R1883 (page 247)
கிறிஸ்துவின் சபையானது மற்றக் காரணங்களினால் என்பதைவிட, வழிநடத்துபவராக ஆகிடுவதற்கான பதவி ஆசை மற்றும் பெருமையின் காரணங்களினாலே அநேகமாக மிகவும் பாடுபட்டுள்ளது. தங்களில் யார் பெரியவனாய்க் கருதப்பட வேண்டுமென்று வாக்குவாதம் பண்ணினதற்காகச் சீஷர்கள் அவ்வப்போது கடிந்துகொள்ளப்பட்டார்கள் மற்றும் தங்களைத் தாங்களே உயர்த்திக்கொள்ளும் இத்தகைய ஆவியானது, இதைப் பெற்றிருக்கும் அனைவரையும் வாக்களிக்கப்பட்ட இராஜ்யத்திற்குப் புறம்பாக்கிடும் என்று நமது கர்த்தர் அவர்களுக்குக் கூறினார். அவர்: “புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரஞ்செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார் (மத்தேயு 20:25-28).
கிறிஸ்துவின் சபையில் உயர்ந்த ஸ்தானம் என்பது, “ஊழியக்காரனாய் இருப்பதாகும் மற்றும் தாம் சபையின் பிரதான ஊழியக்காரராய் அல்லது பணிவிடைக்காரராய் இருப்பதை அவர்தாமே கூறியுள்ளார். மேலும் “நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள் என்றால் – அப்படியானால் கூட்டங்களை வழிநடத்துபவர்கள் தொடர்புடைய மற்றும் கர்த்தருடைய காரணங்களுக்கடுத்த நலன்கள் பற்றின மற்ற அனைத்துக் காரியங்கள் தொடர்புடைய கர்த்தருடைய சித்தம் குறித்த தங்களது பகுத்துணர்தலை வெளிப்படுத்திடுவதற்குச் சகோதரர்கள் அனைவரும் சமமான உரிமைப்பெற்றிருக்க வேண்டும். ஒரே போதகரான கிறிஸ்துவினால் சமமான நிலையில் வைக்கப்பட்டவர்கள் மத்தியில் ஆளுகைகளோ, தலைமைத்துவங்களோ, ஆதிக்கங்களோ காணப்படக்கூடாது. இருண்ட காலங்களில் சபையில் “குருமார் வகுப்பார் மற்றும் “சாதாரண வகுப்பார் என்று காணப்பட்ட பிரிவானது, கர்த்தரிடமிருந்தும், அப்போஸ்தலர்களிடமிருந்தும் உண்டாகாமல், மாறாக மாபெரும் சத்துருவாகிய சாத்தானால் வளர்க்கப்பட்ட பதவி ஆசையினால் உண்டானவையாகும்.
தற்கால சத்தியத்தில் களிகூரும் சகோதரர்களும், சகோதரிகளும், கடந்தகாலங்களில் கர்த்தருடைய காரணங்களுக்கு அதிகளவில் ஊறுவிளைவித்த அந்த நிலைமைகளுக்கு எதிராய் விழிப்பாய் இருப்பார்கள் என்று நாம் விசுவாசிக்கின்றோம்; கடந்த காலங்களில் கர்த்தருடைய காரணங்களுக்கு அதிகளவில் ஊறுவிளைவித்த அந்தக் காரியங்களானது, கண்ணுக்குப் புலப்படாமல் துவங்கி, பின் வழக்கமாக மாறி, பின் வழக்கமானது அடிமைத்தனமாகுவது வரையிலும் வளர்ந்தது; இந்த அடிமைத்தனமானது தேவனுடைய ஒழுங்குமுறையை மாறுபடுத்தி, அவருடைய பிள்ளைகள் அநேகருடைய தாலந்துகள் வளர்வதைத் தடைப்பண்ணி, சபையாரில் ஒன்று அல்லது இரண்டுபேர் தேவனுடைய சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆண்டிடுவதற்கு அனுமதிக்கின்றது, அதாவது (பரிசுத்த ஆவியினுடைய வழிநடத்துதலின் கீழ்) சபையார், தேவவசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதான ஊழியத்திற்கான தகுதிகளை உடையவர்களாய் யார் காணப்படுகின்றனர் என்று தங்களுக்கெனத் தீர்மானித்துக் கொள்வதற்கான உரிமையினைப் பெற்றிருக்கின்றனர் எனும் காரியத்தினை அடையாளம் கண்டுகொள்ளாமல் – இறுமாப்பாய் ஆண்டிடுவதற்கு அனுமதிக்கின்றது.
தேவனுடைய மந்தைக்கு ஊழியம்புரிவதற்குரிய தகுதியும், வைராக்கியமும் பெற்று, அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றதான சகோதரர் யாவரும், கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு உண்டாக்கின சுயாதீனங்களில் தலையிடுவதைக் கவனமாய்த் தவிர்த்துக்கொள்ளும்படிக்கு வலியுறுத்துகின்றோம். கனம்பண்ணுவதிலே ஒருவருக்கொருவர் முந்திகொள்கின்றதான தன்னடக்கத்தை மற்றும் தேவையான தாலந்துகள் காணப்படுவதற்கேற்ப, மற்றவர்கள் ஒவ்வொருவரையும் ஊழியத்தில் ஈடுபட வைக்க உதவுவதற்கு நாடுகின்றதான தன்னடக்கத்தைப் பெற்றிருக்க நாம் பரிந்துரைக்கின்றோம் மற்றும் ஈடுபலியின் மீது விசுவாசம் கொண்டிருப்பதாகவும், கர்த்தருடைய ஊழியத்திற்கென முழுமையாய் அர்ப்பணம் பண்ணியுள்ளதாகவும் அறிக்கைப்பண்ணுகிறவர்களில் பெரும்பான்மையானவர்களாகிலும், ஒருவரால் வழி நடத்தப்படும்படிக்கான விருப்பத்தினை வெளிப்படுத்தினால் தவிர, மற்றப்படி யாரும் ஒரு சிறு கூட்டத்தாரைக் கூட வழிநடத்திடுவதற்கு மறுத்திடும் தன்னடக்கத்தைக் கொண்டிருக்க நாம் பரிந்துரைக்கின்றோம். மேலும் இந்தத் தெரிந்தெடுத்தலானது, நிரந்தரமான ஒன்றாய்க் காணப்படக்கூடாது; தேவனுடைய ஜனங்களின் மனம் குறித்து அறிந்திடுவதற்குக் குறைந்த பட்சமாக வருடந்தோறுமாகிலும் நாடப்பட வேண்டும் மற்றும் பெரும்பான்மையானவர்கள் மாற்றத்தினை விரும்புகின்றனர் என்று எண்ணிடுவதற்குக் காரணங்கள் இருக்குமானால் (அதை அறிந்திடுவதற்கு) அடிக்கடி நாடப்படவேண்டும். மந்தையினுடைய சுயாதீனங்களைப் பாதுகாத்திடுங்கள்; ஏனெனில் அவை உங்களுடையதாய் இராமல், கிறிஸ்துவின் காரணங்களுக்கான சுயாதீனங்களாகும். “கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார்; நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்” (மத்தேயு 23:8).