R3795 (page 186)
மத்தேயு : 18-1-14
மறுரூப மலையின் சம்பவத்தின்போது, கர்த்தரோடுகூட அங்குக் காணப்படாத சீஷர்கள், தரிசனத்தைப் பார்த்திட்டவர்களும், அதைப் பிற்பாடு தங்களுக்குத் தெரியப்படுத்தினவர்களுமானவர்கள் மீது கொஞ்சம் பொறாமை அடைந்தனர். இது மலையில் கர்த்தரோடுகூடக் காணப்பட்டதான பேதுருவும், யாக்கோபும், யோவானும் இராஜ்யம் ஸ்தாபிக்கப்படுகையில் மற்றச் சீஷர்களைக் காட்டிலும் மிக அதிகமாய்ச் சலுகைகள் பெற்றுக்கொள்வார்கள் என்பதைக் குறிக்கக்கூடுமோ? இயேசுவுக்குப் பின் சற்றுத் தொலைத் தூரத்தில் அவர்கள் பிரயாணம்பண்ணிக்கொண்டிருக்கையில், வரவிருக்கின்ற இராஜ்யத்தில் யார் பெரியவராய் இருப்பார் என்பது தொடர்பான வாக்குவாதம் சூடேறியது. அவர்களது வாக்குவாதங்கள் என்ன என்பதை நமது கர்த்தர் அப்போதே அறிந்திருந்தார் மற்றும் மிகவும் தவறாய்க் காணப்படுபவர்களை மட்டும் தனித்துக் கடிந்துகொள்வதற்குப் பதிலாக அவர் இக்காரியத்தினைப் பொதுவான படிப்பினையாகவும், யாவருக்கும் பிரயோஜனமாகவும், உதவிகரமாகவும், பலப்படுத்துகிறதாயும் இருக்கும்படி செய்தார். அவரது மாதிரியானது அவரது பின்னடியார்களுக்கு விலையேறப் பெற்றதாய் இருக்கின்றதல்லவா? நாமும் முடிந்தமட்டும் தனி மனித பண்புகளையும் மற்றும் தனிப்பட்ட ஏதேனும் ஒரு நபரையும் குறித்து விசேஷமாய்க் குறைகூறுவதை / விமர்சனத்திற்குள்ளாக்குவதைத் தவிர்ப்பது ஞானமான காரியமாய் இருக்குமல்லவா? மனுக்குலம் யாவரிடத்திலும் குற்றங்களும், குறைகளும், ஒருவருக்கு ஒன்றிலும், இன்னொருவருக்கு இன்னொன்றிலும் காணவேபடுகின்றது மற்றும் விசேஷமாகக் கடுமையாய்க் கண்டிப்பதற்கெனக் கிறிஸ்துவின் சரீரத்தில் ஒருவரைத் தனியாகப் பிரிப்பது ஞானமாய் இருந்ததில்லை; இத்தருணத்தில் ஆண்டவர் செய்ததுபோன்று செய்வது நலமானதாய் இருக்கும் -அதாவது அனைவருக்கும், தவறுச் செய்தவருக்கும், தங்களின் கண்ணோட்டங்களிலும், முடிவுகளிலும் கிட்டத்தட்ட சரியாய்க் காணப்படுபவர்களுக்கும் கூட உதவிக்கரமாய் இருக்கும் விதத்தில் அவ்விஷயம் குறித்த பொதுவான படிப்பினையைக் கொடுப்பதாகும்.
தற்காலத்தில் சபையானது, இராஜ்யமானது – கருநிலைமையில், இன்னும் மகிமைப்படுத்தப்படாமல், உலகத்தால் அடையாளம் கண்டுகொள்ளப்படாமல் காணப்படுகின்றது; ஆனால் சபை ஒருவர் இன்னொருவரினாலும், கர்த்தரினாலும் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுள்ளது. சகோதரர் மத்தியில் தாழ்மையும், குழந்தைக்கு ஒத்த தன்மையும், கர்த்தருடைய கண்ணோட்டத்தின்படி உண்மையான மேன்மைக்கான அடையாளமாக மதிக்கப்பட வேண்டும். குழந்தைக்கு ஒத்த தன்மையுள்ள வகுப்பாரைச் சேர்ந்தவர்கள் – பூமியின் குடிகள் யாவையும் ஆசீர்வதிக்கும் தேவனுடைய பிரதிநிதியென இராஜ்யமானது வல்லமையிலும், மகா மகிமையிலும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கையில், எதிர்க்காலத்தில் – மிக உயர்வாய்க் கனப்படுத்தப்படுவார்கள் என்பதில் நிச்சயமே.
தாழ்மையுள்ளவர்கள், கற்பிக்கப்படத்தக்கவர்கள், எளிமையானவர்கள், மாய்மாலமற்றவர்கள் – பெரியவர்களென எண்ணப்பட வேண்டும் எனும் இக்கருத்திற்கு இசைவாக, அனைத்துச் சபைகளிலும், கர்த்தருடைய ஜனங்கள் அடங்கின அனைத்துக் கூட்டங்களிலும், சபையில் மூப்பர்த்துவத்திற்கும், முதன்மையான ஊழியங்களுக்கும் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், சபையாரிலேயே மனதிலும், நடத்தையிலும் மிகத் தாழ்மையாய்க் காணப்படுபவர்கள் மத்தியிலிருந்து எடுக்கப்பட்டவர்களாக இருப்பதைக் காணவே நாம் எதிர்ப்பார்த்திட வேண்டும். ஆனால் இப்படி இல்லாமல் வேறு நிலைமைக் காணப்படுமானால், அது நம்முடைய இப்பாடத்தினுடைய சம்பவம் தொடர்பான கர்த்தருடைய கருத்தினைச் சபையார் சரியாய்ப் புரிந்துகொள்ளவில்லை மற்றும் உணர்ந்துகொள்ளவில்லை மற்றும் அதற்குக் கீழ்ப்படியவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கும்.
எனினும் இது ஐந்து தாலந்துகளையுடைய சகோதரன் அவற்றைக்குறித்து முற்றிலும் உணர்வற்றவராகவும், அவற்றைப் பயன்படுத்தாமல் அலட்சியம் பண்ணுபவராகவும் காணப்பட வேண்டும் என்று குறிப்பதாகாது. இது இவர் சகோதரர் மத்தியில் வேறு சிலர் கொஞ்சம் தாலந்துகளை உடையவர்களாய் இருக்கின்றனர் என்ற காரியத்திற்குக் கண்களை மூடிக்கொண்டிருக்க வேண்டுமென்று குறிப்பதாய் இராது; மாறாக இது இவர் தனது தாலந்துகள் சம்பந்தப்பட்ட விஷயத்தில், அதைக் கர்த்தருடைய காரணங்களுக்கடுத்த நன்மைக்காகப் பயன்படுத்திட வேண்டும் என்ற விருப்பத்தை மாத்திரமே கொண்டிருக்குமளவுக்கு, அத்தகையதொரு அன்பையும், அத்தகையதொரு தாழ்மையையும் பெற்றிருக்க வேண்டுமென்று குறிக்கின்றதாய் இருக்கின்றது; இன்னுமாக தன்னுடைய தாலந்துகளை – தனிப்பட்ட இலட்சியங்களுக்காகவும், தற்பெருமையாய்ப் பேசுகிறதற்காகவும் அல்லது தன்னுடைய தாலந்துகள் மாத்திரம் அடையாளம் கண்டுகொள்ளப்படத்தக்கதாக, மற்றவர்களுடைய தாலந்துகளை, வாய்ப்புகளை மற்றும் சிலாக்கியங்களை நசுக்கிட நாடிடுவதற்காகவும் – பயன்படுத்துவதற்கு ஒரு கணம்கூட இவர் சிந்தியாதளவுக்கு, இவர் மிகவும் தாழ்மையான மனதையும், கர்த்தருக்காக மிகுந்த வைராக்கியத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. இது இவர் ஐந்து தாலந்துகளை உடையவராய் இருப்பாரானால் மற்றும் சரியான, குழந்தைக்கொத்த தாழ்மையின் ஆவியினைப் பெற்றிருப்பாரானால், இவர் அருமையான சகோதரரிடத்தில் அப்படியொரு அக்கறைகொண்டிருந்து, கர்த்தருடைய முழுக்காரணத்திற்கடுத்த நன்மைக்காகவும், பல்வேறு சகோதர சகோதரிகளுடைய கட்டியெழுப்பப்படுதலுக்கும், பெலப்படுத்தப்படுதலுக்கும் மற்றும் பரஸ்பர பக்திவிருத்திக்கும் ஏதுவாய்க் காணப்படும் விதத்தில், அந்தச் சகோதர சகோதரிகளின் பல்வேறு தாலந்துகளானது உபயோகமாகத்தக்கதாகவும் – இவர் தன்னால் முடிந்த நியாயமான அனைத்தையும் செய்திடுவார் என்பதைக் குறிப்பதாய் இருக்கும்; இப்படியாகக் கிறிஸ்துவின் முழுச்சரீரமும், அதன் குறைவுகளையும், தேவைகளையும் மற்றும் விசுவாசத்திலும், நம்பிக்கையிலும், அன்பிலுமான ஆறுதல்களையும் சந்தித்துக்கொள்ளும்.