டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R1847 (page 181)

டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்

TRACT SOCIETY'S INTRODUCTORY LETTERS

Zion Watch Tower Tract Society / சீயோன் வாட்ச் டவர் டிராக்ட் சொசைட்டி சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிமுக கடிதங்கள் அனைத்தையும் திரும்பப்பெற்றுக்கொள்வது நலமாயிருக்கும் என்றும், இனிமேலும் அவைகளை வெளியிட வேண்டாம் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Zion Watch Tower Society / சீயோன் வாட்ச் டவர் சொசைட்டி என்பது ஓர் அலுவல் சமுதாயமேயாகும் (இது எந்த விசுவாசப் பிரமாணங்களையோ அல்லது அறிக்கைகளையோ பெற்றிருப்பதில்லை). இது இதன் அலுவலர்களிடம் சத்தியத்தினைப் பரப்பும் விஷயத்திற்கு, அவர்களது சிறந்த கணிப்பின்படி பயன்படுத்திடுவதற்கு ஒப்புவிக்கப்பட்டுள்ளதான வைப்பு நிதி சம்பந்தப்பட்டதாகும்; அதிலும் விசேஷமாகத் தேவனுடைய இரக்கத்தினால் நன்கொடையாளிகளில் அநேகரை இருளினின்று, அவரது ஆச்சரியமான வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திட்டதான மில்லினியல் டாண் வெளியீடுகளிலும், சீயோன் வாட்ச் டவர் வெளியீடுகளிலும் முன்வைக்கப்படுகின்றதான சத்தியத்தினைப் பரப்பிடும் விஷயத்திற்காகும். நன்கொடையாக அளிக்கப்படும் நிதிகளானது இதழாசிரியரின் வழிகாட்டுதலுக்கு இணங்க எப்படி இந்தச் சொசைட்டி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாகப் பயன்படுத்தப்பட்டதோ, அப்படியே இப்பொழுதும் பயன்படுத்தப்படுகின்றது (இவர் Tract Society / டிராக்ட் சொசைட்டியின் தலைவராவார்). இது “அறுவடை” முடிவடைவதற்கு முன்னதாக ஒருவேளை இதழாசிரியர் மரித்துப்போகும் பட்சத்தில், “அறுவடை” வேலையின் தொடர்ச்சிக்குறித்த கண்ணோட்டத்தில் நண்பர்கள் மற்றும் நன்கொடையாளர்களில் சிலருடைய வேண்டுகோளுக்கு இணங்க ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆகையால் வேறெந்த அலுவலகங்களுக்கு இருப்பதுபோலவே இந்தச் சொசைட்டிக்கும், இது பாத்திரமாய்க் கருதிடும் எவருக்கும் அறிமுக கடிதத்தினைக் கொடுத்திடுவதற்கு அதே உரிமையினைப் பெற்றிருக்கும். எனினும் “சொசைட்டி” என்ற வார்த்தையானது சிலரால் சபை என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்றும், இந்தச் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்களை, ஆணைகளென, அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதென அல்லது நியமனப் பத்திரங்களெனச் சிலரால் கருதப்படுவதற்குமான அபாயம் காணப்படுகின்றது என்றும் நாம் கண்டுபிடித்தோம். வசனம் போதிக்கிறபடி, “பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும்” தவிர்த்துவிட நாம் விரும்பும் காரணத்தினால், இந்தக் கடிதங்களை நாம் நிறுத்தப்போகின்றோம்.

கர்த்தருடைய நாமத்தில் பிரசங்கிப்பதற்கான அதிகாரத்தை ஒரு மனிதனாலோ அல்லது பல மனிதர்கள் சேர்ந்தோ ஒருவருக்குக் கொடுக்கவோ அல்லது எடுத்துப்போடவோ முடியாது. தேவனால் மாத்திரமே இத்தகைய அதிகாரத்தினைக் கொடுக்க முடியும்;; மற்றும் அவரால் மாத்திரமே அதை நீக்கிப் போடவும் முடியும். அவர் இந்த அதிகாரத்தினைத் தம்முடைய ஜனங்கள் அனைவருக்கும், “என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையைச் சொல்வானாக,” என்று கூறிக் கொடுத்திருக்கின்றார் (எரேமியா 23:28). அறிமுக கடிதங்களானது அதிகாரமளிக்கும் கடிதங்கள் ஆகும் – என்றுள்ள கருத்துக்கள் எழும்பாதபடிக்கு நாம் விசேஷமாய் நாடினோம் மற்றும் இதை மிகத் தெளிவாக அக்கடிதங்களே தெரிவிக்கின்றன் ஆனாலும் அவைகள் சிலரால் தவறாய்ப் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதினால், பிற்பாடு அவைகள் அநேகராலும் தவறாய்ப் புரிந்துகொள்ளப்படலாம். ஆகையால் அவைகள் தீங்கு உண்டு பண்ணுவதற்கு முன்பாக, அவைகள் திரும்பப்பெற்றுக்கொள்ளப்படுகின்றது. தேவன் மாத்திரமே அங்கீகாரம் வழங்கிடுவதற்குத் தகுதியான ஒருவர் என்று, இப்படி அழுத்தம் கொடுத்துக் கவனத்திற்குக் கொண்டுவருவதினாலும், Zion’s Watch Tower Tract Society என்பது மத அமைப்பாக இராமல், மாறாக அலுவல் சமுதாயமாகக் காணப்படுகின்றது என்று மறுபடியுமாகச் சுட்டிக்காட்டுவதினாலும், நன்மையே உண்டாகும். இந்தச் சொசைட்டியானது எவ்வித விசுவாசப்பிரமாணங்களையும் கொண்டிருப்பதில்லை (சொசைட்டி) அது – பெற்றுக்கொள்ளப்பட்டதும், செலவிடப்பட்டதுமான பணங்கள் குறித்தக் கணக்குகளை வைத்துக் கொள்ள மாத்திரமே செய்கின்றது; அதாவது எப்படி வங்கியானது போடப்பட்ட பணங்களைப் பெற்றுக் கொண்டு, பணம் என்ன செய்யப்பட்டிருக்கின்றது என்பதைக் காண்பிப்பதற்கு இரசீதுகளைக் கொடுப்பது போலாகும். (சொசைட்டி) அது கோரிக்கைகளை வைப்பதில்லை, வரி விதிப்பதில்லை, பணத்திற்காகக் கெஞ்சவோ அல்லது வற்புறுத்துகிறதோ இல்லை. சாத்தானின் இருளினின்று, தேவனுடைய அன்பான திட்டத்தின் சூரிய வெளிச்சத்திற்குள்ளாக வருவதற்கு உதவப்பட்டவர்களால் அனுப்பப்படும் பணங்களைப் பெற்றுக்கொள்வதற்கும், முடிந்தமட்டிலும் ஞானமாய்ப் பயன்படுத்திடுவதற்கும் (சொசைட்டி) அது ஆயத்தமாய் இருக்கின்றது என்று மாத்திரமே அது தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது.

ஆனால் ஈடுபலியினை அஸ்திபாரமாகக் கொண்டிருக்கும் சத்தியத்தினை விட்டுச்சென்ற ஒருவரிடமிருந்து மந்தையினைப் பாதுகாத்திடுவதற்கு என்ன செய்யப்படலாம்?; “ஆட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு காணப்படுபவர்களுக்கு”- “செம்மறியாடுகள்” எச்சரிக்கையாய் இருப்பதற்கு நன்கு கற்றுக்கொண்டு வருகின்றனர் மற்றும் அவர்கள் அதிக ஜாக்கிரதையாய்க் காணப்பட்டு, அதன் ஆவியினை ஏற்றுக்கொள்ளாமலும் இருக்க வேண்டும். பிசாசின் தந்திரங்களுக்கு அவர்கள் மிகவும் ஜாக்கிரதையாய் விழித்திருக்க வேண்டும். உண்மையான ஆவியானது பின்வருமாறு காணப்படும் என்பதை நினைவில் கொள்வார்களாக; உண்மையான ஆவியானது:-

(1) “முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமுமாக” இருக்கும். வார்த்தையிலும், கிரியையிலும் அல்லது தனிப்பட்ட தோற்றத்திலும் முரட்டுத்தனம், இழிவு அல்லது ஏதேனும் அசுசி அல்லது அசுத்தம் ஆகிய எதற்கும் மற்றும் எல்லாவற்றிற்கும் அவர்கள் எச்சரிக்கையாயிருப்பார்களாக.

(2) அவர்கள் கிறிஸ்துவின் ஆவியானது, சாந்தமும், தயவும் இல்லாமல் இராது என்பதை நினைவில் கொள்வார்களாக. எதிர்த்துப்போராடுகிற, சண்டையிடுகிற, முரட்டுத்தனமான, சுயநலமான ஆவி என்பது, இதைப் பெற்றிருப்பவர் போதகனாய் இருப்பதற்கோ அல்லது “கிறிஸ்துவில் குழந்தைகளாய்” இருப்பதற்கோ தகுதியற்றவர் என்பதைத் திட்டவட்டமாய்ச் சுட்டிக் காட்டுகின்றதாய் இருக்கின்றது. ஆனால் மாய்மாலமாய் மென்மையானவர்களாகவும், சாந்தமானவர்களாகவும் காணப்பட்டு, சந்தேகங்களையும், அவநம்பிக்கைகளையும், பயங்களையும் தோற்றுவித்து, போலியான அன்பினாலும், கண்ணீர்களாலும் விசுவாசத்தையும், நம்பிக்கையையும் அழித்துப் போடுகிறவர்களுமான சிலரைக்குறித்து விசேஷமாய் எச்சரிக்கையாயிருங்கள். இந்த ஆட்டுத்தோலைப் போர்த்தியுள்ள ஓநாய்களைக்காட்டிலும், வெளிப்படையாய் எதிர்ப்பவர்கள் கொஞ்சம் ஆபத்துக் குறைவானவர்களே.

(3) நமக்கான ஈடுபலி விலைக்கிரயமெனக் கிறிஸ்துவினால் செய்யப்பட்டுள்ளதான பணியின் புண்ணியத்தினை வெளிப்படையாய் மறுக்கிறவர்களை அல்லது ஈடுபலியினைப் பற்றிக் கொண்டிருப்பதாக அறிக்கையிட்டும், அதற்குத் தவறான அர்த்தங்களைச் சாற்றி மற்றும் ஈடுபலி எனும் வார்த்தைக்கு, antilutron எனும் அதன் கிரேக்க வார்த்தைக்குமான, சரிநிகர்சமான விலை எனும் அதன் உண்மையான அர்த்தத்தைப் தங்கள் சாதுரியமானப் போலி வாதத்தினால் புறக்கணிப்பவர்களை – உடனே மறுத்து, அவர்களோடு அந்நியோனியமோ அல்லது ஐக்கியமோ கொள்ள வேண்டாம். இத்தகைய தப்பறைகளானது மோசமானவைகளாகவும் மற்றும் மிகுந்த சீர்க்குலைவிற்கேதுவானவைகளாகவும் இருப்பினும், எளிமையாகத் தவறானவை என்று நிரூபிக்கப்படலாம் – ஒன்று அல்லது இரண்டு கணங்கள் போதும்; பிற்பாடு உண்மையான கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டு மற்றும் அவர்களோடு ஐக்கியம் கொள்ளாதிருங்கள் மற்றும் இதற்கு மேலாக ஆராயச் செல்லாதீர்கள்.

(4) குணலட்சணத்திற்கான வெளிப்படையான நிரூபணங்களானது திருப்திகரமாய்க் காணப்படலாம் மற்றும் ஈடுபலி மூலமாக பாவம் மற்றும் அதன் தண்டனையினின்று மீட்டு கிறிஸ்து நமக்கு இரட்சகராகக் காணப்படுகின்றார் என்ற விசுவாச – உபதேச சோதனை முதலாவதாக மேற்கொள்ளப்படுகிறதிலும் வெற்றிகரமாய்க் கடந்துசென்றிடலாம்; ஆனால் இப்பொழுது வருகின்றது அடுத்த ஆய்வு. ஏனெனில் குறைவான முக்கியத்துவமுடைய போதனைகளுங்கூட அவைகள் தேவ வசனத்திற்கு இசைவாய்க் காணப்படுகின்றது என்று கண்டுகொள்ளப்படாத பட்சத்தில், அவைகளை நாம் விழுங்கிவிடக்கூடாது. அவைகளைக்குறித்து நீங்கள் முழுமையாய் நிச்சயமடைவது வரையிலும், எந்த ஒரு புதுக்கருத்தையும் நிரூபிக்கின்றவிதமாய் ஏதேனும் வேத வாக்கியங்கள் காணப்படுகின்றதா என்று பாருங்கள். தியானிக்கும் கருப்பொருளோடு நன்றாய் இசைந்து வருகிற வசன பகுதிகளின் கருத்துகளை மாத்திரம் எடுத்துக் கொள்ளவும். இந்த விதியினைப் புறக்கணிப்பதன் மூலம் அநேகர் தவறு செய்திடுவதற்கு ஏதுவாய்க் காணப்படுகின்றனர்.

(5) Preaching / “பிரசங்கித்தல்” என்பது அறிவுரைகளைக் கொடுப்பதற்கும், பெற்றுக்கொள்வதற்குமுரிய மிகச் சிறந்த வழிமுறைகளில் ஒன்றாய் இருப்பினும், இது விஷயத்தில் சில திறமை உடைவர்களுக்கு மாத்திரமே இது தகுதியானதாய் இருக்கும். மற்றவர்கள் “அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக” மற்ற விதங்களில் ஊழியம் செய்திடுவதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும் (மத்தேயு 25:15). பொது மேடைகளில் செய்திக்கொடுக்கும் பேச்சாளர்களாய் இராத சிலர், மற்றப்படி சிறந்த “போதகசமர்த்தனாய்” காணப்படுகின்றனர் மற்றும் இது உணர்ந்துகொள்ளப்பட்டு, வேதாகம வகுப்புகளில் / Bible class talk -இல் பயன்படுத்தப்பட வேண்டும். மேலும் நல்வசனிப்பைக் கொண்டிருந்தும், தான் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களைக் குழப்புகிற சிலரைப் போன்றில்லாமல், ஒருவர் போதகசமர்த்தனாய் – காரியங்களைத் தெளிவுப்படுத்துவதற்குரிய திறமையுடையவராய் ஆகிடுவது வரையிலும் இத்தகைய நாவன்மை உடையவர்கூட ஊக்குவிக்கப்படக்கூடாது. சிறு கூடுகைகளைப் பொறுத்தமட்டில் sermons / பிரசங்கங்களைக் காட்டிலும் “வேதாகம வகுப்பு” ஆராய்ச்சிகளும், வீடுகளின் வரவேற்பறைகளில் கூட்டங்கள் நடத்துவதும் சிறந்ததாய் இருக்கும் என்பது எங்களது கணிப்பாய் இருக்கின்றது.

(6) சபையில் அடையாளங்கண்டுகொள்ளப்பட்ட பிரசங்கிக்கிறவர் / Preacher இருப்பினும், கூடுமானால், மேலே இடம்பெறும் 1,2,3 மற்றும் 4- இன் கருத்துகளுடைய அடிப்படையில், அனைவரும் பேசுவதற்குரிய கூட்டம் ஒன்று அதாவது ஒரு வேதாகம ஆராய்ச்சி வகுப்பானது நடத்தப்பட வேண்டும்.

(7) கூடுமானமட்டும் வாரத்திற்கு ஒருமுறை ஜெபிப்பதற்கும், துதிப்பதற்கும் மற்றும் சாட்சியைப் பகருவதற்குமான கூடுகைக் காணப்பட வேண்டும் – இது உபதேச ரீதியாகக் கலந்துரையாடுவதற்குரிய கூட்டமாய் இராமல், மாறாக ஆவிக்குரிய பயிற்சிக்கும், சந்தோஷத்திற்கும் மற்றும் தன்னைப் பரிசோதித்துக் கொள்வதற்கும், பரிசுத்தத்திற்கடுத்த காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவிடுவதற்குமான கூட்டமாய்க் காணப்பட வேண்டும்.

(8) அப்போஸ்தலர்களால் நிறுவப்பட்டதான சபைகளானது, சபையார் சார்ந்த அம்சங்களையும் மற்றும் கண்காணிகள் சார்ந்த அம்சங்களையும், இரண்டையும் பெற்றிருப்பதாகத் தெரிகின்றது. சபையார் சார்ந்த அம்சமானது, ஒவ்வொரு சபையாரும், அதன் தலையாகிய கர்த்தரின் கீழ் அதன் காரியங்களுக்கடுத்த அதிகாரத்தைப் பெற்றிருப்பதில் தெரிகின்றது; இந்தத் தலையானவருக்கு மாத்திரமே சபையார் கடமைப்பட்டிருக்கின்றனர் மற்றும் ஒவ்வொரு சபையாரும், அதன் ஊழியங்களை நிர்வகித்துக்கொள்கின்றனர்.

கண்காணிகள் சார்ந்த அம்சமானது, தம்முடைய ஆடுகளுக்கு மாபெரும் மேய்ப்பனாய்க் காணப்படும் கர்த்தர் சுவிசேஷஊழியத்தின் வேலைக்காகப் பரிசுத்தவான்கள் சீர்ப்பொருந்தும் பொருட்டு அவர் மேய்ப்பர்கள், போதகர்கள் முதலானவர்களை அருளுவார் என்று புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றது மற்றும் இப்படியாக எதிர்ப்பார்க்கப்பட்டிருக்கின்றது என்ற உண்மையில் விளங்குகின்றது (எபேசியர் 4:11-13). சபையார் இது விஷயத்தில் கர்த்தருடைய வழி நடத்துதலுக்காகப் பார்க்கின்றனர் மற்றும் அதேவேளையில் எதிராளியானவனால் உருவாக்கப்பட்டுள்ள அநேக கள்ளப் போதகர்கள் காணப்படுகின்றார்கள் என்றும், தங்களுக்கான போதகர்களைத் தாங்கள் சோதித்தறிய வேண்டும் என்றுமுள்ள காரியங்களைக்குறித்து அவர்கள் அக்கறையற்றும் காணப்படக்கூடாது.

போதகர்கள் தேவனால் அருளப்பட்டிருப்பதாக அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு இருக்கும்போதும் மற்றும் இருப்பதுவரையிலும் மற்றும் அவர்களது நடக்கையின் மூலமாகவும், தேவ வசனத்தின் மூலமாகவும், அவர்கள் சபையாரால் அங்கீகரிக்கப்படத்தக்கவர்களாகக் காணப்படும்போதும் மற்றும் காணப்படுவது வரையிலும், அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் கனத்திற்குரியவர்களாய் இருப்பார்கள்; மற்றும் அவர்களது கருத்துக்களுக்கு அதிகம் மதிப்பும் கொடுக்கப்படும் (1 தீமோத்தேயு 5:17; எபிரெயர் 13:17;ரோமர் 12:10; 13:7). [R1848 : page 182] ஆனால் தேவனுடைய வார்த்தை மற்றும் சித்தம் தொடர்புடைய விஷயத்தில் தங்களது பகுத்துணர்தலுக்கு ஏற்ப, எந்தப் போதகரையும், மறுத்திடவும் சபையாருக்கு அதிகாரம் காணவேபடுகின்றது.

(9) அன்பே பூரண சற்குணத்தின் – பூரணத்தின் – ஒரே கட்டாக இருக்கின்றது. உங்களையோ, மற்றவர்களையோ வேறேதாவது கட்டோடு கட்டிக்கொள்ளாதிருங்கள். தேவனைப் பிரதானமாய் அன்பு கூருவது என்பது, மற்றவைகள் எல்லாவற்றையும்விட அவரது வார்த்தைகளுக்கு உண்மையாய் இருப்பதைக் குறிக்கின்றதாயிருக்கும்; சகோதரருக்கான அன்பு என்பது முடிந்தமட்டும் ஒருவர் இன்னொருவருடைய நற்பண்புகள் மற்றும் தாலந்துகளைப் பார்த்திடுவதற்கும் மற்றும் ஒருவர் இன்னொருவருடைய மேலான ஆவிக்குரிய நலன்களை எப்படியாகிலும் நாடுவதற்கும் பெருந்தன்மையுடன் ஆயத்தமாய் இருப்பதைக்குறிக்கின்றதாய் இருக்கும்.

(10) “அமைப்புகள்” யாவற்றையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்; தேவனுடைய குடும்பமெனக் கூடிக்கொள்ளுங்கள்; விலையேறப்பெற்ற இரத்தத்தின்மீதான விசுவாசத்தினால் பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுக்கொண்டதாக அறிக்கைப்பண்ணுகிறவர்களும், “பாவத்திற்கு எதிராய்த் தாங்கள் போராடுவதைத்” தங்களது அன்றாட ஜீவியத்தின் வாயிலாகக் காண்பித்துக்கொள்பவர்களுமான யாவரையும் “சகோதரரென” அடையாளங்கண்டு கொள்ளுங்கள்; உங்கள் மத்தியிலிருந்து கனத்திற்குரிய உங்களது ஊழியர்களைத் தெரிந்தெடுத்துக் கொள்ளுங்கள். தெரிந்துகொள்கையில் உங்கள் சொந்த சித்தத்தையோ அல்லது உங்களுக்கு மகிமை சேர்க்கவோ, உங்களது சகோதரருடைய சித்தத்தையோ, அவர்களுக்கு மகிமை சேர்க்கவோ நாடாமல், இது தொடர்பாக வேத வாக்கியங்களில் இடம் பெறுபவைகளை நினைவில்கொண்டு, தேவனுடைய சித்தத்தையும், அவருக்கு மகிமை சேர்க்கவும் மாத்திரம் நாடுங்கள்.

ஒருவேளை இதழாசிரியர் உங்களிடத்தில் ஏதேனும் விசேஷித்த தூதுவரை அனுப்ப வேண்டிய தருணங்கள் ஏற்படுகையில், தனது பரிந்துரையின் கடிதத்தினை, இதழாசிரியர் அநேகமாக அவரிடம் கொடுத்தனுப்புவார் (இப்படிக் கடிதங்கள் கொடுத்தனுப்புவது என்பது கிறிஸ்தவ அல்லது உலக நண்பர்கள் மத்தியில் வழக்கமான காரியமேயாகும். மேலும் ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையும் தான் யாரை நண்பர்கள் என்று அங்கீகரிக்கின்றார் அல்லது யாரை தேவ ஜனங்களுக்குப் போதகர்களென அறிமுகப்படுத்தி வைக்கின்றார் என்பது தொடர்புடைய விஷயத்தில் விசேஷித்த பொறுப்பினைக் கொண்டிருக்க வேண்டும்). இதழாசிரியரினால் கையெழுத்திடப்பட்டக்கடிதம் ஒன்றினைப் பெற்றிருக்கும் சகோதரன் ஒருவர் உங்களிடத்திற்கு வருவாரானால், அவரை இதழாசிரியருக்கு நன்குத் தெரியும் என்றும், உங்களுக்கு ஜீவ அப்பத்தினைப் பரிமாறிடுவதற்குரிய சில விசேஷித்தத் தாலந்துகளை அவர் பெற்றிருப்பதாக இதழாசிரியர் நம்புகின்றார் என்றும் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.