தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R3613 (page 248)

தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை

NOT HOLDING THE HEAD

கொலோசெயர் 2:18

கிறிஸ்துவினுடைய சரீத்தின் பெரிய எண்ணிக்கையான கூடுகைகளிலும், சொற்ப எண்ணிக்கையான கூடுகைகளிலும், அவர்களை அனைத்துக் காலக்கட்டங்களிலும் அச்சுறுத்திய தவறான மனோபாவத்திற்கு எதிராகவே, நமக்கு அப்போஸ்தலன் எச்சரிக்கை வழங்குகின்றார்; நமக்கு அல்லது சபையில் வேறுசில மனிதர்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தல் மற்றும் “தமது சரீரமாகிய சபைக்குத் தலையாக” இருக்கும் கர்த்தருக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்காமல் இருத்தல் எனும் அபாயத்திற்கு எதிராகவே அப்போஸ்தலன் நமக்கு எச்சரிக்கின்றார். சில அங்கத்தினர்கள் “கிறிஸ்துவே சபையாகிய சரீத்திற்குத் தலையானவர்” என்ற உண்மையினை மறந்துபோனவர்களாக, தலைக்குரிய ஸ்தானத்தை எடுத்துக்கொள்கின்றனர் மற்றும் இந்த மறதியின் விளைவாக தங்களைக்குறித்து மிகவும் அதிகமாய் எண்ணிக்கொள்பவர்களாகவும், கர்த்தருடைய நோக்கங்களுக்கடுத்த முழுப்பாரமும், பொறுப்பும் மற்றும் அழுத்தமும் தங்கள் மீதுதான் காணப்படுகின்றது என்று கற்பனை கோட்டைக் கட்டுகிறவர்களாகவும், தலைமைத்துவத்தினை மிகவும் அதிகமாய் எடுத்துக்கொள்பவர்களாகவும் ஆகிவிடுகின்றனர் என்று அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுகின்றார்.

இத்தகைய தவறான ஸ்தானம் எடுத்துக்கொள்ளுதலுக்கு அங்கீகரிப்பையும், ஆதரவையும் வழங்குகின்றதான சபையிலுள்ள முதன்மை வகுக்காத மற்ற அங்கத்தினர்களை எச்சரிக்கும் வண்ணமாக, அவர்களது இத்தகைய பணிந்து செல்லுதலானது மிதமிஞ்சினது என்றும், அவர்களுக்கும், அவர்கள் ஊழியம் புரிகின்றதான நோக்கங்களுக்கும் ஊறுவிளைவிக்கின்றதாய் இருக்கும் என்றும், தூதுவர்கள், செய்தியாளர்கள், சபையினுடைய பிரதிநிதியானவர்கள் என்பவர்கள் அவர்களது உண்மை, நற்கிரியை மற்றும் தாழ்மைக்குத்தக்கதாக உயர்வாய் எண்ணப்பட்டாலும், தொழுதுகொள்ளப்படக்கூடாது என்றும் அவர்களுக்கு உறுதிப்படுத்துகின்றார் (வெளிப்படுத்தல் 1:20; 2:1). தங்களை முற்றிலுமாய்ப் புறக்கணித்துப்போட்டு, இந்தத் தூதர்கள் அல்லது மூப்பர்கள் மீது பாரம், பொறுப்பு மற்றும் ஆளும் வல்லமை யாவற்றையும் வைத்துவிடும் இத்தகைய பணிவானது – சரியற்றது என்றும், கிறிஸ்துவுக்கு உண்மையற்று இருப்பதையும், அவரது ஏற்பாடுகளைச் சரியாய்ப் புரிந்துகொள்ள தவறியுள்ளதையும் சுட்டிக்காட்டுகின்றது என்றும் அப்போஸ்தலன் மற்ற அங்கத்தினர்களை எச்சரிக்கின்றார்.

எதிர் எதிராயுள்ள மிதமிஞ்சின நிலைப்பாடுகளிலுள்ள அபாயங்கள் – SUB HEADING

இப்படி எதிர் எதிராயுள்ள மிதமிஞ்சின நிலைப்பாட்டினைப் பெற்றிருக்கும் இருவகுப்பினரையும் கண்டித்தப் பிற்பாடு, அடுத்ததாக இவ்விருதரத்தாரின் பிரச்சனையானது, தலையானவரை – அதாவது சபையின் ஒரே உண்மையான தலையானவரை அவருக்கே உரிய கனம்கொடுத்து, பற்றிக்கொள்ள தவறுவதேயாகும் என்று விவரிக்க அப்போஸ்தலன் தொடருகின்றார். நம்மை நாமே உயர்த்திக்கொண்டு, சபையில் நமது கர்த்தருக்கான ஸ்தானத்தைப் பிடுங்கி எடுத்து மற்றும் அவரது வார்த்தைகளையும், ஏற்பாடுகளையும் புறக்கணித்து, அவரது ஊழியக்காரர்கள் என்று பெருமைக்கொண்டிருந்தாலும் சரி அல்லது இம்மாதிரியான விஷயங்களுக்கு அமைதியாய்ப் பணிந்துபோய், கர்த்தருடைய சரீரத்தில், அவரது ஸ்தானத்தைப் பிடுங்கி எடுத்துக்கொள்பவர்களை வணங்கிக்கொண்டிருந்தாலும் சரி, இருதரப்பிலுமே பிரச்சனை ஒன்றே – அதாவது உண்மையான தலையினைச் சரியாய் அடையாளம் கண்டுகொள்ள தவறுவதே ஆகும்.

கிறிஸ்துவே சபையின் தலையானவர் எனும் உண்மையினை நாம் ஏற்றுக்கொள்வோமானால், அதன் அடிப்படையில் அனைத்து விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடுவோமாக; நாம் உடன்படிக்கைப் பெட்டியினைச் சமநிலைக்குக் கொண்டுவர பிடிக்கவில்லையெனில், எல்லாம் துண்டுகளாக உடைந்துபோய்விடும் என்றோ, சீயோனின் எந்த ஒரு சிறு கூட்டத்திற்கடுத்த தெய்வீகத் திட்டம் தொடர்புடைய விஷயத்தில் நாம்தான் முக்கிய பிரதிநிதி என்றோ ஒரு கணம்கூட எண்ணிவிட வேண்டாம் (1 நாளாகமம் 13:10). இத்தகைய தற்பெருமையான எண்ணங்கள் யாவும் நம்முடைய இரட்சிப்பின் அதிபதி தொடர்புடைய விஷயத்தில் துரோக தன்மையுடையவையாக இருக்கின்றது, ஏனெனில் “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” என்று அவர் கூறியிருக்கின்றார் மற்றும் நாமும் அவரது வார்த்தையினை நம்புகின்றோம். கர்த்தர் தம்முடைய காரணங்களுக்காக ஊழியம் புரிவதற்கெனச் சபையில் ஏற்படுத்தியுள்ளதான, கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஒவ்வொரு அங்கத்தினனும் – தெய்வீகத் திட்டம் நடந்தேறுவதற்கு, முற்றிலும் தான் அவசியமற்றவன் என்றும், தெய்வீகத் திட்டத்தில் ஒரு பங்கினைத் தனக்கு அருளப்பெற்றிருப்பது சுத்த கிருபையே ஆகும் என்றும், தன்னால் ஏறெடுக்க முடிந்திட்டதான எந்தச் சிறு ஊழியங்களையும், பலிகளையும் மிஞ்சுமளவுக்கு நாள்தோறும் தனக்கான ஆசீர்வாதங்கள் காணப்படுகின்றது என்றும் உணர்ந்துகொள்ள வேண்டும். ஆகையால் அவன் தனது சகோதர சகோதரிகள் மத்தியில் ஓர் ஊழியக்காரனாக, தேவனுடைய மாபெரும் திட்டத்தில் ஏதேனும் பங்கினை பெற்றிடுவதற்கு, தான் அனுமதிக்கப்பட்டிருக்கின்றான் என்ற சிந்தனையால் இறுமாப்படையாமல், தாழ்மைகொள்ள வேண்டும் மற்றும் கர்த்தரே அவரது சபையின் தலையாக இருப்பதினால், நம்பிக்கைக்குப் பாத்திரமாய் ஒப்படைக்கப்பட்ட ஸ்தானங்களில், தாழ்மையுடன் காணப்படத் தவறும் யார் ஒருவரும் தாழ்த்தப்படுவார் மற்றும் தனக்கும், மற்றவர்களுக்கும் இழப்பாய் அநேகமாய்க் காணப்படும் விதத்தில் சிலாக்கியங்களையும், வாய்ப்புகளையும் இழந்துபோய்விடுவார் என்று அவன் தெளிவாய் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஒரு சகோதரன் தங்கள் மத்தியில் தன்னைத்தான் உயர்த்திக் கொள்வதற்கும் மற்றும் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ எண்ணிக்கையில் காணப்படும் கூடுகையினைக் குறித்து “என் சபை,” “என் பின்னடியார்கள்” என்று அவர் பேசிடுவதற்கும் அமைதியாய் அனுமதித்துக் கொண்டிருக்கும், அந்தத் தாழ்மையுள்ள சகோதரர்களும் சகோதரிகளும் அந்தச் சகோதரனுக்குத் தீங்கிழைக்கின்றவர்களாகவும், தவறாய் நடப்பதற்கு அவரை ஊக்குவிப்பவர்களாகவும் இருப்பது மாத்திரமல்லாமல், சபையின் உண்மையான தலையாய் இருப்பவருக்கும் உண்மையற்றவர்களாகி விடுகின்றனர். இம்மாதிரியான சூழ்நிலைகளுக்கும், வார்த்தைகளுக்கும் பணிந்துசெல்கின்றவன், “கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீனத்தை” சரிவர உணராமல் இருப்பதை நிரூபிக்கின்றான் – ஒன்றில் தான் “கிறிஸ்துவில் குழந்தையாய்” இருக்கின்றான் என்று அல்லது சபை மற்றும் சபையின் தலைக்குரிய கனம் தொடர்புடைய விஷயத்தில் உரிய விழிப்புக்கொண்டிருப்பதில் உறங்கிப்போய்விட்டான் என்று நிரூபிக்கின்றான். மனப்பூர்வமாய்ச் சொல்லப்படவில்லை என்று இம்மாதிரியான காரியங்களுக்கு விளக்கம் கொடுப்பதில் பிரயோஜனமில்லை. இம்மாதிரியான வார்த்தைகளும், உரிமைப்பாராட்டுதல்களும், ஏற்கெனவே ஏதோ சில கவலைக்கிடமான விஷயம் சம்பவித்துள்ளதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது; ஏனெனில் கிறிஸ்துவின் தலையைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக தன்னைக்குறித்துப் பேசுவதற்கோ, கர்த்தருடைய ஜனங்களைத் தன்னுடைய சபை என்று பேசுவதற்கோ, கர்த்தருக்கு உண்மையாய் இருக்கும் கிறிஸ்துவின் சபைக்கான எந்தத் தாழ்மையுள்ள மூப்பரும் எண்ணவே மாட்டார்.

இப்படியான வெளியரங்கமான குற்றங்களுக்கு வெளியரங்கமாக ஒப்புக்கொள்ளப்பட்டு மன்னிப்புக் கேட்கப்பட வேண்டும்; இல்லையேல் இத்தகைய வழிநடத்துபவர்கள் பின்னிருக்கைக்கு அனுப்பப்பட வேண்டும். எண்ணிப்பார்க்கப்பட முடியாதளவுக்கு அவருக்குப் பேச்சுத்திறமைக் காணப்பட்டாலும், பொது ஊழியங்களுகென வேறு எவருக்குமே தாலந்துகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தன்னைக் குறித்துத் தற்பெருமையடைந்து, சபையில் தலையானவருடைய ஸ்தானத்தை எடுத்துக்கொள்ளும் ஒருவனைக்காட்டிலும், சரீரத்திலேயே மிகவும் குறைவுள்ள, பெலவீனமான, மிகவும் சிறப்பற்ற நிலையிலுள்ள அங்கத்தினனே கர்த்தருடைய கணிப்பில் போதிப்பதற்கு நன்கு தகுதியுடையவனாய்க் காணப்படுவான். “கணுக்களாலும் கட்டுகளாலும் உதவிபெற்று இணைக்கப்பட்டு, தேவவளர்ச்சியாய் வளர்ந்தேறுகிற சரீரமுழுவதையும் ஆதரிக்கிற தலையைப் பற்றிக்கொள்ளாமல், மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப் பாருங்கள்” (கொலோசெயர் 2:18,19) எனும் அப்போஸ்தலனுடைய வார்த்தைகளைக் கவனியுங்கள்.

சுயம் முதலாவது, தேவன் இரண்டாவது – SUB HEADING

“மேலும் கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் (மற்றும் பொதுவாய் மேல் அதிகாரங்களுக்கும்) கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்க மில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்” என்று அப்போஸ்தலன் நமக்கு உறுதிப்படுத்துகின்றார் (2 தீமோத்தேயு 3:1-5).

இக்காட்சி நம்முடைய நாட்களில் பெயரளவிலான கிறிஸ்தவமண்டலத்திற்கு நன்கு பொருந்துகின்றதாய் இருக்கின்றது மற்றும் இந்த ஆவியானது அவ்வப்போது பரிசுத்தவான்களுடைய பாளயத்தை – உலகம் மற்றும் அதன் ஆவியினை ஜெயங்கொள்வதற்கென நாடிக்கொண்டிருக்கின்றதான அர்ப்பணிக்கப்பட்டவர்கள் அடங்கின சிறு கூட்டத்தினரைப் படையெடுத்துவர முற்படும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இது விஷயம் குறித்து அப்போஸ்தலன் இத்தனை அழுத்தத்துடன் எழுதுவது என்பது, அவர் சார்பில் அனுதாபக்குறைவு காணப்படுவதைச் சுட்டிக்காட்டுகிறதாய் இராது மற்றும் அவரது வார்த்தைகளை நாம் மேற்கோளிடுவது என்பது நம் சார்பில் அனுதாபக்குறைவு காணப்படுவதைச் சுட்டிக்காட்டுகிறதாயும் இராது என்பது உறுதியே. ஆனால் இப்பிரச்சனை என்பது, [R3613 : page 249] இத்தகைய இறுமாப்புடைய சகோதரருக்கு விசேஷமாய்த் தீங்கு விளைவிக்கிறதாயும், துன்பம் கொடுக்கிறதாயும் காணப்படும்; மற்றெல்லாவற்றைக்காட்டிலும் இது நிச்சயமாய் ஆவிக்குரிய சத்துவத்தினை அழித்துப்போட்டு, உபதேச ரீதியிலும் மற்றும் ஆவிக்குரிய ரீதியிலும் இருளுக்குள் வழிநடத்தி விடுகிறதாய் இருக்கும்.

கர்த்தருடைய ஜனங்களில் மிகுந்த தாலந்துடையவர்களாய் இருப்பவர்களைச் சூழும் இந்த அபாயத்திற்கு எதிராக அப்போஸ்தலனாகிய யாக்கோபு நம்மை எச்சரிக்கின்றார். “என் சகோதரரே, அதிக ஆக்கினை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக” (யாக்கோபு 3:1) என்று அவர் எழுதியுள்ளார். சகோதரருக்கான எங்களது அன்பின் காரணமாகவும், அவர்களைக்குறித்த எங்களது உயர்வான எண்ணங்கள் காரணமாகவும் மற்றும் அவர்களது ஊழியங்களை நாங்கள் மதிப்பதன் காரணமாகவும் மற்றும் தற்போது மாத்திரமல்லாமல், நித்தியமாய் எதிர்க்காலத்திலும் அவர்கள் கர்த்தருக்கான ஊழியத்தினைத் தொடர வேண்டும் என்ற எங்களது விருப்பத்தின் காரணமாகவுந்தான், தனிப்பட்ட விதத்திலல்ல, மாறாக பொதுவாய் இக்கருத்தினை அழுத்தி வலியுறுத்துவது அவசியமென நாங்கள் எண்ணுகின்றோம்.

சரீரத்தில் தாழ்மையான ஸ்தானங்களிலோ அல்லது குறிப்பிடத்தக்க ஸ்தானங்களிலோ கர்த்தரால் நியமிக்கப்படுபவர்கள் யாவரும், அப்போஸ்தலனுடைய வார்த்தைகளை நினைவுகூரும்படிக்கு – அதாவது நமது கர்த்தர் தம்மைத்தாமே தாழ்த்தி, பின்பு உயர்த்தப்பட்ட காரியமானது பிதாவின் திட்டத்தில் காணப்படும் கொள்கை ஒன்றினை விவரிக்கின்றதாய் இருக்கின்றது மற்றும் இதன் கீழ் அவரது இராஜரிக ஆசாரிய கூட்டத்தார் யாவரும், ஏற்றகாலத்தில் உயர்த்தப்படத்தக்கதாக தங்களைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில்கொள்ளும்படிக்கு நாம் வலியுறுத்துகின்றோம். “ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்” (1 பேதுரு 5:6) என்று அப்போஸ்தலன் கூறுகின்றார். உயர்த்தப்படுவதற்குரிய காலம் இதுவல்ல; தற்கால சூழ்நிலைகளின் கீழ் நம்மையோ அல்லது மற்றவர்களையோ நாம் உயர்த்த முற்படுவது என்பது விழுந்துபோவதற்கு ஏதுவான மகா ஆபத்திற்கு உள்ளாகிவிடுவதாயிருக்கும். ஆகையால் உண்மையும், தாழ்மையுமுள்ள இருதயமுடைய யாவரும், சுவிசேஷ யுகத்தினுடைய ஆரம்பம் துவங்கி, இவ்வகுப்பாருடைய பாதையில் மிக மோசமான இடறுதலின் கல்லாக இருந்துவந்துள்ள இக்காரியம் தொடர்புடைய விஷயத்தில் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து, ஜெபம்பண்ணக்கடவர்கள். அப்போஸ்தலர்கள் மத்தியிலேயே, இராஜ்யத்தில் யார் பெரியவராய் இருப்பார் என்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது என்பதை ஞாபகம்கொள்கின்றோம். அவர்களைக் கண்டிக்கும் வண்ணமாக நமது கர்த்தர்: “நீங்கள் பிள்ளைகளைப்போல் தாழ்மைக்கொள்ளாவிட்டால், இராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்” என்று கூறின வார்த்தைகளையும்கூட நாம் ஞாபகத்தில் கொண்டிருப்போமாக.

தாழ்மையுள்ளவர்கள் மாத்திரமே பாதுகாப்பாய் இருப்பார்கள் – SUB HEADING

இராஜ்யத்தில் இடம்பெறுவதற்கு மிகவும் அடிப்படையான அவசியங்களில் ஒன்றாக தாழ்மைக் காணப்படுகின்றது என்று இப்படியாக நமது கர்த்தர் சுட்டிக்காட்டுகின்றார். இதன் முக்கியத்துவத்தையும், இதற்கான காரணத்தையும் நம்மால் காணமுடிகின்றது. தனது தாழ்மையின் ஆவியினை முழுமையாய் நிரூபித்திடாத ஒருவரை இராஜ்யத்தின் மகிமைக்கும், கனத்திற்கும் மற்றும் அழியாமைக்கும் மற்றும் திவ்விய சுபாவத்திற்கும் உயர்த்திடுவது என்பது அந்நபர் இன்னொரு சாத்தான், இன்னொரு எதிராளியாக மாறிடுவதற்குரிய ஸ்தானத்தில் வைத்திடுவதாயிருக்கும் மற்றும் அந்நபர் ஒன்றன்பின் ஒன்றாக வஞ்சனைக்குள்ளாகி பிதாவினுடைய அர்ப்பணிக்ப்பட்டவர்களாய் உண்மையில் இருப்பவர்கள் யாவருக்குமான நமது பரலோகப் பிதாவின் ஏற்பாடுகளுடைய தயாளத்திற்கும் மிஞ்சி, திவ்விய கனங்களைப் பங்கிட்டுக்கொள்ள விரும்புகிறவராகிவிடுவார்.

இன்னும் அதிகக் காலமில்லை, பிரியமான சகோதரரே – பொறுமையாய் இருப்போமாக. விசுவாசமும் கொண்டிருப்போமாக; சந்தேகிக்கிறவர்களாக இருக்க வேண்டாம். சபையில் அதிகாரத்தினைப் பெற்றிடுவதற்கும், பயன்படுத்திடுவதற்குமான பிரயாசங்கள் அநேகமானவைகள், ஆரம்பத்தில் நல்நோக்கங்களுடனே, சபையினுடைய மேலான நலனுக்கடுத்தக் காரியங்களைச் செய்திடுவதற்கான விருப்பத்துடனே ஏறெடுக்கப்படுகின்றது. அத்தருணங்களில் தெய்வீகத் திட்டத்திற்கு நாம் எவ்வளவு அவசியமற்றவர்கள் என்றும், தெய்வீகச் சித்தத்திற்கு இசைவாக ஒவ்வொரு சூழ்நிலைகளையும், சந்தர்ப்பங்களையும் கர்த்தர் நன்மைக்கு ஏதுவாய் மாற்றிடுவதற்கு வல்லவராய் இருக்கின்றார் என்றும் உணர்ந்து கொள்ளுமளவுக்கு விசுவாசமானது போதுமான அளவுக்குப் பலமானதாய்க் காணப்படவில்லை. சபையின் காரியங்களை நிர்வகிக்கும் விஷயத்தில் கர்த்தருடைய வல்லமையின் மீது அதிகமான விசுவாசம் கொண்டிருத்தல் என்பது, தங்கள் சொந்த ஞானம் மற்றும் திறமையின் அடிப்படையில் சபையின் காரியங்களை நிர்வகிப்பதற்கு ஏதுவான அவரது ஜனங்கள் சிலரின் பிரயாசங்களைப் பெரிதும் எதிர்த்துச் செயல்படுவதாய் இருக்கும். அவர் தம்முடைய சித்தத்தின்படி அனைத்தையும் செய்திடுவதற்கு விருப்பமும், வல்லமையுமுள்ளவராக
இருக்கின்றார் என்பதை நினைவில் கொள்வோமாக. நமக்கான உயர்ந்த ஸ்தானம் என்பது தாழ்மை நிலையினை எடுத்துக்கொள்வதாக இருக்கின்றது என்றும், பெரிதான வெற்றி என்பது, சுயத்தை வெல்வதாய் இருக்கின்றது என்றும், நமது கர்த்தருடைய மற்றும் அவரது வார்த்தையினுடைய ஸ்தானத்தையும், அதிகாரத்தையும் பிடுங்கியெடுப்பதில் என்னதான் வெற்றியடைந்தாலும், அது இறுதியில் அனுகூலமற்ற விளைவையே நமக்குக் கொண்டு வரும் என்றும் நாம் நினைவில் கொள்வோமாக. ஆகவே நம்மைக் காத்துக்கொள்வதற்கும், சபையினுடைய நலனுக்கடுத்தக் காரியங்களுக்காகவும் மற்றும் கர்த்தரைக் கனம்பண்ணும் பொருட்டாகவும், நாம் சுயத்தை அடக்கிவைப்பது அவசியமாய் இருக்கின்றது. கவிஞனின் வார்த்தைகளை நாம் நினைவில்கொள்வோமாக மற்றும் அவற்றை தினந்தோறும் செயல்படுத்திடுவோமாக:

ஓ! ஒன்றுமில்லாதவனாய், ஒன்றுமில்லாதவனாய் ஆகிடுவதற்கு, எந்தனை தாழ்த்திடுவது மிகுந்த வலி தருவதாயினும்;
புழுதிமட்டும் எந்தனை தாழ்த்துகின்றேனே – அப்போதே
உலகம் எந்தன் இரட்சகரைக் காண இயலுமே.

ஒன்றுமில்லாதவனாய், ஒன்றுமில்லாதவனாக ஆக விரும்புகின்றேனே அவருக்கே உலகத்தின் துதிகள் எழும்பிட;
அவரே ஆசீர்வாதத்திற்கு ஊற்றாயிருக்கிறாரே,
ஆம், அவரே துதிக்குப் பாத்திரர்.”

“நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்” (2 கொரிந்தியர் 4:5) என்ற அப்போஸ்தலனுடைய வார்த்தைகளையும், மாதிரியையும் எப்போதும் நினைவில் வைத்திருப்போமாக.