சண்டைக்காரராயிருந்து

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R4501 (page 323)

சண்டைக்காரராயிருந்து

THEM THAT ARE CONTENTIOUS

“தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பார். சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும். (ரோமர் 2:6-8)

மேற்கூறப்பட்டுள்ளதான அப்போஸ்தலனுடைய வார்த்தைகளானது, கொஞ்சம் எல்லோருக்குமே பொருந்துகின்றதாக இருப்பினும், இவைகள் விசேஷமாய்ச் சபைக்குப் பேசப்பட்டுள்ளது மற்றும் சபைக்குப் பொருந்துகின்றதாகவும் இருக்கின்றது. பொதுவாகவே தாங்கள் தெய்வீகச் சித்தமென அறிந்திருக்கிற எவற்றிற்கும் அன்புடன் கீழ்ப்படிந்த நிலையில் மேலானவைகளையும், உன்னதமானவைகளையும் நாடுகின்றவர்கள், அவர்களது பாதையானது இடுக்கமானதாகவும், குறுகலானதாகவும் இருப்பினும், தினந்தோறும் ஆசீர்வாதத்தினைப் பெற்றுக்கொள்பவர்களாய் இருக்கின்றனர். ஆனால் சண்டைக்காரர்களாயும், குற்றம் கண்டுப்பிடிக்கிறவர்களாயும், எளிதில் கோபங் கொள்ளுகிறவர்களாயும், திருப்தியற்றவர்களாயும் இருப்பவர்கள் தங்களுக்கும், மற்றவர்களுக்கும் தொடர்ந்து பிரச்சனை உண்டுபண்ணுகிறவர்களாக இருப்பார்கள் மற்றும் தேவனாலும், தேவனுக்கு இசைவாய்க் காணப்படுகின்றவர்களாலும் அங்கீகரிக்கப்படாத ஒரு பண்பினை, நித்திய ஜீவனைப் பலனாகப் பெறமுடியாத ஒரு பண்பினை வளர்க்கின்றவர்களாய் இருப்பார்கள்; பிரச்சனையைத் தொடர்ந்து, கொண்டுவருகிறதும், இறுதியில் தோல்வியடையப் பண்ணுகிறதுமான ஒரு பண்பினை வளர்க்கின்றவர்களாய் இருப்பார்கள்.

ஆனால் அப்போஸ்தலன் இங்கு இவ்வார்த்தைகளைத் தேவனுடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்களுக்குப் பொருத்துவது போன்று, நாமும் பொருத்திப்பார்க்கும்போதே, நம்முடைய இந்தப் பாடம் மிகவும் தெளிவாய்ப் பிரகாசிக்கின்றதாய் இருக்கும். சிலரே – சிறுபான்மையானவர்களே தேவனுடைய சிறந்த மற்றும் பிரமாண்டமான ஈவிற்காக — மீட்பரோடுகூட அவரது மகிமையின் இராஜ்யத்தில் உடன்சுதந்தரர்களாய் இருப்பதற்கும், அவரது மகிமையான திவ்விய சுபாவத்தில் பங்காளிகளாகுவதற்கும் பொறுமையுடனும், விடாமுயற்சியுடனும் நாடுகின்றனர். இந்த மாபெரும் பரிசினை வெற்றிகரமாய் நாடிடுவதற்கு ஒரே ஒரு வழியுள்ளது; அது நமது மீட்பருக்கொத்த குணலட்சணத்தின் சாயலைப் பொறுமையுடனும,; விடா முயற்சியுடனும் நமக்குள் விருத்திச்செய்து, வளர்த்திக் கொள்வதாகும் (ரோமர் 8:29). கர்த்தருக்கு ஊழியம் புரிந்திடுவதற்கான பல்வேறு வாய்ப்புகள் நம்முன் வைக்கப்பட்டுள்ளது மற்றும் அவைகள் ஆசீர்வாதமான சிலாக்கியங்களாக இருக்கின்றன; கிறிஸ்தவ குணலட்சணங்களில் நாம் வளர்ச்சியடைவதே இந்த ஊழியங்களை அனுமதித்திடுவதற்கான தெய்வீக நோக்கம் மற்றும் எண்ணமாகக் காணப்படுகின்றது என்று நாம் நம்புகின்றோம். அனைத்து மனுஷர்களுக்குமான கட்டளை – தேவனைப் பிரதானமாய்க் கனம்பண்ணுதல் மற்றும் நம்மை நாம் அன்புகூருவதுபோன்று பிறரை அன்புகூர்ந்தவர்களாக, நம்மை மற்றவர்கள் நீதியாய்க் கையாளப்படுவதற்கு நாம் விரும்புவது போன்று, நாம் மற்றவர்களை நியாயமாய்க் கையாளுதலாகும்; ஆனால் புதுச்சிருஷ்டிக்கான விசேஷித்த கட்டளை – நம்முடைய மூத்த சகோதரன் சுயத்தைப் பலிச்செலுத்தி, நம்மை அன்புகூர்ந்தது போன்று, நாம் ஒருவரையொருவர் அன்புகூர வேண்டும் என்பதாகும். நாம் ஒருவருக்கொருவர் செய்திடுவதற்கு அனுமதிக்கப்படும் எதுவும், தேவனிடத்திலுள்ள நம்முடைய உண்மைக்கான, உலகத்தாரிடத்திலுள்ள நம்முடைய நீதிக்கான அல்லது சகோதர சகோதரிகளுக்கான நம்முடைய அன்புடன்கூடிய அர்ப்பணிப்பிற்கான பரீட்சையின் விதத்திலேயே காணப்படும்.

கர்த்தருடைய முன்மாதிரியைப் பின்பற்றினவர்களாக, நாம் சகோதர சகோதரிகளுக்கான ஊழியத்தில் நம்முடைய ஜீவியங்களை ஒப்புக்கொடுக்கிறவர்களாகக் காணப்பட வேண்டும். இந்தக் கட்டளையானது, நம்முடைய சுயத்தைப் பலிச்செலுத்தலானது சகோதர சகோதரிகளுக்குத் தேவையாக இருக்கின்றது என்பதற்காக மாத்திரமல்லாமல், நம்முடைய அன்பு வளருவதற்கும் மற்றும் நமது அன்பிற்கான பரீட்சைக்குமான நம்முடைய தேவைக்குமாகும். “நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம் என்று அப்போஸ்தலன் கூறியுள்ளார் (1 யோவான் 3:16).
[R4502 : page 323]

ஆசாரியக்கூட்டத்தாரின் நலனுக்கடுத்தவைகளில் சுயத்தைப் பலிச் செலுத்திடுவதற்குத் திரளான வாய்ப்புகள் உள்ளன. இருளிலும், அறியாமையிலும் மற்றும் மூடநம்பிக்கையிலும் சகோதரர்களில் சிலர் காணப்பட்டு, தற்கால சத்தியத்திற்கான மகிமையான வெளிச்சத்திற்குள் வழிநடத்தப்படுவதற்காக நம்முடைய உதவி தேவைப்படும் நிலையில் இருக்கிறவர்களாக மாத்திரம் காணப்படாமல், இதனோடுகூடச் சகோதரர்களில் சிலர் பெலவீனங்களையும், குறைப்பாடுகளையும் பெற்றவர்களாய் இருந்து, ஆறுதலளிக்கும் நம்முடைய அனுதாபங்களுக்கும் மற்றும் பலப்படுத்தும் உற்சாகமூட்டுதல்களுக்கும் அல்லது அன்புடன்கூடிய கடிந்து கொள்ளுதல்களுக்கும் தேவைப்பெற்றவர்களாகவும் இருக்கின்றனர். எவ்வளவாய் இக்காரியங்களில் எல்லாம் நாம் உண்மையாய்க் காணப்படுகின்றோமோ, அவ்வளவாய் நாம் சுயத்தைப் பலிச்செலுத்துபவர் களாகவும், நமது பரலோகப் பிதாவிற்கும், நமது மீட்பருக்கும் பிரியமாகவும், அங்கீகரிக்கப்படத்தக்கவர்களாகவும் காணப்படுவோம்.

மூப்பனாய்க் காணப்பட்ட தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலன் விவரித்ததாவது: அவரை எதிர்ப்பவர்களை அவர் சாந்தத்துடன் கண்டித்திட வேண்டும் மற்றும் தீமைக்குத் தீமை செய்திடக்கூடாது; பழிச்சொல்லுக்குப் பழிச்சொல் கூறக்கூடாது; குற்றச்சாட்டிற்குப் பதில் குற்றஞ்சாட்டிடக்கூடாது; மாறாக சாந்தத்துடனும், பொறுமையுடனும், அன்புடனும், தயவுடனும் சகோதர சகோதரிகளுக்கு மிகச் சிறந்த வழியைக் காண்பித்திட வேண்டும் மற்றும் கிறிஸ்துவுக்கொத்த குணலட்சணத்தில் நாம் வளர்த்திட வேண்டும் என்பதேயாகும். “சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்கிறதன் மூலம், “கிறிஸ்துவுக்கொத்த குணலட்சணத்தினைச் சோர்ந்துபோகாமல் வளர்த்திடுவதன் மூலம், இப்படி வளர்த்திடுபவர்களுக்குத் தேவன் வாக்களித்துள்ளதான மகிமை, கனம் மற்றும் அழியாமையினை வெற்றிகரமாய் நாடி அடைந்திட முடியும். ஏனெனில் அப்போஸ்தலன் சுட்டிக்காண்பித்துள்ளதுபோன்று, தெரிந்தெடுக்கப்பட்ட சபையில், மணவாட்டி வகுப்பாரில் அடங்குபவர்கள் அனைவரும், குணலட்சணத்தில், இருதயத்தில் தம்முடைய குமாரனுக்கொத்த சாயலாக வேண்டுமென்று தேவன் முன்குறித்திருக்கின்றார் (ரோமர் 8:29).

அந்தோ! வெகுசிலரே கிறிஸ்துவுக்கொத்த குணலட்சணத்தின் சாயலில் நன்கு வளர்ந்திருக்கின்றனர். அந்தோ பரிதாபம்! அநேகர் தேவன் அங்கீகரிக்கமாட்டார் என்று தாங்கள் அறிந்திருக்கிறதான – அதாவது ஒருவரையொருவர் மகா பரிசுத்தமான விசுவாசத்தில் வளர்ப்பதற்குப் பதிலாக, விசுவாசத்தினை அழித்துப்போடுகிறதும், சமாதானத்தை அழித்துப்போடுகிறதும், நற்பண்புகள் அனைத்தையும் அழித்துப்போடுகிறதுமான தவறான ஆவியை – சண்டையிடும் ஆவியினை, குற்றம் கண்டுபிடிக்கும் மனப்பான்மையினை அபிவிருத்திச் செய்துகொண்டிருக்கின்றவர்களாய் இருக்கின்றனர்.

அந்தோ பரிதாபம்! சத்தியத்தில் காணப்படுபவர்கள் மத்தியில், இந்தச் சண்டைக்காரர்கள் அதிகமான எண்ணிக்கையில் காணப்பட்டு, உதவும் பணியைப் பண்ணுவதற்குப் பதிலாக அழிவின் பணியை, பாதகமான பணியைப் பண்ணுகிறவர்களாக இருக்கின்றனர். இத்தகையவர்கள் தங்கள் குணலட்சணத்திற்குப் பாதகமும், களங்கமும் தாங்கள் உண்டுபண்ணிக் கொண்டிருக்கின்றனர் என்றும், தங்களை இராஜ்யத்திற்கு அல்லது எந்தத் தளத்திலுமுள்ள நித்திய ஜீவனுக்குப் பாத்திரமாகும் நிலையில் குறைவுப்படுத்திக் கொண்டே வருகின்றனர் என்றும் அறிந்துகொள்ள வேண்டும். கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் தாங்கள் அழிவுக்கேதுவான பணியைச் செய்து கொண்டுவருகின்றனர் என்று இத்தகையவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இத்தகையவர்கள் தாங்கள் விரோதத்தை விதைக்கின்றனர் என்றும், கசப்பின் வேர்களை முளைத்தெழுப்பிக் கொண்டிருக்கின்றனர் என்றும், இவைகள் அநேகருக்குப் பாதகமாய் விளங்கும் பொல்லாத பலன்களை நிச்சயமாய்க் கொணரும் என்றும் அறிந்துகொள்ள வேண்டும். சபைக்குப் பாதகம் உண்டுபண்ணுகிறவர்களுக்குத் தேவன் வெளிப்படுத்தியுள்ளதான விசேஷித்த கண்டனத்தை, இத்தகையவர்கள் நிச்சயமாய் அறிந்துகொள்ள வேண்டும் (மத்தேயு 18:6; லூக்கா 17:2).

இத்தகையவர்களுக்கான பலன் என்ன? மகிமையும், கனமும், அழியாமையுமல்ல; மாறாக உபத்திரவமும், வேதனையும், உக்கிர கோபாக்கினையே என்று அப்போஸ்தலன் கூறுகின்றார். ஆனால் இவைகள் நித்தியமான கோபாக்கினையாகவும், வேதனையாகவும் இருக்கும் என்னும் அர்த்தத்தில் அப்போஸ்தலனும் குறிப்பிடவில்லை, நாமும் குறிப்பிடுகிறதில்லை. தேவனை எதிர்ப்பதற்கான உச்சக்கட்டமான தண்டனை, “இரண்டாம் மரணமாக காணப்படுகின்றது என்பதை நாம் அறிந்திருப்பதினால், உபத்திரவமும், வேதனையும் தற்கால ஜீவியம் தொடர்புடையதாக இருக்கும் என்றே நாம் அனுமானிக்கின்றோம் – ஒன்றில் இத்தகையவர்கள் “திரள்கூட்டத்தாரில் பங்கடைபவர்களாகக் காணப்பட்டு, மகா உபத்திரவக்காலம் வழியாய்க் கடந்துசென்று, இதில் தாங்கள் முன்பு கற்க தவறின படிப்பினைகளைக் கற்கின்றவர்களாய் இருப்பார்கள் அல்லது பண்புகளில் புளிப்படைந்தவர்களாக, ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்டவர்களெனத் தாங்கள் பெற்றிருந்திருக்க வேண்டிய சமாதானத்தையும், சந்தோஷத்தையும் மற்றும் அன்பையும் தொலைத்து விட்டவர்களாக, திருத்தமுடியாதவர்களென, தேவனுடைய கிருபையையும், அவரது வார்த்தைகளினுடைய அறிவுரைகளையும் வீணாய்ப் [R4502 : page 324] பெற்றுக்கொண்டவர்களென “இரண்டாம் மரணம் மரிப்பவர்களாய் இருப்பார்கள். திராட்சக்கனிகளால் அடையாளப்படுத்தப்படுகின்ற குணலட்சணத்தை வளர்த்திடுவதற்குப் பதிலாக, இத்தகையவர்கள் அழிவுக்கு வழிநடத்தும் முட்புதர்களின் இயல்புகளை வளர்த்துகின்றவர்களாய் இருப்பார்கள்.

மறுரூபமாகுங்கள்

நன்கு செய்துகொண்டிருப்பவர்கள் மற்றும் நன்கு நாடிக்கொண்டி ருப்பவர்கள் சார்பிலும் மற்றும் தீமை செய்துகொண்டிருப்பவர்கள் மற்றும் சண்டையிடுபவர்கள் சார்பிலும் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லையெனில், திவ்விய கட்டளைகளாகிய இவைகள் மீது கவனத்தினைத் திருப்பிடுவதிலோ, கண்டனம் பண்ணும் இவ்வார்த்தைகளை அப்போஸ்தலன் எழுதிடுவதிலோ நமக்கு எந்தப் பிரயோஜனமும் இராது. இந்தக் கண்டனங்களானது, நம்முடைய குணலட்சணங்களைச் சரியான திசையில் உறுதிப்படுத்திடுவதற்கு நமக்கு உதவிசெய்வதற்கு நோக்கம் கொண்டிருக்கின்றதாய் இருக்கின்றது. ஆகையால் இந்தக் கட்டுரையைப் படிக்கும் யாரேனும், தான் தவறான திசையில் போய்க்கொண்டிருப்பதையும், சண்டையிடுகிற மற்றும் குற்றம் கண்டுபிடிக்கிற ஆவியை அபிவிருத்திச் செய்வதையும் மற்றும் கிறிஸ்துவின் சரீரத்தில் விசுவாசத்தையும், கீழ்ப்படிதலையும் மற்றும் அன்பின் ஆவியையும் குறைத்துப் போடுகிற மனப்பான்மையை அபிவிருத்திச் செய்வதையும் உணர்வார்களானால், தேவனுடைய கிருபையினால் மாறான நடக்கையை எடுத்திடுவதற்கு உடனடியாய்த் தீர்மானித்திடுவது நலமானதாய் இருக்கும். சோர்ந்துபோகாமல் நற்கிரியைச் செய்வதன் மூலமாகச் சரியான விதத்தில் பரலோக அழைப்பிற்கான மகிமையையும், கனத்தையும் மற்றும் அழியாமையையும் நாடிக்கொண்டிருப்பவர்கள் சரியான பாதையில் சோர்ந்துபோகாமல் காணப்படத்தக்கதாகவும், அதிகமதிகமாய் ஆசீர்வதிக்கப்படத்தக்கதாகவும் மற்றும் அதிகமதிகமாய்ப் பாதுகாப்பாய்க் காணப்படத்தக்கதாகவும் மற்றும் தேவன் அங்கீகரிக்கக்கூடியதும், “நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்று அவர் சொல்வதற்கு ஏதுவானதுமான குணலட்சணத்தில் பலப்படுத்தப்படத்தக்கதாகவும் உறுதிப்படுத்தப்படத்தக்கதாகவும் உற்சாகமூட்டப்பட மற்றும் விழிப்படையப் பண்ணப்பட வேண்டும்.

தங்களைச் சண்டையிடும் தன்மையுடையவரென, குற்றம் கண்டுபிடிக்கும் தன்மையுடையவரென, மற்றும் ஆக்கப்பூர்வமாய் இருப்பதற்குப் பதிலாக தீங்கானவரென, எப்போதும் குற்றம் கண்டுப்பிடித்துக் கொண்டிருப்பவரென உணர்ந்துகொள்பவர்கள், மிகவும் துரிதமாய்ச் சீர்த்திருந்திடும்படி நாம் வலியுறுத்துகின்றோம். சபையினுடைய பரீட்சை நிலைமைக்கான முடிவை நாம் நெருங்கிகொண்டிருக்கின்றோம் என்றும், நாம் ஏற்கெனவே பரீட்சையின் காலத்தில் காணப்படுகின்றோம் என்றும், சரியான குணலட்சணங்களை வளர்த்திடாத காரணத்தினால், அநேகர் விழுந்துகொண்டிருக்கின்றனர் என்றும் இத்தகையவர்களுக்கு நாம் ஞாபகப்படுத்துகின்றோம். இத்தகையவர்கள் உடனடியாகக் காரியத்தை ஜெபத்தில் கர்த்தரிடத்திற்கு எடுத்துச் செல்வதற்கும் மற்றும் உதவிகரமான அவரது கிருபையின் மூலமாக உடனடியாக தங்களுடைய ஜீவியத்தின் இந்தத் தவறான திசையிலான ஓட்டங்களைத் திருப்பிடுவதற்கும் நாம் வலியுறுத்துகின்றோம் இத்தகையவர்கள் அப்போஸ்தலனுடைய வார்த்தைகளுக்குக் கவனமாய்ச செவிசாய்த்து , “சமாதானத்தைத் தேடி, அவரைப் பின்தொடரக்கடவர்கள் மற்றும் முடிந்தமட்டும் “எல்லா மனுஷரோடும் சமாதானமாய் இருக்க வேண்டும் மற்றும் “தேவசமாதானம் அவர்களின் இருதயங்களில் ஆளக்கடவது மற்றும் ஏற்கெனவே பெற்றுக்கொண்டுள்ளதான ஆசீர்வாதங்களுக்காக நன்றியுடன் காணப்படுவார்களாக. இப்படிப்பட்டதான இருதய நிலைமையானது, கர்த்தரிடத்திலோ அல்லது அவரது ஜனங்கள் மற்றும் அவரது வேலைகள் தொடர்புடையதான அவரது வழிநடத்துதல்களில் குற்றம் கண்டுபிடித்திடாது. இவர்கள் அனைவரிடமும் மற்றும் தங்களுக்கு பிரியமாய் இராதபடிக்குக் கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட அனைத்திலும் – குற்றம் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, “அவரிடத்தில் கற்றுக்கொள்ளுகிறவர்களாக இருப்பார்கள்.

நிழலான இஸ்ரயேலர்கள் மத்தியில் காணப்பட்டதான முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும் கானானுடைய ஆசீர்வாதங்களுக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை எனும் உண்மையானது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு நாம் அனைவருக்கும் வலியுறுத்துகின்றோம் (1 கொரிந்தியர் 10:10). தெய்வீக ஏற்பாடுகளுக்கு எதிரான முறுமுறுப்புகளானது உண்மையில் கர்த்தருக்கு எதிரான முறுமுறுப்புறுகளாகக் காணப்படுகின்றது எனும் அர்த்தத்தைக் கொடுக்கும் அப்போஸ்தலனுடைய வார்த்தைகளை நாம் ஞாபகப்படுத்துகின்றோம். முறுமுறுக்காமல், முறையிடாமல், குற்றம் கண்டுப்பிடிக்காமல் நம்முடைய கைகளுக்கு அகப்படுபவைகளை நம்முடைய முழுப்பலத்துடன் செய்வோமாக (பிலிப்பியர் 2:14). தேவன் அவரது வேலைகளை நடத்திடுவதற்கு, அவரிடம் விட்டுவிடுவோமாக. ஒருவேளை அவரது வேலைகள் அனைத்தையும் அவர் நம் வசத்தில் ஒப்படைத்தாலும், நாம் அதை நடத்த முடியாதவர்களாய்க் காணப்பட்டு, திரும்பி அவரிடத்திலேயே எடுத்துச் செல்வதற்கும், அவரது வேலையை அவரே மேற்பார்வையிடுவதற்கு வேண்டிக்கொள்வதற்கும் கட்டாயத்திற்குள்ளாகுவோம் என்பதைத் தாழ்மையில் உணர்ந்துகொள்வோமாக.

கர்த்தரைக் காட்டிலும் நம்மால் நன்கு நிர்வகிக்க முடியும் என்றும், அவர் ஒழுங்குபண்ணியிருக்கிறதைக்காட்டிலும் நம்மால் அறுவடை வேலையை நன்கு வழிநடத்திட முடியும் என்றுமுள்ள எண்ணங்கள் நமக்கு வருமாயின், அவ்வெண்ணமானது – எதிராளியானவன் நம்மைச் சிக்கவைப்பதற்கு ஏதுவான கண்ணியாய் இருக்கின்றது என்று உணர்ந்து ஓடிவிடுங்கள். தெய்வீக ஏற்பாட்டில் குற்றம் கண்டுபிடித்து, அதில் மாற்றங்கள் பண்ணிடுவதற்கு முயற்சிப்பதற்குப் பதிலாக, கர்த்தர் நடத்திக்கொண்டுவருகிறதும் மற்றும் வழிகாட்டிக் கொண்டுவருகிறதுமான வேலைகளில், நம்முடைய மனசாட்சி மற்றும் தாலந்துகள் அனுமதிக்கிறதற்கேற்ப ஒத்துழைப்புடனும், முறையிடாமலும் நம்முடைய பங்கை உண்மையாய்ச் செய்திடுவோமாக. ஒருவேளை கர்த்தர் தம்முடைய அறுவடை வேலைக்கடுத்த முழு நிர்வாகத்தையும் நம் கைகளில் ஒப்புக்கொடுத்தாரெனில், நாம் அவரைக் காட்டிலும் சிறப்பாய்ச் செய்ய முடியுமா என்பதை நிச்சயமாய் நாம் அறியோம்; ஆகையால் தேவன் நம்மை ஏற்றகாலங்களில் உயர்த்தத்தக்கதாக, அவரது பலத்தக் கரங்களின் கீழ் நாம் நம்மைத் தாழ்த்துவோமாக.

இப்படியாக தங்களைத் தாழ்த்திக்கொண்டு, தேவனுடைய கிருபையையும், ஞானத்தையும் உணர்ந்துகொண்டு, இதற்கு இசைவாய்க் காணப்படுபவர்கள் மாத்திரமே, இராஜ்யத்தின் வேலையில் ஏதேனும் பங்கினை அடைவார்கள் என்பதை நாம் திட்டவட்டமாய்த் தெரிந்துகொள்வோமாக. இறுமாப்பானவர்கள், மேட்டிமைக்கொண்டவர்கள், சுயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள், சண்டைக்காரர்கள், திருப்தியடையாதவர்கள் தற்காலத்தினுடைய நன்மைகளையும் சரி, எதிர்க்காலத்தினுடைய கனங்களையும் சரி அடைவதில்லை.

கடுமையான சோதனையை அடைவீர்கள்

“என் சகோதரரே, அதிக (மாபெரும் நியாயத்தீர்ப்பு அல்லது சோதனை) ஆக்கினை (போதகர்களாகிய நாம்) அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக. நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம் – நாம் அனைவரும் பூரணமற்றவர்கள் என்று கூறிப் போதகர்களாக விரும்புபவர்களை ஆட்கொள்ளும் விசேஷமான அபாயங்கள் தொடர்பாக அப்போஸ்தலனாகிய யாக்கோபு சகோதரரை எச்சரிக்கின்றார் (யாக்கோபு 3:1).

அப்போஸ்தலனுடைய வார்த்தைகளிலுள்ள சத்தியத்தினை அனைவரும் அடையாளம் கண்டுகொண்டிருந்தாலும், இவ்வார்த்தைகளானது வெகுசிலரையே பெரிதும் தடுத்துள்ளதாய்க் காணப்படுகின்றது. இதன் விளைவாக, அநேகர் சபையில் போதகராகும்படிக்கு நாடுகின்றனர் என்று நாம் காண்கின்றோம். போதகர்களென இவர்கள்; கடுமையான சோதனைக்குள்ளாகுகின்றனர் என்ற அப்போஸ்தலனுடைய வார்த்தைகளின் உண்மையையும் மற்றும் சத்தியத்தில் இடறி, விழுபவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த (போதக) வகுப்பாராகவே காணப்படுகின்றனர் என்றும் நாம் காண்கின்றோம். போதகர்கள் என்பவர்கள் அவசியமற்றவர்கள் என்றோ அல்லது தெய்வீக ஏற்பாடுகளுக்குப் புறம்பானவர்கள் என்றோ தெரிவிக்க வேண்டும் என்று நாம் இப்படியாக எழுதவில்லை மாறாக போதகப் பணிக்குள் பிரவேசிக்கும் எவனும், தான் மேற்கொள்ளும் முக்கியமான பொறுப்புக் குறித்தும் மற்றும் பரம பட்டணத்தை நோக்கின தனது பாதையில் சூழும் சோதனைகள் அல்லது பரீட்சைகள் குறித்தும் உணர்ந்த நிலையில், அப்பணியினைச் செய்திட வேண்டும் என்று தெரிவிப்பதற்காகவே இப்படியாக எழுதியுள்ளோம்.

“கண்காணிப்பை (மேய்ப்பனுக்கான, கண்காணிக்கான பணியினை) விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான் என்று பரிசுத்த பவுலடிகளார் எழுதியுள்ளார் மற்றும் இதன் காரணமாக யார் ஒருவன் சுத்தமான இருதயத்தில், ஆடுகளுக்கான உடன் மேய்ப்பன் என மற்றும் மீட்பருடன் உடன் வேலையாட்கள் எனக் கர்த்தருடைய காரணங்களுக்காக ஊழியம் புரிந்திட நாடுகின்றானோ, அவன் மிகவும் சிறந்த ஊழியத்தில் ஈடுபடுகின்றவனாக இருக்கின்றான். மந்தைக்கு ஊழியம் புரிந்திடுவதற்கான அக்கறையுடன்கூடிய வாஞ்சையில், மாபெரும் மேய்ப்பனுக்கு முழு இசைவுடன் காணப்பட வேண்டும் என்ற அக்கறையுடன்கூடிய வாஞ்சையில் – இந்த ஒரு நிலைப்பாட்டில் அவன் இவ்வூழியத்தினை நாடுவானாகில், அவன் இந்தளவுக்குக் கர்த்தருடைய ஆவியைப் பெற்றிருப்பதினால், களிகூருவதற்கு வெட்கமடையக் கூடாது. ஆனால் ஒருவேளை அவன் தனக்குள் பேராசையின் ஆவியையோ, மேட்டிமையின் ஆவியையோ, தற்பெருமையடித்துக்கொள்ளும் ஆவியையோ, விசுவாச வீட்டாரின் சகோதர சகோதரிகளை இறுமாப்பாய் ஆளுவதற்கான ஆசையோ அதிகளவில் அல்லது கொஞ்சமேனும் காணப்படுவதைக் கண்டுபிடிப்பானானால், அவன் பயம் கொள்ளக்கடவன். நடுங்கின இருதயத்துடன் அவன் ஒன்றில் அவ்வூழியத்தினின்று விலகிடுவானாக அல்லது கிருபையின் சிங்காசனத்திடத்திற்குப் போய், தன்னுடைய இருதயங்களிலுள்ள பொல்லாத பேராசைகளினின்று தன்னைச் சுத்திகரித்துக்கொண்டு, ஆண்டவருடைய ஆவியினால் நிரப்பப்படுவானாக. அந்தப் பரிசுத்த ஆவியானது, சாந்தத்தின், தயவின், பொறுமையின், நீடிய பொறுமையின், சகோதர சிநேகத்தின், அன்பின் ஆவியாய் இருக்கின்றது; அது தேவனுக்கு மகிமை சாற்றிடுவதற்கும் மற்றும் அவரது ஜனங்களை ஆசீர்வதிப்பதற்கும் விரும்புகின்றதாய் இருக்கின்றது; அது மந்தைக்கு உதவி செய்யத்தக்கதாக அல்லது கிறிஸ்துவினுடைய சரீரத்தின் சமாதானத்திற்காக எத்தருணத்திலும் சுயத்தைப் பலிச்செலுத்திடுவதற்கு ஆயத்தமாய்க் காணப்படும் ஆவியாய் இருக்கின்றது.

சபையில் போதிக்க முற்படும் சகோதரருக்கான விசேஷித்த அபாயங்களைக் குறித்து ஏன் இப்படியாக அப்போஸ்தலன் எழுதிட வேண்டும் என்று சிலர் யோசிக்கலாம். அவரது வார்த்தைகள் தெய்வீக ஏவுதலினாலானது என்று நாம் ஏற்றுக்கொள்கின்றோம் என்றும், இன்னுமாக அனுபவங்களானது அவ்வார்த்தைகளின் உண்மையினை நமக்குச் [R4503 : page 324] சுட்டிக்காட்டுகின்றது என்றும் நாம் பதிலளிக்கின்றோம். இன்னுமாகப் போதகம் பண்ணும் விஷயத்தில் ஈடுபடாத கர்த்தருடைய அருமையான ஜனங்கள், தங்களால் போதகர்கள் என்று அங்கீகரிக்கப்படுபவர்களின் மற்றும் தங்களையும் அறியாமல் தங்களால் சோதனைக்குள் வழிநடத்தப்படுபவர்களின் திசைமாற்றங்களுக்குப் பெரும்பாலும் தங்களையும் அறியாமல் பொறுப்பு வகிக்கின்றவர்களாய் இருக்கின்றனர். போதகர்களைச் சுற்றி வளைப்பவைகள் (1) பெருமை மற்றும் (2) இறுமாப்பாகும்.

(1)சகோதர சகோதரிகளுடைய பாராட்டுப் பேச்சுகளினால் உற்சாகமூட்டப்படுகிறதினால், இவர்கள் தங்களைக் குறிப்பிடத்தக்கவர் என்று எண்ணும் விதத்திலேயும் மற்றும் தங்கள் பிரயாசங்களுக்குரிய வெற்றிக்கான காரணம் சத்தியத்தின் வியக்கத்தக்க ஆற்றலும், அருமையுமேயாகும் என்று சாற்றிடுவதற்குப் பதிலாக, தங்களுடைய இயற்கையான திறமைகள், தாலந்துகள் முதலானவைகளே வெற்றிக்கான காரணம் என்று சாற்றும் விதத்திலேயும் இவர்களுடைய மனப்போக்கானது காணப்படுகின்றது. இப்படியாகவே ஊழியக்காரர்கள் பொதுவாகக் கண்ணிக்குள்ளாகுகின்றார்கள்; காரணம் நம்முடைய சக அங்கத்தினர்கள் முன்னிலையில் மகிமையின் இராஜாவிற்கான ஸ்தானாபதிகளென நிற்பது உண்மையில் மிகவும் கனமிக்கக் காரியமாகும். சபை பிரிவிலுள்ளவர்களின் எண்ணிக்கையையும், ஞானத்தையும் குறித்துத் தற்பெருமையடித்துக்கொள்ளுவதே பொதுவாய் நிலவும் மனோநிலையாகக் காணப்படுகின்றது. ஆனால் “தற்கால சத்தியத்தினுடைய வெளிச்சத்தில் காணப்படுபவர்கள் மத்தியில் தனிப்பட்ட விதத்தில் பெருமைக்கொள்வதற்கான சோதனை அநேகமாக இன்னும் அதிகமாகவே காணப்படும்.

திட்டம் நம்முடையதல்ல என்றும், அதன் நீளங்களும், அகலங்களும், உயரங்களும் மற்றும் ஆழங்களும் தேவனுடையது என்றும், அது அவரது ஜனங்கள் அனைவருக்குமானது என்றும், முடிந்தமட்டிலுமான மிகுந்த தாழ்மையான விதத்தில் அத்திட்டத்தினை அறிவிப்பது நமக்கான கனமாகும் என்றுமுள்ள உண்மைகளை நன்கு நினைவுகூருவதே மருந்தாகும்.
[R4503 : page 325]

கர்த்தருக்கு உண்மையாய் இருத்தலானது அனைத்துக் கனமும், மகிமையும் இரட்சிப்பின் திட்டத்திற்கான மகா ஆசிரியருக்கும், இத்திட்டத்திற்கு மையமாய்க் காணப்படும் பலியைச் செலுத்தினவரும் மற்றும் நம்முடைய செய்தி முழுவதிலும் அடங்கியுள்ள அன்பினைச் செலுத்தினவருமான மாபெரும் மீட்பருக்கும் சேரத்தக்கதாக, நம்மையே மறைத்துக்கொள்ளத்தக்கதாக நம்மை நடத்திட வேண்டும். இவ்வெண்ணங்களை நம் மனதில் பதியப்பெற்றவர்களாக, நமக்கு அனுமதிக்கப்பட்ட ஊழியம் பெரியதாய் இருக்கையில், நம்முடைய தாழ்மையும் மற்றும் மகிமையின் மகா கர்த்தருக்கான வாய்க்கருவிகளாக இருப்பதற்கு நமது அபாத்திர நிலைப் பற்றின நமது உணர்ந்துகொள்ளுதலும் பெரிதாய்க் காணப்பட வேண்டும்.

(2) இறுமாப்பு என்பது நாம் குறிப்பிட்டிருக்கிறபடி, சுற்றி நெருக்குகிற விஷயத்தில் ஒன்றாக இருக்கின்றது. அந்தோ பரிதாபம்! கர்த்தரால் அவரது செய்திக்கான அவரது வாய்க்கருவியாக இருப்பதற்கு ஒருவன் கனப்படுத்தப்பட்டிருப்பதினிமித்தம், அவன் தனது கர்த்தருடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்வதற்கும் மற்றும் சகோதர சகோதரிகளிடத்தில் இறுமாப்பாய் நடந்து கொள்வதற்கும் முற்படுவது என்பது அல்லது அப்போஸ்தலன் சொல்லுவது போன்று “தேவனுடைய சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகை செய்ய முற்படுவது என்பது எவ்வளவு பொருத்தமற்றக் காரியமாய்க் காணப்படுகின்றது (1 பேதுரு 5:3). போதகர்களாய் ஊழியம் புரிந்திடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதான அந்தச் சகோதரர்கள், சபைக்கு அதிகாரிகளாக/சபையை இறுமாப்பாய் ஆளுகிறதற்காக இருப்பதற்குப் பதிலாக, சபையின் ஊழியக்காரர்களாக மாத்திரமே காணப்பட வேண்டுமென்றுள்ள முற்றிலும் மாறான ஒரு நிலைப்பாட்டினை வேதவாக்கியங்கள் நமக்கு நினைப்பூட்டுகின்றதாய் இருக்கின்றது. இவர்கள் தேவனுடைய ஊழியக்காரர்களாக இருப்பினும், இவ்விஷயம் தொடர்பான தெய்வீக வழிகாட்டுதலானது, சபை மூலமாய் நாடப்பட வேண்டும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் மூப்பர்கள், மேய்ப்பர்கள் அல்லது போதகர்களுடைய சபையின் தேர்ந்தெடுத்தலானது – சபைக்குரிய ஊழியங்களுக்கான, அதாவது சபைக்குப் பரிசுத்தக் காரியங்களில் ஊழியம் செய்திடுவதற்கும், சபைக்கு தேவகிருபையில் ஊழியம் செய்திடுவதற்கும், சபைக்குத் தெய்வீக வார்த்தைகளாகிய ஆவிக்குரிய உணவினைப் பரிமாறுவதற்கும் என்றுமுள்ள கர்த்தருடைய தேர்ந்தெடுத்தல் என்று அவர்களால் கருதப்படுபவர்களின் தேர்ந்தெடுத்தலாய் இருக்கின்றது.

மூப்பராகிய சகோதரர்கள் மற்றும் போதகர்கள் இடறும் விஷயத்தில், சபையாரும் அதிகளவில் பொறுப்பு வகிக்கின்றவர்களாய் இருக்கின்றனர். சபையார் தீமை நினைக்கக்கூடாது, தீமையாய்க் கற்பனை பண்ணிக்கொள்ளக்கூடாது அல்லது இறுமாப்பு என்று கற்பனை பண்ணிக்கொள்ளக்கூடாது என்றாலும், இந்தச் சகோதரர்களைத் தேவைக்கு மிஞ்சி முகஸ்துதி செய்யாதபடிக்கு, அவர்களைத் தேவைக்கு மிஞ்சி உற்சாகமூட்டாதபடிக்கு, புதிய வெளிச்சத்தை உண்டு பண்ணத்தக்கதாக அவர்களைத் தூண்டிவிடாதபடிக்கு, அவர்கள் விஷயத்திலுள்ள தங்கள் கடமைகளுக்கும் மற்றும் பொறுப்புகளுக்கும் சபையார் மிகவும் விழித்திருக்க வேண்டும்.

ஆவிக்குரியவர்களாகக் காணப்படும் அனைவரும் இந்த மூப்பர்களாகிய சகோதரர்களுக்கு உதவுபவர்களாகக் காணப்பட வேண்டும்; மற்றும் கர்த்தருக்கான அவர்களது உண்மையைக் குறித்து வாழ்த்திட / மகிழ்ச்சித் தெரிவித்திட வேண்டும் மற்றும் பழம்பெரும் காரியத்திற்கே (சுவிசேஷத்திற்கே) ஒழிய, மற்றப்படி கற்பனையான கட்டுக்கதைகளுக்காகப் பாராட்டப்படக்கூடாது அல்லது கட்டுக்கதைகளின் விஷயத்தில் தொடர்ந்து ஊக்குவிக்கக்கூடாது. கிருபையின் சுவிசேஷமானது இன்னும் மாறிடவில்லை அது இன்னமும் இயேசுவையும், அவரது அன்பையும் குறித்தும் மற்றும் பிதாவின் அன்பையும் குறித்துமான பழம்பெரும் காரியத்தைக் குறித்தே தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது; அது வேத வாக்கியங்களில் முன்வைக்கப்பட்டுள்ளதான நிபந்தனைகளுக்கு உண்மையாய் இருப்பதற்குரிய நமக்கான அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் குறித்த சிந்தனைகளை இன்னமும் பெற்றிருக்கின்றது. இவைகள் தொடர்பாகவே சகோதரர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டுமேயொழிய, தேவவார்த்தைகளினுடைய எந்த அங்கீகரிப்பும் இல்லாமல், யூகம் பண்ணி நிழல்களை உண்டுபண்ணுகிறது தொடர்பாக ஊக்குவிக்கப்படக்கூடாது.

வழிநடத்துபவர்களின் சார்பிலான இறுமாப்பின் விஷயத்திலும் மற்றும் அவர்கள் சபை மீது இறுமாப்பாய் ஆளும் விஷயத்திலும், சபைக்கே மாபெரும் பொறுப்பு இருக்கின்றது என்று நாம் நம்புகின்றோம். பரிசுத்த பவுலடிகளார் சுட்டிக்காட்டுவது போன்று, புதிதாய் வந்துள்ளவர்கள் வேகமாய் முன்னுக்குத் தள்ளப்படக்கூடாது மற்றும் சத்தியத்தில் நன்கு வளர்ந்துள்ள மூப்பராய்க் காணப்படும் சகோதரரில் யாரேனும் இறுமாப்பிற்கும், சபையாரின் குரலை/வாக்கை அலட்சியம் பண்ணுதலுக்கும் மற்றும் சபை சார்ந்த காரியங்கள் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகள் அனைத்திற்கும் இணங்கிட மனம் இல்லாமல் இருத்தலுக்குமான அறிகுறிகளை வெளிப்படுத்த துவங்குவாரெனில், இத்தகைய சகோதரனை இன்னும் தொடர்ந்து தேர்ந்தெடுக்க மறுப்பதன் மூலமும் மற்றும் சபையாருடைய உரிமைகளைக் குறித்து வலியுறுத்துவதன் மூலமும், இத்தகைய இறுமாப்பினைச் சபையார் உடனடியாய்க் கண்டித்திட வேண்டும். இப்படி வலியுறுத்திக் கூறும்போது, கோபத்துடன் (அ) சண்டைச் சச்சரவுடன் வலியுறுத்திடாமல், மாறாக அன்புடனும், சகோதரத்துவத்துடனும், பெருந்தன்மையுடனும் சபையின் உரிமைகளானது வலியுறுத்தப்பட வேண்டும் மற்றும் இது விஷயம் குறித்த சபையாரின் வாக்குகள் (Votes) கேட்கப்பட வேண்டும். ஒருவேளை சபையின் உரிமையைப் பாதுகாத்திட நாடிட்ட சகோதரனுக்கு வாக்குகள் (Votes) எதிராகக் காணப்படும் பட்சத்தில், அச்சகோதரன் தயவாய்க் கீழ்ப்படிந்திட வேண்டும்; ஏனெனில் அச்சகோதரனாலும்கூடச் சபையாருடைய வாக்கானது, முடிவு (Decision) என்பதாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

தேவனுடைய ஏற்பாட்டின்படி கர்த்தருடைய ஜனங்கள் அடங்கிய சபையில் மூப்பர்களாகவும் மற்றும் போதகர்களாகவும் ஸ்தானம் வகிக்கும் அருமையான சகோதரர்களுக்காக நாம் மிகுந்த அனுதாபம் கொள்கின்றோம். ஆகையால் இத்தகையவர்கள் ஆளாகக்கூடியதான கடுமையான சோதனைகளைக் கவனத்திற்குக் கொண்டு வந்தபோதிலும் மற்றும் சபையார் தங்கள் கடமையைச் செய்திடுவதற்கும் மற்றும் இத்தகையவர்கள் தாழ்மையாயும், உண்மையாயும் காணப்படுவதற்குச் சபையார் உதவிடுவதற்கும் வலியுறுத்தினபோதிலும், அப்போஸ்தலனுடைய மொழிநடையிலேயே நாம் இன்னும் வலியுறுத்துவது என்னவெனில்: உயர் பண்புகளுடனும், தாழ்மையுடனும், சுயத்தைப் பலிச்செலுத்தியும் காணப்படுபவர்கள், மிக உயர்வாகவும் பார்க்கப்பட முடியாது மற்றும் மிக நேர்மையாயும் ஆதரவு அளிக்கப்பட முடியாது. அப்போஸ்தலனின் வார்த்தைகள் பின்வருமாறு: “தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள். இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே (எபிரெயர் 13:7,8,17); மீண்டுமாக “அவர்களுடைய கிரியையினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளுங்கள் (1 தெசலோனிக்கேயர் 5:13)

கிறிஸ்துவின் சபையில் மூப்பர் மற்றும் போதகர் ஸ்தானம் என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகவும், தேவனுக்கும், சகோதரர்களுக்கும் பிரியமான விதத்தில் செயல்படுவதற்கு மிகக் கடினமான ஒரு ஸ்தானமாகவும் மற்றும் முழுக்க சோதனையுள்ள ஒரு ஸ்தானமாகவும் காணப்படுமாகில், சபையானது சோதனையை அதிகரிக்காதபடிக்கும், சோதனையைத் தூண்டிவிட்டுப் பொல்லாத கனிகளைக் கொணராதபடிக்கும், அனுதாபத்தினால் மிகவும் விழிப்புடன் காணப்பட வேண்டும். எங்கெல்லாம் உண்மையுள்ள ஊழியக்காரர் காணப்படுகின்றாரோ, இப்படிப்பட்டவருக்கு உண்மையுள்ள சகோதர சகோதரிகள் யாவரும் உதவியாய் இருப்பதற்கும் மற்றும் ஒத்துழைப்பதற்கும் எல்லா விதத்திலும் நாடிடவேண்டும்; குற்றம் கண்டுபிடிப்பதற்கும் மற்றும் அந்தக் காரியத்தையாவது, இந்தக் காரியத்தையாவது, வார்த்தையையாவது, தொனியையாவது, பார்வையையாவது, நடத்தையையாவது விமர்சிப்பதற்கு முற்படுவதற்குப் பதிலாக சகோதர சகோதரிகள் முழுக்க அன்பினாலும், அனுதாபத்தினாலும் நிறைந்து காணப்பட்டு மற்றும் அந்த ஊழியக்காரனுடைய அன்புடன்கூடிய வைராக்கியத்தையும், அர்ப்பணிப்பையும் மற்றும் தாழ்மையையும் மிகவும் உணர்ந்து, மதித்தவர்களாகி, முக்கியத்துவமற்ற, அற்ப காரியங்களைச் சுட்டிக்காட்டிடாமலும், கவனிக்காமலும் விட்டுவிட வேண்டும். அவ்வூழியக்காரனுடைய பணியின் பொறுப்பினை உணருகையில், சகோதர சகோதரிகள் தங்களால் ஒருவேளை அவர் வகிக்கும் ஸ்தானத்தில் நல்ல அல்லது மிகுந்த ஆற்றலுடனும், தாழ்மையுடனும் செயல்பட முடியுமா என்று சிந்தித்துப்பார்க்க முடிகின்றவர்களாகக் காணப்படுவார்கள்.

மூப்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில், அர்ப்பணிக்கப்பட்டவர்கள் தங்கள் மீது பொறுப்பானது காணப்படுகின்றது என்று நினைவில் கொண்டிருக்க வேண்டும் மற்றும் தெய்வீகச் சித்தம் குறித்துக் கருத்தூன்றி சிந்திக்காமலும் மற்றும் தெய்வீக வழிகாட்டுதலுக்காக ஜெபம் ஏறெடுக்கப்படாமலும் எந்த வாக்கும் (Vote) அளிக்கப்படக்கூடாது. இக்காரியம் தொடர்பான கர்த்தருடைய சித்தத்தை உறுதிப்படுத்த நாடுகையில், வேதவாக்கியங்களில் முன்வைக்கப்பட்டுள்ளதான போதகருக்கான பண்புகளை நாம் நினைவில்கொள்ள வேண்டும்; அவை பின்வருமாறு: (1) ஐயத்திற்கிடமின்றி போதகர் என்பவர் போதிப்பதற்குரிய திறமிக்கவராகக் காணப்பட வேண்டும்; அவர் புரிந்திருப்பவைகளை எளிமையான விதத்தில் முன்வைப்பதற்குரிய இயல்பான திறன் அல்லது திறமை பெற்றிருக்க வேண்டும். (2) இன்னும் மிக முக்கியமானது என்னவெனில், அவருக்குப் போதிக்கும் திறமை இருக்குமானால், அவர் தப்பறையை அல்ல, மாறாக சத்தியத்தைத் தெளிவாய் முன்வைக்கத்தக்கதாக, அவர் சத்தியத்தில் தெளிவுள்ளவராய்க் காணப்பட வேண்டும். (3) தாழ்மையும், தேவபக்தியும் மூப்பருக்குத் தலைமையான மற்றும் அடிப்படையான/முதன்மையான தகுதிகளாகக் கருதப்பட வேண்டும். போதகர் ஒருவர் எவ்வளவுதான் திறமிக்கவராக இருப்பினும், எவ்வளவுதான் உபதேசத்தில் தெளிவானவராக இருப்பினும், அவருக்குத் தாழ்மையும், தேவபக்தியும் இல்லாதது வரையிலும் மற்றும் அவரது வார்த்தைகளும், கிரியைகளும், சகோதர சகோதரிகளுக்கான அவரது அன்பை வெளிப்படுத்தாதது வரையிலும் – அவர் இந்த ஸ்தானத்திற்குப் பொருந்தாதவராகக் காணப்படுவார். ஏனெனில் வேதவாக்கியங்கள் முன்வைப்பதுபோல, இந்தப் பண்புகளானது, தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றவைகளாகக் காணப்படுகின்றன. முன்பு போலவே இப்பொழுதும் – நன்மை செய்திடுவதற்கான மாபெரும் வாய்ப்புகளானது, பாதகம் செய்வதற்கான மாபெரும் வாய்ப்புகளாகக்கூடக் காணப்படுவதற்கு ஏதுவாய் இருக்கிறது என்பது உண்மையாகவே காணப்படுகின்றது. இதற்குக் காரணம் தற்கால நிலைமைகளின் கீழ்ப் பூமிக்குரிய நோய்கள் போலவே, ஆவிக்குரிய ஆரோக்கியத்தைக் காட்டிலும் ஆவிக்குரிய நோயும், தொற்றுகளும், மிக வேகமாக பரவுகின்றது மற்றும் தொற்றிவிடுகின்றதாய் இருக்கின்றது.