சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R5304 (page 265)

சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை

GOD’S SUPERVISION IN THE WORLD AND IN THE CHURCH

“கிழக்கிலும், மேற்கிலும் வனாந்தர திசையிலுமிருந்து ஜெயம் வராது. தேவனே நியாயதிபதி,ஒருவனைத் தாழ்த்தி ஒருவனை உயர்த்துகிறார்.” – சங்கீதம் 7

வேதவாக்கியம் அறிவிக்கிறதாவது: “பூமியையோ அவர் (தேவன்) மனுபுத்திரருக்குக் கொடுத்தார்.” தகப்பனாகிய ஆதாம் பூமியின் முதல் மகாராஜாவாக இருந்தார். அவரது விழுகைக்குப் பிறகு பூமியிலுள்ள மிருகங்கள், சமுத்திரத்தின் மச்சங்கள், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளில் மேலுள்ள இந்த இராஜ்யம் பூரண மனிதனின் கையிலிருந்து பிடுங்கப்பட்டது. ஏனெனில் மனிதன் அதை சீரழிக்க ஆரம்பித்திருந்தான். மனிதனின் கீழ்ப்படியாமையினால் இந்த ராஜ்யம் பரலோக பிதாவின் ஆவியினால் வழிநடத்தப்படுவதிலிருந்தும் கைவிடப்பட்டது. ஆதியிலே பூமியின் விவகாரங்களில் மனுக்குலத்திற்கு தேவனுடைய வழி நடத்துதல் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் மனுக்குலமானது பித்துபிடித்தது போனது அல்லது சம நிலையற்று போனது. பாவமும் மரணமும் ஏற்படுத்தின சீரழிவின் நிலை இது தான்.

சாத்தான், இருளை வெளிச்சம் என்றும், வெளிச்சத்தை இருளென்றும் காண்பித்து, பல்வேறு காரியங்களில் மனுக்குலத்தை குருடாக்கி, வஞ்சித்து, தவறாக வழிநடத்தி வருகிறான். சாத்தானின் இந்த சக்தியை வேத வாக்கியங்கள் “இப்பிரபஞ்சத்தின் தேவன்” என்று கூறுகின்றன. அவன் எப்படி ஆளுகை செய்கிறான் என்று நாம் அறிவுறுத்தப்படுகிறோம். அவன் பாவத்தை ஊக்குவித்து, தேவனுக்கு விரோதமானவைகளை ஊக்குவித்து வருகிறான். அவன் “கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியை செய்து வருகிறான்.” இந்த வேலை நூற்றாண்டு காலமாக, குறிப்பாக ஜலப்பிரளயத்திலிருந்து நடந்து வருகிறது. அதற்கு முன்னான காலங்களில் சாத்தான் வித்தியாசமான முறைகளில் கிரியை நடப்பித்து வந்தான். ஏனெனில் ஜனங்கள் அப்போது சரியான திட்ட அளவில் பழக்கப்பட்டிருந்தார்கள். இப்பொழுது இருப்பதைக் காட்டிலும் குறைவாகவே விழுந்து போயிருந்தார்கள். ஆயுசு நாட்கள் ஜலப்பிரளயத்திற்கு முன்பு அதிகமாக இருந்தது. தற்காலத்தில் மனிதனின் ஆயுசு நாட்கள் முப்பத்தி ஐந்து வருடமாக இருக்கிறது. (இது 1913ல் எழுதப்பட்டது)

தேவன் மனிதர்களிடம் கொடுத்த காரியங்களில் தேவன் தலையிடுவதேயில்லை. மனுக்குலம் பின் நோக்கி பார்ப்பதால் செய்யப்பட்ட அபத்தங்களை பார்க்கிறார்கள். “இப்பிரபஞ்சத்தின் தேவனுடைய” சக்தியின் கீழ் இருந்து கொண்டு, சாத்தான் அவர்களை தவறாக வழி நடத்த அனுமதிக்கப்பட்டு, அவர்கள் பல்வேறு கண்ணிகளுக்குள் விழுந்து இருக்கிறார்கள். எவ்வளவு முடியும் என்று நினைப்பதைக் காட்டிலும் அதிகமான அளவில் மனுக்குலமானது பாவம் மற்றும் மரணத்தின் மிகவும் தீவிரமான அனுபவங்களை பெற்றிருந்தார்கள். மனிதன் இந்த சீரழிவான நிலையில் எப்பொழுதுமே இருந்ததில்லை என்ற உண்மைக்கு அப்போஸ்தலர் நமது கவனத்தை ஈர்க்கிறார். மனிதன் பாவம் செய்த பொழுது அவன் தன் சொந்த விருப்பத்தின்படி செய்ய தேவன் அவனை அனுமதித்தார். [R5305 : page 265] அவன் பாவத்தில் விழுந்துபோகவும், சத்துருவானவன் அவனை தவறாக வழி நடத்தவும் அனுமதித்தார் என்று அப்போஸ்தலர் கூறுகிறார்.

தேவன் ஏன் இதை செய்ய வேண்டும்? மனுக்குலம் அடுத்த யுகத்தில் பாவத்தின் இயல்பான தன்மை என்ன என்பதையும் அதன் பலனையும் காண்பார்கள் என்பதும், ஒரு மாபெரும் நிரந்தரமான பாடத்தை கற்றுக் கொள்ளுவார்கள் என்பதும், தெய்வீக நிலைப்பாட்டிலிருந்து விலகுதல், தீமையை விளைவிக்கும் என்பதை மனுக்குலம் அறிந்துகொள்ளும் என்பதே தேவனுடைய நோக்கம். மேலும் இந்த பாடங்கள் தேவதூதர்களால் அங்கீகரிக்கப்பட்டு, பாவத்தின் பலன் என்ன என்பதை காண்பார்கள் என்பதும், இந்த மாபெரும் பயங்கரமான இலக்கான பாடம் அவர்கள் முன்னே இருக்கும் என்பதும் தேவனுடைய நோக்கமாகும். இந்த பாவ மார்க்கத்தில் மனுக்குலம் என்ன செய்திருக்கிறது என்பதை பயமும் திகிலும் இல்லாமல் சரித்திர ஏடுகளை யாரும் படிக்க இயலாது.

பிறகு நாம், எப்படி மனுக்குலமானது தேவனுடைய வழியை பின்பற்றுவதற்கு தேடுதலின் மூலம் அவர்களே உதவிக் கொண்டார்கள் என்பதை காண்கிறோம். தேவன் மனிதனுக்கு கெட்ட மனதை அனுமதித்து, அவன் தீய மார்க்கத்தை எடுத்த போது தடுக்காமல் இருந்ததால், மிகுந்த பயங்கரம், பலனாக இருந்ததை நாம் காண்கிறோம். (ரோமர் 1:28-32) ஜலப்பிரளயத்துக்கு முன்பு இருந்த நிலைமையை அனுமதித்திருந்தால் நிலைமை மிகவும் பயங்கரமாக இருந்திருக்கும் என்பதால் தேவன் குறுக்கிட்டார் என்று நாம் பார்க்கிறோம். மனிதனுடைய எண்ணங்கள் தீமையானதாக இருந்தன. தொடர்ந்து தீயவைகளாகவே இருந்தன. ஆகையால் இந்த நிலைமையை ஜலப்பிரளயம் மூலம் தேவன் முடிவுக்கு கொண்டு பேழை மூலம் காக்கப்பட்ட நோவா மற்றும் அவரது குடும்பத்தின் மூலம் ஒரு புது ஆரம்பத்தை தேவன் ஏற்படுத்தினார். நினிவே பட்டணத்தார், சோதோமியர் மற்றும் அமலேக்கியர்களின் விஷயத்தில் குறுக்கிட்டது போல, தேவன் அவ்வப்போது குறுக்கிட்டார். சோதோமியர்கள் விஷயத்தில் தேவன் வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்து அதை ஒரு உதாரணமாக வைத்தார். இப்படிப்பட்ட அழிவு ஒரு நல்ல நிலைமைக்கேயாகும். சோதோமியர்களின் எதிர்காலத்தை அழித்து விடாதபடி அவர்களை ஒரு உதாரணமாக வைத்தார்.
[R5305 : page 266]

உலக பேரரசுகள் மாபெரும் கொள்கைகளை விளக்கின – SUB HEADING

பாபிலோனியர்கள் உலகத்தை ஆளுகை செய்ய முயற்சித்த போது அவர்கள் மனுக்குலத்தின் மேல் நல்ல நோக்கத்தையும், நல்ல மனோபாவத்தையும் உடையவர்களாக இருந்தார்கள். நல்ல ஒரு அரசாங்கத்தை கொடுக்க விரும்பினார்கள். அவர்களது ஆளுகை சில காரியங்களில் அனுகூலமாக இருந்தது. அவர்களது ஜெயத்திற்கு கொஞ்சம் முன்னர் எல்லா நிகழ்வுகளிலும் ஆணவத்தை கொண்டு வந்தது. பிறகு தேவன், மேதோபெர்சிய ராஜ்யம் எழும்ப அனுமதித்தார். அவர்களுக்கு பிறகு கிரேக்கர்கள் இந்த உலகத்தை நல்ல அரசாங்கத்துடன் ஆளுகை செய்ய முயற்சித்தனர். அதன் பிறகு ரோமர்கள் வந்தனர். இந்த உலக பேரரசுகள் ஒவ்வொன்றும் அவர்களது கொஞ்சம் வெற்றிற்கு பிறகு கவிழ்க்கப்பட்டு அவர்களது முன்னேற்றம் சிதைவுற்றது.

இப்படியாக காரியங்கள் பொதுவான வழியில் செல்லவும் மனுக்குலத்தை பொதுவான எல்லைக்குள் வைத்திருக்கவும் தேவன் அனுமதித்தார். எல்லை மீறும் பொழுது, தெய்வீக திட்டத்திற்கு தடங்கள் வரும் போது அதை தடுத்தார்.

சில முறைகளில் சில முன்னேற்றம் இருந்தது. நேபுகாத்நேச்சார் புறஜாதி அரசாங்கங்களில் தலையாக, பொன்னாலான தலையாக ஆனார் என்று வேத வாக்கியங்கள் கூறுகின்றன. நேபுகாத்நேச்சார் இந்த சந்தர்ப்பத்தை பெற வேண்டும் என்று தேவன் விரும்பினதால் அவனுக்கு முன்னேற்றம் வந்தது. தேவன் அவனை அனுமதித்தால், அந்த தேசம் முன்னேறியது. இப்படியாகவே மற்ற உலக பேரரசுகளுக்கும் நடந்தது. அதை ஏற்படுத்துவதும் தள்ளுவதையும் தேவன் செய்ய வேண்டியிருந்தது. இப்படியாக உலகம் பலவிதமான அரசாங்கங்களை பெறும்படி அனுமதித்தார். இன்னொரு நிகழ்வில், இஸ்ராயேல் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அடையும் பொழுது ஒரு குறிப்பிட்ட பார்வோன் அரசாட்சியில் இருந்தான். அப்போஸ்தலர் பவுலின் பதிவின்படி, கர்த்தர் பார்வோனிடம் கூறியதாவது: “இதற்காகவே நான் உன்னை நிலை நிறுத்தினேன்.” (ரோமர் 9:17; யாத்திராகமம் 9:16)
தேவன் கையாண்டு கொண்டிருந்த மாபெரும் கொள்கைகளை அந்த முறையில் விளக்குவதற்காக பார்வோனுக்கு சந்தர்ப்பம் கொடுத்தார். தேவன் பார்வோனின் மனதை கடினப்படுத்தி அவனை கெட்டவனாக்குகிறார் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் இது அப்படியல்ல! அவன் சுபாவத்திலேயே அவன் ஒரு கெட்ட மனிதன். தேவன் அந்த சமயத்தில் மற்ற வாரிசுகளை விட்டுவிட்டு இந்த குறிப்பிட்ட மனிதனை ஆளுகைக்கு வரும்படி செய்தார். அந்த சமயத்தில் தேவன் அவனை அங்கே வைத்தார். அவனை தீமை செய்ய வைக்கும்படியல்ல, அவன் திருந்தாத மனம் உடையவன் என்பதை காண்பிக்கவே ஆகும்.

வாதைகள் வந்தன. “என் ஜனங்களை அனுப்பி விடு” என்று கர்த்தர் சொன்னார். ஒவ்வொரு வாதையும் வந்த பிறகு தேவனுடைய ஊழியக்காரன் மோசேயை பார்வோன் வேண்டிக்கொள்வான். வாதை நீங்கின பிறகு ‘நல்லது, இதை நீ ஒன்றும் பெரிதாக செய்து விடவில்லை. எப்படியோ வாதை போய்விட்டது’ என்று கூறுவான். ஆகையால் இன்னொரு வாதை வரும். எகிப்தியர்கள் மேல் இரக்கங்கொண்டு வாதையை அடிக்கடி நீக்கின தேவனுடைய இரக்கத்தை பார்வோன் அடிக்கடி விளங்கப்பண்ணினான்.
அது ஒரு பாடமாக இருந்தது. தேவன் ஒரு மனிதனில் கிரியை செய்து அவனை கெட்டவனாக்கி, தீமையானவை செய்ய பண்ணுவது அல்ல. வாதையை நீக்கும் போது, தேவனுடைய இரக்கம் மனிதனின் மனதை கடினப்படுத்துகிற ஒரு பாடம். அது இருதயத்தை மென்மையாக்குவதற்கு பதிலாக கடினப்படுத்துகிற கெட்ட பலனே ஏற்பட்டது. இதே போல அநேகர் இந்த உலகில் இருக்கிறார்கள். தேவன் அவர்களை மன்னிக்க விரும்புகிறார் என்று அவர்களுக்கு சொல்லும் போது, அவர்கள் நினைக்கிறதாவது: “நல்லது, இன்னும் நான் பாவம் செய்வேன்!” இதிலிருந்து தேவனுடைய இரக்கத்தைப் பற்றிய மாபெரும் பாடத்தையும் மனிதனோடு செயலாற்றுகிற முறையையும் நாம் கற்றுக்கொள்கிறோம். இறுதியாக கடைசி வாதை வந்தது. இதன் பிறகு கூட பார்வோனும் எகிப்தியர்களும் இஸ்ரயேலர்களை பிடிக்கச் சென்றார்கள். தொடர்ந்து வந்த எகிப்தியர்கள் சிவந்த சமுத்திரத்தில் முழ்கியது தான் இறுதியாக நடந்தது. (யாத்திராகமம் 14:5-31)

தேவனுடைய சித்தத்தின்படி

தற்கால அனைத்து காரியங்களிலும் தேவன் மேற்பார்வையிடுகிறார் என்று விசுவாசத்தினால் நாங்கள் நம்புகிறோம். ஆகையால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாம் ஓட்டுப்போட்ட தகுதியான வேட்பாளர் வெற்றி பெறவில்லையென்றால், அது சந்தர்ப்ப வசத்தினால் ஏற்பட்டது என்று நாம் நம்பக்கூடாது. தேவன் தேர்தலைப் பற்றிய அனைத்தையும் அறிவார் என்று நாம் கருத வேண்டும். தெய்வீக ஏற்பாட்டின்படி சில காரியங்கள் சில வழிகளில் நடக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்று எண்ண வேண்டும். ஆகையால் தெய்வீக ஏற்பாட்டிற்கு இசைவாக ஜனாதிபதி திரு. வில்சன் அவர்களே மிகவும் தகுதியானவராக இருந்தார்.

ஆகையால் சகலமும் தேவனுடைய சித்தத்தின்படியே நடைபெறுகிறது என்று நாம் நம்ப வேண்டும். தேவன் ஒவ்வொரு மனிதனுடைய எண்ணத்தையும், கிரியையும் தொடுகிறார் என்று நாம் நம்பக்கூடாது. ஆம், அப்படியல்ல! ஆனால் சர்ச்சை அல்லது சண்டையின், கூற்றை தெய்வீக சித்தத்திற்கு இசைவாக இருக்கும்படி ஒழுங்குபடுத்த தேவன் வல்லராயிருக்கிறார். மனிதர்களைப் பற்றிய காரியங்களைப் பொறுத்தவரை அது ஒருவரா அல்லது வேறொருவரா என்பது பற்றி தேவன் கவலைப்பட மாட்டார் என்று நாம் நிச்சயப்படுத்துகிறோம். உலகத்தை பொருத்தவரை தேவனுக்கு முன்னுரிமையோ அல்லது பிடித்தவர்களோ என்று எதுவுமேயில்லை. கொள்கைகளின் வழியில் முடிவாக எல்லாருக்கும் நன்மை பயக்கும்படி கிரியை நடப்பிக்கும்படி அவர் இயக்கி ஆளுகை செய்து கொண்டு வருகிறார்.

இப்படியாக உலகின் சகல காரியங்களும் உச்சக்கட்டத்தை அடையும்படி ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். அவரை ராஜாவாக்கியோ அல்லது இவரை ராஜாவாக்கியோ அல்லது இவரை ஜனாதிபதியாக இருக்கும்படியோ அல்லது அவரை ஜானதிபதியாக இருக்கும்படி ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். சகலமும் அவரது மாபெரும் திட்டத்திற்கு இசைவாக நடந்து கொண்டிருக்கிறது. தேவன், “இப்பிரபஞ்சத்தின் தேவனை” கீழே தள்ளுவார். சாத்தானும் அவனது ஏற்பாடுகளும் கடுமையான வீழ்த்துதலினால், மகாபெரிய தூக்கி எறிதலினால் நீக்கப்படும். தேவன் அவரது ராஜ்யத்தை ஸ்தாபிப்பார். அது மனுக்குலம் அனைத்திற்கும் ஆசீர்வாதத்தை கொண்டு வரும். அவரது ராஜ்யம் “சகல ஜாதிகளாலும் விரும்பப்படுவதாக” இருக்கும். இது மேசியா மற்றும் அவரது ராஜ்யத்தில் உடன் சுதந்தரருமாக இருக்கக்கூடிய அல்லது மணவாட்டியின் ராஜ்யமாக இருக்கும். “உம்முடைய ராஜ்யம் வருவதாக: உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலேயே செய்யப்படுவதாக” என்று இந்த ராஜ்யத்திற்காகத்தான் ஜெபித்து வருகிறோம்.

சபை ஒழுங்கின் காரியங்கள்

கர்த்தர் விசேஷமாக அக்கறை கொண்டுள்ள அவர் விசேஷமாக வழி நடத்திக் கொண்டிருக்கிற சபைக்கு நமது தலைப்பு வசனத்தை பொருத்துவோம். அவரது ஏற்பாட்டில் இந்த அங்கங்களை சபையில் அமைக்கும்படி கிருபை செய்திருக்கிறார். “தேவன் தம் சித்தத்தின்படியே, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்.” “தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும் பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்கள்” முதலானவைகளையும் ஏற்படுத்தினார். இப்படியாக கிறிஸ்துவின் சரீரத்தில் பல்வேறு நிலைகளை குறிப்பிடுகிறார். அப்போஸ்தலர் கூறுவது போல, தேவன் சரீரத்தில் அவயவங்களை வைத்தார் என்பதை நாம் நினைவுகூர வேண்டும். தேவனுடைய சித்தத்திற்கு இசைவாயிருக்கிற இருபது அல்லது முப்பது அல்லது முன்னூறு அல்லது ஐந்நூறு அல்லது ஆயிரம் பேர்களில் சிலரை மூப்பர்களாகவும் சிலரை உதவிக்காரர்களாகவும் வைப்பார். அவர் எப்படி அவர்களை வைப்பார்? சபையின் குரல்கள் மூலம் சபையில் உதவிக்காரர்களாக நியமனம் பெற்றவர்கள் கர்த்தருக்கும் சகோதரர்களுக்கும் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். மூப்பராக நியமனம் பெற்றவர்கள் அதை ஒரு தனிச்சலுகையாக எண்ணி, கர்த்தருக்கும் சகோதரர்களுக்கும் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். சபை பயனடையும்படியாகவும் சகோதரர்களுக்கு பிரியமாகவும் எல்லாவற்றிற்கும் மேலாக கர்த்தருக்கு பிரியமாகவும் நடக்க வேண்டும்.
எபேசு சபையின் மூப்பர்களிடம் அப்போஸ்தலர் பவுல் வார்த்தைகளை பேசும் போது கூறின கருத்து இது தான். (அப்போஸ்தலர் 20:17-38) மந்தைக்கு ஆவிக்குரிய உணவளிக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அப்போஸ்தலர் அவர்களுக்கு கூறுகிறார். அவர் அவர்களுக்கு பலவிதமான புத்திமதிகளை சொல்லுகிறார். மேலும் தங்களது சந்தர்ப்பங்கள் மற்றும் பொறுப்புகளுக்கான கணக்கு கொடுக்கும்படி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதையும் கர்த்தராலும் சகோதரர்களாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு புத்திமதி கூறினார்.

சில சமயம் கர்த்தரின் அனுமதியுடன், நிச்சயமாக கர்த்தரின் உத்தரவுடன் சபைகள், ‘கடந்த முறை இந்த சகோதரனை மூப்பராக தேர்ந்தெடுத்தோம். ஆனால் இந்த தடவை நாங்கள் தேர்ந்தெடுக்கப் போவதில்லை’ என்று கூறலாம் அல்லது அவர்கள் கடந்த முறை ‘அவர் உதவிக்காரராக இருந்தார். இந்த தடவை அவரை தேர்ந்தெடுக்க மாட்டோம்; அவரை விட்டுவிடுவோம்’ என்று கூறலாம். இப்படியாக விடப்பட்ட சகோதரனின் மனோபாவம் எப்படி இருக்க வேண்டும்?
[R5305 : page 267]

கர்த்தருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்

இப்படிப்பட்ட காரியங்களில் நாங்கள் அனுபவங்களை பெற்றிருக்கிறோம். சபையார் எங்கள் திறமைகளை உணராமல் எங்களை மறுபடியும் தேர்ந்தெடுக்காமல் விட்டு விட்டார்கள். இப்படியாக தவறு செய்து விட்டார்கள் என்று எழுதப்பட்ட கடிதங்களை பெற்றிருக்கிறோம். எங்களது பதில் என்னவென்றால், இதற்கான காரணம் என்னவென்று நாங்கள் அறியோம். சபையில் ஞானமாக முடிவெடுத்தார்களா இல்லையா என்பதை நாங்கள் அறியோம். ஆனால் இது தேவனிடத்திலிருந்து வந்த தீர்மானம் என்று அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அப்படிப்பட்டவர்கள் தங்களுக்குள்ளே சொல்லிக் கொள்ள வேண்டியது என்னவென்றால், நான் சபையின் ஊழியக்காரனாக இருந்திருக்கிறேன் மற்றும் இதைக் குறித்து நான் நன்கு உணர்ந்திருக்கிறேன். அந்த உயர்வானது கர்த்தரிடத்தில் வந்தது என்றும் அந்த ஊழியமானது கர்த்தரிடத்திலிருந்து வந்தது என்றும் நான் உணர்கிறேன். ஆனால் இப்பொழுது கர்த்தருடைய வழி நடத்துதலின்படி, நான் ஒரு வருடமோ, ஆறு மாதமோ அல்லது சில காலமோ நான் கண்காணியாக இருக்கப் போவதில்லை. கர்த்தர் ஒரு வேளை நல்ல ஒரு பாடத்தை வைத்திருப்பார். ஒரு வேளை கர்த்தர் யாரை வைக்கலாம் [R5306 : page 267] யாரை வைக்க வேண்டாம் என்று தமது விருப்பத்தை காண்பித்திருக்கலாம். இந்த காரியத்தைக் குறித்து நான் காயமடைந்ததாகவோ அல்லது கோபம் அடைந்ததாகவோ அல்லது வருத்தம் அடைந்ததாகவோ உணராமல், நான் சொல்லப்போவது என்னவென்றால்: ஒரு வேளை நான் எனது கடமையை செய்வதில் ஒரு வேளை தவறியிருக்கலாம் என்றும் இதை தேவனிடத்திலிருந்து வந்த சிட்சை என்றும் நான் கருதுவேன். வேத வாக்கியங்கள் கூறுகிற வார்த்தைகளை நான் நினைவு கூறுகிறேன். “சகோதரர் உயர்த்தப்படும் போது சந்தோஷப்படுவானாக மற்றும் சகோதரன் தாழ்த்தப்படும் போதும் சந்தோஷப்படுவானாக.” (யாக்கோபு 1:9,14) கர்த்தருடைய சித்தம் என்று சபையார் கருதுவதை அவர்கள் செய்ய சுதந்திரம் பெற்றதைக் கண்டு சந்தோஷப்படுகிறேன். எல்லா காரியங்களிலும், ‘கிழக்கிலும், மேற்கிலும் வனாந்திர திசையிலுமிருந்து ஜெயம் வராது. தேவனே நியாயாதிபதி. சபை காரியங்களில் யாரை வைக்க வேண்டும் என்று அவரே தீர்மானிப்பவர் என்பதை உணர முயற்சிப்பேன்.