R5474 (page 168)
கர்த்தருடைய ஜனங்கள் அனைவருமே நல்நோக்கமுடையவர்களாகவே காணப்படுவார்கள் என்பதில் நமக்கு நிச்சயமே. நல்நோக்கங்கள் இல்லாமல், வேறானவைகளைப் பெற்றிருந்து, அவர்களால் கர்த்தருடைய அங்கீகரிப்பை எப்படிப் பெற்றிட
முடியும்? சுயநலமானது உள்ளே நுழைந்து, புதுச்சிருஷ்டியினால் கண்டுபிடிக்க முடியாத சில அளவுகளில், செயல்பாட்டில் காணப்படலாம்; ஆனால் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில், அது கட்டுப்படுத்தப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டுக் கொல்லப்பட
வேண்டும். கர்த்தருடைய பின்னடியார்களுடைய முழு ஜீவியமே – மனம் மற்றும் சரீரத்தினுடைய தனிப்பட்ட அபூரணங்கள் தொடர்பான மற்றும் மற்றவர்களுடைய வார்த்தைகள், நடத்தைக்குறித்துச் சரியாய்ப் புரிந்துகொள்ளுதல் தொடர்பான
அனுபவமுடைய ஒன்றாயிருக்கின்றது.
பொதுவில் பேசுதல், அறிமுகம்பண்ணுதல், அடக்க ஆராதனைகள் முதலானவைகளில் ஈடுபடும் சகோதரரின் கவனத்திற்கு நாம் இரண்டு காரியங்களைக் கொண்டுவர விரும்புகின்றோம். எங்களுடைய யோசனைகளும், விமர்சனங்களும்,
அச்சகோதரர்களுக்கும், நாம் அனைவரும் ஊழியம் புரிந்திட விரும்பும் அந்தக் காரணங்களுக்கும் உதவியாக இருக்கும்படிக்குக் கொடுக்கப்பட்டுள்ளன என்று புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
(1) அடக்க ஆராதனைகள் நடந்திடும்போது, சகோதரரில் சிலர் மரணம் மற்றும் நமது இனத்தின் மீதான பாவத்தின் சம்பளம் குறித்தும், தண்டனையிலிருந்து விடுவிக்கும் மீட்பு மற்றும் உயிர்த்தெழுதல் குறித்துமான நற்செய்தியினைச் சொல்லிட
வேண்டும் என்ற ஆர்வத்தில், எல்லை மீறிப்போய்விடும் அபாயங்கள் இருப்பதாக எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலசமயங்களில் இவர்கள் நீண்ட நேரமாய்ப் பிரசங்கம்பண்ணி – அத்தகைய தருணத்திற்குத் தகுதியாய்
இருப்பவற்றைக் காட்டிலும் அதிகம் பேசிடுவதற்கு முற்படுகின்றனர். இன்னும் சிலசமயங்களில் மரணம் தொடர்பான சுவிசேஷத்தின் செய்தியையும், வேதாகம விளக்கங்களையும் முன்வைத்திட வேண்டும் என்ற மிகுந்த நோக்கத்தில், துன்பத்தில்
காணப்படும் இறந்திருப்பவரினுடைய குடும்பத்தின் அங்கத்தினர்களுக்கு ஆறுதலின் வார்த்தைகளையோ அல்லது இறந்திருப்பவர் குறித்தும், அவரது குணலட்சணம் குறித்தும், தேவனுக்கான அவரது வைராக்கியம் குறித்தும், வேதாகமத்தின்
மீதான அவரது ஈடுபாடு அல்லது இழப்பில் காணப்படும் குடும்பத்தினரை ஆறுதல்படுத்தும் உண்மையுள்ள புகழுரை எதையேனும் குறித்தும் குறிப்பிடுவதற்கு மறந்து போய்விடுகின்றனர்.
முழுக்கப் புகழுரையினாலும் மற்றும் மரணம் குறித்த வேதாகமத்தின் போதனைகளுக்குக் கவனம் கொடுக்காமலும் காணப்படும் சாதாரணமான அடக்க ஆராதனை பிரசங்கங்கள் சரியானவை என்று எந்த விதத்திலும் தெரிவித்திடுவதற்கு நாம்
விரும்பவில்லை. தெய்வீகத் [R5475 : page 169] திட்டம் குறித்த சில விளக்கங்கள் கொடுப்பதும், இறந்திருப்பவர் மற்றும் அவரது குடும்பத்தார் குறித்து சில விஷயங்கள் குறிப்பிடுவதுமாகிய தன்னடக்கமான வழிமுறையானது ஞானமாய்
இருக்குமென நாம் யோசனையாக மாத்திரம் தெரிவிக்கின்றோம்.
(2) பொது ஊழியங்களுக்கான பேச்சாளரை அறிமுகப்படுத்திடும் சகோதரனைத் தெரிந்தெடுக்கும் விஷயத்தில் மிகுந்த கவனம் கொடுக்கப்பட வேண்டும். தவறான விதத்தில் அறிமுகம் கொடுத்திடுவதற்குப் பதிலாக, அறிமுகப்படுத்தி
வைக்காமல் இருப்பதே சிறந்ததாயிருக்கும். பொது ஊழியங்களுக்கான பேச்சாளரை அறிமுகம்பண்ணிடும் தருணத்தை, ஒருவர் தன்னை மிகைப்படுத்தி, தனது பேச்சுத்திறமையை, வேதாகமம் குறித்த தனது அறிவை வெளிக்காட்டிக்கொள்வதற்குப்
பொருத்தமான தருணமெனக் கருதுவாரானால், அவருக்குப் பேச்சாளரை அறிமுகம்பண்ணிடும் வேலைகள் கொடுக்கப்படக்கூடாது. தெய்வீகத் திட்டம் குறித்து, தான் அறிந்திருக்கும் அனைத்தையும் சொல்லிடுவதற்கும், கூட்டத்தாருக்குப் பேச்சாளர்
என்ன சொல்லவிருக்கின்றார் என்பதை முன்கூட்டியே கூட்டத்தாருக்குத் தெரிவித்திடுவதற்குமான வாய்ப்பாக, பேச்சாளரை அறிமுகம்பண்ணிடும் தருணத்தினைக் கருதிடும் நபர் பொருத்தமற்ற நபராய் இருப்பார்; அதாவது எப்படித் துவக்க
ஜெபம்பண்ணிடுவதற்கு அழைக்கப்பட்டிருக்கும் நபர் ஒருவர், ஜெபத்தைச் செய்தியாக நீட்டிச் சென்று, விலையேறப்பெற்ற நேரத்தை வீணடித்து, தனது தகுதியின்மையினால் அனைவருக்கும் வெறுப்பூட்டிப் பொருத்தமற்ற நபராய்
இருப்பாரோ, அப்படியே ஆகும். பேச்சாளர் ஒருவரால் இரண்டு மணி நேரங்களில் ஏற்படுத்திடும் பாதகத்தைக் காட்டிலும், பேச்சாளரை அறிமுகப்படுத்துபவரால் இரண்டு நிமிடங்களில் அதிகமான பாதகத்தினை ஏற்படுத்திட முடியும்.
தாழ்மையும், தன்னடக்கமும் மற்றும் சுருக்கமாய்ப் பேசுதல் என்பவைகள் எவ்விடத்தில் காணப்பட்டாலும் அவை பிரம்மாண்டமான பண்புகளாக இருக்கின்றன, ஆனால் புதிய வகுப்புகளை உருவாக்கும் கூட்டங்களிலும், பயண ஊழியர்களின்
வருகையின் போதான கூட்டங்களிலும் அல்லது வேறு ஏதாவது கூட்டங்களிலும் பேச்சாளரை அறிமுகம் செய்திடுபவருக்கு இவை விசேஷமாய்த் தகுதியான பண்புகளாய் இருக்கும்.
இம்மாதிரியான தருணங்களில், ஜெபம் ஏறெடுக்கின்றவர், ஜெபத்தினை வேண்டுதலாக மாத்திரம் ஏறெடுத்திட வேண்டும். அவர் ஜெபம்பண்ணுவதைக் கேட்பதற்காகக் கூடியிருப்பவர்கள் கூடிவரவில்லை, மாறாக பிரசங்கத்தைக் கேட்கவே
வந்திருக்கின்றனர். அவரது ஜெபத்தில் அவ்வேளைக்கான சிலாக்கியத்திற்காகவும், நம்முடைய நாட்களில் அருளப்பட்டிருக்கின்றதான சுயாதீனத்திற்காகவும், சத்தியத்தை அறிந்துகொள்வதற்குரிய இருதய வாஞ்சைக்காகவும், திறக்கப்பட்ட
வேதாகமத்திற்காகவும் தேவனுக்கு நன்றி ஏறெடுத்திட வேண்டும். கூட்டத்திலும், கூட்டத்தார் மீதும், பேச்சாளர் மீதும் தெய்வீக ஆசீர்வாதங்கள் கடந்துவருவதற்கும் மற்றும் கர்த்தருடைய நாமமானது மகிமைப்படுவதற்கும், சத்தியமானது
மேலானதாகக் காணப்படுவதற்கும், நீதியினை விரும்புபவர்கள் அனைவரும் ஆசீர்வதிக்கப்படுவதற்கும் என்று விண்ணப்பங்கள் கர்த்தரிடத்தில் ஏறெடுக்கப்பட வேண்டும்.
அறிமுகம் செய்தல் சுருக்கமாய் இருத்தல் வேண்டும். கூட்டத்தாருக்கும், கூட்டத்தாரில் போதகர்கள் என்று தங்களைக் குறித்து அறிக்கைப்பண்ணுகிற சிறுகூட்டத்தாருக்கும் இடையில் வேறுபடுத்திக் காண்பிக்கும் விதமாக, “நாங்கள் நம்புவற்றைப்
பேச்சாளர் உங்களுக்குச் சொல்லிவிடுவார்” என்று சொல்லிடக்கூடாது. மிகுந்த தாழ்மையுடன், “மதிய வேளைக்கான பேச்சாளரை அறிமுகப்படுத்திடுவது எனக்கான சிலாக்கியமாகவும், கனமாகவும் காணப்படுகின்றது. அவர் International
Bible Students Association சார்பாக நமக்கு வந்துள்ளார் மற்றும் வேதவார்த்தையிலிருந்து செய்தி ஒன்றினைக் கொண்டுவந்திருக்கின்றார் என்று நாம் நம்புகின்றோம். அது திருப்திகரமாகவும், உற்சாகமூட்டுகிறதாகவும், உதவிகரமாகவும்
காணப்படும் என்று நாம் நம்புகின்றோம். நாம் சத்தியத்தினால் பரிசுத்தமாக்கப்படுவோம் என்றும், அவரது வசனமே சத்தியம் என்றுமுள்ள ஆண்டவருடைய வார்த்தைகளை நினைவில்கொண்டு, செய்தியை யதார்த்தமாய்க் கேட்போமாக.
நம்முடைய இருதயங்களுடைய செவிகளினால் கர்த்தருடைய வார்த்தையானது கேட்கப்படும் அளவுக்குத்தக்கதாக நாம் களிகூருவோமாக. இப்பொழுது சகோ _______________ அவர்களை இதோ உங்களுக்கு அறிமுகம் பண்ணிடுகின்றேன்;
இத்தருணத்திற்கான அவரது தலைப்பு __________________ ஆகும் என்பது போன்று காணப்பட வேண்டும்.