அறிமுகக் கடிதங்கள்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R1720 (page 330)

அறிமுகக் கடிதங்கள்

LETTERS OF INTRODUCTION

பயணம்பண்ணி போதிக்கும் சகோதரருக்கான அறிமுகக் கடிதத்திற்கு வேறொரு வார்த்தைப் பயன்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று நம்முடைய கடந்த வெளியீட்டில் நாம் தெரிவித்திருந்தோம்; மற்றும் அதை நாங்கள் கீழே கொடுத்திருக்கின்றோம். தவறான புரிந்து கொள்ளுதலுக்கு இடமளிக்காமல் இருக்கத்தக்கதாக விளக்கமளிப்பது சரியாய் இருக்கும்:-

(1) இந்தக் கடிதங்களானது பிரசங்கித்திடுவதற்கான அங்கீகாரமல்ல. இந்த அங்கீகாரமானது எந்த மனுஷனாலும் கொடுக்கப்படமுடியாது. விலையேறப்பெற்ற இரத்தத்தில் விசுவாசங்கொண்டு, கர்த்தருக்கான ஊழியத்தில் முழுமையாய் அர்ப்பணம் பண்ணியுள்ளவர்களாகிய உண்மையான சீஷர்கள் அனைவருமே, தங்களால் முடிந்த எந்த மற்றும் அனைத்து விதத்திலும் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்குத் தேவனுடைய வசனத்தினால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளனர்; இவர்கள் தங்களுடைய தாலந்துகள் மற்றும் வாய்ப்புகளுக்கேற்ப தங்களால் முடிந்த பிரசங்கித்தல் அனைத்தையும் பொதுப்படையாகவோ அல்லது தனிப்பட்ட விதத்திலோ வார்த்தைகள் அல்லது பேனா அல்லது அச்சடிக்கப்பட்ட பக்கங்கள் வாயிலாகச் செய்திடுவதில் மகிழ்ச்சியாய்க் காணப்பட வேண்டும் (மத்தேயு 28:9). அப்போஸ்தலனாகிய பவுல் ஊழியக்காரன் என்றுள்ள தனக்கான அங்கீகாரம் அல்லது ஏற்படுத்துதலானது, மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, தேவனாலே மாத்திரமேயாகும் என்று நமக்கு உறுதியளிக்கின்ற அதே வேளையில், அவர் கர்த்தருடைய பிரதிநிதியெனவும், அந்தியோகியாவிலுள்ள சபையின் பிரதிநிதியெனவும் அந்தியோகியாவிலுள்ள சபையினுடைய ஆதரவின் கீழ் பர்னபாவுடனான தனது ஊழியத்திற்குப் புறப்பட்டுப்போனார் (கலாத்தியர் 1:1; அப்போஸ்தலர் 13:3; 14:26, 27). அவர் நிச்சயமாகவே இப்படியான ஒரு கடிதத்தைக் கொண்டுபோனார்; ஏனெனில் இத்தகைய நிருபங்களை / கடிதங்களைக் கொடுப்பதும், கொண்டு செல்வதும் வழக்கமாய் இருந்தது (பிலிப்பியர் 2:28-30;ரோமர் 16:1-15,17; 1 கொரிந்தியர் 16:3; அப்போஸ்தலர் 18:27). இது குறித்துக் கொரிந்தியருக்கு அவரால் எழுதப்பட்டுள்ள நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “மீண்டும் நாங்கள் எங்களைப்பற்றி நற்சான்று அளிக்கத் தொடங்குகிறோமா? சிலரைப் போல நற்சான்றுக் கடிதங்களை உங்களுக்குக் காட்டவோ அல்லது உங்களிடமிருந்து பெறவோ எங்களுக்குத் தேவை உண்டா?” (2 கொரிந்தியர் 3:1 திருவிவிலியம்). பவுலுக்குக் கொரிந்துவிலுள்ள சபையிடம் செல்வதற்கு இத்தகைய கடிதம் தேவைப்படவில்லை காரணம் அவர் அங்கு விவரிப்பதுபோன்று, அவர் அச்சபையை நிறுவி ஸ்தாபித்துள்ளபடியால், அவர்களைப் போன்று அவரைக்குறித்து அறிந்திருந்தவர்களும் அல்லது அவரைப்போன்று அவர்களைக்குறித்து அறிந்திருந்தவர்களும் சொற்பமானவர்களே ஆவர். ஆனால் அவர் முதல்முறை எருசலேமிலுள்ள சபையைச் சந்திக்கச் சென்றபோது, அவருக்குக் கடிதங்கள் அல்லது அவரைக்குறித்த அறிமுகம் தேவைப்பட்டது (அப்போஸ்தலர் 9:26,27-ஆம் வசனங்களைப் பார்க்கவும்). இந்த அப்போஸ்தலருடைய வழக்கத்தையும், மந்தையைப் பாதுகாக்கும் வழக்கத்தையும்தான் நாம் இப்பொழுது – அனைவருடைய நலன் கருதி பின்பற்றிட நாடுகின்றோம். எங்குத் தனிப்பட்ட நபர்கள் அறியப்பட்டிருக்கும் பட்சத்தில், அங்குத் தனிப்பட்ட நபர்களின் கடிதங்கள் போதுமாயிருக்கும் அல்லது எங்குச் சபைகள் அறியப்பட்டிருக்கும் பட்சத்தில், அங்குச் சபையின் கடிதங்கள் போதுமாயிருக்கும்; ஆனால் நம் விஷயத்தில் Tract Society / டிராக்ட் சொசைட்டி குறித்து உங்கள் அனைவருக்கும் தெரியும் மற்றும் சொசைட்டியின் அறிமுகப்படுத்துதலானது, சிதறிக் காணப்படும் அனைவராலும் மதிக்கப்படும் என்பதில் நமக்கு நம்பிக்கை இருக்கின்றது.

(2) Zions Watch Tower Tract Society என்பது அதற்கு இன்று நிலவும் சாதாரண அர்த்தத்தின் படியாக ஒரு மத சொசைட்டி அல்ல; ஏனெனில் அதற்கு எந்த விசுவாசப் பிரமாணங்களோ அல்லது விசுவாச அறிக்கைகளோ காணப்படுகிறதில்லை. அது முற்றிலுமாக ஓர் association / அலுவலகமாகக் காணப்படுகின்றது; அதன் வேலை அலுவல் விதத்தில் காணப்படுகின்றது. அது எவ்வளவு உண்மையாய் அதற்கான நோக்கத்தை நிறைவேற்றியுள்ளது என்பதற்கு அதன் நண்பர்களும், அதன் சத்துருக்களும் சாட்சி பகருகின்றனர்.

டிராக்ட் சொசைட்டியினுடைய அமைப்புத் தன்மையானது, அதன் பணக்காரியங்களை, அதன் நிர்வாகிகளுடைய தனிப்பட்ட காரியங்களிலிருந்து முற்றிலுமாய்ப் பிரித்து வைப்பதேயாகும். இந்த ஒரு சௌகரியத்தினாலான பலன் இப்பொழுதைக்காட்டிலும், எதிர்க்காலத்திலேயே தெரிகின்றதாயிருக்கும்; ஏனெனில் இது நிதிகளை நிர்வகிக்கும் எவராவது அல்லது அனைவருடைய மரணமானது, சொசைட்டியைச் சீர்க்குலைத்துப்போடாமலும், விசுவாச வீட்டாருக்கான பிரதிநிதியென, விசுவாச வீட்டாரின் பயன்பாட்டிற்கும், நன்மைக்கும், சமயம் பரப்பும் ஊழியத்திற்கு ஆதரிக்கும் வண்ணமாகக் கைப்பிரதிகள் முதலானவைகளுக்குப் [R 1720 : page 331] பொருளாதார உதவியளித்தல் எனும் சொசைட்டியின் வேலை முற்றிலும், தடைப்பட்டுப் போகாதப்படிக்குப் பார்த்துக்கொள்ளும் என்று நம்பப்படுகின்றது.

(3) நீங்கள் அல்லது வேறு எவரேனும் இத்தகைய கடிதங்களைக் கொடுத்து அனுப்புவது என்பது குறிப்பது போலவே, இந்த அறிமுகக் கடிதங்கள் கொடுக்கப்படுவது என்பது, அறிமுகப்படுத்தப்படுபவரின் குணலட்சணம், திறமை முதலானவைக் குறித்து நன்கு அறிந்திருக்கும் அனுபவமிக்க சகோதரரின் கணிப்பைக் குறிக்கின்றதாய் இருக்கும் (அப்போஸ்தலர் 16:2-ஆம் வசனத்தைப் பார்க்கவும்).

இப்படியாக “வஞ்சிக்கிறவர்கள்” காணப்படுகின்ற இந்த நாட்களில், நாங்கள் கடமை உணர்வோடு அக்கறைகொண்டிருக்கிறோம் என்று நீங்கள் அறிந்து, நாங்கள் யாருக்குச் சாட்சி பகருகின்றோமோ, அத்தகையவர்களை நீங்கள் மிகவும் தாமதமின்றி ஏற்றுக்கொள்ளலாம் (2 தீமோத்தேயு 3:1-13; ரோமர் 16:18; மத்தேயு 24:24; எபேசியர் 4:11-14).

(4) இந்த அறிமுகக் கடிதத்தில் இடம்பெறும் 8 தகுதிகளில் அஸ்திபாரமாகிய ஈடுபலியைத் தவிர, வேறு எதுவும் உபதேசம் சம்பந்தப்பட்டவையல்ல என்று கவனிக்கப்படலாம்; இந்த அடிப்படை உபதேசத்தை விசுவாசியாதவர் எவரும் கிறிஸ்தவர்களே அல்ல என்று நாம் கருதுகின்றோம். மற்றத் தகுதிகள், குணலட்சணம் சம்பந்தப்பட்டவையாக இருக்கின்றது மற்றும் இவைகள் நியாயமான தகுதிகளென நாம் நம்புகின்றோம் மற்றும் தேவனுடைய கிருபையினால் தன்னை உண்மையுள்ளவனாக அறிக்கைப்பண்ணிடாத எவரையும், ஜீவனுள்ள தேவனுடைய சபையில், போதகனாகவோ அல்லது தகுதியுள்ள ஊழியக்காரனாகவோ காணப்படுவதற்குரிய, தகுந்த நபர் என்று நாம் அறிமுகம் பண்ணிட விரும்புகிறதில்லை.

இத்தகுதிகளைப் பெற்றிருப்பதாகத் தங்களைக் குறித்து அறிக்கைப் பண்ணுபவர்கள், அந்தக் கிறிஸ்தவ கிருபைகளிலும், தகுதிகளிலும் பூரணப்பட்டிருப்பதாய் வலியுறுத்துவதாகப் புரிந்துகொள்ளப்படக்கூடாது; மாறாக பரிசுத்தமானவைகளில் சபையின் ஊழியக்காரனாய்க் காணப்படத்தக்கதாக, கிறிஸ்துவின் பிரதிநிதி ஒருவர் இக்கிருபைகளைப் பெற்றிருக்க வேண்டுமெனத் தாங்கள் ஒப்புக்கொள்ளும் ஒரு அளவுக்குத்தக்கதாகத் தாங்கள் அக்கிருபைகளைப் பெற்றிருப்பதாக, அவர்கள் நம்புவதாகவே புரிந்துகொள்ளப்பட வேண்டும். சரியான ஆவியை உடையவர்கள் அனைவரும், கிருபையிலும், அறிவிலும், அன்பிலும் மற்றும் சகல நற்கிரியைகளிலும் தொடர்ந்து வளர்த்திடுவதற்கு விரும்பி நாடிடுவார்கள் மற்றும் தாங்கள் கர்த்தருக்கு ஒத்த சாயலில் உயிர்த்தெழுதலில் எழும்போதுதான் தாங்கள் பூரணமடைய முடியும் என்றும் எதிர்ப்பார்க்கின்றவர்களாய் இருப்பார்கள் (1 கொரிந்தியர் 15:42,43).

இந்த அறிமுகக் கடிதமானது டிசம்பர் 31- ஆம் தேதியோடு காலாவதியாகிடும் மற்றும் புதியது விரும்பப்படும் பட்சத்தில், புதுப்பிக்கப் படுவதற்கான வேண்டுதலுடன், அந்தத் தேதியிலேயே திருப்பி அளிக்கப்பட வேண்டும். சொசைட்டியானது எப்போதேனும் அதன் இயக்குநர்களின் குழு வாயிலாக கடிதத்தைத் திரும்பிக் கேட்கையில், கடிதத்தின் உரிமையாளர் அதைச் சொசைட்டிக்குத் திருப்பி அளித்திட ஒப்புக்கொள்கின்றார்.

அறிமுகக் கடிதத்தின் பிரதி

அலிகெனி, P. A., U. S. A-இன் Zions Watch Tower Tract Society- இன் அறிமுகக் கடிதம்.

பரலோகத்தில் பெயரெழுதப்பட்டுள்ள ஜீவனுள்ள தேவனுடைய சபைக்கு வாழ்த்துக்கள்! (1 தீமோத்தேயு 3:15; எபிரெயர் 12:23).

உங்களது கிறிஸ்துவ ஐக்கியத்திற்குள்ளாக, உங்களுக்கு உதவுபவராக மற்றும் ஆலோசனை வழங்குபவராக நீங்கள் ஏற்றுக்கொள்ளும்படிக்கும் எங்களது அருமையான சகோதரனும், உடன் வேலையாளுமான அவர்களை நாங்கள் பரிந்துரைக்கின்றோம்.

இவர் கர்த்தருக்குள்ளான பிரியமான சகோதரனாகவும், இவரை அறிந்திருக்கும் சகோதரரால் நற்சாட்சி அளிக்கப்பெற்றவராகவும், நம்மால் தேவனுடைய பிள்ளை என்றும், கிறிஸ்துவின் பின்னடியார் என்றும் அடையாளம் கண்டுகொள்ளப்படுபவராகவும் காணப்படுகின்றார் (இது அவர்கள் நல்லொழுக்க குணலட்சணங்களையும் உள்ளடக்குகின்றது) மற்றும் விசுவாச வீட்டாருக்கு விசேஷித்த ஊழியம் புரிந்திடுவதற்குரிய, கீழ் இடம்பெறும் தகுதிகளை இவர் பெற்றிருப்பதாக நாம் நம்புகின்றோம்:

(1) குறைக் காணமுடியாதளவுக்கு, சத்தியத்தினால் மெருகூட்டப்பட்ட நல்லொழுக்க குணலட்சணங்கள் பெற்றிருக்கின்றார்.

(2) சாந்தம் – அதாவது இறுமாப்படைந்து, உங்களுக்கு உதவிசெய்ய நாடுகையில் தனக்குத் தீங்குவிளைவித்துக்கொள்ள முடியாத அளவுக்குச் சாந்தத்தை உடையவராய் இருக்கின்றார்.

(3) கர்த்தருடைய மாபெரும் திட்டத்தைக்குறித்து தெளிவாகப் புரிந்துகொண்டவராகவும், அதன் ஆவியில் பெரிதும் பங்கெடுத்தவராகவும் இருக்கின்றார்.

(4) சத்தியத்தை, அதற்கேயுரிய வல்லமையிலும், எளிமையிலும் (நாவன்மை உடையவராய் இல்லாவிட்டாலும்) மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்குரிய திறமையுடையவர்.

(5) ஆதாமினாலும், அவர் வாயிலாக மரணத்தைச் சுதந்தரித்துக்கொண்ட அவரது சந்ததியாலும் இழந்துபோகப்பட்ட ஜீவனுக்கான சரிநிகர்சமான விலை அல்லது பதிலாள் எனும் ஒரே உண்மையான அர்த்தமுள்ள ஈடுபலி உபதேசத்திற்கு விசுவாசமானவராக அறியப்பட்டிருக்கிறார்.

(6) தன்னைக்குறித்துப் பிரசங்கம்பண்ணாமல், கிறிஸ்துவைக்குறித்துப் பிரசங்கம் பண்ணிடுவதற்கும் – தன்னுடைய அறிவைக் குறித்துச் சத்தமிட்டுக் கொண்டிராமல், மாறாக தேவனுடைய வார்த்தையினை அதற்கேயுரிய தூய்மையிலும், எளிமையிலும் முன்வைத்திடுவதற்கும் நாடிடும் தாழ்மையான மனதினைப் பெற்றவராவார்.

(7) வசனத்தினுடைய மற்றும் சீர்ப்படுத்தப்பட்ட எண்ணமுடைய மற்றும் நன்கு ஸ்திரமும், உறுதியடைந்துமுள்ள மாணவன் ஆவார்; நூதன சீஷனல்ல; மனித ஊகங்களின், கற்பனைகளின், ஆங்கில இஸ்ரயேலிய வாதத்தின், பொதுவுடைமைக் கோட்பாட்டின், அரசியலின், வானசாஸ்திர கூற்றுகளின் அல்லது ஆவிக்குரிய பிரயோஜனத்திற்கு ஏதுவாயிராமல், கேட்பவர்களைக் கவிழ்த்துப்போடும் ஏதோ ஒன்றின் போதகன் அல்ல (2 தீமோத்தேயு 2:15-17; 1 தீமோத்தேயு 4:7; 6:20இ 21); மாறாக

(8) அவர் ஒரே கர்த்தரை, ஒரே விசுவாசத்தை, ஒரே ஞானஸ்நானத்தை, அனைவருக்குமாகக் கொடுக்கப்பட்டுள்ளதான ஒரே பலியின் அடிப்படையின் படியானதும், அங்கீகரிப்பின்படியானதுமான ஒரே சுவிசேஷத்தை முன்வைத்து, சபையாருடைய விசுவாசத்தையும், குணலட்சணத்தையும் ஸ்திரப்படுத்திட வேண்டுமென்ற நாட்டத்துடன் உங்களிடத்தில் வருகின்றார்.

எங்களுக்கு அவர் எழுதினபோது, தேவனுடைய கிருபையினால் ஏற்கெனவே தான் இத்தகுதிகளைப் பெற்றிருப்பதாகவும், அவைகளைத் தனது கிரியைகளிலும,; வார்த்தைகளிலும் மற்றும் எண்ணங்களிலும் பூரணப்படுத்துவதற்குத் தினந்தோறும் தான் முயற்சித்துக்கொண்டிருப்பதாகவும் அவர் எங்களுக்கு உறுதிப்படுத்தினார் மற்றும் இந்தக் கடிதத்தை மற்றவர்களுக்குக் காண்பிப்பதன் வாயிலாக, அதே அறிக்கையினை அவர் மற்றவர்களுக்கும் அறிவிக்கின்றவராய் இருப்பார்.

விலையேறப்பெற்ற இரத்தத்தில் விசுவாசமாயிருக்கும் முழுமையாய் அர்ப்பணம் பண்ணியுள்ள விசுவாசிகள் அனைவருக்கும் பொருந்துகின்ற நமது கர்த்தருடைய வசனத்தினால் உண்டான பொதுவான ordination / ஏற்படுத்துதல் மற்றும் commission / பொறுப்பு ஒப்படைக்கப்படுதலின் கீழாக அவர் உங்களிடத்தில் கடந்து வருகின்றார் (மத்தேயு 28:19,20; ஏசாயா 61:1-3); மேலும் மேலே இடம்பெறும் 8 விசேஷித்த தகுதிகளின் காரணமாக – நீங்கள் சத்தியத்தின் அறிவிலும், அதை நடைமுறைப்படுத்துவதிலும் கட்டியெழுப்பப்படத்தக்கதாகவும், உங்களது சிரமங்களில் நீங்கள் உதவப்படத்தக்கதாகவும், இந்தத் தீங்குநாளில், சாத்தானுடைய தந்திரங்களுக்கும், அவனது திரளான வஞ்சனைக்குரிய தப்பறைகளுக்கு எதிராய் எதிர்த்து நீங்கள் நிற்பதற்கு உதவப்படத்தக்கதாகவும், நாங்கள் அவரைக் குறிப்பாய் உங்களுக்குப் பரிந்துரைக்கின்றோம். [R1721 : page 331] வாயின் வார்த்தைகள் வாயிலாகவும், அச்சடிக்கப்பட்ட பக்கங்கள் வாயிலாகவும் நீண்டகாலங்களாக உங்கள் அயலகத்தார் மத்தியில் நீங்கள் பொறுமையாய் விதைத்துக்கொண்டு வந்ததான சத்தியத்தின் நல்விதைகள் சிலவற்றை – அவர் வந்து மீதி கேள்விகளுக்கு விடையளிப்பதன் வாயிலாகவும், அயலகத்தாரில் உள்ளவர்களைச் சத்திய அறிவில் திருப்தியும், உறுதிப்படுத்துவதன் வாயிலாகவும், தண்ணீர் பாய்ச்சி அவ்விதைகளில் [R1721 : page 332] சிலவற்றை வளர்ச்சியடையப்பண்ணிடுவார் என்றும், “பரிசுத்தமாக்குதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தும்” ஜீவியம் முழுவதுமான மாபெரிய வேலையனைத்திலும் உங்களை ஆதரித்திடுவார் என்றும் நாங்கள் நம்புகின்றோம்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ளது போன்று அவர் பரிசுத்த வேதவாக்கியங்களுடைய போதனைகள் மற்றும் கட்டளைகளுக்கு இசைவாக, அடையாளமான ஞானஸ்நானத்தைக் கொடுத்திடுவதற்கும் மற்றும் நமது கர்த்தருடைய மரணத்தை நினைவுகூருவதில் அல்லது ஆராதனையில் அல்லது வேதாகம ஆராய்ச்சியில் – “விசுவாச வீட்டாருடைய” கூடுகையில் வழிநடத்திடும் பங்கைச் செய்திடுவதற்கும் முழு அங்கீகாரமுடையவராய் இருக்கின்றார்; ஆனாலும் இந்த ஊழியத்திற்கான விசேஷித்தத் தகுதிகளானது கொடுக்கின்ற அங்கீகாரம் தவிர மற்றபடி, அர்ப்பணிக்கப்பட்ட எந்தவொரு விசுவாசியைப் போலவே இவருக்கும், மேல் பத்தியில் குறிப்பிடப்படும் commission / பொறுப்பின் கீழ், எந்த மேலான அதிகாரமும் காணப்படுகிறதில்லை. எங்களது அறிமுகக் கடிதத்துடனும், பரிந்துரையுடனும் உங்களிடத்தில் வரும் அவர் – உள்ளூர் வழிநடத்துனர் இதே மாதிரியான பரிந்துரையின் கடிதத்தைப் பெற்றிருப்பினும் – வந்திருக்கும் அவர் அங்குத் தங்கிக் காணப்படுவது வரையிலும் எந்தவொரு கூட்டங்களிலும் அவர் தலைமைத் தாங்கிடலாம் என்பதில் ஐயமில்லை. அவரை அன்பின் ஆவியிலும், கிறிஸ்தவ ஐக்கியத்திலும் ஏற்றுக்கொண்டு, உங்கள் ஜெபம் மற்றும் ஒத்துழைப்பின் வாயிலாக அவருக்கு ஆதரவாயிருங்கள் (கொலோசெயர் 1:7; 4:7-9; பிலிப்பியர் 4:3). எனினும் அவரால் முன்வைக்கப்படும் ஒவ்வொரு காரியங்களையும் கவனமாய்க் கர்த்தருடைய வார்த்தையைக்கொண்டு சோதித்தறிந்துகொள்ளுங்கள். நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள் (1 தெசலோனிக்கேயர் 5:21).

இராஜாதி இராஜனுக்கும், கர்த்தரும் , மீட்பரும், சபையின் தலையானவருமான கிறிஸ்துவுக்குமான அன்பிலும், ஊழியத்திலும்

உங்களது அன்புக்குரிய ஊழியக்காரர்கள்,
Zions Watch Tower Tract Society.

{Corporate}…………………………
President.
{seal}……………………………..
Secretary.