தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R1548 (page 200)

தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்

MAN AND WOMAN IN GOD'S ORDER

வேதாகமத்தின் கண்ணோட்டத்தின்படி,அதிலும் விசேஷமாக அப்போஸ்தலனாகிய பவுல் அவர்களுடைய போதனையின் வெளிச்சத்தில், ஸ்திரீயானவளுடைய செயல் எல்லையைக் கவனிப்பதற்கு இந்தப் பிரதியில் நாம் இடம் ஒதுக்குகின்றோம். அப்போஸ்தலனுடைய வார்த்தைகளைக்குறித்துப்; பொதுவாக நிலவிக்கொண்டிருக்கும் ஒரு தவறான புரிந்துகொள்ளுதலானது, அவர் ஆவியில் ஏவப்பட்ட விஷயம் குறித்துச் சந்தேகத்தின் ஆவியை உருவாக்கியுள்ளது, மேலும் இவ்வாறாக இது அவநம்பிக்கையை உண்டாக்க ஏதுவாயிற்று. இப்படிப்பட்டதான சந்தேகங்கள் மனதை ஆக்கிரமித்துக்கொள்ளும்போது, அது இப்பொழுது பெண்ணின் உரிமைகள் என அழைக்கப்படும், மிதமிஞ்சிய நிலைக்கு வழிநடத்துவதற்கு ஏதுவாய்க் காணப்படுகின்றது — சிலரை மறுமுனைக்குத் தள்ளிவிடுகின்றது, அதாவது சிலர் புரிந்துகொள்வதுபோல் பெண்களை அடிமைகளாக, கடின வேலைகளைச் செய்பவர்களாக அல்லது ஆண்களை மகிழ்விப்பவர்களாக ஆக்கிவிடும் நிலைக்குத் தள்ளிவிடுகின்றது — இப்படியாகத்தான் அப்போஸ்தலர்கள் போதித்துள்ளார்கள் எனத் தவறாக எண்ணிக் கொண்டு இப்படியாகச் செய்கின்றனர். R1521-இல் நாம் முன்வைத்துள்ள அப்போஸ்தலருடைய அதிகாரம் மற்றும் தவறிழைக்காத் தன்மையைக்குறித்து அநேகக் கேள்விகள் எழும்பியுள்ளபடியால், அப்போஸ்தலரின் அதிகாரம் மற்றும் தவறிழைக்காத் தன்மைக்கு ஆதரவாக இந்தப் பாடம் பிற்சேர்க்கையாகக் கருதப்படலாம்.

கிறிஸ்து இயேசுவுக்குள் ஆவிக்குரிய புதியச்சிருஷ்டிகளாக இருக்கும் நாம், வம்சாவளியின் அடிப்படையிலோ, ஸ்தானத்தின் அடிப்படையிலோ அல்லது பாலின வேறுபாட்டின் அடிப்படையிலோ தேவனால் மதிப்பிடப்படவில்லை என்றும், வரவிருக்கின்ற இராஜ்யத்தில் சுதந்தரத்துவத்தைப் பெற்றுக்கொள்வதற்கான தகுதி பற்றின அவருடைய கணிப்பில், “யூதனென்றும், கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை, ஏனெனில் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறோம் மற்றும் “நமக்கு உண்டான அழைப்பினாலே அனைவரும் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப் பட்டிருக்கின்றோம் என்றுமுள்ள உண்மையை நாம் அறிந்துகொண்டிருந்தாலும், நாம் இன்னமும் மாம்சத்தில் காணப்படுகின்றோம் என்பதும், நமக்குப் பூமிக்குரிய சூழ்நிலைகளுடன் தொடர்பு இருக்கின்றது என்பதும், இன்னுமாக ஜீவியத்தின் பல்வேறு உறவுகள் விஷயத்தில் நம்முடைய சரியான மனோபாவம் மற்றும் இவைகள் தொடர்புடைய வேதவாக்கியங்களின் போதனைகளை நாம் உண்மையாய்க் கடைப்பிடித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் தெய்வீகத் தயவிற்கு நாம் பாத்திரவான்களா (அ) பாத்திரமற்றவர்களா என்பது கணிக்கப்படும் என்பதும் உண்மையே (கலாத்தியர் 3:28; எபேசியர் 4:4). இந்த “ஆயத்தம்பண்ணும் நாளில் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்த அனைத்துக் கேள்விகளும் எழும்பிக்கொண்டிருக்க அநேக நாத்திகர்களும், கிறிஸ்தவர்களும்கூடச் சேர்ந்து வேதாகமம் மனித அடிமைத்தனத்தைப் போதிக்கின்றது எனக் கூறிவருகிறபடியால், இக்காரியமும் ஜனங்கள் பரிசீலனைப்பண்ணுவதற்கும், சர்ச்சைப்பண்ணுவதற்கும் ஏதுவாக முன்வைக்கப்பட்டு வருகின்றது (நாகூம் 2:3).

ஆகவே இக்காரியம் தொடர்பான பல்வேறு நபர்களுடைய மனித ரீதியிலான தவறான அபிப்பிராயங்கள் என்னவாக இருப்பினும், சத்தியத்திற்கு வழிநடத்துவதற்குரிய ஒரே பாதுகாப்பான வழிக்காட்டி தேவனுடைய வார்த்தைகளே என்ற நிச்சயத்துடன் இக்காரியம் தொடர்பான வேதவாக்கிய கண்ணோட்டம் என, நாம் விசுவாசிக்கின்றவைகளை முடிந்தமட்டும் சுருக்கமாக முன்வைப்பதே நமது பிரயாசமாகும். இக்காரியம் தொடர்பாக, அவருடைய வார்த்தையானது விடையளிக்காமல் இல்லை இக்காரியம் தொடர்பான வேதவாக்கியத்தின் அனைத்துச் சாட்சிகளையும் ஆராய்கையில், இது வேதாகமத்திற்கு எதிராக மேற்குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டை முற்றிலும் அமைதிப்படுத்திவிடுவதாக, நியாயமாக சிந்திக்கும் அனைத்துக் கிறிஸ்தவர்களின் கணிப்பில் காணப்படும் என நாம் நம்புகின்றோம்.

மனுஷன் முதலாவதாக உண்டாக்கப்பட்டான் மற்றும் பின்னர்த்தொடர்ந்து ஸ்திரீயானவள் மனுஷனுக்கு ஏற்ற ஆதரவாகவும், பொருத்தமான துணைவியாகவும் உண்டாக்கப்பட்டாள் என்ற குறிப்பிற்கு அப்பால், (நம் பாடத்தின்) இக்காரியம் தொடர்பான வேதாகமத்தின் முதலாவது வாக்குமூலமானது, விலக்கப்பட்டக் கனியைப் புசித்தப் பிற்பாடு, ஸ்திரீயானவளிடம் தேவன் உரைத்த வார்த்தைகளில் இடம்பெறுகின்றது — “உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்வான். ஆண்டுகொள்வதற்கான / ஆளுகைச் செய்வதற்கான அதிகாரம் இயல்பாகவே புருஷனுடைய தலைமை நிலையில் அடங்கியிருக்க, இதைவிட அதிகமான காரியத்தையே கர்த்தர் குறிப்பிட்டுள்ளார் என்பதை எளிதில் காணமுடிகின்றது; ஏனெனில் ஆதிபாவத்திலுள்ள ஸ்திரீயானவளின் பங்கின் காரணமாக அவள்மீது வந்த தண்டனைக்குத் தொடர்புடையதாகவே கர்த்தரால் அவ்வார்த்தைகள் உரைக்கப்படுகின்றது (1 கொரிந்தியர்11; 1 தீமோத்தேயு 2:13). ஸ்திரீயானவள் மீது புருஷனின் ஆண்டுகொள்ளுதல் அடக்குமுறையாக இருக்கும் என்பதும் மற்றும் வேறு விதத்தில் அவளால் அனுபவிக்க முடியாத அநீதியை அவள், புருஷனின் கீழ் அனுபவிப்பாள் என்பதும் குறிப்பாகச் சுட்டிக்காண்பிக்கப்படுகின்றது. பூரண நிலையில் தனது குடும்பத்தின் அனைத்து அங்கங்களினுடைய நலன் மற்றும் பாதுகாப்பிற்காகச் செலுத்தப்படக்கூடியதும், அன்பாகவும், வழிகாட்டுவதற்காகவும் இருக்கக்கூடியதுமான புருஷனுடைய தலைமை நிலை (அ) ஆளுகையானது, பெரும்பாலானவர்களின் விஷயத்தில் விழுகையின் காரணமாகச் சுயநலத்துடன் கூடிய ஆளுகையாகவும், அச்சம் கொடுக்கிறதும், வலுக்கட்டாயப்படுத்துகிறதுமான ஆளுகையாகவும் ஆகியுள்ளது. உண்மையில் சிலர் தங்களுடைய சுயநலமான அடக்குமுறையை நியாயப்படுத்துவதற்கென இந்த வசனத்தையே பயன்படுத்துகின்றவர்களாக இருக்கின்றனர்.

இப்பாடத்தின் காரியம் தொடர்பான கர்த்தருடைய வாக்குமூலத்தினை, சம்பவித்துள்ள மெய்யான சம்பவங்கள் முழுமையாக உறுதிப்படுத்தினாலும், அதற்கென்று தங்களுக்கு இயற்கையாகவே காணப்படும் தலைமைத்துவத்தை இவ்வாறாக தவறாய்ப் பயன்படுத்துபவர்கள் மூலம் தேவனுடைய சித்தம் நிறைவேற்றப்படுகின்றது என அனுமானிப்பதும் பெரிய தவறாகும். மாறாக இவர்களின் செயல்பாடுகளில் மனிதன் தன் ஆதி தேவசாயலினின்று விழுந்ததின் காரணமாக பெண்ணினம் மீது வரும் தீமைக்குறித்ததான தேவனுடைய தீர்க்கத்தரிசனத்தையே நாம் பார்க்க வேண்டும். மேலும் எந்தளவுக்கு மனுஷன் சீர்க்கேடு அடைந்திருக்கின்றானோ, அவ்வளவுக்கு அதிகமாய் அவன் தன்னுடைய சொந்த சரீரமாகப் பேணவும், அன்பு செய்ய வேண்டியவளுமானவளை இரக்கமற்ற விதத்தில் நடத்துவதும் கவனிக்கப்படலாம்.

உலகத்தில் புருஷனுடைய செயல்பாட்டு எல்லையானது மிகத் தெளிவாகச் சிருஷ்டிகளுடைய தலை அல்லது பிரதானமானவர் என்று விளக்கப்பட்டிருக்கிறது. புருஷனுக்கு உதவி செய்பவளாக, வாழ்க்கைத் துணைவியாக இருக்கும் ஸ்திரீயானவளின் செயல் எல்லையானது மிகுந்த வாக்குவாதத்திற்குரியதாகவே காணப்படுகின்றது. “எந்தளவுக்கு ஸ்திரீயானவள், புருஷனுக்கு உதவிச் செய்யலாம்? என்பதே கேள்வி; வேதாகமத்தின் போதனைப்படி ஸ்திரீயானவள் அவளால் முடிந்தமட்டும் மற்றும் வாய்ப்புகள் அனுமதிக்கும் அளவுக்கும் வீட்டிலும், சபையிலும், உலகத்திலும் புருஷனுக்கு உதவி செய்யலாம் என நாம் [R1549 : page 201] நம்புகிறவர்களாக இருக்க — ஒருவேளை வீட்டில் இல்லையென்றாலும், சபையிலும், உலகத்திலுமாகிலும் அவளுடைய செல்விக்கை அதிகமானளவில் எல்லைக்குட்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் விதத்தில் அநேக வேறுபாடான கருத்துக்களுள்ள குரல்கள் நமக்குக் கேட்கின்றது. ஆகையால் சபையில் ஸ்திரீயினுடைய ஸ்தானத்தைக் குறித்து வேதவாக்கியங்கள் கூறுவது என்ன என்று நாம் முதலாவதாகக் கேட்கலாம்.

சபையில் ஸ்திரீயினுடைய இடம்

பாலினத்தைப் பொருட்படுத்தாமல் பேதுரு முழுச்சபையை நோக்கி: “நீங்களோ, உங்களை (அனைவரும் – ஆண்கள் மற்றும் பெண்கள்) அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்த வருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரிகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள் என்றார் (1 பேதுரு 2:9). இன்னுமாக “கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார் என்றும் வாசிக்கின்றோம் (ஏசாயா 61:1). லூக்கா 4:18-20 வரையிலான வசனங்களையும்கூடப் பாருங்கள்; “ஆண்டவருடைய ஆவி என்மேல் உள்ளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர். பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார். பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன (திருவிவிலியம்). இதில் நமது கர்ததர் உரைக்கும் தீர்க்கத்தரிசனத்தில் ஒரு பகுதியே அவருக்குப் பொருந்துகின்றதாகவும், மீதி அவருடைய நாட்களுக்குரியதாய் இராமல், கிறிஸ்துவின் சரீரத்தினால் அறிவித்தல் – ஆண்களும், பெண்களும் – அறிவித்தல் பற்றியதாகவும் உள்ளது. இவ்வசனத்தில் இடம்பெறும் “ஏனெனில் எனும் வார்த்தையானது, இவ்விதமாய் அபிஷேகிக்கப்பட்டவர்கள் ஆண்களோ அல்லது பெண்களோ சரி, அவர்கள் – நற்செய்தியினைப் பிரசங்கிக்க, அவர்களைத் தகுதியாக்கிடுவதே அபிஷேகித்தலுக்கான நோக்கமாய் இருக்கின்றதெனச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. ஆகையால் அபிஷேகிக்கப்பட்டவர்கள் அனைவரும் – அவர்கள் ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ, யூதர்களாகவோ அல்லது கிரேக்கர்களாகவோ, அடிமையானவனாகவோ அல்லது சுயாதீனனாகவோ இருப்பினும் – அவர்கள் அனைவரும் பிரசங்கிக்கும்படிக்கு அபிஷேகிக்கப்பட்டவர்கள் ஆவர். எபிரெயர் 5:12-ஆம் வசனத்தில் பவுலடிகளார் பாலின வித்தியாசம் ஏதும் குறிப்பிடாமல், ஊழியத்திற்குத் தங்களைத் தகுதிப்படுத்திடும் வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தவறின காரணத்தினால், போதிக்கத் திறமையற்றுக் காணப்படுவதற்காய்ச் சபையைக் கடிந்துகொள்ளும் விதமாய், “(செலவழிக்கப்பட்ட) காலத்தைப் பார்த்தால் போதகராயிருக்கவேண்டிய உங்களுக்குத் தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள் என்று கூறுகின்றார். மீண்டுமாக, “அவனவன் (ஆண் அல்லது பெண்) பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள் என்று நாம் வாசிக்கின்றோம் (1 பேதுரு 4:10). “மேலும் உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவசியமாம் என்றும் பவுலடிகளார் கூறியுள்ளார் (1 கொரிந்தியர் 4:2). இதில் பாலின வேறுபாடுகள் இல்லை தாலந்தையோ அல்லது வரத்தையோ உடைய ஒவ்வொருவரும் ஆண் அல்லது பெண், அத்தாலந்திற்கு உக்கிராணக்காரர் ஆகுகின்றனர்; மற்றும் கணக்கு ஒப்புவிக்கும் கர்த்தருடைய நாளில், ஒவ்வொரு உக்கிராணக்காரனும் தனது உக்கிராணத்துவத்தைக்குறித்துக் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். பெற்றிருக்கும் தாலந்துகளைப் பயன்படுத்துகிற விஷயத்தில் அனைவரிடமும் உண்மை எதிர்ப்பார்க்கப்படும் (மத்தேயு 25:14-30).

இந்த வேதவாக்கியங்கள் போதிப்பவைகளுக்கு இசைவாகப் பார்க்கையில் ஸ்திரீகளும், புருஷர்களும் கொஞ்சமாகவோ அல்லது அதிகமாகவோ காணப்படும் தங்களது தாலந்துகளைச் சபையில் பயன்படுத்துகிற விஷயத்தில் தேவனுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர் என்று பார்க்கின்றோம் மற்றும் பவுலடிகளாருடைய போதனைகளை வைத்துப் பார்க்கையில், கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஒவ்வொரு அவயவத்தினுடைய செயல்பாடும், முழுச்சரீரத்தினுடைய பொதுவான ஆரோக்கியத்திற்கு அவசியமானதாய் இருக்கின்றது; இதற்கு அநேகம் உதாரணங்களை வேதவாக்கியங்களில் நாம் பெற்றிருக்கின்றோம். (1) கல்லறையில் உயிர்த்தெழுதலின் காலை வேளையில் முதலாவது வந்து காணப்பட்ட ஸ்திரீகள், தம்முடைய உயிர்த்தெழுதலைக்குறித்த முதலாம் செய்தியை அப்போஸ்தலர்களுக்கு எடுத்துச் செல்லுமாறு, கர்த்தரினால் அனுப்பிவைக்கப்பட்டனர். (2) கர்த்தர் உரையாடிக்கொண்டும், தம்மை மேசியாவென வெளிப்படுத்துவதற்குப் பிரியம்கொண்டு வெளிப்படுத்திட்ட சமாரியாவின் ஸ்திரீயானவள், பட்டணத்திற்குள் போய், அநேகருக்குச் செய்தியைத் தெரிவிப்பதற்குத் தடைப்பண்ணப்படவில்லை – இதை அவள் உடனடியாக, தனது தண்ணீர் குடங்களைவிட்டு விட்டு, துரிதமாய்ப் புறப்பட்டுப்போய்ச் செய்தாள். இதன் விளைவாக, அதுவும் அவள் எப்படிச் சாட்சி பகிர்ந்திருப்பினும், அவளது சாட்சி பகிர்தலின் வாயிலாக அநேகர் விசுவாசம் வைத்தார்கள் (யோவான் 4: 28-30,39).

இன்னுமாக ஸ்திரீகளும், புருஷர்களும் தீர்க்கத்தரிசனத்தின் வரத்தினை உடையவர்களாய்க் காணப்பட்டனர் என்று நாம் பார்க்கின்றோம்: இந்தத் தீர்க்கத்தரிசனம் உரைத்தலானது, “பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசப்படுபவைகள் – அதாவது தேவனுடைய வரத்திற்கேற்ப போதிப்பதாக அல்லது புத்திமதி கூறுவதாக இருக்கும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் விளக்கமளிக்கின்றார் (1 கொரிந்தியர் 14:3,4). (1 கொரிந்தியர் 12:31-ஆம் வசனத்தையும் பார்க்கவும்). 1 கொரிந்தியர் 11-ஆம் அதிகாரத்தில் அந்நாட்களில் தன்னடக்கத்திற்கு விசேஷித்த அடையாளமாய் விசேஷமாக கிரேக்கர்கள் மத்தியில் காணப்பட்டதான தலைக்கு முக்காடிட்டுக்கொள்ளுதலோடு, ஸ்திரீகள் பொது இடங்களில் ஜெபம்பண்ணுதல் மற்றும் தீர்க்கத்தரிசனம் உரைத்தல் என்பவற்றின் ஏற்புடைமையைப் பவுல் ஒப்புக்கொள்கின்றார். முக்காடிட்டுக் கொள்ளும் வழக்கத்தினைப் புறக்கணித்தல் என்பது, அதுவும் சுவிசேஷத்தின் சுயாதீனத்தை உணரத் துவங்குகையில், சிலரால் இவ்வழக்கம் புறக்கணிக்கப்படுதல் என்பது, கிறிஸ்துவின் காரணங்கள் மீதும், கிறிஸ்தவ விசுவாசத்தின் “தூதர்கள், செய்தியாளர்கள் அல்லது ஊழியக்காரர்களாகிய – அப்போஸ்தலர்கள் மற்றும் மற்றவர்களின் மீதும் நிந்தனையைக்கொண்டுவருகின்றதாய் இருக்கும்.

ஸ்திரீகள் தீர்க்கத்தரிசனம் உரைத்ததற்கு நாம் சில உதாரணங்களைப் பெற்றிருக்கின்றோம்; உதாரணம்: அன்னாள் (லூக்கா 2:36-38); பிலிப்பின் நான்கு குமாரத்திகள் (அப்போஸ்தலர் 21:8,9); மிரியாம் (மீகா 6:1-4); உல்தாள் (2 நாளாகமம் 34:21-28) மற்றும் தெபோராள் (நியாயாதிபதிகள் 4:4-24). இன்னுமாக யோயேல் 2:28,29-ஆம் வசனங்களின் குறிப்பிடத்க்தான தீர்க்கத்தரிசனத்தையும் நாம் பெற்றிருக்கின்றோம்; இது பெந்தெகொஸ்தே நாளில் கூடியிருந்த அனைவரின் மீதும் பரிசுத்த ஆவி இறங்கி வந்தபோது, கொஞ்சமேனும் நிறைவேறினதெனப் பேதுரு குறிப்பிடுகின்றார் (அப்போஸ்தலர் 2:17,18). ஆதிசபையில் சில குறிப்பிட்ட ஸ்திரீகளின் ஊழியங்களைப் பாராட்டி பவுல் குறிப்பிடவும் செய்கின்றார் [R1549 : page 202]- பிரிஸ்கில்லா, திரிபோனாள், திரிபோசாள், ரூபையின் தாயார், நேரேயுவின் சகோதரியாகிய யூலியாள் ஆவார்கள் (ரோமர் 16; பிலிப்பியர் 4:3). 1 கொரிந்தியர் 16:19-ஆம் வசனத்தைத் தவிர மற்றப்படி பிரிஸ்கில்லாவும், அவளது கணவன் ஆக்கில்லாவும் குறிப்பிடப்படும் எல்லா வசனங்களிலும், பிரிஸ்கில்லாவே இருவரிலும் மிக முதன்மையானவள் போலும், இருவரில் சுறுசுறுப்பானவள் போலும் முதலாவதாக குறிப்பிடப்படுகின்றாள் (ரோமர் 16:3; 2 தீமோத்தேயு 4:19; அப்போஸ்தலர் 18:18,26 Revised Version – பார்க்கவும்). பிரிஸ்கில்லாவும், அவளது கணவனும் கொரிந்துவிலிருந்து எபேசு வரையிலான பவுலினுடைய யாத்திரைகள் ஒன்றில் கூடவே சென்றுமிருக்கின்றனர்; இங்கு இவர்கள் அப்பொல்லோவைக் கண்டு, தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக் கொண்டிருந்தார்கள் (அப்போஸ்தலர் 18:18-20). வேதவாக்கியங்களானது உலகத்தாருக்காய்ப் பேசப்படவில்லை என்றாலும், ஸ்திரீயின் சுபாவமும், கல்வியறிவும் அவளைத் தகுதிப்படுத்துகின்ற ஜீவியத்தின் நியாயமான பல்வேறு தொழில்களில் பெண்கள் ஈடுபடுவதற்கு முரணாக எந்த வார்த்தைகளையோ, உதாரணங்களையோ முன்வைக்கிறதில்லை. அந்தக் காலங்களிலெல்லாம் பெண்களுக்குக் கல்வி என்பது பின்தங்கியிருந்த போதிலும், வீட்டு வேலைகளைத் தவிர மற்ற வேலைகளில் ஸ்திரீகள் ஈடுபடுவது அபூர்வமாக இருந்தபோதிலும், இஸ்ரயேலில் ஒரு திறமிக்க பெண் நியாயாதிபதியாக, லபிதோத்தின் மனைவியாகிய தெபோராள் காணப்பட்டாள் என்ற சிறந்த உதாரணம் காணப்படுகின்றது (நியாயாதிபதிகள் 4:4-24; 5:1-31). இவள் தீர்க்கத்தரிசியாகவும், மிகுந்த திறமையும், செல்வாக்குமுள்ள ஸ்திரீயாகக் காணப்பட்டாள். சல்லூமின் மனைவியாகிய உல்தாளும் தீர்க்கத்தரிசியாகவும், இஸ்ரயேலின் இராஜாவினால் அழைத்து அனுப்பப்பட்டவளுமாய் இருந்தாள் (2 இராஜாக்கள் 22:14-20).

இவைகள் அனைத்தையும் வைத்துப்பார்க்கையில், நபர்களுக்குப் பாரபட்சம் பார்த்திடாத தேவன் பெண் உக்கிராணக்காரர்களின் சார்பிலும், ஆண் உக்கிராணக்காரர்களின் சார்பிலும் அவர்களது தாலந்துகள் யாவற்றையும் பயன்படுத்துவது தொடர்புடைய விஷயத்தில் – அதுவும் தங்கள் பாலினத்திற்கு விசேஷமாய்த் தேவைப்படும் தன்னடக்கத்துடன் செய்வது தவிர, வேறெந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல், அவர்களது தாலந்துகள் யாவற்றையும் பயன்படுத்துவது தொடர்புடைய விஷயத்தில் உண்மையினை எதிர்ப்பார்க்கின்றார் என்று நாம் புரிந்துகொள்கின்றோம்; இன்னுமாக ஒருவேளை தேவன் கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள எந்தவொரு பெண் அங்கத்தினருக்குப் போதிப்பதற்கோ அல்லது தீர்க்கத்தரிசனம் உரைப்பதற்கோ தாலந்தோ அல்லது விசேஷித்த திறமையோ கொடுத்திருப்பாரானால், அதை ஊக்கமாய்ப் பேணி வளர்ப்பதும், ஞானமுள்ள மற்றும் உண்மையுள்ள உக்கிராணக்காரியென அந்தத் தாலந்தினைப் பயன்படுத்திடுவதும் அவளது சிலாக்கியமாய் மாத்திரம் காணப்படாமல், அவளது கடமையாகவும் காணப்படுகின்றது என்றும் நாம் புரிந்துகொள்கின்றோம். இதை அப்போஸ்தலனாகிய பவுல் 1 கொரிந்தியர் 12:28-31-வரையிலான வசனங்களில் தெளிவாய்ப் போதிக்கின்றார்; அதாவது போதிப்பது என்பது முக்கியமான வரங்களில் ஒன்றெனத் தெரிவித்தப் பிற்பாடு, பாலின வேற்றுமை குறிப்பிடாமல், ” முக்கியமான வரங்களை நாடுங்கள் என்று அனைவருக்கும் வலியுறுத்துகின்றார்.

மனுஷனிடத்திலுள்ள ஸ்திரீயின் உறவு

மேலே இடம்பெறும் வேதவாக்கியங்களின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்ட காரியங்களுக்கு நேரடியாய் முரண்பாடாக, அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகளில் இடம்பெறுவதாகச் சிலரால் கருதப்படுபவைகளை, அடுத்ததாக நாம் பார்க்கலாம். “உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை அவள் அமைதலாயிருக்கவேண்டும். “But I suffer not a woman to teach, nor to usurp authority over the man, but to be in silence [hesuchia, quietness].” (1 தீமோத்தேயு 2:12) அப்போஸ்தலன் இந்தக் கட்டுப்பாட்டிற்கான தனது காரணத்தைக் கொடுக்கின்றார்; மற்றும் இப்படிக் காரணம் கொடுக்கையில் அவர் ஏதேன் தோட்டத்தில் ஆதாம் மற்றும் ஏவாளுக்கிருந்த உண்மையான உறவினிடத்திற்கு நம்மைத் திருப்பி, “என்னத்தினாலெனில் முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள் என்று கூறுகின்றார் (1 தீமோத்தேயு 2:13,14). ஆதியாகமம் 2:16,17-ஆம் வசனங்களுக்கு வரும்போது, ஏவாள் சிருஷ்டிக்கப்படுகிறதற்கு முன்னதாக, “தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார் என்று பார்க்கின்றோம்.

ஆகையால் கர்த்தர் ஏவாளிடம் நேரடியாய்ப் பேசாமல் ஆதாமிடமே பேசினார் என்றும், தேவனிடமிருந்து ஆதாம் வாயிலாக ஏவாள் இந்த எச்சரிப்பைப் பெற்றுக்கொண்டாள் என்றும் தெளிவாகுகின்றது. இப்படியாக ஆதாம், தேவனுக்குக்கீழ்ப் போதிப்பவராகவும், ஏவாள் கற்றுக்கொள்பவளாகவும் காணப்பட்டனர். இந்த விதத்தில் பார்க்கையில் அப்போஸ்தலன் 1 தீமோத்தேயு 2:11- ஆம் வசனத்தில் ஆலோசனை கூறுவது போல் ஸ்திரீயானவள் “எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள் என்பது சரியானதாகவும், தகுதியானதாகவும் காணப்படும். மறுப்பதற்கு அவளுக்கு என்ன உரிமை இருக்கின்றது? தேவன் அவளது கணவனுக்குப் போதித்துள்ளார் மற்றும் அவளை அவனிடம் கொடுத்ததன் மூலம், கணவனுக்கான கடமைகளானது (அவளைக் கவனித்துக்கொள்வதற்கும், அவள் தேவைகளைச் சந்திப்பதற்குமான கடமைகளானது) அவன் மீது சுமத்தப்பட்டுள்ளது மற்றும் இந்தக் கடமையினை நிறைவேற்றிடும் வண்ணமாகவே, அவள் பாதுகாக்கப்படவும், தேவனுக்கு இசைவாய் அவள் காணப்படத்தக்கதாகவும் அவசியமாயிருந்த இந்த அறிவானது ஆதாமினால், ஏவாளுக்குக் கொடுக்கப்பட்டது. இப்படியாகத் தேவன் மனுஷனுடைய தலைமை ஸ்தானத்தைக்குறித்துக் கற்பித்தார் மற்றும் இதைக் கொரிந்து பட்டணத்து சபையார் தெளிவாய்ப் புரிந்துகொள்ள அப்போஸ்தலன் விரும்பிட்டார் (1 கொரிந்தியர் 11:3).

எதிராளியானவன் ஏவாளிடம் பேசினபோது, அவளது கணவன் வாயிலாக தேவன் கொடுத்திட்ட எச்சரிப்பை அலட்சியப்படுத்துவதற்கு, அவளைச் சோதனைக்குள்ளாக்கினான். இதை அவள் செய்தாள், அதுவும் தேவனுக்கு இசைவற்றுள்ள இந்தப் புதிய மற்றும் விநோதமான போதகருக்குச் செவிச்சாய்ப்பது சரியாய் இருக்குமோ என்று ஆதாமிடம் ஆலோசனை கேட்காமலேயே செய்துவிட்டாள். தேவனைச் சார்ந்திராமலும், தனக்குத் தேவன் அளித்த பாதுகாப்பாளனைச் சார்ந்திராமலும் அவள் செயல்பட்டதினால், அவள் மீறுதல் செய்தாள் மற்றும் இப்படி அவள் தேவனைப் புறக்கணித்தப்படியால், அவள் அவளாய்ச் சிந்தித்துச் செயல்படுவதற்கு முற்றிலும் தனித்துவிடப்பட்டாள் மற்றும் அவளது நடவடிக்கையிலுள்ள அநீதி குறித்த விஷயத்தில் வஞ்சிக்கப்படாமல், அந்த நடவடிக்கையின் பலன் தொடர்புடைய விஷயத்தில் வஞ்சிக்கப்பட்டாள்; அதாவது அவளது இந்த நடவடிக்கையானது மரணத்திற்குப் [R1549 : page 203] பதிலாக, மாபெரும் ஆசீர்வாத்த்திற்குள்ளாக ( அறிவிற்குள்ளாக) நடத்திடும் என்று ஊகித்துக்கொண்டதில் வஞ்சிக்கப்பட்டாள். அவள் ஆதாமையும், ஆதாமின் வாயிலான தேவனுடைய புத்திமதியையும் புறக்கணித்தது மாத்திரமல்லாமல் மற்றும் தனது சொந்த கணிப்பின்படி செயல்பட்டது மாத்திரமல்லாமல், அவள் தனது புதிய உபதேசத்தை ஆதாமுக்குப் போதிக்க அல்லது ஆதாமை வழிநடத்த முற்பட்டு, இவ்விதமாய்த் தலைமைத்துவத்தின் திவ்விய ஒழுங்கினைத் தலைக்கீழாக்கிப் போட்டாள். இந்தத் தலைக்கீழான தலைமைத்துவத்தின் ஒழுங்கினைப் பின்பற்றினதில், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை என்றாலும், அவரும் மீறுதல் செய்தவரானார்.

இந்தக் காரணத்தின் நிமித்தமாகவே, “உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும் ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை என்று அப்போஸ்தலன் கூறுகின்றார். ஆனால் இந்தக் கட்டுப்பாட்டினையும், நாம் ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிற மற்றும் முரணாய் இருப்பதுபோன்று தோற்றமளித்த அந்த வேதவாக்கியங்களையும் எப்படி இசைவுக்குள் கொண்டுவருவது என்பது, அநேகருக்கு இன்னமும் சிரமமான கேள்வியாகவே காணப்படுகின்றது; ஆனால் இதற்கு நிச்சயமாய் ஏதோ ஒரு தீர்வு காணப்பட வேண்டும். ஆனால் முதலாவது நாம் கேட்பதென்னவெனில், தலைமைத்துவத்திற்கான இந்த ஒழுங்கானது பெண் இனத்தினின்று வேறுபட்டுள்ள ஆண் இன வகுப்பாருக்கு இயல்பாய் உள்ள ஒன்றா? அல்லது அது புருஷனுக்கும், மனைவிக்கும் இடையிலான உறவிற்கு மாத்திரமே பொருந்துகின்றதாய் இருக்குமா? முதலாவது காரியம் உண்மை என்றும், இது 1 கொரிந்தியர் 11:3-ஆம் வசனத்தினால் நிரூபணமாகின்றது என்றும் நாம் எண்ணுகின்றோம்; “ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.

அப்படியானால் தலைமைத்துவத்தின் ஸ்தானம் என்பது எதைக் குறிக்கின்றதென நாம் கேட்கலாம்? இந்த அடையாளமானது, மனித சரீரத்தினுடைய அந்த முக்கியமான அவயமாகிய தலை, அதாவது அதன் பிரதான அவயத்தில் – அதாவது அதிகாரத்திற்கும் மற்றும் தலைமைத்துவத்திற்குமுரிய உரிமையினைப் பெற்றுள்ள அவயத்தில் கவனிக்கக்படலாம். இந்த விளக்கமானது, யேகோவா தேவனுக்கும், கிறிஸ்துவுக்கும் இடையிலான உறவிலுள்ள [R1550 : page 203] தலைமைத்துவத்தின் பூரண விளக்கத்தினால் உண்டாகுகின்றதாய்க் காணப்படுகின்றது. ஒருவரில் சட்டத்தை இயற்றும் தன்மையும், மற்றவரில் பிரதிநிதியென நிறைவேற்றிடுவதற்குரிய வல்லமையும் காணப்படுகின்றது. இந்த விளக்கத்திற்கு இசைவாக, கிறிஸ்துவினிடத்திலான மனுஷனுடைய உறவும், மனுஷனிடத்திலான ஸ்திரீயின் உறவும், கீழ்ப்படிந்திருக்கும் ஒன்றாகவே இருக்க வேண்டும்; மேலும் ஒருவேளை புருஷர்களும், ஸ்திரீகளும் பூரணர்களாய் இருந்திருப்பார்களானால், இத்தகைய உறவின் அருமையான இசைவானது, இருவருக்கும் பூரண திருப்தியைக் கொடுத்திருக்கும். புருஷன் கிறிஸ்துவோடு இசைந்து காணப்பட்டிருந்திருப்பார்; ஸ்திரீ புருஷனோடு இசைந்து காணப்பட்டிருந்திருப்பாள் மற்றும் அனைவரும் யேகோவா தேவனோடு இசைந்து காணப்பட்டிருந்திருப்பார்கள். இப்படியாகத் தலைமைத்துவத்தின் திவ்விய ஒழுங்கானது, அனைவரையும் பரஸ்பர அன்பின் மற்றும் சமாதானத்தின் கட்டில் ஒருங்கிணைத்திருக்கும்.

ஆனால் கேள்வி என்னவெனில், தலைமைத்துவம் பற்றின இக்கருத்தானது எப்படித் தனிப்பட்ட சுயாதீனம் – அதாவது தேவனுடைய புத்திரர்களுக்கான மகிமையான சுயாதீனம் குறித்த கருத்திற்கு இணக்கமாய்க் காணப்பட முடியும்? இதற்காக தலை மற்றும் சரீரத்தின் உதாரணமானது அதன் உச்ச எல்லைவரை வலியுறுத்தப்பட வேண்டுமா? ஆரோக்கியமான நிலையில் இருக்கும் சரீரமானது, தலையினுடைய ஒப்புதல் மற்றும் அதிகாரம் அளிக்கப்படாமல், எதையும் செய்வதில்லை மற்றும் ஆரோக்கியமான நிலைமையில் காணப்படும் கிறிஸ்துவின் மறைபொருளான சரீரமும் (சபையும்) கிறிஸ்துவின் சித்தத்தை அறியவும், செய்யவும் எப்போதும் நாடுகின்றதாய் இருக்கும் மற்றும் கிறிஸ்துவும் பிதாவின் சித்தத்தை அறியவும், செய்யவும் எப்போதும் நாடினார். ஆகையால் மனித குடும்பமானது பாவத்தினால் சீரழிக்கப்படவில்லையெனில், ஸ்திரீயானவள் தன் நிலைமையினை அனுபவித்தவளாகவும், புருஷன் தனது பலத்தை, மனதை அல்லது சரீரத்தைக் கொடுமைப்படுத்துவதற்குத் தவறாய்ப் பயன்படுத்தாதவராகவும் காணப்பட்டிருந்திருப்பார்கள். யேகோவா தேவனுக்கும், கிறிஸ்துவுக்கும் இடையிலான இந்த உறவின் பூரண விளக்கத்தினை மறுபடியுமாகப் பார்க்கையில், தலைமைத்துவத்தின் ஒழுங்கானது சரியாய்ச் செயல்படுத்தப்படும் பட்சத்தில், அது தேவனுடைய புத்திரர்களுக்கான மகிமையான சுயாதீனத்திற்கு முற்றிலும் இசைந்தே காணப்படும் என்று நாம் காண்கின்றோம். யேகோவா தேவன் கிறிஸ்துவின் தலையாய் இருப்பினும், அவர் தமது குமாரனைக் கனப்படுத்துவதிலும், அவரைச் சகல அதிகாரங்கள் மற்றும் துரைத்தனங்களின் தலையாக்கிடுவதிலும் பிரியப்படுவதையும், “பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல, குமாரனையும் கனம்பண்ணும்படிக்குச் சகல மனுஷர்களுக்கு அவர் கூறுவதையும் நாம் காண்கின்றோம் [ஏனெனில் அவர் பிதாவின் பிரதிநிதியாகவும், அவரது தற்சொரூபமாகவும் காணப்படுவதினாலேயே ஆகும்] (கொலோசெயர் 2:10; 1:16; எபேசியர் 1:10). அவர் நியாயந்தீர்ப்பது அனைத்தையும்கூடக் குமாரனிடத்தில் ஒப்படைப்பதைப் பார்க்கின்றோம். அவர் குமாரனை முதலாவதாகச் சோதித்து, நிரூபித்து, அவரை நம்பிக்கைக்குப் பாத்திரவானாய்க் கண்டுகொண்டார்; மற்றும் தம்முடைய திட்டங்களை அவருக்குத் தெரிவித்தப் பிற்பாடு, அவற்றை நிறைவேற்றுவதை அவரிடத்தில் ஒப்புவித்தார். ஆகையாலே, “பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார் என்று வாசிக்கின்றோம் (யோவான் 5:22). மறுபடியுமாக, “வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் நாம் வாசிக்கின்றோம் (மத்தேயு 28:18).

யேகோவா தேவனிடத்தில் இயேசு பெற்றிருக்கும் இந்த உறவில் அடிமைத்தனத்திற்கு ஒத்த எதுவுமில்லை என்பதில் நிச்சயமே மாறாக யேகோவா தேவனுடைய மேலான தலைமைத்துவத்தின் கீழ் முழுமையான சுயாதீனமும், கிறிஸ்துவின் உயர்ந்த வல்லமைகள் அனைத்தையும் வளர்த்திடுவதற்கும், பயன்படுத்திடுவதற்கும் பரந்த வாய்ப்பும் காணப்பட்டது. கிறிஸ்துவும்கூடத் தம்முடைய தலையாகிய யேகோவா தேவனுக்குக் கீழ்ப்பட்டுக் காணப்பட்டு, தம்முடைய வேலைகள் அனைத்திலும் யேகோவா தேவனுடைய ஞானமும், காருண்யமும் கட்டளையிடுகின்றதான அந்த வேலை திட்டத்திற்கும் மற்றும் செயல்முறை கொள்கைகளுக்கும் கீழ்ப்பட்டுக் காணப்பட்டார். யேகோவா தேவனுடைய தலைமைத்துவத்தின் இந்த எல்லைகளுக்குள்ளாக, தேவனுடைய ஒரே பேறான குமாரனுக்கான மகிமையான சுயாதீனம் காணப்பட்டது. இப்படியாகவே புருஷனும், அவனது தலையாகிய கிறிஸ்துவுக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும்;; யேகோவா தேவன் போன்று, கிறிஸ்துவினுடைய மேற்பார்வையும், புருஷனது மனுஷீக வல்லமைகள் அனைத்திற்கும் பரந்த எல்லையை மற்றும் வளர்ச்சியினைத் தாராளமாய் [R1550 : page 204] அனுமதிக்கின்றதாய் இருக்கும். இப்படியாகவே புருஷனது தலைமைத்துவமும் ஸ்திரீயானவளுக்குச் செயல்படுகிறதாய் இருக்க வேண்டும் – கொடுமையின் அடிமைத்தனத்தின் கீழ் அவளது வல்லமைகளைக் குறைவுப்படுத்தி, வளர்ச்சியடைவதைத் தடுப்பதாய் இராமல், மாறாக அவளை உயர்த்திடவும், கண்ணியப்படுத்திடவும், தனது தலைமைத்துவத்தின் கீழ், அவளது வல்லமைகள் அனைத்தையும் நியாயமாய்ப் பயன்படுத்துவதற்குரிய முழுமையான சுயாதீனத்தை அருளிடவும், ஊக்குவித்திடவும் வேண்டும்.

“உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை;” “பெண்கள் கற்றுக்கொடுக்கவோ, ஆண்களைக் கட்டுப்படுத்தவோ நான் அனுமதிக்க மாட்டேன். அவர்கள் அமைதியாயிருக்க வேண்டும் (திருவிவிலியம்). “But I suffer not a woman to teach, nor to usurp authority over the man” என்ற பவுலடிகளாரின் வார்த்தைகளுக்குத் திரும்பி வருகையில், கட்டுப்பாட்டிற்காகக் கொடுக்கப்பட்டக் காரணங்களுக்கு இசைவாகவும் மற்றும் ஸ்திரீகள் அநேகம் தருணங்களில் போதித்துள்ளதாக வேதவாக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதான உண்மையோடும் கூட, நாம் இவ்வசனத்தின் பிந்தைய பாகத்தினுடைய வெளிச்சத்தில் முந்தின பாகத்திற்கு அர்த்தம் பார்க்கப்போகின்றோம்; அதாவது வழிநடத்துபவரென மற்றும் போதகரெனப் புருஷனுக்குரிய ஸ்தானத்தை ஸ்திரீயானவள் பறித்திடக்கூடாது மற்றும் புருஷனுடைய தலைமைத்துவத்தை அவமதித்து, அந்தப் பொறுப்பை / நிலையை, அதாவது இயல்பிற்கு முரணாக, ஸ்திரீகளுக்குரிய பண்புகளுக்குப் பொருத்தமற்ற மற்றும் சரியாய்ச் சிந்திக்கும் ஜனங்கள் அனைவரின் கண்களுக்கும் அழகற்ற நிலையை / பொறுப்பை எடுத்துக் கொள்ளக்கூடாது. இங்கு இடம்பெறும் அப்போஸ்தலனின் வார்த்தைகளுக்குக் கொடுக்கப்படும் இந்த விளக்கத்துடன், மற்ற இடங்களிலெல்லாம் இடம்பெறும் அவரது போதனைகளானது, உதாரணத்திற்கு 1 கொரிந்தியர்11:5-ஆம் வசனத்தின் போதனைகளானது முழு இசைவுடனே காணப்படுகின்றது.

ஸ்திரீயானவளை அவளது சிலாக்கியங்களினின்றும், ஞானமுள்ள உக்கிராணக்காரியாகவும் மற்றும் தனது உக்கிராணத்துவத்தைக் குறித்துக் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவளாகவும், தனது தாலந்துகள் அனைத்தையும் அவள் நல்ல முறையில் பயன்படுத்துவதிலிருந்தும் தடைப்பண்ணுவது நோக்கமல்ல, மாறாக ஜீவியத்தில் அவளது செல்வாக்கினைப் பயன்படுத்திடுவதற்கான சிறந்த மற்றும் மிகவும் பயனுள்ள வழிகளை அவளுக்குச் சுட்டிக்காட்டுவதே நோக்கமாய் உள்ளது. புருஷர்களுக்கும், ஸ்திரீகளுக்கும் அவர்களது சுபாவமானது அவர்கள் பயனுள்ள விதத்தில் செயல்படுவதற்குரிய சரியான செயல்பாடு எல்லையைப் பொதுவாய்ச் சுட்டிக்காண்பித்திடும் என்பதில் ஐயமில்லை ஆனால் யாருமே சுபாவ நிலையில் காணப்படுகிறதில்லை – அனைவருமே மனரீதியிலும், சரீர ரீதியிலும் மற்றும் நன்னெறி விஷயத்திலும் வீழ்ச்சியடைந்துள்ளனர் மற்றும் சிலர் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாகவும் மற்றும் பல்வேறுவிதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளனர். பெண் இயல்புகளுள்ள எந்த ஸ்திரீயும் சத்தமிட்டு உரத்துப்பேசும் சொற்பொழிவாளராக, பிடிவாதமாய் வலியுறுத்தும் வாதம் செய்பவராக, அனாவசியமாக தலையிட்டுப் பேசும் பேச்சாளராக, பேராசையுள்ள வழிநடத்துனராக தான் ஆகிட வேண்டும் என்று விரும்புகிறதில்லை. எனினும் பொருத்தமான தருணங்களில், சத்தியத்திற்கடுத்த நலன்களின் விஷயத்தில் தேவைப்படும் பட்சத்தில், அவள் ஸ்திரீகளுக்குரிய வித்திலும், தலைமைத்துவத்திற்கான புருஷனுக்குரிய மேலான உரிமையினைக் கொஞ்சமும் எடுத்துக்கொள்ளாத விதத்திலும், தான் கூறுவதைக் கேட்கின்றவர்கள் எத்தனை பேர்களோ, அவர்கள் ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ இருப்பினும், அவர்கள் யாவருக்கும் மகா சந்தோஷத்தின் நற்செய்தியினை அவள் தெரிவித்திடலாம்; சில தருணங்களில் சத்தியத்திற்கடுத்த விஷயங்களில், அவள் கேள்விக்குறித்த ஒரு விவாதம் பண்ண வேண்டிய அவசியம் ஏற்படுகையில், கேள்வி கேட்டு புரிய வைத்திடலாம் மற்றும் இதைத் தைரியமாயும் செய்திடலாம். மனித சுபாவத்தினை நன்கு அறிந்திருப்பவர்கள், கேள்வி வழிமுறையின் வாயிலாக தவறான அபிப்பிராயங்களை அகற்றிடுவதும், சத்தியத்தை உறுதிப்படுத்துவதும் சிறந்ததாய் இருக்கும் என்று அறிவார்கள்.

இப்படி ஒரு ஸ்திரீ தேவனுடைய பிள்ளையெனத் தனது சுயாதீனத்தை முழுமையுமாகச் செயல்படுத்தி, கேட்க விரும்பும் அனைவருக்கும் முன்பாக தனது பலமான காரணங்கள் அனைத்தையும் கொண்டுவந்து, சத்தியம் குறித்த தனது நம்பிக்கையினைத் தெளிவாய் முன் வைத்திடலாம்; ஆனாலும் எப்போதும் தன்னடக்கத்துடனும், புருஷனுக்குரிய தலைமைத்துவத்தை அங்கீகரிக்கிறதும், அதிகாரத் தோரணையின் அல்லது அதிகாரத்தைப் பறித்தெடுப்பதின் தோற்றமாய்
இருக்கும் எதையும் தவிர்த்திட விரும்பும் வெளிப்படையான பேச்சுடனும் அவள் முன்வைத்திடலாம்; மேலும் இத்தகைய மிக முதன்மையான ஸ்தானத்திற்குரிய பொறுப்பினின்று அவளை விடுவிக்க முடிகின்ற மற்றும் விடுவிக்கும் ஒரு மனுஷன் அங்குக் காணப்படுவாரானால், அவளது இயல்பான தன்னடக்கமானது, பொறுப்பை எடுப்பதிலிருந்து அவளை விலகச் செய்திட வேண்டும். “silence” அல்லது “quietness” – அமைதலாயிருக்க வேண்டும் என்று மேலே பார்க்கப்படும் வசனத்தில் அப்போஸ்தலனால் கட்டளையிடப்பட்டுள்ளதான வார்த்தையானது, முற்றிலுமாய்த் தடைப்பண்ணுகிற விதத்தில் புரிந்துகொள்ளப்படாமல், மாறாக ஸ்திரீகள் ஜெபம்பண்ணிடுவதற்கு அல்லது தீர்க்கத்தரிசனம் உரைப்பதற்கு அல்லது அப்போஸ்தலர்களின் நாட்களில் ஸ்திரீகளுக்கு வாய்ப்பும், திறமையும் இருக்கையில் அவர்கள் சத்தியத்தினை விவரித்ததற்கு அவர் அனுமதித்தது தொடர்புடைய விஷயத்திற்கு இசைவாய்க் காணப்படும் விதத்தில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இதேபோல் 1 தெசலோனிக்கேயர் 4:10-12-வரையிலான வசனங்களில் சகோதரர்கள் அமைதலாய் இருக்கும்படிக்கு அப்போஸ்தலன் புத்திமதி கூறுகின்றார். “அந்தப்படி நீங்கள் மக்கெதோனியா நாடெங்குமுள்ள சகோதரரெல்லாருக்கும் செய்துவருகிறீர்கள். சகோதரரே, அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாய்ப் பெருகவும்; புறம்பேயிருக்கிறவர்களைப் பற்றி யோக்கியமாய் நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு, நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும்வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம். இதே வார்த்தையானது 1 தீமோத்தேயு 2:2-ஆம் வசனத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

1 கொரிந்தியர் 14:34,35-ஆம் வசனங்களில் அப்போஸ்தலன் பவுலினால் பேசப்பட்ட வார்த்தைகளானது, கிறிஸ்தவத்திற்கு மதம்மாறின கிரேக்கர்களுக்குப் பேசப்பட்டவை என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்; இந்தக் கிரேக்கர்களுடைய பழக்கவழக்கங்களானது இன்றுள்ள சமுதாய பண்பாட்டிலிருந்தும், அந்நாட்களில் காணப்பட்ட எபிரெய மற்றும் ரோம சமுதாய பண்பாட்டிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டதாகும். கிரேக்க நாடு என்பது அதன் நாட்களில் கல்விக்கான மையமாகக் காணப்பட்டப் போதிலும், கிரேக்க நாட்டின் ஸ்திரீகள் மிகவும் அறியாமையில் காணப்பட்டவர்களாகவும், கீழான நிலையில் காணப்பட்டவர்களாகவும் காணப்பட்டனர்; ஆகையால் எபிரெய அல்லது ரோம கிறிஸ்தவ ஸ்திரீகளுக்குப் பேசுகையில், ஒருபோதும் பயன்படுத்திடாத அழுத்தத்துடன் கிரேக்கர்களில் சிலரிடம் அப்போஸ்தலன் பேச வேண்டியது அவசியமாய் இருந்தது. இந்த நிருபத்தை வைத்துப் பார்க்கையில், கொரிந்து பட்டணத்திலுள்ள சபையானது மிகவும் ஒழுங்கற்ற நிலைமையில் காணப்பட்டு வந்தது என்றும், அவர்களது கூடுகைகளானது பெரும்பாலும் குழப்பம் நிறைந்ததாகவும், பிரயோஜனமற்றதாகவும் காணப்பட்டு வந்தது என்றும் நாம் பார்க்கின்றோம். அப்போஸ்தலன் இந்த ஓர் அதிகாரத்தில் அனைத்தும் “நல்லொழுக்கமாயும், கிரமமாயும் (வசனம் – 40) செய்யப்படத்தக்கதாக, மிக முக்கியமான சில விதிமுறைகளையும், ஒழுங்குமுறைகளையும் முன்வைத்துள்ளார் [R1550 : page 205] மற்றும் ஒழுங்கற்ற ஸ்திரீகளுக்கும், புருஷர்களுக்கும் அவசியமான கண்டித்தலையும் வழங்கினார் (1 கொரிந்தியர் 11:17-22, 31-34; 6:5-11; 5:1-13; 3:1-3). அந்த ஸ்திரிகள் சபையில் பேசுவது அவமானமான காரியமாகும். இதற்கு முதல் காரணம் தங்கள் ஸ்திரீகள் எந்தவொரு விளம்பரத்திற்குள்ளாகுவது என்பது அங்கு அப்போது அவமானமாகக் கருதப்பட்டது; மற்றும் இரண்டாவது காரணம் அவர்கள் தகுந்தாற்போல் பேச அறியாதவர்களாயிருந்தனர்; ஆகையால் அவர்கள் சபைகூட்டங்களில் அமைதியாய்க் காணப்பட்டுக் கவனிப்பதும், மேலான விவரங்களை இல்லங்களில் தங்கள் கணவன்மார்களிடம் (சொல்லர்த்தமாய்ப் புருஷர்களிடம்) கேட்டுத் தெரிந்துகொள்வதும் நலமாயிருக்கும். இந்த அறிவுரை செயல்படுத்தப்படுவதை, முழு யுகத்திலுள்ள ஒட்டுமொத்த சபைமீது திணிப்பது என்பது, ஸ்திரீகளின் செயல்படும் எல்லைக் குறித்தும் மற்றும் மனிதனுக்கான தகுதியான மற்றும் பொருத்தமான, கர்த்தரால் சித்தம் கொண்டபடியான துணைவி என்ற விதத்தில் அவளுக்கு இருக்கும் பொறுப்புக் குறித்தும் உள்ள வேதவாக்கியங்களின் போதனைகளுடைய பொதுவான நடைமுறைக்கு ஊறுவிளைவிக்கின்றதாய் இருக்கும். ஒருவர் இன்னொருவருடைய பாதங்களைச் சொல்லர்த்தமாய்க் கழுவுதல் மற்றும் ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துதல் குறித்துத் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டிருக்கின்ற கடமைகள் முழுச்சபை மீது காணப்படலாம்; எனினும் நாம் அவற்றை ஆவியில் அடையாளம் கண்டு கொள்கின்றோமே ஒழிய, எழுத்தில் அல்ல; நம்முடைய நாட்களிலுள்ள உபச்சாரங்களும், மரியாதைகளும் அன்றைய நாட்களில் காணப்பட்டவைகளை விடச் சில விதங்களில் வேறுபட்டவையாக இருக்கின்றன; எனினும் இரண்டு காலக்கட்டங்களிலுமுள்ளவைகள் சரிசமமான உபச்சாரங்களாகவே காணப்பட்டன.

கொரிந்து சபையின் ஸ்திரீகளிடம் அப்போஸ்தலன் கடுமையாய்த் தோற்றமளிக்கின்ற வார்த்தைகளைப் பேசிடுவதற்கு அவசியமாக்கின சூழ்நிலைகளை நாம் அனைவரும் தெளிவாய்ப் பார்க்கத்தக்கதாக, கொரிந்து, எபேசு மற்றும் அந்நாட்களில் கிரேக்கப் பண்பாடுகளைக் கொண்டிருந்த பிரதானமான நகரங்களினுடைய சமுதாய அமைப்பை வெளிப்படுத்தும் பிரபலமிக்க எழுத்தாளர்களின் சில சுருக்கமான குறிப்புகளை மேற்கோளிடுகின்றோம்.

“முற்காலத்து ஏதென்சில் ஸ்திரீகளின் ஸ்தானம் மற்றும் செல்வாக்கு எனும் கட்டுரையில், Scotland-இன்இ St. Andrews பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Donaldson கூறுவதாவது:-

“ஏதென்சில் அடிமைகள் நிலையில் காணப்படாத இரண்டு ஸ்திரீகள் வகுப்பினர் காணப்படுகின்றனர். ஒரு வகுப்பார் (குடிமகள்கள்) தங்கள் சொந்த அறையைவிட்டு ஒரு அடிகூட வெளியே நடமாட முடியாதவர்கள் ஆவர் மற்றும் இவர்கள் எல்லா விதத்திலும் கண்காணிக்கப்படுகின்றனர் மற்றும் கட்டுப்பாட்டில் வைக்கப்படுகின்றனர். இன்னொரு வகுப்பார் (விலை மகள்கள் / அந்நிய ஸ்திரிகள்) காணப்படுகின்றனர்; இவர்கள் மீது எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை இவர்கள் எங்கு வேண்டுமானாலும் போய்வரலாம் மற்றும் தங்கள் பார்வைக்கு நலமாய்க் காணப்படுகிற எதையும் செய்திடலாம். குடிமகள்களுக்கு (மனைவிகளுக்கு) வீட்டின் மேலறை பொதுவாகவே ஒதுக்கிக்கொடுக்கப்படுகின்றது. இவர்கள் எந்த விருந்துகளிலும் கலந்துகொள்வதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தனர். ஆண்கள் தங்கள் குடிமகள்கள் / மனைவிகளை அந்நியர்களின் பார்வையில்பட விரும்பாததினால், ஆண்கள் ஆண்களோடுகூடவே பந்தி அமர்ந்துகொள்வர். வெறும் அடிப்படையான காரியங்களே குடிமகள்களுக்கு / பெண்களுக்குக் கற்பிக்கப்பட்டிருந்தது. ஏதென்சின் தாய்மார்கள் கட்டுப்பாட்டில் இப்படி இருக்க, எப்படி ஏதென்சில் – இலக்கியத்திலும், கலையிலும் பெயர்ப் பெற்றிருந்த மிகச்சிறந்த மனிதர்கள் உருவானார்கள்? (ஆனால் ஏதென்சின் தாய்மார்கள் அனைவருமே, சாதாரண வீட்டுப்பெண்மணிகளாக இருக்கவில்லை; இந்தச் சிறந்த மனிதர்களைப் பெற்ற பெரும்பான்மையான ஏதென்சின் [R1551 : page 205] தாய்மார்கள், மனைவிகள் / குடிமகள்கள் அல்ல; மாறாக விலைமகள்கள் ஆவர் – இவர்கள் கட்டுப்பாடுகளற்ற வகுப்பாராய் இருப்பினும், கல்வியறிவு உடையவர்களாய் இருந்தனர் மற்றும் அனைத்துச் சுதந்தரத்தையும் அருளப்பெற்றிருந்தனர்.) மாபெரும் சிந்தனையாளர்கள், கவிஞர்கள், சிற்பாசிரியர்கள், ஓவியர்கள் மற்றும் கலைஞர்களின் எண்ணற்ற ஓர் இனம் ஒரே காலக்கட்டத்தில், ஏதென்சில் இருந்ததுபோன்று எங்கும் இருந்ததாகச் சரித்திரம் இல்லை என்றாலும், ஏதென்சில் நல்லொழுக்கமுள்ள ஒரு ஸ்திரீகூட/குடிமகள்கூட இலக்கிய அல்லது கலை அல்லது அறிவியல் துறையில் ஒருபோதும் சிறந்தவர்களாகக் காணப்பட்டதேயில்லை.

நாம் ஏதென்சின் குடிமகள்களிடமிருந்து (மனைவிகளிடமிருந்து ) சுதந்தரமான மற்ற ஸ்திரீகளிடத்திற்கு – அந்நிய அல்லது விலைமகள்களிடத்திற்கு வரலாம். இந்த அந்நிய ஸ்திரிகளினால் திருமணம் செய்ய முடியாது. இவர்கள் தாங்கள் விரும்பும் எதையும் செய்திடலாம். குடிமகள்கள் வீட்டிற்குள்ளாகவே காணப்பட்டார்கள் மற்றும் புருஷர்களுடன் உண்பதில்லை ஆனால் புருஷர்களோ வீட்டில் காணப்படும் ஸ்தீரிகளுடன் / குடிமகள்களுடன் மட்டும் பழகிடவில்லை. ஆகையால் அவர்கள் இந்த அந்நிய ஸ்திரீகளைத் தங்களது துணையாளிகளாக தேர்ந்தெடுத்துக் கொண்டனர்; மற்றும் இந்த ஸ்திரீகள் வகுப்பினருக்கு ‘Hetairai’ அல்லது துணையாளிகள் என்ற பெயர் வழங்கப்பட்டிருந்தது. குடிமகள்கள் தாய்மார்களாகவும், மனைவிகளாகவும் காணப்பட வேண்டுமே ஒழிய, இதற்கும் மேலாக எதுவுமில்லை. அந்நிய ஸ்திரீயே துணைவிக்கான கடமைகளைச் செய்திட வேண்டும், ஆனால் இவர்கள் திருமணம் செய்து கொள்ளப்படுவதில்லை. இவர்களே ஏதென்சில் காணப்பட்டக் கல்வியறிவுடைய ஒரே ஸ்திரீகள் வகுப்பார் ஆவார்கள். கிட்டத்தட்ட ஏதென்சிலுள்ள ஒவ்வொரு மாமனிதனும் இத்தகையதொரு துணைவியை உடையவனாய் இருந்தான் மற்றும் இந்த ஸ்தீரிகளானவர்கள் இந்த மாமனிதர்களின் உயர்வான கற்பனைகளுக்கும், ஆழ்ந்த தியானங்களுக்கும் உடன்பாடு கொண்டவர்களாய் இருந்தனர்.

ஆனால் ஏதென்சின் குடிமகள்களுக்கு ஆட்சி சார்ந்த அந்தஸ்தும் இருந்ததில்லை. அவர்கள் எப்போதுமே சிறுபான்மை சமுகத்தினர்களாகவே இருந்தனர். இந்த ‘Hetairai’ -இன் குமாரர்கள் (விசேஷித்தக் கட்டளையினால்) குடிமகன்களாக அடையாளம் கண்டுகொள்ளப்படும் அளவிற்கு இந்த ‘Hetairai’ அந்தஸ்துமிக்க மனுஷர்களிடத்தில் தங்கள் பிடியினைப் பெற்றுக்கொண்டிருந்தனர். ஒழுக்கமுள்ள மனைவிகளின் பெயர்கள் சரித்திரத்தில் எங்கும் இடம் பெறுகிறதில்லை ஆனாலும் ‘Hetairai’ அடிக்கடி காட்சிக்கு வருகின்றவர்களாய் இருக்கின்றனர். இந்த ‘Hetairai’ ஜீவியத்தின் அனைத்து அநுக்கிரகங்களையும் பெற்றுக்கொண்டனர்; கண்கவரும் விதத்தில் வஸ்திரங்களை அணிந்து கொண்டனர்; இவர்கள் நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாக இருந்தனர். எனினும் பாதுகாப்பற்றுக் காணப்பட்ட நூற்றுக்கணக்கான இத்தகைய ஸ்திரீகள் கீழ்த்தரமான உணர்வுகளுக்கான கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டு இருந்தனர் என்றும், பாசம் என்ற போர்வையின் கீழ் இந்த ஸ்திரீகள் ஆண்களைச் சீரழித்தவர்களாகவும், வறுமைக்குள் அனுப்பிவைத்தவர்களாகவும் இருந்தார்கள் என்றுமுள்ளவைகள் மறக்கப்படக்கூடாது.

இங்குப் பேராசிரியர் Donaldson அவர்களின் படைப்புகளிருந்து மேற்கோள் இடப்பட்டுள்ள ஒவ்வொரு வாக்கியமும், ஜெர்மனியின் பேராசிரியர் Becker அவர்களின் படைப்புகளில் [R1551 : page 206] இடம்பெறும், கிரேக்க ஆசிரியர்களின் மேற்கோள்களினால் ஆதரிக்கப்படுகின்றது; பேராசிரியர் Becker – அவர்களினால் மேற்கோளிடப்பட்டிருப்பவைகள் சந்தேகத்திற்கு இடமற்ற மேற்கோள்களாக, அதாவது முற்காலத்துக் கிரேக்க மற்றும் ரோமானிய வாழ்க்கைத் தொடர்புடைய மேற்கோள்களாக, சமீபக்கால எழுத்தாளர்கள் அனைவரினாலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது ‘Charicles’ எனும் படைப்பின் 463-ஆம் பக்கத்தில் அவர் கூறுவதாவது:-

“இந்த ஒருகாலக்கட்டத்தில் மற்றும் சமுதாயப்பண்பாடு உயர்ந்திருந்தக் காலக்கட்டங்களில் ஸ்திரீகளானவர்கள் கீழ்மட்ட ஜீவராசிகளாகவும், தீமைக்கு ஆளாகுபவர்களாகவும், இனவிருத்திக்கு மாத்திரம் பொருத்தமானவர்களாகவும், புருஷர்களின் உடல் வேட்கைகளைத் திருப்திபடுத்துவதற்கு உரியவர்கள் என்று கருதப்பட்டனர். சிறுமிகளுக்கு என்று எந்தக்கல்வி ஸ்தாபனங்களோ, வீட்டில் வைத்துத் தனிப்பட்ட ஆசரியர்களால் பயிற்றுவிக்கப்படுவதோ இருந்ததில்லை. அவர்கள் அந்நியர்களுடன் மாத்திரம் அல்லாமல், தங்களுடைய மிக நெருக்கமான உறவினர்களிடம் கூடப் பேசுவதற்கு அனுமதிக்கப்படாதவர்களாய் இருந்தனர் மற்றும் தங்கள் தகப்பன் மார்களையும் மற்றும் கணவன்மார்களையும்கூட எப்போதாவது பார்க்க முடிந்தவர்களாய் இருந்தனர். திருமணமாகாத பெண்கள் திருமணம் ஆகுவதுவரையிலும் தனிமைப்படுத்தப்பட்டே வாழ்ந்து வந்தனர். அதாவது சாதாரண வழக்கில் சொல்ல வேண்டுமெனில் பூட்டுப்போட்டுப் பத்திரப்படுத்தப்பட்டவர்களாக இருந்தனர். பக்கம் 287-இல் – “ஏதேன்சில் குடிமகள் சந்தைக்குப் பொருட்கள் வாங்க வந்ததாகக் கேள்விப்படவே முடியாது.

‘Old Greek Education’ எனும் தனது படைப்பில் Dublin-ஐ சார்ந்த திருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் J. P. Mahaffy அவர்கள் 11-ஆம் பக்கத்தில் குழந்தைக் கொலைகள் அல்லது பட்டினியில் சாகப்போடுவது மற்றும் புறக்கணிக்கப்படுவது குறித்துக் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-

“புதிதாய்ப் பிறந்த சிசுக்களைக் கொல்வது என்பது பொது ஜனங்களால் ஒப்புதலளிக்கப்பட்டது மாத்திரமல்லாமல் உண்மையில் கிரேக்க நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்பட்டும் வந்தது. Plato அவர்கள் தனது கொள்கையின் அடிப்படையில் சிசு கொலைகளைச் செய்திருக்கின்றார். ஒரே முறை தவிர மற்றபடி தாயானவளின் இருதயத்தினுடைய வியாகுலமானது, இவர்களது இலக்கிய படைப்புகளில் எங்குமே குறிப்பிடப்படவேயில்லை. அந்தவொரு சம்பவத்தைச்; சாக்ரட்டீஸ் அவர்கள் பதிவு செய்துள்ளார்; ஓர் இளம் தாய் தனது முதல் சிசு கொல்லப்பட்டதின் நிமித்தம் எரிச்சல் அடைந்ததையும், இது விஷயமான சாக்ரட்டீசின் மாணவர்களுடைய கருத்துக்கள் தவறானது என்று மாணவர்களுக்கு நிரூபிக்கப்பட்ட போது மாணவர்கள் அடைந்திட்ட கோபத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். இதில் கொடுமை என்னவெனில், இந்த ஸ்திரீகள் இப்படியாக நடத்தப்படுவதால் மனம் கடினமடைந்துவிடுகின்றனர். பெண் சிசுக் கொலை என்பது சர்வ சாதாரணமான விஷயமாய் இருந்தது.

கிரேக்கச் சமுதாயப் பண்பாட்டின் கீழ், இப்படியாக ஸ்திரீகளின் நிலைமைக் காணப்பட்டிருக்க, கிரேக்க ஸ்திரீகள் சிலருக்கு அப்போஸ்தலனாகிய பவுலினால் பேசப்பட்டதான வார்த்தைகள் கிரேக்கப் பட்டணங்களிலேயே மிக மோசமான பட்டணங்களில் ஒன்றாக கொரிந்து பட்டணம் காணப்பட்டது எனப் பார்க்கப்படும் போது தெளிவாய்ப் புரிகின்றதாய் இருக்கும். பேராசிரியர் Becker அவர்கள் கூறுவதாவது:-

“Hetairai – விலைமாதர்களை எண்ணிக்கையில் அதிகமாய்ப் பெற்றுள்ள மற்றப் பட்டணங்களை எல்லாம் மிஞ்சின நிலையில் கொரிந்து பட்டணம் காணப்பட்டது; இந்த Hetairai ஸ்திரீகளுக்கு இவ்விடத்தினுடைய வளமையும், பெருஞ்சிறப்புகளும் மற்றும் ஐசுவரியமுள்ள வியாபாரிகளின் பெருங்கூட்டமும், ஐசுவரியங்களை ஈட்டிடுவதற்கான வாய்ப்புகளை அருளினதாய் இருந்தது.”

இவைகளையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, கொரிந்து பட்டணத்துப் புருஷர்கள் கிறிஸ்தவர்களான போது, காணப்பட்ட / நிலவியிருந்த சமுதாய எண்ணங்களைப் புறக்கணித்து, சபை கூட்டங்களுக்குத் தங்கள் மனைவிகளை / குடிமகள்களை அழைத்து வந்தவர்களாய்க் காணப்பட்டனர்; இந்த ஸ்திரீகள் மிகவும் அறியாமையில் காணப்படுபவர்களாகவும் மற்றும் மரியாதையாய் நடந்துக்கொள்வதை அறியாதவர்களாகவும் காணப்பட்டப்படியால், பிரயோஜன மற்றக் கேள்விகளைக் கேட்பதின் மூலம் கூட்டங்களுக்குத் தொந்தரவு கொடுத்தவர்களாய் இருந்தனர்; இந்தப் பிரயோஜனமற்றக் கேள்விகளை இல்லத்தில் வைத்துத் தங்களுடைய புருஷர்களிடத்தில், அதாவது அவர்களுக்கு அவசியமான எளிமையான அறிவுரைகளைக் கொடுப்பதற்கு முடிகின்ற அவர்களது புருஷர்களிடத்தில் கேட்டுக் கொள்ளும்படிக்கு அப்போஸ்தலன் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்; ஏனெனில் இந்த ஸ்திரீகள் சபையில் பேசி அதன் சரியான, முறையான ஆராதனை முதலியவைகளுக்குத் தொந்தரவு கொடுப்பது என்பது முறையற்றக் காரியமாய் இருக்கும். இன்றுபோல் அன்றும் கிறிஸ்தவத்திற்குள் வந்தவர்கள் – மாமனிதர்கள் மற்றும் தத்துவ ஞானிகள் மத்தியிலிருந்து வந்தவர்களாயிராமல் ஏழை வகுப்பார் – சாதாரணமான ஜனங்கள் மத்தியிலிருந்து வந்தவர்கள் ஆவார்கள்; என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

கொரிந்து பட்டணத்து ஸ்திரீகளினுடைய இந்த நிலைமையானது தலையில் முக்காடிட்டுக் கொள்ளுதல் தொடர்பான 1 கொரிந்தியர் 11-ஆம் அதிகாரத்தில் இடம்பெறும் அப்போஸ்தலரின் கட்டளைகளுக்கான அவசியத்தினையும் மிகவும் தெளிவுப்படுத்துகின்றது; ஸ்திரீகள் தலையில் முக்காடிட்டுக்கொள்ளுதல் என்பது ஜனங்கள் மத்தியில் விசேஷமாகத் தன்னடக்கத்திற்கான அடையாளமாய்க் காணப்பட்டது. திடீரென – அதாவது சுவிசேஷத்தினால் உண்டாகும் சுதந்தரத்தை அவர்கள் காணத்துவங்குகையில், முக்காடிட்டுக்கொள்ளும் இவ்வழக்கத்தினை அவர்கள் புறக்கணிப்பது என்பது மற்றவர்களால் தவறாய்ப் புரிந்து கொள்ளப்படும் மற்றும் அவர்களது அறியாமையில் புருஷனுக்குரிய தலைமைத்துவத்தைப் புறக்கணிப்பதற்குரிய ஒரு மனப்பான்மையை உடையவர்களாகவும், தன்னம்பிக்கையுடையவர்களாகவும், தங்களது கருத்துக்களை நிலைநாட்டுபவர்களாகவும் அவர்கள் மாறிடுவதற்கும் அநேகமாய் வாய்ப்பு இருக்கும்.

ரோமானிய மற்றும் எபிரெய ஸ்திரீகளின் முற்றிலும் வேறுபட்டச் சூழ்நிலைகளைக் கவனிக்கும் போது, ரோமானிய மற்றும் எபிரெய கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்ட நிருபங்களில் இத்தகைய அறிவுரைகள் / கட்டளைகள் இல்லாதிருப்பதற்கான காரணத்தினை நாம் புரிந்துகொள்ளலாம்.

முனைவர் Smith பழமையான கிரேக்கம் மற்றும் ரோமானியம் குறித்துத் தனது கட்டுரைகளில் கூறுகிறதாவது:-

“திருமணத்திற்குப் பின்பு ஓர் ரோமானிய ஸ்திரீக்கு இருக்கும் ஸ்தானம் என்பது கிரேக்க ஸ்திரீகளிடமிருந்து முற்றிலும் வேறுபட்டதாய்க் காணப்படுகின்றது. ரோமானிய மனைவியானவள் இல்லத்தில் தலைமைத் தாங்குகிறவளாகவும், தனது கணவனுக்குக் காண்பிக்கப்படும் கனத்திலும், மரியாதையிலும் பங்கடைபவளாகவும் இருக்கின்றாள்.

மேலும் பேராசிரியர் Becker அவர்கள் கூறுவதாவது:-

” ரோமானிய இல்லத்தரசியானவள் முழுவீட்டின் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் குடும்பத்தலைவியாகவும், குழந்தைகளுக்கு ஆசிரியையாகவும், இல்லத்தின் கனத்தைக் கட்டிக் காக்கிறவளாகவும், வீட்டிலும் சரி, வெளியிலும் சரி தனது கணவனுக்குச் சமமாக மதிக்கப்படுகிறவளாகவும் எப்போதும் காணப்படுகிறாள். ஸ்திரீகளும். புருஷர்களும் நாடக அரங்கங்களுக்கும், பொது விருந்துகளுக்கும் சேர்ந்து சென்று கலந்து கொண்டவர்களாய்க் காணப்பட்டனர்.

எபிரெய சமுதாயத்தில் காணப்பட்ட ஸ்திரீகளுக்கு இருந்த சுதந்தரம் குறித்து வேதவாக்கியங்களில் மிகவும் வெளிப்படுத்தப்படுகின்றபடியால் கூடுதல் சாட்சிகள் அவசியமில்லை. அவர்கள் கர்த்தரோடும், அப்போஸ்தலர்களோடும், மற்ற ஆண் [R1551 : page 207] சீஷர்களோடும் சகஜமாய்ப் பேசினார்கள் மற்றும் சபை கூட்டங்களிலும், ஜெப ஆலயங்களிலும் கலந்து கொண்டனர் மற்றும் முழுச்சுதந்திரத்துடன் போய் வந்தார்கள். ஆகையால் கிறிஸ்தவ மார்க்கத்தில் இந்த ஸ்திரீகள் வந்தபோது எவ்வித பாரம்பரிய கட்டுப்பாட்டு வழக்கங்களினுடைய தடைகள் இல்லாமல், கிறிஸ்தவ வேலைகளில் ஈடுபடுவதற்கு ஆயத்தமாய்க் காணப்பட்டனர்; ஆனால் மற்ற ஜனங்கள் மத்தியில் காணப்பட்டப் பாரம்பரியக் கட்டுப்பாடுகளானது, கிறிஸ்துவின் காரணங்களுக்கு நிந்தையைக் கொண்டுவராத விதத்தில், படிப்படியாய் ஜனங்களின் எண்ணங்கள் புதுப்பிக்கப்படுவது வரையிலும், கொஞ்சம் கடைப்பிடிக்கப்பட வேண்டியதாய் இருந்தது.