பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R2220 (page 279)

பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது

PAUL'S HEART REVEALED

அபோஸ்தலர் 20:22-35

“வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும்
வேண்டும்.” (அப்போஸ்தலர் 20:35)

எபேசுவிலுள்ள சபையின் மூப்பர்களிடத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் பேசியுள்ள வார்த்தைகளைக் காட்டிலும், அநேகமாக வேறெந்த வார்த்தைகளும், அப்போஸ்தலனுடைய இருதயத்தை நாம் தெளிவாய் அறிந்துகொள்ள உதவுகிறதில்லை. அவ்வார்த்தைகளானது அவரது விறுவிறுப்பான வாழ்க்கைக்கான, இயக்கும் தூண்டுதல்களாய்க் காணப்பட்டவைகளை, நமக்குக் காண்பித்துத் தருகின்றதாய் இருக்கின்றது. அவர் சௌகரியத்தையோ அல்லது புகழையோ அல்லது உலகப்பிரகாரமான இன்பங்களையோ நாடிடவில்லை. பூமிக்குரிய பலன்களை எதிர்ப்பார்க்காமல் மற்றும் துன்புறுத்துதல்களையும், அவமானங்களையும், தூற்றுதல்களையும், தவறாய் எண்ணப்படுவதையும் பொருட்படுத்தாமல், தேவனைக் கனப்படுத்துவதிலும், அனைவருக்கும் நன்மை செய்வதிலும் பிரியப்பட்டதான தனது போதகருடைய பரிசுத்த ஆவியினை அப்போஸ்தலன் முழுமையாய்ப் பெற்றிருந்தார்.

ஆகஸ்ட் 29-ஆம் தேதியின் போதான நம்முடைய பாடத்தில், அப்போஸ்தலன் மக்கெதோனியாவிற்குப் புறப்பட இருக்கையில், எபேசுவில் அவர் எப்படி “உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டத்தைச் சகித்தார்” என்பதைப் பார்த்தோம். அவர் சுமார் பத்து மாதக் காலங்கள் மக்கதோனியாவிலும், கிரேக்கிலும் காணப்பட்டு, பிலிப்பி, தெசலோனிக்கேயா, பெரோயா மற்றும் கொரிந்து பட்டணங்களின் சபைகளைப் போய்ச் சந்தித்தார் மற்றும் இவைகளுக்கிடையில் இதற்கு முன்பு, தான் போய்ச் சந்திக்காததும், ஆனால் மற்றவர்களால் சுவிசேஷத்தின்மீது ஆர்வம் விழித்தெழப் பண்ணப்பட்டதுமான வடக்கிலுள்ள மற்றப் பட்டணங்களுக்கும் ஊழியம் புரிந்திட்டார். சுற்றி சந்தித்தப் பிற்பாடு அவர் மக்கெதோனியா மற்றும் கொரிந்து சபைகளினுடைய காணிக்கைகளுடன் எருசலேமுக்குப் போய்க்கொண்டிருந்தார். எருசலேமில் பஸ்காவின் காலத்தில் சென்றடைய வேண்டுமென்பதால், அவருக்குக் காலம் குறைவாகக் காணப்பட்டது மற்றும் தரைவழியாய்ப் பிரயாணம்பண்ணி, ஆசியா மைனரிலுள்ள (Asia-Minor) சபைகளைப் போய்ச் சந்திப்பதற்குப் பதிலாக, கடல்வழி பிரயாணம் மேற்கொண்டவராய், தன்னை வந்து சந்திக்கும்படிக்கு எபேசு சபை மூப்பர்களுக்கு, மிலேத்துத் துறைமுகத்திலிருந்து, எபேசுவுக்குத் தூது அனுப்பினார் மற்றும் [R2221 : page 279] அவர்களுக்கு அவர் கொடுத்திட்டதான செய்தி குறித்த லூக்கா அவர்களின் பதிவு பற்றியே நம்முடைய பாடம் காணப்படுகின்றது.

தனக்கு எருசலேமில் ஏதோ ஒன்று விசேஷமாய்ச் சம்பவிக்கவிருக்கின்றது என்றும், இதன் காரணமாகத் தனக்கு மாம்சத்தில் இந்த அருமையான சகோதரர்களை இனிமேல் மீண்டும் சந்திக்கும் சிலாக்கியம் கிடைக்காது என்றும் தேவன் அப்போஸ்தலனுக்குத் தெரியப்பண்ணியிருந்தார். இக்காரியம் சபையினுடைய மூப்பர்கள் அல்லது பிரதிநிதிகளுடனான இந்தச் சந்திப்பை, விசேஷமாய் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாக்கியது மற்றும் அவரது சம்பாஷணையின் முடிவில், அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் கண்ணீருடன் காணப்பட்டனர்.

எபேசுவிலுள்ள கர்த்தருடைய ஜனங்களிலேயே மிகவும் மனப்பூர்வமாகவும், வைராக்கியமாகவும் காணப்படுபவர்களில் உள்ளடங்குபவர்களெனக் கருதப்படுவதற்கு ஏதுவான அச்சபையின் மூப்பர்களென அல்லது விசேஷித்த ஊழியக்காரர்களெனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதான இந்த அருமையான சகோதரர்களை ஊக்குவிக்க விரும்பினவராக, அப்போஸ்தலன் வெகு சுருக்கமாய், அவர்கள் ஏற்கெனவே அறிந்திருந்த காரியங்களை – அதாவது கிறிஸ்துவின் ஊழியக்காரரெனத் தன்னுடைய வழிமுறைகளையும், செயல்முறைகளையும் பற்றின காரியங்களை, அவர்களது மனங்களுக்கு நினைப்பூட்டினார். அவர் தனது அர்ப்பணிப்பின் ஆவியினை, போதகருடைய ஆவியினைக்குறித்து – அவர்கள் கர்த்தர் மற்றும் அவரது ஜனங்களுக்கான ஊழியக்காரர்களாய் அதிக உண்மையுடன் காணப்படுவதற்கு ஏதுவாய்ச் சொல்லிக்கொடுக்க விரும்பிட்டார். சபைக்கு ஊழியம் புரிந்த போதுள்ள தனது சொந்த மனத்தாழ்மைக் குறித்தும், பெருமை ஏதுமற்று அவர்களுக்கு நினைப்பூட்டினார்; இன்னுமாக எப்படி அவர்களுக்குப் பிரயோஜனமாய்க் காணப்பட்ட எதையும் தான் அவர்களுக்கு மறைத்துவைக்காமல், தான் அறிந்திட்டதான தெய்வீகக் குணலட்சணம் மற்றும் திட்டம் குறித்த காரியங்கள் அனைத்தையும் அவர்களுக்குத் தெரிவித்திட நாடினார் என்றும், சான்று இல்லாத மேதாவித்தனமான கருத்துகளைத் தான் சொல்லவில்லை என்றும் அவர்களுக்கு நினைப்பூட்டினார். அப்போஸ்தலன் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள், அதுமுதற்கொண்டு தங்களுக்கு அதிகப்படியான பொறுப்புக் காணப்படுகின்றது என்றும், பரலோகத்திலிருந்து வழிகாட்டப்படும் அதே பாதையில் பின்தொடருவதற்குத் தாங்கள் நாடிட வேண்டும் என்றும் உணர்ந்துகொள்ள வேண்டியவர்களாய் இருந்தார்கள்.

தனக்கான சோதனைகள் இன்னும் முடிவடையவில்லை என்றும், நிச்சயமாகவே இன்னும் பாதகமான காரியங்களே தனக்குக் காத்திருக்கின்றது என்றும் அவர்களிடத்தில் கூறுகையில், அவர் தைரியத்துடன், “ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் [R2221 : page 280] கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்” (அப்போஸ்தலர் 20:24) என்றார்.

பிரயோஜனமான எதையும் தான் மறைத்து வைக்கவில்லை எனும் விஷயத்திலுள்ள தன்னுடைய உண்மைத் தன்மையைக்குறித்து அவர்களது கவனத்திற்குக் கொண்டுவந்த பிற்பாடு மற்றும் வீழ்ந்துபோகிறவர்கள் எவர் விஷயத்திலும் தான் பொறுப்பாளியல்ல என்று இப்படியாக உறுதிப்படுத்திக் கொண்டு, தான் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பவர்கள் பின்வரும் விஷயங்களில் எச்சரிக்கையாய் இருக்கும்படிக்கு, கவனமாய் இருக்கும்படிக்குப் புத்திமதிக் கூறினார்: (1) அவர்கள் தங்களைக்குறித்து எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்; அதாவது அவர்கள் தங்கள் சொந்த அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதிப்படுத்திக்கொள்வதற்கும், அவர்கள் ஆண்டவரால் அங்கீகரிக்கப்படத்தக்கவர்களாய்க் காணப்படத்தக்கதாக, ஆண்டவருடைய அடிச்சுவடுகளில் இப்படியாய் நடந்துகொள்வதற்கும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். மேலும் (2) அவர்கள் ஊழியக்காரர்கள் என்ற விசேஷித்த நியமனத்தை ஏற்றுக்கொண்டுள்ளப்படியால், கர்த்தருடைய மந்தை சார்பில் கூடுதலான பொறுப்பினைப் பெற்றவர்களாய் இருக்கின்றனர் என்றும் நினைவில்கொண்டிட வேண்டும். ஓ! கர்த்தருடைய காரணங்களுக்கான ஊழியக்காரர்கள் யாவரும் இந்தப் புத்திமதியினை இருதயத்திற்குள் எடுத்துக்கொண்டு, பரிசுத்த ஸ்தலத்தில் ஊழியம்புரியும் அனைவர் மீதான பொறுப்பினை உணர்ந்துகொள்வார்களாக. (இது இன்னும் விரிவான விதத்திலும் பொருத்தப்படலாம்; ஏனெனில் ஒவ்வொரு சகோதரனும் மற்றும் ஒவ்வொரு சகோதரியும் சில விதத்தில் தன் சகோதரன் மற்றும் சகோதரிக்குக் காவலாளியாகக் காணப்படுகின்றார் மற்றும் கர்த்தருடைய மந்தையைப் பார்த்துக்கொள்வதற்குப் பொறுப்புடையவராகக் காணப்படுகின்றார்). பரிசுத்தமானவைகளில் தங்கள் ஊழியக்காரர்களாய் இருந்திடுவதற்கென, மூப்பர்களைத் தேர்ந்தெடுத்ததான சபை பற்றினதாக மாத்திரம், மூப்பர்களுடைய பொறுப்பானது காணப்படாமல், மூப்பர்கள் பரிசுத்த ஆவியினுடைய பிரதிநிதிகளாகியுள்ளனர் என்பதினால், இவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதான பொறுப்பினைச் சாதாரணமாய் எண்ணிவிடக்கூடாது என்று அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுகின்றார். அர்ப்பணிக்கப்பட்டவர்கள் அடங்கிய முழுச்சபையும், ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டவர்களாய் இருக்கின்றனர் மற்றும் இதனால் தெய்வீக வழிகாட்டுதலுக்கேற்ப தங்களுக்கான மூப்பர்களைத் தேர்ந்தெடுப்பதிலுள்ள கடமை உணர்ச்சியுடன்கூடிய இவர்களது செயல்பாடானது, பரிசுத்த ஆவியினுடைய செயல் மற்றும் தேர்ந்தெடுத்தலாகக் கருதப்பட வேண்டும்.

இந்த மூப்பர்கள் நியமிக்கப்படுவதற்கான நோக்கமானது, அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுகின்றது போன்று கிறிஸ்துவின் சபையைப் போஷிப்பதற்கும், திவ்விய சத்தியமாகிய அமர்ந்த தண்ணீர்களையும், பசுமையான புல்வெளிகளையும் மந்தையின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்கும் ஆகும். ஆடுகளை மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பிரிவுகளுக்குள் சேர்த்து அடைத்துவிடுவதற்கும் மற்றும் இப்படியாகக் கர்த்தர் ஏற்பாடு பண்ணியுள்ளதானவைகளிடத்தில் மேய்வதிலிருந்து ஆடுகள் தடைப்பண்ணப்படுவதற்கும் இந்த மூப்பர்கள் பொறுப்பினைப் பெற்றுக்கொள்ளவில்லை. ஆடுகள் நன்கு கொழுத்திருப்பதினால் தாங்களே ஆடுகளைப் புசித்திடலாம் என்றும், ஆடுகளின் பொன்னான மயிரினையும் தங்கள் சொந்த ஆதாயத்திற்கென்று, கத்தரித்துக்கொள்ளலாம் என்றும் இவர்கள் எண்ணிவிடக்கூடாது; மாறாக சபை தங்களுடையதாய் இராமல், விலையேறப்பெற்ற இரத்தத்தினால் வாங்கிக்கொண்ட தேவனுக்குரியது என்று இவர்கள் நினைவில்கொள்ள வேண்டும். ஆகையால் இவர்கள் கர்த்தருடைய மந்தைக்கு ஊழியக்காரர்களென (அ) வேலைக்காரர்களென நடந்துகொள்ள வேண்டுமே ஒழிய, மந்தையினுடைய அதிகாரிகளாகவும், ஆண்டவன்மார்களாகவும் நடந்துகொள்ளக்கூடாது.

மந்தைக்குள் பேராசைமிக்க ஓநாய்கள் நுழைந்துவிடும் என்றும், இவர்கள் முழுக்கச் சுயநலமுடையவர்களாய் இருப்பதினால், மந்தையின் நலனுக்கடுத்த விஷயங்களில் அக்கறையற்றவர்களாகவும், தங்களது சொந்த நலன்கள் குறித்து மாத்திரம் கவனம் கொண்டவர்களாகவும் காணப்படுவார்கள் என்ற காரியங்கள் குறித்து, தான் அறிந்திருப்பவைகளை அப்போஸ்தலன் தீர்க்கத்தரிசனமாய்ப் பேசினார். இந்த “ஓநாய்களானது,” “ஆட்டுத்தோல் போர்த்திக்கொண்டு” தங்களை வஞ்சகமாய் முன் வைக்கின்றது; ஏனெனில் மந்தைகள் ஓநாய்கள் குறித்து விழிப்புள்ளவர்களாய்க் காணப்படுகின்றனர். இதனிலும் கொடிதானவைகளை அப்போஸ்தலன் தீர்க்கத்தரிசனமாய்ப் பின்வருமாறு குறிப்பிட்டார்: மந்தைகள் மத்தியிலிருந்து சில “இறுமாப்புள்ளவர்கள்” எழும்புவார்கள்; பெயர், புகழுக்காக ஆசைக்கொள்ளும் இவர்கள் “சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி” தப்பறைகளைப் பிரசங்கம் பண்ணிடுவார்கள். அந்தோ! இந்தத் தீர்க்கத்தரிசனமானது எபேசுவிலுள்ள சபைக்கு மாத்திரம் உண்மையாய் இராமல், அன்று முதல் இன்று வரையிலும் சபைக்கு உண்மையாய் இருந்துள்ளது! தங்களைக்குறித்துப் பிரசங்கிக்காமல், கிறிஸ்துவைக்குறித்துப் பிரசங்கம் பண்ணுவதற்கும், (தங்களுடைய அல்லது மற்ற மனிதர்களுடைய) மனித தத்துவங்களைக்குறித்துப் பிரசங்கிக்காமல், கிறிஸ்துவினுடைய சிலுவையையும், தேவனுடைய வல்லமையையும், விசுவாசிக்கிற யாவருக்குமான தேவ ஞானத்தையும் குறித்துப் பிரசங்கம்பண்ணுவதற்கும் அப்போஸ்தலன் விரும்பினது போன்று விரும்புபவர்கள் எத்தனை சொற்பமானவர்களாகக் காணப்படுகின்றனர். இவ்விஷயங்களிலெல்லாம் அவர்களையும் மற்றும் முழுச்சபையையும் மூன்று வருஷகாலமாய், தான் பாதுகாத்துவந்ததாய் அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுகின்றார்.

இவர்கள் மாறுபாடானவைகளைப் பேசிடுவார்கள் என்று அப்போஸ்தலன் கூறுகின்றார்; அதாவது இவர்கள் பெற்றிருக்கின்றதான மற்றும் மற்றவர்களிடம் பதிய வைக்க இவர்கள் விரும்புகின்றதான ஏதோ சில கருத்துகளுடன் சத்தியத்தினை இசைவாக்கிடத்தக்கதாக, சத்தியத்தைத் திரித்துக்கூறி, புதிய வெளிச்சத்தைக் கண்டுபிடித்தவர்களெனத் தங்களையே உயர்த்திக்கொள்வார்கள். இதற்கு முன்பும், பின்பும் எபேசு சபையில் எழும்பிட்டதான இப்படிப்பட்ட ஐந்து தவறான போதகர்கள் தீமோத்தேயுவுக்கு எழுதப்பட்டுள்ள அப்போஸ்தலனின் நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனர் — இவர்கள் இமெனேயும், அலெக்சந்தரும், பிகெல்லும், எர்மொகெனேயும், பிலேத்தும் ஆவர் (1 தீமோத்தேயு1:20; 2 தீமோத்தேயு 1:15; 2:17).
அவர்கள் மீது வரவிருக்கின்றதானவைகளை உணர்ந்தவராகவும் மற்றும் அவைகளை அவர்களிடம் தன்னால் பகிர்ந்துகொள்ள முடியாது என்கிறபோது, சபையின் பிரதிநிதிகளாகிய அவர்களுக்கு அப்போஸ்தலன் என்ன பரிந்துரைத்தார்? “இப்போதும் நான் உங்களைக் கடவுளிடம் ஒப்படைக்கிறேன்: அவரது அருள் வார்த்தைக்கும் கட்டுப்படுவீர்களாக! அவ்வார்த்தை வளர்ச்சியையும் தூயோர் அனைவருக்குமுரிய உரிமைப்பேற்றையும் உங்களுக்குத் தரவல்லது” (அப்போஸ்தலர் 20:32 திருவிவிலியம்) எனும் இந்த வார்த்தைகள் மூலம் பிரமாண்டமான ஆலோசனையை அவர்களுக்கு வழங்கினார். ஆ! ஆம், திவ்விய வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்றும், தங்களைத் தாங்களே குருடாக்கிக்கொண்டு, எதிராளியானவனால் இன்னும் அதிகமாய் இருளுக்குள் வழி நடத்தப்படுவதற்கு ஆயத்தமாகிக் கொள்வதற்கு ஏதுவாய் வேதவாக்கியங்களைத் தாங்கள் புரட்டிடாதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்றுமுள்ள பரிந்துரையைப்பார்க்கிலும், வேறு எதுவும் சிறந்த பரிந்துரையாய் இருக்க முடியாது. இப்படியாய் அவர்கள் பரலோகச் சுதந்தரத்திற்கு இன்னும் ஆயத்தமாகவில்லை என்றும், அவர்கள் முதலாவதாகப் பரிசுத்தமாக்கப்படுதலில் வளர்ச்சியடைய வேண்டும் என்றும், அவர்களுக்குள் காணப்படும் கர்த்தருடைய வார்த்தைகளின் ஆவியானது, இருதயம் மற்றும் ஜீவியத்தின் பரிசுத்தமாகுதலை அதிகமதிகமாய் உண்டுபண்ணுகிறதாயிருக்க வேண்டும் என்றும் அப்போஸ்தலன் அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார்.

“ஒருவனுடைய வெள்ளியையாகிலும், பொன்னையாகிலும், வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை” (அப்போஸ்தலர் 20:33) என்று எத்தகைய சிறந்ததொரு சாட்சியினைப் பவுலடிகள் தேவனுடைய கிருபையினால் கொடுக்க முடிந்துள்ளது! கூடாரம் செய்யும் தனது தொழிலை, அவர் தன்னுடைய தேவைகள் சந்திக்கப்படுவதற்காக மாத்திரமல்லாமல், தன்னோடுகூடச் சுவிசேஷபணியில் இணைந்துள்ளவர்களுக்குப் பொருளாதார ரீதியில் உதவிடுவதற்கும் பயன்படுத்தினார். அர்ப்பணிப்பின் விஷயத்தில் இத்தனை சிறந்ததொரு முன்மாதிரிக்காகத் தேவனைத் துதிப்போமாக! அப்போஸ்தலன் தனது மீட்பர் போன்று சகிக்க முடியாது மற்றும் அவரைக்காட்டிலும் அதிகம் சகிக்கவில்லை மற்றும் அவரைப்போன்று சகிக்கவுமில்லை என்றாலும், அவர் மேலான முன்மாதிரி என்று கருதப்பட முடியாது என்றாலும், முழுமையான அர்ப்பணிப்பிற்கு அவரது வாழ்க்கையானது அளிக்கும் உதாரணமானது, நமக்கு மிகுந்த நன்மைக்கேதுவாய்க் காணப்படுகின்றது; ஏனெனில் நமது கர்த்தர் பூரணமானவர் – பரிசுத்தர், மாசற்றவர், பாவிகளுக்கு விலகினவர் என்று நாம் நினைவுகூருகின்றோம் – ஆனால் அப்போஸ்தலனோ: அவர் “நம்மைப்போன்று பாடுள்ள மனுஷனாக” இருக்கின்றார் என்றும், தான் பூரணமற்றவர் என்றும், தனது புதிய மனதிற்கு , கிறிஸ்துவுக்குள்ளான தேவ சித்தத்திற்கு, [R2221 : page 281] தனது சரீரத்தை, தான் கீழ்ப்படுத்திட கடமைப்பட்டிருக்கின்றார் என்றும் கூறுகின்றார்.

இப்பொழுதே இச்சம்பாஷணையின் பின்வரும் முக்கியமான வார்த்தைகளுக்கு நாம் வந்திருக்கின்றோம்: “இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்கு (நடப்பித்து) காண்பித்தேன்” (அப்போஸ்தலர் 20:35). இந்த வார்த்தைகள் நம் அனைவருடைய ஞாபகங்களிலும் ஆழமாயப் ; பொறிக்கப்பட்டிருப்பதாக. பலவான்களுக்கு ஆதரவுக்கொடுத்து (அ) பலவான்களைத் தாங்குவதும், பலவீனர்கள் நமக்கு ஆதரவு அளிக்கத்தக்கதாகக் கூடிவர வேண்டும் என்றும், நம்மை ஆதரிக்க வேண்டும் என்றும் எதிர்ப்பார்ப்பதும், உலகத்தின் நியதியாகவும், விழுந்துபோன சுபாவத்தினுடைய பொதுவான மனப்பான்மையாகவும் காணப்படுகின்றது. இது சுயத்தைத் திருப்திப்படுத்தும் விஷயமாகும் – விழுந்துபோன சுபாவத்தினுடைய வழிமுறையாகும்; ஆனால் இதற்கு நேர்மாறானது “புதுச்சிருஷ்டிகளுடைய” வழிமுறையாகும் – புதுச்சிருஷ்டிகள் மற்றவர்களுடைய, அதிலும் விசேஷமாகத் தங்கள் சொந்த குடும்பங்களிலுள்ளவர்களுடைய நலனுக்கடுத்தவைகளை, ஆறுதலுக்கடுத்தவைகளைக் கவனிப்பதில் விழிப்பாய் இருக்க வேண்டும் மற்றும் அப்போஸ்தலனுடைய வார்த்தைகளைச் சபைக்குப் பொருத்துகையில், அது “விசுவாச வீட்டாரிலுள்ள ” பலவீனமான அங்கத்தினர்களுக்கு உதவிசெய்வதற்கு விழித்திருக்க வேண்டும் எனும் கருத்தினை மனதில் பதியவைக்கின்றதாய் இருக்கின்றது. பலவான்கள் ஒவ்வொருவரும் பலவீனர்களுக்கும், குறைவாய்க் கற்றிருப்பவர்களுக்கும் உதவி செய்திடுவதிலும், அனைவரையும் கிறிஸ்துவில் பூரண புருஷனுக்குரிய நிலைக்கு முடிந்தமட்டும் கொண்டுவருவதிலும் மகிழ்ச்சியுடன்கூடிய விருப்பம் கொண்டிருத்தல் வேண்டும்.

அப்போஸ்தலன் இங்குக் கர்த்தரின் ஊழியக்காரனெனத் தான் தலைச் சிறந்திருப்பதற்கான இரகசியத்தைச் சுட்டிக்காட்டுகின்றார் மற்றும் தன் ஜீவியத்தை மாதிரியாக அவரால் சுட்டிக்காட்ட முடிந்ததற்கான காரணம், மாபெரும் போதகரின் வார்த்தைகளை அவர் நினைவுகூர்ந்து, நடைமுறைப்படுத்தியதேயாகும். தன்னையே கொடுப்பது என்பது சந்தோஷமான கிறிஸ்தவ ஜீவியத்திற்கான இரகசியங்களில் ஒன்றாய் இருக்கின்றது. அவர் முதலாவது தனது சித்தத்தைக் கர்த்தருக்குக் கொடுத்தார்; அடுத்து தனது நேரத்தையும், தனது பலத்தையும் / ஆற்றலையும், தனது தாலந்துகளையும் கர்த்தர் மற்றும் அவரது ஜனங்களுக்கான ஊழியத்திற்கென்று கொடுத்தார். மற்றவர்கள் அறிகிறார்களோ இல்லையோ மற்றும் உணர்ந்துகொள்கின்றார்களோ இல்லையோ, அவர் கொடுப்பதற்கும், ஆசீர்வதிப்பதற்கும் விருப்பங்கொண்டிருந்தார்; விரைவில் வாங்கிக்கொள்வதற்கான அவரது காலமும் – கொடுத்திடுவதற்கான கர்த்தருடைய காலமும் வரும். இப்படியானவர்களுக்கு கர்த்தர் நித்தியமான ஜீவனையும், நித்தியமான மகிமையையும், தம்முடைய இராஜ்யத்தில் தம்மோடுகூடப் பங்கையும் கொடுத்திடுவார்.