சக – அங்கத்தினர்களைத் தண்டித்தல்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R3744 (page 89)

சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்

PUNISHING FELLOW-MEMBERS

தெய்வீக வார்த்தைகளுக்கு இசைவாகத் தங்கள் ஜீவியங்கள் காணப்படுவதற்கென ஊக்கமாய் நாடிக்கொண்டிருக்கின்றதான அன்பான சகோதர சகோதரிகளில் சிலர் மில்லேனியல் டாண் தொகுதி VI-ஐ வாசிக்கையில், முன்பில்லாத அளவுக்கு மிகத் தெளிவாய் மத்தேயு 18:15-ஆம் வசனத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதான செயல்முறைகள் தொடர்பான திவ்விய ஒழுங்குகளைக் கவனித்து வருகின்றனர். அதில் முன்வைக்கப்பட்டுள்ளதான கட்டளைகள் அனைத்தையுமே கைக்கொள்வது அவர்களுக்கு அவசியமில்லை என்று சிலருக்கு நினைப்பூட்டப்படுவது அவசியமாய் இருக்கின்றது. சகோதரனுடைய தவறை அவர்கள் விட்டுவிடலாம் என்று எண்ணுவார்களானால், அது அவர்களது சிலாக்கியமாகும்; ஆனால் ஒருவேளை தவறை அவர்களால் விட்டுவிட முடிய வில்லையெனில், அது அவர்களைத் தொடர்ந்து பாதித்துக் கொண்டிருக்கின்றதென்றால், அக்காரியத்தைக் குறித்து அவர்கள் மற்றவர்களிடத்தில் சொல்லாமல், மாறாக தவறைச் சரிப்படுத்துவதற்கு இருக்கும் ஒரே செயல்முறையென அவ்வசனத்தில் கொடுக்கப்பட்டுள்ளதான கர்த்தருடைய கட்டளைகளைப் பின்பற்றிட வேண்டும்.

கீழ்ப்படியாமல் பிடிவாதமாய்க் காணப்படுபவர்களுக்கான – அதாவது செய்யப்பட்ட தவறுகளுக்கு எதிரான சகோதரனுடைய தனிப்பட்ட தெரிவித்தல்களுக்குச் செவிசாய்க்காமலும், இரண்டு (அ) மூன்று சகோதரருடைய ஆலோசனைக்குச் செவிசாய்க்காமலும், சபையாருடைய வார்த்தைகளுக்கும் செவிசாய்க்காமலும் இருப்பவர்களுக்கான தண்டனை வகை குறித்துச் சிலர் கேட்கின்றனர் – என்ன தண்டனை இத்தகையவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டுமென்று நம்மிடம் கேட்கப்படுகின்றது. நம்முடைய சகோதரனைத் தண்டிப்பதற்கான உரிமை நமக்கு இல்லவேயில்லை என்பதே நம்முடைய பதிலாகும். அதைக் கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்று கூறுகின்றார் மற்றும் தற்காலத்தில் ஒருவர் இன்னொருவரின் மாம்சத்தின்படியான பெலவீனத்தின் அளவைக்குறித்து நியாயந்தீர்க்கும் விஷயத்தில் நாம் திறமிக்கவர்களல்ல மற்றும் இதன் காரணமாக ஒருவர் இன்னொருவரின் பெலவீனத்தின் விஷயத்தில் மற்றவர் கொண்டிருக்கும் பொறுப்பின் அளவைக்குறித்து நியாயந்தீர்க்கும் விஷயத்திலும், நாம் திறமற்றவர்களாய் இருக்கின்றோம் மற்றும் கர்த்தர் நியாயமாய் இவைகளை நியாயந்தீர்ப்பார். மன்னிப்பதே நம்முடைய காரியமாய் இருக்கின்றதே ஒழிய, தண்டிப்பது நம்முடைய காரியமல்ல; நமக்குச் செய்யப்படும் பாதகத்தை நிறுத்த நாடுவது நம்முடைய சிலாக்கியமாய் இருக்கின்றது; ஆனால் கடந்த காலங்களில் நடந்துள்ளதான எதற்கும், எந்தத் தண்டனையையும் நாம் அளித்திடக்கூடாது.

மத்தேயு 18:15-ஆம் வசனத்தில் இடம்பெறும் கர்த்தருடைய கட்டளைகளிலுளள் முழுப்பாடம் என்னவெனில்: இப்படியாக நமது சகோதரனுடைய அன்பை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கும் மற்றும் நமக்கு இன்னுமாய் அச்சகோதரன் பாதகம் பண்ணுவதிலிருந்து அவனைத் தடுப்பதற்கும் நாம் நாடிட வேண்டும் என்பதேயாகும். இப்படிச் செய்வதில் நாம் ஜெயமடைவோமானால், அதினால் அவனை நம்முடைய சகோதரர் என மீண்டுமாய்ப் பெற்றுக்கொள்வோம், அவனைக் குணமடையச் செய்வோம். ஆகையால் சகோதரனைச் சபையார் முன்னிலையில் கொண்டுவருவது தண்டனைக்கொடுப்பதற்கே என்பது எண்ணமாயிருப்பதில்லை, மாறாக கண்டிக்கப்படுவதற்காக, திருத்தப்படுவதற்காக, [R3745 : page 90] அவன் தன் நடத்தையிலுள்ள தவற்றினைக் கண்டு, அதை ஒப்புக்கொண்டு, தவறு செய்வதை விட்டுவிடத்தக்கதாகக் கடைசிமுறையாக மாத்திரமே அவன் சபையார் முன்னிலையில் கொண்டுசெல்லப்படுகின்றான். ஒவ்வொரு நடவடிக்கையிலும், சகோதரனைச் சரியான வழிக்குத் திருப்பிடுவதற்கே பிரயாசம் காணப்பட வேண்டுமே ஒழிய, அவன் தவற்றை அம்பலப்படுத்துவதற்காகவோ, அவனுக்குப் பாதகம்பண்ணுவதற்காகவோ, அவனைத் தண்டிப்பதற்காகவோ பிரயாசம் காணப்படக்கூடாது; ஏனெனில் “பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற் செய்வேன்” என்று கர்த்தர் சொல்லியுள்ளார்.

இந்த ஒரு வேதவாக்கியத்தின்படி சபையார் செய்ய முடிகிறது என்னவெனில்: அச்சகோதரனை மனந்திரும்பப்பண்ணுவதற்கும், சரீப்பொருந்தபண்ணுவதற்கும் எடுத்த பிரயாசங்களினால் பிரயோஜனம் இல்லாமல் போகுகையில், அவன் சரியானவற்றைச் செய்வதற்கான விருப்பத்தினை வெளிப்படுத்துவது வரையிலும், சபையார் அவனிடமிருந்து விசேஷித்த சகோதர ஐக்கியத்தினை நீக்கிக்கொள்ளலாம். அவன் விருப்பத்தினை வெளிப்படுத்தின பிற்பாடு, அவன் மீண்டுமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

குறிப்பிட்டக்காலம் சகோதரனை, “அஞ்ஞானியைப் போலவும், ஆயக்காரனைப் போலவும்” நடத்துவதும்கூட, அவனுக்கு பாதகம் பண்ணுவதை, அவனைத் தண்டிப்பதை, அவனைத் தாக்கி பழித்தூற்றுவதை, உலகத்திற்கு முன்னிலையில் அவனை அவமானப்படுத்துவதை (அ) அவமதிப்பதைக் குறிப்பதில்லை. இவைகளை (பாதகம்ப்பண்ணுதலையோ, தண்டிப்பதையோ, தாக்கிப் பழித்தூற்றுவதையோ, அவமானப்படுத்துவதையோ) – அஞ்ஞானிக்கோ (அ) ஆயக்காரனுக்கோ செய்திடுவதற்கும் நாம் அனுமதிக்கப்படவில்லை. எந்த ஓர் அஞ்ஞானியையோ அல்லது ஆயக்காரனையோ நாம் நடத்துவதுபோன்று, அச்சகோதரனை நாம் அன்பான, மரியாதையான விதத்தில் நடத்திட வேண்டும் மற்றும் உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட வகுப்பாராகிய சபைக்கு உரியதான விசேஷித்த உரிமைகள் சிலாக்கியங்கள் (அ) வாழ்த்துக்கள் (அ) வாக்குகள் (vote) அளிக்கும் வாய்ப்புகள் கொடுக்க மறுக்கப்பட வேண்டும்.