தேவனோடே போர்ப்புரிதல்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R4033 (page 227)

தேவனோடே போர்ப்புரிதல்

FIGHTING AGAINST GOD

ஆலோசனை சங்கத்தாரிலுள்ள தனது யூத நண்பர்கள் ஆதிகால சீஷர்களைக் கடினமாய்க் கையாண்டிட முற்பட்டபோது, அவர்களுக்குக் கமாலியேல் கூறின அறிவுரையில், இவரது ஞானம் விளங்குகின்றது. இவரது ஞானமுள்ள வார்த்தைகள் பின்வருமாறு: “இஸ்ரயேலரே, இந்த மனுஷருக்கு நீங்கள் செய்யபோகிறதைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். ஏனென்றால் இந்நாட்களுக்கு முன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினான்; ஏறக்குறைய நானூறு பேர் அவனைச் சேர்ந்தார்கள்; அவன் மடிந்துபோனான்; அவனை நம்பின அனைவரும் சிதறி, அவமாய்ப்போனார்கள். அவர்களுக்குப் பின்பு, குடிமதிப்பின் நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக ஜனங்களை இழுத்தான்; அவனும் அழிந்து போனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறடிக்கப்பட்டார்கள். இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால், இந்த மனுஷருக்கு ஒன்றுஞ் செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம். தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போர் செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான் (அப்போஸ்தலர் 5:35-39). அந்தோ பரிதாபம்! கிறிஸ்துவின் நாமத்தைத் தரித்துள்ளவர்களும் மற்றும் பரிசுத்த ஆவியில் கொஞ்சம் பங்கடைந்துள்ளவர்களும் மற்றும் ஓரளவுக்குக் கிறிஸ்துவின் பள்ளியில் போதிக்கப்பட்டிருப்பவர்களும் மற்றும் ஓரளவுக்குப் பரத்திலிருந்து வரும் ஞானத்தினைப் பெற்றிருப்பவர்களுமானவர்களில் மிக அதிகமான பேர்கள் – அந்தோ பரிதாபம்! இப்படிப்பட்டவர்களில் மிக அதிகமான பேர்கள் மேலே மேற்கோளிடப்பட்டுள்ளதான கமாலியேலின் வார்த்தைகளில் வெளிப்பட்டுள்ளதான ஞானத்தைப் பார்க்கிலும் குறைவான ஞானத்தை உடையவர்களாய் இருக்கின்றனர்.

சில ஜனங்கள் சுபாவப்படி எதிர்த்துப் போராடும் மனப்பான்மையை மிகவும் குறைவாய்க் கொண்டிருப்பதினால், இவர்கள் குணலட்சணத்தினுடைய பலத்தின் விஷயத்தில் குறைவு உடையவர்களாகவும், எளிதில் வசப்படுகிறவர்களாகவும், “பலமில்லாதவர்களாகவும் காணப்படுகின்றனர்; இவர்கள் ஜெயங்கொள் வதற்கான தன்மைகளில் குறைவுபட்டவர்களாகவும், சத்தியம் மற்றும் நீதிக்கு ஆதரவாய்த் தாங்கள் நிற்கத்தக்கதாகப் பரத்திலிருந்து வரும் கிருபையையும், உதவியையும் தொடர்ந்து நாடவேண்டியதன் அவசியம் உடையவர்களாகவும் காணப்படுகின்றனர். இப்படிச் செய்யவில்லை என்றால் இவர்கள் முற்றிலும் ஜெயங்கொள்பவர்களாகுவதற்கு நிச்சயமாய் எதிர்ப்பார்த்திட முடியாது. குணலட்சணத்தையும், உறுதியையும், பலத்தையும், அதோடுகூடச் சாந்தத்தையும், நிதானத்தையும், பொறுமையையும், அன்பையும் கொண்டிருப்பவர்களை, தம்முடைய சிறு மந்தைக்காக கர்த்தர் நாடித்தேடுகின்றார். எனினும் கர்த்தர் நாடுகின்றதான இத்தகைய இன்பகரமான கலவை எங்குமே காணப்படுவதில்லை. அவரிடத்திற்கு வருபவர்கள் யாவரும், தாங்கள் ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதாக சிலவிதங்களில் நெறிப்படுத்தப்படுவது/மாற்றப்படுவது அவசியமாய் இருக்கின்றது. ஆகையால் வலுவான குணலட்சணங்களை உடைய சிலர் இயல்பாகவே மிகவும் பலமாய் எதிர்த்துப் போராடும் தன்மையினை உடையவர்களாய் இருப்பதினால், இது இவர்களைத் தொடர்ந்து பிரச்சனைக்குள்ளாக்குகின்றது மற்றும் இது கட்டுப்படுத்தப்படுவதும், வரைமுறைக்குள் வைக்கப்படுவதும் அவசியமாகுகின்றது.

இரண்டு வகுப்பாரில், யாருக்கு மற்றவரைக்காட்டிலும் அநுகூலம் உள்ளது என்று சொல்வது சிரமமே. ஒரு வகுப்பார் கட்டுப்படுத்திட வேண்டியதை, மற்ற வகுப்பார் வளர்த்திக்கொள்ள வேண்டும் மற்றும் அநேகமாக அனைத்துக் காரியங்களையும் கருத்தில் எடுத்துப் பார்க்கையில், ஓட்டத்தில் ஜெயம் அடையும் விஷயத்தில் வாய்ப்புகள் இருவகுப்பாருக்குமே சமமாகவே உள்ளது. எனினும் அதிகமாகப் போராடும் மனப்பான்மை உடையவர்கள், ஆவேசமானவர்கள், பலவந்தம்பண்ணுகிறவர்கள் பொதுவாகவே இத்தன்மைகளின் நிமித்தம் சபையில் பெரிதும் கவனத்திற்குள்ளாவார்கள் மற்றும் ஒருவரையொருவர் அன்பு கூருகின்றவர்கள் மத்தியில் இவர்களுக்குச் சத்துருக்கள் உண்டாவதில்லை என்றாலும், இவர்கள் பொதுவாகவே மிகுதியான எதிர்ப்பினை அடைபவர்களாய் இருப்பார்கள். மிகவும் வளைந்துகொடுப்பவர்களும் மற்றும் பணிவுடையவர்களும் – தங்களைக்குறித்துத் தாங்களே நல்லெண்ணம் கொண்டிருப்பதற்கும் மற்றும் இராஜ்யத்திற்கான இவர்களது தகுதிகள் தொடர்புடைய விஷயத்தில் மற்றவர்களாலும் மிகவும் அன்போடு / நல்லெண்ணத்தோடு கருதப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. வலுவானவர்களும், பலவந்தமானவர்களும் மற்றவர்களினால் மிகவும் கடுமையாகக் கண்டிக்கப்படுவதற்கும் மற்றும் இதுகுறித்து, அவர்கள் ஒன்றுமே தெரியாதவர்களாகவும் இருப்பதற்கும் வாய்ப்புள்ளது. ஓ! நாம் அனைவரும் தெளிந்த புத்தியுள்ள மனங்களைப் பெற்றிருப்பது நலமாயிருக்கும்! ஆனால் இது கூடாத காரியம் என்பதினால், ஓ! நாம் அனைவரும் தெளிந்த புத்தியுள்ள மனதின் ஆவியினையும் மற்றும் தெய்வீக அளவுகோலுடன் நம்மை ஒப்பிட்டுப்பார்க்க முடியும் ஆற்றலையும் அதிக அளவில் பெற்றுக்கொள்வோமாக!

இந்த வார்த்தைகளானது, அதிகளவிலான போராடும் மனப்பான்மையினால் சிரமப்படும், மிகவும் ஆவேசம் கொள்வதற்கு ஏதுவாய்க் காணப்படும் அன்புக்குரிய சகோதரருக்கும் மற்றும் சகோதரிகளுக்கும் உதவும் வண்ணமாக விசேஷித்த நோக்கத்துடனே சொல்லப்பட்டுள்ளது. பன்னிரண்டு பேர்கள் மத்தியிலிருந்து கர்த்தர் சில விதங்களில் தமக்கு அபிமானமானவர்கள் என்று அப்போஸ்தலர்களிலேயே மிகவும் ஆவேசமிக்க மற்றும் தீவிரமான மூன்று பேர்களாகிய பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானைத் தேர்ந்தெடுத்தப்போது, அவர் வலுவான பாத்திரங்களுக்கான தம்முடைய பிரியத்தினைத் தெளிவாகவும், குறிப்பாகவும் வெளிப்படுத்தினவராய் இருந்தார். ஆகையால் சுபாவத்தின்படி ஆவேசமிக்க தன்மையுடையவர்கள், இத்தன்மையானது – “நல்லது என்ற கர்த்தருடைய வார்த்தையினைத் தாங்கள் அடைவதற்குத் தடையாக உள்ளது என்று எண்ணிடக்கூடாது; மாறாக இத்தன்மையானது – கட்டுப்படுத்தப்பட்டு, சரியான வரைமுறைக்குள்ளாகக் கொண்டுவரப்பட்டால் – நல்ல தன்மையாய்க் காணப்படும். இவர்கள் கமாலியேல் போன்று, தங்கள் போராடும் மனப்பான்மையினையும் மற்றும் ஆவேசமான தன்மையையும் கர்த்தருக்கு எதிராகவும், சத்தியத்திற்கு எதிராகவும், சகோதரருக்கு எதிராகவும் பயன்படுத்திடுவதற்கு ஏதுவாய் இருக்கும் அபாயத்தினைக் கண்டுகொள்ள வேண்டும்.

“யாருக்கு ஊழியம் புரிகின்றீர்களோ அவருக்கு நீங்கள் ஊழியக்காரர்கள் என்று நமது கர்த்தர் கூறுகின்றார் (ரோமர் 6:16). யாருக்கு ஊழியம் புரிவதாக நாம் அறிக்கைப்பண்ணுகின்றோம் என்பதோ, யாருக்கு நாம் ஊழியம் புரிவதாக நாம் எண்ணிக்கொள்கின்றோம் என்பதோ கேள்வியாய் இராமல், மாறாக யாருடைய காரணங்களுக்காக நாம் உண்மையில் ஊழியம் புரிகின்றோம் என்பதே கேள்வியாய் இருக்கின்றது. இக்கண்ணோட்டத்திலிருந்து, இன்றுள்ள கிறிஸ்தவ மண்டலத்தை ஏறெடுத்துப் பார்த்து, நாம் நம்மிடமே கேட்டுக்கொள்ள வேண்டியதாவது: எத்தனை பேர் தேவனுக்கு ஊழியம் புரிகின்றார்கள்? மேலும் எத்தனைபேர் உண்மையில் எதிராளியானவனுக்கு ஊழியம் புரிந்துகொண்டிருக்க – தேவனோடே போர் செய்து, கிறிஸ்தவ மண்டலத்துக்கு ஊழியம் புரிந்து கொண்டிருக்க, தாங்கள் தேவனுக்கு ஊழியம் புரிவதாகக் கற்பனை பண்ணிக்கொண்டிருக்கின்றனர்? சுவிசேஷத்தின் ஊழியக்காரர்களெனத் தங்களைக்குறித்து [R4033 : page 228] அறிக்கைப்பண்ணிக்கொள்ளும் பல்லாயிரம் பேர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என்று தங்களைக்குறித்து அறிக்கைப்பண்ணிக்கொள்ளும் பலகோடி பேர்கள் மெத்தேடிஸ்ட், பேப்டிஸ்ட், கத்தோலிக்கர் முதலான பல்வேறு கொடிகளின் கீழ்ப் போராடிக் கொண்டிருப்பதை நாம் பார்க்கின்றோம். ஆனால் இவர்கள் யாரோடு போர்ப் புரிந்து கொண்டிருக்கின்றனர்? சாத்தானோடா? தப்பறையோடா? இவர்களில் அநேகர் தர்சு பட்டணத்துச் சவுலைப் போன்று, சீக்கிரத்தில் பின்வரும் உண்மைக்கு – அதாவது சிலுவையின் போர்ச் சேவகர்களாய் இருப்பதற்குப் பதிலாக, தாங்கள் தேவனுக்கு எதிராயும், சிலுவையின் உண்மையான போர்ச் சேவகர்களாகிய, ஆட்டுக்குட்டியானவரின் பின்னடியார்களுக்கு எதிராகவும் போர்ப் புரிபவர்களாக இருந்துள்ள உண்மைக்குத் தங்களது கண்களைத் திறக்கப் பெற்றிருப்பார்கள். அப்போது இவர்களுக்கு இது எத்தகைய கசப்பான ஏமாற்றமாயிருக்கும்! இவர்கள் மாபெரும் பிரதான அதிபதியின் கட்டளைகள் மற்றும் வழிநடத்துதலின்படி போர்ச் செய்யாமல், கிரியை புரியாமல்” இருண்ட யுகங்களில் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டதான சிலரை உள்ளடக்கின மனித தலைவர்கள் மற்றும் அதிபதிகளின் கட்டளைகள் மற்றும் வழிநடத்துதல்களின்படியே செய்கின்றார்கள் என்று கண்டுணரத்தக்கதாக, மாபெரும் பிரதான அதிபதியினுடைய கட்டளைகளை, இப்பொழுது அவர்கள் கண்நோக்கும்படிக்கு அவர்களை விழிக்கப்பண்ணுவதற்கு நாம் எவ்வளவாய் விரும்புகின்றோம்.

பரலோகத்திலிருந்து ஒருவேளை சத்தியமானது, திடீரெனப் பிரகாசிக்கப்பண்ண முடிந்ததானால், சபை பிரிவுணர்ச்சிக்காக இப்பொழுது போராடிக்கொண்டிருப்பவர்களும் மற்றும் அந்திக்கிறிஸ்துவுக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்களுமான இந்தப் பலமான பாத்திரங்களில் அநேகர் அதிர்ச்சியடைந்து, அவமானமடைந்து, “ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்? என்று கதறி ஆண்டவரின் பாதத்தில் விழுவார்கள் என்று நாங்கள் எண்ணுகின்றோம்.

“பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து; நிறக்கிறார், தாழ்மையுள்ளவர்களுகோ கிருபை அளிக்கிறார்.ஆகையால், ஏற்ற காலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள் என்றுள்ள அப்போஸ்தலன் வாயிலான கர்த்தருடைய வார்த்தைகளை நாம் நினைவில் கொள்வோமாக (1 பேதுரு 5:5,6). இந்த வார்த்தைகளானது நாம் சுட்டிக் காண்பித்துள்ளதான தவறுகளுக்கான விடையாக இருக்கின்றது என நாம் விசுவாசிக்கின்றோம். கொஞ்சம் பெருமையினால் தாக்கத்திற்குள்ளான வலுவான ஒருவர், தன்னால் திரும்பிட கிட்டத்தட்ட முடியாத தவறான நடக்கையினைக் கொண்டிருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் ஒருவேளை தாழ்மை காணப்பட்டால், இதற்கேற்ப போராடும் மனப்பான்மையும், வலுவான தன்மையும் கட்டுப்பாட்டிற்குள் காணப்படும் மற்றும் அந்நபருக்குக் கர்த்தரிடமிருந்து சரியான அறிவுரைகளைப் பெற்றுக்கொள்வதும் மற்றும் அதைப் பின்பற்றுவதும் மற்றும் இராஜ்யத்தில் ஓர் இடத்தினைப் பெற்றுக்கொள்வதற்கெனத் தகுதியாகிடுவதும், மெருகூட்டப்படுவதும், ஆயத்தமாக்கப்படுவதும் அதிகம் சுலபமானதாயிருக்கும். இதே கொள்கையானது, தற்கால சத்தியத்தினுடைய வெளிச்சத்தினைக் கர்த்தரிடமிருந்து ஆசீர்வாதமாக ஏற்கெனவே பெற்றுக்கொண்டவர்கள் மத்தியிலும் பொருந்துகின்றதாய் இருக்கும். நாம் குணலட்சணத்திலும், பலத்திலும் மிகவும் குறைவுபட்டிருந்தோமானால், அதை ஒப்புக்கொண்டு, அதைக் கர்த்தரிடமிருந்து நாடிப் பெற்றுக்கொள்வதற்கு உதவும் தாழ்மையானது நமக்கு இன்னமும் அவசியமாயுள்ளது. கர்த்தருக்கு எதிராகவோ அல்லது சத்தியத்திற்கு எதிராகவோ அல்லது சகோதரருக்கு எதிராகவோ போர்ப் புரிபவர்களாக நாம் காணப்படாதபடிக்கு, வார்த்தை, கிரியை, சிந்தை அனைத்தும் கர்த்தருடைய சித்தத்திற்கு முழுமையாயக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்திலும்கூட ஒவ்வொரு வார்த்தையையும், கிரியையையும், சிந்தையையும் கவனமாய்க் கவனித்துக்கொள்ளும் தாழ்மையானது நமக்கு இன்னமும் அவசியமாயுள்ளது. நம்முடைய சொந்த அனுபவங்களில் மாத்திரமல்லாமல், மற்றவர்களுடைய வார்த்தைகளிலும், அனுபவங்களிலும்கூடக் கர்த்தருடைய வழிநடத்துதல்களுக்காக நாம் கவனித்திருப்பதற்கும் மற்றும் குறிப்பாக அனைத்தையும் நம்முடைய சொந்த கருத்துக்கள், விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் அல்லாமல், தெய்வீக நிலைப்பாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்திடுவதற்கும் நாம் எத்துணைக் கவனத்துடன் காணப்பட வேண்டும்!