ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R3751 (page 103)

ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்

TAKE HEED LEST YE BE DEVOURED

“சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள். உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.

நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப்பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.” (கலாத்தியர் 5:13-15)

கர்த்தருடைய ஆவி எங்கேயோ, அங்கே சுயாதீனம் காணப்படும். இது உலகத்தின் சரித்திரத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க விதத்தில் விளங்கியுள்ளது. யூதர்களானவர்கள் நியாயப்பிரமாணத்தினுடைய அறிவுரையைப் பெற்றிருந்ததினாலும், அதன் ஆவியையும் ஓரளவுக்குப் பெற்றிருந்ததினாலும், பல நூற்றாண்டுகள் காலமாக, அவர்கள் ஜெயிக்க முடியாத ஜனங்களாக அறியப்பட்டிருந்தார்கள். அதாவது அவர்கள் அவ்வப்போது சிறைப்பிடிக்கப்பட்டனர், எனினும் சுயாதீனத்தின் ஆவியினால் அவர்கள் மிகவும் ஆட்கொள்ளப்பட்டவர்களாய் இருந்ததினால், அவர்கள் தங்களைச் சிறைப்படுத்தினவர்களுக்கும் மற்றும் பெரிய அண்டை நாடுகளுக்கும் எப்போதும் பிரச்சனைப்பண்ணுபவர்களாகவே இருந்து வந்தனர்.

இதைப் போலவே, ஆனாலும் அதிகமான அளவில், கிறிஸ்தவத்தின் விஷயத்திலும் இருந்துள்ளது; எங்கெல்லாம் தேவனுடைய வார்த்தைக் கடந்து சென்றுள்ளதோ, அதற்கேற்ப சுயாதீனத்தின் மீதான விருப்பத்திற்குரிய தூண்டப்படுதலே விளைவாக இருந்துமுள்ளது. “இருண்ட யுகங்களில்” தேவனுடைய வார்த்தையானது “இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கும் போதும்” மற்றும் இதன் இடத்தில் தவறான போதனைகள் இடம்பெற்றபோதும், சுயாதீனத்தின் ஆவியானது தூங்கிகொண்டிருந்தது மற்றும் உலகத்திலும் ஓரளவுக்குச் சமாதானமும், ஜனங்கள் பொதுவான அடிமை நிலைக்குள்ளாகக் காணப்படும் காரியமும் நிலவினது. சீர்த்திருத்த இயக்கம் வந்த மாத்திரத்தில் சுயாதீனத்திற்கான விருப்பம் மறுபடியுமாக மலர்ந்தது. இதற்குரிய சமீபக்காலத்து உதாரணம் ரஷ்யாவில் பார்க்கப்படலாம்.

கிறிஸ்துவும், அவரது அப்போஸ்தலர்களும் யுத்தத்தையும், அதிருப்தியையும் மற்றும் சண்டைகளையும் கற்பித்துக்கொடுத்ததாகவோ – மோசேயும், நியாயப்பிரமாணமும் இவற்றைக் கற்பித்துக்கொடுத்ததாகவோ நாம் சொல்லவரவில்லை. மாறாக அன்பு, சமாதானம், சகோதர சிநேகம், தயவு, பொறுமை, சாந்தம் முதலானவைகளே நமது கர்த்தர் மற்றும் அவரது [R3751 : page 104] ஊழியக்காரர்களுடைய போதனைகளாக இருந்தது. தேவவார்த்தையினின்று புறப்படும் தாக்கமானது இருவகைப்படும். சிலர் பிரகாசிப்பித்தல் மற்றும் சுயாதீனம் ஆகியவற்றோடுகூடத் தெய்வீக அறிவுரைகளையும் பெற்றுக்கொண்டவர்களாக, ஆவியின் கனிகளைப் பேணி வளர்த்து உருவாக்கிட நாடுகின்றவர்களாய்க் காணப்படுகின்றனர்; வேறு சிலர் அறிவின் வாயிலாகச் சுயாதீனத்தின் ஆவியினைப் பெற்றுக் கொண்டாலும், சத்தியத்தின் ஆவியினைப் பெற்றுக்கொள்ளாதவர்களாகக் காணப்பட்டு, அறிவினை விழுந்துபோன சுபாவத்தினுடைய சுயநலப்போக்குடன் இணைத்துக்கொண்டவர்களாகி, தங்கள் அறிவுத்திறனுடைய பெருக்கத்தின் காரணமாக மிகவும் அதிருப்திக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர்.

சபையின் மீதான சத்தியத்தின் தாக்கம்

உலகத்தின் உண்மையான ஒரு முக்கியப் பாகமாகவும், மேலும் திவ்விய வார்த்தை மற்றும் திட்டம் குறித்த குறைவான அறிவு பெற்றும் மற்றும் திவ்விய அறிவுரைகளுக்குச் செவிச் சாய்ப்பதற்குரிய குறைவான பிரயாசங்களுடன் பூசிமெழுகுகின்றதாகவும் காணப்படும் – பெயர்ச்சபை என்ற ஒன்றும் உள்ளது; ஆனால் பாவத்திலிருந்து திரும்பி, சிந்தையிலும் வார்த்தையிலும் மற்றும் கிரியையிலுமுள்ள முழுமையான அர்ப்பணிப்புடன் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்களை மாத்திரமே மெய்ச்சபையானது உள்ளடக்கிப் பெற்றுள்ளது. இத்தகையவர்களிடத்தில் சத்தியமானது எத்தகைய தாக்கத்தினைக் கொண்டிருக்கின்றது? இந்தப் “புதுச்சிருஷ்டிகளும்கூடத்” தாங்கள் பெற்றுக் கொண்டுள்ளதான அறிவும் மற்றும் அந்த அறிவின் வாயிலாக வரும் சுயாதீனத்தின் ஆவியும், தங்கள் மாம்சத்தின் மீது ஒருவகையான தாக்கத்தினையும் மற்றும் தங்கள் சித்தங்கள், தங்கள் இருதயங்கள் மீது இன்னொரு வகையான தாக்கத்தினையும் கொண்டிருப்பதைக் காண்கின்றார்கள். இவர்கள் தங்கள் இருதயங்களில் – தேவனுடைய பிரமாணங்களைக் கைக்கொள்வதற்கும், யாவரோடும் சமாதானமாய்க் காணப்படுவதற்கும், கிறிஸ்துவினுடைய ஆவியின் கிருபைகளையும், கனிகளையும் பேணிவளர்த்து உருவாக்கிடுவதற்கும் மற்றும் கிறிஸ்துவினுடைய சரீரத்திலுள்ள சகஅங்கத்தினர்களிடம் அன்பாயும், கனிவாயும் நடந்து கொள்வதற்கும் மாத்திரமல்லாமல், உலகத்தாரிடமும் கனிவாய் நடந்து கொள்வதற்கும் விரும்புகின்றனர். ஆனாலும் தங்கள் சொந்த மாம்சத்துடன் போராடும் விஷயத்திலும் மற்றும் வார்த்தையிலும், கிரியையிலும், மாம்சத்தின்மீது புதிய மனமானது ஆதிக்கம் பண்ணிடுவதற்கு அனுமதிக்கும் விஷயத்திலும் அவர்களில் சிலர் அதிகமாயும், சிலர் குறைவாயும் சிரமத்திற்குள்ளாகுகின்றனர்.

“நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப்பட்சித்தீர்களானால்” எனும் நமது ஆதார வசனத்தினுடைய வார்த்தைகளின் அர்த்தத்தினை எந்தக் கிறிஸ்தவன் அனுபவத்தின் வாயிலாக அறியாமல் இருப்பான்? ஒருவேளை மாம்சத்தினுடைய பெலவீனம் மற்றும் ஒருதலையான விருப்பு வெறுப்புகளினின்று விலக்கி, பிரித்துவைத்து, ஒருவேளை தேவஜனங்களின் இருதயங்களிடம், அவர்களது சித்தங்களிடம், அவர்களது நோக்கங்களிடம், விசாரிக்கப்பட்டால் / கேட்டுக்கொள்ளப்பட்டால், அவர்கள் ஒவ்வொருவருமே தனது சகோதர சகோதரிகளுடன் சமாதானமாய் வாழ்வதற்கும், தனது சாந்தத்தின், அமைதலான பண்புகளின், தனது கனிவின், சகோதர சிநேகத்தின் வாயிலாக தேவனை மகிமைப்படுத்திடுவதற்கும், உரிய தனது விருப்பத்தின் விஷயத்தில் பூரணமாய் இணங்குபவர்களாய் இருப்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் இப்படியாக முடியாது, ஏனெனில் சுயநலத்தினால் வருந்தத்தக்க விதத்தில் உருச்சிதைக்கப்பட்டு, திரிந்த நிலையில் காணப்படுகின்றதான பழைய சரீரத்தில் புதிய சித்தத்தினைப் பெற்றிருக்கின்றோம் மற்றும் புதிய சித்தமானது, மாம்சத்திற்கு எதிராக “நல்லதொரு போராட்டம் போராடிட வேண்டும்” மற்றும் நீதியானவைகளை, மேலானவைகளை, நலமானவைகளைச் செய்ய – இவைகளைக் குறைபாடுகளுடனே அடையப் பெற்றாலும் – இவைகளைச் செய்ய நாடிடவும் மற்றும் இவைகளை விரும்பிடும் அளவிற்காகிலும் நாம் ஜெயம் கொண்டிட வேண்டும். [R3752 : page 104]

சத்தியமானது பெலவீனமானவர்களைவிட பலமான பாத்திரங்களையே பற்றிக்கொள்கின்றதாகத் தெரிகின்றது. ஜெயங்கொள்பவர்களாகிய “சிறுமந்தையினரில் அங்கத்தினர்களாய் இருப்பதற்குக் கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படாத பலமில்லாதவர்கள் மற்றும் எளிதில் மிகவும் வளைந்து கொடுப்பவர்கள் அநேகரைக் காட்டிலும் இந்தப் பலமான பாத்திரங்கள் தங்களது மாம்சத்தில் மிகுதியான உறுதியையும், மனோதிடத்தையும், எதிர்த்துப்போராடும் தன்மையையும் பெற்றிருக்கின்றனர். இப்படியாகப் பார்க்கும்போது நம்மைக் கர்த்தர் ஏற்றுக்கொள்வதற்கு ஏதுவாக்கின அதே பண்பே மற்றும் ஜெயங்கொள்ளும் நிலைக்கு ஏதுவாக்கின அந்த ஒரே தகுதியே, வீரியமான பாத்திரங்கள் சபையாகக்கூடிடும்போது, சில விதங்களில் கவலைக்கிடமாய் அனுகூலமற்றதாகக் காணப்படுகின்றது. சேற்றினால் சூழ்ந்திருக்கும் வைரத்தினால் எதையும் வெட்டமுடியாது, எதையும் கீறிட முடியாது; ஆனால் திரளான வைரங்களை ஒன்றாய் வைத்துப் பாருங்கள், சேறு அதிகமாய் அப்புறப்படுத்தப்படும்போது, கீறல்களும், உரசல்களும், வெட்டுதல்களும் அதிகமாய் ஏற்படுகின்றது. இப்படியாகவே கர்த்தருடைய சம்பத்தின் விஷயத்திலும் காணப்படுகின்றது – அவர்கள் அதிகமாய் ஒன்றுகூடுகையில், அவர்கள் அதிகமாய் விழிப்படைகின்றார்கள்; பிணக்குகளுக்கும் அதிகம் வாய்ப்புக் காணப்படும் மற்றும் வழவழப்பாகவும், பிசுபிசுப்பாகவும், உராய்வைத் தடுக்கிறதாகவும் உள்ள எண்ணெய் போன்றதான பரிசுத்த ஆவியினால் அவர்கள் அனைவருமே முழுமையாய் நிரம்பப் பெற்றிருப்பதற்கும், மூடப்படுவதற்கும் மிகுந்த அவசியம் காணப்படுகின்றது.

சோதனைகள் அதிகரிக்கும்

ஒரு விதத்தில் பார்க்கையில், கர்த்தருடைய ஜனங்கள் கிருபையிலும், அறிவிலும் மற்றும் ஆவியின் கனிகளிலும், வரங்களிலும் வளர்கையில், சபையில் பிணக்குகள் ஏற்படுவதற்கான அபாயம் குறைவானதாகவே இருக்க வேண்டும் என்று நாம் காண்கிறோம்; ஆனால் இன்னொரு விதத்தில் கரடுமுரடானவைகளைக் காட்டிலும், மெருகிடப்பட்டுள்ளதான வைரங்களே அதிகமான உரசலை ஏற்படுத்தும் என்பதை நாம் நினைவில் கொள்வோமாக. சத்தியத்திலுள்ள நமது ஆரம்பக்காலக்கட்ட அனுபவங்களின்போது, நாம் கொஞ்சம் குழந்தைகளைப் போலவே காணப்பட்டிருந்தோம் – நாம் கற்றுக்கொண்டு வருகின்றதான பாடங்கள் தொடர்புடைய விஷயத்தில் ஒருவரோடொருவர் சண்டையிடுவதற்கும், வாக்குவாதம் பண்ணுவதற்கும் நமக்கு அதிகம் தெரியாமல் இருந்தது. ஒவ்வொருவரும் அறிவிலும், சத்தியத்தின் புரிந்துகொள்ளுதலிலும் வளரும்போது, இதுபோலவே சத்தியத்தின் ஆவியிலும் வளர வேண்டும்; இல்லையேல் ஒருவர் அறிவின் விஷயத்தில் வளர்ந்திருப்பது என்பது, அவர் அறிவின் விஷயத்தில் குழந்தையாய்க் காணப்பட்டபோது இருந்ததைக்காட்டிலும் இப்போதே தனது அருமையான சகோதர சகோதரிகளுக்கு மிக அதிகமான விதத்தில் சோதனையாய் அமைவதைக் குறிக்கின்றதாயிருக்கும்.

இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கையில், நம்முடைய நாட்களில் வெளிப்படும் ஒவ்வொரு சத்தியத்தினுடைய, விசேஷமாக தேவ வார்த்தையினுடைய வெளிச்சத்தில், வருடாவருடம் பிணக்குகள் அதிகம் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது என்றும், 1906-வருடத்திற்கான “சகோதரரே நீடிய பொறுமையாயிருங்கள்” (யாக்கோபு 5:7) என்ற வசனத்தினை நாம் நினைவில்கொள்வதற்கு மிகுந்த அவசியத்தினைப் பெற்றிருக்கின்றோம் என்றும் அறிந்துகொள்வதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவ்வசனத்தினுடைய முந்தின பாகமானது – இவ்வார்த்தைகள், விசேஷமாய் யுகத்தினுடைய முடிவு காலத்திற்குப் பொருத்திடுவதற்கான நோக்கத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு உபத்திரவத்தின் காலமானது, அதாவது ஐசுவரியவான்களுக்கும், தரித்திரருக்கும் இடையில் விழுந்துபோன சுபாவத்தினுடைய சுயநலம் மற்றும் அறிவு பெருக்கத்தின் அடிப்படையில் வரவிருக்கின்றதான போராட்டமானது, துல்லியமாய் விவரிக்கப்பட்டுள்ளது. பின்னர் “சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார்; இப்படியிருக்க சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள்” என்ற புத்திமதி கடந்துவருகின்றது (யாக்கோபு 5:9,7).

நாம் பார்த்துவருகிற பாடமும், நாம் ஆராய்ந்துவருகின்றதான இவ்வசனத்திற்கு முழு இசைவாகவே காணப்படுகின்றது. நமக்குப் பொறுமை அவசியமாய் இருக்கின்றது; முக்கியமாய் நம்மைப் போலவே இடுக்கமான வழியில் நடப்பதற்கும், இராஜ்யத்தில் நமது கர்த்தருடன் உடன் சுதந்தரத்தை அடைவதற்கும் நாடுகிறவர்களுக்கு எதிராக எவ்வகையான விரோதங்களையோ அல்லது கடுமையான உணர்வுகளையோ நாம் கொண்டிருப்பது, நமக்குத் தகுதியாய் இராது என்பதை நாம் நினைவில் கொள்வது அவசியமாய் உள்ளது. மற்றவர்களுடைய நலனுக்காக நாம் நமது சொந்த உரிமைகள், சுயாதீனங்கள் மற்றும் சிலாக்கியங்கள் சிலவற்றினைத் தியாகம் பண்ணிட விருப்பமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். இது சத்தியம் தவறாய்ப் பேசப்படும்போது, அதற்காக பேசிடுவதற்கு நாம் உரிமையினையும், வாய்ப்பினையும் கொண்டிருக்கும்போது, நாம் அமைதலாய் இருந்து, அதைக் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் குறிப்பிடப்படவில்லை. சத்தியத்திற்கு ஆதரவாய், தப்பறைக்கு எதிராய் நாம் கருத்தூன்றி போராடிட வேண்டும், ஆனால் நாம் சகோதர சகோதரிகளுக்கு எதிராகப் போராடிடக் கூடாது. கர்த்தர் அப்போஸ்தலர்கள் வாயிலாக நமக்குக் கொடுத்திட்டதான நமது கிறிஸ்தவ விசுவாசத்தினுடைய அஸ்திபாரமாகிய ஈடுபலியினை மறுதலிக்கிறவர் யாரேனும் காணப்படும் பட்சத்தில், இத்தகையவரிடத்தில் எவ்வகையான ஐக்கியமும் நாம் வைத்திருப்பது தொடர்புடைய விஷயத்தில், எத்தனை உறுதியாய்க் காணப்பட வேண்டும் என்பதில் எந்த ஐயமும் நாம் அடைய வேண்டியதில்லை (1 கொரிந்தியர் 5:11). ஆனால் சத்தியத்தின் கொள்கை உட்படாத நிலையில் சகோதர சகோதரிகளின் மத்தியில் பிணக்குகள்/உராய்வுகள் ஏற்படக்கூடிய பல்லாயிரம் விஷயங்கள் காணப்படும்; மற்றும் இவைகளை ஒற்றுமை, சமாதானம் மற்றும் ஐக்கியத்தின் நலன் கருதி, விட்டுவிட விருப்பமும், மகிழ்ச்சியும் கொண்டவர்களாய் இருத்தல் வேண்டும். எனினும் இது சரியான தருணங்களில், சத்தியம் பற்றின நம்முடைய புரிந்துகொள்ளுதல்களை நாம் முன்வைத்திடக்கூடாது என்பதைக் குறிக்கின்றதாய் இராது; மாறாக காரியங்களை நாம் பார்க்க முடிகின்றதுபோல, பார்க்க முடியாதவர்களிடத்தில் நாம் முன்வைக்கும் காரியங்களை வற்புறுத்தவோ, திணிக்கவோ வேண்டாம்.

நம்முடைய பாடத்தின் ஆதார வசனத்தில் கர்த்தருடைய ஜனங்கள் மத்தியிலும்கூடச் சிலர் மற்றவர்களுடைய முரட்டுத்தன்மை மற்றும் அவதூறுகளினால் “கடிக்கப்பட்டு” காயமடைவதோடு மாத்திரமல்லாமல், பழிக்குப்பழி வாங்கும் மனப்பான்மை உண்டாகும் இம்மாதிரியான சூழ்நிலை ஏற்படும் என்றும், அது தேவபிள்ளைகளுக்குத் தகுதியாயிராததும், [R3752 : page 105] நாய்கள் சண்டையிடுவதற்குக் கிட்டத்தட்ட ஒத்திருக்கிறதுமான சண்டைச்சச்சரவாய்க் காணப்படும் என்றும் அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுவதாகத் தெரிகின்றது.

“நீங்கள் ஒருவரையொருவர் பட்சிக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்” என்று அப்போஸ்தலன் வலியுறுத்துகின்றார். சுவிசேஷத்தின் மூலமாய் நம்முடையது என்று நாம் அறிந்திருப்பதான சுயாதீனம் பற்றின நம்முடைய புரிந்துகொள்ளுதலில், நாம் சிறியதும், பெரியதுமான நம்முடைய சுயாதீனங்களுக்காக நாம் மிகவும் போராடுகிறவர்களாய் இருந்து, இதனால் கிறிஸ்து மரித்துள்ளதான ஏதோ ஒரு சகோதரனை நாம் பட்சித்துப்போடுவோமானால் என்னவாகும்! ஒருவரைக் காயப்படுத்துவதினால், நம்முடைய சொந்த ஆவிக்குரிய ஜீவியங்களை விஷமாக்கிப்போட்டு, நாமும் பட்சிக்கப்பட்டுப் போகுமளவுக்கு – கர்த்தர் நம்மை அழைத்துள்ளதும், ஓட்டத்தினை நாம் ஓடுவதற்குமான கிருபையான காரியங்கள் தொடர்புடைய விஷயங்களில் இழப்பிற்குள்ளாகுமளவுக்கு, சண்டையின் ஆவி நம்மிடத்தில் கிரியைப் பண்ணுமானால், என்னவாகும்! “நீங்கள் ஒருவரையொருவர் பட்சிக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்” என்ற அப்போஸ்தலனின் வார்த்தைகள் நம்முடைய இருதயங்களில் ஒலித்துக்கொண்டிருப்பதாக.

இந்தச் சிந்தையினை நம்முடைய மனங்களில் கொண்டவர்களாக, நம்முடைய சொந்த மாம்ச பெலவீனங்களுக்கு எதிராக போராடுவதற்காகவும் மற்றும் உலகம், மாம்சம் மற்றும் எதிராளியானவனுக்கு எதிராக நல்லதொரு போராட்டம் போராடத்தக்கதாக மாதிரியினாலும், வார்த்தையினாலும் சகோதரருக்கு உதவி செய்து, அவர்களுக்காகப் போராடத்தக்கதாகவும் அதிகமதிகமாய்த் தேவனுடைய சர்வாயுதவர்க்கங்களைத் தரித்துக் கொள்வோமாக.