நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R2449 (page 78)

நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்

I HAVE GIVEN YOU AN EXAMPLE

யோவான் 13:1-17

நமது கர்த்தருடைய ஊழியம் நிறைவேறப்போகின்ற தருணம் வந்தது. அவர் தம்முடைய பன்னிரண்டு தெரிந்துகொள்ளப்பட்ட சீஷர்களோடு பஸ்கா போஜனத்தைப் புசித்தார். மேலும் “நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்” என்ற வார்த்தைகளையும் அவர்களுக்குத் தெரிவித்தார் (லூக்கா 22:15). அவர்கள் புசித்த பஸ்கா ஆட்டுக்குட்டியானது, நமது கர்த்தருக்கே அடையாளமாய் இருந்தது. மேலும் சீஷர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியைப் புசித்த காரியமானது, சுவிசேஷ யுகம் முழுவதும் விசுவாசிகள் எப்படிக் கிறிஸ்துவைத் தங்கள் இருதயங்களில் போஷிப்பார்கள் என்பதையும், விசுவாசத்தின் மூலம் அவருடைய மரணத்தின் வழியாக வந்த ஆசீர்வாதங்களைத் தங்களுடையதாக்கிக்கொள்வார்கள் என்பதையும் அடையாளப்படுத்துகின்றது. ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே. ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம், பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்” (1 கொரிந்தியர் 5:7-8). ஆனால், இயேசு நிஜமான ஆட்டுக்குட்டியாக இருப்பதினால், நிழல் இனி நிறுத்தப்படுவது பொருத்தமான காரியமாகும். ஆகவேதான், இந்த நிழலான பஸ்கா போஜனத்தைப் புசித்த பிற்பாடு, நமது கர்த்தர் தமது பிட்கப்படும் சரீரமும் மற்றும் சிந்தப்படும் இரத்தமுமாகிய நிஜத்தை அடையாளப்படுத்தும் புளிப்பில்லா அப்பம் மற்றும் திராட்சரசம் அடங்கிய நினைவுகூருதலின் இராபோஜனத்தை நிறுவினார்.

யூதர்களின் முறைமையின்படி பஸ்கா போஜனமானது, குடும்பம் குடும்பமாக அநுசரிக்கப்பட்டது. நமது கர்த்தரால் விசேஷமாகத் தெரிந்துகொள்ளப்பட்ட பன்னிரண்டு அப்போஸ்தலர்கள், அவரைத் தங்களுடைய தலையாக விசுவாசித்து, தங்களை ஒப்புக்கொடுத்தப்படியால், இவர்கள் தேவனுடைய குடும்பத்தின் கருவாக இருந்தார்கள். இவர்களுடைய இருதயங்களும், நம்பிக்கைகளும், நோக்கங்களும் ஒன்றாயிருந்தது. மேலும், ஒன்றாயிருப்பதற்கான காரணம், இவர்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டிருப்பதினாலேயாகும் (எபேசியர் 4:4). நமது கர்த்தருக்கு யூதாஸ்தான் தம்மைக் காட்டிக்கொடுக்கப்போகிறவன் என்று ஏற்கெனவே தெரிந்திருந்தாலும், யூதாஸ் தள்ளிவைக்கப்படவில்லை/தவிர்க்கப்படவில்லை. இது கிறிஸ்துவின் பின்னடியார்களாகிய நாம் ஒருவருக்கொருவர் மற்றவருடைய இருதயத்தைக்குறித்து நியாயந்தீர்க்கக்கூடாது அல்லது தீமையானவர்கள் என யூகிக்கக்கூடாது என்ற படிப்பினையை
R2449 page 79

நமக்குக் கொடுக்கின்றது. இருதயத்தின் தீமை, வார்த்தையிலோ அல்லது கிரியையிலோ வெளியரங்கமாகும் சமயம்தான், கர்த்தருடைய நாமத்தை அறிக்கைப்பண்ணின நிலையிலும், நம்முடன் ஐக்கிய நிலையில் காணப்பட்டும், தங்கள் இருதயத்தில் தீமை கொண்டு, அதை வெளியரங்கமாய்க் காட்டியிருக்கும் அத்தகைய சகோதர சகோதரிகளிடமிருந்து, நாம் நம்மை விலக்கிக் கொள்வதற்கான ஏற்றச் சமயமாகும். தீமை வெளியரங்கமாகக் கிரியைகளில் வெளிப்படுத்துவதற்கு முன்பு இருதயத்தில்தான் தோன்றுகின்றது என்பது உண்மைதான். ஆயினும், (தீமையை இருதயத்தில் உதிக்கப்பெற்றிருக்கும்) சகோதர சகோதரிகள் அந்தத் தீமைக்கு எதிராக ஜெயங்கொள்வார்கள் என்றே நாம் எப்போதும் எதிர்பார்க்கின்றவர்களாகக் காணப்பட வேண்டும். மேலும், எவ்விதத்திலும் அவர்களுக்கு இடறலாயிருக்கின்ற யாதொன்றையும் நாம் செய்ய நாடக்கூடாது. மாறாக, எதிராளியானவனின் தாக்கங்களையும், அவர்களுடைய சொந்த மாம்சத்திற்குரிய பெலவீனங்களையும் அவர்கள் ஜெயங்கொள்ளவே, நாம் எல்லாவிதத்திலும் நாடி உதவ வேண்டும்.

யோவான் தன்னுடைய சுவிசேஷத்தில் பஸ்கா இராப்போஜனத்தைக்குறித்து விரிவாக விவரங்கள் கொடுக்காமலும், அதே வேளையில் மற்றச் சுவிசேஷகர்களால் குறிப்பிடாமல் விடப்பட்டதுமான சில விலையேறப்பெற்ற அம்சங்களையும், அதுதொடர்பான சில படிப்பினைகளையும், முன்வைக்கும் விதமாக பதிவு செய்துள்ளார். நமது கர்த்தர் தம்முடைய பூமிக்குரிய ஊழியம்/வேலை நிறைவுபெறும் தருணத்திற்கு வந்துவிட்டது என ஏற்கெனவே அறிந்திருந்தார் என்றும், அந்தக் கடைசி மணி நேரங்களைத் தம்முடைய சிலருடன் அதாவது, தெரிந்துகொள்ளப்பட்ட நண்பர்களுடன், கூட்டாளிகளுடன் செலவழித்துச் சில நல்ல பாடங்களை அவர்கள் மனதில் ஆழப் பதியவைக்க விசேஷமான ஆர்வம் கொண்டிருந்தார் என்றும் யோவான் தெரிவிக்கின்றார். “அவர் முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்பு வைத்தார்.” அதாவது, முற்றும் முழுமையாக அன்பு வைத்தார் (யோவான் 13:1). அவருக்குத் தற்போது காணப்படும் மற்றும் வரப்போகும் கடுமையான சோதனைகளோ அவரது கவனத்தை முழுவதும் விழுங்கிப்போடவும் இல்லை; அவர்களை அன்பு செய்வதிலிருந்து அவரது கவனத்தைத் திசை திருப்பிப்போடவுமில்லை. அவர் இன்னமும் மற்றவர்களை ஆசீர்வதிப்பதற்கு எண்ணிக்கொண்டும், முயற்சி செய்து கொண்டும் இருந்தார். அவர் பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் மீது காட்டின அன்பு அவர்களுக்கு மாத்திரமே விசேஷித்தவிதமாய் உரியது என நாம் எண்ண வேண்டாம். மாறாக, “இவர்களுடைய வார்த்தையினால் தம்மை விசுவாசிக்கப் போகிறவர்களுக்கு” இந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களையும் பிரதிநிதிகளாகவே கர்த்தர் பார்த்தார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்பார்வையை நமது மனதில் நிறுத்திப் பார்க்கையில் நமது கர்த்தர் அப்போஸ்தலர்களுக்குக் கூறினதும், செய்ததுமான காரியங்கள் அனைத்துமே அதுமுதல் அவருடைய சீஷர்களாக ஆகும் அனைவருக்கும் பொருந்தக்கூடியதாகவும், போதனைகளாகவும் இருக்கின்றது என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும் (யோவான் 17:20).

லூக்கா அவர்கள் பதிவு செய்த காரியங்களைப் பார்க்கையில், இத்தருணத்தின் போது அப்போஸ்தலர்கள் மத்தியில் தங்களுக்குள் யார் பெரியவன் என்ற வாக்குவாதம், பிரச்சனை போய்க்கொண்டிருந்ததைக் காணமுடிகின்றது (லூக்கா 22:24-31). இந்தப் பிரச்சனை முழுக்க முழுக்க சுயநலத்தின் அடிப்படையில் காணப்படாமல், போதகர் மீதான அன்பும்கூட இப்பிரச்சனைக்குப் பாதிக் காரணமாக இருந்தது. ஒருவேளை பந்தியில் அமரும்போதும், தங்களுக்கான வரிசை முறையிலும் இப்பிரச்சனை எழும்பியிருக்கலாம். ஏனெனில், நமது கர்த்தரின் அருகாமையில் அமருவதே அவர்கள் ஆசை கொண்ட இடமாகும். இராஜ்யத்தில் இயேசுவின் வலது, இடது பக்கத்தில் அமருவதற்கு எப்படி யாக்கோபும், யோவானும் வேண்டிக் கொண்டார்கள் என்பதையும் நாம் நினைவுகூருகின்றோம். இச்சம்பவம் நடந்த தருணத்தில் யோவான் இயேசுவுக்கு அடுத்துக் காணப்பட்டு, அவருடைய மார்பிலே சாய்ந்தவராக இருந்தார் என்பதையும் நாம் நினைவுகூருகின்றோம்.

யார் பெரியவன்? என்ற இந்தப் பிரச்சனை, மேல் வீட்டறையில் அவர்கள் விருந்தாளிகளாக அழைக்கப்படாமல், எல்லா வேலைகளையும் தாங்களாகவே செய்துகொள்ள வேண்டும் என்ற நிலையில் அவர்கள் காணப்பட்டதினிமித்தம் தோன்றியிருக்க வாய்ப்புகள் இருக்கலாம். அதாவது, இச்சம்பவத்தன்று மாடி அறை மாத்திரமே அவர்களுக்கு அளிக்கப்பட்டது. மேலும், அங்கு விருந்தளிப்பவர்கள் அவர்களுக்குள் இல்லாதபடியினால், பாதங்கள் கழுவப்படும் வழக்கத்திற்கு எவ்விதமான ஏற்பாடுகளும் அவர்களுக்கு அங்குக் காணப்படவில்லை. மேலும், அப்பணி செய்யப்படவில்லை. பாதரட்சைகளை அணியும் வழக்கமுடைய கிழக்கத்திய நாடுகளில் பாதங்கள் கழுவப்படும் காரியமானது, மரியாதைக் கொடுக்கும் விதமாக மாத்திரம் செய்யப்படாமல், அது அவசியமாய்ச் செய்யப்பட வேண்டிய காரியமாக உள்ளது. ஏனெனில், அந்த நாடுகளின் வெப்பநிலை நிமித்தம் மற்றும் பாதரட்சைகள் முழுவதும் பாதங்களை மூடியநிலையில் காணப்படாமல், திறந்தநிலையில் காணப்படுவதினிமித்தம் சாலைகளின் தூசிகள் பாதங்களில் படிந்துகொண்டிருப்பதினாலும், பிரயாணத்திலிருந்து வீடு திரும்பியவர்களின் பாதங்கள் கழுவப்படுவதன் மூலம், பாதங்களுக்கு ஆறுதல் அளிப்பது மிகவும் இன்றியமையாததாகவும் உள்ளது.

பன்னிரண்டு பேரில் யார் பெரியவன்? மற்றும் இவர்களில் யார் மற்றவர்களுடைய பாதங்களைக் கழுவும் மதிப்புக் குறைவான வேலையைச் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குள் எழும்பின கேள்வியானது, அவர்களில் எவரும் பணிவிடைக்காரன் நிலையை எடுக்க விருப்பம் கொள்ளவில்லை என்ற உண்மையை வெளிப்படுத்துகின்றது.

நமது கர்த்தர் அவர்களுடைய பிரச்சனையைத் தீர்த்து வைக்காமல், அல்லது அவர்களுள் ஒருவனை இந்த மதிப்புக்குறைவான வேலையைச் செய்யும்படிக்கு நியமிக்காமல், இவ்விதமாய் அவர்கள் சண்டையிட்டுக்கொள்ள அனுமதித்துவிட்டார். அவர்களோ, அக்காரியத்தைக்குறித்துச் சிந்திக்கும்படி அனுமதித்தார். அதாவது, அக்காரியத்தை மீண்டும் சீர்த்தூக்கிப்பார்க்கவும் மனங்களைத் தாழ்த்தவும், அவர்களுக்கு நேரம் விட்டுக் கொடுத்தார். அவர்களோ வழக்கத்திற்கு மாறாக கழுவப்படாத பாதங்களுடன் இராப்போஜனத்தைப் புசிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

பின்னர் இயேசு எழுந்து நின்று தமது மேலங்கியைக் கழற்றிப்போட்டு, ஒரு சீலையை எடுத்து அரையில் கட்டிக்கொண்டு, ஒரு பாத்திரத்தையும், தண்ணீர் எடுக்க ஜாடியையும் எடுத்துக்கொண்டு, தண்ணீர் ஊற்றி தமது சீஷர்களின் பாதங்களைக் கழுவ ஆரம்பித்தார். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிவிட்ட பிற்பாடு பாதங்களைத் தண்ணீருக்குள் போட்டுக் கழுவுவது கிழக்குப் பகுதிகளில் உள்ள வழக்கமாக இராமல், கழுவப்பட வேண்டிய பாதங்கள் மீது தண்ணீர் ஊற்றப்படுவதே வழக்கமாயிருந்தது. இவ்விதமாக ஒவ்வொருவருக்கும் கழுவுவதற்குச் சுத்தமான தண்ணீர் காணப்படும். மேலும் தண்ணீரும் குறைவாகவே செலவழிகின்றது; ஏனெனில் நம் நாடுகளைக் காட்டிலும், கிழக்கே உள்ள நாடுகளில் தண்ணீர் மிகவும் தட்டுப்பாடு உடையதாகவும், விலையேறப்பெற்றதாகவும் கருதப்படுகின்றது. மேலும் நாம் பயன்படுத்தும் வழக்கத்தின்படியாக மேஜைகளும், இருக்கைகளும் அக்காலக்கட்டத்தில் கிழக்குப் பகுதிகளில் காணப்படுவதில்லை. அவர்களுடைய மேஜைகள் உயரம் குறைந்தவைகளாகவும், கிட்டத்தட்ட குதிரையின் பாதங்களில் அணியப்படும் லாடத்தினுடைய வடிவில் காணப்படும். மேலும் மேஜையில் இருப்பவர்கள் உண்மையில் மேஜையின் மீது பக்கவாட்டில் சாய்ந்து படுத்துக்கொள்வார்கள். அவர்களுடைய இடது முழங்கையானது, தலையணை அல்லது திவான் மீது வைக்கப்பட்டிருக்கும். அவர்களுடைய தலை குதிரை லாடம் போன்ற வடிவம் உடைய மேஜையின் உள்பக்கம் நோக்கியிருக்கும். இந்த உள்பக்கத்தில் உணவு வைப்பதற்கான இடமும், உள்ளே வந்து உணவை வைக்க பணியாளர்களுக்கு இடமும் காணப்படும். இவ்விதமாய் இருப்பதினால் பாதங்கள் வெளி நோக்கிக் காணப்படுவதினால், சாப்பிட்டுக்கொண்டிருக்கும் மற்றவருக்கு இடைஞ்சல் உண்டுபண்ணப்படாமலேயே பாதங்களை எளிதில் கழுவுவதற்குப் பாதங்கள் பக்கம் செல்லலாம்.

பேதுருவின் பாதங்கள் பக்கம் வருவதற்கு முன்னதாகவே, நமது கர்த்தர் சீஷர்களில் அநேகருடைய பாதங்களைக் கழுவி முடித்துவிட்டார் என்பது உறுதியே. ஒருவரும் அவர் தங்கள் பாதங்களைக் கழுவுவதற்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை. எனினும் இவ்விஷயத்தைக்குறித்துத் தாங்கள் சண்டையிட்டுக் கொண்டதையும், ஒருவருக்கொருவர் ஊழியம் செய்ய தாங்கள் விருப்பமின்றி காணப்பட்டதையும், அவர்கள் எண்ணினதினிமித்தம் அவமானமும், குழப்பமும் அவர்கள் முகங்களைக் கவ்விக்கொண்டிருந்திருக்க வேண்டுமென்பதில் ஐயமில்லை. ஆனால், பேதுருவின் தருணம் வந்தபோது, பேதுரு மறுப்புக் கூறினார். இப்படிப்பட்ட மதிப்புக் குறைவான வேலையை நமது கர்த்தர் செய்ய அனுமதிப்பதா? ஒருபோதும் இல்லை எனப் பேதுரு எண்ணினார். பேதுரு கர்த்தரை நோக்கி, “ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா?” என்று கேட்டார். ஆனால், நமது கர்த்தரோ பேதுருவைக் கடிந்துகொள்வதற்கெனக் கால் கழுவும் வேலையை நிறுத்தவில்லை. அதாவது, இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் அவருடைய பின்னடியார்களில் சிலர் செய்ய நாடுவதுபோன்று பேதுருவுக்கு நன்கு திட்டு/வசவு கொடுப்பதற்கும், முழுமையாக எல்லாவற்றையும்யும், விவரிப்பதற்கும்கும் அவர் அவ்வேலையை நிறுத்தவில்லை. மாறாக, இவ்விஷயத்தைக்குறித்துப் பின்னர் விவரித்துக்கூறுவார் என்றும், ஒருவேளை தாம் பேதுருவின் கால்களைக் கழுவவில்லையென்றால் தம்மிடத்தில் பேதுருவுக்குப் பங்கில்லை என்றும் கூறி, மற்றவர்களுக்குச் செய்வதுபோன்று பேதுருவுக்குச் செய்வதைத் தொடர வேண்டும் என வற்புறுத்தினவராக மாத்திரம் காணப்பட்டார்.

பேதுருவின் நடவடிக்கைகளிலுள்ள அருமையான/பெருந்தன்மையான பண்புகளால் நாம் கவரப்பட்டாலும், கவரப்படுகின்ற அளவைப்போன்றே அவருடைய சில பெலவீனங்களையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டியவர்களாய் இருக்கின்றோம். மேலும் இதில் கர்த்தருடைய அனைத்துப் பின்னடியார்களையும் உற்சாகப்படுத்தும் படிப்பினையையும் நாம் பார்க்கின்றோம். அதென்னவெனில், நம்மிடத்தில் பெலவீனங்களும் பூரணமற்றத் தன்மைகளும் காணப்படும்போது, அதேசமயம், பேதுருவிடம் காணப்பட்டது போன்று, கர்த்தரிடத்தில் இருதயப் பூர்வமான உண்மையும் நம்மிடத்தில் காணப்படுமாயின், நாமும் பேதுரு போன்று திடன் கொண்டவர்களாக முன்னேறிச் செல்வதற்கு நாட வேண்டும். அதாவது, ஜெயத்தின்மேல் ஜெயம் கொள்ளவும், இறுதியில் உண்மையுள்ளவர்களுக்கான பலனாகிய பரிசைப் பெற்றுக்கொள்ளவும் முன்னேறிச் செல்வதற்கு நாட வேண்டும்.

பாதங்கள் கழுவப்படுவதினால் வெளியாகும் அன்பையும், உண்டாகும் சௌகரியத்தையும்விட மிக ஆழமான அர்த்தங்கள், பாதங்கள் கழுவின விஷயங்களில் இருக்கின்றது எனவும், இவர்கள் மத்தியில் தாழ்மையின் ஆவி குறைவாய் இருப்பதைக் கடிந்துகொள்வதாக இருக்கின்றது எனவும், பேதுரு கற்றுக்கொண்டபோது, தன்னுடைய பாதங்கள் மாத்திரமல்லாமல், தனது கைகளும், தனது சிரசும் கழுவப்பட வேண்டுமென விரும்பினார். பெருந்தன்மையான பேதுரு! தளர்வில்லாத ஊக்கமுடைய பேதுரு! ஆர்வமிக்க பேதுரு! மனப்பூர்வமாய்க் காணப்படும் பேதுரு! “இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்; நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார்” (யோவான் 13:10). பொதுவாக குளிக்கும் முறை, அன்று செயல்பாட்டில் காணப்பட்டது. ஒருவர் குளித்துக் கொண்டவராக இருந்தாலும், வீட்டிற்குத் திரும்பும்போது, பாதங்களைக் கழுவுவதன் மூலம் சுத்தம் செய்யும் காரியங்களை நிறைவடையச் செய்வது அன்றைய வழக்கமாய் இருந்தது. இதையே நமது கர்த்தர் குறிப்பிட்டார் என்று தோன்றுகின்றது. அப்போஸ்தலர்கள் இயேசுவுடன்கூடக் காணப்பட்டபடியாலும், மூன்று வருட காலமாக அவருடைய அன்பு, சாந்தம், நற்பண்பு, பொறுமை, தாழ்மையின் ஆவியினுடைய தாக்கத்தின் கீழ்க் காணப்பட்டபடியாலும், இவர்களிடத்தில் பேசப்பட்ட, “திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரிக்கப்பட்டதினிமித்தம்” மிகுதியாய் ஆசீர்வதிக்கப்பட்டார்கள் என்று பார்க்கின்றோம் (யோவான் 15:3; எபேசியர் 5:26).

சீஷர்கள் மத்தியில் வெளிப்பட்ட இதே பெருமையின் ஆவியானது, அவர்கள் மத்தியில் அவர்களுடைய பொருளாளராகிய யூதாஸ் மூலமாகவே கொஞ்சம் தூண்டப்பட்டது என்ற குறிப்புக் கர்த்தருடைய வார்த்தைகளுக்குள் காணப்படுகின்றது. அதாவது, “ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களை எப்பொழுதும் கெடுக்கிறவைகளாக” இருக்கின்றது (1 கொரிந்தியர் 15:33). சீஷர்களின் மாபெரும் போதகரிடமிருந்து வந்த இந்தக் கடைசி பாடமானது, படிப்பினைகளையும், கடிந்துகொள்ளுதல்களையும் ஏற்றுக்கொள்வதற்குரிய சரியான நிலையில் அநேகமாக இருந்த சீஷர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினதாக இருந்தது. ஆனால், யூதாசினுடைய பாதங்கள் கழுவப்பட்டிருந்தாலும், இப்பாடமானது அவனிடத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இராப்போஜனத்திற்கு முன்னதாக யூதாசுக்குள் புகுந்த தீமையின் ஆவியானது, அதாவது பணம் R2450: page 80 பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பமும், கர்த்தரைக் காட்டிக் கொடுப்பதன் மூலம் அப்பணத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானமும், அவனுக்குள் தொடர்ந்து காணப்பட்டுக் கொண்டிருந்தது. மேலும் நமது கர்த்தருடைய தாழ்மையும், பாதங்கள் கழுவின பணியும் யூதாசை நேராக திசைதிருப்புவதற்குப் பதிலாக இயேசுவை இன்னமும் குறைவானவராகக் கருதும் எதிர்மாறான திசைக்கே திருப்பிற்று. இப்படியே அனைத்துக் காலக்கட்டங்களிலும், பெயரளவில் கர்த்தருடைய நாமத்தை அறிக்கை பண்ணினவர்களின் விஷயங்களில் காணப்படுகின்றது. கர்த்தருடைய அந்தப் போதனைகள், மாதிரிகள் மற்றும் அனுபவங்கள் சிலருக்கு ஆசீர்வாதமாகவும், நன்மை கொடுக்கக்கூடியதாகக் காணப்பட்டாலும், சிலருக்குப் பாதிப்பாகவும் காணப்படுகின்றது. எல்லாவிதத்திலும் சுவிசேஷமானது, “கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்துக்கேதுவான மரண வாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவ வாசனையாகவும்” இருக்கின்றது (2 கொரிந்தியர் 2:16). தேவனுடைய இரக்கமும், நற்பண்புகளும் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினது போன்றே, இயேசுவினுடைய அன்பும், தாழ்மையும் யூதாசினுடைய யூதாசினுடைய இருதயத்தைக் கடினப்படுத்திற்று. மேலும், இதே காரியங்கள் இன்றும் நிலவுகின்றது. இவைகள், இன்றைய நாட்களில் சம்பவிக்கும் அறுவடையின் புடைத்தெடுத்தல்களில் பார்க்கப்படலாம் (யாத்திராகமம் 7:13).

அனைவருடைய பாதங்களைக் கழுவும் வேலையை முடித்த பிற்பாடு, இயேசு தமது மேலங்கியை உடுத்திக்கொண்டு இராப்போஜனத்திற்காக (இது பஸ்கா இராப்போஜனமாகும்; அப்பமும், திராட்சரசமுமுள்ள நினைவுகூருதல் இராப்போஜனமானது பிற்பாடு நிறுவப்பட்டது) மேஜையில் பக்கவாட்டில் சாய்ந்து, படுத்த நிலையில் இருந்தார். இப்பொழுது வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு நமது கர்த்தர், தாம் செய்த காரியத்தைக்குறித்து விவரித்தார். இப்படிப்பட்ட மதிப்புக் குறைவான வேலையைச் செய்ததினிமித்தம் தாம் போதகர் அல்லவென்றோ, கர்த்தர் அல்லவென்றோ குறிப்பதில்லை என்று சுட்டிக்காட்டினார். மாறாக கர்த்தரும், போதகருமாகிய தாம் பிதாவின் குடும்பத்திலுள்ள சிறிய அங்கங்களுக்கு ஊழியம் செய்வதிலும், அவர்கள் சௌகரியத்திற்கென/ஆறுதலுக்கென மிகுந்த மதிப்புக் குறைவான வேலையையும் செய்து கொடுப்பதிலும், தாம் விருப்பமற்ற நிலையில் காணப்படவில்லை என்பதே தமது செய்கையின் விளக்கம் என்றும், சீஷர்களாகிய அவர்களும் ஒருவருக்கொருவர் இப்படிப்பட்ட ஊழியங்களைச் செய்வதில் விருப்பமற்றவர்களாய் இராமல், மகிழ்ச்சியுடன் செய்பவர்களாக இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

நமது கர்த்தர் முன்வைத்த இம்மாதிரியானது, சொல்லர்த்தமாக கால்களைக் கழுவி செய்ய வேண்டிய ஊழியமல்ல; இப்படியாக கால்களைக் கழுவும் வேலையைக் கர்த்தருடைய ஜனங்கள் வருடந்தோறும், வாரந்தோறும், மாதந்தோறும் அல்லது வேறு ஏதாவது சமயங்களில் சடங்காச்சாரம் போல் செய்யப்பட வேண்டும் என்ற விதத்தில் ஒரு காரியமும் இந்த மாதிரியில் தென்படவில்லை. மாறாக, இந்த மாதிரியின் பின்னணியில் காணப்படும் கொள்கையையே அனைத்து நேரங்களிலும் அவருடைய பின்னடியார்கள் மத்தியில் கைக்கொள்ளப்பட வேண்டும். அதாவது, அவர்கள் ஒருவரையொருவர் அன்புகூர வேண்டும், ஒருவருக்கொருவர் ஊழியம் செய்திட வேண்டும், மேலும் ஒருவருக்கொருவரின் நலன் மற்றும் சௌகரியம் கருதி செய்யப்படும் எந்த வேலையும் மிகவும் மதிப்புக் குறைந்த வேலை எனக் கருதப்படக்கூடாது என்பவைகளே அந்தக் கொள்கையாகும்.

நினைவுகூருதல் இராப்போஜனம் மற்றும் ஞானஸ்நானம் அநுசரிப்பது போன்று இச்சம்பவமும் சொல்லர்த்தமாகக் கடைபிடிக்கப்பட்டு, அநுசரிக்கப்பட வேண்டும் என்று அர்த்தம் காண்கிறவர்கள் தவறாய்ப் புரிந்துகொண்டுள்ளனர் என நாம் எண்ணுகின்றோம். இதில் எவ்விதமான சொல்லர்த்தமான காரியங்களுமில்லை; ஜீவியத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் காணப்படும் தாழ்மையெனும் கொள்கையைச் சித்தரிக்கும் உதாரணமாகவே இது காணப்படுகின்றது. ஒருவேளை, கர்த்தருடைய ஜனங்கள் மத்தியில் எவருக்கேனும் கால்கள் கழுவப்படுவதற்கோ அல்லது மதிப்புக் குறைவான உதவிகளோ தேவைப்படுமாயின் அவர்களுடைய சகோதர சகோதரிகள் மகிழ்ச்சியுடனும், சந்தோஷத்துடனும் அவர்களுக்கு அவைகளைச் செய்ய வேண்டும். மேலும், கர்த்தருடைய ஆவியுடைய அனைவரும் இப்படிப்பட்ட பணிவிடைகளை/ஊழியங்களைக் கண்டிப்பாகச் செய்வார்கள். ஆனால், கர்த்தருடைய ஜனங்கள் ஒவ்வொருவரும் முதலாவது, சொல்லர்த்தமாக தங்கள் கால்களைக் கழுவி தங்களைச் சுத்தம் செய்து கொண்டு, பின்னர் ஒவ்வொருவரும் மற்றவருடைய கால்களைக் கழுவி சடங்காச்சாரமாக அநுசரிக்க வேண்டும் என்று கூறும் காரியமானது, நாம் பின்பற்றும்படி அவர் நமக்குப் போதித்துள்ள மாதிரிக்கு எதிர்மாறானதாய் காணப்படும். அவர் காட்டின மாதிரியானது,” ஒரு பணிவிடையே தவிர, சடங்காச்சாரமான அநுசரிப்பும், அசௌகரியமும் அல்ல.

வருடத்திற்கு ஒருமுறை, “புனித வெள்ளிக்கு” முந்தினநாள் அன்று, வயதுமுதிர்ந்த தரித்திரர்களில் பன்னிரண்டு பேர் தெரு வீதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டு, போப்பினால் பாதங்கள் கழுவப்படுகின்றனர். ஆனால் இந்தத் தரித்திரர்கள் முதலில் தனிப்பட்ட விதத்தில் முன்னேற்பாடாக சுத்தம் பண்ணப்பட்டுக் கொண்டுவந்த பிற்பாடே போப்பினால் பாதங்கள் கழுவப்படுகின்றார்கள். போப்பின் இந்தச் சடங்காச்சாரமான கால்கள் கழுவும் அநுசரிப்பானது, அநேக கனத்திற்குரிய நபர்கள் முன்பாகவே நடக்கின்றது. இதேவிதமான அநுசரிப்பானது, ஆஸ்டிரோ-ஹங்கேரியைச் சார்ந்த யோசேப்பு என்னும் சக்கரவர்த்தியினாலும்கூட வருடந்தோறும் அநுசரிக்கப்படுகின்றது. இவர்கள் இருவரின் அநுசரிப்புமே நாம் கர்த்தரின் மாதிரியை புரிந்துகொண்ட விதத்தில் அம்மாதிரிக்கு இசைவாக வைத்துப் பார்க்கும்போதும், எதிர்மாறானவைகளாகவே தென்படுகின்றது. மேலும் கிறிஸ்தவர்களின் சில பிரிவினர் கைக்கொள்ளும் கழுவுதல் தொடர்பான சில அநுசரிப்புகளும்கூட எதிர்மாறானவைகளாகவே காணப்படுகின்றது.

கர்த்தருடைய பின்னடியார்களாக உண்மையாய்க் காணப்படும் அனைவரும் சாந்தம் மற்றும் தாழ்மை மற்றும் அவருடைய சரீர அங்கங்களுக்கு ஊழியம் புரிதல் எனும் போதகரின் ஆவிக்கான உண்மையான மாதிரிக்குக் கவனமாய்ச் செவிசாய்த்து, அப்படியே பின்பற்றுகிறவர்களாகவும் இருக்க வேண்டும். இக்காரியங்கள் அனைத்தும், “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல. அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல. நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள்” என்ற வார்த்தைகளுக்குள் அடங்குகின்றது (யோவான் 13:16,17).

தாலந்துகளோ அல்லது திறமைகளோ உடையவர்களும் அல்லது வாழ்க்கையில் கனம் வாய்ந்த ஸ்தானங்கள் வகிப்பவர்களும் மற்றும் சபையில் செல்வாக்கு நிறைந்த ஸ்தானங்களில் விசேஷமாகக் காணப்படுகிறவர்களுமாகிய கர்த்தருடைய ஜனங்களில் அநேகர், விசேஷமாக போட்டி மனப்பான்மை, வாக்குவாதம் பண்ணும் மனப்பான்மை, வீண் செருக்குக்கொள்ளும் தன்மை முதலியவைகளினால் ஆட்கொள்ளப்பட வாய்ப்புகள் உள்ளன. ஆகவே மாம்சத்தின் இந்த விஷயங்களுக்கு எதிராக விசேஷ வண்ணமாக ஜாக்கிரதையுடன் காணப்பட வேண்டும். “பொறாமையுடன் ஏறெடுத்துப் பார்க்கச் செய்யும் ஒரு பெருமை உண்டு மற்றும் ஏளனத்துடன் கீழாய்ப் பார்க்கச் செய்யும் ஒரு பெருமையும் உண்டு” என்ற வாசகமானது மறக்கப்படக் கூடாது. எவ்விஷயத்தைக் குறித்தாகிலும் பெருமை காணப்படுமாகில் அது தேவனுடைய பார்வையில் குற்றத்திற்குரியதாகவும், அவருக்குப் பிரியமற்றதாகவும் காணப்படும். “பெருமையுள்ளவர்களுக்கு கர்த்தர் எதிர்த்து நிற்கின்றார், தாழ்மையுள்ளவர்களுக்கோ அவர் கிருபையளிக்கின்றார்.” ஆகவே, கர்த்தருடைய அன்பில் நிலைத்திருக்கிறவர்கள் தாழ்மையாய் இருக்கும் விஷயத்தில் மிகவும் கவனமாயிருக்க வேண்டும். அதாவது, மிகவும் தாழ்மையாக, நடத்தையில் மிகவும் தாழ்மையாக, எளிமையாக, குறிப்பாக மனதில் தாழ்மையாக இருப்பதில் மிகவும் கவனமாய் இருக்க வேண்டும் (யாக்கோபு 4:6; 1 பேதுரு 5:5).