R5350 (page 344)
சபை கூடுகைகளில் வாக்களிப்பதற்குரிய உரிமை பெற்றவர்கள் ஒப்புரவாகுதலின் விசுவாசிகளாகவும், தங்களை முழுமையாய் அர்ப்பணம் பண்ணினவர்களாகவும் மற்றும் அந்த அர்ப்பணிப்பினை அடையாளத்தின் மூலம்
செய்துகொண்டவர்களாகவும் இருப்பவர்கள் மாத்திரமே என்று சமீபத்தில் இதழாசிரியர் தெரிவித்த போது, அவர் ஒன்றைக்குறித்து எழுத சித்தங் கொண்டிருக்க, அதற்குப் பதிலாக அவர் வேறொன்றை எழுதிய காரியமாகிவிட்டது.
அடையாளப்படுத்துதல் எனும் வார்த்தைச் சேர்த்த்திலேயே தவறு காணப்படுகின்றது. தண்ணீர் முழுகுதலினுடைய உண்மையான அர்த்தத்தினையும், முக்கியத்துவத்தையும் காண்பதற்கு முன்னதாக, நம்மில் அநேகர் உண்மையாகவே
கிறிஸ்தவர்களாகவும், கர்த்தரினால் உண்மைமயாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாகவும், “பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையின்” அங்கத்தினர்களாகவும் உண்மையில் காணப்பட்டிருந்தோம்
(எபிரெயர் 12:23). இத்தகையவர்கள் யாவரும் சபையின் தேர்ந்தெடுத்தல்களில் வாக்களிப்பதற்கு உரிமைப் பெற்றிருக்கின்றனர் என்று நாம் எப்போதுமே கருத்துக்கொண்டவர்களாக இருக்கின்றோம். (வேதாகம பாடங்கள், தொகுதி 6-ஐ
பார்க்கவும்). ஆம், வாக்களிப்பது – தங்களது பகுத்தறிதலின்படி சபைக்கான ஊழியக்காரர்கள் தொடர்புடைய விஷயத்தில் கர்த்தருடைய சித்தத்தினை வெளிப்படுத்துவது – அவர்களது கடமையாக இருக்கின்றது.
ஆனால் நாங்கள் வலியுறுத்த விரும்பிட்டது என்னவெனில், தனது அர்ப்பணிப்பினை முறையாய் அடையாளப்படுத்துவது தொடர்புடையதான வேதாகம போதனைகளை இதுவரையிலும் ஏற்றுக்கொண்டிராத எந்தச் சகோதரனும்,
சபையில் உதவிக்காரராகவோ அல்லது மூப்பராகவோ முறையாய் நியமிக்கப்படும் அளவுக்கு வளர்ச்சியடைந்திருக்கமாட்டார் என்பதேயாகும். முழுக்கக் கவனக்குறைவின் காரணமாகவே, அதில் நாங்கள் அத்தகையவர்கள் வாக்களிக்கக்கூடாது
என்று குறிப்பிட்டவர்களானோம்.
முன்மொழிதல்கள் தொடர்புடைய விஷயத்தில் சில சபைகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. முன்மொழியும்படிக்குக் கேட்டுக்கொள்ளப்பட்டபோது, சகோதரன் ஒருவரின் தகுதிகள் முறையாய்க் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படாமலேயே
மூப்பராக அல்லது உதவிக்காரராக முன்மொழியப்படுகின்றது. அவருக்கான முன்மொழிதலானது, வழிமொழியவும்படுகின்றது; மற்றும் முழுச்சபையாரும் அச்சகோதரனை அன்புகூருவதினால், தங்கள் மீது மனஸ்தாபம் ஏற்படக்கூடாது
என்பதற்காக, அச்சகோதரனுக்கு எதிராக தங்கள் வாக்குகளை அளிப்பதற்கு மனமில்லாமல் காணப்படுகின்றனர்.
சபையில் எந்த ஓர் ஊழியத்திற்கும், எவரேனும் தேர்ந்தெடுக்கப்படும் காரியத்தில், ஒரு காரணம் இருத்தல் வேண்டும். மூப்பர் ஒருவர் போதிக்க வல்லவராகவும், பரந்த மனப்பான்மையுடையவராகவும், ஆலோசனை தேவைப்படுபவர்களுக்கு
உதவிகரமான ஆலோசனை வழங்க முடிகிறவராகவும், தேவனுடைய வார்த்தைகளை செல்வாக்குடையவராகவும் மற்றும் ஞானமுள்ள ஆலோசகராகவும் இருத்தல் வேண்டும். யாருமே இந்த நற்பண்புகள் / தகுதிகள் யாவற்றையுமே சரிசமமான
அளவில் பெற்றிருக்க முடியாது. சிலர் ஒன்றை அதிகமாகவும், வேறு சிலர் மற்றொரு தகுதியினை அதிகமாகவும் பெற்றிருப்பார்கள்; ஆனால் அவைகளில் சிலவற்றையாகிலும் அனைவரும் பெற்றிருக்க வேண்டும். ஒருவரின் தேர்தெடுத்தலில்
பழிச்சொல்லுக்கு இடமிருக்கக்கூடாது. இதுபோலவே உதவிக்காரராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் , ஊழியம் புரிய நேரம் ஒதுக்கமுடிகிறவராகவும் மற்றும் வருங்காலத்தில் மூப்பராகுவதற்கு ஏதுவான சில திறமைகளைப்
பெற்றிருப்பவராகவும் மற்றும் சபைக்கு ஊழியம் புரிவதற்குரிய விருப்பம் உடையவராகவும் காணப்படவேண்டும்.
மூப்பர்கள், உதவிக்காரர்கள் முதலானவர்களை முன்மொழியும் விஷயத்தில், ஒருவேளை ஏதேனும் சிரமம் காணப்படும் பட்சத்தில் அல்லது பெரும்பான்மையானவர்கள் விரும்பும் பட்சத்தில் – வாக்குச்சீட்டு முறைமையைப் பயன்படுத்துவது
மிகவும் நல்லதொரு முறையாக இருக்குமென எங்களுக்குத் தோன்றுகின்றது. இதனை செயல்படுத்திடுவதற்கு எழுதுகோலும் (Pencil), காகிதத் துண்டுகளும் தேவைப்படும். வாக்களிப்பவர்கள் ஒவ்வொருவரும், பின்வருமாறு எழுதிட
வேண்டும்: “நான் _______ என்ற சபையில், பின்வரும்_______ மாத காலங்கள் மூப்பர்களாகுவதற்கு பின்வருபவர்களை முன்மொழிகின்றேன்.” பிற்பாடு பெயர்கள் இடம்பெற வேண்டும். எண்ணிக்கையினைச் சபையார் கூட்டவோ அல்லது
குறைக்கவோ விரும்புகிறார்களெனில், இது முன்மொழிதலுக்குப் பிற்பாடு, தேர்ந்தெடுத்தலின்போது செய்யப்படலாம்.
வாக்குச்சீட்டுகளானது சேகரிக்கப்பட்ட பிற்பாடு, முடிவுகளானது பட்டியலிடப்பட்டு, சபையாருக்கு வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும். சபையாருக்கு எத்தனை மூப்பர்கள் தேவையாய் உள்ளது என்று சபையார் முடிவு செய்திட
வேண்டும். ஒருவேளை மூன்று பேர் தேவை என்று சபையார் தீர்மானிப்பார்களானால், அதிகமான முன்மொழிதல் வாக்குச்சீட்டுகளைப் பெற்றிருக்கின்றதான ஆறு சகோதரர்களுக்கு வாக்குகள் அளிக்கப்பட வேண்டும். கைகளை நீட்டுவதன்
மூலமான வாக்குகளை அதிக எண்ணிக்கையில் பெறும் மூன்று பேர், சபையாரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகக் கருதப்பட வேண்டும். அல்லது இன்னொரு வழி என்னவெனில்: வாக்குச்செலுத்தினவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு
பங்கிற்குச் சமமான எண்ணிக்கையில் வாக்குச்சீட்டுகளைப் பெற்றிருப்பவர்களாகிய முன்மொழியப்பட்டிருப்பவர்கள் யாவரையும் ஏற்றுக்கொள்வதும் மற்றும் இவர்கள் யாவரையும் முடிந்தமட்டும் ஏகமனதான வாக்குகளுடன் தேர்ந்தெடுப்பதாகும்;
இந்த ஏற்பாடானது சிறுபான்மையானவர்கள்கூட மூப்பர்கள் மத்தியில் இடம் பெறுவதற்கு வாய்ப்பளிப்பதற்கு நோக்கம் கொண்டதாகும்.
எப்போதும் மனதில் நிறுத்தப்பட வேண்டிய சிந்தை என்னவெனில்: சபையார் யாவருடைய பகுத்துணர்தலும் / தீர்மானமும் முடிந்தமட்டும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதேயாகும். பெரும்பான்மையானவர்களே தீர்மானிக்கிறவர்களாய்
இருப்பினும், சபையாருடைய மூப்பர்கள் விஷயத்தில், அங்கத்தினர்கள் யாவருடைய உணர்வுகளும் பிரதிபலிக்கத்தக்கதாக பெரும்பான்மையானவர்கள், சிறுபான்மை யானவர்களுக்குச் சிலவற்றில் இணங்குவது எப்போதும்
வரவேற்கத்தக்கதாக இருக்கும். எப்படி இந்த முடிவானது அடையப்பெற்றாலும், நாம் ஞானமாய் நடந்து கொண்டவர்களாய் இருப்போம்; மற்றும் வேறே முடிவானது அடையப்பெற்றால், அது ஞானமற்றதாகவும், சபையாருடைய சமாதானம் மற்றும்
ஒற்றுமைக்கு இடர் உண்டாக்குகிறதாகக் காணப்படும். சகோதர சிநேகமானது எப்போதுமே, அனுதாபத்தையும், இரக்கத்தையும், அன்பையும் மற்றும் முக்கியமான கொள்கையுடன் தொடர்புபடாத பட்சத்தில், இணங்கிச் செல்வதற்கு
விரும்புவதையும் குறிக்கின்றதாகக் காணப்படும்.