அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R3033 (page 197)

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து

LOVE--MAKING A DIFFERENCE

“தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு,… நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, சிலருக்கு இரக்கம் பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சித்து… (யூதா 21-23)

ஆதி பாவத்தின் காரணமான விழுகையினால் நம் அனைவரின் மனங்களும் சீரற்று இருக்க, அதுவும் அனைவரும் ஒரே விஷயத்தில், ஒரே மாதிரி வீழ்ச்சிக்குள்ளாகவில்லை என்றாலும் – நாமும் சரி, கிறிஸ்துவுக்குள்ளான மற்றச் சகோதர சகோதரிகளும் சரி, தேவனுடைய வார்த்தைகளில் முன் வைக்கப்பட்டுள்ளதான சில குறிப்பிட்ட கொள்கைகளைப் பொருத்திச் செயல்படுத்துவதில் ஏறக்குறைய குழப்பத்தில் காணப்படுவதைப் பார்ப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. உதாரணத்திற்கு அன்பானது தெய்வீகப் பிரமாணத்தினுடைய நிறைவேறுதலாய் இருக்கின்றது என்றும், சகோதர சகோதரிகளிடத்திலான அன்பு என்பது நாம் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்கு உட்பட்டு இருக்கிறோம் என்ற சாட்சியங்களில் ஒன்று என்றும், காண்கிற சகோதரனிடத்தில் நாம் அன்புகூரவில்லையெனில், இது நாம் காணாத நம்முடைய பரம பிதாவை நாம் உண்மையில் அன்புகூரவில்லை என்பதற்கான நிச்சயமான நிரூபணமாகும் என்றும் நாம் போதிக்கப்பட்டுள்ளோம் (ரோமர் 13:10; 1 யோவான் 3:14; 4:20). தெய்வீக நீதி நெறிகள் முன்வைக்கும் இவைகளை அடைந்திடுவதற்கான பிரயாசங்களில் சிலர் எதிரான நிலையில் தவறிழைத்திடுவதற்கான அபாயத்தில் – அதாவது சகோதரனுடைய நலனுக்காகச் சகோதர சிநேகமானது காண்பிக்கப்படக்கூடாது என்றுள்ள சில தருணங்களில், சகோதர சிநேகத்தை வெளிப்படுத்திவிடும் அபாயத்தில் காணப்படுகின்றனர். பரமபிதா செயல்படுத்துகின்ற மற்றும் வெளிப்படுத்துகின்றதான பல்வேறு வகை அல்லது அளவிலான அன்பை நாம் கவனிக்கலாம்.

முதலாவது – உலகத்திற்கான அன்பாகும். “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை – நமக்காக மரிக்க – தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோவான் 3:16). இரண்டாவது கொஞ்சம் உயர்வான மற்றும் விசேஷித்த விதத்திலும், “பிதா தாமே உங்களைச் சிநேகிக்கிறார் – அதாவது இயேசு கிறிஸ்துவைத் தங்களது மீட்பராக ஏற்றுக்கொண்டுள்ளவர்களும், அவருடைய நாமத்தினாலும், பலத்தினாலும், புண்ணியத்தினாலும் அவருக்கு அர்ப்பணம் பண்ணியுள்ளவர்களும், மாம்சத்திற்கேற்றப்படியாக இல்லாமல், ஆவிக்கேற்றப்படியாக நடக்க இப்பொழுது நாடிக் கொண்டிருப்பவர்களுமான – உங்களைச் சிநேகிக்கிறார் (யோவான் 16:27) என்பதாகும். ஆனால் தேவனுடைய இந்த விசேஷித்த அன்பானது கொஞ்சமாகவோ அல்லது முடிவில் முழுமையாகவோ இழந்துபோகப்படலாம் என்பது, “தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொள்ள்ளுங்கள் எனும் அப்போஸ்தலனுடைய வார்த்தைகளினால், தெளிவாய் முன்வைக்கப்பட்டுள்ளது (யூதா 21). தேவனுடைய நல்வார்த்தையையும், இனிவரும் உலகத்தின் பலன்களையும் ருசிப்பார்த்தப் பிற்பாடு [R3034 : page 197] மற்றும் பரிசுத்த ஆவி முதலானவைகளில் பங்காளிகளான பிற்பாடு, யாரேனும் ஆவிக்கேற்றப்படி நடவாமல், மாம்சத்திற்கேற்றப்படி நடப்பார்களானால், இதற்கேற்ப அப்படியானவர்கள் தேவனுடைய அன்பை இழக்கின்றவர்களாய் இருப்பார்கள் என்பதில் நமக்கு நிச்சயமே மற்றும் ஒருவேளை அந்நபர் தொடர்ந்து இப்படியாகவே காணப்படுவாரானால், இதன் விளைவாக இறுதியில் அந்ந்பர் “அவருடையவர்களில் ஒருவராக இருப்பதில்லை. இப்படியானவனை – அதாவது தன்னுடைய அறிவின் காரணமாகவும், பிரயாசங்களின் காரணமாகவும் மற்றும் கீழ்ப்படியாத போக்கின் காரணமாகவும் துன்மார்க்கனாகியுள்ள இப்படியானவனை அன்புகூருவதற்குப் பதிலாக, கர்த்தர் தாம் “பாவியின்மேல் சினங்கொள்ளுகிறார் என்றும், “துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார் என்றும் தெரிவித்துள்ளார் (சங்கீதம் 7:11; 145:20; எபிரெயர் 6:4-6; 10:26-29).

பரலோகத்திலுள்ள நம்முடைய பிதாவைப்போன்று காணப்படுவதற்கும், அவர் தம்முடைய அருமை குமாரனாகிய நமது கர்த்தரில் முன்வைத்துள்ளதான சாயலுக்கு ஒப்பாகக் காணப்படுவதற்கும், உன்னதமானவருடைய குமாரர்களென நாடுகின்ற நாம் தெய்வீகத் திட்டத்திற்கு இசைவாகவும் மற்றும் தேவனுடைய நேரத்திலும், ஒழுங்கிலும் உலகத்தாரைச் சீர்தூக்கிவிடுவதற்கான எதையும் மற்றும் செய்ய முடிகின்ற யாவற்றையும் செய்வதற்குப் பிரியங்கொள்ளும் – பரந்த அனுதாபத்துடன்கூடிய கருணையையும், இரக்கத்துடன்கூடிய அன்பையும் பொதுவான உலகத்திற்கென்று கொண்டிருக்க வேண்டும். நம்முடைய பிதாவைப் போன்றும், நம்முடைய மூத்த சகோதரன் போன்றும், நாம் சகோதர சகோதரிகளைச் “சுத்த இருதயத்தோடே ஊக்கமாய் – உண்மையாய் அன்புகூர வேண்டும். சகோதரருக்கான இந்த அன்பு என்பது, உலகத்திற்கான அன்பு போன்றதல்ல; அது கருணை அன்பல்ல, வெறும் இரக்கமல்ல; அது மேலானதாகும்; அது சகோதர சிநேகமாகும். தேவனுடைய பிள்ளைகள் அனைவரும் புதுச் சிருஷ்டிகளாகிய சகோதரர்களாய் இருக்கின்றனர்; இந்தச் சகோதர சகோதரிகள் அனைவரும் கர்த்தர் இயேசுவுடனும், தாங்கள் பங்கடைவதற்கு எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றதான பரலோக இராஜ்யத்துடனும் ஒன்றுபட்டுள்ளதான நம்பிக்கைகளை, எதிர்ப்பார்ப்புகளை, நலன்களை மற்றும் வாக்குத்தத்தங்களைப் பெற்றிருக்கின்றனர். இந்தச் சகோதர சகோதரிகள் அனைவரும் ஒருவருக்கொருவரும் மற்றும் கர்த்தருடனும் உடன் சுதந்தரர்களாகவும், சக – சுதந்தரர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்கள் கூட்டாளிகளாக இருக்கின்றனர்; இவர்களது அக்கறையானது, பரஸ்பரமாயும், ஒருங்கிணைந்தும் காணப்படுகின்றது.

இதனோடுகூட இவர்கள் விசேஷித்த பரஸ்பர உருக்கமான இரக்கம் பெற்றிருக்கின்றனர்; ஏனெனில் புதுச்சிருஷ்டிகளாக இவர்கள் திவ்விய கிருபைகளிலும், வாக்குத்தத்தங்களிலும் ஐசுவரியமாய்க் காணப்பட்டாலும், இவர்கள் அனைவரும் மாம்சத்தின் கடுமையான பெலவீனங்களை – குறைப்பாடுகளைப் பெற்றிருக்கின்றனர்; கர்த்தர் இவர்களை மாம்சத்தின்படி நியாயந்தீர்க்காமல், ஆவியின்படி, நோக்கத்தின்படி, இருதயத்தின் வாஞ்சைப்படி நியாயந்தீர்த்திட்டாலும், இவர்கள் ஒவ்வொருவரும் மற்றும் அனைவரும், இந்தப் பூமிக்குரிய கூடாரத்தினுடைய அபூரணங்கள் மற்றும் பெலவீனங்கள் காரணமாக எழும்பும் பிரச்சனைகளைப் பெற்றிருக்கின்றனர்; மற்றும் இதன் காரணமாக இவர்கள் “தவிக்கின்றனர் மற்றும் மற்றவர்கள் தவிக்கையில் ஒருவருக்கொருவர் அனுதாபம் கொள்கின்றனர். அப்போஸ்தலன் கூறுவதுபோன்று, “ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர – முழுச்சபையின் – மீட்பாகிய புத்திர சுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம். இப்படியாக தேவனுடைய புத்திரர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பர அனுதாபமும், [R3034 : page 198] அன்பும், அக்கறையும், ஒருவரிலொருவர் கவனமும், ஒருவருக்கொருவர் உதவும் தன்மையும் பெற்றிருக்கின்றனர், அதுவும் இது உலகத்தால் புரிந்துகொள்ள முடிகின்ற (அ) உலகத்திடம் காண்பிக்கப்படுகின்ற எந்த உணர்வுகளுக்கும் முற்றிலும் அப்பாற்பட்டதாகவும், மேலானதாகவும் மற்றும் புறம்பானதாகவும் காணப்படுகின்றது; ஏனெனில் உலகத்தாருக்கு பழைய சுபாவத்திற்கும், புதிய சுபாவத்திற்கும் இடையிலான எந்தப் போராட்டமும் இல்லை பலியினாலான எந்த உடன்படிக்கையும் பண்ணவில்லை பிரியமானவரில் எந்த ஏற்றுக்கொள்ளப்படுதலும் இல்லை இருதயத்திலும், நோக்கத்திலும், எதிர்ப்பார்ப்பிலும் மற்றும் ஆவியிலும் எந்த ஐக்கியமும் இல்லை. ஓ! ஆம்! ஊக்கமாய் அன்புகூருவதற்கான புத்திமதியானது, நமக்கே விசேஷமாய்ப் பொருந்துகின்றதாய் இருக்கின்றது.

இப்பொழுது நாம் இன்னொரு கருத்திற்கு வருகின்றோம். சகோதரருக்கான நம்முடைய அன்பு என்பது அனைவரிடத்திலும் துல்லியமாய் ஒரே அளவிலும், துல்லியமாய் ஒரே தீவிரத்திலும் காணப்பட முடியாது; அதைக் கட்டுப்படுத்துகின்ற ஏதோ ஒன்றுள்ளது. அது என்ன? அது – நாம் தேவனையும், அவரது குணலட்சணங்களில் வெளிப்படுகின்ற நீதியின் மகிமையான கொள்கைகளையும் அன்புகூருகின்றோம் மற்றும் இதே நிலைப்பாட்டில் நமது கர்த்தராகிய இயேசு நற்பண்பிற்கும், உண்மைக்கும், நீதிக்கும், அன்பிற்கும், காருண்யத்திற்கும், தயாளம் யாவற்றிற்கும் மாதரியாக இருக்கின்றாரென்று நாம் அவரை அன்புகூருகின்றோம் மற்றும் சகோதர சகோதரிகளுக்கான நமது அன்பு என்பது சகோதர சகோதரிகள் நமது கர்த்தருக்கொத்த சாயலில் காணப்படுவதாக நாம் காணும் அளவுக்குத்தக்கதாக இருப்பது அவசியம் என்பதேயாகும். நாம் மாம்சத்தில் ஒத்த சாயலைக் குறிப்பிடவில்லை மாறாக கர்த்தருடைய கண்ணோட்டத்தின்படியான சாயலை – அதாவது ஆவியில் ஒத்த, இருதயத்தில் ஒத்த, உள்நோக்கத்தில் ஒத்த, நோக்கத்தில் ஒத்த, நீதி, சத்தியம் முதலானவைகளுக்கான அன்புடன்கூடிய வைராக்கியத்தில் ஒத்த சாயலைக் குறிப்பிடுகின்றோம். ஆகையால் நாம் தேவனுடைய அன்பிலும், கிறிஸ்துவின் அன்பிலும், இவர்கள் வெளிப்படுத்துகின்ற கொள்கைகளின் மீதான அன்பிலும் வளருகையில், நாம் அனைத்து மனுஷரிடத்திலான மற்றும் சகோதரரிடத்திலான அன்பிலும் வளருவோம்; ஆனால் குறிப்பாய்க் கர்த்தருக்கொத்த சாயலில் அதிகமாய் வளர்ந்து கொண்டிருப்பவர்கள் மீதான நமது அன்பு வளருகின்றது. இது பாரபட்சமல்ல; இது – மற்றவர்கள் நமக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகின்றோமோ, அதற்கு எதிர்மாறாய் நாம் மற்றவர்களுக்குச் செய்வதைக் குறிப்பதாயிராது. இது கர்த்தராகிய இயேசுவின் மாதிரியைப் பின்பற்றுவதாகும்; ஏனெனில் அவரது அப்போஸ்தலர்கள் அனைவரும் தெரிந்தெடுக்கப்பட்டவர்களாய் இருப்பினும், அவர்கள் மத்தியில் மூன்று பேர் விசேஷித்த அன்புக்குரியவர்களாய் இருந்தார்கள் என்று நாம் பார்க்கின்றோம்; மற்றும் அந்த மூன்று பேரிலும்கூட ஒருவர் விசேஷமாய், “இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் என்று குறிப்பிடப்படுகின்றார். இவர் விசேஷமாய் அன்புகூரப்பட்டார், காரணம் இவர் விசேஷமாய் அன்புகூரப்படத்தக்கவராய் இருந்தார்; மற்றும் இப்படியாகவே நம் விஷயத்திலும், சகோதர சகோதரிகள் விஷயத்திலும் காணப்படுகின்றது. நாம் சகோதர சகோதரிகள் யாவரையும் மனமுவந்தும், ஊக்கமாயும்/ஆழமாயும் அன்புகூர வேண்டும்; ஆனால் கண்டிப்பாய் வெவ்வேறு அளவிலான ஊக்கத்தில் / ஆழத்தில் அன்புகூர வேண்டும் மற்றும் நமது அந்த ஊக்கமானது நம்மால் அன்பு செலுத்தப்படுபவர், நமது கர்த்தருக்கொத்த இருதய ஒத்திருத்தலில் வளருவதை, நாம் காண்பதற்கேற்றபடி பெருக்கிட வேண்டும்.

இப்படியாக இருக்குமானால், சத்திய அறிவிற்குள்ளாகக் கடந்துவந்த பிற்பாடு, அதன் நற்பண்புகளை ருசிப்பார்த்து, உணர்ந்துகொண்ட பிற்பாடு, பாவத்திற்குள்ளாக விழுந்துபோகிறவர்களைக் குறித்து நாம் என்ன சொல்லுவோம்? ஆவியின்படி நடப்பதை நிறுத்தி, மாம்சத்தின்படி நடக்க ஆரம்பிப்பவர்களைக் குறித்து நாம் என்ன சொல்லுவோம்? இப்படியானவர்களுக்கான நம்முடைய அன்பானது முன்பு இருந்ததுபோலவே கொழுந்துவிட்டெரியக் கூடுமோ? முடியாது; இப்படியாக இருக்கக்கூடாது. அப்போஸ்தலன் நம்முடைய ஆதார வசனத்தில் சொல்லியுள்ளது போன்று, நாம் பகுத்தறிதல் கொண்டிருத்தல் வேண்டும். இப்படியாகச் செய்யும்போது, நாம் நம்முடைய பரலோக தந்தையினுடைய மாதிரியைப் பின்பற்றுகிறவர்களாய் இருப்போம்; ஏனெனில் ஆவிக்கேற்றபடி நடக்கும்போது மாத்திரமே நாம் நம்மைத் தேவனுடைய அன்பில் காத்துக்கொள்ள முடியும் என்று சற்று முன்புதான் கவனித்தோம். இம்மாதிரியான நடக்கையைப் பின்பற்றும்போது மாத்திரம்தான் ஒருவன் தன்னைச் சகோதர சிநேகத்தில் தக்கவைத்துக்கொள்ள முடியும். இந்நடக்கையில் ஏதேனும் திசைத்திரும்புதல் என்பது அதற்கேற்ப சகோதர சிநேகத்தில் மற்றும் ஐக்கியத்தில் இழப்பைக் கொண்டுவருகின்றதாய் இருக்கும்.

இந்தப் பகுத்தறிதலானது / வேற்றுமைகாணுதலானது சபையின் தூய்மைக்கும், வளர்ச்சிக்கும் உண்மையில் அவசியமாகும். ஆவிக்கேற்றப்படி நடக்கிற சகோதரர்களையும் மற்றும் ஒழுங்கற்று (அ) மாம்சத்திற்கேற்றப்படி நடக்கிற சகோதரர்களையும் நாம் பகுத்தறியவில்லையெனில், நாம் ஆவிக்கேற்றப்படி நடக்கிறவர்களுக்கு கர்த்தர் நோக்கம் கொண்டுள்ளதான ஆசீர்வாதத்தையும், மதிப்பையும் எடுத்து விடுகிறவர்களாய் இருப்போம் மற்றும் மதிப்பைக் கொடுப்பதற்குக் கர்த்தர் நோக்கம் கொண்டிராதவர்களுக்கு – கர்த்தருடைய வார்த்தைகளுக்கு எதிராகவும், மாம்சத்திற்கு ஏற்றப்படியும் நடக்கிறவர்களுக்கு மதிப்பைக் கொடுப்பவர்களாய் இருப்போம். இயேசுவின் அடிச்சுவடுகளில் நடக்கிறவர்கள் என்று நாம் காண்கிறவர்களிடத்தில் ஐக்கியம் கொண்டிருப்பது, அதுவும் ஊக்கமாய் ஐக்கியம் கொண்டிருப்பது நம்முடைய கடமையாக இருப்பது போன்று, ஐக்கியங்கொள்வதற்கு அபாத்திரமாய்க் காணப்படுபவர்களிடமிருந்து ஐக்கியத்தைத் தவிர்ப்பதும் நம்முடைய கடமையாக இருக்கின்றது. தவறு செய்பவர்களை ஊக்குவித்திடும் தவறானப் போக்கினை நாம் எடுத்திடுவதற்கு, அன்பே நம்மை இயக்குகின்றது என்று நாம் எண்ணக்கூடாது; அது அன்பல்ல; மாறாக அது அறியாமையே ஆகும்; கர்த்தரைக் குறித்து அவருடைய வார்த்தையிலிருந்தும், அவருடைய மாதிரியிலிருந்தும் கற்றுக்கொள்வதே, அறியாமைக்கான மருந்தாகும்.

சகோதரர் விஷயத்திலான நம்முடைய கடமை குறித்தும் மற்றும் பல்வேறு சூழ்நிலைகளில் நாம் எவ்வாறு அவர்களிடம் நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும் அப்போஸ்தலன் பவுல் நம்முடைய கவனத்திற்குக் கொண்டுவரும் வண்ணமாகப் பின்வருமாறு கூறுகின்றார்: அதாவது உண்மையுள்ள சகோதரர்கள் அவர்களது கிரியைகளின் நிமித்தம் மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளப்பட வேண்டும்; ஒழுங்கில்லாத மற்றச் சகோதரர்கள் புத்தி சொல்லப்பட வேண்டும்; சத்தியத்தைப் புரிந்துகொள்ளும் திறனில் திடனற்றவர்கள் (குறைவுள்ளவர்கள்) பெலப்படுத்தப்பட வேண்டும், பலவீனர்கள் உதவப்பட வேண்டும், தாங்கப்பட வேண்டும்; மற்றும் எல்லோரிடமும் நீடிய சாந்தத்துடன் காணப்பட வேண்டும் என்பவையாகும் (1 தெசலோனிக்கேயர் 5:12-14).

ஒழுங்கற்ற சகோதரர்கள்பால் கொண்டிருக்கப்பட வேண்டிய சரியான மனோநிலை குறித்தே நாம் இப்பொழுது இங்கு விசேஷமாய்க் குறிப்பிடுகின்றோம் – கிரியைகளின் நிமித்தம் மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளப்படுகின்றவர்கள் போன்று இப்படியானவர்கள் நடத்தப்படக்கூடாது; இல்லையேல் இப்படியானவர்கள் ஒழுங்கற்று இருப்பதற்கு மேலும் ஊக்கப்படுத்தப்பட்டு விடுவார்கள், இப்படியானவர்கள் – அன்புடனும், உண்மையுடனும் மற்றும் பொறுமையுடனும் புத்திமதி கூறப்பட வேண்டும், எச்சரிக்கப்பட வேண்டுமே ஒழிய, இவர்கள் ஏதோ இயேசுவின் அடிச்சுவடுகளிலும் மற்றும் அவரது வார்த்தைகளினுடைய கட்டளைக்கு இசைவாயும் சீராய் நடந்துகொண்டிருப்பது போன்று, முன்பிருந்த அதே அன்புடனும், மதிப்புடனும் கையாளப்படக் கூடாது. நம்முடைய அன்பு மற்றும் மதிப்பிற்கான அறிகுறிகளும், சான்றுகளும் உண்மையாய் இருக்க வேண்டும் மற்றும் அது – சத்தியத்தின் ஆவிக்கேற்றபடி நடப்பதாகிய சரியான இருதயத்தின் விருப்பங்களுக்கான ஆதாரங்களைச் சகோதரர்களிடத்தில் நாம் காணும் அளவுக்குத்தக்கதாகக் காணப்பட வேண்டும். நிராகரிப்பை வெளிப்படுத்தும் அளவுக்கு முக்கியமானது என்று நம்முடைய கணிப்பில் காணப்படும் தருணங்களின் போது, எப்படி நம்முடைய நிராகரிப்புக் காண்பிக்கப்பட வேண்டும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் சுட்டிக்காட்டுகின்றார்.

ஒவ்வொரு வார்த்தையிலும் மற்றும் ஒவ்வொரு கிரியையிலும் சகோதர சகோதரிகள் குற்றம் கண்டுபிடிக்கத்தக்கதாக ஒருவரையொருவர் கவனித்துக்கொண்டிருக்க வேண்டும் எனும் அர்த்தத்தில் அப்போஸ்தலன் குறிப்பிடவில்லை என்பதில் நிச்சயமே மாறாக அற்ப காரியங்களானது, மாம்சத்தின் பெலவீனம் மாத்திரமே என்றும், இருதயத்தினுடைய, நோக்கத்தினுடைய விளைவானது அல்ல என்றும் எண்ணி, முற்றிலுமாய் விட்டுவிடுமளவுக்குச் சகோதர சகோதரிகள் ஒருவரிலொருவர் முழுக்க அன்பினால் நிறைந்திருக்க வேண்டும். நிராகரிப்பும், எச்சரிப்பும் வெளிப்படுத்துவதற்குப் பாத்திரமான காரியங்களானது, கர்த்தருக்கு வெறுப்பாய் இருக்குமென்றும், சகோதரர் மீது (அ) விசுவாச வீட்டார் மீது பாதகமான தாக்கம் கொண்டுள்ளது என்றுமுள்ள விஷயத்தில் ஐயமில்லை என்று சொல்லுமளவுக்கு மிகவும் வெளிப்படையாக, பகிரங்கமாகக் காணப்படுகின்ற காரியங்களாய் இருத்தல் வேண்டும். உதாரணத்திற்கு ஒரு சகோதரன் மதுபானம் அருந்தியிருப்பதாகக் காணப்படுதல்; மிகவும் வெட்கக்கேடான (அ) மோசமான வார்த்தைகளைப் பேசக்கேட்டல்; ஒருவன் பாவத்தில் வாழ்கின்றான் என்று பொதுப்படையாகவே தெரிதல் இவைகளையே அப்போஸ்தலன் மனதில் கொண்டிருந்தார் என்று நாம் நம்புகின்றோம். ஆனால் இருதயம் மற்றும் தனிப்பட்ட காரியங்கள் – நேரம் (அ) பணம் முதலானவைகள் பயன்படுத்தப்படுதல் தொடர்புடைய விஷயத்தில் ஒருவரையொருவர் நியாயந்தீர்ப்பதற்கு மற்றும் குற்றம் கண்டுபிடிப்பதற்குரிய – ஆவியை வளர்த்திடுவதற்கு அப்போஸ்தலன் எந்த நோக்கமும் கொண்டிருக்கவில்லை என்பதில் உறுதியே. இம்மாதிரியான விஷயங்கள் நம்முடைய தனிப்பட்ட உக்கிராணத்துவத்திற்கு உட்பட்டதாகும் மற்றும் கர்த்தர் ஒவ்வொருவருக்கும் அருளியுள்ளதான மனசாட்சி மற்றும் நடத்தைக்கடுத்த [R3034 : page 199] சரியான சுயாதீனத்தின் விஷயத்தில் தலையிடுவதற்கு யாரும் பிரயாசம் எடுத்துவிடக்கூடாது. நம்முடைய இருதயங்களினின்றும், ஜீவியங்களினின்றும் கழித்துப்போடப்பட வேண்டியதான பழைய புளித்த மாவாகிய கசப்பின் வேர்களுக்கும், தவறான புரிந்துகொள்ளுதலுக்கும், ஐக்கியமற்ற நிலைமை முதலானவைகளுக்கும் பெரும்பாலும் வழிநடத்துகின்றதான – ஒருவரையொருவர் நியாயந்தீர்க்கும் காரியத்திற்கு எதிரான தனது கண்டனத்தின் விஷயத்தில் அப்போஸ்தலன் மிகவும் கண்டிப்புடன் காணப்படுகின்றார் (ரோமர் 14:10,13).

“எங்கள் வசனத்துக்கு; ஒருவன் கீழ்ப்படியாமற்போனால்”, இத்தகையவனுடைய நடத்தை முதலானவைகள் தொடர்புடையதான அப்போஸ்தலனுடைய வேதவாக்கிய அறிவுரையானது, “அவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனுடனே கலவாதிருங்கள் என்பதாகும். எனினும் மிதமிஞ்சி ஒரு நிலைப்பாட்டினின்று மறுநிலைப்பாட்டிற்குச் செல்லுதல், அதாவது ஒன்றில் மிதமிஞ்சிய இரக்கம் காட்டுதல் அல்லது மிதமிஞ்சிய கடுமையுடன் இருத்தல் எனும் விழுந்துபோன மனிதனுடைய போக்கினை அறிந்தவராக அப்போஸ்தலன், “ஆனாலும் அவனைச் சத்துருவாக எண்ணாமல், சகோதரனாக எண்ணி, அவனுக்குப் புத்திசொல்லுங்கள் என்று கூறுகின்றார் (2 தெசலோனிக்கேயர் 3:13- 15). சகோதரனாக எண்ணி அவனுக்குப் புத்திசொல்லுங்கள் என்பது, கடுமையாகவும் மற்றும் கொடுமையாகவும் தாக்கிப்பேசுவதைக் குறிப்பதில்லை தயவின், சாந்தத்தின், பொறுமையின் ஆவியில் மற்றும் சகோதரனிடத்தில் தவறு நிச்சயமாய்க் காணப்படுகின்றது என்றும், அது நம் சார்பிலான தீமையான அனுமானமல்ல என்றும் நம்மால் நிச்சயிக்க முடிகின்ற அந்தத் தவறை அச்சகோதரன் கண்டிடுவதற்கு உதவிடவேண்டும் எனும் உண்மையான வாஞ்சையில் புத்திசொல்லுதலைக் குறிப்பதாகும்.

உயர்வாய் மதிக்கப்படவேண்டிய சகோதரர்களையும் மற்றும் எச்சரிக்கப்படவேண்டிய சகோதரர்களையும் வேறுபடுத்திடும் இக்காரியமானது, நடக்கையின் அடிப்படையில் மாத்திரமல்லாமல், உபதேசம் அடிப்படையிலும் காணப்பட வேண்டும் என்று அப்போஸ்தலனாகிய யோவான் நமக்குக் காட்டுகின்றார். எனினும் முக்கியத்துவமற்ற கேள்விகளின் விஷயத்தில் சில வேறுபட்ட கருத்துக்கள் மாத்திரம் காணப்படுவதற்காக, நாம் ஒரு சகோதரனை ஐக்கியத்தினின்று ஒதுக்கிவைக்க வேண்டுமென்ற அர்த்தத்தில் அப்போஸ்தலன் பேசவில்லை என்பதில் நமக்கு நிச்சயமே. அப்போஸ்தலனின் வார்த்தைகள் கிறிஸ்துவைப் பற்றின உபதேசத்தின் [R3035 : page 199] அடிப்படைகளுக்கு – உதாரணத்திற்கு தேவனில் விசுவாசம், நம்முடைய மீட்பரென இயேசுவில் விசுவாசம்; திவ்விய வார்த்தைகளினுடைய வாக்குத்தத்தங்களில் விசுவாசம் என்பவைகளுக்கு – மாத்திரமே நிச்சயமாய் பொருந்தும் என்பதில் நமக்கு நிச்சயமே. இந்த அடிப்படைகளானது, கிறிஸ்தவ நடக்கைகள், சத்தியத்தின் ஆவிக்கேற்றபடி நடத்தல் என்பவைகளோடுகூடச் “சகோதரனுக்கான அடையாளங்களாய் இருக்கின்றது; மிகவும் தெளிவாகவும் மற்றும் திட்டவட்டமாகவும் வேதவாக்கியங்களில் முன்வைக்கப்படாத தேவனுடைய திட்டம் தொடர்புடையதான சில அம்சங்களின் விஷயங்களில், நம்மிடமிருந்து வேறுபடுகின்றதான வேறு கண்ணோட்டங்களைச் சகோதரன் கொண்டிருந்தாலும் பரவாயில்லை. ஆனால் கிறிஸ்துவைப் பற்றின மூலக்கொள்கைகளினின்று, உபதேச ரீதியாக வழி தவறியுள்ளனர் என்று நாம் அடையாளம் கண்டுகொள்பவர்களின் விஷயத்தில், மிகவும் தீவிரமான / கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது ஏற்றது என்று அப்போஸ்தலன் தெரிவிக்கின்றார்; ஆனாலும் அது துன்புறுத்துதல்களாகவோ, விரோதித்தல்களாகவோ கசப்பான மற்றும் எரிச்சலுடன்கூடிய வாக்குவாதமாகவோ பகிரங்கமாகவோ (அ) இரகசியமாகவோ பகைப்பதாகவோ இராமல்; மாறாக அத்தகையவனினால் முன்வைக்கப்படுகின்ற மற்றும் போதிக்கப்படுகின்ற தவறான உபதேசங்களுடன் நம்முடைய ஐக்கியமற்ற நிலையைச் சரியாய் வெளிப்படுத்துவதாகும்; நம்முடைய செல்வாக்கானது எந்த விதத்திலாகிலும் (அ) எந்த அளவிலாகிலும் சுவிசேஷத்தின் அடிப்படைகள் விஷயத்திலான அவனது மறுதலிப்புகளை ஆதரித்திடுவதற்குப் பயன்படுத்தப்படாதபடிக்கு பாதுகாத்தலாகும். இந்தத் தீவிரமான / கண்டிப்பான நடவடிக்கையானது அப்போஸ்தலனால் பின்வரும் வார்த்தைகளில் விவரிக்கப்பட்டுள்ளது… “ஒருவன் உங்களிடத்தில் வந்து (நம்முடைய இனத்தை மீட்பதற்காகக் கிறிஸ்து மாம்சத்தில், உலகத்திற்கு வந்தார் முதலானவைகளை அறிக்கைப்பண்ணும்) இந்த உபதேசத்தைக் கொண்டுவராமல் இருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்; அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான் (2 யோவான் 10,11)

நம்முடைய ஆதார வசனம் சுட்டிக்காட்டுவதுபோன்று, நாம் பகுத்தறிவை, பகுத்துணர்வைப் பயன்படுத்திட வேண்டும் – “அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, சிலருக்கு இரக்கம் பாராட்டுங்கள். துணிகரமாயோ, அறிந்தோ, சொந்த விருப்பத்துடனோ இல்லாமல், மாறாக சிலர் எதிராளியானவனால் பாவத்திலோ அல்லது தவறான உபதேசத்திலோ சிக்கவைக்கப்பட்டவர்களாய் மாத்திரம் காணப்படுவதை நம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடிகின்றது. இம்மாதிரியானவர்களுடன் நாம் இன்னமும் இசைந்திடாத மனப்பான்மையைத் தக்கவைத்துக்கொண்டாலும், இவர்களது தவறு தற்காலிகமான தவறுதான் என்று நமது நம்பிக்கை காணப்படுவதை வெளிப்படுத்திடலாம்; இவர்களை உபதேசம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அல்லது இவர்களது ஒழுக்கக்கேடான நடத்தை சம்பந்தப்பட்ட விஷயத்தில், இத்தகையவர்களைக் கர்த்தருடனும் மற்றும் அவருடன் ஐக்கியம் கொண்டுள்ள சகோதரர் அனைவருடனும் ஐக்கியம் கொள்ளும் நிலைக்குச் சீர்ப்பொருத்திட நாடலாம். மற்ற “சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சித்திட வேண்டும். இவர்களிடத்தில் மிகவும் தெளிவாய்/ஒளிவு மறைவில்லாமல் பேசிடுவதற்கு நாம் கடமைப்பட்டிருப்போம்; இத்தகையவர்களிடத்தில் இவர்களது ஒழுக்கக்கேடான நடத்தையின் நிமித்தமான புண்களை, இவர்களது கண்களுக்கு முன் கிழித்து, வெளிப்படுத்த – இவர்கள் ஈடுபட்டுள்ளதான தப்பறையின் கடுமையை (அ) பாவத்தின் கடுமையை வெளிப்படுத்த நாம் கடமைப்பட்டிருப்போம்; அதுவும் கடினமான வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லையெனில், இவர்களது தூக்கமயக்கத்தினின்று இவர்களை விழிக்கப்பண்ண முடியாது என்று நாம் உணர்கிற பட்சத்தில் அப்படியாகவே பயன்படுத்தப்படவும் வேண்டும். இவர்களைப் பாவத்திலிருந்து இழுத்துவிடும்போது, இவர்களை நாம் “அக்கினியிலிருந்து – இரண்டாம் மரணத்திலிருந்து – இழுத்துவிடுகின்றோம். அப்போஸ்தலனாகிய யாக்கோபும் இதே வகுப்பாரைக் குறித்து, “உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம் போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால், தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஓர் ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சிக்கிறான் என்று பேசுகையில், பாவியாகிய ஒரு சகோதரனை, அதாவது சத்தியத்தில் விலகி மோசம் போன சகோதரனைக் குறித்து விவரிக்கின்றார் (யாக்கோபு 5:19,20).

இறுதியாக நாம் தெரிவிப்பது என்னவெனில், ஒழுங்கில்லாதவர்களின் விஷயத்திலான சகோதரர்களின் நடவடிக்கையானது, தண்டனைவிதமாக இருத்தல் கூடாது; ஏனெனில் தண்டிப்பது என்பது நமக்கடுத்தக் காரியமல்ல. “பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நம்முடைய எச்சரிப்பு/புத்திமதி அல்லது கண்டித்தல் அல்லது ஐக்கியத்தினைத் தவிர்த்தல் என்பவைகள் அப்போஸ்தலன் கூறியுள்ளது போன்று, அப்படிப்பட்டவனைச் சீர்ப்பொருந்தப்பண்ண வேண்டும் எனும் கண்ணோட்டத்தில், திருத்தும்விதமாக மாத்திரமே காணப்பட வேண்டும். “சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு – அதே விதத்தில் இல்லையென்றாலும், வேறு ஏதேனும் விதத்தில், நீ பெலவீனமாய்க் காணப்படும் விஷயத்தில் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக் குறித்து எச்சரிக்கையாயிரு (கலாத்தியர் 6:1).

மனந்திரும்பியுள்ளதற்கும், சீர்த்திருந்தியுள்ளதற்கும் எவை போதுமான சான்றாயிருக்கும் எனும் விஷயத்தில் தீர்மானிப்பதற்கு ஒவ்வொருவருக்கும் மாபெரும் ஞானமும், கிருபையும் அவசியமாகுகின்றது. எவனுடைய இருதயத்தில் சகோதர சிநேகம் ஐசுவரியமாய்க் காணப்படுகின்றதோ, எவனுடைய இருதயம் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கின்றதோ, எவனுடைய இருதயம் தன் சொந்த அபூரணத்தையும் மற்றும் பிரியமானவர் மற்றும் புதியதான உடன்படிக்கை மூலமாக மாத்திரமுள்ள தன்னுடைய ஏற்றுக்கொள்ளப் படுதலையும் உணர்ந்துகொண்டுள்ளதோ – அவனுடைய இருதயமே ஒழுங்கில்லாத சகோதரனிடமிருந்து வெளிப்படும் மனவருத்தம் மற்றும் மனந்திரும்புதலுக்கான முதல் ஆதாரத்தைக் கண்டு களிகூரும். ஒருவேளை முழுக்க அன்பினால் நிரம்பியிருந்தால், நமது இருதயமானது மிகவும் துரிதமாய் (மனவருத்தம் வெளிப்படுத்தின) ஒழுங்கில்லாச் சகோதரனிடத்திற்குச் செல்லும்; நாம் நம்மைக் கட்டுப்படுத்திக்கொள்வது அவசியமாகும்; அதிலும் விசேஷமாக இரண்டு (அ) மூன்று முறை அதே தவறு செய்திருக்கும் (அ) மிகவும் வருத்தத்திற்குரிய தவறு செய்திருக்கும் (ஒழுங்கில்லா) சகோதரன் விஷயத்தில், நாம் நம்மைக் கட்டுப்படுத்திக்கொள்வது அவசியமாகும். மனந்திரும்புதலுக்கு இசைவான கிரியைகளை எதிர்ப்பார்ப்பதும், செய்த தவறுக்குச் சீர்ப்பொருந்தியுள்ளதாகச் சில வெளிப்படுத்தல்கள் வெளிப்பட அல்லது இருதயமானது தேவனுக்கும், சத்தியத்திற்கும் மற்றும் நீதிக்கும் அதன் நேர்மை நிலைக்கும் திரும்பியுள்ளது என்பதற்குச் சாட்சியாக, நடத்தையில் அத்தகையதொரு பகிரங்கமான மற்றும் தீவிரமான மாற்றத்திற்கான வெளிப்படுத்தல்கள் வெளிப்பட காத்திருப்பதும் நமது கடமையாகும்.

தவறிழைத்த சகோதரனும், உண்மையாய் மனந்திரும்பியுள்ளவனும் இத்தகைய சாட்சியங்களைக் கொடுத்திட / வெளிப்படுத்திட விருப்பமில்லாமல் இருக்கமாட்டான்; சீர்ப்பொருந்தியுள்ளதற்கான தனது அறிக்கையானது இப்படியாக உறுதிப்படுத்தப்படுவது நியாயமல்ல என்றும் எண்ணமாட்டான். இப்படிப்பட்டச் சகோதரன் தனது மனநிலையின் காரணமாகவும் மற்றும் (தேவ) காரணங்களுக்கு/நோக்கங்கள் மீது தான் கொண்டுவந்திட்டதான அவமானம் காரணமாகவும் மிகவும் தாழ்மையடைந்தவனாகி, அவன் ஒன்றில் சிலகாலம் சகோதரர் மத்தியில், தவறை நினைத்து வருந்துவதினிமித்தம் வராமல் இருக்க வேண்டுமென்றோ அல்லது தான் சார்ந்துள்ள சபையாருக்குச் சம்மதமானால், பின் இருக்கையில் அமர வேண்டுமென்றோ – சகோதரர் மத்தியில் மிகவும் தாழ்மையான ஸ்தானம் / இடம் வகிக்க வேண்டுமென்றோ எண்ணுவான் என்று நாம் எதிர்ப்பார்த்திடலாம். [R3035 : page 200] ஒருவேளை தவறு செய்து மனந்திரும்பியுள்ளவர் சபையார் மத்தியில் வழிநடத்தும் ஸ்தானம் வகிப்பாரெனில், அவர் சபையில் அதிகாரப்பூர்வமான அல்லது வழிநடத்தும் எந்த ஸ்தானத்திற்கும் போதுமான காலம் – அவரது சீர்ப்பொருந்துதலின் உண்மைக்கான மிகுதியான சாட்சியங்கள் கொடுக்கப்படுவது வரையிலும் – மீண்டுமாகக் கொண்டுவரப்படக்கூடாது என்பதை “அவர் சார்பிலான தாழ்மையும்,” “சகோதரர் சார்பிலான பகுத்தறிவும்” சுட்டிக்காட்டுகின்றதாயிருக்கும்.

நாம் இப்பாடத்தைத் துவங்கினபோது கூறினதுபோலவே, நிறைவு செய்யும்போதும் . . . தீமையான செய்கைகள் அல்லது தீமையான உபதேசங்களே ஒழிய தீமையான அனுமானங்களோ, அறிவோ, வதந்திகளோ ஆவிக்குரிய ஐக்கியத்தினை விலக்கிக்கொள்ளுதலுக்கான அடிப்படையல்ல என்ற உண்மைகளை வலியுறுத்துகின்றோம். கர்த்தருடைய கற்பனையைக் (மத்தேயு 18:15) கைக்கொள்வது அவசியமாகும். சகோதரனில் உள்ள தவறைக் காண்கையில் நம்முடைய கண்களை நாம் மூடிக்கொள்ளக்கூடாது என்றாலும், எந்தத் தவறும் வெளிப்படையாய்த் தெரியாதபட்சத்தில், தவறு கண்டுபிடிக்கத்தக்கதாகத் தேடிடும் காரியத்தினைச் செய்திடுவதற்கு அன்பானது மறுத்திடும். மேலும் தவறானது தெளிவாய்க் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில், அது “சகோதரர் மத்தியில் கலந்துரையாடப்படக் / விவாதிக்கப்படக்கூடாது; மாறாக கர்த்தர் சுட்டிக்காட்டியுள்ளது போன்று, காரியங்களைக் கண்டுபிடித்தவரால் தவறு செய்துள்ளவரிடம் நேரடியாய் எடுத்துச்செல்லப்பட வேண்டும்; மற்றும் தவறு செய்துள்ளவர் செவிகொடுக்க மறுக்கும்போதுதான் – தவறைச் சரிச்செய்ய மறுக்கும்போதுதான் மற்றவர்களுக்குத் தெரிவிக்கப்படவேண்டும், ஓ! இந்தக் கற்பனை முழுமையாயக் ; கைக்கொள்ளப்பட்டால் எத்தனை பிரச்சனைகள் இல்லாமல் போகும்! எத்தனை தவறுகள் மற்றும் இருதய வலிகள் தவிர்க்கப்படும்!