R4251 (page 293)
“மெய்யான ஒரே சபை” என்ற கட்டுரை வெளிவந்தது முதற்கொண்டு, சபையாரில் ஒரு பகுதியினர் பிரிந்துபோய்விடுவது மற்றும் தனிச் சபையென அதுவே அதன் கூடுகைகளை நடத்திடுவது தொடர்புடைய உரிமை அல்லது சிலாக்கியம் குறித்து எங்களிடம் விசாரிப்பதற்கு அநேகர் தொடர்பு கொண்டிருக்கின்றனர். அக்கட்டுரையில் ஏற்கெனவே சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ளது போன்று, நமது கர்த்தருடைய வார்த்தைகளானது – உண்மையுள்ள, அர்ப்பணம் பண்ணியுள்ளவர்களில் இரண்டு அல்லது மூன்று பேர் தம்முடைய நாமத்தில் கூடிக்கொள்கையில், அதை அங்கீகரித்திட அவர் விருப்பமுள்ளவராய் இருக்கின்றார் என்றும், அத்தகைய அங்கத்தினர்களுடன் தலையானவரின் பிரசன்னமானது காணப்படுகையில், அது வேதவாக்கியங்களின் அடிப்படையில் ஒரு சபையாக இருக்கின்றது என்றும் நமக்குத் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது.
இது உண்மையாக இருப்பினும், நமது கர்த்தருடைய மற்றும் அவரது அப்போஸ்தலர்களுடைய போதனைகளும் மற்றும் ஆதிசபையினரின் நடைமுறைகளும் – “நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல, நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்ற” புதிய கற்பனையானது, கர்த்தருடைய அருமையான ஜனங்கள் சிறுசிறு கூட்டங்களாகப் பிரிந்து போவதற்குப் பதிலாக, அவர்கள் ஒன்றுகூடிடுவதற்கு அவர்களை ஆவல்கொள்ள வழிநடத்துகின்றதான, அத்தகைய ஓர் ஆவியின் நெருக்கமான ஐக்கியத்தினைச் சுட்டிக்காட்டும் கருத்திற்கு இசைவாகவே உள்ளது என்பதும்கூட உண்மையாய் இருக்கின்றது. ” நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல” எனும் வார்த்தைகளானது, மிகவும் ஆழமான, உள்ளார்ந்த அன்பையே சுட்டிக்காட்டுகின்றதே ஒழிய, வெறும் சகித்தலை அல்ல என்று நாம் கவனமாய்க் கவனித்திட வேண்டும். தம்முடைய ஜீவனை நமக்குக் கொடுத்திடும் அளவுக்குக் கர்த்தர் நம்மை அன்புகூர்ந்தார் மற்றும் அவரை அப்போஸ்தலன் நமக்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டி, “நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாய் இருக்கிறோம்” என்று கூறுகின்றார். இப்படியாகவே அவர் நம்மில் அன்புகூர்ந்தார். இது சபையார் மத்தியில் ஒரு பிரிவினருக்கான பிரிவுணர்ச்சியினால் உள்ள அன்பு அல்ல, மாறாக அனைவருக்குமான அன்பாகும்; காரணம் அவர்கள் அவருடையவர்களாய் இருக்கின்றனர் என்பதும் நினைவில்கொள்ளப்பட வேண்டும். உண்மைதான் அனைவரையும் ஒரே அளவில் அன்புகூர முடியாதுதான், ஆனாலும் நம்முடைய ஜீவன்களை அவர்களுக்கு ஒப்புக்கொடுப்பதற்கு விரும்புகிற அளவுக்கு, அனைவரையும் அன்புகூர்ந்திடலாம்; ஏனெனில் கர்த்தருடைய சிறியவர்களிலேயே எளியவர்கள்கூட நம்முடைய சிறந்த அன்பினைப் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவானவர்களாய் இருக்கின்றனர், காரணம் அவனும் மீட்கப்பட்டு, பாவத்திற்கு எதிரான போராட்டத்தில் இம்மானுயேலாகிய தளபதியின் கீழ் இணைந்து கொண்டவனாக, அவரது ஊழியத்திற்கெனத் தனது ஜீவனை ஒப்புக்கொடுத்துவிடுவதாக தனது ஆண்டவருடன் உடன்படிக்கையின் ஒப்பந்தத்தை மேற்கொண்டவனாய் இருக்கிறானல்லவா? நாம் ஊழியம்புரிகின்ற தான அதே ஆண்டவருக்குத் தங்களுடைய அனைத்தையும் அர்ப்பணித்துள்ளவர்களையும் நாம் அன்புகூர வேண்டுமல்லவா; மேலும் அத்தகையவர்களை ஆண்டவர் ஏற்றுக்கொள்கின்றார் மற்றும் அவர்களைத் தமது சகோதரரென அழைத்திடுவதற்கு அவர் வெட்கப்படுகிறதில்லை எனும் உண்மைகளானது – [R4252 : page 293] நாமும் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் அவர்களைக் குறித்து வெட்கப்படாமல், மாறாக அவர்களை அன்புகூர்ந்து, அவர்களுக்கு ஊழியம் புரிய, அதுவும் அவர்களுக்கு உதவுவதற்கென ஜீவியத்தின் மணி நேரங்களை அல்லது நாட்களை ஒப்புக்கொடுத்துவிடும் அளவுக்கு ஊழியம்புரிய மகிழ்கிறவர்களாக நாம் காணப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களாய் இருக்கின்றன.
கர்த்தருடைய ஆவியோடும், அவரது வார்த்தைகளினுடைய அறிவுரைகளோடும் சம்பந்தமுள்ள எல்லாமே, அவரது சரீரத்தின் அங்கத்தினர்கள் மத்தியில் பிரிவினை எனும் கருத்தினை எதிர்ப்பதாகவே உள்ளது. இதற்கான அருமையான உதாரணமானது, எங்குமுள்ள அருமையான நண்பர்கள் கிருபையிலும், அறிவிலும் வளருகையில், அவர்கள் ஒருநாள் மாநாடுகளுக்கும் மற்றும் இன்னும் அதிகமாய்ப் பொது மாநாடுகளுக்கும் ஒன்றுகூடி வருவதற்குரிய வாஞ்சையினால் அதிகமதிகமாய் ஊறிக் காணப்படுகிறதில் விளங்குகின்றது; மற்றும் இப்படிக் கூடுகையில் ஒருவரோடொருவருக்கான ஏக்கங்களும், ஐக்கியங்களும், நாம் நமது கர்த்தரோடும், “பரலோகத்தில் தங்கள் பேரெழுதப்பட்டவர்களாகிய” முதற்பேறானவர்களின் சர்வசங்கத்தினுடைய அவரது உண்மையானவர்கள் அனைவரோடும் கூடிடுவது வரையிலும் முழுத்திருப்தியினை அடைகிறதில்லை எனும் கருத்தும் எப்போதும் வெளிப்படுகின்றதாய் இருக்கின்றது.
மார்க்கப்பேதத்தை அப்போஸ்தலன் கண்டனம்பண்ணினது நம் அனைவருக்கும் நினைவில் இருக்கின்றது மற்றும் அதை அவர் பட்சபாதத்தின் ஆவி என்று அடைமொழியில் குறிப்பிடுகின்றார் மற்றும் அதற்கு அவரது ஆதரவு காணப்படுகிறதில்லை மற்றும் அது மாம்ச மனப்பான்மை காணப்படுவதற்கான சான்று என்றும், ஆவிக்குரிய காரியங்களில் குறைவான வளர்ச்சியினைச் சுட்டிக்காட்டுகின்றது என்றும் குறிப்பிடுகின்றார். “ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், [R4252 : page 294] வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களல்லவா?” (1 கொரிந்தியர் 3:3,4). “கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா?” என்று அவர் கேட்கின்றார். இன்னுமாக இவர்கள் நம்மை மீட்கவில்லை, கிறிஸ்து மாத்திரமே மீட்டார் என்றும், நாம் அனைவரும் அவரது சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கின்றோம் என்றும், இதனால் ஒருவரோடொருவர் உறவுகொண்டிருக்கின்றோம், காரணம் நாம் நமது தலையானவராகிய அவரோடு உறவு உடையவர்களாய்
இருக்கின்றோம் என்றும் கூறுகின்றார் மற்றும் இன்னுமாகத் தொடர்ந்து அவர் சரீரத்தில் பிரிவினையுண்டாயிரக்கூடாது, அதாவது பேதமோ, பிரிவோ காணப்படக்கூடாது என்று கூறுகின்றார் (1 கொரிந்தியர் 12:25; 1:13).
அருமையான நண்பர்களே நாம் இதைக்குறித்து உணர்கின்றோமோ அல்லது இல்லையோ, ஆனால் ஓரிடத்தில் சரியாய்க் கூடிடுவதற்குத் தொலைத் தூரமானது தடையாய் இருக்கும் காரணத்தினால் உண்டாகும் பிரிதலாய் இல்லாமல், வேறே காரணங்களினால் உண்டாகும் சபையாரின் பிரிவினையை ஆதரிக்கும் ஆவியானது, சபை பிரிவுணர்ச்சியின் அல்லது பாரபட்சத்தின் ஆவியாகவே காணப்படும் என்பதில் ஐயமில்லை. சிலசமயங்களில் இது வழிநடத்துபவராகிட விரும்பியும், தனது தாலந்துகளைச் சபையின் ஊழியக்காரரெனப் பயன்படுத்திடுவதற்குரிய முழுமையான வாய்ப்பை விரும்பியும் காணப்படும் சகோதரன் ஒருவரால் ஏற்படுகின்றது. சிலசமயங்களில், அப்போஸ்தலன் குறிப்பிட்டுள்ளதுபோன்று, சபையாரில் ஒரு சாராரின் பாரபட்சத்தினால், பரிசுத்த பவுல் அவர்களின் விஷயத்தில் காணப்பட்டதுபோல, வழிநடத்துபவர்களே விரும்பிடாமல் இருக்கையில், வழிநடத்துபவர்களைப் பின்பற்றிட வேண்டும் எனும் விருப்பத்தினால் உண்டாகுகின்றது. இது விஷயத்தில் மற்றவர்களை நியாயந்தீர்ப்பதற்குப் பதிலாக, தனிப்பட்ட விதத்தில் நம்முடைய சொந்த இருதயங்களைக் கூர்ந்து ஆராய்வது எப்பொழுதுமே நமக்கு நன்மைப் பயக்கின்றதாய் இருக்கும். சில இடங்களில் பிரிவதற்கும், தனித்துக் கூட்டங்களை நடத்திடுவதற்கும் சிலரின் சார்பில் காணப்படுகின்றதான மனப்பான்மைக்கு, சில உண்மையான காரணம் இருக்க வாய்ப்புள்ளது; ஆனால் அந்த இடர்ப்பாட்டினைச் சரிப்படுத்திக்கொண்டு, ஒன்றாய்க் காணப்படுவதே சிறந்த வழியாய் இருக்கும். சில சமயங்களில் கர்த்தருடைய ஜனங்கள் உணர்வற்றவர்களாய் மிகவும் குறுகிய மனதுடன் காணப்பட்டு, ஓர் ஏற்பாடானது முடிந்த மட்டும் அனைவரையும் திருப்திப்படுத்த, சந்தோஷப்படுத்த மற்றும் அனைவருக்கும் பிரயோஜனமாக இருக்கத்தக்கதாக பிரயாசம் எடுப்பதற்குப் பதிலாக, பெரும்பான்மையான வர்களுடைய சித்தத்தின்படி, சபையின் ஏற்பாடுகளை மிகவும் அதிகமாய்க் கட்டுப்படுத்திவிடுகின்றனர்.
“அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனிப்போமாக” என்று அப்போஸ்தலன் புத்திமதி கூறுகின்றார் (எபிரெயர் 10:24). இது நன்கு கல்வியறிவு உடையவர்களாக அல்லது இயல்பாகவே சிறந்தவர்களாக அல்லது ஐசுவரியவான்களாக அல்லது நாகரிகமாகக் காணப்படுபவர்களின் விருப்பங்களை மற்றும் இஷ்டங்களை நாம் கவனிக்க வேண்டும் என்று மாத்திரமல்ல, மாறாக சரீரத்தினுடைய அருமையான அங்கத்தினர்கள் அனைவரையும் கவனிப்பதற்கு நாம் நாடிட வேண்டும் என்று குறிக்கின்றதாய் இருக்கின்றது. நாகரிகமானவர்களை, கல்வியறிவுடையவர்களை, ஆவிக்குரியவற்றில் நன்கு வளர்ச்சி அடைந்திருப்பவர்களை அன்புகூருவது என்பது சுலபமானதே மற்றும் இவர்களை அன்புகூருவது என்பது, “உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும், ஆயக்காரரும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே” என்று புறஜாதியாரால்கூடச் செய்யப்படுகின்றதென நமது கர்த்தரால் குறிப்பிடப்பட்டவைகளுக்கு ஒத்ததாகக் காணப்படுகின்றது (லூக்கா 6:32). “நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று” அப்போஸ்தலனால் குறிப்பிடப்படுகின்றதான சகோதர அன்பானது – இந்த அன்பானது நாகரிகமானவர்களை மற்றும் நேர்த்தியானவர்களை மற்றும் திறமிக்கவர்களை மற்றும் உயர்பண்புடையவர்களை அன்புகூருவதை மாத்திரம் குறிக்கிறதில்லை. மரணத்தைவிட்டு ஜீவனுக்குக் கடந்துபோகாதவர்களை, அநேகம் ஜனங்கள் அன்புகூருகின்றனர். நாம் சகோதரரை அன்புகூருவதாவது, நாம் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம் என்பதற்குச் சாட்சியமாகக் காணப்படுகின்றது; இச்சகோதரரில் அநேகர் இழிவானவர்கள் என்றும், “தேவன் உலகத்தில் அற்பமானவர்களைத் தெரிந்துகொண்டார்” என்றும் அப்போஸ்தலன் தெரிவித்துள்ளார். சகோதரரில் இயல்பாகவே அற்பமானவர்களாய்க் காணப்படுபவர்களை நாம் அன்புக்கூரும் நிலைமைக்கு வருகையிலேயே, இது புதிய சுபாவமானது மனதைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கின்றது என்பதற்குச் சான்றாய் இருக்கின்றதென நாம் கருதிடலாம். நாம் அவர்களது அற்பமான தன்மைக்காகவோ, அவர்களது அறியாமைக்காகவோ, அவர்களது அறிவீனத்திற்காகவோ, அவர்களது வறுமைக்காகவோ, அவர்களை நாம் அன்புகூராமல், மாறாக அவர்கள் அவருடையவர்களாய் இருப்பதினாலும், அவருடையவர்கள் அனைவரும் நம்முடையவர்களாய் இருப்பதினாலும், நம்மோடுகூட அவர்களும் அதே கொடியின் கீழ் ஒரே போராட்டத்தில் இணைந்திருப்பதினாலும், பிதா தம்முடைய ஆவியினால் ஜெநிப்பிக்கையில், அவர்களைத் தமது பிள்ளைகளென அங்கீகரித்துள்ளதினாலும், நாம் அவர்களை அன்புகூருகின்றோம். இக்காரணங்களானது, சீயோன் மலையில் ஏறிடுவதற்கு ஒருவருக்கொருவர் நமது உதவியை அளிப்பதற்கும், நம்முடைய அனுதாபம் பாராட்டப்படுவதற்கும், நம்முடைய அன்பு காட்டப்படுவதற்கும் வலியுறுத்துகின்றதாய் இருக்கின்றது.
சகோதரருக்கான நமது அன்பினால், அவருக்கான நம்முடைய அன்பானது அளவிடப்பட்டுப் பார்க்கப்படும் என்று நமது கர்த்தர் தெரிவித்துள்ளார் மற்றும் நம்முடைய தேவைகளுக்கேற்ப நம் ஒவ்வொருவருக்கும் கர்த்தருடைய மனதுருக்கமும், கிருபைகளும் காணப்படுவது போன்று, மற்றவர்களுடைய தேவைகளுக்கேற்ப மற்றவர்கள் மீது நமது அனுதாபமும், அன்பும் செலுத்தப்பட வேண்டும் என்று அப்போஸ்தலன் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றார். வளர்ச்சி ரீதியிலும், மனரீதியிலும் அல்லது ஆவிக்குரிய ரீதியிலும் நம்முடைய அளவிற்கு இணையாகக் காணப்படுபவர்களின் தோழமையைப் பிரதானமாய் நாடுதல் என்பது, நம்மையே பிரியப்படுத்துகிறதாய் இருக்கும் மற்றும் நாம் ஒருவரையொருவர் அன்புகூர வேண்டும் அல்லது ஒருவருக்கொருவர் ஊழியம் புரிந்திட வேண்டும் என்றும், நாம் நம்மைப் பிரியப்படுத்திடக் கூடாது என்றும் அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுகின்றார் மற்றும் இன்னுமாக கிறிஸ்துவும் தமக்குப் பிரியமாய் நடக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றார். இன்னுமாக நம்முடைய மாம்ச சரீரங்களிலும்கூட, நாம் சில சமயங்களில் ஆரோக்கியமாய் இருக்கும் பாகங்களுக்குச் செலுத்தும் பராமரிப்பைக் காட்டிலும், ஆரோக்கியமற்ற கைக்கோ அல்லது பாதத்திற்கோ, அதன் அவலட்சணத்தை மூடத்தக்கதாக அதிக கவனம் செலுத்துபவர்களாய் இருப்போம் என்றும், இப்படியாகவே நாம் கிறிஸ்துவின் சரீரத்திலும் செய்திட வேண்டும் என்றும், கிறிஸ்துவின் முழுச்சரீரமும் பத்திவிருத்தியடைந்து, தலையாகிய கிறிஸ்துவின் கீழ், அவரது அங்கத்தினர்களென அன்பின் கட்டுகளினால் இணைக்கப்பட்டு, கட்டப்படத்தக்கதாக, நம்முடைய பரிவும், உதவியும் மற்றும் ஐக்கியமும், அதிகமாய் யாருக்குத் தேவைப்படுகின்றதோ அவர்கள் அவற்றைப் பெற்றுக் கொள்ளத்தக்கதாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுகின்றார்.
அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுவது போன்று, சரீரத்தினுடைய ஒவ்வொரு அங்கத்தினனும் நமக்குத் தேவையாயிருக்கின்றனர் மற்றும் நமக்கு முன்பு இருக்கும் சோதனையான வேளைகளானது, மிகவும் கடுமையாகிடுகையில், ஒருவர் இன்னொருவருக்கும் கொண்டிருக்கும் உண்மையான ஒத்துழைப்பும், ஆதரித்தலும், பரிவும் நமக்கு அதிகமதிகமாய்த் தேவைப்படும். ஆகையால் நாம் பிரிவினைகளையும், “அமைப்புகளையும்” தவிர்த்துக்கொள்வோமாக மற்றும் சரீரத்திற்குத் தகுதியான ஒருமைப்பாட்டின் ஆவியினைப் பெற்றுக்கொண்டிருப்போமாக; ஏனெனில் நாம் அனைவரும் கிறிஸ்து இயேசுவில் ஒன்றாயிருக்கின்றோம் மற்றும் ஒருவருக்கொருவர் அங்கத்தினர்களாகக் காணப்படுகின்றோம். இம்மாதிரியான காரியங்கள் அனைத்திலும் கண்ணுக்குக் கண் பார்க்கத்தக்கதாக நாம் அதிகமதிகமாய் நாடிடுவோமாக.
*******
கேள்வி:- அடையாளமான தண்ணீர் ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ளாத ஒருவர் மூப்பராக தேர்ந்தெடுக்கப்படுவது சரியாய் இருக்குமா?
பதில்:- அர்ப்பணிக்கப்பட்டவர்கள் அனைவரும் மற்றும் ஈடுபலியில் விசுவாசம் இருப்பதாகவும், கர்த்தருக்கு அர்ப்பணம் பண்ணியுள்ளதாகவும் அறிக்கைப்பண்ணுபவர்கள் அனைவரும், தண்ணீர் ஞானஸ்நான அடையாளத்திற்கான அவர்களது கீழ்ப்படிதலானது பொருட்படுத்தப்படாமலேயே சகோதரர்களென, சபையின் அங்கத்தினர்களெனக் கருதப்படுவதற்கும் மற்றும் கையாளுவதற்கும் நாம் வலியுறுத்தினாலும், இத்தகைய ஒருவரைச் சபையின் மூப்பராகத் தேர்ந்தெடுப்பது என்பது ஞானமாகவோ அல்லது கர்த்தருடைய போதனைகளுக்கு இசைவாகவோ இருக்குமென நாம் எண்ணுகிறதில்லை. இத்தகைய ஒருவர் “பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப்பட்டதான விசுவாசத்தில்” தெளிவாய் இருக்கிறாரென நம்மால் கருதமுடியாது. இவரை நாம் சகோதரன் என்று ஏற்றுக்கொண்டாலும், இவர் சத்தியத்தில் நன்கு வளர்ந்துள்ளவராக நம்மால் கருதிட முடியாது. ஆகையால் தெய்வீகத் திட்டம் முதலானவைகள் குறித்து மற்றவர்களுக்குக் கற்பிப்பதற்கென்று விசேஷமாகத் தெரிந்தெடுக்கப்படுவதற்கு ஒரு பொருத்தமான நபராய் இவரை நாம் கருதிட முடியாது.