R5921(page205)
“நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே நம்முடைய போதகரின் கட்டளையாக இருக்கின்றது (யோவான் 15:12). “நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம் என்று அப்போஸ்தலனும் எழுதுகின்றார் (1யோவான3;:16). “பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்பு கூருகிறான் (1யோவான் 5:1). சொல்லப்போனால் கிறிஸ்துவின் சபைக்குரியவர்கள் யாவரும், தாங்கள் ஆவியில் ஜெநிப்பிக்கப்படுகையில் அன்பின் ஆவியினைப்பெற்றிருக்கின்றனர். மேலும் இராஜ்யத்திற்கென்றுள்ள ஆயத்தத்தில் நாம் முன்னேறுகையில், அந்த அன்பின் ஆவியானது, உயிர்த்தெழுதலில் பூரணப்படும்வரை அதிகமதிகமாய்ப் பெருகி அதிகரித்திடும்; உயிர்த்தெழுதலின்போது நாம் நமது புதிய சரீரங்களைப் பெற்றிருப்போம் மற்றும் இது நம்முடைய அன்புள்ள இருதயங்களானது, அன்பை முழுமையாக வெளிப்படுத்திடுவதற்கு அனுமதித்திடும். ஆனால் இதற்கிடையில், கர்த்தருடைய அன்புக்குரிய சகோதரர்கள் எத்தனைதரம் ஒருவரையொருவர் சோதிக்கின்றனர், ஒருவரையொருவர் எரிச்சலூட்டுகின்றனர் மற்றும் அன்பிற்கும், நற்கிரியைகளுக்கும் ஏவத்தவறி, சண்டைகளைத் தூண்டிவிடுகின்றனர்!
இத்தகைய பெலவீனங்கள் புதுச்சிருஷ்டியினுடையதல்ல, மாறாக பழைய சிருஷ்டியினுடையது என்று நாம் சரியாய்க் காரணம் கற்பித்தாலும், புதுச்சிருஷ்டியினுடைய வளர்ச்சி என்பது, பழைய சிருஷ்டியினுடைய மரணத்தைக் குறிக்கின்றதாய் இருக்கும் என்றும், பாவத்திற்கும், சுயநலத்திற்கும் நம்முடைய மாம்சமானது எவ்வளவாய் மரித்திருக்கவில்லையோ, அவ்வளவாய் நாம் அடையும்படிக்கு நாடிக்கொண்டிருக்கின்றதான நிலைமையினை, புதுச்சிருஷ்டிகளாகிய நாம் இன்னமும் அடையாமல் இருக்கின்றோம் என்பதைக் குறிக்கின்றதாய் இருக்கும் என்றும் நாம் மறந்துவிடக்கூடாது.
சபையினுடைய மூப்பர்களிடமிருந்து, தாங்கள் எவ்வாறு சபையாரைக் கையாள வேண்டும் என்பதற்கும் மற்றும் சபையாரிலுள்ள அங்கத்தினர் களிடமிருந்து, தாங்கள் எவ்வாறு தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூப்பர்களையும், உதவிக்காரர்களையும் கையாள வேண்டும் என்பதற்கும் ஆலோசனை வேண்டி எழுதப்படும் கடிதங்களை இதழாசிரியர் அடிக்கடி பெற்றுக்கொள்கின்றார். சபையாரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியக்காரர்கள், தங்களைத் தேர்ந்தெடுத்த சகோதரர்கள், தங்களிடத்தில் போதுமான நம்பிக்கைக் கொள்வதில்லை என்றும், சபையாருடைய காரியங்களை நிர்வகிப்பதற்குத் தங்களிடத்தில் முழுமையாய்ப் பொறுப்பைவிடுகிறதில்லை என்றும், சபையார் தங்கள் காரியங்களை நிர்வகித்துக்கொள்வதற்கும் மற்றும் மூப்பர்களுடைய ஆலோசனை மாத்திரம் பெற்றுக்கொள்வதற்கும் விரும்புகின்றனர் என்றும் பெரும்பாலும் எண்ணுகின்றனர். இப்படியான சந்தர்ப்பத்தில், சபையார் ஒட்டுமொத்தமாகக் கர்த்தருக்குப் பிரதிநிதித்துவமாய் இருக்கின்றனர் என்றும், சபையின் எந்த ஊழியக்காரனுக்கும், சபையார் தங்கள் வாக்கினால் அவனுக்கு அளித்திடும் அதிகாரத்தின் எல்லையைத் தாண்டிடும் உரிமையில்லை என்றும் நினைவில்கொண்டு, மூப்பர்கள் முழுமையாய் மனநிறைவு கொண்டிருக்க நாம் பரிந்துரைக்கின்றோம். வேதமாணவர்கள் – கர்த்தர் தங்கள் மீது வைத்திட்டதான தங்களது பொறுப்புகளையும், உரிமைகளையும் பாதுகாத்திடுவதற்கு மிகுந்த அவசியம் இருப்பதாய் உணர்வதை எங்கள் அனுபவத்தில் கண்டிருக்கின்றோம். நம்மைச் சுற்றிலும் புரோட்டஸ்டாண்டினர்கள் மற்றும் கத்தோலிக்கர்கள் மத்தியில் காணப்படும் உலகப்பற்றுள்ள குருமார்களின் அதிகாரம் குறித்தும் மற்றும் வல்லமையையும், அதிகாரத்தையும் பிடித்துக்கொள்வதற்கும், சபையாரைப் புறக்கணிப்பதற்குமான குருமார்களின் மனவிருப்பம் குறித்தும் காணப்படும் உதாரணங்களின் கண்ணோட்டத்தில் – வேதமாணவர்கள் இவ்விஷயத்தில் மிக அதிகமான கவனம் செலுத்தினால்கூட, அது நிச்சயமாகப் பொறுத்துக் கொள்ளப்படலாம்.
இன்னொரு பக்கத்தில் சபையார், தங்களது மூப்பர்கள் தங்கள் மீது ஆதிக்கம் அல்லது அதிகாரம் செலுத்துகின்றார்களென எண்ணுகின்றனர் – இப்படியாக உண்மையிலேயே செலுத்தப்படுகிறதோ அல்லது இல்லையோ, ஆனால் அவர்கள் இப்படி அடிக்கடி எண்ணுகின்றனர். சிலசமயம் மூப்பர்கள் பிரசங்கம் பண்ணிடுவதற்கான பரபரப்பை அடைந்து, எல்லாத் தருணங்களிலும் போதிப்பதற்கு விருப்பம் அடைகின்றனர்; சிலசமயம் ஜெபத்தினையும், சாட்சிக்கூட்டங்களையும், பெரோயா ஆராய்ச்சி வகுப்புகளையும் போதிக்கும் சந்தர்ப்பங்களாக்கி விடுகின்றனர் என்று சபையார் முறையிடுகின்றனர். ஒருவேளை பெரோயா பாடங்களானது விரும்பப்படுகின்றது என்றும், சபை ஒழுங்குமுறையின் மாற்றங்களானது விரும்பப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறதென்றால், சிலசமயம் மூப்பர்கள் முழுச்சபையாரிடத்திலும் கோபமடைந்து, தாங்கள் மதிக்கப்படுகிறதில்லை என்று கூறுகின்றனர்; மற்றும் இன்னும் சில தருணங்களில், காரியத்தை அன்பாய்த் தங்களிடத்தில் குறிப்பிடுவதற்குத் தைரியமாய் முன்வந்த தனிப்பட்ட நபர்மேல் மூப்பர்கள் கோபமடைகின்றனர் அல்லது அந்நபர் ஒரு விதிவிலக்கு என்று எண்ணிக்கொள்கின்றனர் மற்றும் தாங்கள் சபையாரைப் பிரியப்படுத்திக் கொண்டிருக்கின்றதாகக் கற்பனைபண்ணிக்கொண்டிருக்கின்றனர் – அதாவது இது மிகவும் அதிகமான சுய மதிப்புக்கொடுத்திடும் சந்தர்ப்பமாய்ச் சில சமயங்களில் காணப்படுகின்றது.
மூப்பர்கள் கர்த்தருடைய ஆவி இல்லாமல், தெளிந்த மனதினுடைய சீரான நிலைமையினை இழந்து காணப்படுவதாகத் தோன்றும் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில், எப்படிச் சபைகளுக்கு ஆலோசனை கொடுப்பது என்பது சிரமமான காரியமாகவே காணப்படுகின்றது. எங்களிடத்தில் விசாரிப்பவர்களுக்கு நாங்கள் பொதுவாகவே இவ்விஷயம் குறித்து வேதாகம பாடங்களிலுள்ள 6-ஆம் தொகுதியின் கட்டுரையையே குறிப்பிட்டு, அதை மீண்டுமாக வாசித்து, அதன்படி நடந்துகொள்ளும்படிக்குக் கேட்டுக்கொள்வோம். ஆனால் அதை வாசித்தப் பிற்பாடும்கூடக் கர்த்தருடைய அருமையான ஆடுகளில் சிலர், எப்படி வேத வாக்கியங்களின்படியான முறையான ஒழுங்கினை அடையப்பெறுவது என்பதையும், எப்படிச் சபையாருடைய சுயாதீனங்களைக் காத்துக்கொள்வது என்பதையும் மற்றும் எப்படி மூப்பர் தனக்கும், சபையாருடைய நலனுக் கடுத்தவைகளுக்கும் தீங்கு செய்ய அனுமதிப்பதைத் தவிர்ப்பது என்பதையும் அறியாமல் இருக்கின்றனர்!
இத்தகைய காரியங்களை, அதுவும் சபையில் கர்த்தருடைய சித்தமென நாம் நம்பிடுபவைகளைச் செய்திடுவதற்கான எந்த மற்றும் ஒவ்வொரு வாய்ப்பையும் குறித்துக் கவனித்துக்கொண்டிருக்கும் அதேவேளையில், சகோதரர்கள் இத்தகைய காரியங்களைக் கர்த்தரிடத்தில் ஜெபத்தில் எடுத்துச் செல்லுங்கள் என்பது நம்முடைய பொதுவான அறிவுரையாக இருக்கின்றது. இன்னொரு பக்கத்தில் மூப்பர் ஒருவரை ஆதிக்கம்பண்ண அல்லது பரிசுத்த பேதுரு அடிகளார் கூறியுள்ளது போன்று “கர்த்தருடைய சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆள சபையார் அனுமதிப்பது என்பது முற்றிலும் தவறான காரியம் என்று நாம் ஒப்புக்கொள்ளவே வேண்டும் (1 பேதுரு 5:3). இது மூப்பருக்கும், சபையாருடைய நலனுக்கடுத்தவைகளுக்கும் – இருவருக்குமே தீங்காய்க் காணப்படும்.
இன்னொரு பக்கத்தில் பார்க்கையில், சபையார் குற்றங்கண்டுபிடிக்க மற்றும் குறைகூற தவிர்ப்பதற்கு நாடிட வேண்டும். அவர்கள் கர்த்தருடைய ஆவியை, அர்ப்பணிப்பின் ஆவியை, சத்தியத்தின் அறிவை மற்றும் சத்தியத்தை முன்வைப்பதற்கான தாலந்துகளை – இவைகள் எங்குக் காணப்பட்டாலும், இவற்றிற்கு மதிப்புக்கொடுத்திட வேண்டும் மற்றும் கர்த்தரால் ஒவ்வொருவருக்கும் அருளப்பட்டுள்ள தாலந்துகளுக்கு ஏற்பவும் மற்றும் கர்த்தருடைய வசனத்திலுள்ள வழிக்காட்டுதல்களுக்கு இசைவாகவும் – போதிப்பிலும், கிருபையிலும், அறிவிலும் வளர்ச்சியடைந்திடுவதற்கான வாய்ப்புகளுக்கு ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியோடு உதவிட வேண்டும். ஒருவருக்கொருவர் பொறுத்துக்கொள்ளுதல், ஒருவர்
இன்னொருவரின் பாதங்களை அடையாளமான விதத்தில் கழுவிடுவதற்கான விருப்பமும், கிறிஸ்துவுக்கொத்த குணலட்சணங்களின் நிமித்தம், ஒருவரையொருவர் மேன்மையாய் எண்ணுதல் ஆகியவைகளை வளர்த்தி உருவாக்க வேண்டும்.
சபையாருடைய அனைத்து ஒழுங்குகள் மற்றும் ஏற்பாடுகள் தொடர்புடைய விஷயத்தில், சபையாருடைய விருப்பத்தை அறிந்துகொள்வதற்கென ஒவ்வொரு மூப்பராலும் கவனமாய் நாடப்பட வேண்டும் மற்றும் ஒவ்வொரு சபையாராலும் அது முழுமையாய் வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றபோதிலும், எப்படிச் சபையினுடைய விருப்பம் தெரிவிக்கப்படுகின்றது என்பது தொடர்பாய் நாம் மிகவும் இம்மியும் பிசகாமல் எதிர்ப்பார்க்கக்கூடாது. வேறுவார்த்தைகளில் சொல்லப்போனால், சபையாரில் பெரும்பான்மையானவர்களுக்கு எது திருப்தியாய் இருக்கின்றது என்று [R5921 : page 206] நாம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். சபையாருடைய திருப்தியானது ஏதோ சில விசேஷித்த குறிப்பிட்ட விதத்தில் தெரிவிக்கப்படவில்லை என்பதற்காக மூப்பர்கள் குற்றம் சாட்டப்படக் கூடாது. வேறுவார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், சபையாரிலுளள் சிறுபான்மையானவர்களால் பரிந்துரைக்கப்பட்டதான வழிமுறைகளானது, துல்லியமாய்க் கடைபிடிக்கப்படவில்லை என்பதற்காக, சபையாரை மனக்கலக்கமுறச் செய்து, பிரச்சனையைத் தூண்டிடுவதற்கு இவர்களுக்கு உரிமையில்லை. சபையிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினனும் தகுந்தக் காலங்களில் – விசேஷமாகத் தேர்ந்தெடுத்தல் காலத்தில் தனது கருத்தினைத் தெரிவிப்பதற்கு முழுச்சுயாதீனம் உடையவனாய் இருக்கின்றான்; ஆனால் தனது கருத்தையும், விருப்பத்தையும் தெரிவித்தப் பிற்பாடு, அவன் பெரும்பான்மையானவர்களின் விருப்பத்திற்கு, அது ஆதரவாகவோ அல்லது எதிர்மறையாகவோ தெரிவிக்கப்பட்டிருப்பினும் அதற்கு இணங்கிடுவதற்கு முழுமையாய்த் திருப்தி கொண்டிருக்க வேண்டும்.
நாம் அன்பையும், அதன் பூரண சற்குணத்தின் கட்டையும் நாடிடும் அதேவேளையில், நம்முடைய சொந்த நடவடிக்கையானது, முதலாவதாகப் பூரணநீதியினால் சரிப்பார்க்கப்பட வேண்டும் மற்றும் பின்னர் அன்பானது கூட்டிவழங்கப்படலாம். உதாரணத்திற்குத் தேர்ந்தெடுத்தலின்போது, ஏதோ ஒரு சகோதரன், சபையாருக்கான ஏதோ ஓர் ஊழியத்திற்கென, அந்த ஊழியத்திற்குத் தகுதியற்ற ஒரு சகோதரனை ஞானமற்ற விதத்தில் முன்மொழிந்திடலாம். நாம் அச்சகோதரனிடத்தில் குற்றம் கண்டு பிடிக்கக்கூடாது; ஏனெனில் முன் மொழிந்திடுவதற்கும், தனது ஞானமின்மையை வெளிப்படுத்துவதற்குமான சுயாதீனத்தை அச்சகோதரன் உடையவனாயிருக்கிறார்; ஆனால் இன்னொரு பக்கத்தில் நாம் அவருடைய முன்மொழிதலுக்குக் கட்டுப்பட்டுள்ளோம் என்று நாம் எண்ணிட வேண்டாம்; இவ்விஷயத்தில் கர்த்தருடைய சித்தம் என்னவாக இருக்கின்றது என்று நாம் புரிந்துள்ளதை வாக்கின் (vote) மூலம் நாம் வெளிப்படுத்திடுவதை, முன்மொழியப்பட்டச் சகோதரனை அவமதித்திடுவோமா என்ற அச்சமானது தடைப்பண்ணிட நாம் அனுமதிக்கவும் கூடாது. மேலும் சபையாரால் வாக்கினால் (vote) நிராகரிக்கப்பட்டாரெனில், முன்மொழியப்பட்ட சகோதரன் கோபம் கொள்வதற்கு எந்த உரிமையும் பெற்றிருப்பதில்லை தன்னை நிராகரிப்பதில் சகோதரர்களால் வெளிப்படுத்தப்பட்டதான தைரியத்தினை அவர் பாராட்டிடவே வேண்டும்.
சபையாரால் நிராகரிக்கப்பட்டவர், சபையாரிடத்திலோ அல்லது அதன் அங்கத்தினர்கள் யாரிடத்திலோ, ஏன் தனக்கு எதிராக வாக்குகள் அளித்தார்கள் என்று கேள்வி கேட்பதற்கு உரிமை பெற்றிருப்பதில்லை. அது அவர்கள் காரியமாகும் மற்றும் இவரது காரியமல்ல. அவர்கள் தாங்கள் பெற்றிருப்பதான உரிமையினை, தங்களது மனசாட்சியின்படி செயல்படுத்த மாத்திரமே செய்துள்ளனர். அது நீதியின் காரியமாகும். சபையாரிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினனாலும் பின் பற்றப்படும்படிக்குக் கர்த்தருடைய வசனமானது விதிகளை முன்வைத்துள்ளதான விஷயங்களில் தீர்மானம் எடுப்பதற்கு, மனித அனுதாபமாகிய அன்பிற்கு இடமில்லை. நீதியின் கொள்கைகளை அடையாளம் கண்டுகொள்ள தவறுவதே, கிட்டத்தட்ட எல்லாச் சபையாருடைய பிரச்சனைகளுக்கான அடிப்படையாக இருப்பதாகத் தோன்றுகின்றது. இம்மாதிரியான பிரச்சனைக்குள்ளாகும் யாவரும், காரியத்தினை ஜெபத்தில் கர்த்தரிடம் எடுத்துச் செல்லவும், பின்னர் பூரண நீதியின் அடிப்படையில் அக்காரியத்தினைக் கருத்தில் எடுத்துக்கொள்ளவும் நாம் வேண்டிக்கொள்கின்றோம்.
கூடுமானால் சபையாருடைய சித்தமானது பெரும்பான்மையினரால் – அதாவது முழு எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 85 சதவீதமானவர்களால் தெரியப்படுத்தும்படிக்கு வேதாகம பாடங்களினுடைய 6-ஆம் தொகுதியில் நாம் பரிந்துரைத்திருந்தோம். ஆனால் இது – நீதியோ அல்லது அன்போ, சபையாருடைய காரியங்கள் அனைத்தையும், மீதமிருக்கும் 15 சதமானவர்களிடத்தில் ஒப்படைக்கச் செய்திடும் மற்றும் இவர்கள் காரியங்களை நிர்ணயிக்கும்படிக்கு அனுமதித்திடும் என்று அர்த்தப்படாது; அதாவது உதாரணத்திற்குச் சிறுபான்மையானவர்கள் மொத்த எண்ணிக்கையில் 15 சதவீதமாக இருப்பதினாலும், தங்களது குறிக்கோள்கள் அடையப்பட வேண்டும் அல்லது சபையாருடைய முழு வேலையும் நிறுத்தப்பட வேண்டுமென்று இவர்கள் வலியுறுத்துவதினாலும், எந்த மூப்பர்களும், உதவிக்காரர்களும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டாம் என்று நிர்ணயிக்க சிறுபான்மையானவர்களை அனுமதிக்க வேண்டும் என்று அர்த்தப்படாது. இப்படி ஒருவேளை அனுமதிக்கப்பட்டால், அது அன்பாகவோ, நீதியாகவோ இருக்காது மற்றும் இப்படியாக ஒப்படைக்கப்படக்கூடாது.
பெரும்பான்மை விதி என்பது நீதியின் தர நிலையாக/அளவுகோலாக இருக்கின்றது மற்றும் இதற்கும் மேலாக நாம் யோசனையாக தெரிவித்தது, அன்பினால் விட்டுக்கொடுக்கப்படுவதை குறிக்கின்றதாய் இருக்கின்றது – அதாவது கூடுமானமட்டும் முழுச்சபையாரின் அல்லது சபையாரில் பெரிதளவிலான பெரும்பான்மையானவர்களுக்காகிலும் இருக்கும் விருப்பங்கள் சந்திக்கப்பட முயற்சிப்பதாகும். முடிந்தமட்டும் சபையாரிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினனுக்கும் பொருத்தமாய் இருக்கும் விதத்தில், சபையின் காரியங்களை ஒழுங்குப்படுத்திட பெரும்பான்மையானவர்கள் அன்புடன் விரும்பிட வேண்டும்; மற்றும் இதைச் செய்ய எந்தளவுக்குத் தவறப்படுகின்றதோ, அந்தளவுக்கு உடன்பாடின்மைக்கும், சபையாரில் பிரிவினைக்கும் வரவேற்பு இருக்கும். விருப்பத்தினுடைய பாகுபாட்டின் காரணமாக இரண்டு சபையாராகப் பிரிந்திடுவது என்பது எப்போதும் வருத்தப்படுவதற்குரியதாகவும், எதிர்த்துப் போராடப்படுவதற்கு நாடப்பட வேண்டியதாகவும் இருப்பினும் மற்றும் “சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கென அனைவராலும் தியாகங்கள் பண்ணப்பட வேண்டியதாகவும் இருப்பினும், சிலகாலம் சபையார் பிரிந்திருப்பது என்பது சம்பந்தப்பட்டவர்கள் யாவருடைய ஆவிக்குரிய வளர்ச்சியினைத் தடைப்பண்ணிடும் தொடர்ச்சியான சண்டைச் சச்சரவுக்குப் பதிலாக சிறந்ததாக நிச்சயமாகவே காணப்படும்.