சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R4994 (page 98)

சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்

LOVE OF THE BRETHREN A CRUCIAL TEST

“இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? (சங்கீதம் 133:1)

சங்கீதம் 133-ஆம் அதிகாரமானது, தீர்க்கத்தரிசனமான ஒன்றாகவும், “கிறிஸ்துவின் சரீரமாகிய சபையிலுள்ள சகோதரரைக் குறிப்பதாகவும்
இருக்கின்றது என்பதில் நிச்சயமே. இக்கருத்தானது, கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் மீது வடிகிற பரிசுத்த ஆவியினை அடையாளப்படுத்திக் காண்பிக்கிறது. “அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும்… ஒப்பாயிருக்கிறது என்று இரண்டாம் வசனத்தில் சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ளது.

சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுவது இன்பமான காட்சியாக எப்போதும் இருப்பினும், இந்தச் சங்கீதமானது விசேஷமாய் நம்முடைய நாட்களுக்குப் பொருந்துகின்றதாய்த் தெரிகின்றது. துன்புறுத்தப்படும் காலங்களில், ஒருமித்திருத்தல் பெரிதும் காணப்படும்; ஏனெனில் சபையுடன் தாங்கள் ஒருமித்துக் காணப்படுவதற்குச் சொற்பமானவர்களே காணப்படுவார்கள்; உண்மையில் அர்ப்பணம் பண்ணியிருப்பவர்களைத் தவிர, மற்றப்படி அனைவரையுமே வெளியிலிருந்து வரும் துன்புறுத்தல்களானது அச்சமூட்டி தடுத்துவிடும். இம்மாதிரியான துன்புறுத்துதல்களின்போது, அனைவருமே இப்படியாகத்தான் எண்ணுவார்கள் மற்றும் ஒரே நோக்கமும், ஒரே காரணங்களும் கொண்டிருப்பவர்கள் மாத்திரமே ஒருமித்துக் காணப்பட இழுக்கப்படுவார்கள்.

ஆனால் துன்புறுத்தல்கள் ஓயும்போதும், சபைக்குள் மிகவும் வைராக்கியம் அற்றவர்கள் அநேகம் பேர் வந்திடும்போதும், சச்சரவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் பெருகிடும். இன்றும் வெளிச்சத்தின் பிள்ளைகளுக்கு எதிராக எதிர்ப்புகள் அநேகம் காணப்பட்டாலும், துன்புறுத்துதல்கள் என்பது குறைவாகவே உள்ளது. சத்தியத்தினால் ஈர்க்கப்பட்டவர்களில் சிலர், அநேகமாக அவர்கள் என்னவாகக் காணப்பட வேண்டுமோ, அப்படியாக இல்லை. உண்மையைச் சொல்லப்போனால், அவர்களில் எவருமே, தேவனுடைய நேசகுமாரனுடைய சாயலுக்கு ஒத்த சாயலாகுவதற்கான தங்களது விருப்பத்தின்படி ஆகவில்லை மாறாக ஒவ்வொருவரும் மற்றும் அனைவருமே அந்நிலையினை அடைய நாடிக்கொண்டிருக்க வேண்டும்.

பிணக்குகளுக்கான காரணங்கள் பெருகிவருகின்றன

தேவ தயவு பெற்றிருக்கும் பிள்ளைகளுக்கிடையே பிணக்குகள் ஏதேனும் ஏற்படுதல் என்பது முதலில் விநோதமாய்த் தோன்றிடலாம். அவர்களுடைய இருதயங்கள் பரிசுத்த ஆவியினால் மிகவும் நிரம்பிக்காணப்படுவதினால், அவர்கள் இருதயத்தில் பகைமை, பொறாமை, சண்டை எனும் களைகள் காணப்படுவதற்கு இடமிராது என்றும், பரிசுத்த ஆவியின் கனிகள் குவிந்து காணப்படும் என்றும் ஒருவர் எண்ணக்கூடும். அநேகமாக இப்படித்தான் நாம் முதலாவது அர்ப்பணம்பண்ணினபோது நிலைமை காணப்பட்டது; மற்றும் மாம்சத்தின் இந்தக் கிரியைகளுக்கு இடம் இல்லாதிருந்தது. ஆனாலும் பிணக்குகளுக்கான காரணங்கள் குறைவதற்குப் பதிலாகப் பெருகிவருவதாகவே தெரிகின்றது. ஆகையால் பிரச்சனைக்கான காரணத்தினை நாம் கவனிப்பது ஏற்றதாயிருக்கும் மற்றும் இப்படியாக அபாயத்தினைத் தவிர்த்திடுவதற்கும், சகோதரர் மத்தியில் சமாதானம் பண்ணுகிறவர்களாகுவதற்கும் நாம் உதவப்பட முடியும். “பலமுள்ளவர்களாகிய நாம் பலவீனருடைய பலவீனங்களைத் தாங்க வேண்டும் (ரோமர் 15:1). இவ்வசனத்தின் நிலைமையானது அளவுகோலாய் வைத்துப் பார்க்கப்பட்டால், நாம் எதிர்ப்பார்க்கிற அளவுக்குப் பலமுள்ளவர்கள் அதிகமாய்க் காணப்படமாட்டார்கள்; ஆகையால் இது நாம் ஒவ்வொருவரும் பலமுள்ளவர்களாகுவதற்கும், சபையில் பெலவீனமான சகோதரருக்கு உதவியாய் இருப்பதற்கும் ஏவுகின்றதாய் இருக்கின்றது.

உலகத்தில் இருப்பவர்கள் மத்தியில் இருப்பதைக் காட்டிலும், ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்ட புதுச்சிருஷ்டிகளாக இருப்பவர்கள் மத்தியிலேயே பிணக்குகள் ஏற்படுவதற்கான அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கின்றது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயமாய் இருக்கின்றது; அதாவது அதிகமாய்ப் பிரகாசிக்கப்பட்டவர்களும், சத்தியத்தினால் பெலமடைந்தவர்களுமான ஜனங்கள் அடங்கின கூட்டத்தாரைப் பார்க்கிலும், பெயர்ச்சபையில் காணப்படும் ஜனங்களுக்கு ஒற்றுமையிலும், சமாதானத்திலும் ஒன்றாய் ஜீவிப்பது என்பது சுலபமானதாய் இருக்கும். இந்தக் கருத்தானது முதலில் விநோதமாய்த் தோன்றலாம்; ஆனால் அதைக்குறித்து நாம் ஆராயும்போது, அது மிகவும் தெளிவடைகின்றது. பெயர்ச்சபையில் தேவபக்தி என்பது பெரிதும் ஆச்சாரமாகவே இருக்கின்றது. பெயர்க் கிறிஸ்தவர்களுக்கு ஆடை உடுத்திக்கொள்வதும், கூடுகைகளில் கலந்துகொள்வதும், அங்கு அமைதியாய் அமர்ந்துவிட்டு, பின்னர் வீடு திரும்புவதும் வழக்கமான காரியமாக இருக்கின்றது. இனிமையானவைகள், அதாவது உதாரணத்திற்குச் சூரிய ஒளி, மலர்கள், பெண்களின் தலையணிகள் (bonnets), முதலானவைகள் அவர்களால் கவனிக்கப்படுகின்றது; இப்படியாக நாளானது அவர்களுக்குக் கடந்து செல்கின்றது. ஆனால் மிகவும் பிரகாசிக்கப்பட்டவர்களுடைய மனதிற்கும், சிந்தனைகளுக்கும் அதிக சுறுசுறுப்புக் காணப்படும். நாம்கூட மலர்களையும், நம்முடைய பரம பிதாவினால் நமக்கு அருளப்பட்டுள்ளதான அனைத்தையும் விரும்புகின்றோம். இவைகள் குறித்து நாமும் கலந்துரையாடுகின்றோம் மற்றும் கலந்துரையாடுவதற்கு அதிகமான வாய்ப்புகள் நமக்கு இருக்கின்றது; ஏனெனில் எந்த இரண்டு மனிதர்களுமே துல்லியமாய் ஒன்றுபோல் தோற்றத்தில் இல்லாததுபோலவே, எந்த இரண்டு மனிதர்களும் துல்லியமாய் ஒன்றுபோல் சிந்திக்கிறதில்லை.

கர்த்தருடைய ஜனங்களில் சிலர் தாங்கள் சுயமாய்ச் சிந்தனைச் செய்வதாக தற்பெருமையடித்துக் கொள்கின்றனர். ஆனால் எதையும் உறுதிப்படுத்திக் கொள்வது நமக்கு ஞானமான காரியமாய் இருக்கும். சில கருத்துக்களானது அறிவு சம்பந்தப்பட்டதாக இராமல், மாறாக அனுமானம் சம்பந்தப்பட்டதான காரியங்களாய் இருக்கின்றன. நாம் தேவனால், போதிக்கப்பட்டிருக்கின்றோம். அவர் இப்படியாகவே நமக்குக் கூறுகின்றார் மற்றும் இப்படியாகவே அவருடைய வார்த்தைகளிலும் காணப்படுகின்றது மற்றும் ஒருவேளை இந்தப் புதுக் கருத்துக்களானது, கர்த்தரிடமிருந்து வந்ததாக நாம் ஏற்றுக்கொள்வோமானால், அதை நாம் அதிகம் விவாதம்பண்ணாமல் ஏற்றுக்கொண்டிடலாம். தேவனுடைய வார்த்தைகள் போதிப்பவைகளைக் குறித்து ஆழ்ந்து ஆராய்வது உண்மையில் இன்பமானதே நமக்குக் கர்த்தர் தெரிவித்திருப்பவைகளை விசுவாசிப்பது என்பது நமக்கான சிலாக்கியமாகும். ஆனால் நாம் எந்த ஆழ்ந்த ஆராய்ச்சிப் பண்ணினாலும் சரி, அது தெய்வீக வார்த்தைகளுக்கு இசைவுடனும் மற்றும் கட்டுப்பாட்டுடனும் காணப்பட வேண்டும். நாம் ஆழ்ந்து ஆராய்ச்சிப் பண்ணும்போது, மற்றவர்களும்கூட ஆழ்ந்து ஆராய்ச்சிப் பண்ணுகிறார்கள் என்பதை நாம் நினைவில்கொள்கையில், உபதேச ரீதியிலான இடர்பாடு எப்படித் தோன்றுகின்றது என்பதை நாம் அறிகிறோம்.

இந்த வெவ்வேறான உபதேச ரீதியான கருத்துக்களானது வேத வாக்கியங்களிலிருந்து எடுக்கப்படுகின்றது. ஆனால் (வேதவாக்கியங்களில்) எழுதப்படாத கருத்துக்களை நாம் பகுத்தறிகையில், சண்டை சச்சரவிற்கான அபாயம் ஏற்படுகின்றது. தேவவார்த்தைகளில் மிகவும் ஊன்றிக் காணப்படுபவன், இதினிமித்தம் தான் நன்மை அடைகிறதோடல்லாமல், மற்றச் சகோதரர்களோடும், அவர்களது பகுத்தறிவு சிந்தித்தல்களுடனும் வாக்குவாதம்பண்ணுவதைத் தவிர்த்துக்கொள்ள முடிகிறவனாகவும் இருப்பான். சில விஷயங்கள் குறித்துச் சில கருத்துக்களை நாம் வெளிப்படுத்துவதில் கர்த்தர் வெறுப்புக்கொள்வதில்லை என்று நாம் எண்ணுகின்றோம். நாம் ஒரு கருத்தைப் பெற்றிருந்து, அதைச் சகோதரருக்கு முன்வைத்து, அது அவர்களுக்கு முன்பின் முரணானதாய்த் தோன்றும் பட்சத்தில், நாம் அதை அவர்களிடத்தில் திணிக்கக்கூடாது என்பதும், அவர்களும் அவர்களது கருத்தினை நம்மீது திணிக்கக்கூடாது என்பதும் நினைவில்கொள்ளப்பட வேண்டும். இம்மாதிரியான விஷயங்களில் அடக்கத்துடன் காணப்பட்டு, காரியத்தினை அமைதியாய் விட்டுவிடுவது சரியான வழிமுறையாக இருக்க, இதற்குப் பதிலாக முடிவுபரியந்தமும் அக்கருத்திற்காகப் போராடும் மற்றும் அனைவரையும் நம் கருத்தினை ஒப்புக்கொள்ளச் செய்வதற்குப் போராடும் – மனப்பான்மை காணப்படுவதே பிரச்சனையாக இருக்கின்றது.

ஒவ்வொரு சகோதரனுக்கும், தன்னுடைய கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு உரிமை இருக்கின்றது. ஆனாலும் நம்முடைய கண்ணோட்டங்களை – பரீட்சைகளாக மாற்றிடுவதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை. பரீட்சைகள் என்பவைகள், வேதவாக்கியங்களில் நமக்குக்கொடுக்கப்பட்டுள்ளவைகளேயாகும்; உதாரணத்திற்கு: இயேசு கிறிஸ்துவை அபிஷேகிக்கப்பட்டவர் என்றும், உலகத்தின் இரட்சகர் என்றும் விசுவாசிக்க வேண்டும் என்பதும், நாம் அவரோடுகூட உடன் சுதந்தரர்களாகவும், அவருடைய சுதந்தரத்தில் பங்கடைபவர்களாகவும் இருக்கப்போகின்றோம் என்று விசுவாசிக்க வேண்டும் என்பதும், நாம் விலைக்கொடுத்து வாங்கப்பட்டிருக்கின்றோம் என்பதும், இந்தத் தற்காலத்திலுள்ள பாடுகளிலும் மற்றும் பின்தொடரும் மகிமைகளிலும் நமது கர்த்தரோடு நாம் பங்கடையப் போகிறதை விசுவாசிப்பது என்பதும் – நமக்கும் மற்றும் சகோதரருடனான நம்முடைய உறவு நிலைக்கும் பரீட்சையாக இருக்கின்றது.

இத்தகைய எளிமையான வேதவாக்கியங்களின் அடிப்படையிலான வார்த்தைகள் நம்முடைய விசுவாசத்திற்கான அடிப்படையாக இருக்க வேண்டுமே ஒழிய, இவைகளுக்குச் சிலரால் கொடுக்கப்படும் கற்பனையான வியாக்கியானங்களல்ல. சிலர் பொதுவான முக்கிய அம்சங்களையே (outlines) அதிகம் கண் நோக்குகின்றனர்; சிலர் நுணுக்கங்களைப் பார்க்கின்றனர் மற்றும் பொதுவான முக்கிய அம்சங்களைப் பார்க்கத் தவறுகின்றனர். வேறுப்பட்ட மனப்பார்வைகளைக் கொண்டிருப்பவர்கள் குற்றஞ்சாட்டப்படவோ, பாராட்டப்படவோ முடியாது என்றாலும், இவர்கள் பின்வருபவற்றைக் கிரகித்துக்கொள்ள வேண்டும் – அதாவது நமது தேவனுக்கான, சகோதரருக்கான மற்றும் சத்தியத்திற்கான நேர்மையின் காரணமாக, சத்தியத்திற்காக பாடுபட நாம் விருப்பமுள்ளவர்களாய் இருக்கின்றோம் எனும் கருத்தினைக் கிரகித்திட வேண்டும்.

சத்தியம் பலமான பாத்திரங்களைக் கவருகின்றது

ஒருமித்து வாசம்பண்ணுவதற்குச் சிரமப்படுகின்றதான இந்தச் சகோதரர்களின் சிரமத்திற்கான ஒரு காரணம், இவர்களது உண்மையான உள்ளியல்பான குணலட்சணமேயாகும் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். களிமண் போன்ற குணலட்சணத்தினை உடையவர்களாகச் சிலர் காணப்படுகின்றனர்; ரப்பர் பந்தில் செய்ய முடிகிறதுபோல, சிலரில் நீங்கள் சிக்கிரத்தில் மனத்தளர்வு ஏற்படுத்திடலாம்; இன்னும் சிலர் வைரங்கள் போன்று காணப்படுகின்றனர். வைரம் போன்றிருக்கும் வகுப்பார் உறுதியான தன்மையை, குணலட்சணத்தை அடைந்தவர்களாய் இருக்கின்றனர். நாம் களிமண்ணாலான அநேகம் பந்துகளையும், அநேகம் ரப்பர் பந்துகளையும் மற்றும் அநேகம் வைரங்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு குலுக்குவோமானால், வைரமானது அது தொடும் அனைத்தையும் உரசிடும், காரணம் அவைகள் மிகக்கடினமான தன்மை உடையதாக இருக்கின்றன. ரப்பர் பந்து வகுப்பாரையோ, களிமண் பந்து வகுப்பாரையோ கர்த்தர் இப்பொழுது தேடுகிறதில்லை. நியமிக்கப்பட்ட காலத்தில் அனைத்து வகையான வகுப்பார்களையும் – அதாவது களிமண் வகையான ஜனங்களையும் மற்றும் ரப்பர் பந்து வகையான ஜனங்களையும் கர்த்தர் கையாளுவார். ஆனால் இப்பொழுதோ அணிகலன் வகுப்பாரை, வைரம் வகுப்பாரை மாத்திரமே சத்தியமானது கவருகின்றதாய் இருக்கின்றது.

ஒருவருக்கொருவர் இடறல் உண்டுபண்ணுவதற்கு, ஒருவரையொருவர் காயப்படுத்துவதற்குரிய அபாயம் இருக்கின்றது என்பதை அறிந்துகொள்கையில், அறிவானது நமக்கு ஞானத்தினைத் தந்திட வேண்டும். இந்தச் சகோதரர்கள் உறுதியான [R4994 : page 99] குணலட்சணத்தைக் கொண்டிருக்கின்றனர் என்றும், இவர்கள் களிமண் வகையினர் இல்லை என்றுமுள்ள உண்மையினை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இவர்களது வித்தியாசங்கள்கூடக் குணலட்சணத்தினை வெளிப்படுத்துகின்றது. இவ்வுண்மையினை உணர்ந்துகொள்ள நாம் முயற்சித்து, அவர்களுக்கு எரிச்சலூட்டாமல் இருப்பதற்கு நாம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நாம் அவர்களுக்குப் புத்திமதிக் கூறவேண்டும் மற்றும் அவர்களும் புதுச்சிருஷ்டிகளென, நம்மைப் போலவே கர்த்தரைப் பிரியப்படுத்த விருப்பம் கொண்டவர்களாய் இருக்கின்றனர் என்று நினைவில்கொள்ள வேண்டும். ஆகையால் நாம் ஒருவரோடு ஒருவர் பொறுமையுடன் காணப்பட வேண்டும். புதிய ஏற்பாட்டில் ஒரு வசனம் பின்வருமாறு கூறுகின்றது: “நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான் (1 யோவான் 3:14). இது தெரிவிப்பது என்னவெனில்: சகோதரரில் சிலரை அன்புகூருவது என்பது கடினம் மற்றும் நாம் மரணத்தைவிட்டு ஜீவனுக்குட்படாதது வரையிலும், நாம் அவர்களை அன்புகூர முடியாமல் காணப்படுவோம் என்பதேயாகும்.

சத்தியமானது பெலவீனமானவர்களைக்காட்டிலும், பலமான பாத்திரங்களையே பற்றிக் கொள்கின்றதாய் இருக்கின்றது. ஜெயங்கொள்ளும் சிறுமந்தையின் அங்கத்தினர்களெனக் கர்த்தரால் ஏற்றுக்கொள்ள முடியாதளவுக்கு மிகவும் வளையும் தன்மை உடையவர்களாகவும் மற்றும் பலமற்றவர்களாகவும் காணப்படும் மற்ற அநேகரைக் காட்டிலும், இந்தப் பலமான பாத்திரங்களானவர்கள் தங்களது மாம்சத்தில் உறுதியானவர்களாகவும், மனோதிடம் கொண்டவர்களாகவும், போராடுகிறவர்களாகவும் காணப்படுகின்றனர். இப்படியாக நம்மைக் கர்த்தர் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு நம்மை ஆளாக்கின அந்த ஒரு பண்பே மற்றும் ஜெயங்கொள்ளும் நிலைமைக்கு அவசியமான அந்த ஒரு தகுதியே – இத்தகைய பண்புள்ளவர்கள் அநேகர் சபையாக ஒன்றுகூடுகையில், சில விதங்களில் கடுமையான பாதிப்பு ஏற்படுத்தும் காரியமாய்க் காணப்படுகின்றது.

சேற்றினால் சூழப்பட்டிருக்கும் ஒரு வைரமானது, எதையும் வெட்டாது, எதையும் உரசிடுவதில்லை ஆனால் திரளான வைரங்களைச் சேர்த்துவைத்துப் பாருங்கள். சேறானது அதிகம் அப்புறப்படுத்தப்படும்போது, உராய்வுகளும், உரசும் சத்தங்களும், வெட்டுதல்களும் அதிகமாய்க் காணப்படும். இப்படியாகவே கர்த்தருடைய சம்பத்தானவர்கள் – அதிகமதிகமாய் ஒன்றுகூடி வருகையில், அதிகமதிகமாய் விழிப்படைகையில், பிணக்குகள் ஏற்படுவதற்கான அதிகம் வாய்ப்புகளும் ஏற்படுகின்றது மற்றும் அனைவருமே பரிசுத்த ஆவியினால் முழுமையாய் நிறைந்திருப்பதற்கும் மற்றும் மூடியிருப்பதற்கும் அதிகம் அவசியமாகுகின்றது; எண்ணெய் மிருதுவானதாகவும், வழுவழுப்பானதாகவும் காணப்பட்டு, உராய்வுகளைத் தவிர்ப்பது போன்று, இந்தப் பரிசுத்த ஆவியும் காணப்படுகின்றது.