நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R3135 (page 23)

நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்

HOLD FAST THAT WHICH IS GOOD

1 தெசலோனிக்கேயர் 5:14-28

கர்த்தருடைய ஜனங்கள் கிருபையில் வளர்வதற்கும், உண்மையுள்ள வர்களாய் இருப்பதின் வாயிலாக இறுதியில் தங்கள் மீட்பர் மூலமாக ஜெயங்கொண்டவர்களாகுவதற்குமென அவர்கள் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய சரியான மனநிலைமையைப் பற்றியதாகவே நம்முடைய இந்தப் பாடம் காணப்படுகின்றது. ஆதார வசனத்தின் வார்த்தைகளானது தெசலோனிக்கேயா பட்டணத்துப் பரிசுத்தவான்களுக்கென்று கூறப்பட்டிருந்தாலும், இது எழுதப்பட்ட காலம் துவங்கி, தற்காலம் வரையிலுமுள்ள கிறிஸ்து இயேசுவுக்குள்ளான உண்மையுள்ளவர்கள் அனைவருக்கும் இந்தத் தலைச்சிறந்த வார்த்தைகளானது, பலத்திற்கும், உற்சாகத்திற்கும் மற்றும் நெறிமுறைப்படுத்துதலுக்குமான ஆதாரமாய்க் காணப்பட்டு வருகின்றது. தெய்வீக ஆலோசனைகளையுடைய இந்த வார்த்தைகளைத் தேவனுடைய பிள்ளைகள் எவரும் புறக்கணித்துவிடக் கூடாது; மேலும் எந்தளவுக்கு நாம் ஒவ்வொருவரும் இவைகளுக்குச் செவிகொடுக்கின்றவர்களாய் இருக்கின்றோமோ, அவ்வளவாய் நாம் நிச்சயமாய்க் கிறிஸ்துவைப்போல் அதிகமாய் ஆகுவோம் மற்றும் இவ்வாறாக நாம் அதிகமாய்க் கர்த்தருக்குப் பிரியமாய்க் காணப்படுவோம் மற்றும் இறுதியில் ஆயிர வருட அரசாட்சியிலும், அதன் மகிமைகளிலும், மனுக்குலத்தின் உலகத்தை ஆசீர்வதிக்கும் அதன் வேலையிலும், அவருடன் உடன் சுதந்தரர்களாகுவதற்குரிய நம்முடைய [R3136 : page 23] அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதிச் செய்கிறவர்களாகவும் இருப்போம். அப்போஸ்தலனின் இந்தக் கட்டளைகளை நாம் ஒன்றன்பின் ஒன்றாகப் பார்க்கலாம்.

மூப்பர்கள் என்பவர்கள் ஏதோ ஒரு தனிப்பட்ட வகுப்பினராகவும், சகோதர சகோதரிகளை தங்களது பராமரிப்பின் கீழ்க் கொண்டிருப்பவர்கள்போல் கையாளுபவர்களாகவும், அதிகாரம் செலுத்துபவர்களாகவும் இருப்பதுபோல், இங்கு மூப்பர்களுக்கென்று மாத்திரம் அப்போஸ்தலனால் புத்திமதி கூறப்படவில்லை அப்போஸ்தலன் “சகோதரர்களுக்கு” இவைகளைக் கூறுகின்றார், அதாவது முழுச்சபைக்கும், சகோதிரிகளையும் உள்ளடக்கிக் கூறுகின்றார். ஆனால் அதற்கென்று இவ்வாலோசனைகளானது, விசேஷமாக மூப்பர்களுக்குப் பொருந்தாது என்று அர்த்தமாகாது, ஏனெனில் மூப்பர்கள் என்பவர்கள் சகோதரர் மத்தியிலிருந்து கிறிஸ்தவ உபதேசத்திலும், அதை நடைமுறைப்படுத்துகின்ற விஷயத்திலும் மிகவும் முன்னேற்றம் அடைந்தவர்கள் என்று தெரிந்தெடுக்கப்பட்டவர்களாகவும், கர்த்தருடைய மந்தைக்கான நலனுக்கடுத்த விஷயங்களை விசேஷமாய்க் கவனித்துக்கொள்வதற்காகச் சபையின் பிரதிநிதிகளாகவும், தெரிந்தெடுக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர். அப்போஸ்தலனுடைய இந்த வார்த்தைகளானது, தேவனுடைய வழிநடத்துதலின் கீழ், அவருடைய மந்தைகளை மேய்க்கத்தக்கதாக, அவரது சபையின் மீது மேற்பார்வை பண்ணும் பொறுப்பைப் பெற்றுள்ள மூப்பர்களுக்கு விசேஷித்த அழுத்தத்துடன் கடந்து வருகின்றதாக இருப்பினும், இவ்வார்த்தைகளானது மந்தையிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினனுக்கும், அவனவன் ஆற்றல் மற்றும் திறமைக்கு ஏற்ப பொருந்துகின்றதாயுள்ளது (அப்போஸ்தலர் 20:28). ஆகவே இங்குக் கொடுக்கப்பட்டுள்ள கட்டளைகளை நிறைவேற்றிடுவதற்கு அனைத்துச் சகோதர சகோதரிகளும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றாலும், இந்தக் கட்டளைகள் தொடர்புடைய விஷயத்தில் ஒவ்வொரு சபையிலுள்ள மூப்பர்களும், விசேஷித்தப் பொறுப்பினை உணர்ந்துகொண்டவர்களாகக் காணப்பட வேண்டும்; அதாவது சபையின் பிரதிநிதிகளென, சபைக்கான கொள்கைகளைச் சுமப்பவர்களெனத் தாங்கள் காணப்படும் ஸ்தானத்தினால் உண்டான பொறுப்பினை உணர்ந்துகொண்டவர்களாகக் காணப்பட வேண்டும்.

இங்கு ஒழுங்கில்லாதவர்கள் என்பவர்கள், திடனற்றவர்களிடமிருந்தும், பலவீனமானவர்களிடமிருந்தும் வேறுபடுத்திக் காண்பிக்கப்பட்டுள்ளனர். தெய்வீக ஏற்பாடுகள் என்பது முழுக்க ஒழுங்கு உடையதாகவும், முழுக்கச் சுயாதீனம் உடையதாகவும் காணப்படுகின்றது; மேலும் இதனை சரியாகப் புரிந்து கொள்ளும் போது, ஒழுங்கின் மூலமாக, சுயாதீனமானது சிறந்த விதத்தில் பாதுகாக்கப்பட முடியும் மற்றும் தனிப்பட்ட சுயாதீனம் குறித்த நியாயமான அடையாளங்கண்டு கொள்ளுதலின் காரணமாக ஒழுங்கானது சிறந்த விதத்தில் தக்கவைத்துக் கொள்ளப்பட முடியும். ஆனால் பூமிக்குரிய சட்டங்களை இயற்றுபவர்களாலும், கண்டிப்பான ஒழுக்கங்களைக் கடைப்பிடிப்பவர்களாலும் மாத்திரமல்லாமல், கிறிஸ்துவினுடைய சபையிலுங்கூட அடிக்கடி செய்யப்படும் தவறு, மிதமிஞ்சி செயல்படுவதேயாகும், அதாவது ஒழுங்கின் விஷயத்திலோ (அ) சுயாதீனத்தின் விஷயத்திலோ மிதமிஞ்சி செயல்படுவதேயாகும். சுயாதீனம் என்கிறபோது, சட்டத்திட்டங்களுக்கு உட்படாத நிலையில் காணப்படுவதை, ஒழுங்கீனமாய், தாறுமாறாக நடப்பதைக் குறிக்கின்றது எனச் சிலர் தவறாய்ப் புரிந்து கொள்கின்றனர். இன்னும் சிலர் நல்ல நோக்கங்களைக் கொண்டவர்களாக, மந்தையினுடைய தனிப்பட்ட சுயாதீனங்களைக் குறுக்கிப் போடுமளவுக்கு ஒழுங்குகளையும், கட்டளைக்குக் கீழ்ப்படிதலையும் செயல்படுத்துவதற்கு முற்பட்டுவிடுகின்றனர். இவ்விஷயத்தில், கர்த்தருடைய ஜனங்கள் மத்தியில் பிணக்குகளைத் தவிர்ப்பதற்கும், அன்பு மற்றும் சமாதானத்தினுடைய கட்டுகளினால், ஆவியில் ஒருமைப்பாட்டினைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் அதிகமான கிருபை அவசியமாய் இருக்கின்றது.

கர்த்தருடைய ஜனங்கள் கூடிடும் விஷயத்தில், ஒழுங்குகளை, விதிகளை, பிரமாணங்களைப் புறக்கணித்துப் போடுமளவுக்கு, தனிப்பட்ட சுயாதீனம் குறித்த தவறான கருத்துக்களை உடையவர்களாக நாம் இருக்கக்கூடாது; ஒழுங்கில்லாதவர்களும் மற்றும் தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக்கொள்பவர்களும் மற்றும் சபை வேண்டிக்கொள்ளாத போதிலும் எதிலும் தலையிடுபவர்களுமானவர்கள் – கட்டுப்பாட்டில் வைக்கப்பட வேண்டும், புத்தி சொல்லப்பட வேண்டும் மற்றும் இவர்களது நடத்தை கர்த்தருடைய ஆவிக்கும், அவருடைய பிரதிநிதிகளாகிய அப்போஸ்தலர்களால் ஏற்படுத்தப்பட்ட ஏற்பாடுகள் அனைத்திற்கும் எதிராக இருக்கின்றது என்று சுட்டிக்காண்பிக்கப்பட வேண்டும். மேலும் இவர்களது நடத்தையானது சபைக்கு ஆசீர்வாதமாகவும், சமாதானத்திற்கு, சந்தோஷத்திற்கு மற்றும் வளர்ச்சிக்கு ஏதுவானதாகவும் இருப்பதற்குப் பதிலாக, சபைக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கின்றது என்றும், இவர்களுக்கும் பாதிப்பாக இருக்கின்றது, அதாவது இவர்களது இத்தகைய நடத்தைகளானது, இவர்களுக்குள் ஏற்கெனவே அதிகமாகவே காணப்படும் சுயமதிப்பை (அ) சண்டைப்போடும் [R3136 : page 24] தன்மையை இன்னும் வளர்த்துவதற்கு ஏதுவாகி, இப்படியாகத் தேவனுக்குரிய காரணங்களுக்கு மாத்திரமாக பாதிப்பாய் இராமல், இன்னும் இராஜ்யத்தில் பங்கடைவதற்கு அவசியமான குணலட்சணத்தின் சாயலை இவர்கள் அடைவதற்குத் தடையாகக் காணப்படும் என்றும் இவர்களுக்குப் புத்திமதி கூறப்பட வேண்டும்.

இப்படியாகச் சிலருக்குப் புத்திகூறப்பட்டு, கட்டுப்பாட்டில் வைக்கப்பட வேண்டியதாயிருக்க, திடனற்றவர்களும், பலவீனமானவர்களுமான சிலருக்கு உதவிசெய்தலும், தாங்குதலும், உற்சாகமூட்டுதலும் அவசியமாய் இருக்கின்றது; இயல்பாகவே மந்தமானவர்களாகவும், தன்னம்பிக்கை இல்லாதவர்களாகவும், தன்னைப் பற்றி மதிப்பாய் எண்ணுதலிலும், போராடும் தன்மையிலும் குறைவுப்பட்டவர்களாகவும் இருப்பவர்கள் – இவர்கள் உற்சாகமடைவதற்கும், விசுவாச வீட்டார் முழுமையாய் ஆசீர்வதிக்கப்படுவதற்கும் ஏதுவாய் இவர்கள் உண்மையில் பெற்றிருக்கும் தாலந்துகளை வெளியே கொண்டுவருவதற்குக் கொஞ்சம் முன்னுக்கு வரத் தூண்டப்பட வேண்டும்.

“எல்லாரிடத்திலும் நீடிய (பொறுமையாயிருங்கள்) சாந்தமாயிருங்கள்” என்கிற வார்த்தைகளானது, கர்த்தருடைய ஜனங்கள் மத்தியில் நன்கு சீரான நிலைமையில் காணப்படுபவர்கள், மேற்கூறப்பட்டுள்ள (ஒழுங்கில்லாதவர்கள், திடனற்றவர்கள், பலவீனர்கள்) வகுப்பார்களிடத்தில் பொறுமையுடன் கூடிய சாந்தத்துடன் காணப்பட்டு, அவர்களை அனுதாபத்தோடு பார்த்திட வேண்டும் என்பதைத் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது; மேற்கூறப்பட்டுள்ள பலவீனர்களிடத்திலும், திடனற்றவர்களிடத்திலும் மாத்திரமல்லாமல், அனைவரிடத்திலும் மற்றும் அதிகமான துணிவும், சுய உந்துதலும் உடையவர்களிடத்திலுங்கூடப் பொறுமையுடன்கூடிய சாந்தத்துடன் காணப்பட்டு, அனுதாபத்துடன் பார்த்திட வேண்டும். “பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது” என்று வேத வாக்கியங்கள் திரும்பத்திரும்ப நமக்குப் புத்திமதி கூறுகின்றது மற்றும் இந்தத் தேவைப் பற்றின உண்மையை வளர்ந்துவருகிற கர்த்தருடைய பிள்ளைகள் நாளுக்குநாள் உணர்ந்துகொண்டு வருகின்றனர் மற்றும் பொறுமையானது, பிரதானமான கிறிஸ்தவ குணலட்சணங்களில் ஒன்றாக இருக்கின்றது என்பதையும் உணர்ந்துகொள்கின்றனர். (1) அறிவில் வளர்தல் என்பது, பொறுமை எனும் இப்பண்பில் நாம் வளர்வதற்கு உதவியாய் இருக்கின்றது, ஏனெனில் பரம பிதா நம்மிடத்தில் பொறுமையாய் இருப்பதைக் குறித்து நாம் அதிகமதிகமாய் உணர்ந்துகொள்ளும்போது, இதே கொள்கையை மற்றவர்களிடத்தில் செயல்படுத்துவதற்கு நமக்கு இந்த உணர்ந்துகொள்ளுதலானது உதவியாய் இருக்கின்றது. (2) நம்முடைய இனத்தின் மீது வந்துள்ள மாபெரும் துன்பத்தை, அதாவது நம்முடைய விழுந்துபோன நிலைமையை நாம் உணர்ந்துகொள்ளும் நிலைமைக்கு வரும்போது மற்றும் எவ்வாறு விழுகையானது சிலரை சில விதங்களில் அதிகமாய்ப் பாதித்துள்ளது என்றும், மற்றவர்களை வேறு விதங்களில் அதிகமாய்ப் பாதித்துள்ளது என்றும், அதாவது சிலரைப் பிரதானமாய் மன ரீதியிலும், சிலரைப் பிரதானமாய்ச் சரீரரீதியிலும், சிலரைப் பிரதானமாய் ஒழுக்க ரீதியிலும் பாதித்துள்ளது என்று நாம் உணர்ந்துகொள்ளும் நிலைமைக்கு வரும்போது, இதினிமித்தம் நம்முடைய சகமனிதர்களிடத்திலான நம்முடைய அனுதாபம் பெருகுகின்றது மற்றும் அவர்களைக் கையாளும் விஷயத்தில் இப்படியாக நம்முடைய பொறுமையை அதிகரிக்கின்றது. இது விசுவாச வீட்டார் தொடர்புடைய விஷயத்தில் குறிப்பாய் உண்மையாகக் காணப்படுகின்றது; தேவன் கிருபையாய் அழைத்துள்ள விசுவாச வீட்டார் மத்தியிலுள்ள சிலர் அதிகம் குறைவுடையவர்களாகக் காணப்படுவதை நம்மால் பார்க்க முடிகின்றது; சில விஷயங்களில் அவர்கள் நம்மைக்காட்டிலும் குறைவுகள் உடையவர்களாகக்கூடக் காணப்படலாம், ஆனால் நாமோ வேறு சில விஷயங்களில் அவர்களைக் காட்டிலும் மிகவும் பூரணமற்றவர்களாய்க் காணப்படுகின்றவர்களாய் இருப்போம். நமது பரம பிதா ஒருவரில் கிருபை கூர்ந்து, அழைத்துள்ளார் என்ற கருத்தானது, அழைப்புத் தொடர்புடைய விஷயத்தில் கர்த்தரோடுகூட நாம் ஒத்துழைப்பதிலும், நம்மால் முடிந்தமட்டும், இடுக்கமான வழியில் நம்மோடுகூடக் கர்த்தருடைய அடிச்சுவடுகளில் நடந்திடுவதற்கு நாடுபவர்களுக்கு உதவியாய் இருப்பதிலும், நம்மை மிகவும் கவனமாய் இருப்பதற்கு ஏவுகின்றதாய் இருக்கின்றது. ஆகவே சகோதர சகோதரிகளிடத்தில் நாம் விசேஷித்தப் பொறுமைகொண்டிருக்க வேண்டும் (ரோமர் 14:15; 1 கொரிந்தியர் 8:11).

“ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமை செய்யாதபடி பாருங்கள்.” முற்காலங்களில் நமது கர்த்தருடைய பின்னடியார்களுக்கு எவ்வளவு தீமை செய்யப்பட்டது என்பதை நாம் நினைத்துப் பார்க்கும் போதே, மேற்கூறிய புத்திமதி, விசேஷித்த ஆற்றல்மிக்கதாய்க் காணப்படும். தெசலோனிக்கேயா பட்டணத்துப் பரிசுத்தவான்களுக்கு நிருபங்களை எழுதின பவுலும், அப்பட்டணத்துப் பரிசுத்தவான்களும், கர்த்தருடைய வார்த்தைகளை, சுவிசேஷத்தை, ஜீவ வார்த்தைகளைப் பறைசாற்றுவதில் காண்பித்த உண்மையின் நிமித்தம் அநேகம் பாடுகள் பட்டவர்களாய் இருந்தனர். கர்த்தருடைய பின்னடியார்கள் தங்கள் சத்துருக்களுக்குப் பதிலுக்குப்பதில் தீமை செய்வதன் மூலமாக, அல்லது வேறு ஏதாகிலும் விதத்திலோ தங்கள் சத்துருக்களைப் பழிவாங்குவதற்கு முற்படக்கூடாது என்பதே மேற்கூறப்பட்டுள்ள புத்திமதிக்கான அர்த்தமாகும். நாம் அடைந்திட்ட தீமைக்கு, நன்மையையே நாம் பதிலாகச் செய்திட நாடிட வேண்டும் என்று கர்த்தருடைய அறிவுரை காணப்படுகின்றது; இந்தப் புத்திமதி நம்முடைய வார்த்தைகளையும், நம்முடைய நடத்தைகளையுங்கூட உள்ளடக்குகின்றது; நாம் பதிலுக்குப் பதில் வார்த்தைகளையோ, பழிச்சொற்களுக்குப் பழிச்சொற்களையோ, குற்றப்படுத்துதல்களுக்குக் குற்றப்படுத்துதல்களையோ, அவதூறுகளுக்கு அவதூறுகளையோ, அடிக்கு அடியையோ சரிக்கட்டுதல் கூடாது. இந்தப் புத்திமதியானது நம்முடைய சிந்தனைகளையுங்கூட உள்ளடக்குகின்றதாய் இருக்கின்றது, ஏனெனில் நாம் கோபத்திற்குக் கோபத்தையோ, குரோதத்திற்குக் குரோதத்தையோ, பொறாமைக்குப் பொறாமையையோகூடச் சரிக்கட்டக் கூடாது. இரண்டு தீமைகள் சேர்ந்து, ஒருபோதும் ஒரு நன்மையை உண்டுபண்ணிட முடியாது; இரண்டு தவறுகள் ஒருபோதும் ஒரு சரியான காரியத்தை உண்டுபண்ணிட முடியாது. குருடாக்கப்பட்டுள்ள நம்முடைய சத்துருக்களுக்காக அனுதாபங்கொள்வது என்பது, எண்ணத்திலும், வார்த்தையிலும் மற்றும் கிரியையிலும் அவர்களிடத்திலான நமது பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் வளர்த்திடுவதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது (1 பேதுரு 2:21-23).

பழிச்சொற்களுக்கு, பழிச்சொற்களையோ அல்லது தீமைக்குத் தீமையையோ கர்த்தருடைய ஜனங்கள் சரிக்கட்ட முற்படாமல், “நன்மை செய்ய நாடிட வேண்டும்;” அதாவது கர்த்தர் அங்கீகரிக்கும் காரியங்களை, நன்மையான காரியங்களைச் செய்ய நாடிட வேண்டும். இது இராஜரிக ஆசாரியக் கூட்டத்தின் ஒவ்வொரு அங்கத்தினனும் தன்னால் முடிந்தமட்டும் நீதியானவைகளைச் செய்ய நாடுவதை, அதாவது நல்ல மற்றும் உயர்வான உணர்வுகள் அனைத்தையும் கொண்டிருக்க நாடி, கர்த்தரில் உதாரணமாய் விளங்கும் பரிபூரணத்தின், நீதியின் உயர்வான கொள்கைகளுக்கு ஏற்ப முடிந்தமட்டும் வாழ நாடுவதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. நன்மை செய்வதற்குரிய இந்த நாடுதலானது, இதே நாடுதலையுடைய சகோதர சகோதரிகள் மத்தியில் மாத்திரம் செயல்படுத்தப்படாமல் / தக்கவைக்கப்படாமல், இன்னுமாக மற்றவர்களாகிய உலகத்தாருடனான நம்முடைய கையாளுதலின் விஷயத்திலும் செயல்படுத்தப்பட வேண்டும். உலகத்திலுள்ள சிலர், நாம் கூறும் காரியங்களைக்காட்டிலும், நாம் தீமையைத் தவிர்ப்பதையும் மற்றும் நீதியை, நன்மையைச் செய்ய நாம் தொடர்ந்து நாடுவதையும் காணுவதன் மூலமாக சுவிசேஷத்தை அதிகமாய்க் கற்றுக்கொள்கின்றவர்களாகக் காணப்படுகின்றனர்; மேலும் இப்படிப்பட்டவர்கள் நமக்குள் இருக்கும் புதிதான ஜீவனைக் கண்டுபிடிக்கும்போது, நமக்கு இத்தகைய மாற்றத்தினைக் கொண்டுவந்திட்ட சுவிசேஷத்தின் செய்தியினைக் கேட்பதற்குரியச் செவியினைப் பெற்றுக்கொள்ளும் நிலைக்குப் படிப்படியாக வருவதற்கு வாய்ப்புண்டு.

அப்போஸ்தலனுடைய இந்த ஆலோசனையை உலகத்தின் ஆவியானது அங்கீகரிப்பதில்லை, மாறாக நம்மை எப்படி மற்றவர்கள் நடத்துகின்றார்களோ, அப்படியே நாமும் மற்றவர்களை நடத்திட வேண்டும் என்றும், நமக்குச் செய்யப்படுகின்ற நன்மைக்கு ஏற்ப நன்மைசெய், இன்னுமாக நமக்குச் செய்யப்படுகின்ற தீமைக்கு ஏற்ப தீமை செய் என்றும் வலியுறுத்துகின்றது. உலகத்தின் ஆவியை உடையவர்கள் சிலசமயம் கர்த்தருடைய பின்னடியார்களைக் கோழைகள் என்று பழிச்சுமத்துகின்றனர். தைரியம் என்பது மனுஷீகத்தினுடைய தலைச்சிறந்த பண்புகளில் ஒன்றாகும்; மேலும் தங்களைக் கோழைகள் அல்லது தைரியமற்றவர்கள் என்று மற்றவர்கள் கருதுவது என்பது சிலருக்கு மிகவும் சோதனையான விஷயமாகக் காணப்படுகின்றது; மேலும் வார்த்தையிலும், கிரியையிலும் உணர்ச்சிவசப்படாமல், கட்டுப்பாட்டுடன் காணப்பட வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ள காரியமானது, இத்தகையவர்களுக்கு இன்னும் சோதனையான காரியமாக இருக்கின்றது. கர்த்தருடைய ஆலோசனையானது, கோழைத்தனத்திற்கு (அ) தைரியமின்மைக்கு ஏதுவானது என்று சொல்லப்படுவது உண்மையல்ல. இக்காரியம் குறித்து இன்னொரு ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:-

“கிறிஸ்துவினாலும், அவரது அப்போஸ்தலர்களாலும் ஸ்தாபிக்கப்பட்ட (கிறிஸ்தவ) சமுதாயத்தில் வெட்ட வெளிச்சமாய்க் காணப்படும் ஓர் அம்சமானது, மரணம் மற்றும் சித்திரவதையின் தருணத்தில், ஆண்களால் மாத்திரமல்லாமல், பலம் குறைந்த பெண்களாலும், சிறுபிள்ளைகளாலும் வெளிப்படுத்தப்பட்ட அசாதாரணமான வீரமாகும். இந்த வீரமானது தத்துவ ஞானத்தின் உதவியினால் மனவலிமையை அடைய நாடிக்கொண்டிருக்கும் புறஜாதி நீதிபதிகளை வியப்பிற்குள்ளாக்கியுள்ளது. போர்புரிவதற்குப் படையெடுத்து வருபவர்களைக் காட்டிலும், [R3136 : page 25] சுவிசேஷத்தைக் கொண்டுவரும் ஊழியக்காரர்களையே பயமுறுத்துவதற்குக் கடினம், என்று கண்டுபிடித்த பயங்கரமான காட்டுமிராண்டிகள்கூட வியப்படைந்து, அவர்களது சாந்தத்தை, கோழைத்தனம் என்று தவறாய்ப் புரிந்துகொண்டனர். மூர்க்கத்தனமாய் எதிர்ப்பதைப்பார்க்கிலும், அமைதியாய்ச் சகித்தல் என்பதே மிகவும் வீரமான காரியமாகும்; மேலும் தன்மீது வரும் அவமதிப்பு மற்றும் கெடுதல்களைச் சாந்தமாய்ச் சகித்துக்கொள்ள வேண்டும் என்பதான கிறிஸ்தவ பிரமாணமானது, உச்சக்கட்டமான தைரியத்தையும், உண்மையான வீரத்தையும் வளர்த்துவதற்கு உதவுவதாக இருக்கின்றது. இந்தப் பிரமாணத்திற்கு ஏற்ப வாழ்வதைக் காட்டிலும், வேறு எதுவும், சரித்திரம் முழுவதிலும் மிகவும் தைரியமான காரியமாகவும், மிகவும் வீரமான காரியமாகவும் இருக்காது.”

“எப்போதும் சந்தோஷமாயிருங்கள்” என்ற இதே புத்திமதியை அப்போஸ்தலன், பிலிப்பு பட்டணத்துப் பரிசுத்தவான்களுக்கும் கொடுத்திட்டார். கிறிஸ்தவனுடைய சந்தோஷம் என்பது உணர்ச்சிகளின் கோளாறினால் ஏற்படாமல், மாறாக நிலைவரமான கொள்கைகளின் அடிப்படையிலும், ஜீவியத்தின் சகல புயல்காற்றுகள், சோதனைகள் மற்றும் அதிர்ச்சிகளின் மத்தியில் உறுதியாய் நிற்கின்ற தெய்வீக வார்த்தைகளுடைய ஆறுதலளிக்கும் நிச்சயங்கள் மற்றும் வாக்குத்தத்தங்களின் அடிப்படையிலும் ஏற்படுகின்ற சந்தோஷமாகும்.

“இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்.” கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்தில் கொஞ்சம் வளர்ச்சியடைந்தவர்களாகக் காணப்படும் மாணவர்கள் மாத்திரமே, மேற்கூறப்பட்டுள்ள இந்தப் புத்திமதியைத் தெளிவாய்ப் புரிந்துகொள்வதற்கு ஆயத்தமாய்க் காணப்படுகின்றனர். கர்த்தருடைய ஜனங்கள் தங்கள் சித்தங்களையும், தற்கால ஜீவியத்தின் அனைத்துக் காரியங்களையும் கர்த்தரிடத்தில் ஒப்படைத்துவிட்டவர்களாகவும், பரத்திற்குரிய காரியங்களுக்காகப் பூமிக்குரிய காரியங்களை விட்டுக் கொடுப்பவர்களாகவும் காணப்படுவதினால், மற்றவர்களைப் போன்று இவர்கள் இடைவிடாமல் பூமிக்குரிய நன்மையான காரியங்களுக்காக ஜெபம்பண்ணுவதில்லை. இவர்கள் பரத்திற்குரியவைகளை நாடுவதினால், இவர்களுடைய ஜெபமும் ஆவிக்குரிய காரியங்கள் தொடர்புடையதாகவே இருக்கின்றது; அதாவது பரம வஸ்திரம், பரம உணவு, பரம தயவு தொடர்புடையதாகவே இருக்கின்றது. தங்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்குச் சிறந்ததெனக் கிருபை நிறைந்த கர்த்தர் கருதி, அனுமதிக்கும் அனுபவங்களில், எப்போதும் தாங்கள் சந்தோஷமாய்க் காணப்படுவதற்குத் தங்களுக்குத் தெய்வீகக் கிருபையினுடைய அத்தகைய ஓர் உதவி வேண்டும் என்றும், அத்தகைய ஒரு தெய்வீக வழிநடத்துதல் வேண்டும் என்றும்தான் இவர்களது ஜெபங்கள் விசேஷமாய்க் காணப்படுகின்றது. ஏற்கெனவே பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்களுக்காகவும், இனிமேல் வரப்போகின்றதும், விசுவாசத்தின் கரங்களினால் இவர்கள் கைப்பற்றிக் கொண்டதுமான ஆசீர்வாதங்களுக்காவும் ஏறெடுக்கப்படுகின்ற ஸ்தோத்திரங்களினால், இவர்களது ஜெபங்கள் அதிகமதிகமாய் நிரம்புகின்றது.

இவர்கள் இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறவர்களாய் இருக்கின்றார்கள் என்பது, இவர்கள் கர்த்தருடன் ஐக்கியம் கொண்டுள்ள நிலையிலும், அவருடைய சித்தம் செய்வதற்கென முழுமையாய் அர்ப்பணிக்கப்பட்டுள்ள நிலையிலுமுள்ள இருதயத்தின் நிலையைக்கொண்டிருப்பதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது; அதாவது ஒவ்வொரு [R3137 : page 25] நாளினுடைய ஆரம்பத்தில் இவர்கள் அவரது ஆசீர்வாதத்தை மன்றாடிக் கேட்பவர்களாயும், நாளின் இறுதியில் தங்கள் நன்றியை / ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கின்றவர்களாயும் மாத்திரம் காணப்படாமல், மாறாக ஜீவியத்தின் அனைத்துக் காரியங்களிலும், தாங்கள் தங்களுடைய அனைத்தையும் கர்த்தருக்கு அர்ப்பணம்பண்ணியுள்ளதை நினைவில் கொண்டிருக்க நாடி, ஜீவியத்தின் அனைத்துக் காரியங்களிலும், விசுவாசத்தின் மூலம் அவரை ஏறெடுத்துப் பார்க்கின்றவர்களாயும், விசுவாசத்தின் மூலம் ஜீவியத்தின் காரியங்கள் அனைத்திலும் தேவனுடைய பராமரிப்பிற்குத் தொடர்பு இருப்பதை உணர்கின்றவர்களாகவும், அதற்கு நன்றி செலுத்துபவர்களாயும் இருப்பதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. இப்படிச் செய்வதே நம்மைக்குறித்த தேவனுடைய சித்தமாயிருக்கிறது; இப்படியாக நாம் தொடர்ந்து அவரது சித்தத்திற்காகவும், அவரது ஆசீர்வாதத்திற்காகவும் அக்கறை காட்டும் மனநிலையில் ஜீவிப்பது அவரது சித்தமாய் இருக்கின்றது; இப்படியாக நாம் காணப்படுவதற்கு அவர் சித்தங்கொண்டிருப்பதற்கான காரணம், இப்படியாகக் காணப்படும் நிலைமையே, இடுக்கமான வழியில் நம்முடைய முன்னேறுதலுக்கான மிகுந்த அனுகூலமான / சாதகமான நிலைமையாகவும், நம்முடைய அழைப்பையும், தெரிந்து கொள்ளுதலையும் நாம் உறுதிப்படுத்திக்கொள்வதற்கு நமக்குச் சிறப்பாய் உதவக்கூடிய நிலைமையாகவும் இருக்கின்றது என்பதினாலேயே ஆகும்.

கர்த்தரிடத்திலான சபையின் சரியான மனநிலையானது, எப்பொழுதும் சந்தோஷமாயிருத்தலாகவும், இடைவிடாமல் ஜெபம்பண்ணுதலாகவும், ஸ்தோத்திரஞ்செலுத்துதலாகவும், அவரது வழிநடத்துதல்களை ஏற்றுக்கொள்ளுதலாகவும் காணப்பட வேண்டும் என்று சுருக்கமாகக் கூறிவிட்டப் பிற்பாடு, அடுத்ததாக அப்போஸ்தலன் சபையார், கர்த்தருடைய வார்த்தைகளை ஒன்றுசேர்ந்து புசிக்கையில் சபையார் ஒருவரிடத்தில் ஒருவர் கொண்டிருக்க வேண்டிய மனப்பான்மைக் குறித்துச் சுருக்கமாய்ப் புத்திமதி கூறும் வண்ணமாக,

“ஆவியை அவித்துப்போடாதிருங்கள். தீர்க்கத்தரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள். எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்” என்று கூறுகின்றார் (1 தெசலோனிக்கேயர் 5:19-22).
இந்தப் புத்திமதிகளைப் பின்பற்றுவதன் வாயிலாக, கர்த்தரிடத்திலான சபையின் ஐக்கியமானது, மிகவும் நன்மை உண்டாக்குகின்றதாக இருக்கும் மற்றும் கர்த்தருடைய பின்னடியார்களாகிய சபையார் தாங்கள் அழைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான கொள்கையினிடத்திற்கு நேராக அதிகம் முன்னேறுவதற்கு உதவப்படுவார்கள். கர்த்தருடைய ஜனங்கள் மத்தியில் காணப்படும் கர்த்தருடைய ஆவியானது, கர்த்தர் மற்றும் அவரது நோக்கங்கள் தொடர்புடைய அனைத்திற்குமான “புனிதமான அன்பின் ஜூவாலைக்கு” ஒப்பிடப்படுகின்றது; இந்த ஜூவாலையானது ஒவ்வொரு தனிப்பட்ட அங்கத்தினரிலும், பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்படுகையில், தெய்வீகச் செய்தியின் மூலம் நெருப்பு
மூட்டப்படுகின்றது மற்றும் இப்படியாக இந்த ஆவியின் வழிநடத்துதலின் கீழ், முழுச்சபைக்கும் இந்த ஜூவாலையானது உரியதாகுகின்றது. சபையார் அறிவிலும், அன்பிலும், கர்த்தருடனான ஐக்கியத்திலும் எவ்வளவாய் வளர்கின்றார்களோ, அவ்வளவாய்ப் “புனிதமான அன்பின் இந்த ஜூவாலையானது,” சபையாரை உலகத்தில் வெளிச்சமாக, மறைக்கப்பட முடியாத மலை மீதுள்ள பட்டணமாக ஆக்குகின்றது. அழிவின் அடையாளமாக வழக்கமாகப் பயன்படுத்தப்படும் நெருப்பு / ஜூவாலையானது, இங்கு வேறு அர்த்தமுள்ள அடையாளமாகக் காணப்படுகின்றது.

புனிதமான அன்பின் ஜூவாலையானது, பாவத்தைப் பட்சிக்காது மற்றும் அழிக்காது என்பது உண்மைதான், மாறாக அது பாவத்தின் நிமித்தம் அனுதாபம் கொள்கின்றது; பாவமானது, புதிய சிருஷ்டியினுடைய பாகம்/அம்சம் அல்ல; புதிய சிருஷ்டியானது பாவத்தை எதிர்க்கின்றது மற்றும் அதை அழித்திடுவதற்கு முற்படுகின்றது; அதாவது நீதி மற்றும் சத்தியத்தின் வெளிச்சமானது மிகவும் பிரகாசிக்கத்தக்கதாய்ப் பாவத்தை அழித்துப்போட விரும்புகின்றது. “புனிதமான அன்பின் இந்த ஜூவாலையானது” நம்முடைய அழிவுக்கேதுவான சரீரங்களை, சத்தியத்திற்கடுத்த ஊழியங்களில் ஜீவப்பலியெனப் பட்சித்துப்போடுகின்றது. மேலும் இப்படியான பட்சித்துப்போடுதல்களுக்குப் புதிய மனமானது முழு
இசைவுடன் காணப்படுகின்றது மற்றும் பரலோகத்தில் தனக்கு நித்தியமான குடியிருப்பு இருப்பதைப் புதிய மனமானது உணர்ந்துகொண்டு களிகூருகின்றது மற்றும் கர்த்தருடைய நோக்கங்களுக்காகப் பாடுபடுவதற்குப் பாத்திரமாய்க் கருதப்பட்டதை எண்ணி புதிய மனமானது சந்தோஷப்படுகின்றது. “புனிதமான அன்பின் இந்த ஜூவாலையானது” தனித்தனியாகப் பரிசுத்தவான்களிடத்திலும், ஒட்டுமொத்த சபையார் அனைவரிடத்திலும் அதிகமாய் எரியும்போது, அனைத்து நற்காரியங்களிலுமான வளர்ச்சியும் அதிகமாய்க் காணப்படும். ஆகையால் நமது வார்த்தைகள், நடத்தைகள், சீயோனுடைய நலனுக்கடுத்த பொதுவான பொறுப்புகள் ஆகியவை, நம் அனைவரின் இருதயங்களிலும், ஜீவியங்களிலும் இந்த அன்பின் ஆவியானது சுதந்தரமாய் இயங்குவதற்கு அனுமதிப்பதற்கு நாம் விசேஷமாய் விழிப்புடன் காணப்பட வேண்டும்; மேலும் இந்த அன்பின் ஆவியானது தவறான உபதேசங்களினால் (அ) சடங்காச்சாரங்களினால் (அ) மிகவும் கடுமையான சட்டங்களினால் (அ) உலகத்தின் ஆவியினால் (அ) இந்த ஜீவியத்திற்கடுத்தக் கவலைகளினால் (அ) வேறு ஏதாகிலும் காரியங்களினால் (அ) நம்முடைய சூழ்நிலைகள் (அ) நிலைமைகளினால் அவித்துப் போடப்படாமல் இருப்பதற்கும் நாம் விசேஷமாய் விழிப்புடன் காணப்பட வேண்டும்.

சபையார் தீர்க்கத்தரிசனங்களை அற்பமாய் எண்ணாதிருக்க வேண்டும்; முற்காலத்துப் பரிசுத்த மனிதர்கள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு பேசின தீர்க்கத்தரிசனங்களை நாம் அற்பமாய் எண்ணாதிருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் அப்போஸ்தலன் குறிப்பிடவில்லை, மற்றும் இப்படியாகச் சபையாருக்கு எச்சரிப்பு வழங்குவதற்கும் அவசியமில்லை. நம் மத்தியில் கூறப்படும் தீர்க்கத்தரிசனங்களை அற்பமாய் எண்ணாதிருக்க வேண்டும் என்பதாகவே புத்திமதி கூறப்பட்டுள்ளது. நாம் முன்னமே பார்த்திருக்கிறபடி, வரவிருக்கும் சம்பவங்களைப் பற்றி முன்னறிவிக்கும் தீர்க்கத்தரிசன வரமானது, கர்த்தரால் ஏவப்பட்டுக் கூறப்படும் செய்திகள் இல்லாதக் காலங்களில், கர்த்தருடைய ஜனங்களை ஸ்திரப்படுத்த உதவும்படிக்கு, அப்போஸ்தலனின் நாட்களில், சபையில் காணப்பட்ட ஆவியின் வரங்களில் ஒன்றாக இருந்தது. [R3137 : page 26] “தீர்க்கத்தரிசனம்” எனும் இந்த வார்த்தையை அப்போஸ்தலன் அடிக்கடி, பொதுவிடங்களில் பிரசங்கித்தல், பொதுவிடங்களில் போதித்தல் தொடர்பாகப் பயன்படுத்துவதை நாம் பார்க்கின்றோம். ஆதி திருச்சபையினர் ஒருவருக்கொருவர் உதவிடுவதற்கும், கட்டியெழுப்புவதற்குமெனப் பொதுவான கூடுகைகள் கூடிக்கொள்ளும் வழக்கத்தை உடையவர்களாய் இருந்தனர் மற்றும் இவர்கள் சத்தியம் தொடர்புடையதான வாதம் முறையிலான பிரசங்கங்களைக்காட்டிலும், அற்புதங்கள் மற்றும் அந்நிய பாஷையில் பேசும் வரங்களைக் குறித்து அதிகமாய் எண்ணிக்கொள்வதற்குரிய அபாயத்தில் காணப்படுவதற்குரிய வாய்ப்பு இருந்தது. மற்ற ஆசீர்வாதங்களை ஒதுக்கித் தள்ளாமலும், இந்தத் தீர்க்கத்தரிசனத்தை அற்பமாய் எண்ணாதிருக்கவும் வேண்டும் என்று அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுகின்றார்; நமது கர்த்தர் ஒரு பிரசங்கியாகவும், அப்போஸ்தலர்கள் பிரசங்கிகளாகவும் இருந்தார்கள் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்கள் மத்தியில் போதகர்களை எழுப்பி வருகின்றார் என்றும் அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுகின்றார். ஆகையால் இம்மாதிரியான ஊழியமானது, அற்பமாய் எண்ணப்படக்கூடாது (அ) புறக்கணிக்கப்படக்கூடாது.

இவ்விஷயத்திற்கு நேர்மாறான ஒரு காலப்பகுதியில் நாம் வாழ்கின்றவர்களாய் இருக்கின்றோம்; பிரசங்கிப்பதற்கு மிக அதிகமான நேரத்தையும், மிக அதிகமான கவனத்தையும் கொடுத்தும், ஆனால் சத்தியத்தை மனதில் ஆழமாய்ப் பதியவைப்பதற்கும், கர்த்தருடைய மந்தையை ஊக்கப்படுத்துவதற்கும், “மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், பக்திவிருத்திப்பண்ணுவதற்குமுரிய” மற்ற வழிமுறைகளுக்குப் போதுமான நேரமும், கவனமும் கொடுக்காமலும் இருக்கும் அபாயமுள்ள காலப்பகுதியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்; வழிநடத்துபவர்கள் மீதும் மற்றும் அவர்கள் கொடுக்கும் சத்திய தூதுகளின் மீதும் அதிகமாய்ச் சார்ந்திருக்கும் அபாயமுள்ள ஒரு காலப்பகுதியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

“எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.” கர்த்தருடைய ஜனங்கள் தீர்க்கத்தரிசனங்களுக்கு அல்லது பொதுப்பிரசங்கித்தல்களுக்கு மதிப்புக்கொடுக்கும் நிலைக்கு வந்திட்டாலுங்கூட, அவர்கள் கேட்கிற எதையும், சரியான திரனாய்வு மற்றும் ஆராய்ந்துகொள்ளுதல் இல்லாமல் ஏற்றுக்கொள்ளக்கூடாது எனும் காரியத்தையும் கற்றுக்கொள்ள வேண்டியவர்களாய் இருக்கின்றார்கள். அவர்கள் கேட்கின்ற யாவையும் சோதித்துப் பார்க்க வேண்டும்; எவைகள் காரணகாரியத்திற்கு உட்பட்டது, வேதவாக்கியங்கள் ஆதரிக்கின்றது என்றும், எவைகள் எல்லாம் வெறும் ஊகங்கள், தவறான வாதங்கள் என்றும் அறிந்துகொள்வதற்கு, மனதின் வேற்றுமை கண்டறியும் திறன் செயல்படுத்தப்பட வேண்டும். தெய்வீக வார்த்தைகளுடைய பரீட்சைகளில் நிலைநிற்பவைகளும், பரிசுத்த ஆவிக்கு இசைவானதென நிரூபணமாகுபவைகளுமாகிய அனைத்தையும் பற்றிக்கொள்ள வேண்டும் என்றும், இந்தப் பரீட்சைகளில், தோற்றுப்போகும் எதையும் உடனடியாகவும், முழுமையாகவும் தள்ளிவிட வேண்டும் என்றுமுள்ள கண்ணோட்டத்தில் கர்த்தருடைய ஜனங்கள் தாங்கள் கேட்கும் காரியங்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும். அந்தோ! இன்றுள்ள கர்த்தருடைய ஜனங்கள் இந்தப் புத்திமதிக்குக் கவனம் செலுத்துவது பெரிதும் அவசியமாய்க் காணப்படுகின்றது; ஏனெனில் காரணகாரியத்திற்கு உட்படாதவைகளாகவும், வேதவாக்கியங்கள் அங்கீகரியாததாகவும் தேவனுடைய வார்த்தைகளின் எழுத்தோ (அ) ஆவியோ ஆதரிக்காததாகக் காணப்படும் அநேகம் விஷயங்கள் கர்த்தருடைய நாமத்தில் அவருடைய வார்த்தைகளின் போதனைகள் என்று முன்வைக்கப்படுகின்றது; நலமானது அல்லாதவைகள் புறக்கணிக்கப்பட வேண்டும். இப்படியாக வேறுபடுத்திப் பார்க்கும் காரியங்களானது கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்கள் மத்தியில் காணப்படுமாயின், பெயரளவிலான கிறிஸ்தவ ஆச்சாரங்களுடைய பதர்கள் எவ்வளவு புறக்கணிக்கப்பட்டிருக்கும் மற்றும் பரீட்சைகளில் நிலைநிற்கிறதுமான, தேவனுடைய நல்வார்த்தைகளுக்காக எத்தகைய ஒரு தாகமும், பசியும், தேடுதலும் காணப்பட்டிருக்கும்! இவ்விஷயம் குறித்த அப்போஸ்தலனுடைய புத்திமதிக்கு நாம் உண்மையாய்ச் செவிக் கொடுப்போமாக.

“எல்லா வகையான தீமைகளையும் விட்டு விடுங்கள்” [திருவிவிலியம் சரியான மொழிப்பெயர்ப்பு] பல்வேறு விதமான பொல்லாங்குகள் நம்முன் கடந்துவருகின்றன; இவைகளில் சில அதற்கே உரிய பயங்கரமான தோற்றத்திலும், சில போலியான வேஷம் தரித்தும் காணப்படுகின்றன. அதாவது அதற்கே உரிய பொல்லாப்பினையும், கர்த்தருடைய ஜனங்களைப் பாவத்திற்குள் சிக்கவைப்பதற்கான முயற்சியையும் வெளியரங்கமாகவே காட்டும் சில பொல்லாப்புகள் காணப்படுகின்றன; மற்றவகை பொல்லாப்புகளோ ஒளியின் தூதர்களைப் போன்று காண்பித்துக்கொண்டு, தவறாய் வழிநடத்திடுவதற்கும், வஞ்சிப்பதற்கும் நாடுகின்றன. பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும், அது நன்மையின் தோற்றத்திலோ (அ) தீமையின் தோற்றத்திலோ எப்படியாகக் காணப்பட்டாலும் சரி, அவைகள் எதிர்க்கப்பட, புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதே புத்திமதியாக இருக்கின்றது. “நன்மை உண்டாகத்தக்கதாக, நாம் தீமை செய்யலாம்” என்று நாம் சொல்லக்கூடாது. எந்தச் சூழ்நிலையாயினும் சரி, அனைத்திலும் கர்த்தருடைய ஜனங்கள் நீதியின் கொள்கைகளுக்கு உண்மையாய்க் காணப்பட வேண்டும். இதற்கு மாறாக செயல்படுவார்களானால் அவர்கள் கட்டுவதற்கு நாடும் குணலட்சணங்களை வலுவற்றதாக்கிப் போடுபவர்களாய் நிச்சயம் காணப்படுவார்கள்.

“பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்” என்பது இன்னொரு கருத்தாகும்; அதாவது இக்கருத்தானது, அப்போஸ் தலனுடைய வார்த்தைகளின் உண்மையான கருத்தினின்று வேறுபட்டதாய் இருப்பினும், இக்கருத்துத் தெளிந்த புத்தியுள்ள கொள்கையைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. பொல்லாங்கானவைகள் எத்தகைய வடிவிலோ (அ) தோற்றத்திலோ காணப்பட்டாலும், அதை நாம் நிச்சயமாய் விட்டுவிலக வேண்டியது மாத்திரமல்லாமல், நன்மையானவைகள் என்று நாம் அறிந்திருப்பதும் மற்றும் நம்முடைய நண்பர்களால் (அ) அயலகத்தாரால் தவறாய்ப் புரிந்துகொள்ளப் படுவதற்கும், தீமையானவைகள் என்று கருதிக்கொள்வதற்கும் வாய்ப்புள்ள வைகளை நாம் முடிந்தமட்டும் விட்டுவிலகிட வேண்டும். கர்த்தருக்காகவும், சத்தியத்திற்காகவுமான நமது செல்வாக்கு அதிகமாய்க் காணப்படத்தக்கதாக, தெளிந்த புத்தியுள்ள மனமானது, எல்லா வகையான தீமைகளை மாத்திரமல்லாமல், பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டுவிலகும்படிக்கு ஆணையிடுகின்றது.

நிறைவாக, அப்போஸ்தலன் தனது ஆசியை வழங்குகின்றார். இது ஒரு பிராத்தனையாகும்; அதாவது அவர்கள் சார்பிலான, அவரது இருதயத்தினுடைய வாஞ்சையின் வெளிப்படுத்தலாகும்; அதாவது சமாதானத்தின் தேவன்தாமே அவர்களை முற்றிலும் பரிசுத்தமாக்கும்படியான அப்போஸ்தலனுடைய இருதயத்தின் வாஞ்சையினுடைய வெளிப்படுத்தலாகும். இவ்விதமாக தேவன் கலகத்திற்கு, குழப்பத்திற்கு, கிளர்ச்சிக்குத் தேவனாயிராமல், மாறாக சமாதானத்தின் தேவனாய் இருக்கின்றார் என்றும், எந்தளவுக்கு நாம் கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்தில் அவரால் போதிக்கப்படுகின்றோமோ, அவ்வளவாய் நாம் சமாதானத்தை விரும்புபவர்களாகுவோம் மற்றும் தேவனுடைய சமாதானமானது நம்மில் வாசமாயிருந்து, நம்மில் அதிகமதிகமாய்ப் பெருகி, பரிசுத்தமான குணலட்சணம் தொடர்புடைய விஷயத்தில் நம்மைக் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது மற்றும் நம்முடைய வார்த்தைகளிலும், கிரியைகளிலும் நம்மைச் சமாதானத்திற்கு ஆதரவாளர்களாக ஆக்குகின்றது என்றுமுள்ள உண்மையை அப்போஸ்தலன் வலியுறுத்துகின்றார். “சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்” (மத்தேயு 5:9). இருதயத்தில் காணப்படும் சமாதானமானது, பார்வையிலும், வார்த்தையிலும் மற்றும் நடத்தையிலும் வெளிப்படுவது என்பது முற்றிலுமான பரிசுத்தமாகுதலுக்கும் / ஒப்புக்கொடுத்தலுக்கும் சாட்சியமாக இருக்கின்றது என்றும், இப்படியான பரிசுத்தமாக்கப்பட்ட இருதயத்திற்குள் தேவனுடைய ஆவியானது கடந்துவந்து எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானமாகிய, அவருடைய சமாதானத்தினால் இருதயத்தை நிரப்புகின்றது என்பதற்கும் சாட்சியமாக இருக்கின்றது என்றும் அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுகின்றார்.

“உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.” இங்கு அப்போஸ்தலன் ஒட்டுமொத்த சபையைக் குறிப்பிடுகின்றாரே ஒழிய, தனிப்பட்ட அங்கத்தினர்களை அல்ல; ஏனெனில் தெசலோனிக்கேயா பட்டணத்துப் பரிசுத்தவான்கள் மாத்திரம் கர்த்தருடைய பிரசன்னத்தின் நாட்கள் வரை உயிரோடு இருப்பார்கள் என்றோ, தான் அக்காலம்வரை உயிரோடு இருப்பார் என்றோ அப்போஸ்தலன் நிச்சயமாய் எதிர்ப்பார்க்கவில்லை (2 தீமோத்தேயு 4:7-8; 2 பேதுரு 1:12-15). தெசலோனிக்கேயா பட்டணத்து ஒவ்வொரு தனிப்பட்ட கிறிஸ்தவனுடைய ஆவி மற்றும் ஆத்துமா மற்றும் சரீரம் குறித்து அப்போஸ்தலன் இங்குக் குறிப்பிடாமல், மாறாக சபையினுடைய [R3137 : page 27] ஆவியைக் குறித்தும், சபையினுடைய சரீரத்தைக் குறித்தும் மற்றும் சபையினுடைய ஆத்துமாவைக் குறித்தும் குறிப்பிடுகின்றார். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், தெசலோனிக்கேயா பட்டணத்துச் சபை, சுவிசேஷ யுகம் முடிவு வரையிலும், கர்த்தருடைய ஆவியில் நிறைந்து, அவருக்கடுத்த வேலையில் தைரியம் கொண்ட, சிறந்த மற்றும் உண்மையுள்ள சபையாக தொடர்ந்து காணப்பட வேண்டும் என்பதே அப்போஸ்தலனின் வாஞ்சையாக இருந்தது. ஆனால் அப்போஸ்தலனின் இந்த நல்வாஞ்சைகள் (அ) ஜெபங்கள் நிறைவேறவில்லை என்பதை நாம் அறிவோம்; ஏனெனில் அப்போஸ்தலன் ஸ்தாபித்திட்ட மற்றச் சபைகள் போன்று, இந்தச் (தெசலோனிக்கேயா) சபையும் இல்லாமல் போயிற்று; அதாவது அப்போஸ்தலனுடைய அறிவுரைகளுக்கும், புத்திமதிகளுக்கும் போதுமான கவனம் செலுத்தாமலும், எல்லாவற்றையும் சோதித்துப் பார்க்காமலும், நலமானதைப் பிடித்துக்கொள்ளாமலும், பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டுவிலகாமலும், முற்றிலும் பரிசுத்தமாகாமலும், தங்கள் மத்தியிலான கர்த்தருடைய ஆவியை அவித்துப்போட்டும் இருந்து, [R3138 : page 27] ஒரு சபையாராக இல்லாமல் போய்விட்டனர்; ஒளியானது ஆசீர்வதித்து, உறுதிப்படுத்தின சிலரோ, “ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தை” நாடினவர்களாக மற்றப் பட்டணங்களுக்குக் கடந்துபோனார்கள்.

“உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்” (1 தெசலோனிக்கேயர் 5:24). தெசலோனிக்கேயா பட்டணத்துச் சபையானது, அப்போஸ்தலனுடைய பிராத்தனைக்கு ஏற்றப்படி நீடிக்கவில்லை என்பதற்குக் காரணம், தேவன் உண்மையற்றவராகக் காணப்பட்டார் என்பதாக இராமல், மாறாக அப்போஸ்தலனின் அறிவுரைகளைப் பெற்றவர்கள் (அ) அச்சபையில் அவர்களுக்குப் பின் வந்தவர்கள் உண்மையற்றவர்களாகவும், புத்திமதிகளைப் புறக்கணித்தவர்களாகவும் காணப்பட்டதேயாகும். இப்படியாகவே கர்த்தரால் அழைக்கப்பட்ட நம் ஒவ்வொருவரின் விஷயத்திலும் காணப்படுகின்றது. நாம் நமது அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதிப்படுத்த வேண்டுமென்றால், நாம் கர்த்தருடைய ஊழியக்காரர்கள் மூலமான அவரது செய்தியைக் கேட்டு, செவிக்கொடுக்க வேண்டும். அவர் அனுப்பின வழியில் வரும் செய்தியை நாம் கேட்கவில்லையெனில், தவறு நம்மிடத்திலேயே உள்ளது. நம்மை அழைத்தவர் உண்மையுள்ளவராக இருக்கின்றார் மற்றும் நாம் அவரது ஏற்பாடுகளை விசுவாசத்தினால் ஏற்றுக்கொண்டு, அவரது வார்த்தைகளினுடைய வழிநடத்துதல்களைப் பின்பற்றுவோமானால், நாம் கேட்டுக்கொள்வது (அ) எண்ணுவதைக் காட்டிலும் அதிகமான மேன்மையான காரியங்களை நமக்குச் செய்வதில் தேவன் களிகூருகின்றவராய் இருக்கின்றார்.

“சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்” (1 தெசலோனிக்கேயர் 5:25). அப்போஸ்தலனிடம் போப் அல்லது ஆண்டவன்மார்களின் எக்காரியமுமில்லை கர்த்தருடைய மந்தையின் அனுகூலங்களுக்காக, தான் ஜெபம் ஏறெடுப்பதாகவும், ஆனால் தனக்கு அவர்களுடைய ஜெபங்கள் தேவையில்லை என்பதாகவுமுள்ள எந்த பெருமிதமான எண்ணங்கள் அப்போஸ்தலனிடம் இல்லை. இப்படியான ஆவியே, கர்த்தருடன் சரியான உறவுகொண்டிருக்கும் அனைவரிடமும் காணப்படுகின்றது; அதாவது தாழ்மையின் ஆவியும், விசுவாச வீட்டார் அனைவரையும் மற்றும் கிருபையின் சிங்காசனத்தினிடத்திலான அவர்களது வேண்டுதல்களையும் பற்றியதான ஓர் உணர்ந்துகொள்ளுதலும், கர்த்தருடன் சரியான உறவுகொண்டிருக்கும் அனைவரிடமும் காணப்படுகின்றது; அதாவது கர்த்தருடைய ஜனங்களிலேயே மிகவும் எளியவருக்கு, பரம கிருபையின் சிங்காசனத்தினிடத்திற்குச் செல்ல முடியும் என்றும், தேவையின் நேரங்களில் உதவிடுவதற்குரிய பலத்தைக் கண்டடைந்து, இரக்கத்தை அடைய முடியும் என்றுமுள்ள உணர்ந்துகொள்ளுதல் கர்த்தருடன் சரியான உறவுகொண்டிருக்கும் அனைவரிடமும் காணப்படுகின்றது.

“சகோதரரெல்லாரையும் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்” (1 தெசலோனிக்கேயர் 5:26). கைகளைக் குலுக்குதல் அல்லது வணக்கம் செய்தலாகிய தற்போதைய வழக்கத்திற்கு ஒத்த வழக்கத்தில், வரவேற்கும் ஆதிகால வழக்கமே இவ்வசனத்தில் குறிப்பிடப்படுகின்றது. புருஷர்கள் ஒருவருக்கொருவர் முத்தம் செய்துகொள்ளும் காரியமானது, இன்னமும் கிழக்கத்திய நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகின்றது. கிறிஸ்துவின் சரீரத்தினுடைய அங்கத்தினர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் அனைவரின் மத்தியிலும் உள்ளன்பு காணப்பட வேண்டும் என்பதும், இந்த ஐக்கியமானது நியாயமான வரவேற்பு/வாழ்த்துதல் முறைகள் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதும் அப்போஸ்தலனுடைய கருத்தாக இருக்கின்றது. அவர்களோடு அவர் இருக்க விரும்புவதையும், அவர்களைத் தனிப்பட்ட விதத்தில் வரவேற்க விரும்புவதையும் தெரிவிக்கும், “நான் வாழ்த்துகிறேன்” என்ற அர்த்தத்திலேயே அவர் அநேகமாக இக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

சபையார் மீதான கர்த்தருடைய ஆசீர்வாதத்தை வழங்குவதற்கு முன்னதாக, இந்த நிருபமானது யாருக்கு அனுப்பப்படுகின்றதோ, அவர்களால் இது தனிப்பட்ட கடிதமாக (அ) செய்தியாகக் கருதப்படாமல், மாறாக கர்த்தருடைய உண்மையுள்ளவர்கள் அனைவருக்கும் தன்னால் எழுதப்பட்டதாகக் கருதப்பட்டு, அனைவருக்கும் வாசிக்கப்பட வேண்டும் என்று அப்போஸ்தலன் மிகவும் உறுதியாய் ஆணையிடுகின்றார். வழிநடத்தும் சகோதரர்கள் மத்தியில் அதிகார ஆவியானது உருவாகி, தங்களுக்கென்று மாத்திரம் அப்போஸ்தலனுடைய கடிதமானது வைக்கப்பட்டு, தாங்கள் வாசித்தப் பிற்பாடு தங்களுடைய கணிப்பின்படி விவேகமானது என்று தோன்றும் கடிதத்தின் பாகங்களையோ (அ) முழுக்கடிதத்தையோ கொஞ்சம் கொஞ்சமாகச் சபையாருக்குக் கொடுக்க வழிநடத்திவிடும் என்று அப்போஸ்தலன் அஞ்சினதாகத் தெரிகின்றது. எந்தச் சபையிலுமுள்ள மூப்பர்கள் மத்தியிலான இப்படிப்பட்ட ஆவியானது கண்டனத்திற்கு ஏதுவானதாகும். தேவனுடைய வார்த்தைகளானது, தேவனுடைய ஜனங்களுக்குரியதாகும் மற்றும் அதைத் தடைப்பண்ணுபவர்கள் எவராக இருப்பினும், அவர்கள் ஆண்டவருக்குக் குற்றம் புரிகின்றவர்களாக இருப்பார்கள். நிருபமானது சபைக்குக்கொடுக்கப்பட்டுள்ளது என்ற காரியத்தை வைத்துப்பார்க்கும்போது, தெசலோனிக்கேயா பட்டணத்து மூப்பர்களின் உண்மை விளங்குகின்றது. இவ்விஷயம் தொடர்புடைய காரியங்களில், இன்றுள்ள சிலருக்கு ஜாக்கிரதை அவசியமாகும்; அநேக பிரசங்கிமார்கள், போதகர்கள், யுகங்களுக்கடுத்த தெய்வீகத் திட்டத்தில் ஆயிர வருட விடியலின் வெளிச்சத்தை உணர்ந்துகொண்டுள்ளனர்; ஆனால் இதை மற்றவர்களுக்கு அறிவிப்பதற்குப் பதிலாக, தங்கள் மந்தைகள் முன்னதாக தாங்கள் பிரகாசிக்கத்தக்கதாக, தங்களை வெளிச்சமூட்டிக்கொள்வதற்கெனக் கர்த்தருடைய ஜனங்களிடமிருந்து மறைத்துப்போட நாடுகின்றனர். இந்தத் தங்களுடைய முறைமையைத் தந்திரம் என்றும், தங்களை ” ஞானிகள் என்றும், கல்விமான்கள்” என்றும் எண்ணிக்கொள்ளுகின்றனர் மற்றும் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்துகிறார் என்பதையும் மறந்து போய்விடுகின்றனர். (லூக்கா 10:21) கர்த்தருடைய வார்த்தைகளின் பிரகாரமாக, இந்த வகுப்பார் அதிகம் முன்னேறுவதில்லை அவர்களிடமிருந்து சத்தியம் வெளியேறுகின்றது மற்றும் அதற்கேற்றப்படி இருள் வருகின்றது; ஏனெனில் இவர்கள் சத்தியத்தின் மீதான அன்பின் காரணமாக அல்லாமல், மாறாக சுயத்தின் மீதான அன்பின் காரணமாகவே சத்தியத்தை ஏற்றுக்கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர் (2 தெசலோனிக்கேயர் 2:10). சத்தியமானது எந்த வழியாக வந்தாலும், கர்த்தருக்காகவும், அவரது மந்தைக்காகவும் மற்றும் அவரது சத்தியத்திற்காகவுமான நேர்மை என்பது, சத்தியத்தை நாம் ஒவ்வொருவரும் நம்மால் முடிந்த மட்டும், அதற்கே உரிய தூய்மையில், முடிந்தமட்டிலுமான வேகத்தில், கர்த்தர் சித்தங்கொண்டுள்ள அவரது மந்தைக்கடுத்த நன்மைகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு இசைவாக அறிவிப்பதை எதிர்ப்பார்க்கின்றது. தங்களைப் போஷித்துக் கொண்டு, மந்தைகளைப் போஷிக்காத மேய்ப்பர்கள், கர்த்தருடைய அதிருப்தி குறித்து எச்சரிக்கப்படுகின்றனர்; மேலும் இப்படிப்பட்ட மேய்ப்பர்கள் ஆவியில் தழைத்தோங்குவதோ அல்லது கர்த்தருடைய முகப்பிரகாசத்தின் வெளிச்சத்தைப் பார்ப்பதோ இல்லை (எசேக்கியேல் 34:2,7-10).