Q103:2
கேள்வி (1910)-2- சபையில் இரு சகோதரர்களுக்கிடையே சில சிறு கசப்புகள் ஏற்பட்டிருக்க மற்றும் அவர்கள் ஒருவருக்கொருவர் பேச மறுத்துக் காணப்படுகையில், அவர்கள் சரியான உறவுநிலையில் இல்லை என்பது சபையார் யாவருக்கும் தெரிந்திருக்க, இப்படியான சூழ்நிலையில் மூப்பர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? அவர்கள் இக்காரியத்தை ஏதேனும் விதத்தில் வெளிக்கொண்டுவர வேண்டுமா அல்லது இக்காரியமானது விசேஷமாக எவ்விதத்திலும் சபைக்கு இடையூறாக இல்லாமல் காணப்படுகையில், அப்படியே விட்டுவிடலாமா?
பதில் – சகோதரனே என்னுடைய கருத்தென்னவெனில் – சில காரியங்கள் தனிப்பட்ட காரியங்களாகக் காணப்படலாம் மற்றும் அவற்றைச் சபையார் கண்டுகொள்ளாமல் இருங்கள் மற்றும் தேவனால் சில விஷயங்களில் கையாளப்பட்ட விதம் குறித்து வேதாகமம் கூறுகின்றதான விதத்தில் கையாளுங்கள் என்பவையேயாகும். தேவன் சிலவற்றைக் காணாதவர்போல் இருந்தார் என்று நாம் வாசிக்கின்றோம். ஆகையால் சபையாரும் சிலவற்றைக் காணாதவர்கள்போல் – அதாவது சிலவற்றை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும். இரண்டு நபர்கள் இடையே சிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டிருக்கும் பட்சத்தில், ஒருவேளை சபையானது அதில் தலையிட முற்படுமாயின், சபை அநேகமாக எப்போதுமே (busy) ஓயாது குறுக்கிட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் காரியத்தைக் காண்பவர்கள் காரியத்தினை, பிரச்சனையில் காணப்படுபவர்களின் கவனத்திற்குக் கொண்டுவருவது தகுதியானதே மற்றும் ஒருவேளை ஒருவரோ அல்லது இருதரப்பினருமே பிரிவினைகளை உண்டாக்கக்கூடியவர்களாக இருக்கும்பட்சத்தில், இது மற்றவர்களால் கவனிக்கப்பட வேண்டும் மற்றும் மிகவும் பரிவுடன் கையாளப்படக்கூடாது – அவர்கள் சகோதர சகோதரிகள் அல்ல என்று புறக்கணிக்கப்படாமல், மாறாக சபையாருக்கான எந்தப் பணிக்கு அல்லது ஊழியத்திற்கு என்று நியமிக்கப்படக்கூடாது மற்றும் அவர்கள் வெளிப்படையாகவே விழிப்பற்று நடந்து, சில பிரிவினைகளை உண்டுபண்ணுகிறவர்களாகவும் இருப்பதினால், அவர்களிடம் கொஞ்சம் பேச்சுக்கொடுக்காமல் நடத்துங்கள். பின்பு மூப்பர்களில் யாரேனும் அந்தச் சகோதரர்களில் ஒருவரோடு தனிப்பட்டமுறையில் பேசக்கூடிய நல்லதொரு வாய்ப்புக் கிடைத்துள்ளதாக எண்ணி, “சகோதரனே உங்களது விவகாரத்தில் நான் உதவ முடிகிற காரியம் ஏதாகிலும் உண்டா? நீங்களும், சகோதரன் Brown / பிரவுண் அவர்களும், சுமூகமாக இல்லை என்பதை நான் கவனிக்கிறேன்; சபையின் மூப்பர் என்ற விதத்தில் நான் உங்களிடத்தில் சொல்ல விரும்புவதாவது: நீங்கள் மத்தேயு 18:15-ஆம் வசனத்தினை மறந்துவிட வேண்டாம்; ஒருவேளை சகோதரன் பிரவுண் அவர்கள் உங்களுக்கு ஏதேனும் தீங்கு செய்திருந்தால், அந்த வேதவாக்கியத்தினை மறந்துவிட வேண்டாம் மற்றும் நான் எவ்விதத்திலாவது உங்களுக்கு உதவிபுரிய வேண்டுமெனில், அதற்கு நான் எப்போதும் தயார் என்று கூறுவதும் முறையானதேயாகும்.
அச்சகோதரன் பிரதியுத்திரமாக: “நல்லது, அதைக்குறித்து நான் உங்களிடம் சொல்ல வேண்டும் என்பாரானால்
மூப்பர்: “இல்லை சகோதரனே, அதைக்குறித்து நீங்கள் என்னிடம் சொல்வதை நான் விரும்பவில்லை அவ்விஷயம்குறித்து நீங்கள் சொல்வதை நான் கேட்பது தவறான காரியமாயிருக்கும்; வேதவாக்கியம் முன்வைக்கிற விதத்திலேயே அவ்விஷயம் என்னிடம் வர வேண்டும். உங்களுக்கும், சகோ. பிரவுண் அவர்களுக்கும் இடையில் கருத்துவேறுபாடு காணப்படுமாயின், அதைக் கேட்பதற்கு நான் பிரியப்படவில்லை அதை நீங்கள் என்னிடம் கூறும்படிக்கு நான் ஊக்குவிப்பது என்பது தவறான காரியமாய் இருக்கும். இயேசு மத்தேயு 18:15-17 வரையிலான வசனங்களில் கூறியுள்ளதான வழியினைத் தேவன் அருளியிருக்கின்றார். நாம் அதை எவ்வாறு செய்யலாம் என்று அவர் நமக்கு எடுத்துக்கூறுகின்றார் – அதாவது, நீங்கள் முதலாவது சகோ. பிரவுண் அவர்களிடம் சென்று, ஒப்புரவாகிக்கொள்ள முயற்சியுங்கள்; ஒருவேளை இதில் பலன் காணமுடியவில்லையெனில் மற்றும் அவர் உங்களுக்குத் தீமையான சிலவற்றைச் செய்துவருகிறவராகக் காணப்பட்டு மற்றும் அதனால் உங்களால் அவரிடத்தில் அன்புள்ள சகோதரனாகக் காணப்பட முடியவில்லை என்று உணருவீர்களானால், நீங்கள் வந்து, உங்களோடுகூட வருவதற்கு இரண்டு சகோதரர்களை அழைத்திடலாம். உங்களோடுகூட என்னை அழைத்துச்செல்ல நீங்கள் விரும்பும்பட்சத்தில், அப்படி வருவதற்கும், சமாதானத்தையும், ஒற்றுமையையும் கொண்டுவருவதற்கென்று என்னால் செய்யமுடிந்தவற்றைச் செய்வதற்கும் நானும் பிரியப்படுவேன். ஆனால் முன்கூட்டியே எதையும் கேட்டிட நான் விரும்பவில்லை அப்படிக் கேட்பது சரியாய் இராது; நீங்கள் சொல்வதை நான் செவிகொடுத்துக் கேட்பேனானால், நான் இவைகளைச் செய்திட பொருத்தமற்றவனாய் இருப்பேன். ஒருவேளை சகோ. பிரவுண் அவர்கள் உங்களுக்குத் தீமை செய்திருக்கிறாரெனில், அவரிடமே செல்லுங்கள் மற்றும் இதில் பயனில்லாமல் போயிற்று என்றால் மற்றும் அவ்விஷயம் உங்கள் மனதில் உங்களுக்கும், அவருக்கும் பிளவினை ஏற்படுத்துமளவுக்கு முக்கியமானதாய் இன்னும் தோன்றுமானால், அடுத்தக்கட்டமாக வேதவாக்கியங்கள் கூறுவதுபோன்று ஒன்றோ, இரண்டோ வேறு சகோதரர்களை அழைத்துச் சென்று அவரிடம் உரையாடுங்கள் மற்றும் தொடர்ந்து செவிசாய்க்கப்படவில்லையெனில் மற்றும் அவராலோ அல்லது உங்களாலோ அக்காரியத்தில் இணக்கத்திற்கு வரமுடியவில்லையெனில், அடுத்தக்கட்டமாக அது – நீங்கள் விரும்பும் பட்சத்தில் சபைக்கு முன்பாகக் கொண்டுவரப்படலாம்; ஆனாலும் இக்கட்டங்களுக்கெல்லாம் முந்தி கொண்டுவரப்படக்கூடாது என்று கூறிடலாம்.