சுவாரசியமான கடிதங்கள்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R5704 (page 174)

சுவாரசியமான கடிதங்கள்

Interesting Letters

சரிப்படுத்தப்பட வேண்டிய கடுமையான தவறுகள்


அருமை சகோதரர் ரசல் அவர்களே:–


சில சபைகளில் நடந்துகொண்டிருக்கும் சில காரியங்கள் குறித்து உங்களுக்கு எழுதிட வேண்டுமென்று நீண்ட நாட்களாக விருப்பங்கொண்டி ருந்தேன்; எனினும் நான் தவறாய்ப் புரிந்திருப்பேனோ என்னும் அச்சத்தினால், எழுதுவதற்கான தைரியமற்று இருந்தேன். இக்காரியமானது மிகவும் அடிக்கடி எனது கவனத்திற்கு வந்துள்ளது மற்றும் இது கர்த்தருடைய காரணங்களுக்கு மிகவும் பாதகமானவையாகத் தோன்றுகின்றதினால், சில விஷயங்களை எழுதும்படிக்கு ஏவப்பட்டுள்ளேன் மற்றும் எனது சார்பிலான மோசமான கணிப்பாய் உங்களுக்குத் தோன்றிடும் எதற்காகவும், நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன். சில அருமையான சகோதரர்கள் மூப்பர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்; இவர்கள் கர்த்தருடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு வைராக்கியமுடையவர்களாய்க் காணப்பட்டனர். பெரோயா கூட்டங்கள் நடத்தலாம் என்று முன்வைக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளவும்பட்டது. இந்த அருமையான சகோதரர்களில் சிலர் வெளியில் காணப்படுபவர்களைப் “போஷிப்பதுதான்” முக்கியமானது என்றும், “தேவனுடைய மந்தையை மேய்ப்பது” அவ்வளவுக்கு முக்கியமல்ல என்றுமுள்ள கருத்துக்களை உடையவர்களாய்க் காணப்படுகின்றனர். ஆகையால் பெரோயா கூட்டத்திற்கு வரும்போதெல்லாம், கூட்டத்தைத் துவங்குகையில் வழிநடத்துபவர்: “அருமையான நண்பர்களே, இன்று பாடத்தை நான் பார்த்து வரமுடியாததற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன்” அல்லது “நான் இன்னென்ன காரியங்களில் மிகவும் ஈடுபட்டுக்காணப்பட்டிருந்தபடியால் (Busy) இன்றையப் பாடம் எதிலிருந்துத் துவங்குகின்றது என்று நான் அறியேன்” என்று சொல்லிவிடுவார். இன்னுமாக “சபையாருக்கு இப்பாடங்கள் அனைத்தும் நன்கு தெரியும், ஆகையால் இதைக்குறித்து அதிகம் அறிந்திருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் பரவாயில்லை” என்று வழிநடத்துபவர்கள் கூறுவதை நான் அடிக்கடி கேட்டிருக்கின்றேன். இச்சிந்தனைகளானது அவர்களைக் கவனமற்றவர்களாகவும், அக்கறையற்றவர்களாகவும் மாற்றுகின்றது. நல்ல ஒரு சபையில், வழிநடத்துபவர் தனது அறியாமையைத் தெரிவிப்பதைக் கேட்கையில் எனக்குப் பெரும் வேதனையளிக்கின்றதாய் இருக்கின்றது. இதன் விளைவென்ன? கூட்டம் துவங்குகின்றது; ஒரு கேள்வி கேட்கப்படுகின்றது; சகோதரர் A தனது கண்ணோட்டத்தைத் தெரிவிக்கின்றார், பின்னர்ச் சகோதரர் B, பின்னர்ச் சகோதரர் C, பின்னர்ச் சகோதரி D தங்கள் கண்ணோட்டங்களைத் தெரிவிக்கின்றனர். கண்ணோட்டங்கள் முரண்படவும் செய்கின்றது. தனக்கு அனைத்தும் நன்றாய்த் தெரியுமென எண்ணுகின்ற சகோதரன்: “இதெல்லாம் தவறு; இன்னென்னவை தான் சரி” என்கிறார்; பின்னர்ச் சில கலந்தாய்வுகள் நடைபெறுகின்றன் பின்னர்த் தனக்கு அனைத்தும் நன்றாய்த் தெரியுமென எண்ணுகின்ற அதே சகோதரன் மறுபடியுமாக “இவைகள் சரியல்ல” என்று கூறுகின்றார். வழிநடத்துபவர் தர்மசங்கடத்திற்குள்ளாகின்றார் மற்றும் தனது பாடங்களை அவர் படித்து வராததினால், அவர் ஒரு வார்த்தைக்கூடச் சொல்வதில்லை மற்றும் இறுதியில் எந்தத் திட்டவட்டமான பதில் கிடைக்காத நிலையில் கேள்வியானது கடந்து செல்லப்படுகின்றது. சில கூட்டங்களில் அருமையான நண்பர்களில் சிலர் தங்கள் வாயைத் திறக்காமலேயே வீட்டிற்குத் திரும்புகின்றனர்; காரணம் அவர்கள் பேசிடுவதற்கு ஊக்கமூட்டப்படுகிறதில்லை. நன்கு திறமையுடையவர்களாய்க் காணப்படும் சிலர் அனைத்து உரையாடலையும் பண்ணுகின்றனர் மற்றும் சில சமயங்களில் மூன்று அல்லது நான்கு பேருக்கு இடையிலான சிறு உரையாடல் வாதங்களைச் சபையார் அமர்ந்து, கேட்க மாத்திரமே முடிகின்றது. இன்னொரு காரியம் என்னவெனில்: வாட்ச் டவரில் எத்தனை தரம் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், சில வழிநடத்துபவர்களும், சபையாரும் கூட்டத்தைத் துவங்குகையில் கேள்வி புத்தகத்தை ஒரு கரத்திலும், வேதாகமப் பாடங்களை (volume) இன்னொரு கரத்திலும் வைத்திருக்கின்றனர். வாசிப்பதே அதிகமாய் இருப்பதினால், கலந்தாய்வு காணப்படுகிறதில்லை மற்றும் சில காரியங்கள் “பாடங்களில் மிகவும் தெளிவாய்க் கொடுக்கப்பட்டிருப்பதினால், கலந்தாய்ந்திட அவசியமில்லை” என்றும் அவ்வப்போது கூறி கலந்தாய்வு பண்ணுகிறதில்லை. உங்கள் கவனத்திற்கு நான் கொண்டுவந்திருப்பவைகள் சரியாய் இல்லை என்றால், சகோதரர் ரசல் அவர்களே இக்கடிதத்தை உங்களது குப்பைத்தொட்டியில் எறிந்துவிடுங்கள். எனினும் அருமையான சகோதரர்களாகிய மூப்பர்கள் இவ்வகையான கர்த்தருடைய ஊழியத்திலுள்ள – மந்தையைப் போஷிப்பதிலுள்ள தங்களது பொறுப்பினை உணர்ந்துகொள்ளத்தக்கதாக அவர்களுக்கும் உதவியாக இருக்கும் மற்றும் இந்நிலைமைகளைச் சரிப்படுத்தும் எதையேனும் தேவனால் வழிநடத்தப்படுகின்ற உங்களது பேனாவானது எழுதிடும்படிக்குக் கர்த்தரிடம் நான் ஊக்கமாய் ஜெபம் ஏறெடுக்கின்றேன். உங்களது சோதனைகளிலும், சந்தோஷங்களிலும் தேவனுடைய ஆறுதலும், பலமும் காணப்படத்தக்கதாக, உங்களை ஜெபத்தில் நான் தினந்தோறும் நினைவுகூருகின்றேன். ஒரே நம்பிக்கையில் உங்கள் சகோதரன்_____________________ R5704 : page 175 [பதில்:- மூப்பர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரர்கள் திறமையற்றவர்களாய்க் காணப்படுவார்களானால், மற்றவர்களை தேர்ந்தெடுப்பது சபையாருடைய கடமையாக இருக்கின்றது -அதாவது ஒருவேளை குறைவான திறமை இருந்தும், ஆராய்ச்சி செய்வதன் மூலம், மிகவும் உதவிகரமாகக் காணப்படும் ஒருவரை – தேர்ந்தெடுப்பது சபையாருடைய கடமையாக இருக்கின்றது. ஒரு நல்ல வழிநடத்துபவர் என்பவர் – அதிகமாய்ப் பேசுபவரல்ல, மாறாக தன்னம்பிக்கையற்றிருப்பவர்களுக்குப் பயிற்சியளிப்பதன் மூலம், அவர்கள் சரியாய்ப் பதில் சொல்லிடுவதற்கு அவர்களுக்கு உதவுபவர் ஆவார் அல்லது ஒரு நல்ல வழிநடத்துபவர் என்பவர் – ஒருவரால் கொடுக்கப்பட்ட பதில் தனது கணிப்பில் தவறாய் இருக்க, முன்வைக்கப்பட்டுள்ள தவறான கண்ணோட்டத்தினைக் குறிப்பிட்டுக் கூறாமல், சரியான கருத்தினை அன்பாய்க் கூறி, தனது கருத்துக்களுக்கு ஆதரவான வேதவாக்கியங்களையும், “வேதாகமப் பாடங்களிலிருந்தும் மேற்கோள்களையும் குறிப்பிடுபவர் ஆவார்.] பிரயோஜனமான பெரோயா ஆராய்ச்சிகள் – SUB HEADING அன்புக்குரிய சகோதரர் ரசல் அவர்களே:– இந்நாட்டிலுள்ள இவ்விடத்திலும், மற்றப்பாகங்களிலும் பெரோயா ஆராய்ச்சி வகுப்புகளை நடத்திடும் சகோதரர்களில் சிலர், தாங்கள் அவ்வாராய்ச்சிகளில் அதிகமாய்ப் பேசிட வேண்டும் என்ற எண்ணத்தில் காணப்படுவதை நான் கவனித்துள்ளேன். ஓர் ஆராய்ச்சி வகுப்பினை நடத்தும் ஒருவர் ஒவ்வொரு கேள்விக்கு அல்லது கருத்திற்கு ஐந்து நிமிடங்கள் செய்திக்கொடுப்பது என்பது தவறாகும்; மாறாக ஆராய்ச்சியானது முறையான விதத்தில் நடத்தப்படுகின்றதா என்று பார்த்துக் கொள்வதும், முடிந்தமட்டும் அநேகரிடமிருந்து கருத்துக்களை வரவைப்பதற்குப் பிரயாசம் எடுப்பதும், பின்னர்த் தனது சுருக்கமான விளக்கத்துடன் கேள்வியினை நிறைவுபண்ணுவதும்தான் தனது காரியமாய் இருக்கின்றது என்று வழிநடத்துபவர் பார்த்துக்கொள்ள வேண்டும். சபையில் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமான திறமையுள்ள ஒரு சகோதரர் சபையில் காணப்படுவதை நான் சிலசமயம் கவனித்திருக்கின்றேன். இவர் ஒவ்வொரு கேள்விக்கும் மற்றும் கருத்திற்கும் நீண்ட நேரம் விளக்கம் கொடுப்பவராய் இருப்பார். அதிகம் திறமையில்லாதவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கத்தக்கதாக, இத்தகைய திறமிக்கவர் தனது வைராக்கியத்தினைக் கட்டுப்படுத்தி வைத்துக்கொள்வது ஞானமாய் இருக்குமல்லவா? “சுருக்கமே பகுத்தறிவின் ஆன்மா” என்று நாம் சிலசமயம் சொல்வதுண்டு. நம்முடைய பெரோயா ஆராய்ச்சி வகுப்புகளில் சுருக்கமாய்ப் பேசுதல் என்பது உதவியாய் இருக்கும். மிகுந்த கிறிஸ்தவ அன்புடன், நம்முடைய கர்த்தருக்குள் உங்கள், F.H. HARRISON. பதில்: [பெரோயா வகுப்பை வழிநடத்துபவர் மிகவும் உதவிகரமாய்க் காணப்பட்டு, சபையாரிடமிருந்து பதில்களை வரவழைக்க முடிகிறவராகக் காணப்பட வேண்டும் என்று நாம் ஒப்புக்கொள்கின்றோம் – இல்லையேல் சகோதரர் அவரவர் தங்களுக்காக இல்லங்களிலேயே இருந்து வாசித்துக்கொள்ளலாமே. இது குறித்தக் கருத்துக்களை வேதாகமப் பாடங்களினுடைய ஆறாம் தொகுதியில் முன்வைத்திட பிரயாசம் எடுத்துள்ளோம். எனினும் வழிநடத்துபவரின் விளக்கமானது எப்போதுமே மிகச் சுருக்கமாகக் காணப்பட வேண்டுமென்ற கருத்துக்கு, மேலே இடம்பெறும் கடிதத்தை எழுதியுள்ளவருக்கு, நாங்கள் ஒப்புக்கொள்கிறதில்லை. மிகவும் சாமார்த்தியமான வழிநடத்துபவரால் கூடப் பதில்களைச் சரியாய்ச் சபையாரிடமிருந்து வரவழைக்க முடியாத சில கேள்விகள் காணப்படும். இம்மாதிரியான தருணங்களில் தன்னால் முடிந்தமட்டும் பதில்களை வரவழைத்தப் பிற்பாடு, வழிநடத்துபவர் அக்கேள்விக்கு மிகவும் முழுமையான விதத்தில், அதே சமயம் முடிந்தமட்டும் சுருக்கமாகப் பதிலைக்கொடுத்திடுவது சரியான காரியமேயாகும். உண்மைதான் அனைத்துப் பதில்களும் அல்லது கருத்துக்களும் சுருக்கமாகவும், குறிப்பாயும் இருக்க வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் நீண்ட நேரம் எடுத்துப் பதில் கொடுக்கும் பழக்கத்திற்கு அடிமைப்பட்டிருப்பவர்கள் ஆரம்பத்திலேயே வழிநடத்துபவரால் தனிப்பட்ட விதத்தில், சரியாய் நடந்துகொள்வது குறித்து அன்புடன் நினைப்பூட்டப்பட வேண்டும்; ஒருவேளை தேவைப்படும் பட்சத்தில் அன்பான விதத்தில் சபையார்முன்பும் நினைப்பூட்டப்படலாம். ஒருவேளை அவர் தொடர்ந்து அப்படியே காணப்பட்டால், மாற்றுவழி என்னவெனில் – பொதுவான விதத்தில் யார்வேண்டுமானாலும் பதில்கொடுப்பதற்குக் கேட்டுக்கொள்வதைத் தவிர்த்துக்கொண்டு, மாறாக நியாயமான வாய்ப்புகளை மாத்திரமே கொடுத்து, சபையாரிலுள்ள பல்வேறு அங்கத்தினர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுக் கேள்விக்கேட்பதாகும். ஒருவேளை இப்படிச் செய்வது தவிர்க்கப்பட வாய்ப்பிருக்குமானால், அப்போது இது விரும்பத்தகுந்ததாய் இராது.