பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R5142 (page 378)

பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்

SUGGESTIONS FOR BEREAN CLASSES

அன்புக்குரிய சகோதரர் ரசல் அவர்களே:-

உங்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதான வேலையினைக் குலைத்துப் போடத்தக்கதாக, உங்களை எதிர்க்கின்றவர்கள் தங்கள் பிரயாசங்களை அதிகரித்து வருகின்றனர் என்பதை நான் கவனிக்கையில், இந்தத் தற்போதுள்ள தகவலை (Tabernacle) டேபர்நாக்கிளின் முகவரிக்கு நான் அனுப்பிவைக்கையில், உங்களுக்கு என்னுடைய உள்ளார்ந்த கிறிஸ்தவ அன்பைத் தெரிவிக்க நான் நெருக்கி ஏவப்படுவதை உணர்கின்றேன். உங்களுக்கு விரோதமாய்ப் பொது நாளிதழ்களில் செய்யப்படும் பல்வேறு தாக்குதலுக்குரிய சோதனைகளில், உங்களுக்கு எங்களுடைய ஜெபங்களும், எங்களுடைய அனுதாபங்களும் காணப்படுகின்றது. கடந்தகாலங்களில் உங்களைத் தாங்கிட்டதான அதே கிருபையானது, முடிவுபரியந்தம் உங்களுக்குப் போதுமானதாயிருக்குமென நான் நம்புகின்றேன்.

ஏதோ கடந்தகாலங்களில் காணப்பட்ட மந்தத்தை ஈடுசெய்வது போன்று, பெரும்பாலான சபைகள், ஆவிக்கடுத்த காரியங்களில் முன்னுக்குத் துள்ளிக்குதிப்பது போன்று தோன்றுகின்றது.

“செய்ததையே திரும்பத்திரும்பச் செய்யாமல் இருப்பதற்கு, தொடர்ந்து மாற்றம் செய்வது அவசியமெனச் சில சபையார் மிகவும் தவறாய் எண்ணுகிறதை நான் கவனிக்கின்றேன். ஒரு சபையில் கர்த்தர் மிகவும் திறமையுள்ள வழிநடத்துபவரின் அவசியத்தைக் கண்டார் மற்றும் தேவையான தகுதிகளுடைய ஒரு சகோதரனை அங்கு ஊழியம்புரியும்படிக்குக் கர்த்தர் அனுப்பி வைத்தார். இரண்டு ஆறுமாதக் காலப்பகுதிகள் அச்சகோதரன் ஊழியம்பண்ணின பிற்பாடு, மாற்றம் வேண்டும் என்ற அந்த ஆவியானது, அச்சகோதரனைத் தேர்ந்தெடுக்க மறுத்தது அல்லது அச்சகோதரன் மறுபடியுமாகத் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது என்று எண்ணங்கொள்ளச் செய்தது. தற்போதுள்ள மூப்பர் ஒரு நல்ல சகோதரன்தான்; ஆனால் இருவரும் மூப்பர்களாகக் காணப்பட்டால், அவர்கள் ஒன்றிணைந்து அதிகமான ஊழியம்புரிந்திருக்க முடியும் (பிரசங்கி 4:9-12).

மாற்றம் வேண்டும் என்ற அதே கருத்தானது, இந்தச் சபையார் தங்கள் கூடுகைகளையும், ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகளையும்கூட இடமாற்றம் செய்யக் காரணமாயிற்று; இதனால் அவ்வப்போது கலந்து கொள்பவர்களில் சிலர் தாங்கள் ஓர் இல்லத்திற்குச் சென்று, அங்குக் கூட்டம் நடத்தப்படவில்லை என்ற நிலைமைக் காணப்படுமோ என்ற அச்சத்தில், கூட்டங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று முடிவெடுக்கின்றனர். இது இவர்கள் தவறாமல் கலந்துகொள்பவர்களாக
இராமல்போவதற்கான ஒரு காரணமாய் இருக்கின்றது.

இன்னொரு விஷயம் என்னவெனில், சில சபைகளுக்குப் பெரோயா வகுப்புகள் நடத்துவது பற்றின ஆலோசனை தேவையாயிருக்கின்றது; அதுவும் பெரோயா வகுப்புகளைத் தாங்கள் பெற்றிருக்கும்போது, தாங்கள் உண்மையில் பிரசங்க ஆராதனையையே பெற்றிருப்பதாக எண்ணிடும் சபைகளுக்கு ஆலோசனை தேவையாயிருக்கின்றது. மூப்பர் கேள்விக் கேட்கின்றார்; ஒன்று அல்லது இரண்டு நண்பர்கள் மிகவும் சுருக்கமான பதிலைக் கொடுக்கின்றனர் மற்றும் பின்னர் மூப்பர் 10 முதல் 15 நிமிடங்கள் பிரசங்கம்பண்ணுகின்றார்; இப்படியே அடுத்துக் கேள்விக்கும் மற்றும் இறுதிவரைக்கும் தொடரப்படுகின்றது.

சில மிகச்சிறிய எண்ணிக்கையிலுள்ள மற்றும் பெலவீனமான சபைகளில் இப்படிச் செய்ய [R5143 : page 378] அனுமதிக்கப்படலாம் என்று நான் கற்பனை பண்ணிக்கொள்கின்றேன்; ஆனால் இப்படிச் செய்வதைத் தங்கள் வழிமுறையாகப் பெற்றிருப்பதை நான் கண்ட ஒவ்வொரு சபையிலும், இப்படிச் செய்திடுவதற்குக் காரணங்கள் சொல்லிடுவதற்கு ஏதும் இருப்பதில்லை.

இலினோனிசிலுள்ள சகோதரர்களுடன் நாம் விலையேறப்பெற்ற ஐக்கியத்தினை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் மற்றும் தேவனுக்கு மகிமை சேர்க்கும் காரணங்களுக்கடுத்த ஊழியத்தின் சிலாக்கியங்களிலும் பெரிதும் களிகூர்ந்துகொண்டிருக்கின்றோம். மிகுந்த கிறிஸ்தவ அன்புடன் அவரது விலையேறப்பெற்ற நாமத்தில் தங்கள்

– பென்ஜமின். H. பார்டன்.

இதழாசிரியரின் பதில்

மேலே கொடுக்கப்பட்டுள்ளதான சகோதரர் பார்டன் அவர்களின் அறிக்கையினை ஒப்புக் கொள்வதற்கு இச்சந்தர்ப்பத்தினை நான் பயன்படுத்திக் கொள்கின்றேன். நாம் சீரான நிலைமையில் காணப்படுவது அவசியமாகும். சபையார் தங்கள் காரியங்களின் மீதான முழுக்கட்டுப்பாட்டினைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும், எனினும் இது தெய்வீக வழிக்காட்டுதல் என்று தாங்கள் நம்புகின்றவைகளின் கீழ்த்தங்களது மூப்பர்களாக அல்லது வழிநடத்துபவர்களாக இருக்கும்படிக்குத் தங்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களை மரியாதைக் குறைவாகப் பேச அல்லது எண்ண வேண்டும் என்று குறிப்பதாய் இருப்பதில்லை. “உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள் என்ற அப்போஸ்தலனுடைய வார்த்தைகளை நாம் நினைவில் கொள்வோமாக (எபிரெயர் 13:17).

சபையாரின் கரங்களினின்று அதிகாரத்தை எடுத்துக்கொள்வதற்கு முயற்சிக்காத ஓர் உண்மையுள்ள வழிநடத்துபவர் பெரிதும் நம்பப்படலாம் மற்றும் நம்பப்பட வேண்டும். அவருடைய ஊழியம் அன்பின் ஊழியமாக இருக்கின்றதே ஒழிய இழிவான ஆதாயத்திற்காகவல்ல மற்றும் ஊழியத்தில் அவரது உண்மைக்கான பலனாக, முழுச்சபையாருடைய அன்பானது, அவருக்கு இலவசமாகச் செலுத்தப்பட வேண்டும். இது – அதிகாரமானது ஒரு மூப்பருடைய கரங்களில் விடப்பட வேண்டும் என்று; அவர் மிகவும் திறமையுள்ளவராக இருப்பினும், மற்றவர்களும் முன்னுக்குக்கொண்டுவரப்பட்டால், இதன் நிமித்தம் அவர் கோபமடைய வேண்டும் / அவமதிக்கப்பட்டதாய் எண்ண வேண்டும் என்று குறிப்பதாய் இராது. இளைய சகோதரர் யாவருக்கும் உதவிசெய்திடுவதற்காகவும், உற்சாகமூட்டிடுவதற்காகவும், வழிகாட்டிடுவதற்காகவும் வழிநடத்துபவர்கள் மூத்த சகோதரர்களெனக் கவனித்திருக்க வேண்டும் மற்றும் அவர்களை உதவிக்காரர் ஊழியத்திற்கும், பிற்பாடு மூப்பர் ஊழியத்திற்கும் என்றும் ஆயத்தப்படுத்துவதற்காகவும் கவனித்திருக்க வேண்டும்.

கர்த்தருடைய அருமையான ஜனங்களில் சிலர் மிதமிஞ்சி செயல்படுகிறவர்களாகக் கொஞ்சம் காணப்படுகின்றனர். பலமான பாத்திரங்கள் எப்போதுமே மிதமிஞ்சிப் போவதற்கான அபாயத்தில் காணப்படுகின்றனர். “உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக என்று அப்போஸ்தலன் புத்திமதி கூறுகின்றார். நம்முடைய காரியங்களை நல்லொழுக்கமாயும், கிரமமாயும் நடத்திடுவது என்பது, பாபிலோன் போன்று எந்தத் தீமையான விதத்திலும் இருக்காது. பரலோகத்தை விதிகளும், ஒழுங்குகளும், கட்டுப்பாடுகளும் இல்லாத ஒன்றாக நம்மால் கற்பனைப்பண்ணக் கூடுமா? ஒழுங்குதான் பரலோகத்தின் முதல் பிரமாணம் என்று நாம் அறிந்திருக்கிறோமல்லவா? தேவன் தமது சித்தத்தின்படி, பல்வேறு அவயவங்களைச் சரீரத்திலே வைக்கின்றார் என்று அப்போஸ்தலன் சுட்டிக்காட்டினார் அல்லவா? அவரது சித்தத்தினை அங்கீகரிப்பதிலும், அதை நடந்தேற்றுவதிலும் நாம் தேவனோடு ஒத்துழைப்பது தவறாய் இருக்குமா? நிச்சயமாக இல்லை! நியாயமானதொரு எண்ணிக்கையிலுள்ள பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் மீது அடக்குமுறைப்பண்ணுவது மோசமான காரியமாய் இருப்பது போலவே, சிறிய எண்ணிக்கையிலுள்ள சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் மீது அடக்குமுறைப்பண்ணுவதும் மோசமான காரியமாகவே இருக்கும். பொன்னான பிரமாணத்தினை நினைவில் கொள்வதற்கும், மற்றவர்கள் நம்மிடத்தில் தயவாய் இருக்க வேண்டுமென நாம் விரும்புவது போன்று, நாம் மற்றவர்களிடத்தில் தயவாய் இருப்பதற்கும் அன்பின் ஆவியானது நம்மை ஏவிடும்.

மாற்றத்திற்கான மிகுந்த விருப்பம் தொடர்புடையதான சகோதரர் பார்டன் அவர்களின் யோசனைகளுக்கு நான் முழுச்சம்மதத்தைத் தெரிவிக்கின்றேன். ஒரு சபையார் தங்களுக்கான வழிநடத்துபவர்களை வாராவாரம் சுழற்சி முறையில் பெற்றிருக்கின்றனர் என்று சமீபத்தில் நாங்கள் கேள்விப்பட்டோம். ஒரு மாதக்காலம் அல்லது ஒரு காலாண்டுக்காலம் என்பது ஒவ்வொரு வழிநடத்துபவருக்கும் சரியாய் இருக்கும் என்று தோன்றினாலும், இப்படி வாராவாரம் சுழற்சி என்பது ஜெபம் மற்றும் சாட்சிக்கூட்டங்களுக்கு மிகவும் ஆகாததாய் இருப்பதில்லை. [R5143 : page 379] ஆனால் பெரோயா வேதப்பாடங்களைப் பொறுத்தமட்டில் வாராவாரம் மாற்றம் செய்வது என்பது வழிநடத்துபவருக்கும், சபையாருக்கும் மிகவும் ஊறுவிளைவிக்கின்றதாய் இருக்கும். முந்தையை பாடங்களின் தொடர்ச்சி, தொடர்பு இருப்பது என்பது மிகவும் விரும்பத்தக்கதாகும். பெரோயா வேதப்பாட நடத்துனர்கள் குறைந்தப்பட்சம் மூன்று மாதக்காலம் தொடர்ந்து பொறுப்பு வகிக்கும்படிக்கு நாம் பரிந்துரைக்கின்றோம்.

பெரோயா வேதப்பாடங்கள்

சபையாரிடமிருந்து பதில்களை வரவழைப்பவரே ஒரு வெற்றிகரமான போதகர் ஆவார் என்ற சகோதரர் பார்டன் அவர்களின் கருத்துப் பொருத்தமானதே. இந்த விஷயத்தில்தான் பெரோயா வேதப் பாடங்களானது, கர்த்தருடைய ஜனங்களுக்கு அதிகமதிகமாய் உதவி செய்கின்றதாய் இருக்கின்றது. உரையாற்றிடுவதற்கு அல்லது பிரசங்கம்பண்ணிடுவதற்கு தாலந்துடைய சில நபர்கள் போதிப்பதற்கு, சபையாரிடமிருந்து பதில்களை வரவழைப்பதற்குப் போதுமான தாலந்தற்றவர்ளாய் இருப்பார்கள் என்பது உண்மைதான். இம்மாதிரியான சந்தர்ப்பத்தில் மூப்பர்களுக்கான தகுதிகளில் ஒன்றாக அப்போஸ்தலனால் விவரிக்கப்படுகின்ற போதகசமர்த்தத்தைத் தாங்கள் பெற்றிருக்கின்றார்களெனக் காட்டுவதற்கு, வேறு மூப்பர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்படுவது சரியாய் இருக்கும்.

முன்கூட்டியே சகோதரர்களைப் பாடங்களைப் படித்து வரவைக்க முடியவில்லை என்று அநேகம் சபை வழிநடத்துனர்கள் தெரிவிக்கின்றனர். இப்படிக் காணப்படுவது வருந்தத்தக்கதே, ஆனாலும் பாடங்களைப் படித்து வராததற்காக யாரையேனும் அவமதிப்பதோ அல்லது கடுமையாய்த் தாக்கிப் பேசுவதன் மூலம் யாரையேனும் கூட்டத்தில் கலந்துகொள்வதிலிருந்து தடைப்பண்ணுவதோ ஞானமற்றதாய் இருக்கும். நாங்கள் வேறொரு நடைமுறையைப் பரிந்துரைக்கின்றோம்: ஒவ்வொரு வகுப்பின் துவக்கத்திலும் பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதான வேதாகமப் பாடங்களின் (Volume) அந்தப் பக்கங்களானது, தெளிவாயும், அழுத்தத்துடனும் வாசிப்பதற்குத் திறமையுள்ள ஒருவரால் வாசிக்கப்படுவதாக பின்னர்ப் புத்தகங்களை மூடி வைத்து, கேள்விகளின் அடிப்படையில் பாடம் கலந்துரையாடப்படுவதாக. வழிநடத்துபவர் துண்டு துண்டாய்க் காணப்படும் பதில்களைச் சேர்த்து, அவைகளை ஒன்றாய் ஒன்றிணைக்க உதவுவது, மிகவும் உதவிகரமான ஒரு வழியாயிருக்கும். இப்படியாகப் பதிலளிப்பவர்களை அடுத்த தருணத்தில் பதில் அளிக்க ஊக்குவிப்பதும், பதில்களை அப்போது மிகவும் பிரயோஜனமானதாக்கிடுவதும்தான் நோக்கமாகும். ஆக மொத்தம் பெரோயா வேதப்பாடங்களானது, சத்தியத்தில் உறுதிப்படுத்தும், ஸ்திரப்படுத்தும் வேலையை மிகவும் திறம்படச் செய்கின்றது.

பெரோயா வேதப்பாடங்கள் அல்லாமல், மற்றப்படி வேதாகமப்பாடங்களில் (Volume) பத்து முதல் பன்னிரண்டு பக்கங்களை வழக்கமாய் வாசிப்பதைத் தொடரும்படிக்கு அருமையான சகோதரர்கள் யாவருக்கும் நாம் வலியுறுத்துகின்றோம். நாம் வாசிப்பவைகளானது, வேதப்பாடங்கள் வகுப்புகளுக்கு மிகவும் உதவியாய்க் காணப்படும்.