R5255 (page 175)
பெரோயா ஆராய்ச்சி வகுப்புகள் மற்றும் சாட்சிக்கூட்டங்களின் மகா முக்கியத்துவத்தைப் பற்றின சரியான புரிந்துகொள்ளுதலுக்குள்ளாக வரத்தக்கதாக, பயண ஊழியர்கள் தாங்கள் சந்திக்க வாய்ப்புப் பெற்றுக்கொள்ளும் வெவ்வேறு சபையாருக்குத் தங்களாலான உதவியினைச் செய்யும்படிக்கு நாம் பயண ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். இப்படியாக நாம் ஆலோசனை வழங்கியும், வேதாகமப் பாடங்களின் ஆறாம் தொகுதியில், இவற்றை விவரித்தும்கூட, அருமையான நண்பர்களில் சிலர், இவற்றை முழுமையாய்ப் புரிந்துகொள்ளவில்லை என்பதாகத் தோன்றுகின்றது. இதற்குக் காரணம், அவர்கள் அவற்றை முறையாய் நடத்தப்படுவதை ஒருபோதும் கண்டதில்லை என்று நாம் எண்ணுகின்றோம். எங்கு நல்ல பெரோயா ஆராய்ச்சி வகுப்புகளும், சாட்சிக்கூட்டங்களும் சரியாய் நடத்தப்படுகின்றதோ, அங்குப் பிரசங்கங்களைக் கேட்பதற்கு வாய்ப்பு இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், நிச்சயமாய் ஆவிக்குரிய காரியங்களில் வளர்ச்சிக் காணப்படும்.
பயண ஊழியர்களாகிய சகோதரர்கள் – மிகவும் கவனத்தோடும் மற்றும் அவர்கள் கிறிஸ்தவ அனுபவங்களினால் நன்கு வனையப்பெற்றவர்களாகவும், பெரோயா ஆராய்ச்சிகளையும், சாட்சிக் கூட்டங்களையும் நடத்துவதில் அனுபவமுள்ளவர்களாகவும் இருக்கின்றார்கள் என்கிற எண்ணத்தோடும் தெரிந்தெடுக்கப்படுகின்றனர். ஆகையால் ஒரு பயண ஊழியக்காரர் இப்படியான கூட்டம் நடத்தப்படாத ஓர் இடத்திற்குப் போகையில், சுவாரசியமான விதத்திலும், பிரயோஜனமான விதத்திலும், ஆறாம் தொகுதியில் சுட்டிக் காண்பிக்கப்பட்ட வைகளுக்கேற்ப எப்படி இத்தகையக் கூட்டங்கள் நடத்தப்படலாம் என்பதற்கான மாதிரிகளைக் கொடுத்திடுவதின்மூலம், நண்பர்களுக்குச் சிறப்பாய் ஊழியம் புரிந்திடலாம் என்பது எங்களுடைய கருத்தாய் இருக்கின்றது.
எங்கெல்லாம் இத்தகைய கூட்டங்களானது ஏற்கெனவே நடைமுறைப் படுத்தப்பட்டு மற்றும் ஆர்வமுள்ளவர்களால் கலந்துகொள்ளப்பட்டு வருகின்றதோ, அங்குப் பயண ஊழியர்கள் மாதிரி கூட்டங்களை நடத்திக் காண்பிக்க அவசியமில்லை. எனினும் ஓர் இடத்தில் அவர்கள் ஒரு மாலைக் கூட்டத்திலும் மற்றும் வழக்கமாய் நடைப்பெற்றுவரும் மாலை நேர சாட்சிக்கூட்டத்திலும் பங்கெடுக்க வாய்ப்பு ஏற்படும்போது, பயண ஊழியர் ஆறாம் தொகுதியின் அடிப்படையில் சாட்சிக் கூட்டத்தினை நடத்தி, ஒரு மணி நேரத்தில் முடித்துவிட்டு, பின்னர்ச் சபையாருக்கு மிகவும் உதவிகரமாய்க் காணப்படும் விதத்தில் காலம், இடம் மற்றும் சூழ்நிலைக்கேற்ப கூடுதலாக அரை மணி நேரம் எடுத்து மனம்விட்டுப் பேசுவது நலமாய் இருக்கும். பொதுவில் பேசுகிற சகோதரர்கள் யாவரும் தங்கள் செய்தியினை 60-நிமிடங்களுக்குள்ளாக முடித்துக்கொள்ளவும் மற்றும் கண்டிப்பாக 70-நிமிடங்களுக்கு மேலாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் நாம் வலியுறுத்தியுள்ளோம் மற்றும் ஏதேனும் காரணத்தினால் அவர்கள் பேசிடுவதற்கு இதற்குமேல் நேரம் எடுப்பார்களானால், அந்தக் குறிப்பிட்ட காரணங்களை அவர்கள் எங்களுக்குத் தயவாய் விவரிப்பார்களாக.
இது சகோதரர்களைத் தடைப்பண்ண வேண்டும் என்பதற்காக இல்லாமல், மாறாக நீண்ட நேர செய்திக்கொடுப்பது என்பது ஜனங்களுக்குக் கடினமாகக் காணப்படும் மற்றும் இது நாம் ஊழியம் புரிந்திட நாடுகின்றதான கர்த்தருடைய காரணங்களுக்கு இடையூறுபண்ணுகின்றதாய் இருக்கும் என்பதினாலேயே ஆகும். இதற்கு விதிவிலக்கு, இரண்டு அல்லது மூன்று சகோதரர்கள் வழக்கமாய்க் கொண்டிருக்கும் தொடர்க் கூட்டங்களாகும்; ஏனெனில் ஜனங்களைக் கொண்டுவருவதற்கென விசேஷித்தப் பிரயாசங்கள் ஏறெடுக்கையில், இதற்குக் கொஞ்சம் கூடுதல் நேரம் தேவைப்படும்; மேலும் விசேஷமாகக் சுவாரசியமாய்ப் பேசக்கூடிய பேச்சாளர்கள் நீண்ட நேரச் செய்திக்கொடுப்பது ஞானமான காரியமாகும். சராசரியான பேச்சாளனால், இரண்டு மணி நேரங்களில் செய்வதைக் காட்டிலும், ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்ளும் போதே அதிக நன்மை உண்டுபண்ணிடலாம்.
இந்த ஆலோசனைகளிலும் மற்றும் அனைத்து ஆலோசனைகளிலும் மற்றும் ஒழுங்குகளிலும், கர்த்தரை மகிமைப்படுத்துவதும், அவரது ஜனங்கள் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்பதும்தான் எங்களது நோக்கமாகவும், குறிக்கோளாகவும், விருப்பமாகவும் காணப்படுகின்றது என்று நீங்கள் உறுதியாக எடுத்துக்கொள்ளலாம்.