உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R2156 (page 156)

உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்

KEEP THY TONGUE FROM EVIL

யாக்கோபு 3:1-13

“உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டு வசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள்.” (சங்கீதம் 34:13)

“என் சகோதரரே, அதிகமாக நியாயந்தீர்க்கப்படுவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக (யாக்கோபு 3:1; ரிவைஸ்ட் மொழியாக்கம்). இப்படியாக நாவினுடைய மிகுந்த செல்வாக்குக் குறித்துத் தன்னால் சொல்லப்படப்போகிறவைகள், விசுவாசிகள் மத்தியில் போதகர்கள் ஆகுவதற்கு முற்படுகிறவர்களுக்கு, அதாவது ஒருவேளை போதகர்களாக இல்லாமல் இருக்கையில் பெற்றிருக்கக்கூடிய பொறுப்பினைக்காட்டிலும், போதகர்கள் ஆனதினிமித்தம் மிகுந்த பொறுப்பினை உடையவர்களாக இருப்பவர்களுக்குப் பெரிதும் பொருந்தக்கூடியதாய் இருக்குமென அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுகின்றார். போதிப்பதற்கான திறமை,வரம் இருப்பவர்களைத் தடைப்பண்ணுவது அப்போஸ்தலனுடைய விருப்பமாய் இராமல், மாறாக இப்படியான ஸ்தானத்தை எடுத்துக்கொள்பவர்கள் அனைவருக்குமான பொறுப்புக் குறித்து, அவர்களுக்கு எச்சரிக்கைப் பண்ணிடுவதே அவருடைய விருப்பமாய்க் காணப்படுகின்றது. ஒருவேளை அவர்கள் பேச்சாற்றல் உடையவர்களாய் இருப்பார்களானால் அவர்கள் நாவானது மாபெரும் ஆசீர்வாதத்திற்கு ஏதுவாக அநேகரை கர்த்தரிடத்திற்கும், சத்தியத்தினிடத்திற்கும் மற்றும் நீதியின் பாதையினிடத்திற்கும் திருப்புவதற்கான கால்வாயாகக் காணப்படலாம்; அல்லது ஒருவேளை தப்பறையினால் மாசுபட்டிருக்கும் பட்சத்தில், அந்நாவானது சொல்லமுடியாத அளவுக்கான பாதகங்களை – விசுவாசத்திற்கு, ஒழுக்கத்திற்கு, நற்கிரியைகளுக்குப் பாதகங்களை ஏற்படுத்திடக்கூடும். போதகம்பண்ணுவதற்கான வரத்தைப் பிரயோகிப்பவன் எவனும், தேவனுக்கும், மனுஷனுக்கும் முன்னிலையில் தன்னை அதிகப்படியான பொறுப்பிற்குள்ளாக்குகின்றவனாய் இருப்பான். மத்தேயு 5:19; ரோமர் 2:20,21; 1 பேதுரு 5:3; தீத்து 1:11; 1 தீமோத்தேயு 1:7; 2 தீமோத்தேயு 4:3; 2 பேதுரு 2:1-ஆம் வசனங்களைப் பார்க்கவும்.

இப்பாடத்தினுடைய எச்சரிப்பானது, நாவிற்கு எதிராக மாத்திரம் காணப்படாமல், நம்முடைய நாவைக்கொண்டு, நாம் மற்றவர்கள் மீது செலுத்திடும் ஆற்றலுக்கு / தாக்கத்திற்கு எதிராகவும் காணப்படுகின்றது. அனுபவம் பெற்றுள்ள ஒவ்வொருவரும், நாவானது சரீரத்தினுடைய மற்ற எந்த அவயவங்களைக் காட்டிலும் நன்மைக்கு அல்லது தீமைக்கு ஏதுவான அதன் ஆதிக்கத்தில் ஆற்றல்மிக்கது என்ற கூற்றினை முழுமையாக ஒத்துக்கொள்வார்கள். நாவைக்காட்டிலும், வேறெந்த அவயமும் கட்டுப்படுத்தப்படுவதற்கு எளிது என்று அனுபவம் கற்றுத் தந்துமுள்ளது. நாவு எனும் இந்த ஊழியக்காரன் மிகவும் திறமிக்கது என்பதினால், விழுந்துபோன சுபாவத்தினுடைய ஒவ்வொரு பேராசையும், விருப்பமும் மற்றும் உணர்வுகளும், இவ்ஊழியத்தைத் தீமைக்கான ஊழியக்காரனாய் அல்லது கால்வாயாகப் பயன்படுத்திடுவதற்கு நாடுகின்றது. ஆகையால் கிறிஸ்தவனானவன் தனது சரீரத்திலுள்ள இந்த அவயமானது தனக்கோ அல்லது மற்றவர்களுக்கோ இடையூறாகக் காணப்படாமல், இடுக்கமான வழியில் உதவிகரமாகக் காணப்படத்தக்கதாக, இதனை ஆண்டிடுவதற்கும், இது கிறிஸ்துவுக்குள்ளான புதிய மனதின் கீழ், கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படுவதற்கும் அதிகளவிலான விழிப்பும், ஞானமும் மற்றும் கவனமும் அவசியப்படுகின்றது. குதிரையினுடைய வாயிலுள்ள கடிவாளமானது, அதன் பலத்தினை இயக்குகிறதையும், கட்டுப்படுத்துகிறதையும் போன்று, கப்பலினுடைய சிறிய சுக்கானானது, அதன் திசையினைத் திருப்பிடுவது அல்லது வழிநடத்திடுவது போன்று, நாவும் அதன் பிரதிநிதியாகிய பேனாவும், நன்மைக்கு அல்லது தீமைக்கு நேராக, திரளான ஜனங்கள் மீது ஆதிக்கம் கொண்டு, திசைத்திருப்பிவிடுகிறதாக இருக்கும். ஆகையால் நாவானது எத்துணை முக்கியத்துவம் உடையதாய்க் காணப்படுகின்றது மற்றும் நன்மைக்கான பிரதிநிதியாய் இருப்பதற்குப் பதிலாக தீமைக்கான பிரதிநிதியாகவும், விசுவாசத்தினைக் கட்டி எழுப்புவதற்குப் பதிலாக, விசுவாசத்தினை இல்லாமலாக்கிப் போடுகிறதாகவும், நீதியையும், சமாதானத்தையும் உண்டுபண்ணுகிறதற்குப் பதிலாகச் சண்டைச் சச்சரவுகளின் விதைகளை விதைக்கிறதாகவும் நாவானது காணப்படுவதை எத்தனைதரம் நாம் கண்டிருக்கின்றோம்! இப்படியான நிலைமை உலகத்தாரின் மத்தியில் உண்மையாக இருப்பினும், தேவனுடைய ஜனங்கள் மத்தியிலும்கூட நிலைமை கொஞ்சம் இப்படியாகவே காணப்படுகின்றது மற்றும் ஒவ்வொருவனும் தான் ஏதோ ஒருவிதத்தில் போதகனாய் இருக்கின்றான் என்பதையும், தினந்தோறும் சத்தியம், நீதி மற்றும் சமாதானத்திற்கடுத்த நோக்கங்களை ஒன்றில் முன்னேறச் செய்கின்றான் அல்லது தடைப்பண்ணுகின்றான் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.

சீர்ப்பொருந்திடாத உலகத்தாரின் விஷயத்தில், நாவானது உண்மையில் நெருப்பாகக் காணப்பட்டு, முழுச்சரீரத்தையும் கறைப்படுத்துகின்றதும், விழுந்துபோன உணர்வுகளையும், ஆசைகளையும் தூண்டிவிடுகிறதுமான அனைத்தையும், பொறாமையையும், பகைமையையும், வாக்குவாதங்களையும், கோபத்தையும் கொளுத்திவிடுகின்றதாய் இருக்கின்றது. நாவானது கெஹன்னா அக்கினியினால் – இரண்டாம் மரணத்தினால் – கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது என்று அப்போஸ்தலன் அடையாள வார்த்தைகளில் குறிப்பிட்டதிலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அது கொழுந்துவிட்டு எரிகிற காரியமானது, நாவின் எஜமானை மாத்திரமல்லாமல், மற்றவர்களையும் அழிவுக்கு நேராய் வழிநடத்திடும்.

“அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம் என்ற வார்த்தைகளை, அப்போஸ்தலன் தானும், சபையாரும் தங்கள் நாவுகளை இத்தகைய பரிசுத்தமற்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டிருப்பதைத் தெரிவிப்பதற்காகக் குறிப்பிட்டுள்ளதாக நாம் புரிந்துகொள்ளக்கூடாது, மாறாக முழு உலகத்தைக் குறித்துப் பேசுகையில், சிலர் நாவைத் தேவனைத் துதிப்பதற்கும் மற்றும் சிலர் அவரது பரிசுத்த நாமத்தைத் தூஷிப்பதற்கும் மற்றும் தங்கள் சக சிருஷ்டிகளைச் சபிப்பதற்கும் அதைப் பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்துள்ளார். நாவானது எத்திசையில் வழிகாட்டப்படுகின்றதோ, அதற்கு இணங்கிட [R2157 : page 156] விருப்பமுள்ள ஊழியக்காரனாய்க் காணப்படுகின்றது; ஆகையால்தான் இவ்வளவு முக்கியமான ஊழியக்காரன், அதாவது அவயம் சரியாய் வழிகாட்டப்படுவது முக்கியமாய் உள்ளது. சபையிலும்கூடச் சிலர் ஒரே வாயினால் தேவனைத் துதிக்கவும் செய்கின்றனர் மற்றும் சக சிருஷ்டிகளைச் சபிக்கவும் செய்கின்றனர் – சபித்தல் எனும் வார்த்தைக்கான சாதாரண அர்த்தத்தின்படி எப்போதும் சபிக்கவில்லை என்றாலும், நாசகரமான அல்லது சபிக்கப்பட்ட அல்லது தீமையான நிலைமைக்கு வழிநடத்துகின்றதான பாதகமான வார்த்தைகளைப் பேசும் விதத்தில் விநோதமாகச் சபிக்கின்றனர்; ஏனெனில் ஒவ்வொரு தவறான போதித்தலும், அதைப் பெற்றுக்கொள்பவருக்குச் சாபமாகக் காணப்படுகின்றது. இப்படியான விதத்தில் அநேகர் ஒரே வாயினின்று நன்மைக்கு ஏதுவான மற்றும் தீமைக்கு ஏதுவான ஆதிக்கங்களைக் கொணர்கின்றவர்களாய் இருக்கின்றனர். இது தவறான நிலைமையாகும்; மற்றும் இதுவே “என் சகோதரரே, அநேகர் போதகராகாதிருப்பீர்களாக எனும் எச்சரிப்பினை முக்கியமானதாக்கிற்று. யாரொருவர் திவ்விய வார்த்தைகள் கடந்துவருகின்றதான நீரூற்றாய்க் காணப்படுகின்றாரோ, ஆசீர்வாதத்தை, புத்துணர்வை மற்றும் பலத்தைச் சுமந்து செல்கின்றாரோ, அவர் போதிக்கும் கால்வாயாகிய தன்னில் சபித்தலாக, பாதகமாகக் காணப்படும் – அதாவது தேவனைக் கனவீனப்படுத்துகிறதும் மற்றும் அவரது வார்த்தைகளைத் தவறாய்ப் பொருள்கொள்ள செய்கின்றதுமான – கசப்பான தண்ணீர்கள், தவறான உபதேசங்கள் காணப்படாதபடிக்குப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கூட்டங்களுக்கு வழிநடத்துபவர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில், மேலே சொல்லப்பட்டுள்ளதுபோன்று “நாவு / சொல்வன்மை எனும் தகுதியானது பார்க்கத் தவறப்படக்கூடாது. நெருப்புத்தனமான / கொந்தளிக்கும் நாவுடையவர்கள் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது; மாறாக சாந்தமுள்ளவர்களும், நிதானம் உள்ளவர்களும், தங்கள் நாவுகளுக்குக் கடிவாளம் இடுபவர்களும், “தேவனுடைய வாக்கியங்களின்படி மாத்திரம் போதிக்கத்தக்கதாக, கவனமாய்ப் பிரயாசம் எடுப்பவர்களும்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இத்தகைய நாவுகளே கட்டுப்பாட்டில் காணப்படுகின்றன; ஆனால் மற்றவைகளோ அடிக்கடி காயப்படுத்தி எதிர்க்கின்றது. கர்த்தருடைய வார்த்தையானது, ஜீவனும், வல்லமையும் உள்ளதாயும், கருக்கானதாயும் காணப்பட்டு, காரியத்தினை நடைமுறைப் படுத்துவதற்கெனக் கசப்பான மற்றும் கடுமையான / எரிச்சலான மற்றும் அன்பற்ற மனித சொற்களின் அவசியமில்லாமலேயே, இருதயத்தினை உருவக்குத்துகிறதாயும் இருக்கின்றது. ஆகையால்தான் நமக்கு “அன்புடன் சத்தியத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்ற தெய்வீக அறிவுரை காணப்படுகின்றது.

சபையில் போதகர்களுக்குரிய (ஞானத்திலும், அறிவிலும்) தகுதியுடையவர்கள், அவற்றை வார்த்தையினாலும், போதித்தல்களினாலும் மாத்திரம் காண்பித்திடாமல், இன்னுமாக தேவபக்திக்குரிய ஜீவியங்கள் மூலமாகவும், ஞானம் தரும் பணிவினாலும்/சாந்தத்தினாலும், நன்னடத்தையாலும் அவற்றைக் காண்பிக்கக்கடவன் என்ற புத்திமதியுடன், பாடம் நிறைவடைகின்றது (யாக்கோபு 3:13; திருவிவிலியம்).

இந்தப் பாடமானது விசேஷமாக “போதகர்களுக்குச் சுட்டிக்காட்டப் படுகிறதாக இருப்பினும், இது அனைவராலும் கவனிக்கப்பட வேண்டிய பாடமாய் இருக்கின்றது. “அன்பான வார்த்தைகள் என்றுமே அழியமுடியாது என்னும் பழமொழி உண்டு மற்றும் “அன்பற்ற வார்த்தைகள் என்றுமே அழிவதில்லை என்று சொல்வதும்கூட உண்மையானதாகவே இருக்கும். உண்மையில் அன்பற்ற வார்த்தைகளானது, பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் – விசேஷமாய் உலகப்பிரகாரமானவர்களின் இருதயங்களில் நீண்டகாலம் நீடிக்கின்றதாய் இருக்கின்றது. நாம் எப்போதும் ஆசீர்வதிக்கிறவர்களாகவும் மற்றும் “கேட்கிறவர்களுக்கு பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தைகளைப் பேசுகிறவர்களாகவும் காணப்படத்தக்கதாக, நாம் ஒவ்வொருவரும் மற்றும் நாம் அனைவருமே நம்முடைய நாவுகளைக் கீழ்ப்படுத்தும் விஷயத்தில் நமது ஆற்றல்களை இரண்டு மடங்காக்கி, பிரயோகிப்போமாக (எபேசியர் 4:29-ஆம் வசனத்தை வாசிக்கவும்).