நாட்கள் பொல்லாதவைகளானதால்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R3593

நாட்கள் பொல்லாதவைகளானதால்

Because The Days Are Evil

“ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்து கொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். – (எபேசியர் 5:15,16)

இவ்வசனத்தில் இடம்பெறும் “கவனமாய் என்ற வார்த்தைக்கான ஆங்கில வார்த்தை “Circumspect, Circum” என்ற வார்த்தையிலிருந்து வருகின்றது; இதன் அர்த்தமாவது விழிப்பாய் இருப்பதாகும். உண்மை கிறிஸ்தவனுடைய பாதை மிக நெருக்கமானதாகும்; அது சோதனைகளினாலும், படுகுழிகளினாலும், பொல்லாங்கனின் சூழ்ச்சிகளினாலும் வெகுவாய் நிறைந்துள்ளபடியினால், நமக்கு அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கான மாபெரும் ஆபத்து உள்ளது. நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிகளையும் கவனமாய்ப் பார்ப்பதோடு மாத்திரமல்லாமல், நாம் ஞானமுள்ளவர்களாயும் இருக்க வேண்டும்; அதாவது பூமியிலுள்ள நமது சக சிருஷ்டிப்புக்களைக் காட்டிலும் ஞானமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்; அதாவது பரத்திலிருந்து வருகிற பரிசுத்தமும், சமாதானமும், அன்புள்ளதுமான ஞானமுள்ளவர்களாக இருக்க வேண்டும்; எனினும் முதலாவதாக நாம் கர்த்தருக்கும், அவருடைய வார்த்தைக்கும் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

கர்த்தருடைய ஜனங்களில் அநேகர் கடந்து சென்று கொண்டிருக்கும் பாடுகள், சோதனைகள் மற்றும் உபத்திரவங்கள் குறித்து, கடிதங்கள் எங்களுக்கு வருவதால், முந்தைய காலங்களைக் காட்டிலும் அவர்களுடைய சோதனைகள் அநேகமாகவும், கடுமையாகவும் இருப்பதை நாம் உணர்கின்றோம். “கவனமாய் நடக்க” ஆவலுள்ள சோதனைக்குட்பட்டவர்களிடமிருந்து, ஜெபவிண்ணப்பங்களும், கர்த்தருடைய வழி குறித்ததான ஆலோசனை வேண்டி கடிதங்களும் வருகின்றன. நம்மால் முடிந்தமட்டும் கர்த்தரோடு நடக்கத்தக்கதாக வழிகாட்டும் விதமாக அமையும் வேதவாக்கியங்களைச் சுட்டிக்காட்டி, மகிழ்ச்சியோடு இவர்களுக்குப் பதிலளிக்கின்றோம்.

“நாட்கள் பொல்லாதவைகளானதால் , நமது எதிராளியானவன் விசேஷமாகக் கிரியை செய்வதால், தற்காலத்தில் நினைவுகூரப்படுவதற்கும், கடைபிடிக்கப்படுவதற்கும் அவசியமானதும், எல்லாக் காலக்கட்டங்களிலும் அவசியமானதும், கிறிஸ்துவின் சரீரத்தில் உள்ள ஒவ்வொரு அங்கத்திற்கும் பொருந்தக்கூடியதுமான சில பொதுவான கோட்பாடுகளை [R3593 : page 213] நாம் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றோம். யூத யுக அறுவடையின் போது காணப்பட்டது போன்று, சுவிசேஷயுக அறுவடையின் போதும் காணப்படும்; மேலும் எதிர்ப்புகள் ஜெப ஆலயங்களிலும், வேதபாரகர் மற்றும் பரிசேயரிடமிருந்து வந்ததுமல்லாமல், வீட்டிற்குள்ளாகவும் எதிர்ப்புகள் காணப்பட்டது . . . பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலும், கணவன் மனைவிக்கு இடையிலும்… கர்த்தருடைய ஜனங்கள் மத்தியிலும் ஏற்பட்டது. எதிராளியானவன் எந்த அளவுக்குப் பிரச்சனைகளை ஏற்படுத்த நாடுகின்றானோ, அவ்வளவாய் அர்ப்பணிக்கப்பட்ட ஒவ்வொருவரும் வார்த்தையிலோ, கிரியையிலோ தவறு செய்யாதபடிக்கு மிகுந்த ஜாக்கிரதையுள்ளவர்களாய் இருக்கக்கடவர்கள். நாட்கள் பொல்லாதவைகளானதால்… விசேஷித்த சோதனை மற்றும் பரீட்சையின் நாட்களாய் இருக்கிறபடியால்… கவனமாய் நடவுங்கள்.

நம்முடைய அன்றாட ஜீவியத்திற்கான சில உதவிபுரியும் கோட்பாடுகள்

நாம் பரிந்துரைக்கும் கோட்பாடுகள் பின்வருமாறு:-

1. ஒவ்வொருவனும் தன்தன் காரியத்தைக் கவனிப்பதாக மனதில் முடிவெடுப்பானாக.நாம் மற்றவருடைய காரியங்களில் தலையிடக்கூடாது என்று வேதவாக்கியங்கள் நமக்கு எச்சரிப்பூட்டுகின்றது. ஒவ்வொருவரும் வாழ்க்கையின் அனுபவங்கள் வாயிலாக இந்த அருமையான கோட்பாட்டைக் கற்றுக் கொண்டிருந்தாலும், வெகுசிலரே இக்கோட்பாட்டின்படி கவனமாய் நடக்கின்றார்கள். நம்முடைய கரங்களையும், நேரங்களையும், வாயையும் ஆக்கிரமித்துக் கொள்ளத்தக்கதாக நம்மிடத்தில் போதுமான அளவு நம் சொந்த காரியங்களும், கர்த்தருடைய ஊழியங்களும் இல்லையெனில், நம்மில் ஏதோ தவறு உள்ளது; மேலும் அது சரி செய்து கொள்ளப்படத்தக்கதாகக் கவனமாய் ஜெபிக்கவும், கவனமாய்த் தெய்வீக வார்த்தைகளால் கற்றுக்கொள்ளப்படவும் வேண்டும்.

நமது பராமரிப்பின் கீழ் இருப்பவர்களின் நலனுக்கடுத்த விஷயங்களில் கவனமற்றவர்களாக அல்லது நாம் பொறுப்பேற்றுள்ளவர்களின் விஷயத்தில் கவனமற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் இக்கோட்பாடு இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நமது பொறுப்பின் கீழ் உள்ளவர்களுக்கு நாம் சில காரியங்களைச் செய்யும்போது கூட, நாம் அவர்களின் உரிமைகளையும் மற்றும் மற்றவர்களின் உரிமைகளையும் கருத்தில் கொண்டவர்களாகவும், அதிலும் விசேஷமாக நமது உரிமைகளை நாம் மேலோங்கச் செய்யவிடாமல் கவனமாய் இருக்க வேண்டும். நம்முடைய சொந்த விஷயங்களில் நமக்கு முழுமையான நீதி கிடைக்காவிட்டாலும், மற்றவரின் விஷயத்தில் நம்முடைய கையாளுதல் நீதியாய்க் காணப்பட வேண்டும், இரக்கம் காட்டப்பட வேண்டும் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிட வேண்டாம்.

2. நாம் நம்மிடத்திலும்,நம்முடைய பெலவீனத்திலும் பொறுமையாய் இருப்பதைக்காட்டிலும், மற்றவரிடத்திலும், அவர்களுடைய குற்றங்குறைகளைக் காணும்போதும் மிகுந்த பொறுமையுடன் காணப்பட வேண்டும். விழுகையின் காரணமாக முழு உலகமும் சரீர பிரகாரமாகவும், ஒழுக்கரீதியிலும், மனரீதியிலும் ஆரோக்கியமற்றவர்கள் என்பதை நாம் நினைவுகூருகையில், அவர்களுடைய பெலவீனங்களுக்காக நாம் அனுதாபம் கொள்ளவேண்டும். கர்த்தர் தமது விலையேறப்பெற்ற இரத்தத்தின் புண்ணியத்தினால் நமது கறைகளை, கிருபையுடன் மறைக்கச் சித்தமுள்ளவராய் [R3594 : page 213] இருக்கையில், நம்மைக் காட்டிலும் மற்றவர்களுடைய பெலவீனங்கள் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தாலும் நாம் அவர்களிடத்தில் அனுதாபமும், உருக்கமான இரக்கமுமே கொள்ளவேண்டும். இக்கோட்பாடு விசேஷமாக உங்கள் குழந்தைகளுக்குப் பொருந்தும். உங்கள் பிள்ளைகளிடத்தில் காணப்படும் பெலவீனங்கள், உங்களிடத்திலிருந்து அல்லது உங்கள் வாயிலாகவே அவர்களுக்குக் கொஞ்சம் வந்துள்ளதால், அவர்களுடைய தப்பிதங்களை கையாளும் போது,நீங்கள் உங்கள் சொந்த தவறுகளை எவ்வாறு கையாளுவீர்களோ, அப்படியே அவர்களிடத்திலும் நீதியாய்க் கையாள வேண்டும்……அவர்கள் நீதியின்படி சரிசெய்யப்பட உண்மையுடனும், கண்டிப்புடனும் கையாளப்பட வேண்டும், அதேசமயம் இதை அனுதாபத்துடனும், இரக்கத்துடனும், அன்புடனும் செய்யவேண்டும்.

3. முன்கோபியாகவும், எளிதில் சினம்கொள்கிறவர்களாயும் இராதேயுங்கள்.

மற்றவர்களுடைய வார்த்தைகளையும், செயல்பாடுகளையும் இரக்கத்துடனும், பரந்த மனப்பான்மையுடனும் கண்ணோக்கம் கொள்ளுங்கள். அற்ப விஷயங்கள் அல்லது சிறு எதிர்த்தாக்குதல்கள் கண்டுகொள்ளப்படாமல் விடப்படலாம், அதாவது அன்பு மற்றும் பெருந்தன்மையின் சால்வையினால் மறைத்து மூடப்படலாம். கடுமையான குற்றங்கள் கூட, வேண்டுமென்றே செய்யப்படாததுபோல் கருதப்பட்டு, கோபத்தைத் தூண்டாதவாறு அன்பான வார்த்தைகளினால் விசாரிக்கப்பட வேண்டும், அதாவது கிருபை பொருந்தின வார்த்தைகளினால் விசாரிக்கப்பட வேண்டும். இப்படியாகக் குற்றமாகக் கருதப்பட்ட அநேக சந்தர்ப்பங்களில், குற்றம் இல்லை என்றும் நிரூபிக்கப்பட்டும் உள்ளது.

இக்கோட்பாடு, “கெட்ட சம்சயங்களில் ஈடுபட வேண்டாம் என்ற வேதவாக்கியங்களில் அடங்குகின்றது . . . மற்றவர்களுடைய வார்த்தைகள் மற்றும் கிரியைகளுக்குப் பின்னாக தவறான / பொல்லாத நோக்கங்கள் இருப்பதாக நாம் கற்பனை செய்யக்கூடாது. கெட்ட சம்சயங்கள் என்பது நமது கர்த்தருடைய வார்த்தைகளுக்கு எதிரானதாகவும், தேவபக்திக்கு எதிரானதாகவும் இருக்கின்றது என அப்போஸ்தலர் பட்டியலிடுகின்றார். கெட்ட சம்சயங்கள் என்பது பொறாமை மற்றும் சண்டையின் ஆவிக்கு ஒத்ததாக இருக்கின்றது. இது மாம்சம் மற்றும் பிசாசின் கிரியையாய் இருக்கின்றது. (1 தீமோத்தேயு 6:3-5; கலாத்தியர் 5:19-21).

ஆவியின் பிரமாணமாகிய அன்பு

இதற்கு எதிர்மறையான விஷயங்களையும் அப்போஸ்தலர் குறிப்பிட்டுள்ளார், அதாவது தேவனுடைய ஜனங்களை ஜெநிப்பித்துள்ள அன்பின் ஆவியினுடைய அம்சங்கள் குறித்தும் அப்போஸ்தலர் குறிப்பிட்டுள்ளார். இந்த அன்பின் ஆவியைக் கர்த்தருடைய ஜனங்கள் நாள்தோறும் விருத்திச் செய்ய வேண்டும். இவைகள் அவர்களுக்குள் வளருமாயின், இது அவர்கள் ஜெயம்கொள்கிறவர்களாய் இருப்பதற்கான பிரதான நிரூபணங்களாகும். “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன். நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம் பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை. அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது அன்புக்குப் பொறாமையில்லை அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம். நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ்சொல்லுதலும் குறைவுள்ளது. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக் கேற்றவைகளை ஒழித்துவிட்டேன். இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம். இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்து கொள்ளுவேன். இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது. (1 கொரிந்தியர் 13)

இத்தகைய அன்பின் மனப்பான்மையினைப் பெற்றிருப்பவர்கள் மீது, தீமையானவர்கள் ஆதிக்கம் செலுத்திடுவார்களே என்று வலியுறுத்தப்படலாம். இந்த அன்பின் ஆவியைப் பெற்றிருப்பவர்கள் மென்மையானவர்களாகவோ அல்லது மழுங்கினவர்களாகவோ இருக்க மாட்டார்கள் என்று நாம் பதில் அளிக்கின்றோம்; இந்த அளவிலான அன்பை வளர்ப்பதில் அவர்கள் பெற்றுக் கொண்ட அனுபவங்களானது, அவர்களை வளர்த்திற்று, மேலும் “கர்த்தருக்குப் பயப்படுதலில் அவருக்கு உகந்த வாசனை உடையவர்களாக்கிற்று . அன்புடையவர்கள் – மறுக்கமுடியாத சான்றுகளினால் வலுக்கட்டாயமாக தீமை ஒருவரிடத்தில் இருக்கின்றது என்று ஒப்புக்கொள்ளவேண்டிய நிலையில் காணப்படும் போது தவிர, மற்றபடி குற்றத்தைச் சாற்றுவதை இவர்கள் தவிர்க்கின்ற போதிலும், தீமை தலைத்தூக்குவதைக் கண்ட மாத்திரத்திலேயே ஜாக்கிரதையாய் இருப்பார்கள்.

ஆனால் நாம் நம்மையும் தெரியாமல் ஒரு குற்றமற்ற நபர் மீது குற்றம் சுமத்தாதபடிக்குப் பெரும்பாலும் (பொறுமையாய்ச் சகித்து) சில சிறு (நற்பெயர் கெடுதல் போன்றதான) இழப்புகளை அனுபவிப்பதும், துணிந்து சில இழப்புகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்வதும் நலமாயிருக்கும். மேலும், இந்தக் கர்த்தருடைய ஆலோசனையின்படி செயல்பட்டவர்களுக்கு உண்டான எவ்விதமான இழப்புகளையும் ஈடுசெய்ய கர்த்தர் மிகுந்த வல்லமையுள்ளவராக இருக்கின்றார்.

தம்மை அன்புகூருபவர்களுக்கு இந்த அனைத்து அனுபவங்களையும் நன்மைக்கு ஏதுவாக மாற்ற அவர் வல்லமை கொண்டவராகவும், சித்தமுள்ளவராகவும் இருக்கின்றார். “நான் கட்டளையிட்டதை நீங்கள் செய்வீர்களானால், என் சீஷர்களாய் இருப்பீர்கள் என்று அவர் கூறுவதின் மூலம் தம்முடைய ஏற்பாட்டில் பலிக்கு முன் கீழ்ப்படிதலை வைக்கின்றார்.

ஒருவன் மற்ற விஷயங்களில் எவ்வளவுதான் கவனமுள்ளவனாய்க் காணப்பட்டாலும், “தீமை பேசுதலைக் குறித்த கர்த்தருடைய இந்தக் கட்டளையை அசட்டை பண்ணுவானானால், அவன் தானே சிக்கிக்கொள்வதற்கு ஏதுவாக தனக்கு வலையைப் பின்னுகிறவனாக இருக்கின்றான்; ஏனெனில் எந்த இருதயம் உடன்சிருஷ்டியின் மீது சந்தேகம் மற்றும் குற்றப்பார்வை கொண்டுள்ளதோ, அந்த இருதயம் தேவனையே சந்தேகிக்கும் அளவு கொஞ்சம் தயாராகியுள்ளது. கசப்பின் ஆவி என்பது கர்த்தருடைய ஆவிக்கும், அவருடைய அன்பின் ஆவிக்கும் எதிராக யுத்தம் பண்ணுகிறதாய் உள்ளது. இரண்டில் ஏதோ ஒன்று ஜெயம்கொள்ளும். தவறான ஆவி வெளியேற்றப்பட வேண்டும், இல்லையேல் அது புதுச்சிருஷ்டியைத் தீட்டுப்படுத்தி அவனை “புறம்பாக்கப்பட்டவனாக்கிவிடும். மாறாக ஒருவேளை புதுச்சிருஷ்டி ஜெயம்கொண்டால், அதாவது தீமைபேசுதல் ஜெயம்கொள்ளப்பட்டால் தற்கால போராட்டங்கள், குழப்பங்கள், இடர்பாடுகளுக்கு எதிரான யுத்தத்தில், பாதி யுத்தம் முடிவு பெற்றதாகிவிடும். அனுமானங்கள் இருதயத்திலிருந்து எழும்புகின்றது, அது ஒன்றில் நன்மையான வார்த்தைகள், கிரியைகளுக்கு அல்லது தீமையான வார்த்தைகள், கிரியைகளுக்கு நேராக வழிநடத்துகின்றது.

4. நீங்கள் தீமையாய்ப் பேசப்பட்டால், உங்களைக் குற்றமற்றவர்களாகக் காண்பித்துக் கொள்ளத்தக்கதாக வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ நீங்கள் விளக்கலாம், ஆனால் இதற்கு மேலாக செய்வதைத் தவிர்த்துவிடுங்கள்.

ஒருவேளை நீங்களும் பதிலுக்குத் தீமைபேசினால் தவறு செய்கிறவர்களாகி விடுவீர்கள். எந்த மனுஷனும் தீமைக்குத் தீமை செய்யாதிருக்கக்கடவன்… ஒருவேளை உங்கள் அயலார் பேசினது தவறானதாய் இருந்து, நீங்கள் பேசப்போவது உண்மையாய் இருந்தாலும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள். இதை, உங்கள்மேல் சுமத்தப்பட்டக் குற்றத்திற்கு எதிராக விளக்கம் கொடுக்கும்போது நினைவில் கொள்ளுங்கள், அதாவது உங்களை குற்றம் சாட்டுபவர் மீது எதிர்குற்றச்சாட்டுகளைச் சுமத்த முற்படாதீர்கள்; ஏனெனில் நீங்கள் அப்படிச் செய்வீர்களானால், நீங்களும் தீமை பேசுகிறவராகிவிடுவீர்கள்.

பொன்னான சட்டம்

இது வேதவாக்கியங்களின் அடிப்படையிலான சட்டமாகும். மற்றவர்கள் நமக்குச் செய்ததுபோல் அல்ல, மாறாக மற்றவர்கள் நமக்கு என்ன செய்ய வேண்டும் என நாம் விரும்புகின்றோமோ / கருதுகின்றோமோ, அதைத்தான் நாமும் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும். நமக்குச் செய்யப்பட்ட தவறுகளானது, நாம் செய்யும் தப்பிதங்களை ஒருபோதும் நியாயப்படுத்தப் போவதில்லை. “நன்மை வரும்படி தீமை செய்யுங்கள் என்பது போன்றதான சாத்தானின் வஞ்சனைகளுக்குத் தேவனுடைய உண்மையான பிள்ளைகள் இடம் கொடுக்கக்கூடாது. தூஷிக்கிறவர்களின் பொய்யான மற்றும் தவறான குற்றச்சாட்டுகள் தவறு என்று நாம் விவரித்துக் காட்ட எவ்வித வேதவாக்கியங்களும் தடைவிதிக்கவில்லை என்றாலும்… [R3594 : page 214] ஒருவேளை ஒவ்வொரு எதிரிடையான பொல்லாத குற்றச்சாட்டுகளுக்கும் எதிராக போராடுவதில் நாம் சாத்தானையும், வஞ்சிக்கப்பட்ட அவனுடைய அநீதியான ஊழியர்களையும் பின்பற்றுகிறவர்களாக இருக்கும் பட்சத்தில், நாம் இவ்வேலையில் அதிகம் மும்மூரமாய் (busy) இருக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டிருப்பதை அனுபவங்கள் நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கும். ஒருவேளை நாம் இவ்வேலையைச் செய்ய விருப்பமுள்ளவர்களாய் இருப்பதைச் சாத்தான் கண்டானானால், மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கும் நற்செய்தியை நாம் அறிவிப்பதற்கு, நமக்குப் போதுமான நேரம் இல்லாமல் போகத்தக்கதாக, ஒவ்வொரு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக போராடுவதில் நம்மை அதிகம் மும்மூரம் அடைய செய்திடுவான், பின்னர்ச் சாத்தான் ஜெயம்கொண்டவனாகவும், நாம் தோற்றவர்களாகவும் ஆகிவிடுவோம்.

மாறாக நம்முடைய பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக ஓடும் ஓட்டத்திற்கான அழைப்பிற்கு இசைவாக, நாம் கீழ்ப்படிதலுடன் அவருடைய பாதங்களில் சகலவற்றையும் சமர்ப்பித்த பலியின் ஒரு பாகமாக, நம்முடைய நற்பெயரையும் கர்த்தரிடத்தில் சமர்ப்பிப்போமாக. நம்முடைய காரியங்களுக்காகப் போராடுவதின் மூலம், இராஜாவின் வேலையைப் புறக்கணிக்க மாட்டோம் என்று நாம் தீர்மானித்ததின் காரணமாக, நாம் சில நற்பெயர்களை இழந்தோமானால், நாம் கிறிஸ்துவுக்காக பாடுகள் சகித்தவர்களாகக் கருதப்படுவோம்; மேலும் இப்படிச் செய்யும் பட்சத்தில், பரலோகத்தில் நம்முடைய பலன் மிகுதியாகவும் இருக்கும். யுத்தம் முடிவடையும்போது, ஜெயம்கொண்டவர்கள் முடிசூட்டப்படுவார்கள்.

ஒவ்வொரு கர்த்தருடைய ஜனங்களும் தாங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் முடிந்தமட்டும் கவனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். வெளிச்சத்தைப் பிரகாசிப்பதில் எந்த அளவு உண்மையும், வைராக்கியமும் காணப்படுகின்றதோ, அவ்வளவாய் நம்முடைய ஒவ்வொரு வார்த்தையும், கிரியையும் தீயதாய்க் காண்பிக்கத்தக்கதாக திரித்துக் காட்ட நாடுபவனாகிய நம்முடைய மாபெரும் எதிராளியானவனின் தூஷணமான எதிர்ப்புகள் காணப்படும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அவன் திரித்துப் பேசுவதற்கான காரணம், சகோதரரைக் குற்றம்சாட்டுகிறவனாகிய அவனால் உண்மையான எவ்வித குற்றச்சாட்டுகளையும் காண முடியாததாலேயே ஆகும். மேலும் அவன் பிரதான ஊழியக்காரனாகிய நமது கர்த்தருக்கு விரோதமாக வெறி கொண்டது போல, சத்தியத்தின் எளிமையான ஊழியர்களுக்கும் எதிராக வெறி கொண்டுள்ளான். நமது கர்த்தர் நியாயப்பிரமாணத்தை மீறினார் என்று சிலுவையில் அறையப்பட்டதையும், இவைகள் ஆலயத்தின் பிரதான வகுப்பார்முன்பு நடந்தது என்பதையும், அவருடைய சொந்த சீஷர்களுள், ஒருவரால் காட்டிக் கொடுக்கப்பட்டார் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

எதிராளியானவனால் தாக்கப்படும்போது… அவனுடைய பிரதிநிதிகள் யாராயினும், அவர்களுடைய ஏவுகணைகள் எதுவாயிருந்தாலும், அத்தருணங்களில், “நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள் (எபிரெயர் 12:3). ஒருவேளை நாம் உண்மையாய்ச் சகித்தோமானால்… அவனால் (சாத்தான்) தீங்கு செய்ய முடியாது, மாறாக கர்த்தருடைய பார்வையில் நம்முடைய நற்பெயர் பெருக மாத்திரமே செய்கின்றது மற்றும் தேவன் தமது நோக்கம் கருதி நன்மைக்கு ஏதுவாக மாற்ற முடியாத அளவு அவன் எவ்வித வெளித்தோற்றமான தீங்கையும் கூடச்செய்ய முடியாது… சிலசமயம் கோதுமையிலிருந்து களையையும், பதரையும் சலித்தெடுப்பதுக் கூட அந்த நன்மையாக இருக்கும்.

5. தீமை பேசுதல், தூஷணங்கள் மற்றும் பழிப்பேச்சுகள், தேவனுடைய ஜனங்களிடம் காணப்படக்கூடாது என்று கண்டிப்பாக தடைப்பண்ணப்பட்டுள்ளது.

ஒருவேளை தீமைபேச்சுகள் உண்மையாக இருப்பினும், இவைகள் அன்பின் ஆவிக்கு முற்றிலும் எதிர்மாறானதாகும். பழிப்பேச்சுகள் பேசும் தன்மையைத் தடுக்கும்விதமாக வேதவாக்கியங்களானது, மத்தேயு 18:15-17-ஆம் வசனங்களில் மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திக் கொள்வதற்கான ஒரே வழிமுறையினைச் மிகக் கவனமாகச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது.

முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவர்களும்கூட இந்தத் தெய்வீகக் கோட்பாட்டைக் குறித்து அறியாமையிலேயே காணப்படுகின்றார்கள், ஆகவே கிறிஸ்தவர்கள் என்று தங்களை அறிக்கைப்பண்ணிக் கொள்கின்றவர்கள் பெரும்பாலும் (சதா பழித்தூற்றுகிறவர்களாக) புரளி பரப்புபவர்களாகக் காணப்படுகின்றனர். இக்கோட்பாடானது, நமது கர்த்தரால் கொடுக்கப்பட்ட சில விசேஷித்த கட்டளைகளில் ஒன்றாகும் மற்றும் இக்கோட்பாடானது “நான் கட்டளையிடும் யாவற்றையும் செய்வீர்களானால், நீங்கள் என் சீஷர்களாய் இருப்பீர்கள் என்ற வாக்கியத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்கையில், இது மீறப்படும் காரியமானது, அநேகர் இன்னமும் சீஷத்துவத்தில் முன்னேறவில்லை என்பதை நிரூபித்துக் காட்டுகின்றது.

கர்த்தருடைய வழியைப் பின்பற்றுங்கள்

இக்கோட்பாட்டைக் கொஞ்சம் கவனமாகப் பார்ப்போம். ஒருவேளை இக்கோட்பாடு பின்பற்றப்பட்டால், தீமை பேச்சுகள், பழிப்பேச்சுகள், வதந்திகள் / வீண்பேச்சுகள் தவிர்க்கப்படலாம்.

முதலாவதாகச் சம்பந்தப்பட்டவர்கள் மாத்திரம் கூடிப்பேச வேண்டும், அதாவது தான் பாதிக்கப்பட்டுள்ளதாக எண்ணி குற்றம் சாட்டுகிறவனுடைய வெளிப்படையான பேச்சு வார்த்தையாகும்; இந்த நபரை நாம் “A” என்ற பெயரில் அழைப்போம். குற்றம் சாட்டுபவர்மேல் தனக்குத் தீமையான எண்ணம் இல்லை என்று எண்ணுபவரை “B” என்ற பெயரில் அழைப்போம். இவர்கள் இருவரும் தங்கள், தங்கள் நடத்தைச் சரியாக இருக்கின்றது என்று எண்ணி, காரியத்தைக் குறித்து விவாதம் பண்ணி, இருவரும் ஒரே கண்ணோட்டத்தில் வரக்கூடுமோ என்று பார்ப்பதற்கென்று சகோதரர்களாகக் கூடிவந்துள்ளனர். ஒருவேளை அவர்கள் ஒன்றுபட்டால், எல்லாம் நலமாய் முடியும்; பிரச்சனையும் முடிவுக்கு வந்துவிடும்; சமாதானம் நிலவும்; அச்சுறுத்தும் பிரிவினை தடுக்கப்பட்டுவிடும்; மேலும் ஒருவரும் ஞானி என்று சொல்வதற்கில்லை.

ஒருவேளை இருவரும் உடன்பாட்டிற்குள் வரவில்லையெனில், “A” தனது கூற்றை வெளியே கூறி, பழித்தூற்ற ஆரம்பிக்கக் கூடாது. தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பர்களிடம் கூடச் சொல்லக் கூடாது. ஒருவேளை அவன் காரியத்தை வெளியே கூறி, பின்பு “எதுவும் வெளியே சொல்ல வேண்டாம்; விசேஷமாக நான் உன்னிடம் கூறினேன் என்று சொல்ல வேண்டாம் என்று கூறலாமா?… இல்லை, கூடாது… காரியம் இன்னமும் “உனக்கும் அவனுக்கும் (A மற்றும் B) இடையில்தான் உள்ளது. ஒருவேளை “A” இவ்விஷயத்தை முக்கியம் என்று கருதி, இன்னும் பிரயாசங்கள் எடுக்க விரும்பினால், அவனுக்கு ஒரு வழி உள்ளது… அதாவது, தன்னோடு கூட “B” -ஐ சந்திக்க இரண்டு அல்லது மூன்று நபரைக் கூட்டிக்கொண்டு சென்று, அவர்கள் இரண்டு பக்கத்தின் காரியங்களையும் கேட்டு, சரி மற்றும் தவறு என்ன என்பது பற்றின தங்களுடைய பகுத்தறிதலைத் தெரிவிப்பதேயாகும். இந்த இரண்டு அல்லது மூன்று பேர் எப்படிப்பட்டவர்கள் மத்தியில் இருந்து தெரிந்துகொள்ளப்பட வேண்டுமெனில்…

(1) சாட்சியாளர்கள் ஒருவேளை தற்செயலாக “B” -க்கு ஆதரவாக தீர்வு கொடுத்தாலும், சாட்சியாளர்களின் கிறிஸ்தவ குணலட்சணங்கள் மற்றும் அறிவுநுட்பம் மற்றும் தெளிந்த புத்தியின் ஆவி மீது “A” -கு நம்பிக்கை இருக்க வேண்டும்; (2) சாட்சியாளர்கள் ஒருவேளை தற்செயலாக “A” -கு ஆதரவாக தீர்வு கொடுத்தாலும், சாட்சியாளர்களின் கிறிஸ்தவ குணலட்சணங்கள் மற்றும் அறிவுநுட்பம் மற்றும் தெளிந்த புத்தியின் ஆவி மீது “B” -கு நம்பிக்கை இருக்க வேண்டும்.
தான் தெரிந்துகொள்ள விரும்பும் இரண்டு அல்லது மூன்று சாட்சியாளர்கள் உள்ளடங்கியுள்ள நண்பர்களிடம் “A” காரியங்களைச் சற்று அதிகமாகவே கலந்துபேசுவது, அதாவது அவர்கள் (மறுபக்கம் செவிசாய்க்காமல்) தனக்கே ஆதரவு அளிக்கத்தக்கதாகவும், சாட்சியாளர்கள் தவறான அபிப்பிராயத்துடனும், “B” -கு எதிராக ஏற்கெனவே மனதில் நிர்ணயம் பண்ணிக்கொண்டு, பேச்சுவார்த்தைக்குச் செல்லத்தக்கதாகவும் “A” பேசுவது என்பது போதகரின் கட்டளையினுடைய ஆவிக்கும், நீதியின் ஆவிக்கும் முற்றிலும் எதிர்மாறானதாகும். இரண்டு பேர் நடுவில் உள்ள பிரச்சனைகளை, அவர்கள் இருவரின் முன்னிலையிலேயே கேட்பதற்கு, இரண்டு அல்லது மூன்று சாட்சியாளர்கள் உள்ளே கொண்டுவரப்படுவது வரையிலும், காரியம் A மற்றும் B இடையில் மாத்திரமே இருக்க வேண்டும்.

உதவுவதற்கே ஒழிய காயப்படுத்துவதற்கல்ல

“சகோதரருடைய தீர்ப்பு “B” -க்கு எதிராக இருக்குமாயின், அவர்களுக்கு “B” செவிசாய்க்க வேண்டும், மேலும் “B” -இன் மனஉணர்வு ஒத்துப்போக முடியாத அளவு [R3595 : page 214] (அவர்களின் தீர்ப்பில்) ஏதேனும் கோட்பாடுகள் காணப்பட்டால் தவிர, மற்றபடி “B” சாட்சியாளர்களின் கண்ணோட்டத்தை நீதியானதாகவும், நியாயமானதாகவும் ஒப்புக்கொள்ள வேண்டும். ஒருவேளை “சகோதரர்கள் , “B” – இன் கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பார்களானால், “A” தான் தவறு செய்ததை ஒப்புக்கொள்ள வேண்டும்; மேலும், மனசாட்சி தடைபண்ணினால் தவிர மற்றபடி, சூழ்நிலையை ஏற்றுக்கொண்டு, “B” -இடமும் மற்றும் சகோதரர்களிடமும், தன்னுடைய குறைவான மதிப்பீட்டினால் உண்டுபண்ணின தொல்லைக்காக மன்னிப்பைத் தெரிவிக்க வேண்டும். ஆனால் இப்பேச்சுவார்த்தையில் இடம்பெற்ற எவரும், “வெளிவராத விதத்திலும்கூட மற்றவர்களிடம் காரியங்களைக் கூறி பழித்தூற்றுகிறவனாக மாறக்கூடாது.

ஒருவேளை தீர்ப்பானது “A” -கு எதிராக வழங்கப்பட்டால், ஒருவேளை அவர் இதினிமித்தம் காயமடைந்ததாகவும், சரியில்லாத சாட்சியாளர்கள் தெரிந்து கொள்ளப்பட்ட காரணத்தின் நிமித்தம் தனக்கு நீதி கிடைக்கவில்லை என்பதாகவும் எண்ணினார் என்றால், “A” (நமது கர்த்தருடைய இக்கட்டளைக்கு மீறாத விதத்தில்) வேறு (சாட்சியாளர்களை) ஆலோசகர்களை அழைத்து, முன்பு செய்த பிரகாரம் செயல்படுத்தலாம். இவர்களுடைய தீர்ப்பும் ஒருவேளை “A” -கு எதிராகவே காணப்பட்டால் அல்லது எல்லோரும் “B” -கு ஆதரவு கொடுத்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் “A” யாருடைய தீர்ப்பின் மீதும் நம்பிக்கை வைக்க முடியாத நிலையில் காணப்பட்டாரானால், “A” தன்னிடத்தில் இருக்கும் பிரச்சனை இறுமாப்பு என்று உணர்ந்து, உபவாசித்து, ஜெபம் பண்ணி, நீதியின் கோட்பாடுகள் குறித்துக் கவனமாய்க் கற்க வேண்டும். ஆனால் காரியங்களை வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ, சபைக்கோ அல்லது வேறு எவரிடமோ கூறுவதற்கு இப்பொழுதும் “A” -கு அதிகாரம் இல்லை. அப்படி ஒருவேளை “A” செயல்பட்டால், அவன் கர்த்தருக்குக் கீழ்ப்படியாததையும், சத்தியம் மற்றும் அன்பின் ஆவிக்கு விரோதமான தீயதும், மாம்சீகமானதுமான ஆவி அவரிடம் இருப்பதையும் இச்செயல்பாடு சுட்டிக்காட்டுகின்றது.

ஒருவேளை சாட்சியாளர்கள் “B” -கு எதிராக கொஞ்சம் விஷயத்தில் எதிர்ப்பும், “A”-கு கொஞ்சம் விஷயத்தில் ஆதரவும் தெரிவித்தார்களானால், சகோதரராகிய “A”- மற்றும் “B” -யும்கூடக் காரியங்களை அவ்விதத்திலேயே பார்த்து, சமாதானத்துடன் காரியங்களை ஒழுங்குபடுத்த நாடவேண்டும். இப்படியான சூழ்நிலைகளில் மற்றவருடைய காரியங்களை வெளியே சொல்வதற்கு இடம் இருக்காது.

ஒருவேளை சாட்சியாளர்கள் முற்றிலும் “B” -கு எதிராகவும், “A” -கு முற்றிலும் சாதகமாகவும் தீர்மானித்தும், அவர்களுக்கு “B” செவிசாய்க்காமலோ அல்லது தவறைச் சரிசெய்து கொள்ளாமலோ அல்லது “A” -கு காயம் விளைவிப்பதை நிறுத்தாமலோ காணப்பட்டாலும்கூட “A” -கு “B” -ஐ குறித்து வெளியே பழித்தூற்ற அதிகாரம் இல்லை, மேலும் சாட்சியாளர்களாகிய சகோதரர்களுக்குக்கூட “B” -ஐ குறித்துப் பழிதூற்ற அதிகாரமில்லை. “A” [R3595 : page 215] இன்னும் பிரயாசம் எடுக்க விரும்பினால், அவருக்கு ஒரே ஒரு வழி மாத்திரம் உள்ளது… “A” -யும், குழுவினரும் சேர்ந்து காரியத்தை சபைக்கு முன்வைப்பதே அவ்வழியாகும். சபையார், இருவரின் சார்பில் உள்ள விஷயங்களைக் கேட்க வேண்டும்… பின்னர் “A” அல்லது “B” இவர்களில் யாரேனும் சபையாரின் ஆலோசனையை ஏற்க மறுப்பாரானால், சபையார் அனைவராலும் அச்சகோதரன் புறம்பாக்கப்பட்டவனாக – சபையார் அல்லாதவனாகக் கருதப்பட வேண்டும்; ஐக்கியம் அவனிடம் வைத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டும்; அச்சகோதரன் மனம்வருந்தி, சீர்ப்பொருந்தும் வரை மரித்துப் போனவனாகக் கருதப்பட வேண்டும்.

ஓர் அங்கத்தினுடைய பொறுப்புகள் மற்றவரால் செய்ய முடியாது… ஒவ்வொருவரும் கர்த்தருடைய கட்டளையின்படி தனக்கானவைகளைச் செய்துகொள்ள வேண்டும். ஒரு வேளை கர்த்தருடைய கட்டளை மீறப்பட்டு, பழித்தூற்றும் காரியங்கள் நடந்தேறி, சபையாரை உபத்திரவத்திற்குள்ளாக்கி, சபை முழுவதையும் அவமானப்படுத்துகிறதாய் இருக்கும் பட்சத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி, அப்பிரச்சனையைக் கையாள வேண்டும். இவர்கள் பிரச்சனைகள் என்ன என்று விசாரிப்பதோடல்லாமல், அவதூற்றைப்பரப்பின உண்மையான கிளர்ச்சியாளர்களும் யாரென்று விசாரித்து, அவர்களைக் கடிந்து கொள்ளவும் வேண்டும்.

ஆனால், அனைவரும் ஏதோ விஷயங்களில் பூரணமற்றவர்கள் என்பதை நினைவுகூர்ந்து, அன்புடன் சகல கடிந்துகொள்ளுதலும் காணப்பட வேண்டும். எல்லா விஷயங்களிலும் நோக்கம், திருத்தம் செய்வதாக இருக்க வேண்டுமே ஒழிய, தண்டனை வழங்க வேண்டும் என்பதாக இருக்கக்கூடாது. தண்டனை வழங்குவதற்கான அதிகாரம் கர்த்தருக்கு மாத்திரம் உரியதாகும். மனம் திருந்தாத அந்தச் சகோதரனோடு ஒரு குறிப்பிட்ட காலம்வரைச் சபையார் ஐக்கியம் கொள்ளக்கூடாது மற்றும் மனம்திரும்புதல் பிரத்தியட்சம் ஆகும்போது, மீண்டும் சபையார் ஐக்கியம் கொள்வதைத் தொடர வேண்டும். நாம் அன்பு காண்பிப்பதையும், சந்தோஷம் மற்றும் சமாதானம் ஏற்படுத்துவதையுமே கர்த்தர் விரும்புகின்றார். மேலும் இவற்றை நாமும் அவருடைய சீஷர்களாக இருந்து செய்ய வேண்டும். வேறு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டால் நிச்சயமாக பாதிப்பு ஏற்படும்.

இவ்விதமாக முதலில் மறைமுகமாகப் பழித்தூற்றும் பாவமாகக் காணப்பட்டு, பின்னர் மாம்சம் மற்றும் பிசாசின் கீழ்த்தரமான கிரியையாக மாறி சத்தியத்திற்குள்ளான வளர்ச்சியையும், அன்பின் ஆவியையும் தடுத்துப் போடுகிறதான காரியங்களிலிருந்து கர்த்தர் தமது உண்மையான சீஷர்களைப் பாதுகாக்கின்றார். மேலும் யாரொருவர் பழிப்பேசுபவர்களின் பேச்சுவார்த்தைகளைக் கேட்டு, பழித்தூற்றுபவர்களின் தவறான போக்கை உற்சாக மூட்டுகின்றாரோ, அவரும் அவர்களின் பொல்லாத செயல்பாடுகளுக்குப் பங்காளியாவார் என்பதையும்கூட நாம் தெரிவிக்கின்றோம்; மேலும் கர்த்தருடைய கட்டளையை மீறின காரியத்திலும் அவர்களோடு உடன்பங்காளியாவார் என்பதையும் தெரிவிக்கின்றோம். தேவனுடைய உண்மையான ஜனங்கள் பழித்தூற்றுபவர்களின் பழிப்பேச்சைக் கேட்க மறுத்து, அவர்களுக்குக் கர்த்தருடைய வார்த்தையையும், வேதம் அங்கீகரிக்கும் ஒரே வழிமுறையையும் சுட்டிக்காண்பிக்க வேண்டும். “தேவனைப் பார்க்கிலும் நாம் ஞானவான்களோ?… நாம் நம்முடைய சொந்த கணிப்புகளை நம்ப முடியாது என்றும், உடனே மேய்ப்பனின் சத்தத்தை நம்பிக்கையுடன் பின்தொடர்வதே பாதுகாப்பானது என்றும் அனுபவங்கள் நமக்குக் கற்பித்துத் தந்துள்ளது.

அன்புடன் கடிந்துகொள்ளுங்கள்

ஒரு சகோதரனோ, சகோதரியோ மற்றவர்களைக் குறித்து உங்களிடம் பழித்தூற்ற ஆரம்பித்தால், அவரை உடனடியாகத் தடுத்துவிடுங்கள் இதை அன்புடனும், அதே சமயம் உறுதியுடனும் செய்யுங்கள். “கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள் (எபேசியர் 5:11). சபையில் மாபெரும் தொல்லையை ஏற்படுத்தக் கூடிய, நமது கர்த்தருடைய கட்டளைக்கு எதிரான இந்த மீறுதலில் பங்குகொள்ளும் எவ்விதமான காரியங்களையும் மறுத்துவிடுங்கள். ஒருவேளை குறைகூறும் சகோதரனோ, சகோதரியோ, ஆவிக்குரிய காரியங்களில் குழந்தையாக இருப்பார்களானால், அவர்களின் கவனத்துக்கு, இவ்விஷயத்தைக் குறித்ததான கர்த்தருடைய கட்டளையைக் கொண்டுபோங்கள். (அதாவது மத்தேயு 18:15; 1 தீமோத்தேயு 5:19 எடுத்துக்கூறுங்கள்). ஒருவேளை மற்றவரைக் குறித்த பழிப்பேச்சுகள் உங்களிடத்தில் நேரடியாகப் பேசப்படாமல், மற்றவரிடம் பேசிக்கொண்டிருக்கும் சூழ்நிலைகளில் / கூட்டங்களில், நீங்கள் நிற்க, உங்கள் செவியில் விழுமாயின் உங்கள் நிராகரிப்பை உடனடியாகத் தெரிவிக்கும் விதத்தில் (கூட்டத்தை விட்டு) பின்வாங்கிவிடுங்கள்.

ஒருவேளை பழித்தூற்றும் விஷயத்தைக் குறித்ததான கர்த்தருடைய கட்டளை, பழித்தூற்றுபவரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டும், பழித்தூற்றும் சகோதரன் இன்னமும் தீமைபேசுதலையும், பழிப்பேச்சையும், தூஷணங்களையும் தொடர்வாரானால், உங்களிடம் தொடர்ந்து தனது பழிப்பேச்சுகளைத் தொடர்வாரானால், அவரைத் திட்டவட்டமாகக் கடிந்துகொள்ளும் வண்ணமாக, “நீங்கள் இப்படிப் பேசுவதை என்னால் கேட்டுக் கொண்டிருக்க முடியாது, நான் கேட்கவும் கூடாது; ஒருவேளை நான் கேட்டுக்கொண்டிருந்தால், நீங்கள் கர்த்தருடைய கட்டளையை மீறி குற்றவாளியாக (criminal) இருப்பது போல நானும் (criminal) குற்றவாளியாகிவிடுவேன். ஒருவேளை நான் உங்களின் இக்கதையைக் கேட்க வேண்டியதாய் இருப்பினும், என்னால் அதை நம்ப முடியாது, ஏனெனில் எந்தக் கிறிஸ்தவன் கர்த்தருடைய வசனத்தை மதியாமல், தவறுகளைச் சரிசெய்து கொள்வதற்கான அவருடைய திட்டத்தைப் பின்பற்றாமல் இருக்கிறானோ, அவனிடம் கர்த்தருடைய ஆவி இல்லாதபடியால், அவனுடைய வார்த்தைகளும் நம்புவதற்கு ஏதுவல்லாததாகும் என்று கூறி கடந்துபோக வேண்டும். கர்த்தருடைய வார்த்தைகளைத் தட்டிக்கழிக்கிறவனும், புரட்டுகிறவனும், உடன் சீஷர்களின் வார்த்தைகளையும், கிரியைகளையும் குறித்துப் புரட்டத் தயங்கமாட்டான். நீங்கள் இத்தகைய தூஷண பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டிருந்தாலோ அல்லது அப்பேச்சுக்களுக்கோ, அப்பேச்சைப் பேசுகிற வதந்தியாளர்களுக்கோ, பழித்தூற்றுபவர்களுக்கோ ஆதரவு தெரிவித்தாலோ, நீங்களும் அந்தப் பாவத்திற்கும் அதன் சகல பின்விளைவுகளுக்கும் பங்காளிகள் ஆவீர்கள்; ஒருவேளை இதினிமித்தம் “கசப்பான வேர் முளைத்து விட்டால், இதனால் தீட்டுப்பட்டவர்களில், நீங்களும் ஒருவராக இருப்பீர்கள் (எபிரெயர் 12:15).

அவதூறு பண்ணுகிறவர்கள் திருடர்கள் ஆவார்கள்

உலகத்தின் நிலைப்பாட்டைப் பொறுத்தமட்டில் அவதூறு பண்ணுகிறவர்கள் திருடர்கள் ஆவார்கள். ஷேக்ஸ்பியர் இப்படியாக எழுதுகின்றார்:

“என்னுடைய பணப்பையைத் திருடுகின்றவன், பயனற்றதையே திருடுகின்றான்; ஆனால் என்னுடைய நற்பெயரை என்னிடத்திலிருந்து அபகரிப்பவனை அது பணக்காரனாக்காது; உண்மையில் என்னைத்தான் அது ஏழ்மையாக்குகின்றது.

கிறிஸ்தவ நிலைப்பாட்டின்படியும், மாபெரும் போதகரின் கருத்துபடியும், அவதூறு பண்ணுகிறவர்கள் கொலைக்காரர்கள் ஆவார்கள். (மத்தேயு 5:22; 1 யோவான் 3:15 பார்க்கவும்). ஆகவே அவதூறு சொல்வதற்கான சிந்தனையானது, பிசாசின் ஆவி என்பது போல விலக்கப்பட வேண்டும்.

6. மிகப் பாதகமான வாதைகளிடமிருந்து ஒதுங்கியிருப்பதுபோல், தேவனுடைய ஜனங்கள் பெருமையைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

இக்கோட்பாடானது மிக நல்ல கோட்பாடாகும்; இது வேதவாக்கியங்கள் அளிக்கும் கோட்பாடாகும், மேலும் இது தற்கால சத்தியத்தின் வெளிச்சத்தினால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் இரட்டிப்பாக அவசியப்படும் கோட்பாடாகும். இப்படிக் கூறுவது விநோதமாய் தோன்றலாம்… தேவனுடைய குணலட்சணங்கள் மற்றும் திட்டம் குறித்ததான மாபெரும் வெளிச்சம் கொடுக்கப்படும் காரணத்தினிமித்தம் அவருடைய ஜனங்கள் தங்களை மிகவும் தாழ்த்தியும், தெய்வீக ஈவுகளின் மீது அதிகம் சார்ந்தவர்களாகவும், தேவன் மீது அதிகம் நம்பிக்கை கொண்டவர்களாகவும், தங்களின் மீது நம்பிக்கை வைக்காதவர்களாகவும் தானே காணப்படுவார்கள்? என்று நீங்கள் யோசிக்கலாம். தேவனுடைய ஜனங்கள் இப்பண்புடையவர்களாகத்தான் என்றென்றும், எப்போதும் காணப்பட வேண்டும், ஆனால் அந்தோ!… அநேகர் இப்படியாக இருப்பதில்லை.

அநேகர் யுகங்களைப் பற்றின திட்டத்தின் அறிவைப் பெற்றுக்கொண்ட மாத்திரத்தில் தங்களை விசேஷித்த ஞானிகள் அல்லது பெரியவர்கள் அல்லது நல்லவர்கள் என்று எண்ணிவிடுகின்றனர்; இவர்களோ தேவன் ஞானிகளுக்கும், பெரியவர்களுக்கும், சத்தியத்தை மறைத்துவிடுவார் என்பதையும், அவருக்கு முன்பாக எந்த மாம்சமானவைகளும் (தன்னைத்தான்) புகழ்ந்திடக்கூடாது என்பதையும் மறந்துவிட்டார்கள். ஆதாயம் கருதி, வியாபாரிகள் தங்கள் வாணிகச் சரக்குகளை விரும்புவது போன்று, இவர்களும் சத்தியத்தைச் சுயநலத்துடன் விரும்புகின்றனர். ஒருவேளை சத்தியத்தைக் கொடுத்து / விற்று இவர்கள் ஆஸ்திகளை எதிர்பார்க்காவிட்டாலும், கொஞ்சம் விளம்பரத்தை எதிர் பார்க்கின்றார்கள்; அதாவது மற்றவர்களைக் காட்டிலும் ஞானமுள்ளவர்கள் என்று காட்டிக்கொள்வதற்கு, அதாவது சத்தியத்தைச் சிறிது சிறிதாக எடுத்துக்கூறி, அதன்மூலம் தாங்கள் ஞானமுள்ளவர்கள் என்று தங்களைக் குறித்து விளம்பரப்படுத்தித் தங்களைப் பெருமைப்படுத்திக்கொள்ள நாடுகின்றனர்.

தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபை

இப்படிப்பட்டவர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்; ஏனெனில் இவர்கள் தங்களைத் திருத்திக்கொள்ளாத பட்சத்தில் சீக்கிரத்திலோ அல்லது கொஞ்சம் காலம் கழிந்தோ முற்றிலும் வழி விலகி, உதவி செய்வதற்குப் பதிலாக, பாதிப்புகளை உண்டாக்கிவிடுவார்கள். இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய நோக்கத்திற்காக ஊழியம் செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புவதில்லை. மேலும் அவர்களுக்கு எவ்வளவுதான் திறமைகள் இருந்தாலும், அவர்களுடைய தற்பெருமையினாலே அவர்கள் இடறிப்போகும்படியாக நிச்சயமாக அனுமதித்துவிடுவார். உண்மையிலேயே திறமை உள்ளவர்கள் அல்லது திறமை தங்களுக்கு இருப்பது போன்று கற்பனை செய்து கொள்பவர்களே பெருமையின் ஆவியினால் உண்மையில் இன்னலுக்குள்ளாக அகப்படுகின்றார்கள். தேவன் பெருமை உள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கின்றார், ஆனால் தாழ்மையுள்ளவர்களுக்கோ தமது கிருபையை அளிக்கின்றார். இந்த வெளியீட்டுகளின் இதழாசிரியர் தனது ஞானத்தையோ அல்லது ஆற்றலையோ குறித்து வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ தற்பெருமை அடித்துக்கொள்ளவில்லை என்பதற்கு நமது வெளியீடுகளின் வாசகர்கள் சாட்சிகளாக இருக்கின்றனர். நாங்கள் சத்தியத்தைக் குறித்துப் பெருமைப் பாராட்டியிருக்கின்றோம், இன்னும் அதைக் குறித்துப் பெருமைப் பாராட்டுவோம், அதாவது சத்தியத்தினுடைய பிரகாசமான மின்சாரம் போன்ற கதிருக்கு முன்பாக எந்த மனித தத்துவங்களும் ஒரு மெழுகுத்திரியின் வெளிச்சத்தைக் கூடக் காட்ட முடியவில்லை என்று பெருமைப் பாராட்டுகிறோமே ஒழிய, அச்சத்தியத்தை வெளிக்கொண்டுவந்தவர் நானே என்று ஒருபோதும் பெருமைப் பாராட்டிக்கொள்ளவில்லை. [R3595 : page 216] காரணம் என்னவெனில், அச்சத்தியங்களை நாங்கள் உருவாக்கவில்லை, மாறாக தேவன்தாமே “ஏற்றவேளையில் “ஏற்றகாலத்தின் உணவாக / சத்தியமாக வெளிப்படுத்தியுள்ளார். மேலும் நாங்களோ அல்லது வேறு எந்த மனுஷர்களோ உருவாக்கும் உபதேசங்களைக்காட்டிலும் இச்சத்தியங்கள் மிகவும் அருமையானவைகளாக இருப்பதினால், இச்சத்தியத்திற்குத் தேவனே ஆசிரியர் என்றும், அதனை வெளிப்படுத்தினவர் என்றும் நாங்கள் நம்புகின்றோம்.

ஒருவேளை தேவனுடைய கிருபையினால், தற்கால அறுவடை சத்தியத்தை மற்றவருக்கு வெளிப்படுத்தும் வேலையில் நாங்கள் எந்தெந்த விதங்களில் பயன்படுத்தப்பட்டாலும், அவ்வேலையின் நிமித்தம் நாங்கள் களிகூருகின்றோம்; மேலும் எங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள உக்கிராணத்துவத்தில் உண்மையாய் இருக்க தொடருவோம், ஆனாலும் இவ்விஷத்தில் தற்பெருமை கொள்வதற்கு எங்களிடத்தில் இடமோ, அவசியமோ, காரணமோ இல்லை. இவ்வேலைக்குப் பாத்திரமானவர்களையும், பொருத்தமானவர்களையும், திறமை மிக்கவர்களையும் நமது எஜமான் உடனே கண்டுபிடிக்க வல்லவர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த காரியமாய் உள்ளது. ஆனால், 1 கொரிந்தியர் 1:27-29 “ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார் என்பதே நமக்கான விளக்கமாகும்.
[R3596 : page 216]

ஆகவே தேவனுடைய கிருபையினாலே இருளிலிருந்து தேவனுடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்குக் கொண்டுவரப்பட்டவர்களாகிய அனைவரும் கர்த்தருக்கு முன்பாக அதிக தாழ்மையுள்ளவர்களாக இருக்கும்படி எச்சரிப்பூட்டுகின்றோம். ஏனெனில், ஒருவேளை பெற்றுக்கொள்ளப்பட்ட வெளிச்சமானது இருளாகிப் போகுமானால், அவ்விருள் எவ்வளவு பெரியதாக இருக்கும்… எத்துணை நம்பிக்கையற்ற நிலைமையாகக் காணப்படும்! அப்படிப்பட்டவர்களைக் குறித்துக் கூறுகையில், அப்போஸ்தலர் குறிப்பிட்டது போல, அவர்கள் ஜீவனுக்குரிய பாதையை அறியாமல் இருந்திருந்தால் அது அவர்களுக்கு நலமாய் இருந்திருக்கும். உப்புச் சாரமற்றுப் போனால் அது ஒன்றிற்கும் உதவாது, சொல்லப்போனால் மண்ணைப் போன்றாகிவிடும்.

இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்

7. சுத்தமுள்ளவர்களாய் இருங்கள்.

தேவனிடத்திலும், மனுஷரிடத்திலும் குற்றமனசாட்சியற்ற நிலையைக் காத்துக்கொள்கிறவர்களாய் இருங்கள். இருதயத்தில், அதாவது எண்ணங்களில் சுத்தமுள்ளவர்களாய் இருங்கள்; பொல்லாப்பான எவ்வித எண்ணங்களுக்கும் இருதயத்தில் இடம் கொடாதிருங்கள். தீமையான எண்ணங்கள் குடிகொள்ளாதபடிக்கு கிறிஸ்து இயேசுவை உங்கள் மனதிற்கு முன்பாக மாதிரியாக நிறுத்திக்கொள்ளுங்கள். தீமையான எண்ணங்கள் வெளியிலிருந்தோ அல்லது உங்களுக்குள்ளிருந்தோ உங்களிடத்தில் அழையாமல் நுழைகிறது என்றால், தேவையான எல்லாச் சூழ்நிலைகளிலும் உதவி அளிக்கப்படும் என்று வாக்களித்தவரிடம் கிருபைக்காக உங்கள் இருதயங்களை ஜெபத்தில் உயர்த்துங்கள். “என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக (சங்கீதம் 19:14) என்ற ஜெபமும், சிந்தையும் உங்களிடத்தில் எப்பொழுதும் காணப்படுவதாக.

8. வேதவாக்கியங்களின் பல்வேறு விசேஷித்தக் கட்டளைகளை மதிப்புடன் கருதி, அவைகளைக் கைக்கொள்ள நாடுகையில், அந்தத் தெய்வீகப் பிரமாணத்தின் அடிப்படையான கொள்கைகளை அதிகமதிகமாய்ப் புரிந்துகொள்வதற்கும், அதற்கு இசைவாக நடக்கவும் நாட வேண்டும்.

இப்படிச்செய்வோமேயானால் கர்த்தருடைய வார்த்தைகளில் குறிப்பாக ஒருவேளை சுட்டிக்காட்டப்படாத நம்முடைய வார்த்தைகள், சிந்தனைகள் மற்றும் கிரியைகளில் காணப்படும் தவறுகளையும், சரியானவைகளையும் நம்மால் கண்டுபிடிக்க முடியும். நாம் எவ்வளவாக தெய்வீக பிரமாணத்தின் அடிப்படை கோட்பாடுகளைப் புரிந்துகொண்டு, அதற்கு இசைவாய்ச் செயல்படுகின்றோமோ, அவ்வளவாய் தெய்வீக வார்த்தையின் ஆவியைப் பெற்றுக்கொள்கிறவர்களாய் இருப்போம். சங்கீதம் 119:97-105 பார்க்கவும்.

9. கிறிஸ்துவின் குணலட்சணத்திற்கு அல்லது சிந்தனைக்கு எதிரான, குற்றம் கண்டுபிடிக்கும் மற்றும் சண்டையிடுகின்ற குணலட்சணங்களை விலக்கி / தவிர்த்துவிடுங்கள், அதாவது அன்பிற்கு எதிர்மாறான இவைகளைத் தவிர்த்துவிடுங்கள்.

உலகம், மாம்சம் மற்றும் பிசாசையும், இவர்களின் பல்வேறு கண்ணிகளையும் எதிர்த்து மேற்கொள்வதற்குக் கொஞ்சம் எதிர்த்துப்போராடுகிற மனப்பான்மையுடன் கூடிய தைரியம் தேவையாய் உள்ளது. இந்தப் போராடுகின்ற மனப்பான்மையானது ஒருவேளை ஞானமாகவும், சரியான விதத்திலும் கையாளப்பட்டால், அதாவது பாவத்திற்கு எதிராக முதலாவது நம்மிடத்திலும், இரண்டாவதாக மற்றவரிடத்திலும் கையாளப்பட்டால், இந்தப் போராடுகின்ற மனப்பான்மை கர்த்தருடைய நோக்கத்திற்கும், நமக்கும் மிக விலையேறப்பெற்றச் சகாயமாக விளங்கும். ஒருவேளை இப்போராடும் மனப்பான்மையானது கர்த்தருக்காவும், அவருடைய ஜனங்களுக்காகவும், சாத்தானுடைய இருளின் வல்லமைகள் மற்றும் மூடநம்பிக்கைக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டால் இப்போராடும் மனப்பான்மையானது நமக்கு விலையேறப்பெற்றச் சகாயமாக விளங்கும். இதுவே வேதவாக்கியங்களில், “நல்ல போராட்டத்தைப் போராடுதல் என்று அழைக்கப்படுகின்றது; மேலும் நீதி மற்றும் சத்தியத்திற்கான இந்த யுத்தத்தில், நமது தலைவரின் கனத்தையும், அவருடைய ஜனங்களின் சுயாதீனங்களையும் காப்பாற்றுவதற்கென யுத்தம் பண்ணும் தைரியமான போர் வீரர்களாக நாம் அனைவரும் காணப்பட வேண்டும்.

நல்ல போராட்டத்தைப் போராடுங்கள்

ஆனால் எதிர்த்துப்போராடும் மனப்பான்மையை இப்படியாக நல்ல விதத்தில் பயன்படுத்துவது என்பது இவ்வுலகத்தின் அதிபதியானவனுக்குப் பிரியமாய் இராது, ஆகையால் அவனால் நேரடியாகப் பயன்படுத்த முடியாத இம்மனப்பான்மையைத் தவறான வழியில் திருப்ப நாடி முயற்சிப்பான். இதன் விளைவாக அவன் (சாத்தான்) சிலரிடத்தில் இப்போராடும் மனப்பான்மையைப் பிரதானமான கடமை என்று எண்ணிக்கொள்ளத்தக்கதாக முயற்சி செய்வான். மேலும் சாத்தான் – அவர்கள் எல்லாவற்றோடும், அனைவரோடும் போராடும்படி அவர்களை ஊக்கமூட்ட முயற்சிப்பான், அதாவது இருளின் அதிகாரத்தைக் காட்டிலும் சகோதர சகோதரிகளையும், பெயரளவிலான கிறிஸ்தவர்களைக் குருடாக்கி வைத்துள்ள தப்பறைகளுக்கும், அறியாமைக்கும் எதிராக போராடுவதைக்காட்டிலும் பெயர்க்கிறிஸ்தவ மனிதர்களையும் எதிர்த்துப்போராட அவர்களைச் சாத்தான் ஊக்குவிப்பான். “தேவனுக்கு எதிராக போராடும் நிலைக்கு நம்மைக் கொண்டு வந்து நிறுத்துவதே உண்மையில் சாத்தானுடைய விருப்பமாக உள்ளது.

இவ்விஷயத்தில் கவனமுள்ளவர்களாய் இருக்கக்கடவோம். நாம் மற்றவரின் முன்பு தடுக்கலின் கல்லைப் போட்டுவிடாதபடிக்கு, முதலில் நாம் அனைவரும் நம்மை நாமே நிதானித்தறிவோமாக. அற்பவிஷயங்களை மலை அளவு பெரிதாக்கவும், சின்னஞ்சிறிய விஷயங்களையும், ஒன்றிற்கும் உதவாத விஷயங்களையும் குறித்துப் போராடுகிற மற்றும் குற்றம் காணும் (குறைகூறும்) இயல்புடையவர்களாகவும் நம்மை ஆக்கக்கூடிய தவறான ஆவிகளுக்கு எதிராக நம்முடைய சொந்த இருதயங்களில் நாம் போராடுவோமாக. “பட்டணத்தைப் பிடிக்கிறவனைப் பார்க்கிலும் தம் மனதை அடக்குகிறவன் உத்தமன் (நீதிமொழிகள் 16:32). சத்தியத்தின் மீதான அன்பினாலும், கர்த்தரின் மீதான அன்பினாலும், அவருடைய ஜனங்களாகிய சகோதர சகோதரிகளின் மீதான அன்பினாலும் தான் நாம் சத்தியத்திற்காகப் போராடுகிறோமே ஒழிய, சுயமகிமை தேடும் நோக்கங்களுக்காக நம்முடைய போராடுதல் காணப்படக்கூடாது என்பதில் நாம் நம்மைக்காக்க வேண்டியவர்களாக இருப்போமாக. நம்முடைய நோக்கம் அல்லது ஆவி ஒருவேளை அன்பின் அடிப்படையில் இருக்கும் பட்சத்தில்; இவ்வன்பானது உடன் ஊழியர்களாகிய சகோதர சகோதரிகளிடத்திலான நம்முடைய பிரயாசங்கள் அன்பிலும், சாந்தத்திலும், பொறுமையிலும், தாழ்மையிலும் சாரம் ஏறினதாக வெளிப்படும். “எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவர்களாய் நாம் இருக்கக்கடவோம் (2 தீமோத்தேயு 2:24). துரிதமும், ஆற்றலும் உள்ள “ஆவியின் பட்டயமாகிய தேவனுடைய வார்த்தையே, துண்டித்துப்போடுகிற வேலை அனைத்தையும் செய்ய அனுமதிப்போமாக.

10. துர்க்குணம், பொறாமை, விரோதம், பகை ஆகியவைகளோடு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய சகல எண்ணங்களையும், உணர்வுகளையும் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்.

கணநேரம்கூட இவைகளுக்கு உங்களுடைய இருதயங்களில் எவ்வித இடத்தையும் கொடாதிருங்கள்; ஏனெனில் இவைகள் மற்றவருக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது ஒருபக்கமாக இருப்பினும் உங்களுக்கே நிச்சயமாக அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாய் இருக்கும். உங்கள் இருதயம், உங்கள் சித்தம், உங்கள் நோக்கங்கள் மற்றும் விருப்பங்கள், தேவன் மீதான அன்பிலும், அவருடைய சகல சிருஷ்டிகள் மீதான அன்பிலும் நிரம்பி இருக்கட்டும்… தேவன்பால் அதிக அன்பும் மற்றும் இதற்கேற்ப அவருடைய ஆவியைப் பெற்றவர்களாக, அவர் காட்டும் வழியில் நடக்கின்ற யாவரோடும்; அன்பும் காட்ட வேண்டும்.

11. உங்கள் மனசாட்சியை நம்பாதிருங்கள்.

மனசாட்சியின் மீது நம்பிக்கை வைக்காதீர்கள். ஒருவேளை மனசாட்சியானது உங்களுக்குப் போதுமான வழிகாட்டியாக இருக்குமாயின், உங்களுக்கு வேதவாக்கியங்களின் தேவை அவசியமாயிராதே. பெரும்பான்மையான ஜனங்களுக்கு, கொஞ்சமும் மனசாட்சி என்பதே கிடையாது, காரணம் மனசாட்சிக்கு வழிகாட்டியாக இருக்கும்படிக்குத் தேவன் கொடுத்துள்ள நியாயப்பிரமாணங்களுக்கும், கோட்பாடுகளுக்கும் ஜனங்கள் குருடர்களாய் இருக்கின்றனர். இவர்களைக் காட்டிலும் அவல நிலையில் இருப்பவர்களைத்தான் 1 தீமோத்தேயு 4:2-ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுக் காட்டப்பட்டுள்ளது. ஆகவே கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கவனமாய்ச் செவிசாய்த்து, அது கொடுக்கும் வெளிச்சத்திற்கு ஏற்ப கவனமாய் நடப்பது தவிர்கக் முடியாத அவசியமாய் இருக்கின்றது.

12. நீதிக்கும் மற்றும் சத்தியத்திற்கும் தவிர மற்றபடி தைரியம் உள்ளவர்களாய் இருக்காதீர்கள்.

பாவத்தைக் குறித்தும், எஜமானுக்கு சினமூட்டுவதைக் குறித்தும், “நம்முடைய பரம அழைப்பிற்கான பந்தய பொருளாகிய மாபெரும் பரிசை இழந்துபோக நேரிடும் நிலை குறித்ததுமான பயபக்தியுடன் கூடிய பயம் உங்களுக்கு இருப்பது நலமாயிருக்கும். “இடறி விழுந்துபோகிறவர்கள் அனைவரிலும் பெரும்பாலானோர் முதலாவது சகல பயத்தையும் இழந்து, தன்னம்பிக்கை உள்ளவர்களாக ஆகிவிடுவார்கள். இப்படிப்பட்டவர்கள் “… இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிடுவதில்லை என்பதை மறந்து விடுகின்றார்கள். “ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம். மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம் என்பதற்கு இவர்கள் இந்தத் தகுதியான பயத்தை இழந்துபோனதே ஒரு காரணமாக இருக்கின்றது. (எபிரெயர் 6:6; 2 பேதுரு 1:5-10; எபிரெயர் 4:1)

____________________________

STORIES TWICE TOLD
மணலுக்கு ஏற்பட்ட தழும்புகள்
டாக்டர்.ஜே.எப்.கார்சன் அவர்கள் பாவத்திற்காக வருந்துபவருக்கு ஒரு செய்தியைக் கூறுகிறார்:

கடலின் அயராப் பொறுமையைப் போன்றது தேவனின் இரக்கமாகும். குழந்தைகள் தங்களின் சிறு மண்வெட்டியின் மூலம் மணலில் ஆழமான காயங்களை உண்டாக்கி, தங்க மணலினுடைய மேற்பரப்பின் மீது தழும்புகளை ஏற்படுத்திச் சென்றுவிடுவர். பிறகு, அமைதியான பழங்கடல் திரும்பி வந்து, தழும்பின் அடையாளத்தையெல்லாம் முற்றிலும் நீக்கிவிட்டு, எப்போதும் போல் மணலைச் சமதளமாக்கிப் பளபளக்கச் செய்து விட்டுச் சென்றுவிடும். இக்காட்சி தினந்தோறும் நடக்கும் மற்றும் கடலானது இத்தழும்புகளைச் சரிப்படுத்துவதில் ஒருபோதும் சோர்வடைவதில்லை… இதுவே சோர்ந்துபோகாத, இளைப்படையாத அநாதிதேவனின் சிறப்பு அடையாளமாகும்.

— John F. Cowan.
5000 Best Modern Illustrations — page 459.

புறங்கூறுதல்

புறங்கூறுதலுக்குச் செவிக்கொடுக்காதீர்கள் – நீங்களும்
புறங்கூறுபவர்கள் ஆகிவிடுவீர்கள்.

மற்றவரைக்குறித்துப் பேசுகிறவன், தான் நம்பிக்கைக்குப் பாத்திரமற்றவன் என்று நிரூபிக்கின்றவனாய் இருப்பான்.

புறங்கூறுபவன் என்பவன் உண்மைகள் எதையும் அறியாமல் விவரங்களை மாத்திரம் கொடுப்பவனாய் இருப்பான்.

சுவிசேஷத்திற்கும் (Gospel) மற்றும் புறங்கூறுதலுக்கும் (Gossip)
இடையேயுள்ள வித்தியாசம் என்னவெனில் – சுவிசேஷம்
என்பது நற்செய்தியாகவும், புறங்கூறுதல் என்பது துர்ச்செய்தியாகவும்
இருக்கின்றது என்பதே ஆகும்.

வதந்திகளினுடைய பசைதன்மைக்கு ஈடாக எந்தவொரு பசையும் காணப்படுகிறதில்லை.

– Deep Waters and Bubbling Brook.