ஓர் உருவகக் கதை

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R1159 (Page 6)

ஓர் உருவகக் கதை

AN ALLEGORY

என்னுடைய வேலையினுடைய களைப்பில்,நான் நாற்காலியில் அமர்ந்திருந்தேன்; என்னுடைய உழைப்பானது, கடுமையாகவும், நீண்டகால உழைப்பாயும் இருந்தது. சபை முன்னேற்றத்துடனும், வளமையுடனும் இயங்கிவந்தது; எப்பக்கத்திலிருந்தும் மகிழ்ச்சியும், நம்பிக்கையூட்டுதலும், தைரியப்படுத்துதலுமே காணப்பட்டது. என்னைப் பொறுத்தவரையில், நான் என்னுடைய வேலையில் மகிழ்ச்சியாய் இருந்தேன்; என்னுடைய சகோதர சகோதரிகள் அனைவரும் ஒற்றுமையுடன் காணப்பட்டனர்; என்னுடைய பிரசங்கமும், புத்திமதிகளும், எனக்குச் செவிகொடுத்தவர்கள் மத்தியில் நல்லப் பலனைக்கொடுத்தது; என்னுடைய சபையில் ஜனங்கள் குவிந்து காணப்பட்டனர்; என்னுடைய சபையார் அனைவரும் ஏறக்குறைய எழுப்புதல் உடையவர்களாகவே காணப்பட்டனர்; ஆகவே வேலை இப்படியாக நன்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. சபையின் முன்னேற்றத்திற்காக நான் என்னுடைய சக்தி முழுவதும் பயன்படுத்தப்படும் அளவுக்கு உழைப்பவரானேன்.

என்னுடைய வேலைகளைப்பினால், நான் கொஞ்சம் அரைத் தூக்கம் போன்ற நிலைக்குள் கடந்து போய்விட்டேன், ஆனாலும் நான் இருந்த இடமும், என்னைச் சுற்றியிருந்த அறையின் விஷயங்களும் எனக்குத் தெளிவாகவே தெரிந்தது. கதவைத் தட்டாமல் அல்லது நான் உள்ளே வாருங்கள் என்று சொல்லாமலேயே ஓர் அந்நியர் அறைக்குள் வந்தார். அந்த அந்நியருடைய முகத்தில் நான் அன்பையும், அறிவுத்திறனையும், நற்பண்புகளையும் பார்த்தேன்; ஆனால் அந்த அந்நியர் நல்ல ஆடை அணிந்தவராகவும், சுமாரானவராகவும் இருந்தாலுங்கூட, அவர் அளவுகோல்களையும், இரசாயனப் பொருள்களையும், கருவிகளையும் தூக்கிக்கொண்டு வந்தது, மிகவும் விநோதமாய் இருந்தது.

அந்த அந்நியர் என்னிடத்திற்கு வந்து, தனது கையை நீட்டி, “உம்முடைய பக்திவைராக்கியம் எப்படி இருக்கின்றது?” என்று கேட்டார்.

அவர் பேச ஆரம்பித்தபோது, அவர் ஏதோ என் ஆரோக்கியத்தைக் குறித்துக் கேட்கப் போகிறார் போலும் என்று எண்ணினேன்; ஆனால், அவர் பக்திவைராக்கியம் குறித்துக் கேள்விக் கேட்டது எனக்குச் சந்தோஷமாய் இருந்தது; ஏனெனில் என்னுடைய பக்திவைராக்கியத்தினுடைய விஷயத்தில் எனக்கு நன்கு திருப்தியிருந்தது மற்றும் வந்துள்ள அந்நியர் என்னுடைய பக்திவைராக்கியத்தின் அளவை அறியும்போது புன்னகைப்பார் என்று நான் உறுதியாயிருந்தேன். தானாகவே பக்திவைராக்கியத்தை நான் ஒரு திடப்பொருளாக மாற்றிக்கொண்டு, பக்திவைராக்கியத்தை வெளியே எடுத்து, அந்த அந்நியர் சோதனை செய்யத்தக்கதாகக் கொடுத்தேன்.

அவர் அதை வாங்கிக்கொண்டு, தனது தராசில் வைத்து, கவனமாய் எடைப்பார்த்தார். “நூறு பவுண்ட்ஸ்” என்று அவர் கூறுவதை நான் கேட்டேன்.

நான் திருப்தியடைந்துள்ளதை வெளிப்படுத்தும் சத்தத்தை என்னால் வெளிக்காட்டாமல் அடக்கி வைக்க முடியவில்லை ஆனால் அவர் எடையைக் குறித்துக்கொண்டபோது, அவரது பார்வையைக் கவனித்தேன் மற்றும் அவர் இன்னமும் இறுதி முடிவிற்கு வரவில்லை என்பதையும், அவர் இன்னமும் தமது சோதனையைத் தொடரவிருக்கின்றார் என்பதையும் உடனடியாய்க் கண்டுகொண்டேன்.

அவர் அந்தத் திடப்பொருளை (பக்திவைராக்கியத்தை) மிகச்சிறு அணுக்களாக உடைத்து, அவைகளைத் தமது மட்பாத்திரத்தில் போட்டு, பின் பாத்திரத்தை நெருப்பின் மீது வைத்தார். திடப்பொருளின் அணுக்களானது முழுமையாக உருகினபோது, அவர் அதை நெருப்பிலிருந்து எடுத்து, குளிரும்படி விட்டார். அது குளிர்ந்தபோது உறைந்து போனது மற்றும் அது அடுப்பங் கரையினிடத்திற்குக் கொண்டு வரப்பட்டப்போது, அது பார்ப்பதற்கு வரிசை வரிசையான அடுக்குகளை உடையதாகக் காட்சியளித்தது; அது சுத்தியலினால் அடிக்கப்பட்டப்போது, உடைந்தது மற்றும் அவைகள் கடுமையாய்ப் பரிசோதனை செய்யப்பட்டன மற்றும் எடைப் பார்க்கப்பட்டன் இவைகள் நடைபெறுகையில் அந்த நபர் குறிப்புகளையும் குறித்துக்கொண்டார்.

அவர் அனைத்தையும் முடித்த பிற்பாடு, பதிவு செய்திட்டக் குறியீடுகளை என்னிடம் கொடுத்து, கவலையும், அனுதாபமும் கலந்த ஒரு பார்வையுடன; “தேவன் உன்னைக் காப்பாற்றுவாராக!” என்று மட்டும் கூறி, அறையைவிட்டு வெளியேறினார்.

நான் குறியீடுகளுள்ள காகிதத்தைத் திறந்து வாசித்தேன்; அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது:

“ஜீவகிரீடத்தைப் பெற்றுக்கொள்வதற்கு விரும்பும் ஜீனியஸ் அவர்களின் பக்திவைராக்கியத்தினுடைய பாகங்கள் பற்றின ஆய்வு: அதன் மொத்த எடை 100 பவுண்ட்ஸ் ஆகும்; அதன் பாகங்கள் பற்றின ஆய்வின்படி, 100 பவுண்ட்ஸ் பக்திவைராக்கியத்தில்….

 10 – பாகங்கள் – மதவெறி / குருட்டுத்தனமான பிடிவாதம்
 23 – பாகங்கள் – தனிப்பட்டக் குறிக்கோள்கள்
 14 – பாகங்கள் – தாலந்துகள் குறித்த பெருமை
 19 – பாகங்கள் – புகழ், பாராட்டிற்கான ஆசை
 15 – பாகங்கள் – சபை பிரிவு குறித்த பெருமை
 12 – பாகங்கள் – அதிகாரத்தின் மீதான ஆசை
 4 – பாகங்கள் – தேவன் மீதான அன்பு
 3 – பாகங்கள் – மனிதன் மீதான அன்பு

அந்த அந்நியருடைய விநோதமான நடந்துகொள்ளுதலினாலும், அதிலும் குறிப்பாக அவர் அறையைவிட்டு வெளியேறும்போது கொண்டிருந்த பார்வையும், கூறிச்சென்ற வார்த்தைகளும் என்னைக் கலக்கத்தில் ஆழ்த்தினது; ஆனால் அவர் காகிதத்தில் குறித்துத் தந்திருந்த எண்ணங்களைப் பார்த்தபோது, என்னுடைய இருதயமானது, எனக்குள்ளாக நலிந்துபோனது. ஒருவேளை பதிவு செய்யப்பட்டிருப்பவைகள் சரியாக இருக்குமோவென எதிர்த்து யோசித்திட முயன்றேன்; ஆனால் வெளியேறின அந்த அந்நியர் முகப்பு அறையை (hall) தாண்டிடும்போது, வருத்தத்தால் முனங்கின சத்தத்தினால் நான் திடீரென நேர்மையான உணர்வின் நிலைக்குக்கொண்டுவரப்பட்டேன்; மேலும் திடீரென ஓர் இருள் என்னை மூடிக்கொண்டபோது, என் கையில் இருந்த பதிவுகளின் குறிப்பானது, உடனடியாக மங்கலானது மற்றும் படிக்க முடியாத அளவுக்குத் தெளிவில்லாததாகியது,

“கர்த்தாவே என்னைக் காப்பாற்றும்/இரட்சியும்!” என்று நான் திடீரெனக் கதறினவனானேன்.

காகிதத்தை என்னுடைய கையில்கொண்டவனாகவும், அதன்மேல் என் கண்களைப் பதிய வைத்தவனாகவும், நான் முழங்காற்படியிட்டிருந்தேன். உடனே அந்தக் காகிதம், “ஒரு கண்ணாடியாக மாறினது மற்றும் அதில் நான் என் இருதயத்தைப் பார்க்க முடிந்தது. பதிவு செய்யப்பட்டிருந்தவைகள் உண்மையே! நான் அதைப் பார்த்தேன்; நான் அதை உணர்ந்தேன்; நான் அவைகளை ஒப்புக்கொண்டேன்; அவைகளுக்காக வருத்தப்பட்டேன்; மேலும் என்னிடமிருந்தே என்னைக் காப்பாற்றும்படிக்கு, மிகுந்த கண்ணீர்களோடு நான் தேவனை நாடினேன். பொறுக்கமுடியாத வேதனையினால், அடக்கிக்கொள்ள முடியாத பலத்த அழுகையின் சத்தத்தோடு விழித்தேன்.

— தெரிந்துகொள்ளப்பட்டவை.

தேவனுடைய அர்ப்பணம்பண்ணப்பட்ட பரிசுத்தவான்கள் அனைவரும் அவரது ஸ்தானாபதிகளாகக் காணப்படுகின்றபடியால், இந்த உருவகக் கதையானது அனைவருக்கும் பிரயோஜனமாக இருக்கும். தேவன் மீதான அன்பும், நம்முடைய சக மனுஷர்கள் மீதான அன்பும் மாத்திரமே உண்மையான பக்திவைராக்கியத்தினுடைய அம்சங்களாக/பாகங்களாகக் கதையில் இடம்பெறும் ஆய்வில் காணப்படுகின்றது. கதையின் ஆய்வில் வரும் மற்றப்பாகங்களானது, தேவனுடைய பார்வையில் வெறுக்கத்தக்க கழிவுகளாகக் காணப்படுகின்றது மற்றும் நாமும் கணிக்கும் விஷயத்தில் தேவனுடைய கண்ணோட்டத்தைக் கொண்டிருப்போமானால், நமக்கும் அந்த மற்றப் பாகங்களானது, வெறுக்கத்தக்கக் கழிவுகளாகவே காணப்படும். தேவனுடைய அங்கீகரிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு விரும்பிடும் ஒவ்வொரு ஊழியக்காரனும், தன்னுடைய சொந்த இருதயத்தைப் பரிசோதித்து, தன் சொந்த பக்திவைராக்கியத்தையும், தன் சொந்த நோக்கங்களையும் ஆராய்ந்து பார்ப்பானாக.