சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R4802 (page 122)

சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்

CONSIDER HIM LEST YE BE WEARIED

“ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்து போகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள். (எபிரெயர் 12:3)

“அவரை நினைத்துக்கொள்ளுங்கள் என்பது, தமக்கு விரோதமாகப் பாவிகளால் ஏற்பட்டதான பல்வேறு எதிர்ப்புகளையும், சோதனைகளையும் நமது கர்த்தர் எவ்வாறு சகித்தார் என்பதைக் கவனிப்பதை, மனதில் கொண்டிருப்பதை, ஆழ்ந்து சிந்திப்பதை, எளிதில் மறந்துபோகாமல் இருப்பதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. நம்முடைய சொந்த அனுபவங்களிலும்கூடக் கர்த்தருடைய பின்னடியார்களென நமக்கு விரோதமான பாவம் மற்றும் பாவிகளுடைய எதிர்ப்புகள் சிலவற்றைச் சகித்திருக்கின்றோம்; ஆனாலும் இரத்தம் சிந்தும் அளவுக்கு நாம் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை. அவர் கடந்து சென்றதான கடும்சோதனையான அனுபவங்களுக்குள் நாம் இன்னும் கடந்து செல்லவில்லை. நாமும் நம்முடைய அயலார்போன்று பாவப்பட்டவர்களாக, அபூரண சிருஷ்டிகளாக இருக்க, அவர் “பரிசுத்தராகவும், மாசில்லாதவராகவும், குற்றமில்லாதவராகவும் இருக்கின்றார் என்பதை நாம் நினைவில்கொள்கையில், அவர் பாவிகளின் எதிர்ப்புகளைப் பொறுமையுடன் சகித்தார் என்பதை ஆழ்ந்து சிந்தித்துப்பார்ப்பது நலம் பயக்கின்றதாய் இருக்கும். அவருக்குக் கடுஞ்சோதனையான அனுபவங்கள் வந்திட்டபோது, அவைகள் எவர்களிடமிருந்து கடந்துவந்ததோ, அவர்களிடமிருந்து மாத்திரமே வந்ததாக அவர் கருதிடவில்லை மாறாக பிதாவின் மேற்பார்வையின் கீழ்க் கடந்துவந்ததாக கருதினார். ஆகையால் இத்தகைய அனுபவம் அவருக்கு வர பிதா அனுமதித்திருக்கிறாரெனில், பொறுமையாய்ச் சகிப்பதன் மூலம் தம்முடைய உண்மையினை நிரூபிப்பதற்கு அவர் கடமைப்பட்டிருக்கின்றார். “பிதா எனக்குக் கொடுத்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ? என்று அவர் கூறினார் (யோவான் 18:11).

இப்படியாகவே ஆவிக்குரிய இஸ்ரயேலராகிய நம் விஷயத்திலும் காணப்படுகின்றது… “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார் (உபாகமம் 13:3). ஜீவியத்தின் அனுபவங்களில் எந்தளவுக்கு நமது கர்த்தருடைய கண்ணோட்டத்தினைக் கொண்டிருக்க முடிகின்றவர்களாக இருக்கின்றோமோ, அவ்வளவுக்கு நாம் அமைதலுடன் காணப்படுவோம். நம்மைப் பரீட்சிப்பதற்காகவோ அல்லது மற்றவர்களைப் பரீட்சிப்பதற்காகவோ, நிரூபிக்கத்தக்கதாகவோ, நம்மால் புரிந்துகொள்ள முடியாத வழிகளில் பிதா கடுஞ்சோதனையான அனுபவங்களை அனுமதிப்பாரெனில், அவர் சித்தம் நடந்தேறுவதில் நாம் களிகூருகிறவர்களாகவே இருக்க வேண்டும். இக்கருத்தினைக் கவிஞன் பின்வரும் வரிகளில் அருமையாய் வெளிப்படுத்தியுள்ளார்…

“என் காலங்கள் உம்முடைய கரங்களில் உள்ளதுவே,
என் தேவனே அங்கு இருக்கவே யான் விரும்புகின்றேனே.”

நாம் இறுதிவரை உண்மையாய்ச் சகித்து நின்றோமானால், பலன் நம்முடையதாய் இருக்கும். நாம் நம்முடைய நேர்மையினை நிரூபித்தவர்களாகி மற்றும் தேவன் நமது காரியங்களை மேற்பார்வை இடுகின்றார் என்றும், உத்தமமாய் நடப்பவர்களுக்கு நன்மையை வழங்காதிரார் என்றுமுள்ள நம்முடைய விசுவாசத்தினைக் காத்துக்கொள்வோமானால், நாம் ஒரு நாளில் “நல்லது உத்தமும், உண்மையுமுள்ள ஊழியக்காரனே என்று அவர் சொல்வதைக் கேட்போம்.

நமது கர்த்தர் சரீர ரீதியான எதிர்ப்புகளைச் சகித்தார் என்பதை நாம் அறிவோம். ஆனால் “Contradiction” எனும் நம்முடைய ஆங்கில வார்த்தையின் சரியான அர்த்தம் அவரது வார்த்தைகள், எதிர்த்துப் பேசப்பட்டதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. நம்முடைய கர்த்தருடைய விஷயத்தைப் பார்க்கையில், ஜனங்கள் சரீர ரீதியாக எதிர்க்காமல், அவரது வார்த்தைகளை, அவரது போதனைகளை எதிர்த்தார்கள். அவரைச் சரீர ரீதியாகத் துன்புறுத்தி, மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கும் காரியமானது பிரதான ஆசாரியனிடத்திலும் மற்றும் ஆலோசனைச் சங்கத்தாரிடத்திலும் மற்றும் போர்ச் சேவகர்களிடத்திலும் விடப்பட்டது மற்றும் ஒருவேளை அவர் விரும்பி இருந்தாரானால், அவர் அவர்களை எதிர்த்திருந்திருக்க முடியும்.

அவர் வையப்படும்போது பதில் வையாமலும் இருந்தார்

ஆகையால் அப்போஸ்தலன் கர்த்தருடைய வார்த்தைகளுக்கான எதிர்ப்பைக்குறித்துக் குறிப்பிடுவதாகவே தெரிகின்றது. இது பரிசுத்த பேதுருவினாலும் சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ளது; “அவர் வையப்படும்போது பதில் வையாமலும் இருந்தார் என்று பரிசுத்த பேதுரு தெரிவித்தார் (1 பேதுரு 2:23). ஆகையால் 3½ வருட கிறிஸ்துவினுடைய ஊழியத்தினை நாம் கவனித்துப் பார்க்கையில், அவரது உபதேசமானது எதிர்க்கப்பட்டதையும், அவர் தூஷிக்கப்பட்டதையும் நாம் காண்கின்றோம். அவர் பிசாசு பிடித்தவர் என்றும், அவர் பிசாசுகளின் அதிபதியினாலே அற்புதங்களைப் பண்ணுகிறார் என்றும், அவர் தேவதூஷணம் பண்ணுகிறவர் என்றும் யூதர்கள் கூறினார்கள். இவர்கள் சார்பிலான இந்த எதிர்ப்புகள் மற்றும் மறுப்புகளுக்கு, அவர் சார்பிலிருந்து அவர்களைப் பற்றியதான மிகவும் நியாயமான, உண்மையுள்ள வார்த்தைகளை அவரால் சொல்லியிருந்திருக்க முடியும். அவர்கள் அவரைச் சொன்னதைப்போன்று, அவராலும் அவர்களுக்கு நன்கு பதில்கொடுத்திருந்திருக்க முடியும். பிசாசு அவர்களுக்குள்தான் கிரியைச் செய்துகொண்டிருக்கின்றான் என்பது போன்றவைகளை அவரால் அவர்களுக்குச் சொல்லியிருந்திருக்க முடியும். அவர்கள் சொன்னவைகளுக்கு அதிகமாகச் சொல்லுமளவுக்கு அவர் வார்த்தைகளுக்குரிய பூரண வல்லமையினைக் கொண்டிருந்தார். அவருடைய வார்த்தைகளைக்கொண்டு அவரைச் சிக்கவைத்திட அவர்கள் எண்ணினபோது, அவர்களது வார்த்தையினாலே அவர்களைச் சிக்கவைத்தார். ஆனால் அவர் பதிலுக்குப் பதில் வையவில்லை. அவர் தீமைக்குத் தீமை செய்யவில்லை, பழிச்சொல்லுக்குப் பழிச்சொல் கூறவில்லை. இதுவே சரியான வழிமுறையாகும் என்று அப்போஸ்தலன் காண்பிக்கின்றார்.

ஆனால் அன்றாட ஜீவியத்தினுடைய காரியங்களில், ஜனங்கள் நமக்கு எதிராய்ப் பலவித தீமையான வார்த்தைகளைச் சொல்லுகையில், நம்மை வையும்போதும் பதிலுக்குத் தீமையான எதையாகிலும் சொல்லிடுவதற்கு விழுந்துபோன மாம்சம் சிந்திப்பது, அதன் இயல்பாய் இருக்கின்றது. இப்படியாக இவ்விஷயங்கள் நம்மீதான பரீட்சைகளாகுகின்றது. நாம் இத்தகைய ஒரு சிந்தைக்கு அடிப்பணிவோமானால், நாம் கர்த்தருடைய நடக்கையினைப் பின்பற்றுகிறவர்களாக இராமல், சத்துருவினுடைய நடக்கையினைப் பின்பற்றுகிறவர்களாகவே இருப்போம். எதிராளியானவனால் தாக்கப்படுகையில் – அவனது பிரதிநிதிகள் யாராக இருப்பினும், அவனது ஆயுதங்கள் என்னவாக இருப்பினும் – “பாவிகளால் தமக்கு உண்டான எந்த எதிர்ப்பையும் மன உறுதியோடு தாங்கிக்கொண்ட அவரை எண்ணிப்பாருங்கள். அப்போது நீங்கள் மனம் சோர்ந்து தளர்ந்து போக மாட்டீர்கள் (எபிரெயர் 12:3; திருவிவிலியம்). நாம் உண்மையாய்ச் சகிக்கும்பட்சத்தில், எதிராளியானவன் கர்த்தருடைய பார்வையில் நம்முடைய நற்பெயருக்குப் பாதகம் பண்ணிட முடியாது, மாறாக நற்பெயரைப் பெருகப்பண்ணிட மாத்திரமே [R4803 : page 122] முடியும் மற்றும் தேவன் தம்முடைய நோக்கங்களுக்காக நன்மைக்கேதுவாய் – அதுவும் நன்மைக்கேதுவாய் என்பது கோதுமையினின்று பதரையும், களைகளையும் புடைத்தெடுப்பதாய் இருப்பினும், அப்படி நன்மைக்கேதுவாய் மாற்றிப்போட முடியாத, எந்தவொரு புறத்தோற்றமான பாதகத்தையும் எதிராளியானவனால் செய்திட முடியாது.

சொல்லப்படும் தீமையான விஷயம் உண்மையாய் இருப்பினும், தீமைபேசுதல், புறங்கூறுதல், அவதூறு என்பவைகள் தேவனுடைய அன்பின் ஆவிக்கு முற்றிலும் முரணானது என்ற விதத்தில் தேவனுடைய ஜனங்களுக்குக் கண்டிப்புடன் தடைப்பண்ணப்பட்டுள்ளது. அவதூறான எதையும் தடைப்பண்ணும் வண்ணமாக, மனக்குறையைச் சரிப்படுத்துவதற்கான ஒரே வழியினை வேத வாக்கியங்களானது மிகவும் கவனமாய் முன்வைத்துள்ளது (மத்தேயு 18:15-17).

கிறிஸ்தவர்கள் என்று தங்களை அறிக்கைப்பண்ணுபவர்களே பெரும்பாலும் மோசமான அவதூறுகாரர்களாய் இருக்கின்றனர்

மிகவும் வளர்ச்சியடைந்துள்ள கிறிஸ்தவர்களில்கூட அநேகர் இந்தத் தெய்வீகக் கட்டளைக் குறித்து முற்றிலுமாய் அறியாமையில் காணப்படுவதாகத் தெரிகின்றது மற்றும் இதன் காரணமாக கிறிஸ்தவர்கள் என்று தங்களை அறிக்கைப்பண்ணியுள்ளவர்களே பெரும்பாலும் மிகவும் குறிப்பிடத்தக்க விதத்தில் அவதூறுகாராக்களாய் இருக்கின்றனர். இது நமது கர்த்தரினால் கொடுக்கப்பட்டதான சில விசேஷித்த, குறிப்பிட்டக் கட்டளைகளில் ஒன்றாயிருக்கின்றது; மற்றும் இக்கட்டளையினை “நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள் என்ற அவரது வார்த்தைகளுடன் தொடர்புபடுத்திப்பார்க்கையில், நமது கர்த்தருடைய கட்டளையாய்க் காணப்படும் இதனை, தொடர்ந்து மீறிக்கொண்டிருப்பது என்பது, அநேகர் சிநேகிதராய் இருக்கும் நிலையில் – சீஷத்துவத்தில் அவ்வளவுக்கு வளரவில்லை என்பதை நிரூபிக்கின்றதாய் இருக்கின்றது.
[R4803 : page 123]

ஒருவேளை கைக்கொள்ளப்படும் பட்சத்தில் பிறரைக்குறித்துப் பேசுதலை, “புறங்கூறுதலை, “தீமை பேசுதலை தவிர்க்கக்கூடியதான இக்கட்டளைக்குறித்து நாம் கவனமாய்ப் பார்க்கலாம் (மத்தேயு 18:15-17). சம்பந்தப்பட்டவர்கள் இடையில் மாத்திரம் உரையாடல் எனும் இக்கட்டளையின் முதல் விதிமுறையானது, தான் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதும், குற்றஞ்சாட்டுபவர் சார்பிலான வெளிப்படையான பேச்சினைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. இது குற்றஞ்சாட்டப் படுபவரைக் குறித்து எந்தத் தீமையும் தான் சிந்திக்காததையும் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. தன்தன் நடக்கை சரியானது என்று இருவருமே எண்ணிக்கொண்டு, விஷயத்தினைக் குறித்துக் கலந்துரையாடி, ஒரே கண்ணோட்டத்திற்குத் தாங்கள் வரமுடியுமா என்று பார்க்கத்தக்கதாக, “சகோதரர்களென ஒன்றுகூடுகின்றனர். அவர்கள் ஒருமனப்பாட்டிற்குள் வந்தால், அப்போது அனைத்தும் சரியாகிவிடும்; காரியத்திற்குத் தீர்வுண்டாகும்; சமாதானம் உண்டாகும்; அச்சுறுத்தின பிரிவினை விலகிடும் மற்றும் இதைக்காட்டிலும் ஞானமானது எதுவுமிராது. பெரும்பான்மையான விவகாரங்களில், சம்பந்தப்பட்டவர்கள் இடையிலான மனம்விட்டு பேசுதல், வெளிப்படையான உரையாடல் என்பது இணக்கத்தினைக் கொண்டுவந்துவிடும். ஆனால் [சம்பந்தப்பட்டவர்கள்] இருவருமே ஒரேமாதிரி யதார்த்தமாய்க் காணப்பட வேண்டும் மற்றும் கர்த்தருடைய ஆவியினால் அடக்கி ஆளப்பட்;டிருக்க வேண்டும்.

மாம்சம் மற்றும் பிசாசினுடைய ஒரு கிரியையினின்று, இன்னொரு கீழ்த்தரமான கிரியையினிடத்திற்கு வழிநடத்துகின்றதும் மற்றும் சத்தியத்திலும், அதன் அன்பின் ஆவியிலும் வளர்வதை நிறுத்திவிடுகின்றதுமான அவதூறு பேசுதல் எனும் சதி செய்கிற பாவத்தினின்று இப்படியாய் நமது கர்த்தர் தம்முடைய உண்மையான சீஷர்களைக் காத்துக்கொண்டார். அவதூறான பேச்சுகளைக் கேட்பதினால் அவதூறு பேசுகிறவர்களை அவர்களது தீயச் செய்கைக்கு ஊக்குவிக்கிறவர்கள், அவர்களது தீயச்செய்கையில் பங்காளிகளாக இருக்கின்றார்கள் என்பதையும், ஆண்டவருடைய கட்டளைகளை மீறின குற்றத்தில் கூட்டாளிகளாக இருக்கின்றார்கள் என்பதையும் நாம் கவனிப்போமாக. அவதூறு பேசுகிறவர்களுக்குச் செவிக்கொடுக்க தேவனுடைய உண்மையான ஜனங்கள் மறுத்திட வேண்டும் மற்றும் இத்தவறைச் செய்பவருக்குக் கர்த்தருடைய வார்த்தையையும், அங்கீகரிக்கப்பட்ட ஒரே வழிமுறையையும் சுட்டிக்காண்பித்திட வேண்டும். நாம் தேவனைவிட ஞானிகளா? நம்முடைய சொந்த கணிப்புகளை நம்மால் நம்ப முடியாது என்பதையும், மேய்ப்பனுடைய சத்தத்தை முழுமையாய்ப் பின்பற்றிடும்போதே நாம் பாதுகாப்பாய்க் காணப்படுவோம் என்பதையும் அனுபவமானது கற்றுத் தருகின்றது.

பிறரைப் பற்றின பேச்சையும் மற்றும் அவதூறு பேச்சையும் செவிகொடுத்துக் கேட்டிடுவதற்கு நாம் மறுத்திட வேண்டும்

எந்த ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ மற்றவர்களைக்குறித்துத் துர்ச்செய்தி கொண்டு வந்தால், உடனடியாக அவரை அன்புடனும், அதேசமயம் உறுதியுடனும் தடுத்துவிடுங்கள். “கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள் (எபேசியர் 5:11). சபையில் மிகுந்த பிரச்சனையை உண்டாக்குகின்றதான இந்த மீறுதலில் – ஆண்டவருடைய அக்கட்டளையினை மீறுதலில் எவ்விதமாய்ப் பங்குகொள்வதற்கும் மறுப்புத் தெரிவித்து விடுங்கள். ஒருவேளை அச்சகோதரனோ அல்லது சகோதரியோ, ஆவிக்குரிய காரியங்களில் “குழந்தையாய் மாத்திரம் இருப்பார்களானால், இவ்விஷயம் தொடர்பான கர்த்தருடைய கட்டளையினை அவர்களது கவனத்திற்குக் கொண்டுவாருங்கள் (மத்தேயு 18:15; 1 தீமோத்தேயு 5:19). ஒருவேளை உரையாடலானது நேரடியாய் உங்களிடத்தில் இல்லாமல், மாறாகப் பேசப்படும் இடத்தில் நீங்கள் காணப்பட மாத்திரம் செய்கின்றீர்களானால், அவ்விடத்திலிருந்து ஒதுங்கிவிடுவதன் மூலம் உங்களது மறுப்பினை உடனடியாக வெளிப்படுத்துங்கள்.

ஒருவேளை இது விஷயம் குறித்த கர்த்தருடைய கட்டளையினைக் கவனத்திற்குக் கொண்டு வந்த பிற்பாடும், அவதூறு பேசுகிறவர் “தீமைபேசுதலிலும், “புறங்கூறுதலிலும் தொடர்ந்து காணப்பட்டு, தனது “பொல்லாத சம்சயங்களை/ஊகங்களைச் சொல்லிக்கொண்டிருப்பாரானால், நீங்கள் கடந்துபோகையில் மிகவும் தெளிவாய் / கடுமையாய்க் கண்டித்துக்கூற வேண்டியதாவது: “என்னால் நீங்கள் பேசுவதைக் கேட்க முடியாது; நான் கேட்கவும் கூடாது; காரணம் ஒருவேளை நான் செவிக்கொடுத்துக் கேட்பேனானால்,
கர்த்தருடைய கட்டளையை மீறின விஷயத்தில், நானும் உங்களைப் போன்று குற்றவாளி (criminal) ஆகிவிடுவேன். ஒருவேளை நீங்கள் கூறும் கதையை நான் கேட்க வேண்டியதாயினும், என்னால் அதை நம்ப முடியாது; ஏனெனில் கர்த்தருடைய வார்த்தையை மதியாமலும், மனஸ்தாபத்தைச் சரிப்படுத்திக் கொள்ளுவதற்குரிய அவருடைய திட்டத்தைப் பின்பற்றாமலும் இருக்கும் ஒரு கிறிஸ்தவன், கர்த்தருடைய ஆவியை மிகவும் குறைவாய் வெளிப்படுத்துகிறவனாய் இருப்பதினால், அவனது வார்த்தைகள் நம்பத்தகுந்தவையாக இருக்காது. கர்த்தருடைய வார்த்தைகளைத் தட்டிக்கழிக்கிறவனும், திரித்துக்கூறுகிறவனும், சக சீஷர்களுடைய வார்த்தைகளையும், கிரியைகளையும் தவறாய் எடுத்துக் காட்டுவதற்கும் மற்றும் திரித்துக் கூறிடுவதற்கும் தயங்கமாட்டான். பின்னர் அத்தகையவன் தனது தவறுகளை ஒப்புக்கொண்டு, அதைச் சீர்த்திருத்தலுக்கான உறுதிகளுடன் உறுதிப்படுத்துவது வரையிலும், அவனிடமான ஐக்கியத்தினின்று ஒதுங்கிக்கொள்ளுங்கள். ஒருவேளை அத்தகைய சம்பாஷணைக்கு நீங்கள் எவ்வளவேனும் செவிக்கொடுத்திருப்பீர்களானால் அல்லது அக்காரியத்திற்கோ, பிறரைப் பற்றிப் பேசினவருக்கோ, அவதூறு பேசினவருக்கோ எவ்வளவேனும் ஆதரவு கொடுத்திருப்பீர்களானால், நீங்கள் அந்தப் பாவத்திலும் மற்றும் அதன் சகல பின்விளைவுகளிலும் பங்காளிகளாய் இருப்பீர்கள்; மேலும் இதன் காரணமாக “கசப்பான வேர் முளைத்திருக்குமானால், அதனால் அசுசிபடுகிறவர்களில், நீங்களும் ஒருவராக இருப்பீர்கள் (எபிரெயர் 12:15).

சுத்தமாயிருங்கள்: தேவன் விஷயத்திலும், மனுஷர் விஷயத்திலும் குற்ற மனசாட்சி இல்லாமல் இருக்கும் நிலையினைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். இதனை இருதயத்திலிருந்து துவங்குங்கள்; எந்த விதத்திலும் தீமையாய்க் காணப்படும் எந்தச் சிந்தனைகளையும் குடிக்கொள்ள வைக்காதீர்கள். இப்படியாய்க் காணப்படுவதனை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு, கிறிஸ்து இயேசுவை உங்கள் மாதிரியாக உங்கள் மனதின் முன் அதிகமதிகமாய் நிறுத்திக்கொள்ளுங்கள். தீமையானது வெளியிலிருந்தோ அல்லது உள்ளிலிருந்தோ உங்களுக்குள் தலையிடும்போது, ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யும் கிருபையினை வாக்களித்துள்ளவரிடத்தில், உங்கள் இருதயத்தினை ஜெபத்தில் உயர்த்திடுங்கள். “என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக எனும் ஜெபத்தினை எப்போதும் ஏறெடுத்துக்கொண்டிருங்கள் (சங்கீதம் 19:14).

தெய்வீகப் பிரமாணத்தினுடைய கொள்கைகளைப் பற்றின உணர்ந்துகொள்ளுதலை வளர்த்திக்கொள்வோமாக

வேதவாக்கியங்களின் பல்வேறு விசேஷித்தக் கட்டளைகளைப் பின்பற்றிட நாடுகையில், தெய்வீகப் பிரமாணங்களில் அடங்கியிருக்கின்றதான கொள்கைகளைப் புரிந்துகொள்வதற்கும் மற்றும் அவற்றிற்கு இசைவாய் வந்திடவும் அதிகமதிகமாய் நாடிடுவோமாக. கர்த்தருடைய வார்த்தைகளில் குறிப்பாகக் குறிப்பிடப்படாத வகையிலுள்ள, நம்முடைய வார்த்தைகள், சிந்தனைகள் மற்றும் கிரியைகளிலுள்ள சரி மற்றும் தவறினைப் பகுத்துணர இந்தக் கொள்கைகள் நமக்கு உதவிடும். உண்மைதான் நாம் தெய்வீகப் பிரமாணத்தினுடைய கொள்கைகளைப் புரிந்துகொள்ளும் மற்றும் அவற்றிற்கு இசைவாய் வரும் நிலைக்கும் வருகையில், அதற்கேற்ப நாம் திவ்விய வார்த்தைகளினுடைய ஆவியினைப் பெற்றுக்கொள்கின்றவர்களாய் இருப்போம். இது விஷயம் குறித்த சங்கீதக்காரனின் பின்வரும் சாட்சியினைக் கவனியுங்கள்: “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம். நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது. உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன். உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப்பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன். உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன். நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகேன். உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள், என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும். உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன். உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது (சங்கீதம் 119:97-105).

அன்பிற்கு எதிரானதென – கிறிஸ்துவின் மனநிலைக்கு அல்லது ஆவிக்கு எதிரானதென – இந்தச் சண்டையிடும் மற்றும் குற்றம் கண்டுபிடிக்கும் மனநிலையினைத் தவிர்த்திடுவோமாக. உலகத்தையும், மாம்சத்தையும் மற்றும் பிசாசையும் மற்றும் இவைகளின் பல்வேறு கண்ணிகளையும் ஜெயங்கொள்வதற்குக் கொஞ்சம் போராடுவதற்குரிய தைரியம் தேவைப்படுகின்றது. இந்தப் போராடும் தன்மையானது, முதலாவது நமக்குள்ளும், இரண்டாவதாக மற்றவர்களுக்குள்ளும் காணபப் டும் பாவத்திற்கு எதிராக முறையாயும், ஞானமாயும் பிரயோகிக்கப்படுமாயின், கர்த்தருக்காகவும், அவருடைய ஜனங்களுக்காகவும் மற்றும் சாத்தானுக்கு எதிராகவும் மற்றும் அவனது சகல இருளின் அதிகாரங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுமாயின், அது நமக்கும், ஆண்டவருடைய காரணங்களுக்கும் விலையேறப்பெற்ற உதவிகரமாகக் காணப்படும். இது வேதவாக்கியங்களில், நல்லதொரு போராட்டம் போராடுதலென்று அழைக்கப்பட்டுள்ளது மற்றும் நாம் அனைவரும் நீதிக்கும், சத்தியத்திற்குமான இந்த யுத்தத்தில் வீரமுடைய போர்ச் சேவகர்களாகக் காணப்பட்டு, நம்முடைய அதிபதிக்குரிய கனத்தினையும், அவரது ஜனங்களுடைய சுயாதீனங்களையும் அன்பாய்க் காத்துக் கொள்ள வேண்டும்.

தீமையின் அதிகாரங்களானது, எதிர்த்துப்
போராடும் தன்மையினைப் பிரதான
பண்பாக்குகின்றன

ஆனாலும் எதிர்த்துப்போராடும் தன்மையானது நல்லவிதமாய் இப்படிப் பயன்படுத்தப்படுகிற காரியமானது, இவ்வுலகத்தின் அதிபதிக்குப் பிரியமாய் இருப்பதில்லை இவன் தன்னால் நேரடியாய்ப் பயன்படுத்த முடியாததைத் தவறான விதத்தில் பயன்படுத்திடுவதற்கு நாடிடுவான். இதன் விளைவாக, அவன் சிலரிடத்தில் எதிர்த்துப்போராடும் தன்மையினை, பிரதான பண்பாக்கிட முற்படுகின்றான். அனைத்தையும் மற்றும் அனைவரோடும் இவர்கள் எதிர்த்துப் போராடுவதற்கு ஊக்குவிக்கின்றான்; இருளின் அதிகாரங்களைப் பார்க்கிலும் சகோதரரையும், பெயர்ச்சபை மனுஷர்களைக் குருடாக்கி – அவர்களை இப்படி மாற்றிப் போட்டதான தப்பறைகள் மற்றும் அறியாமையைப் பார்க்கிலும், பெயர்ச் சபை மனுஷர்களையும் அதிகம் எதிர்த்துப் போராடுவதற்கு ஊக்குவிக்கின்றான். உண்மையில் நம்மைத் தேவனோடே போர்ச்செய்ய வைப்பதே அவனது விருப்பமாய் இருக்கின்றது.

இவ்விஷயத்தில் நாம் கவனமாய் இருப்போமாக. மற்றவர்கள் முன்பு நாம் இடறலின் கற்களைப் போட்டுவிடாமல் இருக்கத்தக்கதாக, முதலாவது நாம் நம்மைப் பகுத்துணருவோமாக; அற்ப காரியங்களிலிருந்து மலைகளை உண்டுபண்ணிடுவதற்கு நாடுகின்றதும் மற்றும் முக்கியத்துவமற்ற விஷயங்களில் எல்லாம் குற்றம் காணுகிறவர்களாகவும் மற்றும் எதிர்த்துப் போராடுகிறவர்களாகவும் நம்மை மாற்றுகின்றதுமான நம்முடைய சொந்த இருதயங்களில் உள்ள தவறான ஆவிக்கு எதிராய் நாம் போராடுவோமாக. “பட்டணத்தைப் பிடிக்கிறவனைப் பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் மகாபெரியவனாய் இருக்கின்றான் (நீதிமொழிகள் 16:32). சுயமகிமை எனும் உள்நோக்கத்திற்காக இல்லாமல், சத்தியத்திற்கான அன்பின் நிமித்தமாக, கர்த்தருக்கான, அவரது ஜனங்களுக்கான – சகோதரருக்கான அன்பின் நிமித்தமாக, சத்தியத்திற்கான நம்முடைய போராடுதல்கள் காணப்படத்தக்கதாக, நம்மை நாம் காத்துக்கொள்வோமாக. ஒருவேளை அன்புதான் இயக்கும் ஆவியாக அல்லது உள்நோக்கமாக இருக்குமானால், அது சக ஊழியர்கள் யாவரிடத்திலுமான அன்புடன்கூடிய, பொறுமையுடன்கூடிய, சாந்தத்துடன்கூடிய, தாழ்மையுடன்கூடிய நடக்கையில் வெளிப்படும். நாம் “யாவரிடத்திலும் சாந்தத்துடன் காணப்படுவோமாக. ஜீவனும், வல்லமையுள்ளதுமான தேவனுடைய வார்த்தையாகிய, ஆவியின் பட்டயமானது, வெட்டுதல் யாவற்றையும் செய்வதாக.

துர்க்குணம், பொறாமை, பகைமை, வாக்குவாதத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டுள்ள இருதயத்தினுடைய நிலைமைகள், எண்ணங்கள், [R4803 : page 124] உணர்வுகள் யாவற்றையும் குறித்து, எச்சரிக்கையாய் இருப்போமாக. இவைகளுக்கு ஒரு கணம்கூட உங்கள் இருதயத்தில் எந்த இடத்தையும் கொடுக்காதீர்கள்; ஏனெனில் அவை மற்றவர்களுக்குப் பாதகம் பண்ணிட உங்களை வழிநடத்திடுவதோடல்லாமல், உங்களுக்கும் மிகுந்த பாதகத்தினை நிச்சயமாய் உண்டுபண்ணிடும்.தேவனிடத்திலும், அவரது சகல சிருஷ்டிகளிடத்திலும் அன்பினால் நிரம்பின நிலையில் உங்களது இருதயங்களை, உங்களது சித்தங்களை, உங்களது நோக்கங்களை மற்றும் விருப்பங்களைக் காத்துக்கொள்ளுங்கள் – தேவனிடத்தில் மிகவும் ஊக்கமாய் அன்புகொண்டிருங்கள் மற்றும் இதற்கேற்ப அவருடைய ஆவியைப் பெற்றிருப்பவர்கள் மற்றும் அவர் வழிகாட்டும் வழியில் நடப்பவர்கள் யாவரிடத்திலும் அன்புகொண்டிருங்கள்.

மனசாட்சியினை மாத்திரமே
நம்பிவிடாதீர்கள்

மனசாட்சியே போதுமான வழிகாட்டியாக இருக்குமானால், உங்களுக்கு வேதவாக்கியங்களினுடைய அவசியம் இராது. பெரும்பான்மையானவர்களுக்கு மனசாட்சி என்ற ஒன்றே இருப்பதில்லை ஏனெனில் அவர்கள் மனசாட்சிக்கு வழிக்காட்டும்படிக்கு அருளப்பட்டுள்ளதான தேவனுடைய பிரமாணங்களுக்கும், கொள்கைகளுக்கும் குருடர்களாய் இருக்கின்றனர்; இவர்களைவிட மோசமானவர்கள் 1 தீமோத்தேயு 4:1-ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக் கின்றனர். ஆகையால் கர்த்தருடைய வார்த்தைக்குக் கவனமாய்ச் செவிக்கொடுப்பதும், அதன் வெளிச்சத்திற்கு ஜாக்கிரதையாய் நடப்பதும் கண்டிப்பாய் அவசியமாய் இருக்கின்றது.

நமக்கு எதிராய் மிகவும் அதிகமாய்ப் பேசப்பட்டுவிட்டது, ஆகையால் ஓட்டத்தை விட்டுவிடுவோம் என்று எண்ணத்தக்கதாக நம்முடைய மனதில் சோர்ந்தோ அல்லது தளர்ந்தோ போய்விடக் கூடாது. மாறாக நம்முடைய நன்மைக்கு ஏதுவாய் அனைத்துக் காரியங்களையும் நடப்பித்துக் கொண்டிருக்கின்றதான பிதாவுக்குத் தெரிந்தே, எதுவும் நம்மீது கடந்துவருமே ஒழிய, மற்றப்படி வேறெதுவும் வராது என்று நாமும் நமது கர்த்தர் போன்று உறுதியடைந்து காணப்பட வேண்டும். இப்படியாகத்தான் நமது கர்த்தர், அவருக்கான உயர்த்தப்படுதலுக்கு ஆயத்தமாக்கப்பட்டார். ஆகையால் நமக்கான பல்வேறு அனுபவங்களினால் நாம் நன்றாய்ப் பயிற்றுவிக்கப்பட்டால் மற்றும் நமக்கு வழிகாட்டத்தக்கதாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளதான கட்டளைகளை நாம் முடிந்தமட்டும் பின்பற்றினோ மானால், நமது கர்த்தருக்குக் காணப்பட்டதுபோல, நமக்கும் நீதிக்கு எதிரான எதிர்ப்புகளும், அவதூறு பேச்சுகளும், வைதல்களும் ஆசீர்வாதங்களைக் கொணர்கிறதாய் இருக்கும்.

ஆனால் எப்படிக் கர்த்தர் எதிர்ப்புகளை உண்மையாய்ச் சகித்து அனுபவித்தார் என்பதைக் கவனிக்கத் தவறினபடியால், எத்தனை பேர் தளர்ந்துபோய், பரிசினை இழந்துபோவதற்குரிய அபாயத்தில் காணப்படுகின்றனர்! இவர்கள், பரிபூரணராய் இருந்த கர்த்தர் நீதியின் நிமித்தம் எல்லா விதத்திலும் அநியாயமாய்ப் பாடுபட்டார் என்றும், தங்கள் நடக்கைகளானது பூரணமற்றது என்றும் கவனிப்பார்களானால், இவர்கள் நன்மைச் செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்பார்கள்; “இயேசு கிறிஸ்துவின் நல்ல போர்ச் சேவகனெனத் தீங்கநுபவிப்பதற்கும் மற்றும் போராடுவதற்கும் கற்றுக்கொள்வார்கள்; “விசுவாசத்தில் நல்ல போராட்டத்தினைத் தொடர்ந்து போராடுவார்கள். “நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் (சபையைப்போல்) சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார் (எபிரெயர் 4:15).