ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R5384 (page 20)

ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை

Pastoral Advice On Prayer And Testimony

புதுச்சிருஷ்டிக்குத் தேவபக்தி உண்டாகும் வகையில் வாரம் ஒருமுறை விசேஷித்த கூடுகைகளாக ஜெபம் மற்றும் சாட்சியமளிக்கும் கூடுகைகள் தேவைப்படுகிறது. குறைந்தபட்சம் காலாண்டிற்கு ஒருமுறை ஓர் இரவுபொழுதாவது ஒதுக்கி, பொதுவான வகையில் ஜெபக்கூடுகைகளை ஏற்பாடு செய்தால் நமது நண்பர்களுக்கு அது மிகவும் ஆதாயமளிப்பதாக இருக்கும் என நாம் நம்புகிறோம். எங்களுடைய ஆலோசனையின்படி இம்மாதிரியான கூடுகைகளுக்கு காலாண்டு ஒன்றின் / மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மத்திய புதன்கிழமை மாலை வேளையைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது ஆகும்; இக்கூடுகை சாட்சிபகருதலைவிட பிரத்தியட்சமாக ஜெபத்திற்கு ஒதுக்குவதாக இருக்க வேண்டும். கூடுகையை நடத்துபவர் ஜெபத்தோடுகூடத் துவங்கி, பின் இரண்டு அல்லது மூன்று ஜெபங்களுக்காகச் சகோதரர்களை அழைக்கலாம். அதன்பின்பு அவ்வாரத்துக்குண்டான வசனப்பகுதியை வாசித்து, மூன்று நிமிடங்களாவது அவ்வசனப்பகுதியைக்குறித்து விவரிக்கலாம் அல்லது நபர்கள் மிகக்குறைவாக இருக்கும் பட்சத்தில் ஐந்து நிமிடங்கள் எடுத்துக்கொள்ளலாம். எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்பட்சத்தில் இரண்டு நிமிடங்கள் எடுத்துக்கொள்ளலாம். வசனங்களுக்கு விளக்கம் தரும் நேரமானது சபையின் எண்ணிக்கையின் அளவைப் பொறுத்ததாகும்.

பின்பு கூட்டத்தலைவர்: இந்த மாலைப்பொழுதானது விசேஷமாக ஜெபத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; நாம் அனைவரும் சந்தேகத்திற் கிடமின்றி அறிந்தபடி, ஒரு கிறிஸ்தவன் கர்த்தரை ஆராதிப்பதும், ஜெப துதிகளை ஏறெடுப்பதும் அவனுடைய விசேஷமான சிலாக்கியம் ஆகும். நாம் இருதயப்பபூர்வமாக விசுவாசித்து, வாயினாலே அறிக்கை செய்கிறோம். இக்கூடுகையில் ஒவ்வொருவராகப் பெயர்ச்சொல்லி அழைக்காமல், வந்துள்ள அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்பதே நமது விருப்பமாகும். ஒரு சில வார்த்தைகளே கூறமுடியுமாயின் அது ஒரு காரியமல்ல. ஆனாலும் ஜெபமானது மிக நீண்ட ஜெபமாக இருக்கக்கூடாது என்கிற கருத்தை நாம் வலியுறுத்துகிறோம். இப்பொழுது நாம் இரு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி எழுந்துநிற்க வாய்ப்புத்தருவோம். அதன்பின்பு ஒரு கீர்த்தனையைப் பாடலாம். கீர்த்தனையைத் தொடர்ந்து ஒரு சகோதரர் மற்றும் சகோதரிக்கு ஜெபிக்க (கூடுகையில் நிலவும் சூழ்நிலைக்கேற்ப) வாய்ப்புத் தந்து, இவ்விதமாக அனைவருக்கும் வாய்ப்புத் தரலாம்.

ஜெபிக்கும் இந்த சிலாக்கியத்தைப் பயன்படுத்தும்போது கர்த்தருடைய பிள்ளைகள்மேல் பெருத்த ஆசீர்வாதம் வரும் எனக் காண்கிறோம். இவ்விதமாக அநேகர் உற்சாகப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் அநேகர் தங்களுடைய வாழ்க்கையின் இதுபோன்ற அனுபவங்களை முன்பு பெற்றிருக்கவில்லை.[R5384 : page 21]

இவ்விதமாக காலாண்டிற்கு ஒருமுறை / மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஜெப ஆராதனையானது, மாதம் ஒருமுறை நடத்தப்படுவதைக் காட்டிலும், இந்த நோக்கத்தை அதிகம் நிறைவேற்றுகிறதாயிருக்கிறது என நினைக்கிறோம். காலாண்டு ஒன்றில் ஒருமுறைக்கு மேலாக இக்கூடுகைகள் நடத்தப்படுமாயின் கடினமானதொன்றாயிருக்கும். அம்மாதிரியான ஒழுங்குமுறை எந்தவொரு சபையிலும் பின்பற்றப்பட்டால், அது மாற்றப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கிறோம்.

மாதிரியான சாட்சியக் கூட்டம்

வார இடையிலான கூடுகை, துதி செய்வதற்கும், சாட்சி பகருதலுக்குமான கூடுகையாக ஒதுக்கப்பட வேண்டும். முன்பு கூறப்பட்டதுபோல தன்னுடைய தனிப்பட்ட அனுபவங்களை எடுத்துரைப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள ஒரு கிறிஸ்தவனுக்கு விசேஷபக்தியுண்டாக்கும் கூடுகைகள் தேவை. சமீபகால சாட்சிகள் மிகவும் உதவிகரமானது. கர்த்தருடைய எல்லா ஜனங்களுக்கும் சோதனைகளும் கஷ்டங்களும் உள்ளது. ஒருவர் மற்றொருவருடைய அனுபவங்களைக் கேட்கும்போது, ஒருவர்மேல் ஒருவர் பரிவிரக்கம் கொள்ளக் கற்றுக்கொள்கிறோம்.

அம்மாதிரியான கூடுகைகள் ஒன்று அல்லது இரு கீர்த்தனைப் பாடல்களோடு ஆரம்பித்து, பின் ஒன்று அல்லது அதிகமான சுருக்கமான ஜெபங்கள் செய்யப்பட வேண்டும். கூடுகையை ஆரம்ப ஜெபத்தோடு துவங்கும் சகோதரர், கூடுகை ஆரம்பிக்கும் முன்பே என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும். துவக்க ஜெபமானது கூடி வந்திருக்கிறவர்கள் சரியான மனநிலையோடு கர்த்தருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, அவர்கள் இருதயத்திலும், மனதிலும் தெய்வீக ஆசீர்வாதத்தைப் பெறும்படியான விண்ணப்பமாக இருக்கவேண்டும்.

உதாரணமாக, மாலை வேளைக்கான வசனப்பகுதியானது, “ஆகையால் ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள் என இருக்குமாயின், கூட்டத்தலைவர் இவ்விதமாகக் கூறலாம்: இவ்வாரத்திற்கான நம்முடைய வசனப்பகுதியானது இதோ (மேற்கூறிய வசனத்தை வாசிக்கவும்) தேவனுடைய பார்வையில், அவருடைய ஜனங்களில் யாரொருவரும் பெற்றிருக்கவேண்டிய குணநலன்களில் தாழ்மையானது மிக முக்கியமான ஒன்றாகும். தாழ்மையை நாம் உடையவர்களாக இருந்தால் தேவனுடைய பார்வையில் அவரை நாம் பிரியப்படுத்துகிறோம் என்று முழு வேதாகமமும் சுட்டிக்காண்பிக்கின்றன. மேலும், நாம் இக்குணத்தைப் பெற்றிருந்தாலொழிய தேவனுடைய இராஜ்யத்திற்கு தகுதியடைய முடியாது. இக்குணத்தின் தேவையிலுள்ள ஞானத்தையும் நம்மால் கவனிக்கமுடிகிறது. தேவன் ஒருவேளை தாழ்மை இல்லாதவர்களை உன்னத நிலைமைக்கு உயர்த்தவேண்டியிருப்பின், பரலோகத்தில் மேலும் ஒரு பிரச்சனைக்கு அது வழிவகுக்கும்.

சாத்தானானவன் தன்னைத் தேவனுக்கு முன்பாக முறையாக ஒப்புக்கொடுத்து கீழ்ப்படுத்தினவனல்ல எனக் காண்கிறோம். அவன் இந்த மேட்டிமையான நிலையை அடைந்தவுடன், தேவனைவிட தான் சிறப்பாகச் செயல்படமுடியும் என அநேகமாக எண்ணியிருக்கக்கூடும். இவ்வெண்ணத்தைக் காண்பிக்கும் பொருட்டு அவன் எடுத்த முயற்சியில் தனக்குத்தானே வீழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், மனுக்குலத்தின்மேல் பாவம் மற்றும் மரணத்தைக் கொண்டுவந்தான். பிதாவின் சித்தத்திற்குத் தம்மை முற்றிலும் ஒப்புக்கொடுத்த இயேசுவைக் காண்பிக்கவேண்டியது தேவனுக்கு அவசியமாயிற்று. இவ்விஷயத்தில் இயேசுவினுடைய பாதையை நாம் காண்கிறோம், பின் பிதாவானவர் அவரை எவ்வாறு உயர்த்தினார் என்பதையும் காண்கிறோம். நாமும் தெய்வீக வழிநடத்துதலின்படி நமக்கு வருகிற ஒவ்வொரு காரியத்திலும் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். “ஆகையால் ஏற்ற காலத்திலே தேவன் நம்மை உயர்த்தும்படிக்கு அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.

இப்பொழுது, அன்பிற்குரிய நண்பர்களே, நீங்களும்கூட ஒருவேளை இவ்வாரத்தில் தாழ்மையின் அடிப்படையிலும் அல்லது அதன் எதிர்மறையாகிய பெருமையின் அடிப்படையிலும் பெற்ற அனுபவங்களை எங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். இது வசனத்தின் மீதான விளக்கவுரையாக இருக்கக்கூடாது. இந்த வசனப்பகுதியின் அர்த்தத்தை நாம் ஏற்கெனவே அறிந்திருக்கிறோம். உங்களுடைய சொந்த அனுபவங்களையே பகிர்ந்துகொள்ள நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் பெற்ற அனுபவங்களில் எந்த அனுபவம் உங்கள் மனதை இந்த வசனப்பகுதியோடு ஈர்த்ததாக எண்ணுகிறீர்கள்? உங்களுடைய சொந்த அனுபவங்களிலிருந்து சிறுபகுதியை நாங்கள் பெற்றுக்கொள்ளலாமல்லவா! நாம் இப்பொழுது சகோதரர் A -யினிடமிருந்து அறையின் இருபக்கமும் உள்ள சகோதரர்களில், மாறி மாறி எல்லோரும் பங்கேற்கும்படி கடந்துசெல்லலாம். சகோதரரே, இப்பொழுது உங்கள் சாட்சியைத் தருகிறீரா?

இரட்டிப்பான பலனை எவ்வாறு பெறுவது?

சாட்சிபகர ஒருவரை முன்வரிசையிலும் மற்றொருவரை பின்வரிசையிலுமிருந்து அழைக்கும்போது, இரட்டிப்பான பலனை நாம் பெறலாம். சாட்சியானது ஒருமுனையிலிருந்து ஆரம்பிக்கும்போது, தூரத்தில் உள்ளவர்கள் தங்களுக்கான வாய்ப்பானது நீண்ட நேரமாகாமல் வராது என நினைக்கத்தோன்றும். அதினால் அருகிலுள்ள ஒருவரையும், பின் தூரத்திலுள்ளவரையும் அழைக்கும் முறையை கடைப்பிடித்தோமானால், அது எல்லோரையும் ஜாக்கிரதையாக இருக்கச் செய்வதுடன், முழுக்கூடுகையிலும் அவர்களை விழிப்புடன் இருக்கச்செய்யும்.

ஒரு சாட்சியக்கூட்டத்தை நாமே நடத்தும்போது, ஒரு நல்ல சாட்சியத்தோடு ஆரம்பித்து நல்ல சாட்சியத்தோடு முடிக்கவேண்டும் என்ற எண்ணத்தை நாம் சிந்தையில் நிறுத்தவேண்டும். ஆகவே நாம் நல்ல மற்றும் பரவலாக எழுச்சியூட்டும் வகையில் சாட்சிபகரும் ஒருவரோடு துவங்கும்போது, ஆரம்பத்திலேயே நல்ல உத்வேகத்தைத் தரமுடியும். துவக்கப்பாடலை நாம் பாடும்போதே எந்தச் சகோதரன், எந்தச் சகோதரி துவங்க அல்லது முடிக்கவேண்டும் என்பதை மனதில் கொள்ளவேண்டும். அப்போது நாம் நல்ல துவக்கத்தை மற்றும் நல்ல நிறைவைப் பெற்றிருக்கிறோம் என உறுதிகூறமுடியும்.

சாட்சி பகருகின்றபோது யாரேனும் இடையில் சிறிது ஸ்தம்பித்து, பின் எப்படித் தொடர்வது எனத் தெரியாமல் இருப்பாராயின், நாம் எவ்விதம் நிலைமையைச் சீராக்குவது எனில்: சகோதரரே (அல்லது சகோதரியே) உங்கள் அனுபவம் அப்படியாய் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டோம் என்று கூறலாம். அவர் அந்தச் சாட்சியை முடிக்கமுடியாமல் உள்ளார் என நாம் நினைத்தால், அவரது கருத்துக்கள் என்று நாம் அனுமானிப்பவைகளை அவருக்காக கூறி முடிக்க வேண்டும். நாம் இதைச் செய்யக்கூடியவராக இருக்கவேண்டும். கூட்டத்தலைவர் ஒருவர் இதைச் செய்ய முடிபவராக, அச்சகோதரரை அன்புடன் உற்சாகப் படுத்துகிறவராக இருப்பார்.

அந்தச் சகோதரரோ, சகோதரியோ: இதுவல்ல! என்று சொல்லுமளவுக்கு வேறுவிதமான கருத்தை நாம் சொல்லாமலிருக்க கவனமாயிருக்கவேண்டும். மாறாக நாம் கொடுக்க முயற்சிக்கும் கருத்தானது சகோ. ரசல் அவர்கள் என் எண்ணத்தைப் புரிந்துகொண்டார் என்று கூறுமளவுக்கு இருக்கவேண்டும். மாறாக நாம் ஒன்றும் கூறாமலோ அல்லது கடுகடுப்பாகவோ இருந்தோமானால், அந்தச் சகோதரன் (குறிப்பாகச் சகோதரிகள்) அடுத்தமுறை மிகவும் சோர்வடைவதுடன், அமைதியாக இருப்பதே மேல் என்று நினைப்பார்(ள்).

ஒரு சாட்சியக்கூடுகையில், 60-இல் இருந்து 100 பேர் வரைக் கூடிவரும்போது, அது உதவிகரமான கூடுகையாக அமைய வாய்ப்பு இருக்காது. பன்னிரண்டிலிருந்து பதினைந்து வரையே மிகவும் பயனுள்ள எண்ணிக்கையாகும். அப்போது போதுமான அளவு வித்தியாசமான அனுபவங்களும் கிடைக்கும். சாட்சிபகர ஒவ்வொருவருக்கும் அதிகநேரம் கிடைக்காவிட்டாலும், எல்லோருக்கும் சாட்சிபகரப் போதுமான நேரம் கிடைக்கும்.

முதலாவதாகச் சாட்சி பகருகிறவர், அவருடைய சாட்சியில் ஒருவேளை தவறான கருத்தோ அல்லது நடவடிக்கையோ எடுத்திருப்பாராயின், ஒருவேளை அவர் இவ்வாறு கூறலாம்: இவ்வாரம் நான் ஒரு போதகரைச் சந்தித்து உரையாடினேன்; அவர் வேதத்திலுள்ள எல்லாவற்றையும் அறிந்திருப்பவராகத் தன்னை எண்ணிக்கொண்டிருக்கிறார். நான் அவரிடம் பல கேள்விகளைக் கேட்கும்போது அவரால் பதில் சொல்லமுடியவில்லை. மேலும் அதை எல்லா ஜனங்களும் பார்க்க நேர்ந்தது!

இப்பொழுது கூட்டத்தலைவர் அவரிடம் என்ன கூறலாம் என்றால்: “சகோதரரே, நீங்கள் நல்ல நோக்கத்தில் செய்திருக்கிறீர்கள் என்பதில் எனக்கு எவ்வித ஐயப்பாடும் இல்லை ஆனால் நீங்கள் ஞானமாகச் செயல்பட்டுள்ளீர்கள் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியாது. இதை நீங்கள் இதமாகச் செய்திருந்தால் நலமாக இருக்கும். நாம் முரட்டுத்தனமாக இருக்கக்கூடாது. மாறாக நம்மை எதிர்ப்பவரை இதமாகவும், சாந்தமாகவும் அறிவுறுத்த வேண்டும். இம்மாதிரியான காரியங்களை ஏற்றுக்கொள்ள, அநேக வருடம் போதகராக இருப்பவர்களுக்கும், படிப்பிலும் கனத்திலும் உயர்வாக உள்ளவர்களுக்கும் மிகவும் கடினம் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும். ஆகவே பகைமையைத் தூண்டாத வகையில் நீங்கள் இருமடங்கு ஜாக்கிரதையுள்ளவர்களாய் இருக்கவேண்டும். இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் இதமான, சாந்தமான ஒரு சிறுவார்த்தையைப் பயன்படுத்தலாம். நீங்கள் பேசினதுபோல் பேசி இருந்தால், அந்த ஊழியக்காரர் உங்களிடத்தில் போதுமான அளவு தாழ்மை இல்லை என எண்ணி இருந்திருக்கக்கூடும் என்று கூறலாம்.

வேறு ஒருவர் ஒருவேளை வேறுவகையில் குழப்பிக்கூறுபவராக இருக்கலாம். நன்கு சாட்சிபகரும் கலையைச் சாட்சிக்கூட்டத் தலைவர்கள் சபையில் வளர்க்கவேண்டும். இதைக்குறித்து அவர்கள் சரியான யோசனைகளை உடையவராக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் சபை ஜனங்கள் வரக்கூடிய கூட்டங்களில், என்ன நேர்ந்தாலும் முறையான எண்ணங்களோடு கையாளுவார், இந்த வகையில் அவர்களது மனதும் நிலைவரப்படுத்தப்படும். [R5385 : page 21]

சாட்சிக் கூட்டமானது ஒரு சொற்பொழிவுக்கல்ல

யாராவது ஒருவர் இக்கூடுகையில் பிரசங்கம்பண்ண முற்படுவாராயின், கூட்டத்தலைவர்: “மன்னிக்கவேண்டும் சகோதரா, இது பிரசங்கம் செய்வதற்கான கூடுகையல்ல, இது சாட்சிபகரும் கூடுகை ஒருவேளை வேறொரு சமயத்தில் நீங்கள் நீண்ட நேரம் சத்தியஉரை நிகழ்த்தலாம் எனக் கூறலாம்.

சாட்சிபகருதல் என்றால் என்ன என்பதைக்குறித்த விளக்கம் கூட்டத்தலைவர் தந்தால் அது நலமானதாயிருக்கும். அதுகுறித்து பின்வருமாறு: சாட்சியம் என்றால் என்ன என்பதைப்பற்றி ஓரளவிற்கு நாம் தெரிந்திருக்கிறோம். அது ஒரு வசனப்பகுதியின் மேலான சத்திய உரையோ அல்லது விளக்கவுரையோ அல்ல. இக்கூடுகை விசேஷமாகச் சாட்சி பகருதலுக்கே. நான் இந்த மாலைப்பொழுதிற்கான வசனப்பகுதியின் விளக்கவுரையைத் துவக்கத்திலேயே தருகிறேன் என்று கூறினபின்பு, சகோதரருடைய சொந்த அனுபவங்களை அவர்கள் கூறுவதைக் கேட்கலாம். [R5385 : page 22]

நண்பர்கள் அனைவரும் இவ்விஷயத்தை நன்கு புரிந்திருப்பார்கள் என நம்புகிறோம். யாதொரு விஷயம் துல்லியமான முறைமையின்றி இருப்பின், அது முறைமைக்குப் புறம்பானதாக அவர்களால் காணப்படவில்லை என எடுத்துக்கொள்ளலாம். ஆனால் கூட்டத்தலைவரோ அவ்வசனப்பகுதியை வாசித்து, அதின் அர்த்தத்தை, ஒருசில வார்த்தைகளில் குறிப்பிடலாம். அதன்பின்பு சாட்சிகள் கேட்கப்பட்டு, என்ன எதிர்ப்பார்க்கப்பட்டதோ அதை அவர்கள் காண்பர். கூட்டமுடிவில் கூட்டத்தலைவரின் சொந்த அனுபவங்கள் தரப்பட்டால், மற்றவர் அனைவரும் முறையான கருத்தைப் பெற்றுக்கொள்வர். நம்முடைய கருத்து என்னவெனில்: சகோதரர்கள் வீடுகளுக்குத் திரும்பிச்செல்ல முறையற்ற அவசரம் காண்பிப்பது அவர்களுக்கு சிறந்ததல்ல என்பதாகும்; மாறாக நம்முடைய வழக்கத்தின்படி வாழ்த்துத் தெரிவிக்கும்வரைக் காத்திருக்கலாம். இந்த விஷயங்கள் சம்பந்தமாக வசனங்கள் நேரடியாகச் சொல்லப்படவில்லையாதலால், இதை எந்த ஒரு சட்டமாகவோ அல்லது பிரமாணமாகவோ போட நமக்கு உரிமையில்லை. வெறுமனே ஆலோசனை தரமுடியும். என்னவெனில், கூட்டம் முடிகையில் நீண்டநேர சம்பாஷணைகளுக்குள் நுழைவதினால் பிரயோஜனம் இல்லை என்பதேயாகும். கூடுகை முடிந்தபின்பு கூட்டம் போடுவதினால், அக்கூட்டத்தினுடைய பலன்களையும் ஆசீர்வாதங்களையும் இழக்கச்செய்யும் அபாயமும் உண்டு. சகோதரர்கள் கூடுகை முடிந்தவுடன் உடனடியாகச் சென்றுவிடும்போது, ஐக்கியத்திற்கான அதிக வாய்ப்பு இல்லை என்பதும் உண்மையே. கூட்டத்தலைவர் வரும் முன்போ அல்லது கூடுகை ஆரம்பிக்கும் முன்போ வரும்போது, சிறிது நட்பின் பரிமாற்றம் நடைபெறலாம். அவ்வாறு செய்யும்போது ஒரு சிலருக்கு அது வீண்போகாது. இது ஒரு மிகவும் பயனுள்ள வாய்ப்பாகத் தெரிகிறது.

ஜெபித்தலில் முறையான மனப்பாங்கு

ஜெபத்திலே கர்த்தரிடத்தில் சேருகிற எந்த ஒரு கிறிஸ்தவனும், அவன் உடலை எவ்விதமாக வைக்கவேண்டும் என்பது பற்றி எந்த வரையறையும் வேதத்தில் இல்லை. ஆனால் நின்றுகொண்டும், முழங்காற்படியிட்டும் ஜெபிப்பது பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்விஷயத்தில் தெளிந்த புத்தியின் ஆவியில் ஒருவர் வழிநடத்தப்படவேண்டும். அவர் வெளியிலே தெருவில் இருக்கும்போது, முழங்காற்படியிடுவது கண்டிப்பாக விரும்பத்தக்கதல்ல. கற்களாலான தரையில் நிற்கும்போது அங்கும் முழங்காற்படியிடுவது விரும்பத்தக்கதல்ல. தனிமையில் இருக்கும்போது முழங்காற்படியிட்டு ஜெபிப்பது சிறந்தது. இருந்தபோதிலும் முழங்காற்படியிட்டு ஜெபிக்கும்போது தூக்கக்கலக்கமடைகிறோம் எனச் சிலர் தெரிவிக்கிறார்கள். நாம் எவ்வாறு செய்தால் சிறப்பாக இருக்கும் என நம் மனப்பாங்குச் சொல்கிறதோ, அவ்வாறு செய்வதே நம்முடைய விருப்பமாகும். முழங்காற்படியிடும்போது தூக்கக்கலக்கமாக இருக்கிறது என்று நாம் கண்டால், விழித்திருந்து அதேசமயத்தில் ஜெபத்தில் கவனத்தோடு இருக்க வேறு முறையை மேற்கொள்ளலாம்.

சபையாராக ஜெபிக்கும்போது தலைகளைத் தாழ்த்தி அமர்ந்திருந்து ஜெபிப்பது சிறந்தது என்பது எங்களுடைய கருத்தாயும் உள்ளது. எந்த மனப்பான்மையைத் தெரிவுசெய்வது என்பது பெரும்பாலும் பெற்றிருக்கும் அறிவையும், பழக்கவழக்கத்தையும் சார்ந்ததாகும். எங்கும் இருக்கும் நண்பர்களுக்கு நாம் சொல்ல நினைக்கும் கருத்தானது, பொது ஆராதனையில் மேற்சொன்ன முறையே ஜெபிக்கும்போது சிறந்தது ஆகும். சிறிய கூடுகையாயிருந்து தரையில் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தால் முழங்காற்படியிடுவது நன்று.

சாட்சிக்கூட்டங்களைப் பொறுத்தளவு, நம்முடைய கருத்து என்னவெனில், பெரிய கூடுகையாக இல்லாமலிருந்தாலொழிய, அமர்ந்துகொண்டு சாட்சிபகருவது சிறப்பானதாகும்; காரணம் அமர்ந்திருப்பவர்களுக்குச் சாட்சி பகருவது சுலபமாக இருக்கும். எழுந்து நின்று சாட்சி கூறுதல் சிலருக்குக் கடினமானதாகவும், தர்மசங்கடமானதாகவும் இருப்பதுடன், என்ன சொல்லப்போகிறோம் என்பதையும் மறந்துவிடுவர். ஆகவே அமர்ந்திருப்பது அவர்களுடைய பதட்டத்தைக் குறைக்கிறது. பெரிய அளவிலான கூடுகையில் ஒருவர் எழுந்து நின்று பேசும்போது அவருடைய குரல் அனைவருக்கும் கேட்கும்.

சபையாகப் பாடும்போது எழுந்து நிற்பது

பாடுவதைப் பொறுத்தமட்டில், கிரேட் பிரிட்டனில் உள்ள வழக்கத்தின்படி நின்றுகொண்டு பாடுவது மிகவும் நன்று. துதி ஆராதனையில் ஒன்றன்பின் ஒன்றாக பல பாடல்கள் பாடப்படும்போது நின்றுகொண்டேயிருப்பது மிகக் கடினமானதாகும். ஆனாலும் நின்றுகொண்டு பாடுவது பொதுவாக அனுகூலமானது. நின்றுகொண்டு ஒருவர் பாடும்போது இது ஏற்ற நிலையாகக் காணப்பட்டு, அவருடைய குரல்வளையங்கள் சரியான நிலையில் இருப்பதால் அவரால் நன்றாகப் பாடவும் முடிகிறது. ஆகவே பாடல் அறிவிக்கப்படும்போது, சகோதரர்கள் நிற்பது விரும்பத்தக்க ஒன்றாகும்.

எப்போதும் பொருத்தமான முறையாக, “எழுந்து நிற்க அழைக்கவேண்டுமே தவிர, கண்டிப்பான முறையில் அழைப்பு விடுக்கக்கூடாது. கூட்டத்தலைவர், “சபையானது எழுந்து நிற்கவும் என்று கூறாமல், நாம் எழுந்து ஒரு பாடலைப் பாடலாம் எனக் கூறவேண்டும். உடல் நிலையைப் பொறுத்துச் சிலர் உட்கார்ந்து இருப்பதே நன்று. அதினாலேயே, “நாம் எழுந்து பாடுவோம் என்ற அழைப்பானது எழுந்து நிற்க விருப்பமுடையவர்களுக்கே சொல்லப்பட்டதாக இருக்கும். எழுந்து பாடவும், பின் நின்றவண்ணமாக இருக்க, “சகோதரர் A” ஜெபிப்பார் என்று சிலரைப்போன்று, நாம் கூறுவது பெரிய தவறு என நாங்கள் நினைக்கிறோம். அநேக வேளைகளில் இது உண்மையிலேயே கடினமான இன்னல்களைச் சுமத்துவதாக இருக்கும்.

அதிகப்படியான இறுமாப்பு

ஆனால் நிறைவு பாடலின்போது, சபையானது எழுந்து நிற்கையில், முடிவு ஜெபத்திற்காக அவர்களை உட்காரச்சொல்வதற்குப் பதிலாக நின்றுகொண்டே இருக்கச் செய்வது நலமானதே. மேலும் அந்த ஜெபமானது ஆசீர் அளிக்கும் விதமாக இருக்கவேண்டுமே தவிர, யாரையும் துன்பப்படுத்தும் வகையில் நீண்ட ஜெபமாக இருக்கக்கூடாது. ஏற்கெனவே ஒரு ஜெபம் செய்யப்பட்டிருக்குமாயின், அதிக வார்த்தைகளால் ஏறெடுக்கப்படும் ஜெபமும் அவசியமானதல்ல. பெரும்பாலான ஜெபங்கள் மிகவும் நீண்ட ஜெபங்களாகவே உள்ளன.

ஜெபத்தில் வழிநடத்துபவர் நீண்ட விண்ணப்பங்களை ஏறெடுப்பதன் மூலம் முழுச்சபையாரின் சுயாதீனம் மற்றும் உரிமைகளில் தலையிடக்கூடாது. நம்முடைய கர்த்தர் மிக நீண்ட ஜெபங்களை ஏறெடுத்தார் என வாசிக்கமுடியாது. தனிமையில் இராமுழுவதும் சில நேரங்களில் ஜெபித்தார் என்பது உண்மையே. ஆனால் பொது இடங்களில் நீண்ட ஜெபங்களை அவர் ஏறெடுக்கவில்லை. கர்த்தர் சீஷருக்குக் கற்றுக்கொடுத்த ஜெபமானது மிகச் சுருக்கமானதாகவும், புள்ளி விவரமானதுமாகும். அண்ட சராசரத்தையே எவ்வாறு வழிநடத்தவேண்டும் எனக் கர்த்தருக்கே தெரிவிக்க நினைக்கும் சிலர் சுய அக்கறை உடையோராயும், இறுமாப்பும் உடையவராகவும் இருக்கின்றனர். நம்மையே நாம் இயக்குவதற்கு மிகக் குறைவுள்ளவர்களாக இருப்பதைக் கற்றிருக்கும்போது, சர்வ வல்லவருக்கு அவருடைய விஷயங்களில் ஆலோசனை வழங்கமுடியாது.

சம்பிரதாயமான ஜெபம் கேலிக்குரியது

முக்கியமான ஊழியக்காரர் ஒருவர், ஏறெடுத்த ஜெபம் சம்பந்தமாக அடுத்ததினம் போஸ்டன் நகர நாளிதழில், குறிப்பிடப்பட்டிருந்த செய்தி என்னவெனில்:போதகர்,__________________ போஸ்டன் நகர மக்களுக்காக இதுவரை இல்லாத வகையில், விலாவாரியான ஜெபம் ஏறெடுத்தார் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஜெபம் கர்த்தருக்கு ஏறெடுக்கப்படவில்லை என இதழாசிரியர் (சகோ ரசல்) தெளிவாக அறிந்திருந்தார்! நாம் தெளிந்த புத்தியுள்ள ஆவியை அதிக அளவில் பெற்றிருக்கவேண்டுவது தேவையான ஒன்று. நம்முடைய இருதயத்தின் நோக்கங்கள் நல்லவையாக இருக்க கர்த்தர் நோக்குகிறார் என நாம் யூகிக்கலாம். ஆனால் நம்முடைய ஜெபம் மனிதரால் கேட்கப்பட வேண்டும் என அவர் நமக்குச் சொல்லவில்லை. நாம் கர்த்தரிடமே ஜெபத்தை ஏறெடுக்க வேண்டும். அந்தரங்கமான ஜெபமானது, “அறைக்குள் பிரவேசித்து கதவைப்பூட்டி என்று நமக்குச் சொல்லப்பட்டிருப்பதால், நம்முடைய சத்தம் கதவுக்கு வெளியே யாராலும் கேட்கப்படக்கூடாது என நாம் நினைக்கலாம். ஜெபமானது, அந்தரங்கமானதாகவோ அல்லது வெளிப்படையாகவோ இருந்தாலும், பயபக்தியோடு அது சர்வ வல்லவரை நோக்கியே இருக்கவேண்டும். மேலும் அது அந்தத் தருணத்துக்கேற்றவாறு இருதயத்தின் விருப்பங்களை வெளிப்படுத்துகிறதாக இருக்கவேண்டும். கர்த்தரிடத்தில் நாம் எதற்காகச் செல்கிறோம் என்பதை நாம் அறிந்திருக்கவேண்டும். நாம் சொல்வதற்கென்று ஒன்றுமில்லாத நேரத்தில், கிருபாசனத்தை நோக்கி செல்லாமலிருத்தல் நல்லது.

எந்தக் கூடுகையின் முடிவிலும், செய்தியளித்தவர் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் அல்லது ஐந்து நிமிடங்களாவது ஜெபித்தாலும்கூட அது ஞானமற்ற செயல் என நாம் நினைக்கிறோம். இரண்டு அல்லது மூன்று நிமிடங்களே மிக அதிகம் என நாம் நினைக்கிறோம். நம்முடைய தேவைகள் எல்லாவற்றையும் குறித்துக் கர்த்தர் அறிவார், அதோடு நாம் சபையாரைக் கருத்தில் கொண்டவர்களாயிருக்க வேண்டும்.

ஏதாவது ஒரு காரியத்திற்காக ஒருமணி நேரம் உட்கார்ந்திருந்த பிற்பாடு, ஆராதனையை நீளச்செய்யும் பொருட்டு நீண்ட ஜெபங்கள் ஏறெடுப்பது ஞானமற்றதாய் இருக்கும். நீண்ட ஜெபங்கள் அந்தரங்கமாகச் செய்யப்பட வேண்டியவை. எனினும் சில கிறிஸ்தவர்கள் ஜெபத்தினால் உற்சாகப்படுத்தப்பட வேண்டியவர்களாய் இருக்கின்றனர். சிலர் எந்த அளவுக்கு ஜெபிக்க வேண்டுமோ அந்த அளவிற்கு ஜெபிக்காதவர்களாக இருக்கின்றனர். ஜெபம் மிகவும் அருமையான சிலாக்கியம். அதை ஒருவர், ஒரேவித கருத்துக்களை திரும்பத்திரும்ப ஓயாமல் சொல்வதன்மூலம் தவறாகப் பயன்படுத்தக்கூடாது.