தீமை பேசுதல் என்றால் என்ன?

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R5528 (page 264)

தீமை பேசுதல் என்றால் என்ன?

WHAT IS EVIL SPEAKING?

“ஒருவனையும் தூஷியாமல் இருங்கள். (தீத்து 3:2)

அப்போஸ்தலனுடைய கட்டளையானது மிகவும் திட்டவட்டமாயுள்ளது; நாம் யாரைக்குறித்தும் தீமைபேசிடக்கூடாது. அப்படியானால், பரிசுத்த பவுல் இங்கு என்ன அர்த்தத்தில் பேசியுள்ளார்? மனுஷனுக்கு எதிரான தீமையான நோக்கத்தில், நாம் அம்மனுஷன் குறித்த எதையும் பேசிடக்கூடாது என்ற அர்த்தத்தில் கூறுகின்றாரா? அல்லது நோக்கம் என்னவாக இருப்பினும் சரி, தீமை பேசாதே எனும் அர்த்தத்தில் கூறுகின்றாரா? என்ற கேள்விகள் எழும்புகின்றன. தவறான நோக்கத்தோடு, தவறான எண்ணத்தோடு தீமை பேசுதல் என்பது, மிகக் கொடிதான குற்றமாக, விசேஷமாக தேவனுடைய பிள்ளைக்கு இருக்குமென நாம் நிச்சயமாய் அறிவோம் என்று நாம் பதிலளிக்கின்றோம். உங்களது நோக்கம் என்னவாக இருப்பினும் சரி, யாரைக்குறித்தும் தீமை பேசாதிருங்கள் எனும் அர்த்தத்திலேயே அப்போஸ்தலன் கூறியுள்ளார் என்று நாம் எண்ணுகின்றோம். ஒருவேளை இதுதான் அப்போஸ்தலனின் கருத்தாக இருக்குமானால் மற்றும் இதுதான் கருத்து என்பது மறுக்கப்பட முடியாது என்றும், அக்கருத்தானது, கர்த்தருடைய ஜனங்கள் அனைவர்மேலும் மிகவும் கண்டிப்பான கட்டளையை வைக்கின்றதாய் இருக்கின்றது என்றும் நாம் நம்புகின்றோம். தீமை பேசுவதற்கான நோக்கம் தீயதாக இருக்குமானால், காரியம் மிக மோசமானதாய் இருக்கும்; ஆனால் நல்லதோ, தீயதோ, “ஒருவனையும் குறித்துத் தீமை பேசாதிருங்கள்.

இப்பொழுது தீமை பேசுதல் என்றால் என்ன? என்ற வேறொரு கேள்வியும் எழும்புகின்றது. இவ்விஷயத்திற்கு அநேகம் பாகங்கள் இருக்கின்றன. தீமை பேசுதல் என்பது, கெடுதல் உண்டாக்குகிறதைப் பேசுகிறதாய் இருக்கும்; ஆகையால் எந்த மனுஷனுக்கும் கெடுதல் உண்டாக்கும் எதையும் ஒருவன் பேசிடக்கூடாது. நாம் பொன்னான பிரமாணத்தைப் பொருத்திப் பார்ப்போமானால் இக்கட்டளையினுடைய நீதியும், நியாயமும் மிக எளிமையாகப் புரிந்துகொள்ளப்படலாம். யாரேனும் நமக்குத் தீமை செய்திட நாம் விரும்புவோமா? யாராவது – நம்மை மரியாதைக் குறைவாகப் பேசுவதை, நம்முடைய தவறுகள் குறித்து விமர்சிப்பதை அல்லது பேசுபவர் நம்மிடத்திலுள்ள தவறு என்று கருதிடும் காரியங்கள் குறித்து அவரால் விமர்சிக்கப்படுவதை மற்றும் இப்படியாக மற்றவர்களுடைய பார்வையில் நம்மை இழிவுப்படுத்திடுவதை – நாம் விரும்புவோமா? கர்த்தருடைய ஜனங்கள் பொன்னான பிரமாணத்தினை ஜீவியத்தின் ஒவ்வொரு காரியங்களிலும் செயல்படுத்திட கற்றுக்கொள்வார்களானால், அது நிச்சயமாய் மிகவும் உதவிகரமாயிருக்கும்.

இந்த விஷயத்தில் மிகுந்த கடமை உணர்சியுள்ள கிறிஸ்தவர்கள் சிலருக்குச் சிரமம் காணப்படுகின்றது. தீமை பேசுதல் எனும் இக்காரியத்தைச் சிந்திக்கையில், என்னுடைய நோக்கம் சரியானதா? எனறு; சிலர் சிந்திக்கின்றவர்களாய் இருக்கின்றனர். அப்போஸ்தலனுடைய கட்டளைக்கும், மற்றவர்களை இழிவாய்ப் பேசுவதிலுள்ள தங்களது நோக்கத்திற்கும் எச்சம்பந்தமும் இல்லை என்பதை இவர்கள் மறந்துவிடுகின்றனர். நோக்கம் என்னவாக இருப்பினும், நாம் தீமை பேசிடக்கூடாது. எனக்கு நல்ல நோக்கம் காணப்படுகின்றதா அல்லது கெட்ட நோக்கம் காணப்படுகின்றதா? என்பது கேள்வியல்ல; மாறாக நான் தீமை பேசுகின்றேனா? பொன்னான பிரமாணத்திற்கு முரணாக – அதாவது என்னைக்குறித்துப் பேசப்படுவதை நான் விரும்பிடாத – மற்றவர்களைக் குறித்த எதையாவது நான் பேசுகின்றேனா? என்பதுதான் கேள்வி. இக்கட்டுரையினை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனுடைய இருதயங்களிலும், மனங்களிலும் இக்கருத்தினைப் படிப்படியாகப் பதியவைத்திட நாம் விரும்புகின்றோம்.

விதிமுறைகள் மீறப்பட்டது குறித்துத் தகவல் அளிப்பது தீமைபேசுதலா?

இப்பொழுது எழும் இன்னொரு கேள்வி என்னவெனில்: நம்முடைய ஆதார வசனத்தின் கட்டளையை நாம் எப்படி இல்லத்தில் அல்லது அலுவலகத்தில் ஏற்படும் சந்தர்ப்பங்களில் கடைப்பிடித்திட வேண்டும்? நாம் காணப்படுகின்றதான இல்லத்திலோ, அலுவலகத்திலோ, அந்த அலுவலகத்தின் அல்லது வீட்டின் நிர்வாகத்திற்கெனக் குறிப்பிட்ட சில விதிமுறைகள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்ளுவோம். இம்மாதிரியான சந்தர்ப்பத்தில், அந்த விதிமுறைகள் மீறப்படுகிற காரியத்தினைக்குறித்து நாம் தகவல் கொடுப்பது நம்முடைய சார்பில் நாம் தீமை பேசுவதாய் இருக்குமா? அது தீமை பேசுதலாய் இருக்குமென நாம் கருதுகிறதில்லை. ஒருவேளை நாமே விதிமுறைகளை மீறும் பட்சத்தில், நம்மைக்குறித்துத் தகவல் கொடுக்கும் நபர் சரியான காரியத்தையே செய்கின்றார் – அவர் நமக்குத் தீமையோ அல்லது கெடுதலோ அல்லது பாதகமோ செய்கிறதில்லை. விதிமுறைகள் மீறப்படுகிற காரியத்தைக்குறித்துத் தகவல் கொடுக்காத நபர், தவறான நடத்தையில் நாம் தொடர்ந்து கொண்டிருப்பதற்கு நம்மை ஊக்குவிப்பவராக இருந்திடுவார்.

எந்தவொரு வழிமுறையினை மேற்கொள்கையிலும், தேவனுடைய ஜனங்கள் எப்போதும் நல்ல நோக்கங்களையே கொண்டிருக்க வேண்டுமே ஒழிய, வேறு எதையுமல்ல. மற்றவர்களைக் கையாளும் விஷயத்தில் நல்நோக்கத்தினை இல்லாமல், வேறு நோக்கத்தினைக் கொண்டிருப்பது என்பது கொலைப்பாதக நோக்கத்தினைக் கொண்டிருப்பதாகும். மேலும் தீமை பேசுதல் விஷயத்தில், நாம் நோக்கத்தினை பொருட்படுத்திடக்கூடாது. ஓர் அலுவலகத்திலோ, ஓர் இல்லத்திலோ அல்லது ஒரு நிறுவனத்திலோ, வேலை ஒன்றினைப் பொறுப்பேற்கும் ஒருவர், அந்த வேலை தொடர்புடையதான நிபந்தனைகளுக்கும், பலவகையான விதிமுறைகளுக்கும்கூட ஒப்புக்கொள்கின்றார். அலுவலகத்திலோ அல்லது இல்லத்திலோ காணப்படுகின்றதான கிட்டத்தட்ட அனைத்து விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் யாருக்கேனும் பாதகம் ஏற்படுத்த வேண்டும் எனும் கண்ணோட்டத்தில் இல்லாமல், மாறாக தொழிலினுடைய அல்லது குடும்பத்தினுடைய பொதுவான நலனிற்காகவே ஏற்படுத்தப்படுகின்றது என்பதில் ஐயமில்லை. ஆகையால் இந்தக் கடமைகள் யாவற்றையும் கடைப்பிடிப்பது என்பது, முக்கியமான பொறுப்பாயுள்ளதெனக் கருதப்பட வேண்டும். விதிமுறைகள் மீறப்பட்டுள்ள காரியத்தினை ஒருவர் தீமையான விதத்தில் தகவல் கொடுக்காமல், மாறாக உண்மையை மாத்திரமே தகவல் கொடுத்திட வேண்டும்.
[R5529 : page 265]

தகவல் கொடுத்திடும் ஒருவர், தான் யாரைக் குறித்துத் தகவல் கொடுக்கின்றாரோ, அவரின் இருதயத்தை நியாயந்தீர்ப்பதற்கு இவருக்கு அவசியமில்லை. கேள்வி, கெட்ட இருதயம் பற்றினதல்ல. ஒருவர் முட்டாளாகவோ அல்லது மறதியுடையவராகவோ அல்லது கவனமற்றவராகவோ காணப்பட்டு, முக்கியமான விதிமுறைகளை மீறுவாரானால், இவ்விஷயம் குறித்துத் தகவல் கொடுப்பது என்பது, அதுவும் தகவல் கொடுத்திடுவதற்கு விதிமுறைக் காணப்படும் சந்தர்ப்பங்களில் தகவல் கொடுப்பது என்பது, இருதயத்தை நியாயந்தீர்ப்பதாய் இருக்காது. அது கடமையாக மாத்திரமே காணப்படும் – கட்டளையிடப்பட்டதைச் செய்ததாக மாத்திரம் காணப்படும் மற்றும் இது அவசியமானதாகவும், முறையானதாகவும் இருக்கின்றது. இந்தக் கொள்கையானது, தேவனுடைய செய்கையாகிய நம்முடைய சரீரங்களில் காணப்படுவதை நாம் பார்க்கின்றோம். சரீரத்தில் ஏதாகிலும் நடக்கிறதெனில் – உதாரணத்திற்கு விரல் ஒன்று நசுக்கப்படுகிறதெனில், நரம்புகளானது உடனடியாக மூளைக்குச் செய்தி அனுப்பிவிடுகின்றது. ஒருவேளை பாதத்தில் காயம் ஏற்பட்டால், இச்செய்தி உடனடியாக மூளைக்கு அனுப்பிவிடுகின்றது. சரீரத்திலுள்ள ஓர் அவயவத்திற்கு ஏற்பட்ட தீங்கினை, மூளைக்குச் செய்தி அனுப்பிடுவதற்கான தொடர்பு வழிவகை இல்லையென்று வைத்துக்கொள்ளுங்கள்; செய்தியினை அனுப்பிடுவதற்கு உணர்ச்சி நரம்புகள் இல்லையென்று வைத்துக்கொள்ளுங்கள்; இப்படி இருக்குமானால், ஒருவன் தனது கைவிரலையோ அல்லது கால்விரலையோ தான் இழந்துள்ளானா அல்லது இல்லையா என்பதை அறியாதவனாய் இருப்பான். அவன் கால் தடுமாறி, விழுவது வரையிலும், தான் ஒரு காலை இழந்துள்ளான் என்பதை அறியாதவனாய் இருப்பான்.

விஷயம் குறித்து, விதியைப் புறக்கணித்தவரிடம் விவாதிக்கப்படக்கூடாது

நம்முடைய சொந்த தனிப்பட்ட காரியங்களானது, தாக்கப்படக்கூடாது என்று எப்போதும் பார்த்துக்கொள்பவர்களாக நாம் காணப்படக்கூடாது. நாமும் சரி, மற்றவர்களும் சரி அபூரணங்களைப் பெற்றிருக்கின்றோம் என்பதை நாம் அறிவோம். ஒருவேளை மற்றவர்கள் கவனக்குறைவினால் நம்மைக் காயப்படுத்திடுவார்களானால், நாமும் சிலசமயங்களில் மற்றவர்களைக் காயப்படுத்திட வாய்ப்புண்டு என்பதை நாம் அறிவோம். ஆனால் தனிப்பட்ட காரியங்கள் என்பது குடும்பம் அல்லது அலுவலகம் சம்பந்தப்பட்ட காரியங்களிலிருந்து வேறுபட்டவைகளாய் இருக்கின்றன. இல்லத்தினுடைய அல்லது அலுவலகத்தினுடைய விதிமுறைகள் மீறப்படுகிற காரியத்தினைக் குறித்துத் தகவல் கொடுப்பது என்பது அந்நிய காரியங்களில் தலையிடுகிறதாய் இராது. ஒரு குடும்பத்தினுடைய அல்லது ஒரு நிறுவனத்தினுடைய ஒவ்வொரு அங்கத்தினனுடைய நலம் கருதியே, முறையான மற்றும் நியாயமான விதத்தில் முழுக்குழுவினருடைய நலன்களானது பார்த்துக்கொள்ளப்படுகின்றது.

அலுவலகத்தில் காணப்படும் ஒருவர், அலுவலகத்தில் காணப்படும் அனைவரையும் சரிப்படுத்த முற்படுவது என்பது முறையான காரியமல்ல. ஒருவன் சுற்றித்திரிந்து மற்றவர்களைச் சரிப்படுத்திட முற்படக்கூடாது; அது அவன் காரியமாய் இராது. ஒருவேளை வேறொருவன் விதிமுறைகளை மீறுகிறான் என்றால், உண்மைகளோடு எதையும் சேர்த்துச் சொல்லாமல், உண்மைகளைத் தகவல் கொடுப்பது அவனது காரியமாய் இருக்கும். ஒருவேளை இப்படி இல்லாமல், ஒருவேளை மீறுதலைக் கவனிக்கும் ஒவ்வொருவரும், விதிமுறைகளை
மீறினவரிடத்தில் போய், இப்படியாக அலுவலகத்திலோ, குடும்பத்திலோ காரியத்தைச் சரிப்படுத்த முற்படுவார்களானால், தொடர்ந்து குழப்பமே நிலவும். விதிமுறையினை மீறினவர் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் விதமாக, “என் நடத்தை அனைத்தும் சரியாகவே உள்ளது மற்றும் வாயிற்கதவு (gate) திறந்து கிடந்தாலும் சரி, மூடிக்கிடந்தாலும் சரி, அது உன் காரியமல்ல என்று சொல்லிடலாம். ஆனால் ஒருவேளை வாயிற்கதவு மூடப்படாமல் திறந்தே கிடக்கிறதென்றால், உரிய அதிகாரியிடம் காரியத்தினைக்குறித்துத் தகவல் கொடுப்பது உங்கள் கடமையாயிருக்கின்றது மற்றும் இப்படியாக காரியத்தின் பொறுப்பினின்று நீங்கள் விடுவிக்கப்படலாம். இது மத்தேயு 18:15-18-வரையிலான வசனங்களின் அடிப்படையில் கையாளப்பட வேண்டிய ஒரு தனிப்பட்ட காரியமல்ல. காரியம் குறித்து டாம் அவர்களிடமோ, டிக் அவர்களிடமோ, ஹேரி அவர்களிடமோ, மேரி அவர்களிடமோ அல்லது ஜேன் அவர்களிடமோ போய்ச் சொல்வது நம்முடைய கடமையல்ல. நாம் சொல்ல வேண்டியது (உரிய அதிகாரியிடத்தில்தான்) ஒரேயொரு நபரிடத்தில்தான் மற்றும் தகவலானது சகல பரிவான உணர்வுகளுடனும் சொல்லப்பட வேண்டும்.

பல நபர்களிடத்திற்குச் சென்று, அவர்களைச் சரிப்படுத்துவதற்கு முற்படுவதன் வாயிலாக முழு வீட்டையும் அல்லது அலுவலகத்தையும் நடத்திட முற்படும் ஒருவர், சீக்கிரத்தில் தனக்குப் பிரச்சனையை வருவித்துக்கொள்வார். ஒருவேளை புதிதாய் ஒருவர் வேலைக்குச் சேர்ந்து, அவர் தற்செயலாய் விதிமுறை ஒன்றினை மீறிவிடுகிறாரெனில், அவரிடத்தில்: இங்கு இப்படி, இப்படிச் செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது – என்று சொல்லிடுவது சரியாய் இருக்கும், எனினும் இதை ஒருமுறைக்குமேல் அவரிடம் சொல்லிக்கொண்டிருப்பதும் சரியாய் இராது. இரண்டாம் விசை மீறுதல்பண்ணப்படும்போது, அன்பின் ஆவியில் அது குறித்துத் (உரிய அதிகாரியிடம்) தகவல் கொடுக்கப்பட வேண்டும்.

பலவகையான சந்தர்ப்பங்கள்

நாம் சம்பந்தப்பட்டதான காரியங்களில், சபையில் நாம் மேற்கொள்ள வேண்டிய சரியான நடத்தைப் பற்றின விஷயத்தில் கேள்வியினைப் பொருத்திப்பார்ப்போமானால், நம்முடைய தனிப்பட்ட பொறுப்பு என்னவென்று நாம் காணலாம். “உன் சகோதரன் உனக்கு, விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில்போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து. வேறுயாருக்கோ எதிராக அவன் செய்திட்ட விஷயம் பற்றி நமது கர்த்தர் குறிப்பிடாமல், மாறாக “உனக்கு விரோதமாக – என்றே குறிப்பிட்டுள்ளார். “இவர் அந்தச் சகோதரனுக்கு விரோதமாய் ஏதோ செய்துகொண்டிருக்கின்றார் என்று நான் எண்ணுகின்றேன் என்று சிலர் கூறிடலாம். “இந்தச் சகோதரன் தன்னுடைய மனைவியை நன்றாய் நடத்துகிறதில்லை என்று எண்ணுகின்றேன் ; என்று சிலர் கூறுவதை நாம் கேட்டிருக்கின்றோம். “அது அச்சகோதரனுடைய காரியமாகவும், அவரது மனைவியின் காரியமாகவும் இருக்கின்றது; அது உங்கள் காரியமல்ல. உங்கள் சொந்த மனைவியை அல்லது கணவனை, உங்கள் சொந்த பெற்றோரை, உங்கள் சொந்த குழந்தைகளைப் பார்ப்பதே உங்கள் காரியமாய் இருக்கின்றது; மற்றவர்களை விட்டுவிடுங்கள். உங்கள் விஷயத்தைப் பார்த்துக்கொள்வதற்கு நீங்கள் பழகிக்கொள்ள நாங்கள் அறிவுரை வழங்குகின்றோம். உங்கள் சொந்த காரியங்கள் குறித்த உங்கள் கடமைகளைச் செய்யுங்கள் மற்றும் மற்றவர்களின் காரியங்களைக்குறித்து விமர்சிப்பதைத் தவிர்த்திடுங்கள் என்று நாம் பதிலளிக்கின்றோம்.

ஆனால் சில மோசமான தவறைப் பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்; நாம் தெரு வழியே போய்க்கொண்டிருக்கையில், ஒரு மனிதன் கொடூரமாய்க் குதிரை ஒன்றினை அடித்துத் துன்புறுத்துவதை நாம் பார்க்கின்றோம் என்று வைத்துக்கொள்வோம்; நாம் எதுவும் பேசக்கூடாதா? இம்மாதிரியான சந்தர்ப்பத்தில் நாம் ஒரு காவல்துறையாளரைக் காண்போமானால், அவரிடம்: “அந்த மனுஷன் அக்குதிரையைத் துன்புறுத்துவதைக் கவனித்துக்கொள்வீர்களா? என்று கூறிடலாம் அல்லது அவ்விடத்தில் மனிதாபிமான சமுதாய அமைப்புகள் காணப்படும் பட்சத்தில், அவைகளுக்கு இது குறித்துத் தகவல் கொடுக்கப்படலாம். ஒருவேளை பெற்றோரில் ஒருவர் குழந்தையை மிருகத்தனமாய் அடித்துத் துன்புறுத்துவதையோ அல்லது இதுபோன்ற வேறு எதையாகிலும் காண்போமானால், அதைக் குறித்து உரிய அதிகாரிகளிடம் தகவல் கொடுப்பது சரியானதே. ஆனாலும் பொதுவாயுள்ள காரியங்கள் அனைத்தையும்போய், சரிப்படுத்த முற்படுவது என்பது அனைவருக்குமடுத்த காரியமல்ல. உலகம் முழுக்க தீமையினால் நிறைந்துள்ளது மற்றும் இப்படியாகவே இராஜ்யம் கட்டுப்பாட்டினை எடுக்கும் வரையிலும் காணப்படும்.

உலகத்தில் பார்க்கின்றதான எண்ணற்ற பிரச்சனைகளை, அதன் போக்கில் விட்டுவிடுவது சபைக்கு நலமாயிருக்கும் என்று நாம் எண்ணுகின்றோம்; ஏனெனில் தவறான யாவற்றையும் நாம் சரிபடுத்தத் தொடங்குவோமானால், இராஜாதி இராஜனும், கர்த்தாதி கர்த்தருமானவருக்கு ஊழியஞ்செய்திடுவதற்கு நமக்கு நேரம் இல்லாமல் போய்விடும். நமக்கு நேரம் கொஞ்சமாகவே உள்ளது. ஜனங்கள் ஏற்கெனவே நம்மைக்குறித்துத் தவறான கருத்துக் கொண்டிருக்கின்றனர்; ஆகையால் நாமும் எதிர்ப்பினைத் தேவையில்லாமல் அதிகரித்துக்கொள்ள வேண்டாம். ஒருவேளை சபைக்கும், நம்முடைய குடும்பங்களுக்குமான நம்முடைய கடமைகள் யாவற்றிற்கும் செலவிடும் நேரம் போக, எப்போதேனும் நேரம் இருக்குமானால், அப்போது இந்த வெளிக் காரியங்கள் சிலவற்றைப் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் நமக்கு மிகக்குறைவான நேரமே உள்ளது மற்றும் இதனால் நமது இன்றியமையாத கடமைகள் மற்றும் கர்த்தருக்கும், சகோதரருக்குமான நம்முடைய ஊழியங்கள் போக, மற்றப்படி மற்றக் காரியங்களைப் பார்ப்பதற்கு மிகவும் குறைவான வாய்ப்புகளே நமக்குக் காணப்படுகின்றது. மேலும் இதற்காக நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்; ஏனெனில் நமக்கு விரோதமாய் எதிர்ப்புக் காணப்படுமானால், அது நமது பரலோக இராஜாவுக்கு நாம் உண்மையாய் இருந்ததன் காரணமாக மாத்திரமேயாகும்.

உலகத்தின் காரியங்களைச் சரிப்படுத்துவதற்கு நமது இராஜா நமக்கு அதிகாரம் அளித்திடவில்லை. எனினும் நமக்கு வாய்ப்புக் கிடைக்கும்போது, எவ்வித வாக்குவாதத்திற்குள்ளாகக் கடந்து செல்லாமல், நீதியின் கொள்கைகளை நாம் அறியப்பண்ணிட/முன்வைத்திட வேண்டும். நம்முடைய இராஜா வந்து, தம்முடைய ஆளுகையைத் துவங்குகையில் மற்றும் நாம் அவரோடுகூட உயர்த்தப்பட்டிருக்கையில், நிர்வாகம் என்பது எப்படி இருக்க வேண்டுமென்று நாம் உலகத்திற்குக் காண்பித்துக் கொடுப்போம்! ஆனால் இப்பொழுதும்கூடச் சட்டங்கள் எவ்வளவு நல்லவைகளாக இருக்கின்றன என்பது ஆச்சரியமாகவே உள்ளது. உதாரணத்திற்கு நியூயார்க் நாட்டின் நற்சட்டங்களைக்குறித்துச் சிந்தித்துப் பார்க்கையில், நாம் வியப்பே அடைகின்றோம். அந்த நாடானது எப்படிப் பெரும்பாலானவர்களின் நலனுக்கடுத்த காரியங்களைக் கவனித்திட முயற்சிக்கின்றது என்றும் மற்றும் அது ஜனங்களுக்காக எவ்வளவு காரியங்களைச் செய்துள்ளது என்றும் பார்ப்பதற்கு ஆச்சரியமாய் உள்ளது; பாவப்பட்ட உலகமானது, இவ்வளவுக்குச் செய்ய முடிந்தபடியால், நாம் மகிழ்வுறுகின்றோம். இத்தகைய பிரதிகூலமற்றச் சூழ்நிலைகளின் கீழ், அவர்கள் செய்துள்ளவைகளை நாம் பாராட்டுகின்றோம். அனைத்துமே நீதியின் பிரமாணத்தின் கீழ்க் காணப்படும்போது, அது எத்துணைப் பிரம்மாண்டமான காலமாய் இருக்கும் மற்றும் எத்துணைப் பிரம்மாண்டமான உலகமாய் இருக்கும்!

கேள்வியின் இன்னொரு பாகம்

சபையில் தீமை பேசுதல் குறித்த காரியத்திற்கு இப்போது திரும்பிவருகின்றோம்; மூப்பர் அல்லது உதவிக்காரர் ஊழியத்திற்கு ஒரு சகோதரன் முன்மொழியப்பட்டிருக்கின்றார் என்று வைத்துக்கொள்ளுங்கள் மற்றும் நமக்கு மாத்திரமே தெரிந்திருக்கிறதும், ஆனால் மீதமுள்ள சபையாருக்குத் தெரிந்திராததுமான குறிப்பிட்ட சில காரணங்களினிமித்தம், நம்முடைய கணிப்பில் அச்சகோதரன் அத்தகைய ஊழியத்திற்குத் தகுதியற்றவராக இருக்கின்றார் என்று வைத்துக்கொள்ளுங்கள். இவ்விஷயத்தில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? ஒருவரையும் குறித்துத் தீமை பேசக்கூடாது என்று நாம் எச்சரிக்கப்பட்டிருக்கின்றோம். நாம் எழும்பி நின்று, “சகோதரரே, சகோதரர் A அவர்கள் மூப்பராகிடுவதற்கு முற்றிலும் தகுதியற்றவர் என்று நான் கருதுகின்றேன்; அவர் இன்னின்ன காரியங்களையெல்லாம் செய்திருக்கின்றார்; ஒரு பெண்ணிடம், பணம் விஷயத்தில் ஏமாற்றியுள்ளார் அல்லது வேறு ஏதேனும் குற்றச்சாட்டு இருக்குமாயின், அதையும் குறிப்பிட்டு இவைகளையெல்லாம் நான் அறிவேன் என்று நாம் சொல்லிட வேண்டுமா? இப்படியாக நாம் சொல்லிடலாமா? இல்லை! சபையினுடைய நலனுக்காக தீமைபேசுவதும், நன்மை வரத்தக்கதாக தீமை செய்வதும் நமது கடமையாக இருக்கின்றதா? நிச்சயமாக இல்லை! ஆனால் பழைய சிருஷ்டியானது, தீமை பேசிடுவதற்கான ஒரு வாய்ப்பினை எப்போதும் விரும்புகின்றது; அவனுக்குப் பகுதிவாய்ப்பினைக் கொடுத்துப்பாருங்கள், அவன் அனைவரிடமும், தான் அறிந்தவற்றை உடனே சொல்லிடுவான்!
[R5530 : page 266]

அப்படியானால், நாம் என்ன செய்ய வேண்டும்? சரி, ஒருவேளை நாம் அச்சபையாரின் ஓர் அங்கத்தினனாய் இருப்போமானால், நாம் இப்படி முன்மொழியப்பட்டிருக்கும் சகோதரனிடத்திற்குப் போய் அவரிடம், “சகோதரன் A அவர்களே, யாரிடமும் தெரிவித்திட நான் விரும்பிடாத உங்களைக் குறித்த சில காரியங்களை நான் அறியவந்துள்ளேன். அருமையான சகோதரனே, உங்களைக்குறித்துத் தீமை பேசிட நான் விரும்பவில்லை. ஆனால் உங்களுடைய வாழ்க்கையிலுள்ள இக்காரியமானது தவறு என்றும், இந்தச் சபையார் உங்களைத் தெரிந்தெடுப்பது முறையாய் இருக்காது என்றும் நான் எண்ணுகின்றேன். இக்காரியத்தினை நான் சபையாரிடத்தில் சொல்ல விரும்பவில்லை. ஊழியம் புரிய நீங்கள் மறுப்புத் தெரிவிப்பீர்களா என்று உங்களிடத்தில் நான் கேட்க விரும்புகின்றேன். தேர்ந்தெடுக்கப்படுவதற்கு நீங்கள் மறுத்துவிடுவீர்கள் என்று நீங்கள் வாக்குத் தந்தால், அதுவே போதும். இல்லையேல் ஒருவேளை என் கருத்துச் சரியல்ல என்று நீங்கள் எண்ணுவீர்களானால், காரியத்தைச் சபையாரிடத்தில் வெளிப்படையாய்க் கூறிடுங்கள். ஒருவேளை இதை நீங்கள் செய்யவில்லையெனில் மற்றும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு நீங்கள் மறுப்புத் தெரிவிக்கமாட்டீர்களெனில், அப்புறம் நான் காரியத்தை வெளிப்படையாய்ச் சொல்ல வேண்டியிருக்கும் – நான் அறிந்திருப்பதை நான் சொல்ல வேண்டியிருக்கும்; ஏனெனில் நான் சொல்ல வேண்டியிருக்கும் என்பதை நீங்களும் அறிவீர்கள். உங்களிடத்தில் நான் அன்புடன்தான் வந்துள்ளேன் மற்றும் உங்களுக்குத் தீங்குசெய்வதற்கான விருப்பம் எனக்கில்லை என்று சொல்லிடலாம்.

ஒருவேளை அச்சகோதரன்: “சரி சகோதரன் அவர்களே, முன்மொழியப்பட்டிருப்பதிலிருந்து விலகிக்கொள்கின்றேன்; மற்றும் நீங்கள் குறிப்பிடும் காரியம் குறித்த விஷயத்தில், நான் ஜெயங்கொள்ள முயற்சித்துக்கொண்டிருக்கின்றேன் என்பாரானால், நாம் மகிழ்ச்சியடைகிறோம் என்று அவரிடம் சொல்லலாம். இப்படியான விதத்தில் அந்தச் சகோதரனுக்கு நன்மை செய்கிறவர்களாய் இருப்போம் என்று நாம் எண்ணுகின்றோம். தீங்கிழைக்கிறதற்கு அல்லது சண்டைச் சச்சரவுக்கு ஏதுவானவைகளிலிருந்து நாம் சபையாரையும் பாதுகாக்கிறவர்களாயும் மற்றும் சமாதானத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாயும் இருப்போம். ஒருவேளை இப்படியாக இல்லாமல்,அச்சகோதரன் எதிர்த்து வாக்குவாதம் பண்ணுவாரானால், நாம் அவரிடம்: “ஒருவேளை முன்மொழியப்பட்டதிலிருந்து; நீங்கள் விலகிக்கொள்ளவில்லையெனில், இக்காரியத்தினை நான் சபைக்கு விவரிப்பேன் என்பதை நீங்கள் நிச்சயமாய்த் தெரிந்துகொள்ளலாம்; ஏனெனில் நீங்கள் உங்களது ஜீவியத்தின் நடத்தையினை அங்கீகரித்து, அதைத் திரும்பவும் தொடருவதாகவும் கூறுகின்றீர்கள் என்று சொல்லிடலாம்.

ஆனால் ஒருவேளை காரியம் சகோதரனுடைய வாழ்க்கையில் நீண்ட காலத்திற்கு முன்னதாக நடைப்பெற்ற காரியம் பற்றியதாயிருக்கின்றது; ஒன்றோ அல்லது இரண்டோ அல்லது ஐந்து அல்லது எத்தனையோ வருடங்களுக்குள்ளாக, இப்பொழுது அவரும் முற்றிலுமாய் மாற்றமும் அடைந்து விட்டவராக இருக்கின்றார். அவர் பழைய நடத்தையினின்று மாறியிருப்பாரானால் நாம் மகிழ்ச்சி அடையலாம். நாம் அச்சகோதரனிடத்திற்குச் சென்று: “சகோதரனே நீங்கள் தேர்ந்தெடுத்தலில் இடம் பெற பங்கெடுப்பதை நான் கவனிக்கிறேன். உங்களது வாழ்க்கை முற்றிலுமாக மாற்றமடைந்துள்ளதா? என்று கேட்கலாம். அவர் ஒருவேளை, “ஆம், சகோதரனே, என் வாழ்க்கை முற்றிலுமாக மாற்றமடைந்துள்ளது என்று சொல்வாரானால், நாம் மகிழ்ச்சிக்கொள்ளலாம். ஆனால் ஒருவேளை அச்சகோதரன் கோபமடைந்து, அது உங்கள் காரியமல்ல என்று சொல்வாரானால், நாம் அவரிடம்: “சகோதரனே, இதைக்குறித்துச் சபையாருக்கு நான் தகவல் கொடுத்திட வேண்டும். உங்களது நடக்கையின் வாயிலாக, நீங்கள் முற்காலத்தில் மேற்கொண்ட அதே நடத்தையையே, இப்பொழுதும் மேற்கொள்ளுகிறீர்கள் என்பது சுட்டிக்காண் பிக்கப்படுகின்றது. ஒருவேளை நான் அத்தகைய தவறு செய்திருந்தேனாகில் மற்றும் தொடர்ந்து செய்து வருகின்றேனாகில், என் நடத்தைக் கண்டிக்கப்பட விரும்பிடுவேன். ஆகையால் உங்களை மூப்பராகவோ அல்லது உதவிக்காரராகவோ பெற்றிருக்க வேண்டுமா என்பதை சபையார் மறுபடியும் சிந்தித்துப் பார்க்கத்தக்கதாக, இவ்விஷயத்தைக் குறித்து நான் தகவல் கொடுத்திடுவேன் – என்று சொல்லிடலாம். ஆனால் ஒருவேளை அச்சகோதரன் சபையில் ஏதேனும் ஊழயத்திற்கென முன்மொழியப்படவில்லை என்று வைத்துக்கொள்வேம், அப்போது அவரது கடந்த காலம் நம்முடைய காரியமல்ல; என்று நாம் கருதிட வேண்டும்.

இறுதி புத்திமதி

மற்றவருடைய உண்மையான நலனுக்கடுத்த காரியங்களுக்குத் தீங்காய் இருக்கும் எதுவும், ஒருபோதும் பேசப்படக்கூடாது. மற்றவர்கள் குறித்துள்ள நம்முடைய வார்த்தைகளில் நாம் மிகவும் ஜாக்கிரதையாகக் காணப்பட வேண்டும். சகோதரர்களில் சிலரை நம்பி வேறொரு சகோதரன் அல்லது சகோதரிக்கு அவப்பெயர் தேடித்தரும் சம்பவங்களையும், அவர்களது பெலவீனங்கள் சிலவற்றை வெளிப்படுத்தும் சம்பவங்களையும் பகிர்ந்துகொள்ளும் மனப்பான்மையானது கர்த்தருடைய பிள்ளைகள் சிலரிடத்தில் காணப்படுகின்றது. சகோதரருடைய அபூரணங்களை இப்படி வெளிப்படுத்திடும் தன்மையானது, நிச்சயமாகவே மூடிப்போடுகிற அன்பாய் இருக்கிறதில்லை (1 பேதுரு 4:8). இந்த ஒரு தன்மையைக்கூட இன்னமும் ஜெயங்கொள்ளாத நிலைமையில், நீண்டகாலமாய் இடுக்கமான வழியில் காணப்படுகின்றதான சிலரை நாம் அறிவோம். இவர்கள் – தாங்கள் விமர்சிக்கின்றதான சகோதரனை அல்லது சகோதரியைப் போன்றே, தங்களுக்கும் பெலவீனங்கள் அநேகமாக தெளிவாகவே காணப்படுகின்றது என்பதை மறந்து விட்டார்களா? நம்முடைய ஆதார வசனத்தில் இடம்பெறும் ஆண்டவருடைய கட்டளையை இவர்கள் புறக்கணிக்கின்ற காரியமானது, இவர்கள் தங்கள் சொந்த வளர்ச்சியில் குறைவுப்பட்டிருப்பதை நிரூபிக்கின்றதாய் இருக்கின்றது. எனினும் இவர்கள் தீமை பேசுகிறார்கள் என்று சுட்டிக் காண்பிக்கப்படும்போது, அநேகமாகக் கோபம் அடைகிறவர்களாகவும் காணப்படுகின்றனர்.

இவையனைத்தும் தூற்றுதல்களாக இருக்கின்றது என்றும், இது ஒரு சகோதரன் அல்லது சகோதரியுடைய நற்பெயரை மங்கப்பண்ணுகிறதாய் இருக்கின்றது என்றும், இது தேவ வசனத்தினால் மறுபடியும், மறுபடியுமாக முன்வைக்கப்பட்டதான கட்டளையை நேரடியாக மீறுவதாக இருக்கின்றது என்றும், நற்பெயரைக் களங்கப்படுத்துதல் என்பது, இன்னொருவருடைய நற்பெயரைத் திருடுவதாக இருக்கும் என்றும் – கிறிஸ்துவின் பின்னடியார்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு சீக்கிரமாய்க் கண்டுகொள்வார்களோ, அவ்வளவு சீக்கிரமாய் இவ்விஷயமானது கர்த்தருடைய பார்வையில் விகாரமானதாய்க் காணப்படுவதை உண்மையில் கண்டு கொள்வார்கள். இக்காரியத்தினைத் தெய்வீகக் கண்ணோட்டமாகிய, ஒரே உண்மையான கண்ணோட்டத்திலிருந்து ஒருவிசைப் பார்த்தப் பிற்பாடு, மாம்சம் மற்றும் பிசாசின் இத்தகைய கிரியைகளை ஜெயங்கொள்வதற்கான முடிந்தமட்டிலுமான மகா வீரியத்தில், தேவபிள்ளை விழித்துக் கொள்ள வேண்டும். இந்த வார்த்தைகளை வாசிக்கின்றதான ஒவ்வொருவரும், அவனது அல்லது அவளது சொந்த இருதயத்தை ஆராய்ந்துபார்த்து, அவனது அல்லது அவளது சொந்த நடத்தைக்குறித்து எண்ணிப்பார்த்து, “நானோ? என்று கேள்வி கேட்டுக்கொள்ளட்டும்.

சீக்கிரத்தில் வரவிருக்கின்றதான இராஜ்யத்தில் ஓர் இடத்தினைப் பெற்றுக்கொள்வதற்குப் பாத்திரமாய்க் கருதப்படத்தக்கதாக, ஒவ்வொருவரும் தன்னிடத்தில் ஒருவேளைக் காணப்படக்கூடிய துர்க்குணம், பொறாமை, புறங்கூறுதல் மற்றும் வாக்குவாதம் எனும் பழைய புளித்த மாவை – அவன் அல்லது அவள் தேவனுடைய பிரியமான குமாரனுடைய சாயலாகத்தக்கதாக – பழைய புளித்த மாவை புறம்பே கழித்துப்போடுவார்களாக. மாம்சம் மிகவும் தந்திரமுள்ளது மற்றும் தனக்கென்று அனைத்து விதமான சாக்குப்போக்குகளையும் முன்வைக்கும் போக்குடையதாகும். ஒவ்வொருவரும் இக்காரியத்தினை, தனிப்பட்ட விதத்தில் இருதயத்தை ஆராய்ந்துபார்க்கிற காரியமாக்கிக் கொள்வார்களாக. நம்முடைய குணங்களைப் பூரணப்படுத்திடுவதற்கு வெகு சொற்பக்காலமே இருக்கின்றது என்று நாம் நம்புகின்றோம். முன்பு ஒருபோதும் இல்லாதளவுக்கு, “கர்த்தாவே என் வாய்க்குக்காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும் என்று மிக ஊக்கமாய் ஜெபம்பண்ணுவோமாக! (சங்கீதம் 141:3).