தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R3745 (page 90)

தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்

INFALLIBILITY AND CHURCH ELDERSHIP

கேள்வி — சகோதரர் ரசல் அவர்களே: நீங்கள் தவறிழைக்காதவராகக் கருதப்பட முடியாது என்று எழுதப்பட்ட கடிதம் ஒன்றினை நான் சமீபத்தில் பெற்றுக்கொண்டேன்; இப்படி எழுதிடுவதற்கான காரணம், அக்கடிதத்தினை எழுதினவர், கர்த்தருடைய ஊழியத்தினை மேற்பார்வையிடத்தக்கதாக தங்கள் மத்தியிலிருந்து மூப்பர்களைக் கர்த்தருடைய ஜனங்கள் அடங்கின பல்வேறு கூடுகைகளில் தேர்ந்தெடுத்தல் ஒழுங்கு தொடர்புடைய உங்களது கண்ணோட்டங்கள் மாற்றமடைந்துள்ளதாகக் குற்றம் சாட்டுகின்றார் என்பதினாலாகும். நான் குறிப்பிடும் அக்கடிதத்தினை எழுதினவர் ஒரு காலத்தில் பரிசுத்த லூயி சபையாரின் மூப்பராக இருந்தவர் என்று நான் எண்ணுகின்றேன் சபையாரால் அவர் பிற்பாடு தேர்ந்தெடுக்கப்படாததால், சபையார் “பாபிலோன் போன்றாகிவிட்டனர் என்று கூறி, அவர்கள் ஐக்கியத்தினின்று ஒதுங்கிக் கொண்டவராவார். நான் குறிப்பிடும் அக்கடிதத்தில், அவர் பழைய வாட்ச் டவர் வெளியீட்டின் ஒரு பகுதியினைத் தெரிவிக்கின்றார்; அப்பகுதியானது, மூப்பர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான அவசியம் இல்லை என்பதாகத் தாங்கள் அக்காலத்தில் கருதியுள்ளதாகத் தெரிகின்றது. பிற்பாடு அவர் – மூப்பர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தங்களது பரிந்துரை மற்றும் மூப்பர்களுக்குரிய வேதவாக்கியங்களின் அடிப்படையிலான தகுதிகள் தொடர்பான கருத்துக்களைத் தெரிவிக்கும் தங்களது வார்த்தைகள் இடம்பெற்றுள்ள சமீபக்கால வாட்ச் டவர் மற்றும் மில்லேனியேல் டாண், தொகுதி VI -ஆம் வெளியீடுகளிலிருந்தும் – அக்கடிதத்தில் மேற்கோளிட்டுள்ளார்

என்னுடைய கேள்வி என்னவெனில்: இது உண்மைதானா? இவ்விஷயம் குறித்த தங்களது கண்ணோட்டத்தினைத் தாங்கள் மாற்றிக்கொண்டுள்ளீர்களா மற்றும் மாற்றிக்கொண்டுள்ளீர்களானால், ஏன் என்று நான் அறிந்துகொள்ளலாமா?

பதில்: முதலாவதாக நான் தவறிழைக்காத் தன்மையுள்ளவன் என்று ஒருபோதும் உரிமைபாராட்டிக்கொள்ளவில்லை என்பதை உங்களுக்கு உறுதிப்படுத்துகின்றேன். கர்த்தருடைய கிருபையினால், நான் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைவதற்கு முன்பாக, தவறிழைக்காத் தன்மையுள்ளவனாய் இருந்திட என்னால் எதிர்ப்பார்த்திட முடியாது; முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பிற்பாடே நிறைவானது வரும்போது, குறைவானது ஒழிந்துபோம்; நாம் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்வோம்; மற்றும் பார்க்கப்பட்டிருக்கிறபடியே பார்ப்போம்.

எந்தத் தப்பறையும் இல்லாதபடிக்குக் கர்த்தரினால் மேற்பார்வையிடப் பட்டுள்ளதான பன்னிரண்டு அப்போஸ்தலர்களுடைய எழுத்துக்களை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். நீங்கள் பூமியிலே எவற்றைக் கட்டுகின்றீர்களோ, அது பரலோகத்திலும் கட்டப்பட்டதாக அங்கீகரிக்கப்படும் என்றும், நீங்கள் பூமியிலே எவற்றைக் கட்டவிழ்கின்றீர்களோ, அது பரலோகத்திலும் கட்டவிழ்கப்பட்டதாக அங்கீகரிக்கப்படும் என்றும் எழுதினவர்களாகிய அப்போஸ்தலர்களைக் குறித்துக் கர்த்தர் கூறியிருக்கின்றார். ஆகையால் பரிசுத்த ஆவி வழங்கப்பட்ட காலப்பகுதியில் கர்த்தருடைய விசேஷித்த பிரதிநிதிகளாக இருக்கும்படிக்கு, அவரால் திட்டமிடப்பட்டதான அந்தப் பன்னிரண்டு மனிதர்களால் முன்வைக்கப்பட்ட காரியங்களானது, தவறற்றவையாக, உண்மையானவையாக, பிழையற்றதாக நாம் கருதிடலாம். ஆனால் அந்தப் பன்னிரண்டு பேரும் தேவவல்லமையினால் அற்புதகரமாகத் தாங்கப்பட்டது போன்று, அப்போஸ்தலர்கள் அல்லாத வேறு எவரும், தாங்கப்பட்டதாகவோ அல்லது வேதவாக்கியங்களுக்கு மேலாக மற்றவர்களுடைய வார்த்தைகளையும், எழுத்துக்களையும் நாம் கருதும்படியாக தேவவார்த்தைகள் நமக்கு அதிகாரமளிக்கின்றது என்றோ நம்பிடுவதற்கு நமக்கு எந்த ஆதாரமும் இல்லை. இதையே நாம் எப்போதும் முன்வைத்து வருகின்றோம். நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்று தேவன் தம்முடைய வார்த்தைகளைக் கொடுத்துள்ள பிரகாரமாகவே, தேவவார்த்தைகளை உண்மையாய் முன்வைப்பதே நம்முடைய பிரயாசமாக இருந்துவருகின்றது – நம்முடைய ஆண்டவருக்கே நாம் நிற்போம் அல்லது சாய்வோம். கர்த்தருடைய ஆவியினால் வழிநடத்தப்பட்டு, இப்பொழுது தற்கால சத்தியத்தினுடைய வெளிச்சத்தில் நடந்துகொண்டிருக்கும் கர்த்தருடைய அருமையான ஜனங்களுடைய அங்கீகரிப்பை, நம்முடைய வழிமுறையானது பெற்றிருக்கின்றதென நாம் விசுவாசிக்கின்றோம்.

நமது கண்ணோட்டம் வேறுபட்டுள்ளது

நாங்கள் அறிவில் வளர்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதையும், கர்த்தருடைய ஜனங்கள் அடங்கிய பல்வேறு சிறு கூடுகைகளில் மூப்பர்கள் அல்லது வழிநடத்துபவர்கள் பற்றின கர்த்தருடைய சித்தத்தினைக் கொஞ்சம் வேறுபட்ட வெளிச்சத்தில் இப்பொழுது பார்க்கின்றோம் என்பதையும் நாங்கள் மறுக்கவில்லை. ஆரம்பக்காலங்களில் சத்தியத்திற்குள்ளாக வந்து, அந்தந்தச் சிறு கூட்டத்திற்குத் தானாக வழிநடத்துபவர்களானவர்களிடத்தில் நாம் அதிகமாக எதிர்ப்பார்த்ததே நம்முடைய கணிப்பில் உள்ள தவறாய் இருந்தது. இத்தகையவர்களிடத்திலுள்ள சத்திய அறிவானது, அவர்களிடத்தில் தாழ்மைகொள்ளச் செய்வதற்கு ஏதுவான தாக்கத்தினை ஏற்படுத்தி, தங்களுக்கு எந்தச் சிறப்பும் இல்லை என்பதை உணரச் செய்திடும் என்பதும் மற்றும் தேவனுடைய வாய்க் கருவிகளாகத்தான் மற்றும் அவரால் பயன்படுத்தப்படுவதினாலும்தான் தாங்கள் அறிய அருளப்பெற்றிருக்கும் எதையும், மற்றவர்களுக்கு முன்வைத்திட முடிகிறவர்களாய் இருக்கின்றார்கள் என்பதை உணரச்செய்திடும் என்பதும், இத்தகையவர்களைக் குறித்து நாம் அன்புடன் கொண்டிருந்த உயர்வான கண்ணோட்டமாய் இருந்தது. இத்தகையவர்கள் எல்லாவிதத்திலும் மந்தைக்கு மாதிரியாய் இருப்பார்கள் என்பது நம்முடைய உயர்வான நம்பிக்கையாய் இருந்தது; இன்னுமாகக் கர்த்தருடைய வழிநடத்துதலின் பேரில் இத்தகையவர்களைப் போன்று, சத்தியத்தினை முன்வைத்திடுவதற்குச் சமமான திறமையுள்ள அல்லது அதிகமான திறமையுள்ள ஒருவரோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவர்களோ அந்தச் சிறு கூட்டத்திற்குள்ளாக வருகையில், அன்பின் ஆவியானது கனம்பண்ணுவதில் ஒருவருக்கொருவர் முந்திகொள்ளச் செய்திட வழிநடத்திடும் என்றும், இப்படியாகக் கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்குரிய ஊழியத்தில் பங்கெடுக்கப்பண்ண ஒருவருக்கொருவர் உதவிசெய்திடவும், ஊக்குவித்திடவும் வழி நடத்திடும் என்றும் இத்தகையவர்கள் குறித்து நம்முடைய உயர்வான எதிர்ப்பார்ப்புக் காணப்பட்டது.

இக்கருத்துக்களை மனதில் கொண்டவர்களாகவும், இப்பொழுது ஏற்ற காலத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதும் மற்றும் கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்களினால் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதுமான பெரியளவிலான கிருபைகள் மற்றும் சத்தியங்களின் காரணமாகவும் – ஆதிதிருச்சபையாருக்கு அப்போஸ்தலர்களினால் திட்டமிடப்பட்டு விவரிக்கப்பட்டுள்ளதான வழி முறையினை, இப்பொழுது கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்கள் பின்பற்ற அவசியமிராது என்று நாங்கள் அப்போது முடிவெடுத்தோம். தெய்வீக மேற்பார்வையின் கீழ் அப்போஸ்தலர்களினால் திட்டமிடப்பட்டுள்ளதான ஏற்பாடுகளானது, மற்றவர்களால் திட்டமிடப்படும் எந்த ஏற்பாட்டைக் காட்டிலும் மேம்பட்டது என்பதையும் மற்றும் உயிர்த்தெழுதலில் நாம் மறுரூபமடைவதினால் நாம் அனைவரும் முழுமையும், பூரணமும் அடைந்து, ஆண்டவரோடு நேரடியான தொடர்புக்குள் வரும் அந்த உயிர்த்தெழுதலுக்கு முன்புவரை, முழுச்சபைக்குமே அப்போஸ்தலர்களினால் நிறுவப்பட்டதான ஒழுங்குமுறைகள் அவசியமாய் இருக்கும் என்பதையும் உணர்ந்துகொள்ள தவறிப்போனதிலேயே எங்கள் தவறு காணப்படுகின்றது.

அருமையான சகோதரர்கள் மத்தியில் கொஞ்சம் போட்டிமனப்பான்மைக் காணப்படுவதைக் கண்டபோது மற்றும் அநேகரிடத்தில் கூடுகைகளில் மூப்பர்த்துவத்தினை ஊழியமாகப் பார்த்திடுவதற்குப் பதிலாக பதவியென அடைந்திடுவதற்கான ஆசைக் காணப்படுவதைக் கண்டபோது மற்றும் தங்களைப் போன்று சமமான திறமையுடையவர்களாகவும், சமமான சத்திய அறிவுடையவர்களாகவும், ஆவியின் பட்டயத்தினைக் கையாளுவதற்குத் திறமையுள்ளவர்களாகவும் காணப்படும் மற்றச் சகோதரர்கள் வழிநடத்துபவர்களாக வருவதிலிருந்தும் மற்றும் வளருவதிலிருந்தும் தடைப்பண்ணுவதைக் கண்டபோது – எங்களுடைய தவறு எங்களுக்குப் புரியவந்தது. தேவனுடைய ஜனங்களை இறுமாப்பாய் ஆண்டிட ஒரு சகோதரன் விரும்புகிறாரெனில் – தான் ஏதோ தவறிழைக்காத தன்மையுடையவர் போன்றும், சகோதர சகோதரிகள் ஏதோ தரம் குறைந்தவர்கள் போன்றும் எண்ணி, சபையை நடத்திட அச்சகோதரன் விரும்புகிறாரெனில், இம்மாதிரியான சூழ்நிலையில் என்ன செய்யப்பட வேண்டும் என்று விசாரிக்கும் அன்புடன்கூடிய கேள்விகள் எனக்குக் கர்த்தருடைய ஜனங்களுள்ள பல்வேறு சிறுசிறு கூடுகைகளிலிருந்து வந்தது. நாங்கள் அனைவருக்கும் நிதானத்தை அறிவுறுத்தினோம்; விசேஷமாகப் போதிக்கும் திறமையில் சிறந்த நிலை என்பது விசேஷமாய் அபாயகரமானது எனும் அப்போஸ்தலனின் வார்த்தைகளை நண்பர்களுக்கு நினைப்பூட்டி, குற்றம் சாட்டப்பட்டுள்ள சகோதரன் இரக்கத்துடன் நியாயம் தீர்க்கப்பட வேண்டும் என்றும், இப்படியான சகோதரனை அவர்கள் சீர்ப்படுத்துகையில், அவ்விஷயத்தில் தங்களுக்கிருக்கும் அபாயங்களையும், சொந்த பெலவீனங்களையும் நினைவில்கொண்டிருக்க வேண்டும் என்றும், அறிவுறுத்தினோம். மேலும் திவ்விய ஒழுங்கிலும்சரி, பகுத்தறிவின்படியான ஒழுங்கிலும் சரி அர்ப்பணிக்கப்பட்டவர்களின் முழுச்சபையாரும், தங்களுக்கான வழிநடத்துபவர் தொடர்புடைய கர்த்தருடைய சித்தத்தினை [R3745 : page 91] நாடிட வேண்டும் மற்றும் தீர்மானித்திட வேண்டும் என்றும், சபை செய்ய வேண்டிய இக்காரியத்தினை அவர்களிடமிருந்து பறித்திடுவதற்கும், ஊழியத்திற்கென்றுள்ள கர்த்தருடைய தேர்வாக, தான் ஒருவன் மாத்திரமே காணப்படுவதாக, சபையாருக்கெனத் தீர்மானிப்பதற்கும், எந்த மனுஷனையும் அனுமதித்திடக் கூடாது என்றும் நாங்கள் அவர்களுக்கு உறுதியாகக் கூறினோம்.

சுயநாட்டத்தின் ஆவி மற்றும் பெரியவராய் இருப்பதற்கான ஆசையையும் வெளிப்படுத்தும் ஒருவர் அந்த ஊழியத்திற்குப் பொருத்தமற்றவராய் இருக்கின்றார் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது என்றும், வழிநடத்துபவராக “இறுமாப்புள்ள ஒருவர் தொடர்வது என்பது, சபையாருக்குப் பாதகமாய் இருப்பது மாத்திரமல்லாமல், வழிநடத்தும் அவருக்கும் பாதகமாய் இருக்கும், காரணம் தேவன் பெருமை உள்ளவர்களையும், சுயநாட்டம் உடையவர்களையும் எதிர்க்கின்றார் மற்றும் தாழ்மையுள்ளவர்களுக்குத் தம்முடைய கிருபைகளை அருளுகின்றார் என்ற வேதவாக்கிய வாக்குத்தத்தத்தை நாம் பெற்றிருக்கின்றோம் என்றும் நாங்கள் அறிவுரை வழங்கினோம். புதிய மனதிற்கு இசைவான புதிய சரீரத்தின் பூரணமானது, மாம்சத்தினுடைய தற்போதைய அபூரணத்தினுடைய இடத்தினை முழுமையாய் எடுத்துக்கொள்ளும் காலமாகிய – “ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள் – என்பதே அப்போஸ்தலனுடைய புத்திமதியாய் இருக்கின்றது (1 பேதுரு 5:6).

நீங்கள் பரிசுத்த லூயிசிலுள்ள சபையாரைக் குறிப்பிட்டிருக்கின்றீர்கள் மற்றும் அந்தச் சிறு கூட்டத்தாருக்கு வழிநடத்துபவர் நிமித்தம் சிரமம் இருந்தது மற்றும் அநேகமாக உங்களால் குறிப்பிடப்படும் அக்கடிதத்தினை எழுதினவருடன்தான் இருந்தது என்பது எனக்கு நினைவில் இருக்கின்றது. அவர் சபையின் காரியங்கள் அனைத்தையும் நிர்வகிப்பதற்கு அனுமதிக்கப்படாததன் காரணமாக, முழுச்சபையாரிடத்திலும் கோபம் அடைந்தார். தேவன் தன்னை அந்த ஸ்தானத்திற்கு நியமித்ததை அவர் அறிந்துள்ளதாகவும், இவ்விஷயத்தில் தனக்கு ஆதரவு வழங்குவதைத் தவிர, சபையார் வேறு எதுவும் செய்யக்கூடாது என்றும், தனக்கு ஆதரவு வழங்குகையில், சபையார் கர்த்தரையும், கர்த்தருடைய சித்தத்தையும் ஆதரிப்பவர்களாய் இருப்பார்கள் என்றும் வலியுறுத்தி, அவர் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். அவர் தான் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என்றும், தனக்கு வாக்குகள் அளிக்கப்படக் கூடாது என்றும், மாறாக தான் தெய்வீக நியமனமானவராக, சபையாரால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதை நான் சபையாருக்கு வலியுறுத்திட விரும்பிட்டார்.

நான் பொறுமை காத்து, என்னால் முடிந்தமட்டுமான கனிவான விதத்தில், நம்முடைய சொந்த நடக்கை தொடர்புடையதான கர்த்தருடைய சத்தம் என்னவென்று, நம்முடைய மனங்களில், வேத வாக்கியங்களினுடைய உதவியின் மூலம் ஆராயப்பட வேண்டும் என்றும், சபை தொடர்புடையதான கர்த்தருடைய சத்தம் என்னவென்று, அர்ப்பணிக்கப்பட்ட அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்றமட்டும் தேவவார்த்தையினின்று அடையப்பெற்றதான ஆவியின் மனதினை வெளிப்படுத்த நாடுவதினால் – இவர்கள் யாவருடைய மன உணர்வுகளின்/கருத்துகளின் வெளிப்படுத்தல் வாயிலாக ஆராயப்பட வேண்டும் என்றும், அவருக்குச் சுட்டிக்காட்டினேன்.

அச்சகோதரனுடைய தெய்வீக நியமனத்தினை நான் அங்கீகரியாததால், அவர் மனம் புண்பட்டது மற்றும் பலவருடத்திற்குப் பிற்பாடு அந்த மனக்கசப்பானது இப்பொழுது, நீங்கள் குறிப்பிடும் கடிதத்தின் வாயிலாக வெளிப்படுகின்றது என்று எண்ணுகின்றேன்; இக்கடிதத்தின் நகல்களானது உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது போன்று, மற்றவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்பதை நான் அறிவேன்.

இந்த உண்மைகள் மற்றும் அனுபவங்களானது, “பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்துதலாகிய அப்போஸ்தல முறைமையின் ஞானத்தினை என் மனதிற்கு நிரூபித்தது மாத்திரமல்லாமல், இம்முறைமையின் அவசியத்தினையும் என் மனதிற்கு நிரூபித்ததாய் இருந்தது (தீத்து 1:5). இம்முறைமை இல்லையெனில் கர்த்தருடைய ஜனங்கள் அறிவிலும், ஆவியின் கிருபைகளிலும் நேர்த்தியாய் வளர்ச்சியடைய முடியாமல் காணப்படுவார்கள், இன்னுமாக கிறிஸ்து உண்டாக்கின சுயாதீன நிலைமையினைப் பற்றியும் மற்றும் கிறிஸ்துவினுடைய விலையேறப்பெற்ற இரத்தத்தில் விசுவாசித்து, அவருடைய ஊழியத்திற்கென முழுமையாய் அர்ப்பணம் பண்ணியுள்ள அனைவரும் சமமாய்ச் சகோதரர்களாக, ஒரே வகுப்பினராக, ஒரே கூட்டத்தாராக, ஒரே சரீரமாக இருப்பது பற்றியுமுள்ள முழுமையான உணர்ந்து கொள்ளுதலுக்குள்ளாக வரமுடியாமல் காணப்படுவார்கள்.

இக்கேள்வி தொடர்புடைய விஷயத்தில் நான் ஆரம்பத்தில் கொண்டிருந்த நிலைப்பாட்டைக் குறித்தோ அல்லது இப்பொழுது நான் கொண்டிருக்கும் நிலைப்பாட்டைக் குறித்தோ நான் வெட்கமடையவில்லை. நான் முழுச் சூழ்நிலையினையையும் கிரகித்துக் கொள்ளாததற்காகவும், ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்ட பிற்பாடும், பரத்திற்குரியவைகளை நாடின பிற்பாடும், பரத்திலிருந்து வரும் ஞானத்தினால் நடத்தப்படுவதற்கு முயற்சித்தப் பிற்பாடும், நண்பர்களுடைய மாம்சத்தில் இன்னமும் காணப்படுகின்றதான சுயநலம் மற்றும் பேராசைகளைக் குறித்துக் கவனத்தில் எடுத்துக்கொள்வதற்கு நான் தவறிவிட்டதற்காகவும் நான் ஆச்சரியப்படவில்லை.

தற்காலத்தில் கர்த்தருடைய வாய்க்கருவிகளாகக் காணப்படும் யாரையாவது அல்லது என்னை, இந்த யுகத்தினுடைய துவக்கத்தில் கர்த்தரினால் அற்புதகரமாக வழிநடத்தப்பட்டதான விசேஷித்த அந்தப் பன்னிரண்டு வாய்க் கருவிகளுடன் நான் ஒப்புமை பண்ணிடாமல், [R3746 : page 91] அக்காலத்தில் பிரதானமாய்க் காணப்பட்டவர்களில் சிலருக்குக்கூட, பல்வேறு காரியங்களில் ஆவியின் மனநிலையை உணர்ந்துகொள்வது அவசியமாய் இருந்தது என்ற உண்மையினைக் கவனத்திற்குக் கொண்டுவர பிரயாசம் எடுக்கின்றேன்; உதாரணத்திற்கு: யூதர்களுக்கும், புறஜாதிகளுக்கும் இடையே தடையாக இருந்த நடுச்சுவர் உடைந்து விட்டது என்றும், இதனால் இந்தச் சுவிசேஷயுகத்தினுடைய நிபந்தனைகளின் கீழ் இப்பொழுது கர்த்தருடைய தயவுகள் விஷயத்தில், விசேஷித்த முன்னுரிமை தொடர்புடைய விஷயத்தில் யூதனென்றோ, புறஜாதியென்றோ, அடிமையென்றோ, சுயாதீனனென்றோ இல்லை என்றும் உள்ள படிப்பினைகளைக் கற்றுக் கொள்வதற்கு முன்னதாக, அப்போஸ்தலனாகிய பேதுருவுக்கு ஒரு தரிசனமும், அதைத் தொடர்ந்து அனுபவங்களும் வேண்டியிருந்தது. அக்காரியம் தொடர்பான சத்தியத்தினைப் பேதுருவுக்குக் காண்பித்திட, அவர் ஒருவகையான தரிசனத்தைப் பெற்றுக்கொண்டார்; நான் இன்னொரு வகையான தரிசனத்தைப் பெற்றுக்கொண்டேன் – அதாவது அப்போஸ்தல முறைமையினிடத்திற்கு என்னை வழிநடத்திட்ட மற்றும் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையினுடைய சரியான வளர்ச்சிக்கும், கட்டப்படுதலுக்கும், அபிவிருத்திக்கும் அந்த முறைமையானது இன்னமும் அவசியமாய் இருக்கின்றதென என்னை நம்பச் செய்திட்டதான அனுபவ பாடத்தினைக் கர்த்தருடைய ஜனங்கள் அடங்கின பல்வேறு சிறு சிறு சபையார்களிடமிருந்து பெற்றுக்கொண்டேன்.

நடைமுறையில் எம்மாற்றமும் இல்லை

வழிநடத்துபவர்கள் தங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, அந்தந்த சிறு சிறு சபையார் தங்களுக்கான வழிநடத்துபவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உண்மையானது, நாங்கள் சபை பிரிவாகிவிட்டோம், பாபிலோன் போன்றாகி விட்டோம் என்பதை நிரூபிக்கின்றதாக, அச்சகோதரனுடைய கடிதம் தெரிவிப்பதாக, நீங்கள் கூறுவதாக நான் புரிந்து கொள்கின்றேன். சத்தியத்தின் ஆவியினை இழக்கத் துவங்கியுள்ளவர்களுக்கு மற்றும் இருளுக்குள்ளாகப் போகத் துவங்கியுள்ளவர்களுக்குக் காரியங்கள் எப்படியாய்த் தோற்றமளிக்கும் என்று கூறுவது சிரமமே. உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், ஒருவர் தன்னைத் தெய்வீக நியமனத்தின்படியானவராக எண்ணுவதாகக் கூறினதற்காக மாத்திரம், அவரைச் சபையார் வழிநடத்துபவராக அங்கீகரித்திட வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை. சத்தியத்தினைப் பெற்றிருப்பவர்கள் யாவரும் ஒரே இருதயத்துடன், ஒரே மனதுடன், ஒவ்வொருவரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திடுவதற்கும் மற்றும் தங்களால் முடிந்தமட்டும் மற்றவர்களுக்கு ஊழியம் புரிந்திடுவதற்கும், மகிழத்தக்கதாய் அவர்கள் மத்தியிலுள்ள கர்த்தருடைய ஆவியானது, அவர்களை இயக்கிடும் என்பதும் மற்றும் இப்படியாகக் கர்த்தருடைய சித்தம் நிறைவேற்றப்படும் என்பதும் நம்முடைய கருத்தாய் இருந்தது. உடன் ஊழியர்களிடத்தில் நாம் அதிகம் எதிர்ப்பார்ப்புக் கொண்டிருந்ததிலும், ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பதற்குரிய அப்போஸ்தல முறைமையாகிய “கைகளை நீட்டும் முறைமையினை அல்லது இவ்விஷயம் தொடர்பான கர்த்தருடைய மனம் குறித்த அர்ப்பணிக்கப்பட்டவர்களின் கருத்தினை உறுதிப்படுத்திடுவதற்கான வேறு ஏதாகிலும் முறைமையினைப் பின்பற்றிடுவதற்கு நாம் தவறினதிலும்தான், முழுத்தவறும் காணப்படுகின்றது.

இப்போழுது அமைப்பல்ல / Organization

நாங்கள் ஒரு சபை பிரிவை / denomination அல்லது உட்பிரிவை / Sect உருவாக்கிவிட்டோமெனச் சொல்பவர்கள், உண்மையினைத் திரித்துக் கூறுபவர்களாய் இருக்கின்றனர். உட்பிரிவு / sect என்பது பிரிதலைக் குறிக்கின்றது மற்றும் நாங்கள் எதிலிருந்தும் பிரியவில்லை. தேவனுடைய ஜனங்கள் யாவரையும் கர்த்தரோடும், ஒருவரோடு ஒருவரும் இருதய உறவிற்குள்ளாகவும், ஐக்கியத்திற்குள்ளாகவும் கொண்டுவருவதற்கே நம்முடைய பிரயாசம் காணப்படுகின்றது. விலையேறப்பெற்ற இரத்தத்தினைத் தங்களுக்கான மீட்பின் கிரயம் என்று விசுவாசிப்பவர்களும் மற்றும் கர்த்தருக்கான ஊழியத்திற்கென முழுமையாய் அர்ப்பணம் பண்ணியுள்ளதாக அறிக்கைப் பண்ணுகிறவர்களும் மற்றும் இதற்குச் சாட்சி பகிர்கின்றவர்களுமானவர்கள் யாவரையும் நாம் சகோதரர்களென ஏற்றுக்கொள்கின்றோம். இவ்விஷயங்களில் இசைவாய்க் காணப்படுபவரை – ஆனால் இவையல்லாதவைகளிலும், குறைவான முக்கியத்துவம் உள்ள பாடங்களிலும் அவரது கருத்துகள் என்னவாக இருப்பினும், அவரைக் கிறிஸ்தவ ஐக்கியத்தினின்று நாம் புறந்தள்ளுவதில்லை.

நாம் ஒரு சபை பிரிவினர் / denomination அல்ல; ஏனெனில் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை அல்லாமல், வேறெந்த நாமத்தையும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. நாங்கள் கிறிஸ்தவர்கள். நாங்கள் வேத வாக்கியங்களில் சபைக்குக் கொடுக்கப்பட்டுள்ளதான அனைத்து நாமங்களையும் ஏற்றுக் கொள்கின்றோம், எனினும் இவைகளில் ஒன்றையாகிலும் கிறிஸ்தவ சபை பிரிவுகளிலுள்ள நம்முடைய நண்பர்கள் சூட்டிக்கொள்வது போன்று, வேறுபடுத்திக் காண்பிக்கும் நாமமாக நாம் பயன்படுத்துகிறதில்லை. ஒவ்வொரு தனிநபரும், கர்த்தரோடுகூடத் தனது உறவினைக் கொண்டிருக்கின்றான் மற்றும் கர்த்தரோடு உறவு பெற்றிருப்பதின் காரணமாக, இப்படியாகக் கர்த்தரோடு உறவு பெற்றிருக்கும் யாவரோடும் உறவு பெற்றிருப்பான்; ஏனெனில் கிறிஸ்துவின் சபை ஒன்றாய் இருக்கின்றது. கர்த்தரோடுள்ள இந்த நம்முடைய ஒன்றிணைதலானது, வேத வாக்கியங்களின் படியான ஒன்றிணைதலாகும் மற்றும் இது ஒன்று மாத்திரமே உள்ளது; மற்றும் நாங்கள் அறிந்திருக்கிறவரைக் கர்த்தருடைய ஜனங்கள் அடங்கின வேறெந்த கூட்டத்தாரும் இந்த ஒரு நிலைக்கு முழுமையாய் வந்ததாக [R3746 : page 92] இல்லை. கர்த்தருடைய கிருபையினால், இந்த ஓர் உறவு நிலையில், அவர் “நல்லது! என்று கூறி, நம்மைத் தம்முடைய மகிமையான இராஜ்யத்திற்குள்ளாக ஏற்றுக்கொள்வது வரையிலும் நிற்போமென நாம் நம்புகின்றோம்.

பாபிலோன் என்ற வார்த்தை

“பாபிலோன் என்ற வார்த்தையின் அர்த்தமாவது, நாம் அடிக்கடி சுட்டிக்காண்பிப்பது போன்று, குழப்பத்தினைக் குறிக்கின்றதாய் இருக்கும். ஒழுங்குமுறைச் சார்ந்த விஷயத்தில் குழப்பம் இல்லை ஏனெனில் பாபிலோனின் பல்வேறு பகுதிகளானது, அதன் பல்வேறு சபை பிரிவுகளானது, எந்தக் குழப்பமும் அனுமதிக்கப்படாத அளவுக்கு மிகவும் வரம்புள்ள ஒழுங்குமுறைகளை உடையதாய் இருக்கின்றது. பாபிலோனின் குழப்பமானது, அவளது உபதேசங்களில் காணப்படுகின்றது; அவை வேதவாக்கியங்களின் அடிப்படையில் இல்லாதவைகளாகவும், குழப்பமானவைகளாகவும், முரண்பாடானவைகளாகவும், பெரும்பான்மையானவைகள் தவறானவைகளாகவும் காணப்படுகின்றது. உங்களால் குறிப்பிடப்பட்டுள்ளதான கடிதத்தினை எழுதின சகோதரன், பாபிலோனின் நிலைக்குள்ளாகும் அபாயத்தில் காணப்படுபவராகக் காணப்படுகின்றார் என்று நாம் அஞ்சுகின்றோம் – மூப்பர்கள் சார்புடைய அவரது கருத்துக்களானது முழுவதும் குழப்பமானவைகளாகக் காணப்படுகின்றது என்பது உறுதி. தானும், மற்ற மூப்பர்களும் எந்த மனித நியமனத்தின் பேரில் இல்லாமல், மாறாக திவ்விய நியமனத் தின் பேரில் சபையை ஆண்டிட வேண்டும் என்று அவர் வலியுறுத்துகையில், பாபிலோன் என்று நாம் எண்ணுகின்றதான ரோமின் போப் செய்வதைக் காட்டிலும் மிகவும் மிஞ்சி செயல்படும் நிலைக்குள்ளாகுகின்றார்; ஏனெனில் ரோமின் போப் கூடத் தகாதவிதமாய்க் கைப்பற்றுவதன் மூலம் இந்த, தன் ஸ்தானத்தை அடைந்திடாமல், மாறாக Cardinal / கார்டினல்களினால் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.