R4821 (page 155)
பல்வேறு வேதாகம ஆராய்ச்சி வகுப்புகளில், சகோதரர்கள் மத்தியில் கிருபையிலும், அறிவிலுமுள்ள வளர்ச்சியினை நாம் காண்கையில், அவர்கள் திராட்சத்தோட்டத்தில் வேலையாட்களென அவர்கள் பயன்படுகிற காரியத்தைக்குறித்து நாம் சிந்தித்தும், ஜெபித்தும் காணப்படுகின்றோம். ஆரம்பக் காலங்களில் சொசைட்டியானது வெளி வேலைகளில் சகோதரர்களில் பலரை ஊக்குவித்தும், ஆதரித்தும் வந்தது. ஆனால் இதே போன்று அங்கீகரிக்கப்படுவதற்கு மற்றவர்கள் வேண்டிக்கொண்டபோது, ஒன்றில் பாத்திரமற்றவர்களுக்கு ஒப்புதலளித்து, ஆதரித்திடுவதன் வாயிலாக அல்லது பாத்திரமானவர்கள் சிலரை ஆதரிக்கத் தவறுவதன் வாயிலாகச் சொசைட்டியானது பிரச்சனைக்குள்ளாகும் என்று நாங்கள் உடனே அடையாளம் கண்டு கொண்டோம். எனினும் சொசைட்டியின் முயற்சியானது எப்போதுமே “பட்சபாதமில்லாமலும், மாயமற்றதாயும் காணப்பட வேண்டும் எனும் அப்போஸ்தலனின் கட்டளையைப் பின்பற்றுவதாகவே இருந்துள்ளது (யாக்கோபு 3:17).
ஆகையால் வாட்ச் டவருடைய வெளியீட்டின் கடைசிப் பக்கத்தில் இடம்பெறும் அல்லது விசேஷமாய் அறிவிக்கப்பட்டுள்ள வழக்கமான பயண ஊழியர்களுக்கான ஒத்துழைப்புத் தவிர, மற்ற விசேஷித்த ஒத்துழைப்புகள் அனைத்தையும் நிறுத்திவிட்டோம். இவர்களுக்கான பொறுப்பினை நம்மால் தட்டிக்கழிக்க முடியாது மற்றும் குறைக்கண்டுபிடிக்கும் ஆவியினை வளர்த்திட விரும்பாமல், எங்குமுள்ள சொசைட்டியின் அருமையான அங்கத்தினர்கள், பயண ஊழியர்களின் நடத்தை அல்லது போதித்தல்களில் ஏதாகிலும் வசனத்தின் அறிவுரைக்கு மாறாக தங்களுக்குத் தோன்றும்பட்சத்தில் – “பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ள விசுவாசத்திற்கு முரணாக தங்களுக்குத் தோன்றும் பட்சத்தில், அதைக் குறித்துத் தகவல் கொடுக்கும்படிக்கு நாம் உள்ளப்பூர்வமாய் வேண்டிக்கொள்கின்றோமென இப்பொழுது கூறுகின்றோம். இம்மாதிரியான காரியங்களைப் புறங்கூறும் வண்ணமாகக் கலந்துரையாடாதீர்கள், மாறாக பரிவுடனும், அன்புடனும் அதைக்குறித்துப் புரூக்கிளினீலுள்ள தலைமை அலுவலகத்திற்கு – “பயண ஊழியர்கள் பிரிவிற்குத் தகவல் அளித்துவிடுங்கள். நாங்கள் உங்களோடு ஒப்புக்கொண்டு, பயண ஊழியரைக் கண்டனம்பண்ணிடுவோம் என்றில்லை. மாறாக பயண ஊழியர்கள் சொசைட்டியின் பிரதிநிதிகளாகக் காணப்படுவதினால், அவர்களது ஜீவியத்தின் செல்வாக்குக் குறித்தும், அவர்களது போதனைகளிலுள்ள ஏதேனும் விநோதம் குறித்தும் நாங்கள் அறிந்துகொள்வது சரியான காரியமேயாகும். தகவல் கொடுப்பவர் உண்மைகளோடு சிலவற்றைச் சேர்த்துச் சொல்லிடுவதற்கும், காரியத்தினைக் குற்றமாக மாற்றிடுவதற்கும் முயற்சிக்கவில்லையெனில், தகவல் கொடுப்பது புறங்கூறுதலாய் இராது.
ஆறு மாதங்களுக்கு முன்பாக ஏற்படுத்தப்பட்ட ஒரு திட்டத்தின் வாயிலாக, நூற்றுக்கணக்கான அருமையான சகோதரர்கள், அவர்கள் தங்களது தாலந்துகளை, சத்தியத்தைப் பரப்புவதற்கு என்று செயல்படுத்துவதில், சொசைட்டியானது அவர்களோடுகூட ஒத்துழைத்திட முடியும் என்று நாம் நம்புகின்றோம். இத்திட்டமானது, எங்களால் பார்க்க முடிந்தவரை, மனித திட்டத்திற்கு வரும் எல்லா வகையான மறுப்புகளுக்கு இடமளிக்காததாய்த் தெரிகின்றது. இது பல்வேறு சபையாரைப் புதிய வகுப்புகள் உருவாக்கும் வேலைக்குப் பொறுப்பாளியாக்கிடும் மற்றும் இப்படியாகச் சபையார் வாயிலாகவும் மற்றும் சபையாரோடு சேர்ந்தும் சொசைட்டியானது வேலைகள் புரிந்திடும். இது ஒரு சபையார் ஒரு வகுப்பை அல்லது வரையறை இல்லாமல் அநேகம் வகுப்புகளைத் தலைமையேற்றிடும் ஒரு திட்டமல்ல. தெய்வீக வழிநடத்துதலினால் ஒவ்வொரு சபையிலும் உள்ளூர் காரியங்களைக் கவனித்துக் கொள்வதற்கு முற்றிலும் திறமையுள்ளவர்களாகக் காணப்படும் மற்றும் புதிய வகுப்புகளை உருவாக்கிடும் வேலைகளிலும் ஈடுபட முடிகிறவர்களுமான மூப்பராகிய சகோதரர்கள் படிப்படியாய் எழுப்பப்படுவார்கள் என்று நாம் எதிர்ப்பார்க்கின்றோம் என்பது எங்களது கருத்தாய் இருக்கின்றது. நாங்கள் யோசனையாய் முன்வைக்கும் திட்டமானது, புதிய வகுப்பு உருவாக்குதல் வேலை சம்பந்தப்பட்டது மாத்திரமேயாகும்; அது பின்வருமாறு:
(1) எந்தச் சபையாரும், புதிய சபை உருவாக்கிடும் இவ்வேலையில் இணைந்துகொள்ள [R4822 : page 155] வரவேற்கப்படுகின்றனர்; அதுவும் அவர்கள் மத்தியில் வழக்கமாய்த் தேர்ந்தெடுக்கப்படும் மூப்பர்களிடத்தில், சபையாரின் நலனையும், வளர்ச்சியையும் சிரமத்திற்குள்ளாக்காத வண்ணம், வெளி ஊழியங்களில் பங்கெடுப்பதற்கெனப் போதுமான தாலந்துகள் காணப்பட வேண்டும்.
(2) ஒருவேளை ஒரு சபையார், அவர்களின் மூப்பர்களிடத்தில் அதிகமான திறமைகளை, அதுவும் சபையாரின் சொந்த வளர்ச்சிக்குரிய தேவைக்குமதிகமாய்ப் பெற்றிருக்குமானால், சபையார் வகுப்புகள் / சபைகள் இல்லாத தங்கள் சுற்றுப்புறங்களைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு, ஊழியம் புரிவதற்கான பல்வேறு இடங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். சபையார் தங்களது மூப்பர்களில் யார் தெய்வீகத் திட்டத்தின் மூன்று விளக்கவுரைகளைக் கொடுத்திடுவதற்கு நன்கு தகுதியுடையவராய் இருக்கின்றார் என்றும், மூப்பர்களில் யார் பிற்பாடு நியாயத்தீர்ப்பின் நாள், ஈடுபலி மற்றும் திரும்பக் கொடுத்தல் மற்றும் கர்த்தருடைய வருகையின் விதம் குறித்த மூன்று உரைகளைக் கொடுத்திடுவதற்கு நன்கு தகுதியுடையவராய் இருக்கின்றார் என்றும் நம்புகிறவர்களை நியமித்திட வேண்டும். தெய்வீகத் திட்டத்தினுடைய [R4822 : page 156] வரைப்படங்களையும் மற்றும் இத்தகைய பேச்சாளர்களுக்குத் தெய்வீகத் திட்டம் குறித்த மூன்று உரையாடல்களுக்கான (outlines) முக்கிய அம்சங்களைத் தெரிவிக்கும் ஒரு சிறு துண்டுப் பிரசுரத்தையும் அளித்திடுவதற்கு சொசைட்டியானது ஆயத்தமாய்க் காணப்படுகின்றது. அடுத்த மூன்று உரையாடல்களானது, வேதாகமப் பாடங்களில் முன்வைக்கப்பட்டிருப்பவைகளின் அடிப்படையில் கொடுக்கப்படலாம் அல்லது மிகவும் பிரயோஜனமான வழிமுறையாய் இருக்குமானால், அந்த அத்தியாயங்களானது முழுமையான ஆராய்ச்சிக்குப் பிற்பாடு வாசிக்கப்படலாம்.
ஒவ்வொரு உரையாடலின் முடிவிலும், அடுத்துவரும் உரையாடல் குறித்து அறிவிக்கப்பட்டு, கேட்பவர்களும், இவர்களது நண்பர்களும் அன்போடுகூட வரவேற்கப்பட வேண்டும். தெய்வீகத் திட்டத்தின் மூன்றாம் விளக்க உரையினுடைய நிறைவில், பேச்சாளர் அடுத்துவரும் ஞாயிற்றுக்கிழமையில் பேசப்போகும் சகோதரன் மற்றும் அவரது தலைப்பின் பெயர்களை அறிவித்திட வேண்டும் மற்றும் வாய்ப்பிற்கேற்ப சில சுவாரசியமான மற்றும் ஆர்வமூட்டும் கருத்துக்களைத் தெரிவித்திடலாம். இரண்டாம் பேச்சாளருடைய மூன்றாம் கூட்டத்தினுடைய நிறைவின்போது, கூட்டத்தில் எத்தனை பேர் – வேதமாணவர்களின் ஒரு வகுப்பென நிரந்தரமாய்த் தவறாமல் கூடிவருமளவுக்கு யுகங்களுக்கடுத்த வேதாகம ஆராய்ச்சியில் போதுமானளவுக்கு விருப்பம் கொண்டிருக்கின்றனர் என்று கேட்டுக்கொள்வது நலமாயிருக்கும். பேச்சாளர் பெரோயா வேத ஆராய்ச்சி வகுப்புகளைக் குறித்து விவரித்து, இவ்வகுப்புகள் நடத்தப்படுவதற்கான மிகப் பொருத்தமான இடம் மற்றும் நேரம் குறித்து ஆலோசித்திட வேண்டும் மற்றும் இவர்கள் விரும்பிடும் பட்சத்தில், இவர்கள் இந்தப் பெரோயா பாடங்களைத் துவங்கிடுவதற்கும் மற்றும் தாங்களே காரியங்களைப் பார்த்துக்கொள்ள முடிகிறது வரையிலும், இவர்களுக்கு உதவத்தக்கதாக, தன்னை அனுப்பின சபையார் தங்கள் மத்தியிலுள்ள யாரோ ஒருவரை அனுப்பிவைப்பார்கள் என்றும் வாக்களித்திட வேண்டும்.
(3) புதிய வகுப்புகளை உருவாக்கிடும் விஷயத்தில் உழைப்பும், செலவும் காணப்படுகின்றது. சில சமயங்களில் வீட்டு முற்றங்களும், சிலசமயங்களில் பள்ளி அறைகளும், சிலசமயங்களில் ஆலயத்தினுடைய விரிவுரை ஆற்றும் அறைகளும், சிலசமயங்களில் பயன்படுத்தப்படாத கிறிஸ்தவ கோவில்களும், சிலசமயங்களில் படக்காட்சி அரங்குகளும், சிலசமயங்களில் இசைப்பள்ளி அறைகளும் – வாய்ப்பிற்கு ஏற்ப பெற்றுக்கொள்ளப்படலாம். கூட்டங்ககளானது வேதாகம வகுப்புகளுக்காக நடத்தப்படுகிறது என்றும், அனுமதிக் கட்டணம் நியமிக்கப்படவில்லை என்றும், பணம் எதுவும் திரட்டப்படவில்லை என்றும் கட்டிடத்தின் உரிமையாளர்கள் அறிகையில் பெரும்பாலும் அறைகளை இலவசமாகவோ அல்லது வாயிற்காவலருக்கு அல்லது விளக்குகளுக்கு அல்லது வெப்பத்திற்குச் சாதாரணமான ஒரு தொகையைச் செலுத்தச் சொல்பவர்களாகக் காணப்படுவார்கள். சிலசமயங்கள் சிறுதொகை செலுத்தப்பட வேண்டியிருக்கும். எப்படி இருப்பினும் மூன்று முதல் ஆறு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், அவைகள் குறித்து அடுத்தடுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் விளம்பரம் பண்ணப்பட வேண்டும் என்றும் புரிய வைக்கப்பட வேண்டும். கட்டணம் முன்னமே செலுத்தப்பட்டு மற்றும் விளம்பரம்பண்ணும் காரியமானது பரப்பப்பட ஆயத்தமாயிருப்பதற்கு முன்னதாக எவ்விதமான தவறான புரிந்துகொள்ளுதல் உண்டாகாதபடிக்கு இரசீது ஒன்று பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
(4) இம்மாதிரியான கூட்டங்கள் சம்பந்தப்பட்ட காரியங்களில் ஒத்துழைத்திடுவதற்கு சொசைட்டியானது மகிழ்ச்சியோடு காணப்படுகின்றது. Everybody’s Paper- இன் பிரதிகளை இலவசமாய்ச் சொசைட்டியானது அளித்திடும்; இதன் பின்புறத்தில் முதல் மூன்று ஞாயிற்றுக்கிழமைகள் ஒவ்வொன்றிற்கான தெய்வீகத் திட்ட விளக்க உரைகள் குறித்த ஓர் அறிவிப்புக் காணப்படும். அதில் கூட்டம் நடத்தப்படும் இடம் மற்றும் தேதிகள் தவிர, மற்றப்படி அது முழுமையாய் நிரப்பப்பட்டுக் காணப்படும். இவைகள் மிகச் சிறிய செலவில் உள்ளூர் அச்சிடுபவரால் அச்சிடப்படலாம் அல்லது ரப்பர் முத்திரைக்கொண்டு அச்சிடப்படலாம். Papers பரப்பப்படுவது என்பது அநேகம் பிரசங்கங்களைப் பரப்புவதாகும் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு வருவதற்கென இழுக்கப்படாதவர்களுக்கு நலம் பயக்கின்றதாய் இருக்கும். நாம் இவற்றை எந்த ஒரு பட்டணத்திலோ அல்லது மாவட்டத்திலோ அல்லது மாநகரத்திலோ காணப்படும், ஆங்கிலம் பேசுபவர்களின் ஜனத்தொகையில் ஒவ்வொரு ஆறுபேரில் ஒருவருக்கு என்ற விகிதத்தில் கொடுத்திடுவோம்; ஜனத்தொகையானது குழந்தைகளையும் உள்ளடக்குகின்றதாய் இருக்கின்றது மற்றும் ஆறில் ஒன்று என்பது பொதுவாய்க் குடும்பங்களின் எண்ணிக்கையினை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது.
இக்கூட்டங்களுக்கான செலவுகளானது பொதுவாகவே சபையாரால் சந்திக்க முடிகிறதாய் இருக்கும் மற்றும் அருகாமையிலுள்ள பட்டணங்களுக்குச் செல்வதற்குரிய பயண செலவுகளும் குறைவாகவே காணப்படும். எனினும் இக்கூட்டங்களுக்கான முழுச்செலவுகளையும் சந்திக்க முடியாத எந்தச் சபையாருக்கு, அதுவும் அனுப்பப்படும் தகவல்களானது செலவுகளை நியாயப்படுத்திடும் பட்சத்தில் ஒத்துழைப்புத் தந்திட சொசைட்டியானது விரும்புகின்றது. தகவல் அறிக்கையை ஆயத்தம்பண்ணுகையில் சபையானது, அதன் செயலாளர் (secretary) வாயிலாக எங்களுக்கு விவரங்களை அளித்து, செலவில் எவ்வளவு விகிதம் சபையார் சந்திக்க ஆயத்தமாய்க் காணப்படுகின்றனர் என்றும், காரியத்தை நடத்துவதற்கு சொசைட்டியானது எவ்வளவு பணம் பங்களிப்பாக அளித்திட வேண்டும் என்றும் தெரிவிக்கவும்.
(5) சொசைட்டியானது நேரடியாய்ப் பேச்சாளர்களுடன் இடைப்பட விரும்புகிறதில்லை மாறாக அவர்கள், அவர்களை அனுப்பிடும் சபையாருக்குக் கடமைப்பட்டவர்களாகக் காணப்பட விரும்புகின்றது; அதாவது பவுலும், பர்னபாவும், கொரிந்துவிலுள்ள சபையால் முதலாவது அனுப்பிவைக்கப்பட்டதுபோலும், இவர்களும் அவர்களுக்குத் தகவல் அறிக்கைகள் கொடுத்தது போலுமாகும். சபையாரால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர் வாயிலாக, நாம் அளிக்கும் அச்சிடப்பட்ட வெறும் காகிதத்தில் மாதந்தோறும் தகவல் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ள சொசைட்டியானது விரும்புகின்றது.
(6) (தனிப்பட்ட காரியங்களாகவும் மற்றும் சகோதரர் ரசல் அவர்களால் மாத்திரமே கவனிக்க வேண்டியதாகவும் இருப்பவைகள் தவிர மற்றபடி) அனைத்துக் கடிதங்களும் International Bible Students Associations, புதிய வகுப்புகள் உருவாக்கிடும் வேலை பிரிவிற்கே (Extension Department) எழுதி அனுப்பப்பட வேண்டும். இது விஷயமான அனைத்துக் கடிதங்களும் அமெரிக்காவில் புரூக்கிளின் டேபர்நாக்கிளுக்கும், பிரிட்டனில் லண்டன் டேபர்நாக்கிளுக்கும், ஆஸ்திரேலியாவில் மெல்பர்னுக்கும், ஸ்கேண்டிநாரியன் மற்றும் ஜெர்மன் நாடுகளில் அவரவர் அலுவலகங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
(7) ஆங்கில மொழிக்கூட்டங்கள் தொடர்பாக நாம் மேலே சொல்லியுள்ளவைகளானது, வாய்ப்புகள் அனுமதிப்பதற்கேற்ப மற்ற மொழி ஊழியங்கள் தொடர்பாகவும் செயல்படுத்தப்படலாம்.
நாங்கள் மேலே சொல்லியுள்ளவைகளின் அடிப்படையில் ஏற்கெனவே முயற்சித்துப் பார்த்துவிட்டோம். சில விஷயங்களில் சிலர் நம்முடைய கருத்தினை முழுமையாய்ப் புரிந்துகொள்ளவில்லை என்பதாகத் தெரிகின்றது. எனினும் நல்ல வேலையானது ஏற்கெனவே துவங்கிவிட்டது. நூற்று நாற்பத்தைந்து சபைகளிடமிருந்து நாம் ஏற்கெனவே தகவல் அறிக்கைகளைப் பெற்றிருக்கின்றோம். ஏப்ரல் 1-ஆம் தேதி வரையிலான தகவல்களின்படி 16,392-பேர் கலந்துகொண்டுள்ள 512-கூட்டங்கள் நடைப்பெற்றுள்ளன. இந்த நல்ல வேலையானது ஞானமாயும், தன்னடக்கமாயும், அன்பாயும், வைராக்கியமாயும் நடந்தேறுவதாக! அறுவடை பெரிதாய் இருக்கின்றது; அறுவடைப்பண்ண வேண்டிய மாபெரும் நிலத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் வேலையாட்கள் குறைவாக இருக்கின்றனர்.
எல்லா விஷயங்கள் தொடர்பான அனைத்துக் கடிதங்களுமே தனிப்பட்ட நபருக்கு என்றில்லாமல், சொசைட்டியின் முகவரியில் அனுப்பப்படுவதாக என்று நாம் மீண்டுமாக வலியுறுத்துகின்றோம்; கூடுமானால் தபாலில், பிரிவின் (Department) பெயரானது எழுதப்பட வேண்டும். வேறுமாதிரி முகவரி எழுதப்பட்டு அனுப்பப்படும் கடிதங்களானது, உடனடியாய்க் கவனிக்கத் தவறுவதற்கு வாய்ப்பிருக்கின்றது; தனிப்பட்ட நபர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கலாம் அல்லது வராமல் இருக்கலாம், ஆனால் அந்தந்தப் பிரிவுகளானது (Departments) என்றும் இயங்கிக் காணப்பட்டு, உடனே கவனம் கொடுத்திடும்.