R2995 (page 120)
அப்போஸ்தலர் 11:4-15
R2996 : page 121
கொர்நேலியுவைக் கிறிஸ்தவனாக அங்கீகரித்ததற்கும், அவருக்கும், அவரது வீட்டாருக்கும் ஞானஸ்நானம் கொடுத்ததற்கும் பேதுரு குற்றஞ்சாட்டப்படாமல், மாறாக பேதுரு அவர்களது இல்லங்களுக்குச் சென்று, அவர்களோடுகூட அப்பம் புசித்துள்ளார் – அதாவது யூத வழக்கத்திற்கு முற்றிலும் முரணான நடக்கை – அதாவது யூதர்களுக்குச் சமமாகப் புறஜாதியாரை அவர் அங்கீகரித்தக் காரியம் குற்றஞ்சாட்டப்பட்டது; இப்படி நடந்துகொள்வதற்கு முரணாகவே பழங்காலம் முதல் அவர்களது வழக்கமாகக் காணப்பட்டது. அப்போஸ்தலனாகிய பேதுரு தன்னுடைய வாதத்தில் அவர்களது குற்றச்சாட்டுகளை முற்றிலுமாகப் புறக்கணித்து, தான் ஏதோ புறஜாதியாரைக் கிறிஸ்தவ சகோதரத்துவத்திற்குள்ளாக ஏற்றுக்கொண்டதற்காகக் குற்றஞ்சாட்டப்பட்டது போன்று, தன்னைக் குற்றப் பழியினின்று விலக்கிக்கொள்ள முற்பட்டார். எனினும் பேதுருவின் நடவடிக்கை மிகச் சரியானதாகும் மற்றும் சந்தேகத்திற்கிடமின்றி, அவர் அப்படியாகவும் வழிநடத்தப்பட்டிருந்தார். இதில் கர்த்தருடைய ஜனங்களுக்கான படிப்பினை என்னவெனில்: மனிதனுடைய பாரம்பரியங்கள் மற்றும் நுணுக்கமான ஆசரிப்புகள், வழக்கங்கள் முதலானவைகள் குறித்து எதிர்த்து வாதாடுவதற்குப் பதிலாக, அடிப்படை கொள்கைகளையும், திவ்விய பிரமாணங்களையும் கலந்துரையாடிடுவது எப்போதும் நலமாயிருக்கும் என்பதேயாகும். பேதுரு மூல அடிப்படை அம்சங்களை அவர்கள் அனைவரின் மனதிற்கு முன்பாக நேரடியாய்க் கொண்டு நிறுத்தினபோது, சமுக வழக்கங்கள் தொடர்பான கேள்விகள் அனைத்தும் முடிவிற்கு வந்தன; ஆனால் ஒருவேளை அவர் சமுக வழக்கங்களினுடைய ஏற்புடைமையைக் குறித்து விவாதித்திருந் திருப்பாரானால், பெரிதான கேள்வியானது, தீர்வில்லாமலேயே இருந்திருக்கும்.
பேதுருவின் எளிமையான, தாழ்மையான ஒளிவுமறைவில்லாத விளக்கமானது, அவ்விஷயம் தொடர்பான உண்மைகளை ஒப்புவித்தலாகவே காணப்பட்டது. தன்னை நம்பச்செய்த சான்றுகளானது, தனக்குப் போலவே அவர்களையும் நம்பச்செய்திடும் என்று அவர் கருதினார் மற்றும் இப்படிக் கருதினதில் அவர் சரியாகக் கருதினவராகவே காணப்பட்டார். அவர் ஒருவேளை கௌரவம் கொண்டவராக இது தன்னுடைய காரியமே ஒழிய, அவர்கள் காரியமல்ல என்றும், தான் ஓர் அப்போஸ்தலன் மற்றும் அப்போஸ்தலர்களிலேயே மூத்தவர் மற்றும் கர்த்தரினால் விசேஷமாய் வழி நடத்தப்பட்டவர் என்றும் மற்றும் தான் இராஜ்யத்தின் திறவுகோல்களைப் பெற்றுக்கொண்டு, பயன்படுத்திடுவார் என்று முன்கூட்டியே கர்த்தரும் தெரிவித்துள்ளார் என்றும், திறவுகோல்களில் முதலாவதை, பெந்தெகொஸ்தே நாளின் போதான திவ்விய கிருபையை அறிவித்ததில் பயன்படுத்தியுள்ளார் என்றும், இப்பொழுது மற்றத் திறவுக்கோலைப் புறஜாதியாருக்கான கிருபையின் கதவைத் திறப்பதற்கு, தான் பயன்படுத்தியுள்ளார் என்றும் சொல்லியிருந்திருக்க முடியும். இப்படியாய் நடந்துகொள்வது என்பது, இதில் அநேகம் உண்மைகள் காணப்பட்டாலுங்கூட, அது ஞானமற்ற போக்காகவே காணப்பட்டிருந்திருக்கும்; அவர் எடுத்துக்கொண்ட தாழ்மையான, அன்பான, சகோதரத்துவத்திற்குரிய நடவடிக்கையானது, அவரது இருதய நிலைமையை, அவரது தாழ்மையை, சகோதரருக்கான அவரது அன்பினை, எவரும் தனது நடவடிக்கையினால் இடறிப்போகாத வண்ணம் காரியங்களை மிகவும் தெளிவுப்படுத்துவதற்கான, மிகவும் எளிமைப்படுத்துவதற்கான, மிகவும் விளங்கப்பண்ணுவதற்கான அவரது விருப்பத்தினைக்குறித்து நமக்குத் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. ஒருவேளை அவர் இறுமாப்பாய் நடந்திருப்பாரானால், சபையில் பெரிய பிளவு ஏற்பட்டிருக்கும்; ஆனால் இப்படியாக நடக்கவில்லை கர்த்தர் பொறுப்பேற்றிருந்தார் மற்றும் பேதுரு ஒருவேளை சரியான இருதய நிலையில் காணப்படவில்லையெனில், அவர் பயன்படுத்தப்பட்டிருந்திருக்க மாட்டார் மற்றும் ஏதோ ஓர் எளிமையான சகோதரன் இவ்வூழியத்திற்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பார். இதில் நம் அனைவருக்கும் – விசேஷமாகக் கர்த்தருடைய ஜனங்கள் அடங்கியுள்ள பல்வேறு கூடுகைகளில் காணப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிநடத்துபவர்களுக்கும் நல்ல படிப்பினைக் காணப்படுகின்றது. தாழ்மையும், சகோதர சிநேகமும், அன்பும் படிப்பினையாகக் காணப்படுகின்றது. இறுமாப்பு மற்றும் நடத்தையிலோ, தொனியிலோ ஆணவம் என்பவை எந்தக் கர்த்தருடைய ஜனங்களுக்கும், விசேஷமாக அவருக்கு ஊழியம் செய்ய நாடுபவர்களுக்கும் தகுதியற்ற ஒன்றாகவே காணப்படும்; இறுமாப்பின் ஆவியைப் பெற்றிருக்கும் வழிநடத்துபவர்கள், அவர்கள் அதைப் பெற்றிருக்கும் அளவிற்கேற்ப அவ்வூழியத்திற்குத் தகுதியற்றவர்களாகக் கருதப்பட வேண்டும். தாழ்மையான நடத்தையையும், இத்தருணத்தின் போதான பேதுருவின் ஆவியையும் வெளிப்படுத்துபவர்கள், இதைப் பெற்றிருப்பதற்கேற்ப அனைவராலும் உயர்வாய் எண்ணப்பட வேண்டும்.