நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி

மெய்ச்சபை ஒழுங்குமுறைகள்

சபை நிர்வாகம்
நல்லொழுக்கமாயும், கிரமமாயும்
காவற்கோபுறத்திலிருந்து கண்ணோட்டங்கள்
பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
சபையின் ஏற்படுத்துதல்
எக்ளீஷியா
தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்

பிரதான அவசியமாகிய தாழ்மை

சகோதர சிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவரகளுமாயிருங்கள்
சபையில் கனம் பெறுவதற்குரிய தகுதியான அடிப்படை
தேவனோடே போர்ப்புரிதல்
பரலோக இராஜ்யத்தில் பெரியவன்
நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
சீஷயத்துவத்தின் ஆவியாய் இருக்கும் ஊழியத்தின் ஆவி
யுக மாற்றங்களைக் கவனித்தல்
நல்ல மனிதனின் பாவம்

மாபெரும் பொல்லாப்பாகிய பெருமை

ஆவிக்குரிய பெருமையிலுள்ள அபாயம்
தலையாயிருப்பவரைப் பற்றிப்பிடித்துக் கொள்ளாமை
நம் சார்பாய் இருப்பவர் பெரியவராயிருக்கின்றார்
லேவியின் புத்திரரைச் சுத்திகரித்தல்
நன்மைக்கு (அ) தீமைக்கு ஏதுவான நாவின் வல்லமை

சபையாரும், ஊழியக்காரர்களும்

அன்பில் – பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து
தவறிழைக்காத் தன்மையும், சபைக்கான மூப்பர்த்துவமும்
மூப்பருக்குரிய பொறுப்புகள்
உண்மையான மற்றும் தவறான - 'ஏற்படுத்துதல்'
சோதனை காலம்
சண்டைக்காரராயிருந்து
கைகளை வைத்தல்
உண்மையுள்ள வார்த்தைகள் - அடக்கமான பேச்சு
மூப்பர்களுக்கான பரிசுத்த பேதுருவின் அறிவுரை
சபையிலும், உலகத்திலும் தேவனுடைய மேற்பார்வை
புதிய வேதாகமங்கள் நல்ல வரவேற்பைப்பெற்றன
சகோதர சிநேகம், தீர்மானிக்கிற பரீட்சையாகும்
சபையில் அன்பு
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் காத்திருத்தல்
உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
கொள்கையின் அடிப்படையிலான கிறிஸ்தவ சுயாதீனம்
நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவித்தல்
வார்த்தைகள் அல்ல, ஜீவியமே மெய்யான குறியீடு
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால்
பரிசுத்த பவுலினுடைய இருதயம் வெளியானது
அறிமுகக் கடிதங்கள்
டிராக்ட் சொசைட்டியின் அறிமுகக் கடிதங்கள்
சக - அங்கத்தினர்களைத் தண்டித்தல்
மூப்பர்களையும், உதவிக்கார்களையும் தேர்ந்தெடுத்தல்
இவர்களிலும் நீ என்னில் அன்பாய் இருக்கின்றாயா?
ஒருவராலொருவர் பட்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
உதவிக்காரனாகிய ஸ்தேவான் கிறிஸ்தவ இரத்தசாட்சி
அறுவடை என்பது விசேஷித்த சோதனை காலமாகும்
மூப்பர்கள் மற்றும் உதவிக்காரர்களைத் தேர்ந்தெடுத்தல்
அன்பின் பிராமணங்கள் மற்றும் பாராளுமன்ற பிரமாணங்கள்
உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
தேவனைத் துதித்தலும், மனுஷனைச் சபித்தலும்
நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்
உண்மையான தொழுவமானது ஒரு கூண்டல்ல
உங்களுக்குள்ளே சமாதானமாயிங்கள்
தேவனிடத்திலான தனிப்பட்ட நம்முடைய பொறுப்பு
நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
ஓர் இராஜாவின் – தேர்ந்தெடுத்தல்
ஓர் உருவகக் கதை
மூப்பர்களுக்கான பரிசுத்த பவுலின் அறிவுரை
இராஜரிக ஆசாரியர்கள் மத்தியில் ஒழுங்கு
தேவனுடைய தாசனாகிய மோசே மரித்தார்
பொருளாசையின் அபாயம்
நீர் எனக்குப் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
மற்றவர்களிடத்திலான நம்முடைய பொறுப்பு
பயண சகோதரர்களின் ஊழியங்கள்
சொசைட்டியின் தலைமை அலுவலகத்தின் இடமாற்றம்
அவர் அரைக்கட்டிக்கொண்டு, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார்
தீமோத்தேயுவுக்கான பவுலிடைய ஆனை
சபை என்றால் என்ன?
சில சுவாரசியமான கடிதங்கள்
கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதற்கான ஆவி
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புபவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்
சுவாரசியமான கடிதங்கள்
தெசலோனிக்கேயருக்குப் பரிசுத்த பவுலடிகளார் மேய்ப்பரெனக் கொடுத்த ஆலோசனை
சுவாரசியமாய் கடிதங்கள்
ஏதோ புதுமையென்று திகையாமல்
ஆதிகாலக் கிறிஸ்துவ சமயம் பரப்புபவர்கள்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
யார் பிரசங்கிக்க வேண்டும்
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்
சாந்த குணம் கிறிஸ்துவின் ஒரு குணலட்சணமாகும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கடிதங்கள்
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள் –எண்.2

சபைையில் ஸ்திரீகள்

போதித்தல் என்றால் என்ன?
ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
தேவனுடைய ஒழுங்கில் புருஷனும், ஸ்திரியும்
சுவாரசியமான கடிதங்கள்
சுவாரசியமான கேள்விகள்
உண்மையுள்ள வேலையாட்களிடமிருந்து வரும் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம்
உலகளாவிய மேய்ப்பரது வேலை
தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே

மத்தேயூ 18:15-17

மனஸ்தாபங்களைச் சரிப்படுத்திடுவதற்கான வேதவாக்கிய விதி
நாவை அடக்குவது அவசியமாகும்
சோர்ந்துபோகாதபடிக்கு அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்
தீமை பேசுதல் என்றால் என்ன?
சுவாரசியமான கடிதங்கள்
கெட்ட வார்த்தை என்றால் என்ன?
எந்தளவுக்கு நாம் குற்றங்களை அறிக்கையிட வேண்டும்?
உன் நாவைப் பொல்லாப்புக்கு விலக்கிக் காத்துக்கொள்
நாட்கள் பொல்லாதவைகளானதால்

கூட்டங்கள்

நீங்கள் உறுதிப்பட்டிருந்தும்
வேதாகம ஆராய்ச்சிக்கான டாண் குழுக்கள்
பிரயோஜனமான கூட்டங்கள் தொடர்பாக
நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வகுப்புகளுக்கான யோசனைகள்
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள்
அன்பின் மீதான பெரோயா வேத ஆராய்ச்சி
மே மாதத்திற்கான பெரோயா வேதாகம ஆராய்ச்சி
பெரோயா வேதாகம ஆராய்ச்சி வகுப்புகள்
அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கான புத்திமதி
அதிகமான மூப்பர்கள் - அதிகமான வேலை
புதிய வேதாகம வகுப்புகளை ஏற்படுத்தும் பணி
ஜெபம் மற்றும் சாட்சி பகருதலுக்கான மேய்ப்பரது ஆலோசனை
நல்நோக்கமுடையவர்கள், ஆனால் இடையூறானவர்கள்
தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்
நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
பெரோயா பாடங்கள் மற்றும் சாட்சிக்கூட்டங்கள்

பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள் - சபை

சபை - மூப்பர்களுக்குக் கீழ்ப்படிதல்
சபை – தேவன் அங்கத்தினர்களை ஏற்படுத்துகின்றார்.
சபை - ஒரு சபையார் மத்தியில் பிரச்சனை

R5918 (page 200)

நல்ல, மேம்பட்ட, சிறந்த வேதாகம ஆராய்ச்சி

GOOD, BETTER, BEST IN BIBLE STUDY

வேதாகமத்தை, தேவவசனமென மதிக்கச் செய்திடும் ஒவ்வொரு பிரயாசமும் பாராட்டப்படத்தக்கதாகும். ஐம்பது முதல் நூறு வருடங்களுக்கு முன்னதாக கிரேட் பிரிட்டனிலும், அயர்லாந்திலும் கைக்கொள்ளப்பட்ட வேதாகம ஆராய்ச்சியானது, அதாவது வசனங்கள் மற்றும் வேதாகம அதிகாரங்களை மனப்பாடம்பண்ணி ஒப்புவித்தல் மற்றும் வேதாகமத்தைப் பள்ளிக்கூடங்களில் வாசிப்பதற்குப் பயன்படுத்துதல் ஆகியவை பிரயோஜனமானவைகளாகவே இருந்தன. இப்படி வேதாகமத்தின் வசனங்களில் பரிட்சயமாகுகின்றவர்கள், இதினிமித்தம் அவர்கள் ஒருவேளை பிற்பாடு கிறிஸ்தவர்களாகி, தேவ வார்த்தைகளின் அர்த்தத்தினை நாடுகையில், விலையேறப்பெற்ற தகவல்களை ஞாபகத்தில் பெற்றவர்களாய் இருப்பார்கள்.

வேறு வேதாகம ஆராய்ச்சிக்கான பிரயாசங்களானது பல்வேறு சபைபிரிவுகளில் எடுக்கப்பட்டுள்ளன. எனினும் இவைகள் – சபைபிரிவு விசுவாசப் பிரமாணங்களினால் தடங்கல் பண்ணப்பட்டது. அவ்வப்போது திறமையுள்ள போதகர்கள் தங்கள் சபையாருக்கு வேதாகமத்திலுள்ள வரலாறு காரியங்களைக் குறித்துத் தகவல் கொடுக்கின்றனர்; நிருபங்களின் எழுத்தாளர்களைக்குறித்தும், இவர்களது பிரயாண அனுபவங்கள் முதலானவைகள் குறித்தும் கலந்துரையாடுகின்றனர். சிலசமயம் போதகர்கள் உபதேசங்களுக்குள் கடந்துபோகின்றனர்; ஆனால் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில், அதுவும் ஒருவேளை அவர் மிகவும் புத்திசாலித்தனமாகக் காணப்பட்டு, சபையாரைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க வில்லையெனில், பாடத்தின் விளைவாக வாக்குவாதமும், சிக்கலும்தான் ஏற்பட்டு, சபையார் இருந்ததைவிட, அதிகமான குழப்பத்தில் விடப்படுவார்கள்.

கொஞ்சம் காலங்களாக ஆதரவைப் பெற்றிருந்த வேதாகம ஆராய்ச்சிக்கான இன்னொரு பாணி, என்னவெனில்: அநேகம் கிறிஸ்தவ ஜனங்கள் ஒன்றுகூடி, வேதாகமத்தின் ஓர் அதிகாரத்தில் ஒவ்வொரு வசனமாக வாசிப்பார்கள். ஒவ்வொருவனும் தனக்கான வசனத்தை வாசித்தப் பிற்பாடு, தன்னுடைய விளக்கக் கருத்தினைக் கூறுவான். ஒருவேளை ஓர் அதிகாரத்தில் 40 வசனங்கள் காணப்படுமாயின், அநேகம் சிறுசிறு விளக்கக் கருத்துகள் கிடைக்கப்பெறும். கூட்டம் நிறைவுபெறும்போது, இப்படியாக வேதாகமத்தைக் கையாண்டதிலும், சுவாரசியமான சில வசனங்களை வாசித்ததிலும், ஒருவரோடொருவர் ஐக்கியம்கொண்டதிலும், [R5919 : page 200] புத்துணர்வு அடைந்த உணர்வினை அடைகின்றனர்; ஆனால் இத்தகைய வேதாகம ஆராய்ச்சிகளிலிருந்து, தேவனை அல்லது யுகங்களுக்கடுத்த அவரது திட்டத்தைக்குறித்து மிகக்குறைவான அறிவே பெறப்படுகின்றது.

சமீபக்காலங்களாக – அதாவது கடந்த பத்து ஆண்டுகளுக்குள்ளாக, வேதாகமமானது, நம்மால் குறிப்பிடப்படும் பெரோயா ஆராய்ச்சிகளின் – வேதவாக்கிய ஆராய்ச்சிகளின் விதத்தில் ஆராயப்பட்டு வருகின்றது. இப்பொழுது உலகமெங்கும் பெரோயா வகுப்புகளானது நடைப்பெற்று வருகின்றது. மாபெரும் ஆசீர்வாதமும், மாபெரும் வெளிச்சமும் பலனாகக் காணப்படுகின்றது. இவ்வகை வேத ஆராய்ச்சிக்கு ஒரு பாடப் புத்தகமும், ஒரு கேள்வி புத்தகமும் கூடப் பயன்படுத்தப்படுகின்றது. இந்தப் பாடப்புத்தகங்களானது வேதாகமப் பாடங்களின் [R5919 : page 201] பல்வேறு தொகுதிகளாக (volumes) காணப்படுகின்றன. இந்தத் தொகுதிகளில், வேதாகமத்தின் போதனைகளானது சேகரிக்கப்பட்டு, புரிந்துகொள்ளும் வடிவில் கொண்டு வரப்பட்டுள்ளது. உதாரணத்திற்குப் பரிசுத்த ஆவிக்குறித்த ஆய்வு என்றால், இத்தலைப்பின் கீழான ஆராய்ச்சியானது, வேதாகமத்தின் அனைத்துப் பாகங்களிலுமுள்ள போதனைகளை ஒன்றுசேர்த்து, அதைச் சபையார் முன், வரிசையாய் முன்வைக்கின்றதாய் இருக்கும். ஒருவேளை ஆய்வு “மனிதனாகிய கிறிஸ்து இயேசுவென்றால், இதுவும் மேற்கூறப்பட்டுள்ளதுபோன்று கையாளப்படுகின்றது. ஒருவேளை ஆய்வு “லோகாஸ் பற்றி என்றால், இதுவும் அதே விதத்தில் கையாளப்படுகின்றது. ஒருவேளை ஆய்வு “நீதிமானாக்கப்படுதல், “பரிசுத்தமாக்கப்படுதல், “பரிசுத்தவான்கள் மகிமைப்படுத்தப்படுதல் என்றால், ஒவ்வொரு ஆராய்ச்சியும் முறைப்படி கையாளப்பட்டு – அதாவது சபையாருடைய மனங்களுக்கு முன்பாகக் கொண்டுவரப்பட்டு, வேதாகமத்தில் இவைகள் குறிப்பிடப்பட்டுள்ளதான பல்வேறு பகுதிகள் குறித்த குறிப்புகளுடன், கலந்தாய்வு பண்ணப்படத்தக்கதாக முன்வைக்கப்படுகின்றது.

வேதாகம ஆராய்ச்சிக்கான இந்த வழிமுறையின் முக்கியத்துவத்தினை அறிந்தவர்களும், இதைப் பின்பற்றுகிறவர்களுமான தேவனுடைய ஜனங்கள் மற்றவர்களைக் காட்டிலும் வேதவசனத்தைக் குறித்தத் தெளிவான புரிந்துகொள்ளுதலைப் பெற்றிருப்பது குறித்து நாம் ஆச்சரியமடைகிறதில்லை. ஆகையால் எவ்வகை வேதாகம ஆராய்ச்சியினை நாம் பரிந்துரைத்திட்டாலும், இந்த அறுவடை காலத்தின்போது தம்முடைய ஜனங்களை வெளிச்சமூட்டத்தக்கதாக, மற்றவைகள் யாவற்றைக் காட்டிலும் கர்த்தர் ஆசீர்வதித்துள்ளதான இந்த வழிமுறையை நாம் விசேஷமாய்ப் பரிந்துரைக்கின்றோம். இந்த வழிமுறையானது முழுச்சபையாரின் பிரயோஜனத்திற்கேதுவானதாகும். திறமையுள்ள வழிநடத்துபவர் கண்டிப்பாய் அவசியம் என்றில்லை. வேறுவகையான எந்த வேதாகம ஆராய்ச்சித் தொடர்புடைய விஷயத்தில் திறமையுள்ள வழிநடத்துபவருக்குரிய ஓர் அபாயமானது, அவர்களது திறமையானது சிலசமயங்களில் தவறான திசையில் செல்லும் காரியத்திலும், தவறாய் வழிநடத்திவிடும் காரியத்திலும் காணப்படுகின்றது.

இந்தப் பெரோயா ஆராய்ச்சிகளானது, வேதவசனத்தில் முழுச்சபை யாரையும் தேறின அறிவின் நிலைக்குக் கொண்டுவருகின்றது; காரணம் அவர்கள் முன் முழுப்பாடத்தையும் கலந்தாய்வுக்கு வைக்கப்படுகின்றது. எனினும் பெரோயா ஆராய்ச்சியிலும்கூட, கேள்விகள் பயன்படுத்தப்பட்டாலும், தாழ்மை மனமுள்ள திறமையுள்ள வழிநடத்துபவர், சகோதரருக்கு மிகுந்த உதவியாய்க் காணப்படுவார். இப்படியாகவே உலகம் எங்குமுள்ள கிட்டத்தட்ட ஒவ்வொரு சபையாரின் விஷயத்திலும் காணப்படுகின்றது. வாட்ச் டவரின் வாசகர்கள், ஏன் இந்தப் பெரோயா ஆராய்ச்சியாகிய வேதாகம ஆராய்ச்சியினை நாம் இவ்வளவுக்கு உள்ளார்ந்த விதத்தில் பரிந்துரைக்கின்றோம் என்பதை அறிய நாம் விரும்புகின்றோம். கர்த்தரினால் இவ்வளவுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு வழிமுறைக்கு விரோதமாக எதிராளியானவன் கிரியைப் புரிகையில் நாம் ஆச்சரியமடையவும் வேண்டாம். பெரோயா வேதாகம ஆராய்ச்சிகளினால் மற்றும் கடந்த காலங்களில் தங்களால் அறியப்பட்டிருக்கும் அல்லது முயற்சிப் பண்ணப்பட்டிருக்கும் மற்றெல்லா – வகையான வேதாகம ஆராய்ச்சிகளினால் தங்கள் மனங்களிலும், தங்கள் இருதயங்களிலும், தங்கள் ஜீவியங்களிலும் உண்டான பலன்களை ஒப்பிட்டு வேறுபடுத்திப் பார்க்க நாம் அனைவருக்கும் வலியுறுத்துகின்றோம்.