூருகின்றவர்களுக்கு அவர் வாக்களித்துள்ளதான இராஜ்யத்தில் சுதந்தரர்களாகிடுவார்கள்.

இதே வகுப்பார் அடையாளம் கண்டுகொள்ளப்படுகின்றதான மற்றொரு விதமானது – ஒரு பகுதியினரை, முழுச்சபையாக கருதுவதாகும்; இப்படியாக இந்த வகுப்பாரில் ஜீவித்துக் கொண்டிருப்பவர்கள் யாவரும் சபையெனக் கூறப்படலாம்; அல்லது இவ்வகுப்பாரிலுள்ள ஜீவனுள்ள அங்கத்தினர்களின் ஏதேனும் பாகம், ஒன்று கூடிடும்போது, சபை என்று அழைக்கப்படலாம்; ஏனெனில் இயேசுவின் வார்த்தைகள் மூலமாக, எங்கே இரண்டு அல்லது மூன்றுபேர் கூடுகிறார்களோ, அவர்கள் நடுவில் அவர் காணப்படுவதாக நாம் அறிந்துகொள்கின்றோம்; ஆகையால் அது சபை கூடுகையாய் இருக்கும் – “முதற்பேறானவர்களுடைய சபை” கூட்டமாய் இருக்கும். சபை முழுவதும் தங்கள் தலையாகிய இயேசுவுக்கு ஒப்பானவர்களாக்கப்பட்டு, அவரோடுகூட மகிமைப்படுத்தப்படும்போதுதான் இவர்களின் சர்வசங்கம் காணப்படும்.

இதுவே கிறிஸ்துவின் சபைக்கான நம்முடைய விளக்கமாகும்; இது பவுல் அடிகளார் சபையை, மனித சரீரத்தோடு ஒப்பிடுகையில் மிகச் சிறப்பாய் விவரிக்கப்பட்டுள்ளது (ரோமர் 12:4,5). இந்த உருவகத்தில், இயேசு தலையினால் அடையாளப்படுத்தப்படுகின்றனர் மற்றும் அவருடையவர்கள் யாவரும், தலையினால் எதன்மேல் மற்றும் எதன் வாயிலாக ஆளுகை செலுத்தப்படுகின்றதோ அந்தச் சரீரத்தினால் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இயேசு தம்முடைய ஒட்டுமொத்த சபையின் மீது தலையாக இருந்துள்ளார் மற்றும் எப்போதும் இருப்பார்;
இதுபோலவே அவர் ஒட்டுமொத்த ஜீவனுள்ள சபையின் தலையாகவும், அதிகாரியாகவும் இருக்கின்றார் மற்றும் அவருடைய நாமத்தில் இரண்டு அல்லது மூன்றுபேர் கூடிடும் ஒவ்வொரு கூடுகையிலும், அவர் தலையாக, அதிகாரியாக மற்றும் போதகராக இருக்கின்றார்.

அவர் எந்தவிதத்தில் போதிக்கின்றார்? என்று கேட்கப்படலாம். தலை அல்லது போதகருடைய தன்மைகளைச் செயல்படுத்துவதன் மூலம், அங்குக் காணப்படும் ஒருவரையோ அல்லது அநேகரையோ சத்தியத்தை வெளிப்படுத்துவதற்கும், விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கும், நம்பிக்கையை ஊக்குவிப்பதற்கும், வைராக்கியத்தினை ஊக்குவிப்பதற்கும் தம்முடைய வாய்க்கருவிகளெனப் பயன்படுத்துவதன் மூலம் ஆகும். அதாவது ஓர் அவயம், இன்னொன்றிற்கு ஊழியம்புரிவதற்கென உங்களது சரீரத்தினுடைய தலையானது அழைக்க முடிகிறது போலாகும் என்று நாம் பதிலளிக்கின்றோம். ஆனாலும் எச்சரிப்பின் ஒரு வார்த்தை என்னவெனில்: ஒருவர் வலதுகரமெனப் பயனுள்ள பாத்திரமாகுகின்றாரெனில், அவர் தலையாகிடுவதற்கு விரும்பிடாதபடிக்குப் பார்த்துக்கொள்ள வேண்டும். பெருமிதம் கொள்ளாதீர்கள், பெருமையானது நம்மை செயலற்றுப் போகச் செய்து, நம்மைப் பயனற்றவர்களாக்கிடும். “நீங்களோ ரபீ (போதகர்) என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் (தலையாயிருக்கிறார்) போதகராய் இருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.” சிறிய அங்கத்தினன்கூடத் தனது பணியினை அசட்டையாய் எண்ணாதிருப்பானாக; ஏனெனில், “அவையெல்லாம் ஒரே அவயமாயிருந்தால், சரீரம் எங்கே?” “சரீர அவயவங்களில் பலவீனமுள்ள வைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது” – “தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்” (1 கொரிந்தியர் 12:18,19; மத்தேயு 23:8).

அமைப்பு / organization தொடர்பான தேவனுடைய திட்டமானது எத்துணை எளிமையாயும், அருமையாயும் மற்றும் விரும்பிய பலனைக் கொடுக்கிறதாயும் உள்ளது!

இப்பொழுது நம்முடைய இரண்டாம் ஆய்விற்கு வரலாம்: அதாவது அனைத்துக் கிறிஸ்தவர்களும், இந்த அமைப்புடன் இணைந்துகொள்ள வேண்டும். இயேசுவினால் ஒழுங்குப்படுத்தப்பட்ட சபையாய் இருக்கும் வகுப்பினரைக் குறித்து இதுவரையிலும் சொல்லப்பட்டிருப்பவைகளின் வெளிச்சத்தில், ஒருவேளை நீங்கள் உங்கள் சித்தம், தாலந்து, நேரம் முதலானவைகளை ஒப்புக்கொடுத்துள்ளீர்களானால், நீங்கள் இயேசுவினால் பின்னடியாராக, எக்ளீஷியாவின் அல்லது அவர் தலையாய் இருக்கும் சரீரத்தின் அங்கமாக, பரலோகத்தில் பேரெழுதப்பட்டுள் ளவர்களாக அடையாளம் கண்டுகொள்ளப்படுவீர்கள் என்பது உறுதியே. இப்படியாக நாம் இயேசுவின் சபையில் இணைந்துகொண்டு, அர்ப்பணிப்பின் வாயிலாக அங்கத்தினர்களென நம்முடைய பெயர்களானது பதிவு பண்ணப்படுகின்றது. ஆனால் பூமியிலுள்ள ஏதோ ஓர் அமைப்புடன் நான் இணைந்துகொண்டு, ஏதோ ஒரு விசுவாசப்பிரமாணத்திற்கு ஒப்புதல் அளித்து மற்றும் பூமியில் என் பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டாமோ? என்று உங்களில் யாரேனும் கேட்கலாம்? இல்லை இயேசுதான் உங்கள் முன்மாதிரி மற்றும் போதகர் என்றும், இன்னுமாக தேவ வசனத்தை அவமாக்கிப்போடுகின்றதும், கிருபையிலும், அறிவிலும் நீங்கள் வளர்வதைத் தடைப்பண்ணுகிறதாகிய அடிமைத்தனத்திற்குள்ளாக்கும் முன்னோர்களின் பாரம்பரியங்கள் மற்றும் விசுவாப்பிரமாணங்களுடன் உங்களை இணைத்துக்கொள்ளும்படிக்கான எந்த ஓர் அதிகாரத்தினையும் அவரது வார்த்தைகளிலோ, கிரியைகளிலோ உங்களால் கண்டுபிடிக்க முடியாது என்றும், இன்னுமாக இவைகளுக்கு எதிராகவே “நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்” (கலாத்தியர் 5:1) என்று பவுல் அடிகளார் கூறி உங்களை எச்சரிக்கின்றார் என்றும் நினைவில் கொள்ளுங்கள்.

ஆனால் சிலர் பின்வருமாறு சொல்லிடலாம்: இந்தத் தற்கால பெயர்ச்சபைகள் எவற்றுடனும் இணைந்துகொள்வது சரியற்றது என்றால், நாமாகவே கண்களுக்குப் புலப்படுகிற ஓர் அமைப்பினை உருவாக்கிடுவது சரியாய் இருக்குமா? ஆம், அதைத்தான் நாம் பெற்றிருக்கின்றோம் – ஆதிசபை போன்று பின்பற்றி ஓர் organization / அமைப்பினைப் பெற்றிருக்கின்றோம். அந்த ஆதி எளிமைக்கு நாம் வந்துள்ளதாக எண்ணுகின்றோம். கர்த்தர் இயேசு மாத்திரமே நம்முடைய தலையாக அல்லது நியாயப்பிரமாணிக்கனாக இருக்கின்றார்; பரிசுத்த ஆவியானது நமக்கு விளக்கம் அளித்து, சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை நடத்துகின்றது; நம்முடைய பேர்கள் அனைத்தும் பரலோகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன் நாம் அன்பினாலும், பொது நலனினாலும் ஒன்றிணைக் கப்பட்டிருக்கின்றோம்.

ஒருவரையொருவர் அறிந்துகொள்வது எப்படி – என்று கேட்கின்றீர்களா? நமது போதகரின் ஆவியானது, வார்த்தையிலும், கிரியையிலும் மற்றும் நடத்தையிலும் மற்றும் பார்வையிலும் வெளிப்படுகையில், நாம் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளலாமல்லவா என்பது நம்முடைய பதிலாய் இருக்கின்றது. ஆம், ஜீவனுள்ள விசுவாசம், மாயமற்ற அன்பு, நீடியபொறுமையுடன்கூடிய சாந்தம், குழந்தைகளிடத்தில் இருப்பது போன்ற எளிமை, இதனோடுகூட உறுதியும், முதிர்ச்சியின் வைராக்கியமும், தேவனுடைய குமாரர்களை வெளிப்படுத்துகின்றது மற்றும் பூமியில் பதிவுபண்ண வேண்டியதின் அவசியம் நமக்கில்லை காரணம் இவர்களின் பெயர்கள் அனைத்தும், ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

வியாதியஸ்தர்கள் சந்திக்கப்பட வேண்டுமா அல்லது உதவி பண்ணப்பட வேண்டுமா? இவர்கள் அர்ப்பணிக்கப்பட்ட நேரத்துடன் ஆயத்தமாய்க் காணப்படுகின்றனர். கர்த்தருடைய ஊழியத்திற்குப் பணம் அவசியமாயுள்ளதா? இவர்கள் அர்ப்பணிக்கப்பட்ட பணவளத்துடன் ஆயத்தமாய்க் காணப்படுகின்றனர். அவரது ஊழியமானது, உலகத்தாரிடமிருந்தும், சீர்க்கெட்டுப்போன பெயர்ச் சபையிடமிருந்தும் நிந்தனைகள் கொண்டுவருகின்றதா? இவர்களும் நற்பெயரை – அனைத்தையும் – தேவனுக்காக அனைத்தையும் பலிசெலுத்தியுள்ளனர்.

ஆனால் நம் மத்தியில் ஒழுங்கற்று நடப்பவர்களை நாம் எப்படிக் கையாளுவது என்றும், நம்மைச் சுற்றிக்காணப்படுகின்றது போன்ற எந்த அமைப்பையும் நாம் பெற்றிருக்கவில்லையெனில், நாம் செய்திடும்படி கர்த்தர் எதிர்ப்பார்ப்பவைகளைச் செய்து, இத்தகையவர்களிடமிருந்து நம்மை எப்படி விடுவித்துக்கொள்ளலாம் என்றும் கேட்கின்றீர்களா? இயேசுவும், பவுலும் கட்டளையிட்டதைச் செய்திடுங்கள் என்று நாம் பதிலளிக்கின்றோம்.

ஆதிசபையில் காணப்பட்டதுபோலவே, இப்பொழுதும் தனிப்பட்ட அங்கத்தினர்கள் மத்தியில் வளர்ச்சி பல்வேறு அளவுகளில் காணப்படுகின்றது. திடனற்றவர்களாய்ச் சிலர் இருப்பார்கள், அவர்களைத் தேற்றுங்கள் என்றும், பலவீனராய்ச் சிலர் காணப்படுவார்கள், அவர்களைத் தாங்குங்கள் என்றும், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாய் / பொறுமையாய் இருக்கும் அதேவேளையில் ஒழுங்கில்லாதவர்களுக்குப் (கிறிஸ்துவின் உண்மையான ஆவியினின்று விலகிப் போகிறவர்களுக்கு) புத்திசொல்லுங்கள் என்றும் பவுல் அடிகளார் கூறுகின்றார் (1 தெசலோனிக்கேயர் 5:14). ஒழுங்கில்லாதவர்களைப் பலவீனர் என்று தவறுதலாய் எடுத்துக்கொண்டு அவர்களைத் தாங்கிக் விடாதீர்கள் மற்றும் ஒழுங்கில்லாதவர்களைத் திடனற்றவர்கள் என்று தவறுதலாய் எடுத்துக்கொண்டு அவர்களைத் தேற்றாதீர்கள். அவர் யாரை ஒழுங்கில்லாதவர்களென்று கூறுகின்றார்? சந்தேகத்திற்கிடமின்றி ஒழுங்கில்லாமல் நடப்பதற்கு அநேகம் வழிகள் காணப்படுகின்றன் 2 தெசலோனிக்கேயர் 3:11-ஆம் வசனத்தில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய் இருக்கின்றார்கள் என்றும், இவர்கள் யாராலும் குற்றஞ்சாட்டப்படாதவர்களாகக் காணப்படத்தக்கதாக, தன்னைப்போல் வேலை செய்திட வேண்டும் என்றும், வேலை செய்யவில்லையெனில், சாப்பிடவும் கூடாது என்றும் கூறுகின்றார். மற்றவர்களுக்கு முன்மாதிரியாகக் காணப்படத்தக்கதாக, இப்படியாக அவர் கூறவும், இதைச் செய்யவும் செய்தார். அவர் நல்லொழுக்கமற்ற மற்றும் அநீதியான நபர்களைக் குறித்தும் மற்றும் வேதவாக்கியங்களைப் புரட்டி, இப்படியாய்த் தேவனுடைய சத்தியத்தைப் பொய்யாய்க் காண்பிக்கின்றவர்கள் குறித்தும் நம்மை எச்சரிக்கின்றார். மறுபடியுமாக 14-ஆம் வசனத்தில் அப்படியானவனுக்குப் புத்திமதி கூறின பிற்பாடும், அவன் “கீழ்ப்படியாமற்போனால், அவனைக் குறித்துக்கொண்டு அவன் வெட்கப்படும்படிக்கு அவனுடனே கலவாதிருங்கள். ஆனாலும் அவனைச் சத்துருவாக எண்ணாமல் சகோதரனாக எண்ணி, அவனுக்குப் புத்தி சொல்லுங்கள்” என்று கூறுகின்றார் (2தெசலோனிக்கேயர்3:14,15).

இன்னுமாக இரண்டு சகோதரர்களுக்கு இடையில் மனஸ்தாபம் காணப்படுகிற காரியத்திற்கு, இயேசு தெளிவான கட்டளைகளைக் கொடுக்கின்றார் (மத்தேயு 18:15,17). “உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய். அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ. அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதைச் சபைக்குத் (ஒன்றுகூடிடும் சகோதரர் கூட்டத்தாருக்கு) தெரியப்படுத்து; அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக.” நமது தலையானவருடைய ஒழுங்கின் கீழ், நாம் அவரை அனபு; கூரும் காரணத்தினால், அவரது கட்டளைகளுக்குச் செவிக்கொடுப்போமானால், சகோதரர்கள் மத்தியில் பிரச்சனைகளும் மற்றும் மனஸ்தாபங்களும் எத்தனை சொற்பமாய்க் காணப்படும்.

இந்த ஒழுங்கு முறைமையானது, கர்த்தரினால் நியமிக்கப்பட்ட மற்றும் வழிநடத்தப்படுகின்றதான சுவிசேஷகர்களை, மேய்ப்பர்களை மற்றும் போதகர்களைப் பெற்றிருக்கின்றது. இவர்களுக்கு “அப்போஸ்தல வாரிசுகள்” என்று அழைக்கப்படுபவர்களினால் கைகள் வைக்கப்படுவது அவசியமல்ல; ஏனெனில் “கர்த்தரின் ஆவியானது” “பிரசங்கம்பண்ணுவதற்கெனச்” சரீரத்தினுடைய அங்கத்தினர்கள் யாவரையும் அபிஷேகித்துள்ளது (ஏசாயா 61:1) மற்றும் சரீரத்தினுடைய ஒவ்வொரு அங்கத்தினனும், சக அங்கத்தினர்களுடைய பக்திவிருத்திக்கெனத் தனது இந்த வேலையினைச் செய்திடுவது கடமையாக இருக்கின்றது. பரலோகத்தில் பேரெழுதப்பட்டுள்ளதும், அன்பினால் கட்டப்பட்டுள்ளதும் மற்றும் ஆவியினால் நடத்தப்படுகிற அங்கத்தினன் உரிமையுமுடைய கிறிஸ்துவினுடைய சபையின் ஒழுங்கு முறையானது, எத்துணை முழுமையானதாய்க் காணப்படுகின்றது மற்றும் பெயர்ச்சபையை மெய்ச்சபை என்று தவறாய்ப் புரிந்துகொண்டது எத்துணை மோசமான தவறாய் இருக்கின்றது!

நம்முடைய நான்காம் ஆய்வுபொருளின் முக்கியத்துவமானது வலியுறுத்தப்படுவதற்கு அவசியமில்லை. கிறிஸ்துவின் சரீரத்தில் அல்லது மெய்சபையிலுள்ள நம்முடைய அங்கத்துவத்தினை இழப்பது என்பது பயங்கரமான துன்பமாக இருக்கும் என்பது உண்மையே. மரித்ததாக கருதப்படும் பழைய சுபாவமானது மறுபடியும் உயிரடைந்து பெருமையின், சுயநலத்தின், பொறாமையின், தீமைபேசுதலின் உருவம் எடுத்துக் காணப்படுகின்றதா அல்லது இல்லையா என்று விழிப்புடன் கவனம் செலுத்தாவிடில், எந்த அங்கத்தினனும் இந்த அபாயத்திற்கு நீங்கலாய் இருப்பதில்லை. ஆனால் ஒருவேளை (பலிச்செலுத்துவதற்கு ஆயத்தமாயிருக்கும்) அன்பினால் நிரம்பிக் காணப்பட்டு, தாழ்மையினைத் தரித்துக்கொண்டு,மீட்கும் இரத்தத்தினுடைய மூடுதலின் கீழ்க் காணப்படுவோமானால், “நமக்கு இராஜ்யத்தைக் கொடுக்க நம் பிதா பிரியமாயிருக்கிறார்” என்ற நிச்சயத்தினைப் பெற்றிருந்து, சபையில் (சரீரத்தில்) பாதுகாப்பாய் இருப்போம்.

ஆம், இராஜ்யமே, மெய்ச்சபையின் – இப்பொழுது அவமானத்தின் பாதையில் நடந்து, மரணத்தினுடைய கசப்பான பாத்திரத்தில் பானம்பண்ணும் சிறுமந்தையினரின் மகிமையான நோக்கமாகக் காணப்படுகின்றது. நம்மில் வெளிப்படப்போவதான மகிமையானது, விசுவாச கண்களுக்குத் தவிர, மற்றப்படி தெரியாது; ஆனாலும் சோதனைகளும், பரீட்சைகளும் எல்லாப் பக்கங்களிலும் மிகவும் பார்க்கக்கூடிய விதத்தில் காணப்படும். “ஆனபடியினாலே, அவருடைய
இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம்” (எபிரெயர் 4:1).

இப்படியாக பவுல் அடிகளார் மற்றவர்களை எச்சரித்தார் மற்றும் மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கிற அவர் ஆகாதவராய்ப் போகாதபடிக்கு அச்சம் கொண்டிருந்தார் (1 கொரிந்தியர் 9:27). பெயர்ச் சபைகளில் இருப்பவர்களால், நம் நாமங்கள் பொல்லாததென்று தள்ளிவிடப்படலாம்; எனினும் “பரலோகத்தில் நம்முடைய நாமங்கள் எழுதப்பட்டிருப்பதினால் நாம் சந்தோஷப்பட்டுக் களிகூருவோமாக.” அவர்கள் உங்களிடத்தில் கோபமுகத்தினைக் காண்பித்து, பலவித தீமையான மொழிகளையும், உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்லிடலாம் அல்லது உங்களது செல்வாக்கினை நாங்கள் இழந்திட விரும்பவில்லை, எங்களோடு தரித்திருப்பதினால் நீங்கள் மிகுந்த நன்மையினைச் செய்திடலாம் என்று கூறி முகஸ்துதி செய்து, உங்கள் மனதை மாற்றிட நாடிடலாம். ஓ! இந்தத் “தீங்கு நாளில்”…

“உலகத்தின் பயமூட்டும் கோபப்பார்வையினால் அசைவுறாத, அதன் முகஸ்துதி புன்முறுவலுக்குக்கவனம் செலுத்திடாத, உபத்திரவத்தின் கடல்களினால் மூழ்கடிக்க முடிந்திடாத,
சாத்தானின் தந்திரவஞ்சனையால் மூழ்கடிக்க முடிந்திடாத விசுவாசம் ஆம் விசுவாசம் எத்துணை அவசியமாயுள்ளது.”

அருமையான அன்புக்குரியவர்களே, “ஆனபடியினாலே, நீங்கள் – கொஞ்சமேனும் – மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்” எனும் எச்சரிப்பை மறுபடியுமாக நாம் திரும்பக்கூறுகின்றோம் (கலாத்தியர் 5:1). வேதவாக்கியங்களினால் அங்கீகரிக்கப்படுகின்றதும் மற்றும் “என் ஜனங்களே அவளைவிட்டு வெளியே வாருங்கள்” என்று வேதவாக்கியங்கள் எதிர்த்துப் பேசுகின்றதான பாபிலோன் அமைப்புகள் யாவற்றிலிருந்தும் முற்றிலும் தனித்துச் சுதந்தரமாய்க் காணப்படுகின்றதுமான ஒரே சபையில் நீங்கள் காணப்படுகின்றீர்களாவென உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.