மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R5185 (page 56)

மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை

ST. PETER'S EXHORTATION TO THE ELDERS

“ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.” – (1 பேதுரு 5:6)

தெய்வீகக் கிருபை மற்றும் தெய்வீக நோக்கம் குறித்த அறிவைப் பெற்றிருப்பவர்களாகிய கர்த்தருடைய ஜனங்கள் சரியானதும், தகுதியானதும், முறையாய்ச் செயல்படுத்தப்பட வேண்டியதும், ஒழுங்கிற்கு உட்படுத்தப்பட வேண்டியதும் மற்றும் நெறிப்படுத்தப்பட வேண்டியதுமான சில குறிக்கோள்களைப் பெற்றிருப்பார்கள். யாருமே நலமார்ந்த குறிக்கோள்கள் இல்லாமல் இருக்கக்கூடாது. குறிக்கோள்கள் எதுவும் இல்லாமல் தேவன் இருப்பார் என்று நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாது. குறிக்கோள்கள் இல்லாதவர்கள் வாழ்க்கையில் சுற்றிக்கொண்டிருப்பவர்களாய்க் காணப்பட்டு, தங்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ எதையும் சாதித்திடாதவர்களாகக் காணப்பட்டு, தாங்கள் ஏறெடுக்கிற பிரயாசம் அனைத்திலும் தோற்றுப்போகிறவர்களாக இருப்பார்கள்.

மேன்மையான மற்றும் கனவீனமான குறிக்கோள்கள் இருக்கின்றன. சில ஜனங்கள் பெரியவர்களாக, புகழ்மிக்கவர்களாக ஆகிவிட வேண்டும் என்ற குறிக்கோளுடையவர்களாய் இருக்கின்றனர்; சிலர் ஆளவேண்டுமென்ற குறிக்கோளுடையவர்களாகவும்; இன்னும் சிலர் ஆஸ்தியுடையவர்களாக, சமுதாயத்தில் அந்தஸ்து உடையவர்களாக அல்லது மனுஷர் மத்தியில் கனங்களும், பெயர்களும் பெறுபவர்களாக ஆகிடவேண்டும் என்ற குறிக்கோளுடையவர்களாகவும் இருக்கின்றனர். இவைகள் அனைத்தும் சுயநலமான குறிக்கோள்களாகக் காணப்படுகின்றன; எனினும் இவைகள் இன்று உலகத்தை – தொழில், சமுதாயம், அரசியல் மற்றும் மதவட்டாரங்களில் இயக்கும் வல்லமையாக இருக்கின்றன. இவைகள் அனைத்தும் தவறான குறிக்கோள்களாய் இருக்கின்றன மற்றும் இவைகள் அனைத்துமே தீமையை விளைவிக்கவில்லை என்றாலும், இவைகள் அனைத்தும் சுயநலமானவைகளாகவும், தீமைக்கு ஏதுவானவைகளாகவும் காணப்படுகின்றன. செய்திடுவதற்குத் தங்கள் மனசாட்சியானது சம்மதித் திடாதவைகளைச் செய்திடத்தக்கதாக அநேகர் சுயநலமான குறிக்கோள்களினால் வஞ்சிக்கப்பட்டவர்களாய் இருக்கின்றனர்.

கிறிஸ்தவன் தனக்கு முன்பாக மிகவும் மேன்மையான குறிக்கோளை வைத்திருக்கின்றவனாய் இருக்கின்றான். தேவன் தம்முடைய நாமத்திற்கென்று ஒரு ஜனத்தை உலகத்திலிருந்து அழைக்கின்றார். இவர்களுக்கு முன்பாக அவர் நலமார்ந்த குறிக்கோள்களை வைத்திருக்கின்றார். இவர்கள் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடுகூட உடன்சுதந்தரர்களாகும்படிக்கு அழைக்கப்பட்டிருக் கின்றார்கள். இந்தக் குறிக்கோளானது, இவர்கள் பரலோக தந்தை மற்றும் கர்த்தருடனான ஐக்கியத்திற்கு, நட்புறவிற்கு, தோழமைக்குத் தங்களை ஆயத்தப்படுத்தத்தக்கதாக – குணலட்சணம் மற்றும் மனதின் உயர் பண்புகள் யாவற்றையும் வளர்த்துக்கொள்வதற்கு ஏவுகின்றதாய் இருக்கின்றது. கர்த்தருடைய வார்த்தைகளுக்குச் செவிக்கொடுப்பதற்கு மிகவும் உண்மையான பிரயாசம் எடுப்பதற்கு உந்துதலாகக் காணப்படத்தக்கதாக – இந்த மேலான குறிக்கோளை நம்முன் வைத்துக்கொள்வோமாக.

இப்போக்கினை மேற்கொள்பவர்கள் பிதாவுக்கு மிகவும் பிரியமான வர்களாகக் காணப்படுவார்கள். நிறைவேற்றிடுவதற்கு அவர் ஒரு மாபெரும் பணியினைப் பெற்றிருக்கின்றார் மற்றும் அதைச் செய்திடும் ஜனங்களுக்காக அவர் நாடித்தேடிக்கொண்டிருக்கின்றார். கிறிஸ்து இயேசு அந்த மாபெரும் வேலைக்குத் தலையாக இருக்கின்றார் மற்றும் தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் தேவன் விளங்கச்செய்வதற்காக, அவருடைய இராஜ்யமானது உலகத்தை ஆளவும், ஆசீர்வதிக்கவும் இருக்கின்றது (எபேசியர் 2:6). இந்தப் பரம அழைப்பினை உணர்ந்து மதிப்பவர்கள், தேவன் தங்களை எங்கு அழைத்துள்ளாரோ, அங்குக் காணப்படுவதற்கு விருப்பமுள்ளவர்களாக இருப்பார்கள். தேவன் அருளியுள்ளவற்றைப் பொருட்படுத்தாதவர்கள் அல்லது நிபந்தனைகளுக்கு உட்பட விருப்பமற்றவர்கள், பரிசைப் பெறுவதற்குரிய ஓட்டத்திற்குள் பிரவேசிக்க முடியாதவர்களாய் இருப்பார்கள்.

பரம குறிக்கோளினைப் பெற்றிருப்பவர்கள், தாங்கள் புதிய சுபாவத்தினை மண்பாண்டங்களில் பெற்றிருக்கின்றார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. இந்த வகுப்பாருக்கே, ஒருவரையொருவர் மகா பரிசுத்தமான விசுவாசத்தில் கட்டியெழுப்பும் விஷயத்தில், ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்வது என்பது நலமார்ந்த குறிக்கோளாகிறது. மணவாட்டி தன்னை ஆயத்தம் பண்ணினாள் (வெளிப்படுத்தல் 19:7). ஆகையால் இவர்கள் தங்களை ஆயத்தம் பண்ணிக்கொள்வதற்கும் மற்றும் தேவனுடைய அருமையான குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கு உதவிசெய்திடுவதற்கும் நாடிட வேண்டும்.

மூப்பர்த்துவத்தில் காணப்படும் அபாயம்

கண்காணிக்குரிய, மேய்ப்பனுக்குரிய பணியினை விரும்புவது என்பது நல்லதொரு விருப்பமாகும்/குறிக்கோளாகும் (1 தீமோத்தேயு 3:1). ஒருவர் மந்தையை மேய்த்துப் பேணும் பணியைச் சரியாய்க் கவனித்துக்கொள்வாரானால், மற்றக் காரியங்களுக்கு அவருக்கு நேரமிராது. கர்த்தருடைய ஜனங்கள் மத்தியிலிருந்து மூப்பர் ஊழியத்திற்கென்று அழைக்கப்படுபவர்கள், அதனை கர்த்தரிடமிருந்து வந்துள்ள சிலாக்கியமாகவும், கனமாகவும் கருதிட வேண்டும்; மற்றும் அதனை இழிவான ஆதாயத்திற்காக அல்ல, மாறாக ஆயத்தமான மனநிலையுடன் ஜாக்கிரதையாய் நாடிட வேண்டும் (1 பேதுரு 5:1-4). ஆனாலும் இந்த ஊழியத்தை நாடுகையில், அதில் பெருமை வளர்ந்திடுவதற்கும், அதிகார கர்வம் கொள்ளுவதற்குமான அபாயம் உள்ளது என்று ஒவ்வொருவரும் நினைவில் கொள்ளுவார்களாக.

மூப்பராக ஊழியம் புரிவதற்கான மேலான சிலாக்கியத்தினை உடையவர்கள், தேவனுடைய சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளாமல், “ஒப்படைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாமல் இருக்கத்தக்கதாக தங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும் (1 பேதுரு 5:3; திருவிவிலியம்). தாங்கள் பிரதான மேய்ப்பனல்ல என்றும், தாங்கள் உடன் மேய்ப்பர்களாய் மாத்திரமே இருக்கின்றனர் என்றும் நினைவில் கொண்டிருக்க வேண்டும். யாரேனும் ஒருவர் மந்தையினை அடக்கியாள முற்படுவாரானால், அவர் தனக்கும், சபைக்கும் தீங்கு விளைவிக்கிறவராய் இருப்பார்; ஏனெனில் அடக்கியாள முற்படுகையில் அவர் பெருமையின் ஆவியினை வளரப் பண்ணுகிறவராய்க் காணப்படுவார்.

“பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் என்று பரிசுத்த பேதுரு அடிகளார் நமக்குக் கூறுகின்றார் (1 பேதுரு 5:5). ஆகையால் ஒருவர் கர்த்தருடைய ஊழியத்தில் தாழ்மையுடன் காணப்படுவாரானால், அவரது நடத்தையானது சபையாருக்கு நன்மை பயக்கின்றதாய் மாத்திரம் இராமல், அது இராஜ்யத்தில் ஒரு ஸ்தானத்தைப் பெற்றுக்கொள்வதற்குமான ஒரே வழியாகவும் காணப்படுகின்றது. மாபெரும் சிலாக்கியங்களை மாத்திரமல்லாமல், மகா சோதனைகளையும், மகா அபாயங்களையும் உடைய கனமிக்க ஊழியமாக, மூப்பர் ஊழியம் காணப்படுகின்றது. “என் சகோதரரே, அதிக ஆக்கினை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக என்று பரிசுத்த யாக்கோபு அடிகளார் கூறுகின்றார் (யாக்கோபு 3:1).

செய்யவேண்டிய அவசியமுள்ள ஒரு பணியினைச் செய்பவர்களாகிய மூப்பர்களுக்கு, “தேவனுடைய பலத்த கைக்குள் அடங்கியிருக்கும்படிக்கு அப்போஸ்தலன் அறிவுரை கூறுகின்றார். யாவும் தேவனுடைய பலத்த வல்லமையினால் செய்யப்படுகின்றது மற்றும் அந்த வல்லமையினாலேயே அவர் சகலத்தையும் நன்மைக்கு ஏதுவாய்ச் செய்கின்றார். நம்மால் தெய்வீகச் சித்தத்தினைக் குறுக்கிட முடியாது. பெருமை அல்லது பேராசைகளை அனுமதிப்பதின் மூலம் நாம் நம்முடைய சொந்த வளர்ச்சியினைத் தடைப் பண்ணிடலாமே ஒழிய, தேவனுடைய திட்டத்தினை நம்மால் தடைப்பண்ணிடமுடியாது.

நாம் அனைவருமே மற்றவர்களுக்குச் சிறந்த விதத்தில் ஊழியம் புரிந்திடுவதற்கும் மற்றும் மாபெரும் பலனை அடையவும் நாடுகின்றோம். பரிசுத்த பேதுரு அடிகளார் அந்த வழியினை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றார்; அது — “உங்களைத் தாழ்த்துங்கள் என்பதாகும். கவிஞன் ஒருவர் பின்வருமாறு எழுதியுள்ளார்:

“என்னை அதிகம் அபாயத்திற்குள்ளாக்குபவைகளில்
இறங்கிட நான் அஞ்சுகின்றேனே.”

இந்த ஆவியானது, பெருமையையோ அல்லது ஆரவார பேச்சையோ அல்லது மற்றவர்களை அடக்கி ஆளுவதற்கான ஆசையையோ வளர்த்துவதற்கு நம்மை மிகவும் அச்சம் கொள்ளச் செய்திடும். ஆகையால் நாம் நம்மைத் தாழ்த்திக்கொண்டு, மிகவும் தாழ்மையுடன் காணப்படுபவர்களையும், கர்த்தரில் மிகவும் விசுவாசம் கொண்டுள்ளவர்களையும் தேவன் விசேஷமாய் ஆசீர்வதிப்பார் என்றும், ஏற்றகாலத்தின்போது – நமது கர்த்தருடைய இரண்டாம் வருகையின்போது உயர்த்திடுவார் என்றும் நினைவில் கொள்வோமாக.

சபையில், கர்த்தருடைய ஜனங்கள் மத்தியிலுள்ள தாழ்மையுள்ளவர்கள், சில சமயங்களில் இநத் முக்கியமான குணலட்சண பண்பில் குறைவுபட்டிருப்பவர்கள் சிலரைப் பார்க்கிலும், குறைவாய் மதிக்கப்படுவார்கள். மனுக்குலத்தாருக்குப் பொதுவாகவே அச்சுறுத்துபவர்கள் மீதே நாட்டம் காணப்படுகின்றது. சாந்தத்துடனும், கனிவுடனும் காணப்படுபவர்களைப் பார்க்கிலும், தங்களைக் கடுமையாய் நடத்துபவர்கள் யாரேனும், தங்கள் மீது காணப்படுவதையே மனுஷர்கள் விரும்புகின்றனர். ஆகையால் அவர்கள் நம்மை விரும்புவதில்லை. நம்மில் அவர்களுக்கு நன்றாய்ப் பிடிக்கும் காரியத்தினை நாம் அடைய நாடுகிறவர்களாய் இருத்தல் கூடாது. மாறாக நாம் கர்த்தரை அவருடைய வழியில் சேவிக்க வேண்டும் என்றும், கர்த்தருடைய பார்வையில் நம்முடைய பிரதான பொறுப்பு நம்மைப் பற்றினதாக இருக்கின்றது என்றும் நினைவில் கொள்வோமாக. தேவன் நம்மை ஏற்றகாலத்தில் உயர்த்தத்தக்கதாக, அவரது பலத்த கரத்தின் கீழ் நம்மைத் தாழ்த்திக் கொள்வோமாக.
[R5185 : page 57]

சத்திய அறிவின் நிமித்தம் பெருமைகொள்ளுதல் பாதகமானதாகும்

இந்தக் காரியங்கள் அனைத்தும், தாழ்மையே நமக்கான தகுதியான மனநிலையாக இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. நம்முடைய இருதயத்தின் உணர்வுகளானது பெருமையானதாகக் காணப்படாமல், மாறாக சாந்தமானதாகவும், தாழ்மையானதாகவும், உண்மையானதாகவும் காணப்பட வேண்டும்.

பெருமை என்பது சுயநலம் விதைக்கப்பட்டுள்ளதின் விளைவைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. சுயநலத்தின் ஆவியானது, அதனால் நல்லது மற்றும் விலையேறப்பெற்றது என்று காண்பவைகளை – அதாவது ஆஸ்தி, அறிவு, கனம், கீர்த்தி மற்றும் மனுஷர் மத்தியில் அந்தஸ்து ஆகியவைகளைப் பேராசையுடன் சேர்த்துக்கொள்கின்றது. இந்தப் பொக்கிஷங்களைச் சம்பாதிப்பதில் ஓரளவுக்கு வெற்றிக் காணுதல் என்பது சுயநலமுள்ள ஆன்மாவை மனநிறைவு கொள்ளவும், பிறர் ஆதரவு சாராமல் காணப்படவும் மற்றும் மற்றவர்களுடைய நலனுக்கடுத்தக் காரியங்களில் அக்கறையற்று இருக்கவும் செய்கின்றது. படிப்படியாக ஆனால் வேகமாக, இறுமாப்பாகவும், தன் கருத்தினை நிலைநாட்டுகிற பெருமையாகவும் வளர்கின்றதான இந்த ஆவியானது, பூமிக்கடுத்த ஐசுவரியத்தினுடைய சூரிய வெளிச்சத்தின் ஒவ்வொரு கதிர்களிலும் கனியத் தொடங்குகின்றது. சுயநலமானது கனியும்போது, அது கேலிக்கிடமாகும் அளவிற்கு அதிகரித்து, தன்னைக் குறித்தே பெருமையாய்ப் பேசுவதில் மகிழும் மற்றும் தான் கனப்படுத்தப்படுவதற்கும், பாராட்டப்படுவதற்கும் பாத்திரவானாய் இருப்பதாகவும், தனக்கு முக்கியத்தும் இருப்பதாகவும், கற்பனை கோட்டைக்கட்டி இருப்பவைகளில் மகிழும்.

தாழ்மையின் போக்கானது எத்துணை எளிமையானதாகவும் மற்றும் எத்துணை ஞானமானதாகவும் காணப்படுகின்றது! தாழ்மையின் ஆவியானது, தனக்கானவைகளை நாடுவதில்லை இறுமாப்பு அடையாது; கற்பனை கோட்டையான முக்கியத்துவங்களை ஊகித்திட முற்படுவதில்லை; தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணிடாது; மாறாக தெளிந்த எண்ணத்துடன் எண்ணிடும் – அதாவது அது அடைந்திருப்பவைகளை அல்லது சம்பாதித்திருப்பவைகளை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மதிப்பிடாமல் இருக்கும்; (கற்பனை கோட்டை அடிப்படையில் இல்லை மாறாக) தாழ்மையானது ஸ்திரமான ஆதாரத்தின் அடிப்படையிலேயே செயல் புரிய எப்போதும் நாடினாலும், அது உண்மையான தகுதி நிலையை அடைவதற்கும், தெய்வீகப் பாராட்டு மற்றும் தயவின் உண்மையான மகிமையைச் சம்பாதிப்பதற்கும் நியாயமாய்ப் போராடுகின்றதாய் இருக்கின்றது.

ஏதோ சத்தியத்தினை நாம்தான் தோற்றுவித்ததுபோன்று, அநேகர் சத்தியத்தின் நிமித்தமாக தற்பெருமையடித்துக் கொள்கின்றனர். இது எத்துணை அறிவீனம்! நாம் சத்தியத்தினைத் தோற்றுவிக்கவில்லை. நம் கண்களைக் கடந்தகாலங்களில் குருடாக்கி வைத்த சில தப்பறைகளை நாம் அப்புறப்படுத்த மாத்திரமே செய்தோம். சத்தியம் தேவனுடையதாகும். அவரே அறியாமை மற்றும் மூடநம்பிக்கை எனும் இருளினின்று, அவரது திட்டம் குறித்த சத்தியத்தினைக் காண நம்மை அனுமதித்துள்ளார். ஒரு மனுஷன் ஓர் அழகான ஓவியத்தைப் பார்த்துவிட்டு, அதைத் தான்தான் வரைந்ததாகத் தற்பெருமையடித்துக் கொள்வானானால், நாம் அவனை நோக்கி: “மூடனே! நீ இந்த ஓவியத்தினை வரையவில்லை. நீ அதைப் பார்க்க மாத்திரமே செய்துள்ளாய். அது தொடர்பாகத் தற்பெருமையடித்துக் கொள்வதற்கு உனக்கு எதுவுமில்லை என்று சொல்லுவோம்.

யுகங்களுக்கடுத்த தேவனுடைய திட்டத்தின் எந்தவொரு பாகத்தினையும் நாம் உருவாக்கிடவில்லை. அப்படி உருவாக்க முயற்சித்திருப்போமானால், நாம் தோல்வியையே அடைந்திருப்போம். ஆகையால் நம்முடைய மனநிலையானது, “தேவன் என்ன ஏற்பாடு பண்ணியுள்ளார், தேவன் என்ன திட்டம் தீட்டியுள்ளார் என்று நாங்கள் உங்களுக்கு காண்பித்துத் தருகின்றோம், வாருங்கள் என்றே காணப்படவேண்டும். இப்படியாக நாம் தேவனை மகிமைப்படுத்துகின்றவர்களாகவும், மற்றவர்களுக்கு உதவுபவர்களாகவும் இருப்போம்; ஏனெனில் சத்தியம் தொடர்புடைய விஷயத்தில் நாம் எவ்வளவாய்ப் பெருமையை அல்லது தன்னிறைவை வெளிப்படுத்துகின்றோமோ, அவ்வளவாய் நமக்கும், மற்றவர்களுக்கும் தீங்கு விளைவிப்பவர்களாக இருப்போம். “எங்களுக்குச் சத்தியத்தினைப் போதிக்கத்தக்கதாக, உங்களது சபையில் ஞானமுள்ளவர்களை நீங்கள் பெற்றிருப்பது போலவே, நாங்களும் திறமிக்க நியாயசாஸ்திரிகளைப் பெற்றிருக்கிறோம் என்று உலகம் கூறிடும்.

ஆகையால் நாம் சரியான ஆவியில் – அதாவது ஆண்டவருடைய சாந்தத்தின், தாழ்மையின் ஆவியில் காணப்படுகின்றோமா என்பதை ஆரம்பத்திலே [R5186 : page 57] உறுதிப்படுத்திக்கொள்வது, தகுதியான காரியமாக இருக்கும். தேவன் தம்முடைய வார்த்தைகள் தொடர்புடைய விஷயத்தில், எவற்றிற்கு வெளிச்சத்தினைச் சுடர்விடப்பண்ணுவதற்கான ஏற்றவேளை வந்துள்ளதோ, அவற்றை நாம் காண்பதற்கு அனுமதிக்கின்றார். படமானது (திட்டம்) முன்பிலிருந்தே இருந்துவருகின்றது; ஆனால் மேகங்களும், இருளும், அதன் அழகினை நாம் காணமுடியாதபடிக்கு, படத்தினை மிகவும் மங்கலாகக் காண்பித்தது. இப்பொழுது விளக்கு எரிகின்றது மற்றும் கவிஞன் சொல்லியுள்ளதுபோன்று…..

“வேதத்தில் நாம் அருமையானவைகளைக் காண்கின்றோமே.”

சுயநம்பிக்கைக் கொள்வதற்குப் பதிலாக, ஞானமானது – சுயத்தினுடைய பெலவீனத்தையும் மற்றும் பூரணமின்மையையும் நினைவுகூரப்பண்ணி, சுயத்தின் மீது நம்பிக்கையின்மைக் கொள்ளச் செய்கின்றது மற்றும் தேவன் மீது மிகுந்த பக்திவைராக்கியம் கொள்ளச் செய்கின்றது மற்றும் தேவன் மீது சார்ந்து நிற்க செய்கின்றது; தேவன் மீது சார்ந்து இருத்தல் என்பது எல்லாவற்றைப் பார்க்கிலும் நம்மைப் பெலப்படுத்துகிறதாகவும், நம்முடைய விழுந்துபோன சுபாவத்தினுடைய தீமையினின்று விலகவும் உதவி செய்கின்றது.

தாழ்மையின் பாதையில் நடப்பதும், மனுஷீக விருப்பங்களைத் தொடர்ந்து கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதும் மற்றும் முழுமையாய்ப் பட்சிக்கப்படுவது வரையிலும் பலியினைப் பலிபீடத்தில் தக்கவைத்துக்கொள்வதும் உண்மையில் சுலபமானக் காரியமல்ல. ஆனால் இப்படித்தான் – அதுவும் சாந்தமும், தாழ்மையுமுள்ள
இருதயமுடைய ஸ்தோத்திரத்திற்குரிய நம்முடைய முன்னோடியானவரின் அடிச்சுவடுகளில் கவனமாய் நடப்பவர்களாகிய உண்மையுள்ள ஜெயங் கொண்டவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ளதான பரிசை நாம் அடையாமல் போகாதப்படிக்கு, பயத்தோடும், நடுக்கத்தோடும் தெய்வீகச் சுபாவத்திற்கான நம்முடைய சொந்த இரட்சிப்பினை நாம் நிறைவேற்ற வேண்டியவர்களாய் இருக்கின்றோம் (பிலிப்பியர் 2:8,12).

இப்படியாக நாம் தாழ்மையுடனும், உண்மையுடனும் காணப்படும்போதுதான், கர்த்தர் தம்முடைய நாமத்தை மற்றவர்களுக்குப் பிரஸ்தாபப்படுத்துவதற்குரிய அவரது தெரிந்தெடுக்கப்பட்ட பாத்திரங்களாக நம்மை ஏற்படுத்துவார். இப்படியாகச் சுயத்தினை வெறுமையாக்கி, அவரது ஆவியினாலும், அவரது சத்தியத்தினாலும் நாம் நிரப்பப்படும்போது, நாம் சேனைகளின் கர்த்தருடைய பெலத்திலும், அவரது சத்துவத்தின் வல்லமையிலும் பலத்துடன் முன்னேறி, சிலுவையின் போர்ச் சேவகர்களென வல்லமையான ஊழியங்களைச் செய்திடுவோம்.