Q103:1
கேள்வி (1909)-1- 1 கொரி 12:28-ஆம் வசனத்தில் . . . “தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும்; இரண்டாவது தீர்க்கத்தரிசிகளையும்; மூன்றாவது போதகர்களையும்;… ஊழியங்களையும், ஆளுகைகளையும் ஏற்படுத்தினார் என்று நாம் வாசிக்கின்றோம். யார் இந்த ஆளுநர்கள் மற்றும் எந்தளவுக்கு இவர்கள் ஆளுகை செய்வார்கள்?
பதில் – ஆளுநர்கள் என்பதாக வசனம் குறிப்பிடுகிறதில்லை, மாறாக ஆளும் பிரமாணம் / விதிமுறை, ஒழுங்குமுறை அல்லது சட்டம் என்றே குறிப்பிடுகின்றது. முழுச்சபையாரும் தேவனுடைய வார்த்தைகளின் வழிகாட்டுதலில், கூட்டங்களை நடத்திடுவதற்குரிய முறையான ஒழுங்குமுறைக்கடுத்த சில விதிமுறைகளை அங்கீகரிக்கின்றனர். தேவனுடைய பிள்ளையாகவும், கர்த்தருடைய வழியில் வளர்ந்துகொண்டிருப்பவனாகவும் காணப்படும் ஒவ்வொருவனும், கிறிஸ்துவின் சபையிலுள்ள சில ஒழுங்குமுறைகளிலுள்ள ஞானத்தைக் கண்டுகொள்ளும் நிலைக்கு வந்தாக வேண்டும். சபைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளதான ஒழுங்குமுறைகளையும், விதிகளையும் அங்கீகரித்திட விரும்பிடாத எவனும், இவ்விதத்தில் கலகவாதியாக இருப்பான். இந்தத் தேசம் அல்லது இந்தப் பட்டணத்தினுடைய சட்டங்களில் நாம் நம்பிக்கை வைத்திருக்கின்றோம். சட்டங்களோ அல்லது விதிகளோ இல்லாமல் இருப்பதைவிட, அவைகள் பூரணமற்றவைகளாக இருப்பினும், அவைகளில் சிலவற்றைப் பெற்றிருப்பது சிறந்ததாகும். மிக அநேக பிரமாணங்களும் மற்றும் ஒழுங்குமுறைகளும் மற்றும் கட்டுப்பாடுகளும் இருக்கக்கூடுமென நாம் ஒப்புக்கொள்கின்றோம்; எனினும் கர்த்தருடைய சபையானது, தேவன் கொடுக்கிற சுயாதீனத்தைக்குறித்து அறிந்துகொள்வதற்கும் மற்றும் உணர்ந்துகொள்வதற்கும் மற்றும் அதைப் பயன்படுத்திடுவதற்கும் நாடிட வேண்டும் – அனைத்துமே நல்லொழுக்கமாயும், கிரமமாயும் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு சபையாருக்கும் நன்மையாய்க் காணப்படும் அளவுக்குத்தக்கதான சுயாதீனம் காணப்பட வேண்டும் என்பதே ஒவ்வொரு சபையாருடைய நோக்கமாகக் காணப்பட வேண்டும். ஆகையால் தேவனே சபையில் ஒழுங்குமுறையினை நிலைநாட்டினவர் என்று நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.